அத்தியாயம்: 107
அது அப்சத்தின் குரல்.
பல ஆண்டுகள் கழித்து பார்த்துக் கொள்கின்றனர் அவர்கள்.
"டேய் அப்சத். எப்படி டா இருக்க?. எங்கடா போய்த் தொலஞ்ச?. உன்ன எங்கெல்லாம் தேடுனோம்னு தெரியுமா? எத்தன வாட்டி கால் பண்ணேன்! வீட்டுக்குக் கூட வந்தேன். ஆனா யாரும் எந்தத் தகவலும் சொல்லல. நல்லா இருக்கீயா டா. " என முருகு தான் அவனிடம் பேசினார். ஆனால் அப்சத்தின் பார்வை கார்த்தியிடமும் அவனின் அருகில் நின்று கொண்டிருந்த வாசுவிடமும் இருந்தது.
"உன்னோட பொண்ணா கார்த்தி. பேரு என்னம்மா?" என முகம் கொள்ளா மகிழ்ச்சியில் வாசுவின் அருகில் வர, கார்த்தி அப்சத்தின் மேல் பாய்ந்து அடிக்க தொடங்கினான்.
அப்சத், கார்த்திக் தந்த அடிகள் அனைத்தையும் வாங்கி கொண்டானே தவிர திரும்பி அடிக்கவோ! அல்லது விழும் அடியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ளவோ முயலவில்லை. நல்ல அடி. நெற்றியிலும் உதட்டிலும் ரத்தம் வர ஆரம்பித்தது. மற்ற இடங்களில் ஊமைக் காயம். அதனால் வெளியே தெரியவில்லை.
" கார்த்தி என்ன பண்ற?" உஷா உட்பட சுற்றி இருந்தவர்கள் தடுக்கப் பார்த்தார்கள்.
"மச்சான்… விடு மச்சான். நீ யாரோன்னு நினைச்சி அடிக்கிற. அவெ நம்ம ஃப்ரெண்டு டா." என்றபடி முருகு இருவருக்கும் இடையே வந்து நின்றார்.
" இவெ ஃப்ரெண்ட்டா!! துரோகி டா. நட்புக்கு நண்பனுக்கு துரோகம் பண்ண… துரோகி டா இவெ. இவெ பண்ண துரோகத்தால நான் இழந்தது அதிகம். " என்றவனுக்கு கண்ணில் நீர் வடிந்தது.
" நான் உனக்கு நல்லது நினைச்சி தான்டா பண்ணேன் கார்த்தி. ஆனா அது இப்படி முடியும்னு நினைக்கவே இல்ல. என்னை மன்னிச்சிடு கார்த்தி. " என்றவன் மண்டியிட்டு மன்னிப்பை வேண்டினான்.
"எனக்கு எது நல்லதுன்னு முடிவு பண்ண நீ யாருடா? என்னோட வாழ்க்கைல நான் என்ன பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு நீ எப்படி முடிவு பண்ண?. ஏன்டா அப்படிப் பண்ண?" என்றவன் அடிப்பதை நிறுத்தவில்லை. ஆத்திரம் தீரும் மட்டும் அடித்தான்.
" உன்னால தான்... உன்னால தான் அன்னைக்கி என்னோட ஜோவ நான் மிஸ் பண்ணேன். அவளோட முகத்தக் கூட பாக்கவிடாம துரத்தி விட்டியேடா ***. "
"கார்த்தி, நாங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்தோம். அங்க நீ ஜோஹிதா கழுத்துல தாலி கட்டுறத பாத்தோம் டா. நீ மட்டும் போகலன்னா ஜோஹிதா செத்திருப்பாடா. "
"நீ மட்டும் விகாஸ்க்கு ஃபோன் பண்ணாம இருந்தா, ஜோஹிதாக்கு விசயமே தெரிஞ்சிருக்காது. ஜோஹிதாக்குன்னு கவலப்பட அவளோட அப்பா அம்மான்னு ஒரு குடும்பமே இருந்தது. ஆனா ஜோதிக்கு… என்னை விட்டா யாரும் கிடையாது டா இந்த உலகத்துல.
ஜோஹிதா என்னோட மனைவியா மாறி இருந்தாலும். ஜோதிய பாதுகாப்பான இடத்து வச்சி பாத்திருப்பேன். யாரும் இல்லாம தனியா அநாதையா விட்டிருக்க மாட்டேன். இன்னைக்கி அவா உயிரோட இருக்கால இல்லயான்னு தெரியாம. தினம் தினம் செத்திட்டு இருக்கேன். உன்னால தான் டா. " என மீண்டும் அடித்தான்.
" மச்சான் நீ என்ன சொல்ற. ஸ்டேஷன்ல ஜோதிய ட்ரெயின் ஏத்தி விட்டது இவனா? " முருகு அதிர்ச்சியாக, வாசுவிற்கு அதிர்ச்சி தான்.
கார்த்திக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது. அவன் திருமணத்திற்கு பின் அப்சத், கார்த்தியின் முகம் பார்க்க தயங்கிய போது அதை உறுதி செய்தான். அதை அவனிடம் கேட்டபோது ஒத்துக் கொண்டு அழுது மன்னிப்பு வேண்டினான் அப்சத். கார்த்தி நண்பன் செய்த துரோகத்தில் உடைந்து போனான். அப்போது அவனுடன் சண்டை போட்டான் கார்த்திக்.
இப்போது பல ஆண்டுகள் கழித்து மறுபடியும் தனக்குத் துரோகம் செய்த அனைவரையும் பார்க்கும் போது மனம் ஜோதியை நினைத்து வேதனையில் மூழ்கியது.
" உனக்கு எப்படி டா மனசு வந்ததுச்சி. பாவி. " என முருகு இப்போது அடிக்க தொடங்கினான். யார் வந்து அடித்தாலும் வாங்கி கொண்டு நின்றான் அப்சத்.
"மிஸ்டர் அப்சத், கார்த்திகேயன கண் முன்னாடி கூட்டீட்டு வந்தா வாணி எங்க இருக்காங்கன்னு சொல்றதா சொன்னீங்க. " எனக் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு ருத்ரா கேட்க, அப்சத் வாசுவைக் கை காட்டினான்.
" ஜோதி அன்னைக்கே சொன்னா கார்த்தி. உங்கிட்ட இருந்து அவளப் பிரிக்க முடியாது. எதாவது ரூபத்துல உங்கூடவே தான் இருப்பேன்னு. அதே மாதிரி உங்கிட்டயை வந்து சேந்திட்டா. உம்பொண்ணு பிறந்த அன்னைக்கி தான் ஜோதி இறந்து போனா. " எனச் சொல்லி அழ, அவனின் சட்டை காலரைப் பிடித்து தூக்கி நிறுத்தியவன்.
"நீ எப்ப ஜோவ பாத்த?"
" அவ ட்ரெயின் ஏறி போன அன்னைல இருந்த சரியா ஏழு மாசம் கழிச்சி. நம்ம சென்னைல வச்சி தான் பாத்தேன். என்னைப் பாத்ததும் எங்கைல சிக்க கூடாதுன்னு ஒரு ஆட்டோல ஏறி போனா.
நானும் அவள துரத்தீட்டு போனேன். ஜோஹிதா அண்ணனுங்க கைக்குச் சிக்குறதுக்கு முன்னாடி நான் அவள கண்டுபிடிச்சி பாதுகாக்க நினைச்சேன். "
"அவனுங்க எதுக்கு ஜோதிய தேடணும். "
"உன்னைப் பழி வாங்க தான் கார்த்தி. அவனுங்க பைனான்ஸ் கம்பெனிய நீ மூட வச்சன்னு சொல்லி உன்னைப் பழி வாங்க நினைச்சானுங்க. அவனுங்க கைக்கு ஜோதி கிடைச்சா… அவளச் சித்திரவதச் செய்றது மூலமா உன்னை பழி வாங்க திட்டம் போட்டு ஜோதிய தேடுனானுங்க.
அது நடக்ககூடாதுன்னு தான் அவள நானும் தீவிரமா தேடுனேன். ஆனா சென்னைல பாப்போன்னு நினைக்கல. நான் பாக்கும் போதே ஜோதி ரொம்ப பயந்து போய் சோர்வா இருந்தா. விடாம அவள ஃபாலோ பண்ணப்ப… ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சி கார்த்தி. ஜோதி ஏறுன ஆட்டோ கவுந்து அவளுக்கு நல்ல அடி.
ஹாஸ்பிடல் கூட்டீட்டு போனேன். காப்பாத்திடலாம்னு தான் சொன்னாங்க. ஆனா கொஞ்ச மாசத்துலயே உடல் நிலை மோசமா மாறி… கோமாக்குப் போய் அப்படியே இறந்திட்டா கார்த்திக். இறந்திட்டா. அண்ணான்னு வாய் நிறைய கூப்பிட்டு உரிமையோட பழகுன ஒரு பொண்ணோட மரணத்த பக்கத்துல இருந்து பாத்தேன் கார்த்தி. அவளக் காப்பாத்த தான் முயற்சி பண்ணேன் கார்த்தி ஆனா முடியல. செத்திட்டா. " என சொல்லி அழுது தீர்த்தான்.
"அவளப் பாத்ததும் ஏன் எங்கிட்ட சொல்லல." உணர்ச்சிகள் மொத்தமும் வடிந்த குரலில் கேட்டான் கார்த்திக்.
"வந்தேன் கார்த்தி முதல்ல உங்கிட்ட தான் சொல்ல வந்தேன். ஆனா உன்னோட வீட்டு சூழ்நில சரியில்லை. ஜோஹிதாவும் ப்ரெக்னன்ட்டா இருந்தா. ஜோதி குணமானதும் உம்முன்னாடி கூட்டீட்டு வரலாம்னு நினைச்சேன் கார்த்தி. ஆனா... செத்துட்டா... என்னைக் கடைசியா அவ பாத்த பார்வை இன்னமும் எனக்கு நியாயம் இருக்குடா. " என ஓ வென அழ,
ருத்ரா உடைந்து போனான். எதாவது ஒரு மூளையில் உயிருடன் இருப்பாள் என்ற தகவல் கிடைக்கும் பார்த்துவிடலாம் என நினைத்தவனுக்கு அவனின் வாணியக்கா இறந்தது அதிர்ச்சியாக இருந்தது. வாசு அவனின் தளை ஆதரவாக வருட, தன்யாவும் அவனின் கரத்தை பிடித்துக் கொண்டாள்.
ஆனால், அந்த அதிர்ச்சி கார்த்திகேயனுக்கு இல்லை. இதை எதிர்பார்த்திருந்தான் போலும். மனம் கணத்து இருந்தது. அப்சத்தின் கையில் சிக்காத அந்த ஏழு மாதங்களில் எதுவோ நடந்திருக்கிறது. என்னவாக இருக்கும் என யோசித்தான்.
கார்த்திக் கண்களால் ஜோதியைப் பார்க்கவில்லை என்றாலும் அவனின் உள் உணர்வு சொல்லியது, ‘உன்னை அவள் கண்கானிக்கிறாள்’ என்று. அந்த உணர்வு சில காலம் வலியாக மாறி அவனின் இதயத்தை கீறியது. வாசு பிறந்த அன்றே அந்த உள்ளுணர்வு சொல்லியது இது உன் ஜோ தான் என்று. அதன் பின் ஜோதியைத் தேட சொல்லி மனம் உந்தித்தள்ளவில்லை.
இப்போதும் இன்னும் நீ தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது என்றது அந்த உள்ளுணர்வு. யாரிடமிருந்து, எந்த உண்மையை தெரிந்து கொள்வது என்ற கேள்வி எழ தலையைத் தூக்கி சுற்றி முற்றிலும் பார்த்து எதையோ தேடியவன், உஷாவிடம் சென்று.
"ஜோஹிதா எங்க உஷா?" எனக் கேட்க. அப்போது தான் அனைவரும் உணர்ந்தனர் ஜோஹிதா உடன் இல்லை என்பதை
எப்பொழுது கார்த்திக் மைக்கை பிடித்து ஜோதியைப் பற்றி பேசத் தொடங்கினானோ அப்போதே எழுந்து சென்று விட்டாள்.
எங்கோ…
"கார்த்திப்பா இங்க தான் இருந்தாங்க. ஜோஹிம்மா... ஜோஹிம்மா." எனக் கத்திய வாசு பதற, அனைவரும் தேட தொடங்கினார். வெகு நேரம் அனைத்து இடத்திலும் தேடினர்.
"மச்சான் ஒரு வேள ஹோட்டலுக்குத் திரும்பி போய்ட்டாளோ." முருகு.
" இருக்கலாங்க… வாங்க நாம போய் பாத்திட்டு வரலாம்." என உஷா சொல்ல,
"மச்சான் பொறு. " என்றவன் கல்லூரிக்குள் ஓடிச் சென்றான். அவனைத் தொடந்து வாசுவும் அப்சத்தும் ஓட, ஜோஹிதாவிற்கு என்ன ஆனதோ என மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
அவன் நினைத்தது சரியே என்பது போல் ஜோஹிதா லைப்ரேரியில் இருந்தாள். கார்த்திக்குடன் கடைசியாகச் சண்டையிட்டுப் பிரிந்து இடம் அது. கார்த்திக் மீண்டும் தன்னை மன்னிக்க சொல்லி இறஞ்சிய இடம் அது. ஜோஹிதா பிடிவாதமாக, ‘முடியாது.’ என அவனை அவமானப்படுத்தி அனுப்பிய இடம். இப்போதும் அதே இடத்தில் தான் அமர்ந்திருக்கிறாள். கையில் கத்தியுடன்.
" ஜோஹிதா…" என மெல்ல அழைத்தவனுக்குள் பயம். மீண்டும் பைத்தியக்காரத்தனமாக எதையாவது செய்துவிடுவாளோ என்று. இதற்காகத்தான் இங்கு வர வேண்டாம் என்று நினைத்தான். ஆனால், ருத்ரா சொன்னது போல் ஜோதி மேல் விழுந்த கலங்கத்தைத் துடைப்பது தன் கடமை அல்லவா!. தன்னால் தான் அவளுக்கு இந்த அவப்பெயர். அதை மாற்றுவது முக்கியம் அல்லவா! அதை மனைவியிடம் சொல்லி தன்னை விளக்கி சமாதானம் செய்யும் பொருட்டு மெதுவாக அவளை நோக்கி முன்னேறி சென்றான்.
" ஜோஹிதா… I am sorry. நான் வரக்கூடாதுன்னு தான் நினைச்சேன். எனக்குத் தெரியும் நான் ஜோவ பத்தி பேசுனா உனக்குக் கஷ்டமா இருக்கும்னு. பட்... சூழ்நில அப்படி. " என்றவன் அவளின் அருகில் நெருங்கி இருந்தான். அவனின் நெருக்கத்தை உணர்ந்தவள் மெல்ல தலை தூக்கி அவனைப் பார்த்தாள். அந்தக் கண்களில் தெரிந்த வலி கார்த்திக்கிற்கு வேதனையை தந்தது.
"இதுவரைக்கும் நீ எங்கிட்ட எத்தன Sorry கேட்டிருக்கன்னு தெரியுமா கார்த்திக்?.
ம்…
கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நீ கேக்குற அந்த Sorry எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ எங்கிட்ட பணிஞ்சி போறன்னு பெருமையா இருக்கும்.
ஆனா கல்யாணத்துக்கு அப்றம். எங்கிட்ட நீ கேக்குற ரெண்டாவது Sorry இது. ரெண்டும் உன்னோட ஜோவுக்காகக் கேட்டது. நீ கேட்ட அந்த சாரில ரெண்டு தடவையும்… நான் முழுசா உடைஞ்சிட்டேன் கார்த்திக். " என்றபோது அவளின் விழியில் நீர் கோர்த்து நின்றது.
" யாருக்குமே தோல்விகள் பிடிக்கிறது இல்ல. ஆனா அந்தத் தோல்விக்கி தன்னைப் பிடிக்காதவங்கள ரொம்ப பிடிக்கும் போல. தேடி தேடி போய் அவங்க கூடவே உக்காந்துக்கும். மறக்க நினைச்சாலும் முடியாது. நிறைய வெற்றி கிடைச்சாலும் அந்தத் தோல்வி தந்த வலி ஆழமானது. நானும் அதுக்கு ஒரு உதாரணம்.
உன்னோட மனைவியா எனக்கு வெற்றி கிடைச்சாலும். உன்னோட காதல முழுசா அடையிற போட்டில நான் தோத்திட்டேன். இருபது வர்ஷம் போராடியும் என்னால அத அடைய முடியல.” என்றவளின் காதில் கார்த்திக் மேடையில் பேசியது ரிங்காரமிட்டது. அவனின் குரலில் இந்தக் கனிவு சொல்லியது கார்த்திக்கின் காதல் அவள் தான் என்று.
“அவ கூட இருந்த ஒவ்வொரு நொடியையும் இப்பவும் நீ கரெட்டா சொல்றன்ன… அவள நீ எந்த அளவுக்குக் காதலிச்சிருப்ப கார்த்திக்.
நான் தான் முட்டாள். உன்னை என்னோட பிடில வைக்கிறேன்னு வீம்பு பண்ணி வாழ்க்கைய தொலச்சிட்டேன். " என விரக்தியில் கத்தியை ஆட்டிக் கொண்டு ஏதேதோ பேசினாள்
அவளின் பேச்சை எங்கே கார்த்திக் கேட்டான். ஆட்டிக் கொண்டிருந்த கத்தியில் அல்லவா அவனின் கவனம் இருந்தது. 'எங்கயாது அறுத்துக் கொள்வாளோ!’ என்பது போல் கத்தியைப் பார்த்த படியே இருந்தான்.
"இந்த வயசுலயும் உன்னோட காதலுக்காகக் காத்திட்டு இருக்குறத நினைக்கும் போது சிரிப்பா இருக்கு. ஹிம்...” என்று விரக்தி சிரிப்பு சிந்தியவள்,
“கார்த்திக்… நீ இன்னும் அவள லவ் பண்றீயா?" என கேட்க, அவனின் கவனம் தான் அவளிடம் இல்லையே. பின் எப்படிப் பதில் சொல்வான். கத்தியை அவன் முகத்தின் முன் நீட்டி அதே கேள்வியை கேட்டாள் ஜோஹிதா… வாசு தான் பயந்து போனாள்.
இருவருக்கும் எதுவும் நேரக்கூடாது என உதடுகள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தன. அவளை நெருங்கி வராதே எனக் கார்த்திக் உத்தரவிட்டதால் நூலகத்தின் வாசலிலேயே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை மட்டுமல்ல மற்றவர்களையும் தான்.
" சொல்லு கார்த்திக். அந்த ஜோதி மட்டும் தான் உன்னோட மனசுல இருக்காளா. " எனக் கேட்க,
"எதுக்கு ஜோஹிதா இது இப்ப? எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்குப் போய் பேசிக்கிவோம்." என்க,
"இல்ல… எனக்குப் பதில் வேணும் இப்பவே. " என்று பிடிவாதமாகச் சொல்ல, அவன் அவளையும் கத்தியையும் ஒரு பார்வை பாத்துவிட்டு,
"இதுக்கு நான் பதில் சொன்னா… நீ தாங்கிக்க மாட்ட ஜோஹிதா."
"பரவாயில்லை… சொல்லிடு கார்த்திக். அன்னைக்கும் நான் கேட்டப்ப இதே தான் சொன்ன. இன்னைக்கும் இதே தான் சொல்ற. என்னன்னு கேட்டுட்டா மனசுக்கு இதமா இருக்கும். " என்றவளை நெருங்கி அவனின் அருகில் வந்து நின்றான். கூடவே கத்தியை வாங்கி தூர வீசியவன். அவளின் கன்னங்களை தன் கைகளில் ஏந்தினான்.
"நீ என்னோட மனசுல எப்பையுமே இருக்க ஜோஹிதா. நீ மட்டும் இல்ல. ஜோவும் தான். " என்க, முதல் வார்த்தையில் மலர்ந்த முகம் பின் புருவங்களை முடிச்சிட்டது.
"நீங்க ரெண்டு பேருமே இருக்கீங்க. அதுல ஒருத்தர மட்டுமேன்னு என்னால தேர்ந்தெடுக்க முடியாது. நீ தான் என்னோட ஃபஸ்ட் லவ். என்னோட எல்லா சூழ்நிலையும் கூடவே இருந்த பெஸ்ட் லைஃப் பார்ட்னர். க்ரேட் அட்வைஸ்ஸர். என்னோட வழி காட்டி. ஊன்று கோல்னு… சொல்லிட்டே போகலாம்.
அதே நேரம் ஜோ. அவ மேல நான் வச்ச காதல யாராலயும் புரிஞ்சிக்க முடியாது ஜோஹிதா. என்னாலயே என்னைப் புரிஞ்சிக்க முடியல. சில உணர்வுகள ஃபில் பண்ண முடியுமே தவிர… அத வாய் வார்த்தையா வெளிப்படையா சொல்லிட முடியாது. I want both of you. ரெண்டு பேருமே எனக்கு முக்கியம்.
இத சொல்றப்ப எனக்குள்ள எந்த உறுத்தலும் இல்ல. எனக்கு நீங்க ரெண்டு பேருமே வேணும். " என்றவன் இரு பெண்களின் மீதும் கொண்ட காதல் உண்மை. அதை அளவைப் பொருத்து பிரித்து சொல்ல இயலாது. இருவருமே சமம். என்கின்றான் கார்த்திக். அதைக் கேட்ட ஜோஹிதாவிற்கு அழுகை வந்தது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..