முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 56


 

அத்தியாயம்: 56



ராக்கி யோசனையுடன்,

"அது என்ன மச்சான் பைரவியோட ஃபேவரைட் டயலாக்கு? நான் கேட்டிருக்கேனா! " 


" அதான்டா ' இதக்கூட எனக்காக செய்ய மாட்டிங்களா! கட்டுன பொண்டாட்டிக்கு ஒன்னுமே செய்யாத புருஷனா நீங்க? ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும் பத்தாது. கட்டிக்கிட்டவளுக்குத் தேவையானதச் செஞ்சி சொகுசா பாத்துக்கணும்..' ன்னு ஆரம்பிச்சி வரிசையா நான் அவள கொடும படுத்திற மாதிரி, அவளா எதையாது கற்பன பண்ணிட்டு, அத வில்லு பாட்டா பாட ஆரம்பிச்சிடுவா." என்க, ராக்கி சிரித்தான். பைரவி கையில் குச்சியுடன் மணிகள் கட்டிய வில்லைத் தட்டி தட்டி மதுவைக் குறை பேசி பாடுவது போல் கற்பனை வேறு செய்து பார்த்தான். 


சிரிப்புடன், "அவ பாடுனா! நீ ஆடுவியா மச்சான். " 


"இல்ல. ஆட வச்சிடுவா. காலைல எந்திரிச்சது இருந்து நைட் தூங்குற வர என்னென்ன பண்ணி, எவ்ளோ டார்ச்சர் பண்ண முடியுமோ அத்தனையையும் பண்ணுவா. தலைல இருக்குற கொஞ்சோன்டு மூளைய யூஸ் பண்ணி, என்னை நிம்மதியா விடக்கூடாதுன்னு திட்டம் போடுவா போல. சப்ப மேட்டர் டா‌‌. இவ்ளோ தான்னு நாம நினைக்கிற எல்லா விசயத்துக்கும் சண்ட போடுவா‌‌. கொஞ்சமா மொறச்சாலே போதும், அடிச்சா மாநிரிங அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, டயலாக் பேசி ஷீன் போடு. ச்ச… 


இவ்ளோ பெரிய உருவமா வளந்திருக்கா, ஆனா சைல்டிஸ்ஸா பிகேவ் பண்ணுவா மச்சான். எல்லாத்துலயும் அடம். படுத்து உருண்டு கைய கால உதறி அழாதது மட்டும் தான் பாக்கி. அவ்ளோ நாடகம் போடுவா. டிராம குயின்…  


சரி வீட்டுல தான் நிம்மதி இல்லன்னு வேலைக்கி கிளம்புனா அங்கயும் வந்து நின்னுடுவா! ஒரு மனுஷெ வெளில கிளம்புனா என்னடா அர்த்தம். "


"நீயே சொல்லிடு மச்சி. உ மாடுலேஷன்ல கேட்டாத்தான் அது நல்லா இருக்கும்." ராக்கிக்கு இந்த மதுவைப் பிடித்திருந்தது. 


பைரவி என்ற சாவியால் மதுவின் மனபக்கங்கள் திறக்கப்பட்டு, அருவியாய்க் கொட்டிக் கொண்டிருந்ததை சுவாரசியமாகக் கேட்டான். இன்னும் இன்னும் என மதுவை பேசச் சொல்லி தூண்டி விட்டான்‌. 


"அவனுக்கு வேலை இருக்குன்னு அர்த்தம்‌‌. அதுலயும் நம்ம அகாடமி ப்ராஸஸ் வேற கெவியா போய்க்கிட்டு இருந்த சமயம் அது. ஒரு மணி நேரத்துக்கு ஒருக்க கால் பண்ணி ‘என்ன பண்றிங்க மாமா?’ன்னு கேள்வி கேப்பா."


"டேய் இதெல்லாம் அன்பு மச்சான். லவ்… "


"லவ்வு? அன்பு? ம்… அன்பு தான் காஃபி குடிச்சிட்டீங்களா மாமா? லன்ச் முடிஞ்சதா மாமா? ஈவ்னிங் ஸ்னாஸ்க்கு என்ன பண்ணிங்க? நைட் எப்ப வருவிங்க?ன்னு கேக்குறது அன்பு தான். பட் அந்த அன்பு எப்ப வம்பா மாறும்னு தெரியுமா? பதில் வராதப்ப, திரும்ப திரும்ப கால் பண்றது மெஸ்ஏஜ் பண்றதுன்னு இருக்கும் போது மாறும்.  


அவ கால் பண்ணதும் உடனே நான் அட்டன் பண்ணனுமாம். மெஸ்சேஜ் வந்ததும் அஞ்சி நிமிசத்துக்குள்ள ரிப்ளே பண்ணணுமாம்.. அஞ்சி நிமிசத்துக்கு மேல லேட்டா ரிப்ளே பண்ணா‌. ஆரம்பிச்சிடுவா, 'கட்டுன பொண்டாட்டி அனுப்புன மெஸ்சேஜ்ஜ கூட படிச்சி பாத்து ரிப்ளே பண்ணாம என்ன தான் பண்றீங்க. 'ன்னு.. வேலைன்னு சொன்னா.


'உங்க பொண்டாட்டிக்கி பதில் சொல்ல முடியாத அளவுக்கு என்ன வேல பாக்குறிங்க.'ன்னு  கீறல் விழுந்த டேப்ரிக்காடர் மாதிரி, ஒரே டயலாக்க வேற வேற மாடுலேஷன்ல சொல்வா. இந்த செல்ஃபோன்னு ஒன்ன கண்டுபிடிச்சி எம்பொண்டாட்டி கைல குடுத்த மகராசன பாத்தா உடனே குழிக்குள்ள தள்ளி சமாதி கட்டி கூம்பிடுவேன். "


"அதுக்கு நீ டயம் டிராவல் தான் பண்ணணும். " என்றவனை முறைக்க,


"இல்ல மச்சான் இதெல்லாம் அக்கற. அவா கால் பண்ணி நீ எடுக்கலங்கையும் உனக்கு என்னாச்சோன்னு பயந்திருப்பா. அதான் திரும்ப திரும்ப கூப்பிட்டிருப்பா. இத போய் கொடுமண்டு..‌" எனத் தங்கைக்கு ஆதரவாக பேச,


"அக்கற? அவளுக்கு! ஹிம்… இருக்கும் இருக்கும். நீ இதயம் நல்லெண்ணெய் விளம்பரம் பாத்திருக்கியா?"


"ஒரு லிட்டர் எண்ணெய்ல ஒரு தோச!"


"கரெக்டு. தினமும் சாப்பாடு அப்படி தான் இருக்கும். எண்ணெய்ல பொரிச்ச தோச. பூரின்னு எல்லாத்துலயும் குதிச்சி விளையாடலாம். அவ்ளோ எண்ணெய் மிதக்கும். இட்லி. அத கூட ஆயில் இல்லாம சாப்பிட மாட்டா. பொடி இட்லி… சில்லி இட்லி… இட்லி 65… " 


சப்பாத்தி மட்டுமே, அதுவும் எண்ணெய் சேர்க்காத சப்பாத்திகளை மட்டுமே, மூன்று வேளையும் உண்டு வாழும் மதுவின் கண்ணிற்கு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டாலே அது ஒரு லிட்டர் போல் தான் தெரியும். 


"எண்ணெ சேக்க கூடாதுன்னு சொல்ல அவளுக்கு என்ன கொலஸ்ரால்லா! வயசானதுக்கு அப்றம் நீ சொல்ற மாதிரி செய்யலாம். வளருற பொண்ணு மச்சி அது. வயசு இருக்கு. ஆசப்பட்டத சாப்பிடட்டுமே."


"நீயும் அவள மாதிரியே பேசுறல்ல. பேசு பேசு. அவளுக்கு மட்டும் அப்படி சமச்சி வைச்சா பரவாயில்ல. ஆனா அதையே என்னையும் சாப்பிட சொல்லுவா. சாப்பிடலன்னா டயலாக் டெலிவரி ஆகிடும். 'ஆசையா பொண்டாட்டி சமச்சி வச்சா! அதக் கூட எம்புருஷெ சாப்பிட மாட்டேங்கிறிங்க. ' கண்ணீரோட நடிச்சிட்டே சொல்வா மச்சான். ச்ச.. 


எண்ணைய் மட்டுமில்ல, உப்பு, இனிப்பு, காரம் இந்த மூணும் அளவுக்கு அதிகமா சாப்பாட்டுல இருக்கும். அவ கையால சமைச்சி சாப்பிட்டா.. சாவ தந்தி அடிச்சி கூப்பிடுறதுக்கு சமம்.  


சரி ஹோட்டலுக்குச் சாப்பிட கூட்டீட்டு போனா! அங்கயும் அவ பண்ற அலப்பறை இருக்கே. ச்ப்பா…" 


நிஜம்மாவே பாவம்பா நம்ம மது.. 


வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இது பைரவியின் உத்தரவு. 


'வீட்டுக்குள்ளேயே என்னல அடச்சி வச்ச மாதிரி இருக்கு.. நான் என்ன சிறை கைதியா?' பைரவியின் டயலாக். 


அதைக் கேட்க பிடிக்காமலும் அவள் சமையலை வாய்க்குப் பக்கத்தில கொண்டு வர பிடிக்காமலும், வாரம் இரு முறை அவுட்டிங். உணவை ஆர்டர் செய்யும் மதுவிற்கு, மனைவிக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் பழக்கம் எல்லாம் இல்லை. அதனால் வழக்கம் போல் சப்பாத்தி, ரொட்டி என அவனின் ஹெல்தி புட் ஐட்டத்தை ஆர்டர் கொடுக்க, எதுவும் சொல்லாமல் உண்டு முடிப்பவள் சரியாக 'பில்..' எனக் கை உயர்த்தும் நேரம் வரும் வெய்ட்டரிடம் அவளுக்குப் பிடித்ததை ஆர்டர் செய்வாள். அதுவும் அசைவ உணவுகள்‌. 


"வந்தப்ப ஆர்டர் குடுத்தோமே அப்பவே சொல்றதுக்கு என்ன?." மது காண்டான குரலில்.


"ஏங்கிட்ட கேட்டிங்களா? உனக்கு என்ன வேணும்னு. எல்லாமே உங்க இஷ்டம் தானா. எனக்கு என்ன வேணுங்கிற நாந்தா முடிவு பண்ணுவேன். அதக் கூட புருஷனா வாங்கி தர மாட்டிங்களா‌?" என்க, அவன் பைரவியை முறைத்து விட்டு அமைதியாகி விடுவான். வேறு வழி. 


வரும் உணவு மொத்தமும் அசைவ உணவு. பாவம் மது. ரசித்து உண்ணும் மனைவியின் எதிரில் அமரவும் முடியாது. அவளை விட்டு எழுந்து செல்லவும் முடியாது. மூக்கை மூடிக்கொண்டு விழிகளைத் திருப்பி கொண்டு, முள் மேல் அமர்ந்திருப்பது போல் அவதியில் நெளிவான்.  


அந்த அசைவ உணவின் வாசனையில், உள்ளே சென்ற உணவு வெளியே வருவது போல் இருக்கும் அவனுக்கு. அதை பைரவி கண்டு கொள்ள மாட்டாள். 


பொறுத்து பொறுத்து பார்த்தவன், அவளைச் சாப்பிட வெளியே அழைத்து செல்வதை நிறுத்தி விட்டான். முக்கியமாக ஹோட்டலுக்கு மட்டும். அதற்கும் பைரவியிடம் இருந்து டயலாக்ஸ் வரும். அதனால் உணவை வீட்டிற்கு வரும் படி ஆர்டர் செய்வன். அவன் வீட்டிற்கு அல்ல. ராக்கியின் வீட்டிற்கு. 


அவன் வீட்டு மொட்டை மாடியில் வைத்து அவனின் குடும்பத்துடன் சாப்பிடுவாள். ராக்கி தான் பைரவியின் மீல்-மெட். அதாவது அசைவ உணவுக்கு கம்பெனி கொடுக்கும் பார்ட்னர். அசைவம் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உடனே ராக்கிக்கு தான் அழைப்பாள் அவள்.  


அப்படி அசைவம் சாப்பிட்டு விட்டு காரில் வரும் போதே ஆரம்பித்து விடுவான். "ப்ளீஸ்… நேரா பாத்ரூம் போய்டு. குளிச்சிட்டு வா. ப்ரெஸ் பண்ண மறந்திடாத.‌ உன்னோட கர்சிப்ப வாஸ் பண்ணிடு.. " என பாடம் நடத்திக் கொண்டே வந்தவன்.. காரில் வாசனை தரும் திரவியத்தை அடிக்க.. கடுப்பாக இருக்கும் பைரவிக்கு.. வழக்கம் போல் வசனம் பேசியபடி குளியலறைக்குள் செல்வாள்..‌ செல்லவில்லை எனில் மூக்கில் க்ளிப்பை போட்டுக் கொண்டு அவளைக் குளியலறைக்கு தள்ளிச் செல்வான்.


"கைல யூட்யூப்ப வச்சிட்டு எப்ப எது கேட்டாலும் அதுல வீடியோ பாக்காம செஞ்சது இல்ல. சுடு தண்ணி வைக்க, அடுப்ப பத்த வைக்கணும்னா கூட ' How to light a stove.'ன்னு தேடி பாத்து தான் வப்பா. 


டீவி… பொழுது போகுறதுக்கா இல்ல நம்மோட நல்ல பொழுத போக்குறதுக்கான்னு தெரியல. "


"முதல்ல ஃபோன்‌... அடுத்து டீவியா... டீவில என்ன?"


"சீரியல்... நடந்து வர்றதையே பத்து நிமிடத்துக்கு காட்டுறான். ஒரு எபிசோட் முழுக்க அதுல இருக்குற ஒவ்வொருத்தனோட முகத்தையும் ஜூம் வச்சி, ப்ளாக் அண்டு வொய்ட்ல காட்டி காட்டியே தொடரும்ன்னு போட்டுடுவானுங்க. சில நேரம் அதுல காட்டுற சீனுக்கு கண்ணீர் வடிச்சிட்டு உக்காந்திருப்பா. அத ஏன்னு கேட்டா வீட்டுல சமைக்க மாட்டா மச்சி. 


சின்சான் பாத்தா கூட பரவாயில்லை மச்சான். ஹிரானா மாறி டோரா புச்சி பாக்குறா. அதுல வர்றத சொல்லி செஞ்சின்னு. ஐய்யோ… என்னால பாக்க முடியாது. 


என் வீட்டையே குப்பத் தொட்டியா மாத்தி வச்சிட்டா மச்சி. கண்டத வாங்கி வீட்டுல அடுக்கி வப்பா. ஏன் வாங்குறோம். எதுக்கு வாங்குறோம். என்ன யூஸ்னு கூட தெரியாம, குமிச்சி வப்பா. ச்ச... 


சின்ன key holder மச்சான். அதுல என்ன விசேசம் இருக்குன்னு தெரியல. அத ஆயிரம் ரூபா குடுத்து வாங்கி, யூஸ் பண்ணிருந்தா கூட ஓகே. காசு குடுத்தோம் உபயோகிக்கிறோம்னு மனசு ஆறிடும். ஆனா அவ கப்போர்டுல வச்சி அழகு பாப்பா‌‌. மச்சி உன் வீட்டுல லேமினேஷன் போட்டு என்னென்ன வச்சிருக்க. " 


"அது எம் ஃபோட்டோ நாலு. அப்பா அம்மா ஃபோட்டோ நாலு. அத்தையோட பிள்ளைங்க ஃபோட்டோ சிலது. அவ்ளோ தான் சுவத்துல தொங்கும்னு நினைக்கிறேன். "  


“என் வீட்டு சுவத்துல மட்டுமில்ல ஷோக்கேஸ் கப்போர்டு முழுக்க லேமினேஷன் போட்ட திங்கஸ் தான் இருக்கும். யாராது சாப்பிடுற சிப்ஸ்ஸ சின்ன கண்ணாடி டப்பால அடச்சி, கண்ட கெமிக்கல ஊத்தி ஷோக்கேஸ்ல வப்பாங்களா? அவா வப்பா. என் வீட்டுல இருந்தது." என்க, ராக்கி அதிர்ந்து போனான். 


"என்ன சிப்ஸ்ஸா? யூ மீன் லேஸ்." 


"ம்… அதே தான். கேட்டதுக்கு, 'பாக்க வித்தியாசமா இருக்குற பொருள சேத்து வைக்க எனக்குக் பிடிக்கும் மாமா. அந்த சிப்ஸ் வேற வழக்கமான நீள் வட்ட வடிவத்துல இல்லாம, நம்ம இந்தியா மேப் வடிவத்துல இருந்ததா. அதான் சின்ன சைஸ் கண்ணாடிய ஆர்டர் பண்ணி அதுக்குள்ள அடச்சி வைச்சி பாத்து ரசிக்கிறேன். இதுல என்னோட நாட்டு பற்ற நீங்க பாராட்டணும். என்னை மொறைக்கிறத பாத்தா உங்களுக்கு நாட்டு பற்று இல்ல போலயே..' ன்னு கேப்பா மச்சி. ‍" என்க ராக்கியால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை..


"என் லைஃப் ஹிஸ்டரி உனக்கு சிரிப்பா இருக்குள்ள. உனக்கும் கல்யாணம் ஆகும்ல. பண்ணி பாரு. அப்பத்தா தெரியவரும், பொண்ணுங்க வெளில காட்டுற முகம் வேற வீட்டுல நடந்துக்கிற மொற வேறன்னு..‌"


"ஆமா மச்சி வீட்டுக்குள்ள இருக்கும் போது மேக்கப் போட மாட்டாங்க. அதுனால வித்தியாசமாத்தா தெரியும். " என்றவனை முறைக்க,


"ஸாரி மச்சி." 


" தாலின்னு ஒன்னு கட்டுற வர மட்டும் தான் இன்னசெண்ட். கட்டிட்டா என்ன ரகம்னே கண்டு பிடிக்க முடியாது. அப்படி இருக்கும் அவளுகளோட ஆடிட்யூட். 


" 'மாமா… ஃபோன மறந்திட்டேன் மாமா.' 


'ஹேண்ட் பேக் சோபால இருக்கு.. எடுத்திட்டு வந்திடுறீங்களா?'


'கிரெடிட் கார்ட்ட பீரோலயே வச்சிட்டு வந்திட்டேன். '


'ஸ்டவ்வ ஆஃப் பண்ணேன்னானு தெரியல. '


'ஹீட்டர் ஸ்விட்ச போட்டுட்டே வந்திட்டேன்.. ஸாரி மாமா மறந்திட்டேன்.. 'என்று வீட்டு கதவ மூடும் போது சொன்னால் கூட பரவாயில்லை.. கார் ஏறி பாதி தூரம் போனதுக்கு அப்றம் தலையச் சொரிஞ்சிட்டே பாவமா முகத்த வச்சிட்டு சொல்லுவா.‌ எல்லாத்துலயும் அஜாக்கிரத. கேர்லஸ். அத விட என்ன டென்ஷன் படுத்தி பாக்குறதுல ஒரு சந்தோஷம்.. 


ஒரு நாள் கூட என்னோட வெள்ள சட்ட வெள்ளையாவே இருக்காது. கலர் கலரா சேட்டு பண்டிக கொண்டாடுன மாதிரி மாத்தி வைச்சிருப்பா. எந்தப் பொருளும் வச்ச இடத்துல இருக்காது. என் என்னோட டிரெஸ் கூட என்னோட பீரோல இருந்தது இல்ல. தினமும் சட்ட பனியன்னு எல்லாத்தையும் தேடி தேடி தான் எடுப்பேன். கிச்சன்ல கூட சுகர் டப்பால சால்டடையும், சால்ட் டப்பால சுகர்னு மாத்தி மாத்தி தான் போட்டிருப்பா. 


ஒருக்க டீ போட டீத்தூளுக்கு பதிலா என்னன்னு தெரியாத எதையோ போட்டு. ச்ச… அத கப்புல ஊத்தி என்னைக் குடிக்கச் சொல்லி டார்ச்சர் பண்ணா பாரு. உப்..." மதுவின் பாவக்கதைகள் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. 


"மச்சி ஓரமா கார நிப்பாட்டே." ராக்கி சொல்ல, ஏன் என்ற பார்வை நண்பனின் பக்கம் வீசினான் மது. 


"இல்ல மச்சி கொஞ்சம் வேலை இருக்கு. அதோட… அம்மா வேற சீக்கிரமா வரச் சொன்னாங்க." 


"எங்க ட்ராப் பண்ணணும்னு சொல்லு மச்சி. அங்க நான் இறக்கி விடுறேன்."


"இல்ல மச்சி. நான் இறங்கிக்கிறேன்."


"இங்கயா." எனச் சுற்றி முற்றி பார்க்க, அது ஆள்நடமாட்டமே இல்லாத நெடுஞ்சாலை பட்டது.. 


"பொடி நடையா நடந்தே போக வேண்டிய இடத்துக்கு போய்கிறேன். நிப்பாட்டு மச்சி" என்க,அவனை இறக்கி விட்டு விட்டு சென்றான் மது..‌  


செல்லும் அந்த காரை பார்த்து கை எடுத்து கும்பிட்டான் ராக்கி. "போதும் டா சாமி.. இதெல்லாம் ஒரு கதன்னு ரெண்டு மணி நேரமா பேசிக்கிட்டே வர்றான் பாரு.. ச்ச… இன்னும் கொஞ்ச நேரம் இவெ கதைய கேட்டா கல்யாணம் பண்ணனுங்கிற எண்ணமே போய்டும்.. நல்லவேலை இறங்கிட்டேன்.. தப்பிட்டேன்னு தா சொல்லனும்.." என புலம்பியபடியே ஆட்டோவிற்கு கை நீட்ட அது நிற்காது போக கிடைத்த சேர் ஆட்டோவில் ஏறிச் சென்றான். 


இதுவரை யாரின் துணையின்றி குறிப்பாக அக்கா தங்கை என பெண்களின் வாடையே இன்றி வாழ்ந்த மதுவிற்கு பைரவி செய்யும் எல்லா செயலுமே டார்ச்சராகத்தான் தெரிந்தது.. இதனால் தான் விவாகரத்து வரை சென்றார்களா என்றால் கிடையாது. அது வேறு காரணத்திற்காக நடந்தது..‌ 


எத்தனை சண்டை போட்டாலும், அவளின் சேட்டைகளை ரசிக்க தவறியதே இல்லை அவன்.‌ அவனின் செல்ல ராச்சஸி, இம்சை அரசி இப்பொழுதும் பைரவி தான். 


💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


பனி 55

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...