நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம் இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது. யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர். ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...
நின்னையல்லால் - 07
சாத்வியின் முறைத்த பாவனையில் மத்திமமாக சிரித்தவன், "திரும்பவும் ஏதாவது ரோங்கா கேட்டுட்டனா ஹாசினி" என கையில் இருந்த அலைபேசியை சார்ஜ் இணைப்பில் செருகினான்.
"ஏன் டோர் லொக் பண்ண கேக்குறிங்க..?" அவள் வெடுக்கெனக் கேட்டாள்.
விட்டால் கதவை பூட்டி விளக்கை அணைத்து பக்கத்தில் வந்து....
அவள் அவனை கோபமாக வெறிக்க, கால் இரண்டையும் முன் பின்னாக வைத்து கையை குறுக்கே கட்டி மேசையில் சாய்ந்து நின்றவன், "நாங்க கொஞ்சம் கதைக்கணும் ஹாசினி! டோர் திறந்து இருந்தா ஓபனா கதைக்க ஏலாது" என கூலாக சொன்னான்.
அவன் நின்ற போஸ் முகநூலில் கண்ட அவனுடைய ஏதோவொரு புகைப்படத்தை ஞாபக படுத்தியது.
"என்ன கதைக்கணும்?"
"ஒண்டுமே இல்லயா, நாம டிஸ்கஸ் பண்ண?" புருவம் தூக்கி கேட்டவன், 'எனக்கு உங்கள பற்றி பெருசா ஒண்டும் தெரியாது.. அதேமாதிரி உங்களுக்கும் என்ர பேர் ஊர் வேல படிப்பு இதுகள தவிர வேற ஒண்டும் தெரியாது எண்டு தான் நினைக்கிறன்.. அம் ஐ ரைட்?"
"அரேஞ்ச் மேரேஜ் இல்லையா? அதுவும் வன் வீக்ல பேசி நடந்த கல்யாணம். காலையில தாலி கட்டினன்.. மோதிரம் போட்டுக் கொண்டம். அதுக்காக உடனே நாம ரெண்டு பேரும் ஈருடல் ஓருயிர் ஆகிட்டம் எண்டு இல்ல தானே!!"
சாத்வி அவனை இமை இடுக்கி பார்க்க,
"இந்த மாதிரி நான் கதைக்கிறது தப்பி தவறி வெளில கேட்டால் அது வேற மாதிரி கன்வே ஆகலாம்... சோ.." என கதவை கை காட்டி தலையை சரிக்க, சாத்வியாக எழுந்து கதவை சாத்தி வந்தாள்.
புன்னகைத்தவன் அவளுடைய லாப்டாப் பாவிக்கும் கதிரையை திருப்பி கட்டிலை பார்த்த மாதிரி போட்டு அமர்ந்தான். அவளையும் உட்காரச் சொன்னான்.
சாத்வி கட்டிலில் அமர்ந்ததும்,
"எனக்கு உங்களோட நிறைய கதைக்கணும் ஹாசினி. ஆனா, இண்டைக்கே எல்லாம் கதைக்க ஏலாது. ஏர்லி மோர்னிங் எழும்பினம். ஹோல் டே நாங்க ரெண்டு பேரும் இருந்தத விட நிண்டது தான் கூட.. டயர்டா இருக்கு..." என்றவன், "சொரி! நான் லெக்சர் பண்ற மாதிரி இருக்கா..?" என நடுவில் சந்தேகம் கேட்க, சாத்வி எந்த வித முக மாற்றமும் காட்டாமல் தலையை அசைத்தாள்.
"நீங்க ஓம் என்றிங்களா இல்ல என்றிங்களா??"
"இல்ல!"
"தாங்க்யூ!! ஏன் கேட்டன் எண்டால்.. எங்கிட வீட்ட நான் கொஞ்சம் நீளமா கதைச்சாலே டேய் போதும்டா லெக்சர் அடிக்காத எண்டு நக்கல் அடிப்பாங்க. ஸ்பெஷலா என்ர அக்கா சொல்வா. அதான் ஒரு டவுட். நீங்க வெளியில சொல்லாட்டியும் மனசுக்குள்ள நினைக்கலாம் இல்லயா!"
கோயிலில் இன்று சடங்குகளை நிறைவேற்ற உதவிய அவனுடைய அக்கா முகத்தை நினைவில் தேடினாள் சாத்வி.
"அம்மா மட்டும் தான் குறுக்கால கமென்ட் போடாம நான் கதைக்கிறத பொறுமையா கேப்பாங்க.. இப்ப நீங்க கேட்டுட்டு இருக்கிற மாதிரி. பட், எனக்கு ஒரு அம்மா போதும் ஹாசினி!" என நிறுத்தி புன்னகைக்க,
சாத்வியும் அவனுடன் சேர்ந்து புன்னகைக்காமல் இருந்தது அவளுடைய நெடு நாள் பயிற்சியின் பலன் தான்.
"நான் மட்டும் கதைக்கிற மாதிரி ஃபீல் ஆகுது.. நீங்க ஏதாவது சொல்லுங்களன்!" இடது கையால் டீ-ஷர்ட் காலர் நிமிரத்தியபடி கேட்டான்.
சாத்விக்கு என்ன சொல்வது என தெரியவில்லை! அவனிடம் கேட்க நினைத்தாள்.
"என்ன பற்றி என்ன தெரியும் உங்களுக்கு??"
"குட் க்வெஷன். உங்கட பேர் சாத்விஹாசினி. BA graduate. அம்மம்மா சித்தி சித்தப்பாவோட இருக்குறிங்க.."
"இவ்ளோ தான்?"
"ம்ம்! இதுல உங்களோட ரெண்டு லிட்டில் ஏஞ்ஜல்ஸும் இருக்காங்க எண்டது கோயில்ல பாத்த பிறகு தான் தெரியும்! நீங்க யோசிக்கிறது விளங்குது ஹாசினி.. இந்த ரெண்டு டீடைல்ஸ தெரிஞ்சுட்டு ஒரு மேரேஜ் ரிலேஷன்ஷிப்குள்ள என்டர் ஆகுறது இந்த காலத்தில் பெரிய அதிசயம் தான் என? அது........" சரளமாக பேசியவன் குரல் குறுக,
"அப்பா பாத்து முடிவு பண்ணின மேரேஜ் இது. அவர் எடுக்கிற முடிவுகள் எப்பயும் சரியா இருக்கும். ஃபர்ஸ்ட் டைம் கண்ண மூடிட்டு அவருக்கு தலை ஆட்டலாம் எண்டு நினச்சன்..." முடிக்கும் போது குரல் லேசாக கரகரத்தது போலவும் தோன்றியது சாத்விக்கு.
"இப்ப நீங்க சொல்லுங்க.." பழைய தொனி மீள,
"என்ன பத்தின ஐடியா என்ன உங்களுக்கு?" என்று கையை குறுக்கே கட்டி கதிரைக்கு பக்கவாட்டில் சாய்ந்து அவளை ஆர்வமாக நோக்கினான்.
லெக்சர் ஹாலில் மாணவர்களை குரூப் டிஸ்கஷன் செய்ய விட்டு இப்படி தான் ப்ரபசர்கள் உட்காருவார்கள்.
பல்கலைக்கழக நாட்களுக்கு தாவிய மனதை இழுத்து பிடித்த சாத்வி, இது நல்ல வாய்ப்பு.. இவனை பற்றி தெரிந்ததை.. தெரியாததை.. மனதில் உறுத்தும் இவனுடைய கடந்த கால காதலை... அத்தனையையும் இன்றே உடைத்து பேசி விளக்கம் கேட்டு விடலாம் என்று நினைத்தாள்.
ஆனால், பிரஷாந்தி என்பவள் இவருடைய முன்னாள் காதலி மாத்திரம் அல்ல! இப்போது இன்னொருவர் மனைவி. ஒரு குழந்தைக்கு தாய். கனடாவில் எங்கோ ஒரு மூலையில் குடும்பம் நடத்துகிறாள். அவளை இழுத்து கேள்வி எழுப்ப மனம் ஒப்பவில்லை.
"உங்களுக்கு என்ன பத்தி தெரிஞ்ச அளவுக்கு தான் எனக்கும் உங்கள பத்தி தெரியும்.." என்று சுருக்கமாக முடித்து விட்டாள்.
"ஷுவர்??"
"ஓம்... ஏன் டவுட்டா கேக்குறிங்க?"
"இல்ல, நீங்க என்ன பாக்குற பார்வையில.." வாமன் முடிக்கவில்லை கதவு தட்டிக் கேட்டது.
சாத்வி எழுந்து திறக்க, புனிதா சங்கடத்துடன் நின்றாள்.
"சாத்வி, சார்ஜ் போட்டுட்டிங்களா? நம்மட மாலா அக்காட மகனுட்ட தான் வேண்டி வந்த நான்... நேரம் கெட்ட நேரத்தில வந்து சார்ஜர தாங்க எண்டு கேக்குறான்.."
புனிதா சின்னக் குரலில் குசுகுசுத்தாலும் அவள் கேட்டது விளங்கி விட்டது வாமனுக்கு. சார்ஜரை கழட்டி வந்து அவளிடம் நீட்டினான்.
"உங்கட ஃபோன்ல ஏறிட்டுதா தம்பி சார்ஜ்?"
"நோ ப்ராப்ளம். 55 பர்சன்டேஜ் இருக்கு. இருக்கிறத வச்சி மெனேஜ் பண்ணலாம். நீங்க குடுங்க"
"சரி தம்பி!!"
புனிதா சென்றதும் கதவை சாத்திய சாத்வி, "பன்ரெண்டு மணிக்கு யாராவது சார்ஜர் கேட்டு வருவாங்களா?" என்று அடுத்த வீட்டு பையனின் நடத்தையை விமர்சித்தாள்.
சிரித்த வாமன், "மிட் நைட்டுக்கு பிறகு தானே நம்மட ஜங் ஜெனரேஷன் ஒன்லைன்ல விடிய விடிய இருக்கு. முக்கியமான இடத்தில சார்ஜ் டவுன் ஆகி இருக்கும். நம்மட சார்ஜர கேக்க நாம ஏன் வெக்க படணும் எண்டு கிளம்பி வந்திருப்பான் பெடியன்"
அவன் சாதாரணமாக சொல்ல, இமை இடுக்கிய சாத்வி, "என்ன முக்கியமான இடத்தில?" என கேள்வி கேட்டாள்.
"வெப் சீரீஸ் பார்த்திருப்பான்.. கிரிக்கெட் லைவ் பாத்திருப்பான்.. வேற ஏதாவது ஷோ பார்த்திருப்பான்.. இன்ரெஸ்டிங்கான கட்டத்தில ஃபோன் சார்ஜ் டவுன் ஆகி இருக்கும்.."
"ஓ!"
"ஏன், நீங்க என்ன நினச்சிங்க..?"
"இல்ல.. ஒண்டும் இல்ல.."
"கண் சொக்கி கையில இருக்கிற ஃபோன் தானா விழுற வர எதையாவது பாத்துட்டு தானே இருக்கிறாங்க இப்ப எல்லாரும்..."
உண்மை தான்! அவள் கூட உறக்கம் வராத இரவுகளில் அப்படித் தானே..
"சரி ஹாசினி, நாங்களும் தூங்குவமே.."
கேட்டவனை சாத்வி இமை இடுக்கி பார்க்க,
"என்ன திரும்பவும் பிழையா எடுத்துட்டிங்களா?" எனச் சிரித்தான்.
"ஹாசினி!! இனி நாங்க சேர்ந்து தானே ட்ராவல் பண்ண போறம். நான் கதைக்கிற டோன் கதையிட மீனிங் எல்லாம் கொஞ்ச நாள்ல நீங்களே பிடிச்சிருவிங்க. ஐ மீன் உங்களுக்கு விளங்கும்.. உள் அர்த்தம் வச்சி நான் கதைக்க இல்ல எண்டு என்ர நேச்சர விளங்கி கொள்விங்க. அடிக்கடி டவுட் வராது. என்ன சந்தேகமா பாக்க மாட்டிங்க"
"இல்ல! நான் உங்கள சந்தேகமா பாக்க இல்ல" ஏன் இப்படி சொல்கிறான் என தெரியாமல் சாத்வி சந்தேகமாகவே இதையும் சொன்னாள்.
"ஷூவர்?? ஹன்ட்ரட் பர்சன்ட் ஷூவர்??"
"ஓம்.... ஏன்...."
உடலை முறுக்கி சோம்பல் முறித்தவன் கை குவித்து நாசுக்காக கொட்டாவியை வெளியேற்றி, "சரியான மாதிரி டயர்டா இருக்கு. கிடக்கிற பெட்ட நானும் ஷெயார் பண்ண அலோ பண்ணுவிங்களா??"
சாத்வி இதை எதிர்பார்க்கவில்லை! யாரும் இப்படி அனுமதி கேட்பார்களா? படங்களில் நாடகங்களில் வருவது போல அவனை மேலே விட்டு அவள் கீழே தூங்க நினைக்கவில்லை தான்.
அதற்காக முதல் நாளே ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் உறவாட அவள் விடப் போவதில்லை. இந்த முடிவுடன் தான் இருந்தாள். அது தான் அவளை இறுக்கமாக்கி மூச்சு முட்ட செய்திருந்தது.
அவனுக்கு பதில் சொல்லாமல் கப்போர்ட் திறந்து புதிய போர்வை எடுத்தவள், கட்டிலில் சுவரோரமாக அடுக்கி கிடந்த தலையணைகளைப் பிரித்து போட்டு இந்தப் பக்க தலையணையில் போர்வையை வைத்தாள்.
அவனும் அவள் பக்கத்திலேயே உறங்கலாம் என்ற ஏற்பாட்டில் வாமன் உதடு பிரியாமல் புன்னகைக்க,
"இரவில தண்ணி குடிக்கிற பழக்கம் இருக்கா உங்களுக்கு?" எனக் கேட்டாள்.
"எனக்கா.. இல்ல.. பாத்ரூம் யூஸ் பண்ர பழக்கம் இருக்கு" என்றான் புன்னகையுடன்.
எதிராளியை தன்னுடன் சேர்ந்து புன்னகைக்க அழைக்கும் வசீகரமான புன்னகை தான் அவனுக்கு. சாத்விதான் அதை கண்டும் காணாமல் சமையல் கட்டிற்கு சென்றாள்.
இரவில் விழிப்பு வரும் போது நீர் பருகும் பழக்கம் சாத்விக்கு உண்டு என்பதால் தண்ணீர் செம்பு எடுத்து வந்தாள். அவள் வரும் போது வாமன் பாத்ரூமில் இருந்தான்.
செம்பை மேசையில் வைத்து மூடி கட்டிலில் ஏறி சுவர் பக்கம் படுத்தவள் புதிய அனுபவத்துக்குள் தன்னை புகுத்தி கொள்ள தயார் ஆவது போல மூச்சை இழுத்து விட்டு சுவாசத்தை சீராக்க, பாத்ரூமிலிருந்து வெளிப்பட்ட வாமன் விளக்கை அணைத்து கூரை ஃபேன் வேகத்தையும் அதிகரித்தான்.
கட்டிலுக்கு வந்து போர்வையையும் பயன்படுத்துவது அவன் அசைவில் அவளுக்கு தெரிந்தது. அவன் பர்ஃபுயும் வாசனை மிக அண்மையில் வீச,
"குட் நைட் ஹாசினி!!"
"குட் நைட்!" சொல்லிப் பழக்கம் இல்லாத அந்த குட்நைட்டை சின்னக் குரலில் திருப்பி அவனுக்கு சொல்ல,
சில நிமிடங்கள் கரைந்திருக்கும்.
"ஹாசினி! தூங்கிட்டிங்களா??"
"இல்ல...."
"நீங்க லவ் பண்ணி இருக்கிங்களா?"
சுவர் பார்த்து படுத்திருந்த சாத்விஹாசினி வெடுக்கென அவனைப் பார்த்து திரும்பினாள்.
அவள் கேட்க வேண்டிய கேள்வி இது!! அவளை பார்த்து கேட்க என்ன தைரியம் வேண்டும்!!
வளரும்...
-ஆதுரியாழ் ❤️

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..