அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். " "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க, "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?" "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?" "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டிய...
நின்னை - 53 ஆழ் நிலை மயக்கத்தில் இருந்து மங்கலாக நினைவு திரும்பியது வாமனுக்கு. கண் இமை திறக்க முன் அவன் உள் உணர்வுகள் விழித்தன. இதமான குளிர்.. வளைவான பாதையில் வந்து கொண்டிருந்தான்.. டிப்பர் சத்தமும் ஹெட்லைட் ஒளியும் பாய்ந்து வந்தன.. அவன் வேகமாக தாவ நினைத்து தடுமாறுகிறான்.. வாகனம் மோதுண்டதும் அள்ளுண்டு சாலையில் எறியப்பட்டான்.. ஆ.. உடல் அதனால் தான் அணுஅணுவாய் வலிக்கிறது.. அப்பா என உச்சரித்தான்... கை நடுங்கியது.. பற்றி இருந்த ஃபோனை தேடினான்.. அது கிடைக்கவில்லை.. யாரோ இருவர் வந்தார்கள் அவன் அருகில்.. அவனை கை கால் பிடித்து நகர்த்தினார்கள்.. மூக்கில் கை வைத்துப் பார் உயிர் இருக்கிறதா என்று? அதில் ஒருவன் சிங்களத்தில் சொன்னான். நான் உயிருடனேயே இருக்கிறேன்.. மனசுக்குள் அலறினான்... ஆம்பிலன்ஸுக்கு அழை என்றான் மற்றவன். ஓம்! என்னை காப்பாற்றுங்கள்.. ஹாசினி!! ஹாசினி தனியாக இருக்கிறாள்.. மறுமடியும் தூக்கினார்கள்.. உய்ய் உய்ய் என ஆமபிலன்ஸ் அலறியது.. இருள் சூழ்ந்தது.. நினைவு தப்பியது.. அதன் பிறகு நடந்தவை எதுவும் நினைவில் இல்லையே... இமை பிரித்தான் வாமன். மருந்து நெடி அடித்தது. பாராங் கல...