முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நின்னையல்லால் 20


 
நின்னை - 20


பெரிய ப்ரேக்கப் எண்டு சொன்னிங்களே.. என்ன அது? என சாத்வி கேட்டதும், அதுவரை மனதின் தோன்றியதை எல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டிருந்த வாமன் அமைதியானான்.


டீ ஷர்ட் கழுத்தை இழுத்து விட்டு முகத்தை அழுத்தி துடைத்து, "அது.. அத பத்தி நான்.. அது இப்போதைக்கு வேணாமே ஹாசினி.. நான் இப்ப சந்தோஷமா இருக்கன்.. நிம்மதியா இருக்கன்.. " என்றான் உளறலாக.


அது பிரஷாந்தியுடனான காதல் முறிவு விவகாரமாக இருந்தால், ஏன் அதை மட்டும் மறைக்க வேண்டும்? என நெருடியது சாத்விக்கு.


இத்தனை நேரம் மனதில் உள்ளதை பேசியது போல இதையும் வெளிப்படுத்த வேண்டியது தானே என்று தோன்றியது.


அரிச்சந்திரனுக்கு அடுத்த வீட்டு காரன் போல் பட் பட் என மனதில் உள்ளதை பேசுகிறவருக்கு இப்போது மட்டும் என்ன தயக்கம்??!! 


காதல்.. அதன் முறிவு.. அது தரும் வலி.. இந்த நுண்ணிய உணர்வுகளை அனுபவித்து இராத சாத்விக்கு, காதல் எனும் வார்த்தையையே அருவருக்கும் சாத்விக்கு அவன் நிலை புரியவில்லை.


வாமனுக்கோ, அதை இவளிடம் மனம் திறந்து பேச தயக்கம் என்பதை விட, பயமே மேலிட்டது!! 


'லவ் எண்டா என்ன தெரியுமா? லஸ்ட்!' என்றவள் தானே இவள். 


தன் கதை தெரிந்தால் தன்னை காமப் பிசாசாகவே முடிவு கட்டி விடுவாள் என்ற அச்சமே அவனுக்கு மேலிட, இந்த இடத்தில் போதை தெளிந்து மிகத் கவனமாக முற்றுப் புள்ளி வைத்தவன்,


"படுப்பமே ஹாசினி... நித்திர வருது..." என, அவள் பெட்டில் வைத்த தலையணை போர்வையை எடுத்து தரையிலேயே போட்டு, "குட் நைட் ஹாசினி" என படுத்தே விட்டான்.


பஞ்சணையை கட்டி குப்புற கவிழ்ந்த அவனையே வெறித்த சாத்வியும், கட்டிலுக்கு மறு பக்கம் தனக்காக போட்ட போர்வையில் சென்று அமர்ந்தாள்.


அவனை எழுப்பி கழுத்தை பிடித்து உலுக்க வேண்டும் போன்ற ஒரு உணர்வு எங்கிருந்தோ பிறந்தது..


அந்த நிலைக்கு அவர்கள் உறவு வளரவில்லையே இன்னும்!!


தற்போதைக்கு வாமன் தப்பித்து விட்டான். 


அண்ணன் அண்ணிக்காக நிவேதா ஒழுங்கு படுத்திய கட்டில் வெறுமனே காற்று வாங்க, ஆளுக்கு ஒரு பக்கம் தரையில் சரிந்த இருவரில் வாமனையே உறக்கம் தழுவியது விரைவில், அவன் நுகர்ந்த லிக்கரின் தயவால். சாத்வி நீண்ட நேரம் விழித்துத் தான் கிடந்தாள்.


மறு நாள் காலையில் சாத்வி அறையில் இருந்து வெளியே வரும் போது ஹாலில் சங்கர் தினேஷ் அமர்ந்திருந்தனர் தேநீர் கோப்பைகளுடன்.


இருவரும் இவளுக்கு வரிசையாக குட் மோர்னிங்  சொல்ல, ஒரு மாதிரி போனது சாத்விக்கு. 


இதற்கு அவளும் நேரத்திற்கே எழுந்து விட்டாள். நேற்றைய பொழுது மாமியார் வீட்டில் எழுந்ததும் நேராக கிச்சன் சென்று டீ போட்டவளுக்கு இங்கு அப்படி உரிமை உணர்வு வரவில்லை. அவள் எழும் போது வாமன் படுத்து தான் இருந்தான்.


அவனும் எழட்டும் என்று குளியலறையில் சற்று அதிக நேரம் மெனெக்கெட, அந்த இடைவெளியில் அவன் எழுந்து போய் விட்டான் போல..


அதுசரி எங்கே போனான்?


நிவேதா நந்தினியின் சிரிப்பு சத்தமும் பேச்சு குரலும் சமையல் கட்டில் கேட்க, சாத்வி அங்கே சென்றாள்.


நந்தினியும் நிவேதா கையிலும் டீ கோப்பை இருக்க, சமையல் ப்ளேட் கட்டில் அமர்ந்து இருந்தனர்.


ஒரு கையை இடுப்பில் ஊன்றி மறு கையால் அடுப்பில் காய்ந்த கல்லில் தோசை வார்த்துக் கொண்டிருந்தான் அவர்களின் உடன் பிறப்பு.


"பாரு நிவே! இதான் ரவுண்ட் ஷேப்.. நீ ஊத்தினதுக்கு பேர் ரவுண்ட் இல்ல.."


"அது ஓவல் அண்ணா.."


"எந்த ஊர்ல ஓவல் இப்டி இருக்கும்?" அவள் சுட்டு வைத்த தோசை ஒன்றை தூக்கி ஆட்டினான். 


அது நீள் வட்டம் இல்லை தான்.. ஒரு பக்கம் கோணலாக ஓடி இருந்தது.


"எல்லாம் வயித்துக்குள்ள போனா சேம் ஷேப் தான் அண்ணா.. நல்ல வேளைக்கு தினேஷ் உங்கள மாதிரி என்ன நக்கல் அடிக்கிற இல்ல.."


"அவர் எப்டி அடிப்பார்.. நீ திருப்பி அடிச்சுர மாட்டாய்.. அந்த பயம் இருக்கும் தானே.."


"போங்கண்ணா நீங்க.. வாங்க இங்கால.. போய் உங்கட பொண்டாட்டிய எழுப்பி கூட்டி வாங்க டீ ஆறுது.."


"டீ இருக்கட்டும். சாம்பார் சட்னி அவ தான் வச்சி தரணும் இண்டைக்கு. நல்லா சமைப்பா சாப்பிட்ட ப்ளேட்ட கழுவ மனம் வராது எண்டு சொன்னா மட்டும் காணாது தேவா.. அவட நள பாகத்த நாங்களும் பாக்கணும்.."


"ஓம், தாங்க இங்க கரண்டிய.."


ப்ளேட்டில் இருந்து இறங்கி அண்ணனைத் தள்ளி விலக்கிய நிவேதா வெந்து விட்ட தோசையை திருப்பிப் போட்டாள்.


"அந்த கப்ப தா நிவே.. டீய குடுத்து அவய கூட்டிட்டு வாரன்.. சட்னி சாம்பார் வச்ச பிறகு தோசய சுடுவம்.." நந்தினியும் இறங்க,


"ஹெலோ! லேடீஸ்! வாட் நொன் சென்ஸ் யூ ஆர் டாக்கிங்.. என்ர வைஃப் கெஸ்டா வந்திருக்கா. உங்களுக்கு சமச்சி தர இல்ல. அவட குக்கிங்க டேஸ்ட் பண்ண விருப்பம் எண்டா எல்லாரும் வீட்ட வாங்க. லஞ்ச் போடுவம். இப்ப அவள டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அவ வாற நேரம் வருவா"


"ஏன் அண்ணா.. உங்களுக்கு போய் கூப்பிட பயமோ?"


"பயம் தான். இவருக்கு இரவே அடி விழுந்து இருக்கு நிவே.."


"அக்கா!!"


"என்ன அக்கா?? என்ன டைம் கீழ வந்த நீங்க தம்பி? அந்த பிள்ள பொறுமையா இருந்தது பெரிய விஷயம். புது இடம் புது ஆக்கள். அத தனிய விட்டுட்டு பன்னெண்டு மணி வர என்ன செய்த நீ மேல.." 


"இத சங்கர் அத்தான கேளுங்க. சொல்ல சொல்ல கேக்காம இழுத்துட்டு போய், கடைசில வாங்கி கட்டினது நான்.." வாமன் இறுதி வரியை சத்தம் வராமல் முனக,


சகோதரிகள் இருவரும் சிரித்தனர்.


"என்ன நடந்த தேவா?"


"என்ன அண்ணா, வெளுத்து விட்டுட்டாங்களோ அண்ணியார்?"


"வெக்க படாம சொல்லு தம்பி.."


"அடி வாங்கின நீங்க நேரத்துக்கு எழும்பிட்டிங்க.. அடி போட்ட அவங்கள காண இல்ல.. அடிச்ச களைப்பில ரெஸ்ட் எடுக்காங்களோ.."


ஹாலில் இருந்து சமையல் அறை வாயில் வரை வந்து விட்ட சாத்வி, இவர்கள் பேச்சைக் கேட்டு அதிலேயே நின்று விட்டாள். 


தன்னை அறியாமல் அவர்கள் சம்பாசனையில் லயித்தவள் உதட்டில் அவளை அறியாமலே மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது.


மறு நாள் பதுளைக்கு வெளிக்கிட வேண்டி இருந்ததால், காலை உணவை முடித்ததும் நிவேதா வீட்டில் இருந்து கிளம்பி விட்டான் வாமன் சாத்வியை அழைத்துக் கொண்டு.


விடியச் சாமம் ஐந்து மணிக்கே வாமனுக்கு பதுளைக்கு பஸ் உண்டு. இடையில் மதிய விருந்துக்கு சாத்வியை கேட்டு ஏற்பாடு செய்ய நினைத்தவன் அவளை எங்கே விட்டு ஊருக்கு போவது என்ற குழப்பத்தில் உழன்றான். 


வீட்டுக்கு வந்ததும், "ஹாசினி.. இண்டைக்கு லஞ்ச் ஒண்டு போடுவமா? சி.எம், நந்தினி அக்கா, நிவே எல்லாரையும் கூப்பிடுவம்.." என்று அவளிடம் கேட்டான்.


"சித்தி அங்க இருந்து வரணுமே... அத விட அக்ஷியும் நம்சியும் ஸ்கூல் போயிருப்பாங்க.. அம்மம்மாவும் சித்தியும் தான் நிப்பாங்க.. திடீர் எண்டு எப்டி வெளிக்கிடுறது.." என்றாள் சாத்வி.


அதுவும் சரி தான்.. ஆனால் வாமன் யோசித்தது அவள் வீட்டார்களையும் கூப்பிட்டால் மகிழ்வாளே என்று தான். 


இரவு அவன் நடந்து கொண்ட விதத்தில் கட்டாயம் மனக் குறை உருவாகி இருக்கும். காலையில் எதுவும் நடவாதது போல நடந்து கொண்டாலும் ஏதாவது கேட்டு விடுவாளோ என்று பயம் அவனுக்கு.


பிறந்த வீட்டார்களை வரவழைத்து அவளை மகிழ்ச்சி படுத்தி விட்டு ஊருக்கு பறப்பட நினைத்தான். 


தவிர, அவனுடன் பதுளை வர மாட்டேன் என்று முதலே சொல்லி விட்டாளே இவள். அவள் விருப்பம் போல நிற்கட்டும். புனிதாவுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம் என்றும் நினைத்தான்.


சி.எம் வர முடியாது என்றால் இனி அவன் தான் சாயங்காலம் அழைத்து சென்று விட்டு வர வேண்டும் என அதையும் யோசித்தான். 


நினைப்பது போல எல்லாம் நடந்து விட்டால் எப்படி? வாமனுக்கு சில பல அதிர்ச்சிகள் காத்திருந்தன!


ஆட்டுக் கால் சூப்பில் இருந்து கோழிக் குழம்பு, நண்டு வறுவல் என ஐந்தாறு அசைவ டிஷ்களை தனி ஒருத்தியாக சமைத்து முடித்து குளிக்க போன மருமகளை மூக்கில் விரல் வைத்து தான் பார்த்தார் ஜெயந்தி அன்று மதியம். 


நடராசா மென் நகையுடன் எப்படி நான் கொண்டு வந்த மருமகள் என்று பெருமைப் பட்டுக் கொண்டார் மனைவியிடம்.


சோடா, ஐஸ்கிரீம் பைகளுடன் வந்த வாமன் இரண்டையும் குளிர்சாதன பெட்டியுள் பதுக்கி விட்டு, "அம்மா, லேட் ஆகுது.. நீங்க சாப்பிடுங்க. அக்காவும் நிவேயும் வந்த பிறகு பிள்ளைகளையும் சாப்பிட சொல்லுங்க. வெயிட் பண்ண வேணாம்" என மாடி ஏறினான்.


ஜெயந்தியின் சமையல் அறையில் முறையான சமையல் நடந்து வெகு காலம் என்பதால் தட்டுப்பட்ட பொருட்களை வாங்கி வர அடிக்கடி பைக்கை முறுக்கி கடைக்கு போகவும் வரவும் இருந்தது வாமனுக்கு. கசகசத்த உடலுக்கு குளிப்பு அவசியப்பட்டது. 


பாத்ரூமில் இருந்து சாத்வி வெளிவந்ததும் இவன் புகுந்தான். இருவரும் கீழே வரும் போது அவன் மொத்த குடும்பமும் குழுமி இருந்தது டைனிங் டேபிளில்.


"தங்கச்சி!! அவசரப் பட்டு செயின போட்டுட்டம் நாங்க. முறைக்கு உங்கட கைக்கு தங்க காப்பு தான் போடணும்" பதார்த்தங்களை வெளுத்துக் கட்டிய தினேஷ் சொன்னான்.


"அதுக்கு என்ன, தேவனுக்கு போட்ட கை சங்கிலிய கழட்டி மச்சாள்ட கையில கட்டி விடு நந்தினி" சங்கரும் சாத்வி சமையலை பாராட்ட,


"நீங்க என்னவோ செய்யுங்க அத்தான். ஆனா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எனக்கு பத்தாயிரம் கடன் தரணும். அத மட்டும் வாங்கி தந்திருங்க.."


"ஏன் தம்பி? அதென்ன கடன் சகோதரங்களுக்குள்ள.." ஜெயந்தி வினா எழுப்ப,


"அது வேற மாதிரி கடன் அம்மா. இவங்களுக்கு சமைக்க தெரியாது எண்டு நான் நக்கல் அடிக்கிறதாம். சுடு தண்ணி கூட வைக்க தெரியாத பிள்ள தான் எனக்கு வைஃபா வருவா எண்டு சாபம் தந்தாங்க. அப்டி வந்தா நான் ஆளுக்கு ஐயாயிரம் தரணுமாம் எண்டு பெட் கட்டினாங்க"


சாத்வி சமையல் திறனே பிரதானமாக சிலாகிக்கப்பட்டது அந்த உணவு மேசையில். இது வேண்டும் அதை வை என எடுத்துப் போட்டு சாப்பிட்டனர்.


எதற்கும் சிறு முக மாற்றம் கூட காட்டாது அவர்களை கவனித்தவள் வதனத்தில் தோன்றி இருந்த சின்னஞ் சிறு மலர்ச்சி, அடிக்கடி அவள் மேல் பார்வை பதித்து மீண்ட வாமனுக்கு மாத்திரம் தெரிந்தது.


"பிள்ள, நீங்க பதுளைக்கு போற இல்ல எண்டால் இங்கயே நிக்கலாமே. தம்பி வாற கிழம வந்திருவான். அதுவரை இங்க எங்களோடவே நில்லுங்களன்" திடீரென சாத்வியை கேட்டார் வாமனின் தாயார்!! 


நாக்கு நல்ல சுவையை வேண்டியதும் மருமகளை தங்களுடன் வைத்துக் கொள்ளும் ஆசையும் வந்திருந்தது அவருக்கு.


அது தானே.. இது நல்ல யோசனையே என எல்லோரும் அவளை ஆவலாக ஏறிட, சாத்வி எந்த சலனமும் இன்றி வாமனை பார்த்தாள்.


அவனும் அவள் பதிலுக்கு காத்திருக்க, அவனே எதிர்பாராமல்,


"இல்ல.. நானும் அவரோட தான் போறன்.." என்றாள்!



வளரும்...

-ஆதுரியாழ் ❤️

Previous Epi

Next Epi

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...