முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

பனி 20


 

அத்தியாயம்: 20


"பையூ… மதுசூதனன்... மிஸ்டர் ஹன்சம்." எனத் தூரத்தே வந்து கொண்டிருந்த மதுவைக் கைக் காட்டி நிவி சொல்ல, பைரவி அவனை விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டே நின்றாள். 


" ஹாய்... பைரவி… வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ். " என்றபடி அவளின் அருகில் வர,


" ஹாய்‌ மிஸ்டர் மதுசூதனன். ஐ அம் நிவி. நிவேதா… " எனக் கரம் நீட்டியவளை அலட்சியம் செய்து பைரவியிடம் பார்வை பதிக்க, ராக்கி சிரித்தான். 


"இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க." என அவள் கோபமாக கேட்க,


"இல்ல அன்னைக்கி நான் கேட்டப்ப சொல்லாம மூக்கொடச்ச. நான் பரவாயில்லை சின்ன பொண்ணுன்னு விட்டுட்டேன். பட் இன்னைக்கி வான்ட்டடா வந்து ஏன் ஃபரெண்டு கிட்ட பேசி மூக்க உடைச்சிட்டு நிக்கும்‌ போதும்‌. அந்த மூக்க ஒட்ட என்ன பண்ணுவன்னு நினைச்சேன் சிரிப்பு வந்திடுச்சி. " எனச் சொல்லி சிரிக்க, பைரவியும் சேர்ந்து கொண்டாள். நிவி அவளை முறைக்க,


" ஹாய் அண்ணா… எங்க இந்த பக்கம்… ‍" என்ற பைரவியின் கேள்வி ராக்கியிடம் இருந்தாலும் விழிகள் மதுவை விட்டு நகர மறுத்தன. 


"ஷாப்பிங் மா. ஒரு ஜோடி ஷூ வாங்க காலைல இருந்து அழையிறோம். இவ்ளோ பெரிய சென்னைல இப்பவர அது கிடைக்கவே இல்லை. அதத்தான் தேடிட்டு இருக்கோம். ஆமா நேத்து எப்ப வீட்டு கிளம்புனீங்க. சேஃபா போய்ட்டிங்களா." என‌ அக்கறையுடன் கேட்டான். 


"நீங்க தான் எங்க பின்னாடி ஆள் அனுப்பியிருந்திங்களே அப்றம் சேஃபா போகாம எப்படி?" என்க, மது கேள்வியுடன் பைரவியை பார்த்தான். 


"அது நேத்து ஒரு பெர்த் டே பார்ட்டி. ஃப்ரெண்டோட அண்ணெ வீட்டுல." என்றாள் பையூ. 


ஏன் விளக்கம் கூறினோம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் கேள்வியே கேட்டிருந்தாலும்‌ அவனுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதை மறந்து போனாள் அவள். 


"பையூ நேராச்சி நாம கிளம்பலாம்." என்றாள் நிவி சிறு கடுப்புடன். அங்கே நிற்கும் அவளை மது அலட்சியம் செய்தது, பைரவி கண்டு கொள்ளாதது, இந்த ராக்கியின் கேலி சிரிப்பு எல்லாம் அவளைக் கடுப்பேற்றிவிட்டது.


"வா பையூ. " என பைரவியின் கரம் பற்றி இழுத்துக் கொண்டு‌‌ நடக்க, நடக்க இயலவில்லை.. பைரவியின் கரத்தை மது பிடித்திருந்தான்.


" நான் கால் பண்ணப்ப ஏன் எடுக்கல." என அதிகாரமாக பைரவியிடம் கேட்க, நிவிக்கு கோபம் வந்தது..


"நீங்க கால் பண்ணா அவசியம் எடுக்கணுமா என்ன?" 


"Can we talk alone?" எனத் தனியாக பேச அழைக்க, நிவி மறுக்கும் முன் ராக்கி அவளைப் பிடித்து இழுத்து வந்தான். 


"என்னம்மா நீ. நாளைக்கி கல்யாணம் பண்ணிக்க போறவங்க. அவங்களுக்குள்ள பேச ஆயிரம் இருக்கும். உன்ன நடுவுல வச்சிட்டு எப்படிப் பேச முடியுமா சொல்லு? வந்து ஒரு ஓரமா நில்லு.." என்க, அவனை முறைத்தபடி அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்தாள் அவள். 


"ரொம்ப கோபமா இருக்க போல. சில்லுன்னு குடிச்சா கூல் ஆகிடுவியா. சாதா தண்ணி தாம்மா. பிஸ்லரி வாட்டர். " என அவளிடம் வம்பிழுத்தான் ராக்கி.


"உங்க வேலைய பாத்திட்டு போங்க ஸார். சும்மா சும்மா வந்து வந்து பேசி கடுப்பேத்திக்கிட்டு. " என முகம் திருப்ப.


" எல்லாம் கலி காலம். இந்தப் பொண்ணுங்களுக்கு அவங்கள மதிச்சி பேசுற சாக்லேட் பாய விட, மொறச்சி பாக்குற ரக்கட் பாய்ஸ்ஸ தான் பிடிச்சிருக்கு. என்ன மாதிரியான டேஸ்ட்டோ." எனப் புலம்பியபடியே அவளின் அருகில் அமர்ந்தான். இந்த இருவரும் அந்த இருவரை வேடிக்கை பார்க்க தொடங்கினர்.


" ஏன் அட்டன் பண்ணல?" என்றான் மது. 


‘இவனுக்கு அன்பாக பேசவே தெரியாதா என்ன!’ என‌க் ‌கேட்கும் அளவுக்கு குரலில் சிறு‌ கடுமை இருந்தது.


"கால் பண்ணீங்களா என்ன‌? " எனச் சந்தேகமாகக் கேட்டவள் தன் ஃபோனை எடுக்க, அதைப் பிடுங்கி பார்த்தான் மது.


"தி இஸ் டூ மச். என்னோட மொபைல பிடுங்க பாக்குறது தப்பு. குடுங்க, மதுசூதனன்… என்னோட ஃபோன குடுங்க." என்றவளின் பேச்சு காதில் விழவில்லை அவனுக்கு. 


அலைபேசியின் திரையில் தெரிந்த தன் பெயரை பார்த்ததும் திரும்பி அவளைப் பார்த்து தன் புருவங்களை ஏற்றினான்.


"மதுன்னா இங்கிலீஸ்ல ஆல்கஹால்ன்னு தான அர்த்தம்." என்றாள் பாவமாக. அவளின் பேச்சு சிறு புன்னகையை அவன் முகத்தில் படர் விட்டது.


அவன் விரல்கள் தொடு திரையைத் தொட்டது. அதில் தெரிந்து மங்கையின் உருவம் அவனை ரசிக்கச் செய்தது. நேற்றைய நிகழ்ச்சியில் எடுத்த புகைபடத்தைத் தான் வால் பேப்பராக வைத்திருந்தாள் பைரவி.


அவளின் பூசிய உடலில் உள்ள வளைவு நெளிவுகளை மெல்லியதாய் எடுத்துக் காட்டும் அந்த வெள்ளை நிற தாவணியில் தேவலோகத்து அப்சரஸ்ஸாக தோன்றினாள் பெண்.


இப்பொழுது எப்படி இருக்கிறாள் என நிமிர்ந்து அவளைப் பார்த்தவன் தன்‌ கண்களால் அவளை மேலிந்து கீழ் வரை ஸ்கேன் செய்யும் பார்வை பார்த்தான். 


அன்று முதல் முதலில் பார்த்த போது அவளுக்கு மிகவும் பிடித்த ஜீன்ஸ் குர்த்தியில் துப்பட்டா அணியாது, தன் குட்டைக் கூந்தலைக் குதிரை வால் போல் உயர்ந்து கட்டி‌, இடது கையில் பெரிய வாட்ச்சும் வலது கையில் கலர்கலரா ப்ளாஸ்டிக் வளையல்களும், காதில் பறவை உட்கார்ந்து ஊஞ்சல் ஆடும் அளவுக்குப் பெரிய வட்ட வடிவிலான வளையத்தை அணிந்திருந்தாள். கழுத்தில் கருப்பு கயிறு.


அன்று பார்த்த போது மதுவின் மனத்தில்  பைரவி இடம் பிடிக்கவில்லை.. ஆனால் ஆணான அவனைப் பெண் ஈர்த்திருந்தாள். இன்றோ அவன் மனத்தில் இடத்தை வாங்கி பட்டா போட்டுவிட்டாள். 


க்ரே கலரில் லாங் ஸ்கெட். அதில் வண்ண வண்ண பூக்களும் கொடிகளும் இழையாடின. ராமர் பச்சை நிறத்தில் அளவான முழு நீள கைகள் வைத்த டாப். என்ன தான் அது லூசா இருந்தாலும், அவளின் இடையை இறுகிப்படித்து மெல்லிய பிறையாய் அவளின் மேனியின் நிறத்தை காட்டியது. 


நீள தொங்கட்டான்கள், வாட்சும் வளையலும் மிஸ்ஸிங். அகன்ற நெற்றியில் கண்ணுக்கு புலப்படும் அளவுக்கு ஒரு பொட்டு. சாரதா நிறுவனத்தில் இருந்து புறப்படும் முன் முகம் கழுவி அலங்காரம் செய்திருப்பாள் போலும். உதட்டில் சாயம் சற்று அதிகமாகவே இருந்தது.


கழுத்தில் அதே கயிறு உள்ளதா என அவளின் சங்கு கழுத்தைப் பார்க்க, அதை யாருக்கும் காட்ட மாட்டேன் என்பது போல் கழுத்து வரை மூடியிருந்தது அந்த டாப். கண்கள் மெல்ல அதன் கீழே இறங்கி அவளின் அழகை ரசிக்க, பைரவிக்கு  மட்டுமல்ல, தூர இந்த காட்சியை பார்த்த ராக்கிக்கும் இதயத்துடிப்பை அதிகமாக்குவது போல் இருந்தது.


"இது r...e...m...o... Remo மொமெண்ட்ல…. மது என்ற அந்நியனுக்குள் ரெமோவா! எப்படி வந்திருக்கும்? ம்… தெரியலயே. ஒரு வேள அந்நியன் படத்துல வர்ற மாதிரி ஸ்லிப் பர்ஸ்னாலிட்டி வியாதியா இருக்குமோ! ஆனா அம்பிங்கிற ஒரு கேரக்டர மட்டும் இவெங்கிட்ட இருந்து எதிர்பாத்தா அது உங்களுக்கு ஏமாற்றம்‌ தான். " ராக்கி பாயின் புலம்பல்கள்.


மதுவின்‌ பார்வை தன்னை

உடலே மேயவும், வேகமாக தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவனை முறைத்து,


"என்ன பாக்குறீங்க?" எனக் காட்டமாக கேட்டாள்.


"Not bad... இந்த டிரெஸ் கூட உனக்கு அழகா தான் இருக்கு. ஃபஸ்ட் டயம் பாத்தப்ப போட்டிருந்தது அவ்வளவா உனக்கு செட் ஆகல. இது ஓகே தா... பட் இத விட உன்னோட ஃபோன்ல இருக்குறது அல்டிமேட்…” என்றவன்,


“ரொம்...ப அழகா இருக்கு... " எனக் குரல் தாழ்த்தி கடைசி வார்த்தையை மட்டும் அவளின் காதில் வந்து குறுஞ்சிரிப்புடன் சொல்ல, பெண்ணவளின் முகத்தில் சிறு நாணம் வந்தது. 


'அடியே அவெ உன்னோட காஸ்ட்யூம பத்தி கமெண்ட் பண்ணிட்டு இருக்கான். கோபப்படாம வெக்கப்பட்டு நிக்கிற. இப்படியே நின்னா உன்ன லூசுன்னு நினைச்சிடுவான். உனக்குன்னு இருக்குற கெத்து என்னாகுறது. எனக்கு பிடிச்சத நான் போடுவேன் உனக்கு என்னடா வந்ததுன்னு சண்ட போடு. இப்படி நிக்காத. போ... ' ஒரு மனம் கதற, 


மறு மனமோ 'அன்றும் தன்னைக் கவனித்திருக்கிறான். இன்று போல்...'  என அவனின் ரசிக்கும் பார்வையில், தாள இயலாத வெட்கத்துடன் சிவந்து நின்றது. இரண்டையும் புறம் தள்ளியவள்.


"எதுக்கு கால் பண்ணீங்க?" என்றாள் விரைப்பாக. அவன் பதில் சொல்லாது நிற்க,


" உங்க கிட்ட தான் கேட்டேன். கால் எதுக்கு பண்ணீங்க. அதான் ஆளே நேர்ல பாத்தாச்சில்ல. என்னன்னு இங்கயே சொல்லுங்க."


"நீ தான் சொல்லணும். ரெண்டு நாள் முடிஞ்சது. பதில் எதுவா இருந்தாலும். I need a answer..." என்றான் அதே குறுஞ்சிரிப்புடன். 


அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு இப்போதே சம்மதம் எனச் சொல்லி அவன் அகன்ற மார்பில் சாய்ந்து கொள் எனக் காதல் மனம் ஆசையைத் தூண்டி விட்டாலும்,


" நான் இதப் பத்தி கொஞ்சம் பேசணும். ஏன்னா லைஃப் லாங் ஒரு வட்டத்துள்ள இருக்க சொல்லி நீங்க வற்புறுத்துற மாதிரி இருக்கு." என்க,


"நான் யாரையும் வற்புறுத்தல. எனக்கு செட்டாகுற மாதிரியானப் பெண்ணத் தான் தேடுறேன். இதுல என்ன இருக்கு. " என்ற போது அவனின் குரல் மாதிரி இருந்தது. ரசிக்கும் பார்வை மறைந்து போயிருந்தது.


"ஆனாலும்…" என அவள் இழுக்க,


"நாம இதப் பத்தி இன்னொரு நாள் தனியா பேசலாம்." என்றான் மது. அவனுக்குள் பைரவி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாள். அது தான் அவனை அவனாக வந்து அவளிடம் பேச வைத்தது.


இருவரும் நடு பாதையில் தங்களின் வாழ்க்கை பாதையைப் பற்றி பேச, அவர்களின் ரொமான்ஸ் பொறுக்காது நிவி வேகமாக இவர்களின் அருகில் வந்து,


"அப்ப இன்னைக்கி எதுவும் பேசலன்னா வா கிளம்பலாம். ம்… எனக்குப் பசிக்குது. உனக்குப் பசிக்கும்னு எனக்குத் தெரியும். வா போலாம்." என்றாள் நிவி.


"நீ இன்னும் லன்ச் சாப்பிடலயா! டயம் என்னனென்னனு தெரியுமா? " என்ற அவனின் அக்கறை பைரவிக்குப் பிடித்திருந்தது. 


"என்ன நீ எந்தங்கச்சி சாப்பிடலயா! வாம்மா... போய் இப்பவே உனக்கு சாம்பார் சோறும் சுட்ட அப்பளமும் வாங்கி தர்றேன். உனக்கு மட்டும் தான். " என ராக்கி பொங்க, நிவி முறைத்தாள்.


"இல்ல அண்ணா வேண்டாம். அம்மாக்கு ஹோட்டல் நான் சாப்பிட்டா பிடிக்காது. எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுல தான் சாப்பிட சொல்லுவாங்க." 


"அப்படி சாப்பிடாம ஊர் சுத்தணுமா என்ன?" மது கோபமாக கேட்க, அவனின் இந்தக் கேள்வி பைரவிக்கு பிடிக்கவில்லை, 'எங்கே சென்றாய்.. ' என்று கேட்டிருந்தாள் அது திருப்தியாக இருந்திருக்கும். ஆனால் அவனே ஒரு பதிலை உருவாக்கி கொண்டு பேசுவது நெருடியது.


"நாங்க ஊர் சுத்துனத நீங்க பாத்திங்களா ஸார்?" என்றாள் நிவி கோபமாக.


"அப்ப எங்க போயிருந்திங்க? சாப்பாடு கூட சாப்பிடாம." ராக்கி.


"அது உங்களுக்குத் தேவையில்லாதது ஸார். இவ உங்க ஃப்ரெண்ட கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணுன்னு உறுதி கூட ஆகால. பொண்ணு பாக்கல. வீட்டு பெரியவங்க யாரும் பேசிக்கல. அதுக்குள்ள நீங்க பண்ற இது அதிகம். உங்களுக்கு உரிம இல்லாதவங்க கிட்ட கேள்வி கேக்குறீங்க." என்றவள் பைரவியின் கரம் பற்றி இழுத்துச் செல்ல, மது விடவில்லை. பைரவியின் கரம் பற்றி வேகமாக இழுத்தான்.


அதன் வேகத்தில் அவனின் மார்பை முட்டி நின்றாள் அவள். விலகி விடாத படி அவளின் இடையை அழுத்தமாக பிடித்து அணைக்க, ஒரு நொடியில் பயந்து போனவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். 


" நான் உங்கிட்ட கேட்டா… பதில் எதுவா இருந்தாலும் நீ தான் சொல்லணும். எங்க போயிருந்த? இவ்ளோ நேரமா." என்க, திருதிருவென அவள் முழித்தாள். நிவி தான் கத்தினாள்.


"என்ன ஸார் ஈவ்டீசிங் பண்றிங்களா? விடுங்க ஸார் அவள." என்க, அவளை முறைத்தவன். 


"உன்ன ஒன்னும் பண்ணலல்ல." என்க,

நிவி வேகமாக தன் ஃபோனை எடுத்தாள். 


" இப்ப நீங்க அவள விடலன்னா நான் போலிஸ்க்கு கூப்பிடுவேன்." என மிரட்ட, நிலைமையை உணர்ந்து ராக்கி அவளிடம் சமாதானமாக பேச முயன்று திட்டு வாங்கிக் கொண்டிருந்தான். 


பைரவியோ மதுவின் முகம் பார்த்து, "முதல்ல என்னை விடுங்க… ப்ளிஸ்... பப்ளிக் ப்ளேஸ்ல இப்படியா பிகேவ் பண்ணுவிங்க... லீவ் மீ நௌவ்." என விழிகளை உருட்டி மிரட்ட, அவனை விலக அவள் நினைப்பது மதுவிற்கு ஏமாற்றமாக இருந்தது போலும். அதை இடையை பற்றியிருந்த விரல்களின் அழுத்ததில் அதை உணர்ந்தாள் அவள்.


சில நொடிகளில் அவளை விட்டவன், மீண்டும் பதில் வேண்டும் என்பது போல் நிற்க, " நான் எங்க போறேங்கிற உங்ககிட்ட பகிர்ந்துக்கிற அளவுக்கு நீங்க எனக்கு நெருக்கமானவங்க கிடையாது. நமக்குள்ள நட்பு லவ்வுன்னு எந்த ரிலேஷன்ஷிப்பும் கிடையாது. அதுனால இன்னொரு மொற எங்கிட்ட இப்படி மிஸ் பிகேவ் பண்ணாதிங்க. வா நிவி. " என்றவள் நிவியை அழைத்துக் கொண்டு மதுவை முறைத்தபடி சென்றாள்.


ஏனோ அவனின் செயல்கள் அனைத்தும் ஆண் ஆதிக்கம் நிறைந்ததாகவே தோன்றியது அவளுக்கு.  


'நிவி சொன்னது சரிதா.. He is a male dominancer.' என அவனைத் திரும்பி பார்த்து திட்டுக் கொண்டே செல்ல, சென்றவளுக்கு தெரியாது அவனின் ஈகோவைத் தட்டி எழுப்பி விட்டு செல்கிறோம் என்று.


மது இறுகிய இதழ்களில் ஒரு புன்னகையைப் படரவிட்டுபடி தன் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு நின்றான்.


அவள் மார்பை முட்டிய வேகத்தில் அவளின் உதட்டு சாயம் அவனின் வெள்ளை டீசர்ட்டில் அவளின் இதழை ஓவியமாக வரைந்து வைத்து சென்றிருந்தது. அதை மெல்ல வருடியவனின் தேகம் சிலிர்க்க,


“மிஸ்டர் மதுசூதனன்... ஐய்யா மது...  மதும்மா... இது நீங்க தானா!! ஒரு பொண்ண கைய பிடிச்சி இழுத்து, நட்ட நடு பாதைல கட்டி பிடிச்சிட்டு நின்ன என்னோட உயிர் நண்பன் மதுசூதனன் நீங்க தானா!!" எனக் கேலி செய்ய, சிரித்தபடி நண்பனை இழுத்துச் சென்றான் மது.. 



தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...