முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

நின்னையல்லால் 67

 நின்னை - 67 கையில் ஒரு வித வலி உணர்ந்து விழிப்பு தட்டியது சாத்விக்கு. இமை பிரித்தாள். வாமன் அவள் கையை தன் கைக்குள் வைத்த மாதிரி ஒட்டிப் படுத்திருந்தான். இரத்த ஓட்டம் குன்றிய கையின் திமிர்த்த உணர்வை தாங்கி தன்னை மறந்து அவனை பார்த்தாள். வருத்தமுற்றிருந்த இரவுகளில் இப்படி தான் அவள் கை பற்றி படுப்பான். உடல் தேறியதும் நேராக படுத்து வயிற்றில் ஒன்றும் பக்கத்தில் ஒன்றுமாக தன் கரங்களை முதல் மாதிரியே வைத்துக் கொண்டான். திரும்பவும் பற்றிக் கொண்டு உறங்குகிறான்.. இதை எப்படி எடுப்பது? மன வருத்தமா, உடல் வருத்தமா? இரவு நடந்தவைகளை மூளை அவசரமாக படம் ஓட்ட, தெளிந்திருந்த மனம் சிந்தித்தது.  சீராக மூச்சு விடும் அவன் சிவந்த நாசி உதடுகளை பார்த்தாள். உறங்கும் போது மாத்திரம் எங்கனம் இவன் வதனம் குழந்தை போல் ஆகிறது?!  அவள் திறந்து போட்ட டீ ஷர்ட், முட்டி அளவு ஷார்ட்ஸில் பக்கவாட்டில் சரிந்து அவள் கையை தன் கைக்குள் அடக்கி சலனமில்லாமல் கிடப்பவனை வாரிக் கொள்ள வேண்டும் போல ஆசை தான். 'நீங்க இப்டி இல்ல.. நோர்மலா இல்ல' சாட்டிய குற்றம் காதில் கேட்க, நான் இப்படி இல்லைத் தான்! நீ தான் என்னை இப்படி மாற்றிவிட்டா...

பனி 56

  அத்தியாயம்: 56 ராக்கி யோசனையுடன், "அது என்ன மச்சான் பைரவியோட ஃபேவரைட் டயலாக்கு? நான் கேட்டிருக்கேனா! "  " அதான்டா ' இதக்கூட எனக்காக செய்ய மாட்டிங்களா! கட்டுன பொண்டாட்டிக்கு ஒன்னுமே செய்யாத புருஷனா நீங்க? ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் பத்தாது. கட்டிக்கிட்டவளுக்குத் தேவையானதச் செஞ்சி சொகுசா பாத்துக்கணும்..' ன்னு ஆரம்பிச்சி வரிசையா நான் அவள கொடும படுத்திற மாதிரி, அவளா எதையாது கற்பன பண்ணிட்டு, அத வில்லு பாட்டா பாட ஆரம்பிச்சிடுவா." என்க, ராக்கி சிரித்தான். பைரவி கையில் குச்சியுடன் மணிகள் கட்டிய வில்லைத் தட்டி தட்டி மதுவைக் குறை பேசி பாடுவது போல் கற்பனை வேறு செய்து பார்த்தான்.  சிரிப்புடன், "அவ பாடுனா! நீ ஆடுவியா மச்சான். "  "இல்ல. ஆட வச்சிடுவா. காலைல எந்திரிச்சது இருந்து நைட் தூங்குற வர என்னென்ன பண்ணி, எவ்ளோ டார்ச்சர் பண்ண முடியுமோ அத்தனையையும் பண்ணுவா. தலைல இருக்குற கொஞ்சோன்டு மூளைய யூஸ் பண்ணி, என்னை நிம்மதியா விடக்கூடாதுன்னு திட்டம் போடுவா போல. சப்ப மேட்டர் டா‌‌. இவ்ளோ தான்னு நாம நினைக்கிற எல்லா விசயத்துக்கும் சண்ட போடுவா‌‌. கொஞ்சமா மொறச...

like

Ad