அத்தியாயம்: 55
பெண்ணே என் பயணமோ…
தொடங்வே இல்லை…
அதற்குள் அது முடிவதா…
விளங்கவே இல்லை…
சினிமா பாடல் தான்.. ஆனால் பாடியது பாடகர் திப்பு அல்ல. இந்த குரலுக்கு சொந்தக்காரர் ராக்கி பாய். காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு கண்ணா பின்னாவென பாட, காரை ஓட்டிக் கொண்டிருந்த மது 'பைத்தியமா இவெ. ரொம்ப நேரம் நல்லாத்தான இருந்தான்.' என்பது போல் பார்த்தான். அதை உணர்ந்த ராக்கி மதுவின் முகத்திற்கு அருகே சென்று,
‘நான் கரையாவதும்…
இல்லை நுரையாவதும்…
வளர் பிறையாவதும்
உன் சொல்லில் உள்ளதடி..’
எனக் கரம் விரித்து பாட,
"டி இல்ல. நான் டா."
"என்ன மச்சான் சொன்ன.. " எனக் காதில் இருந்ததைக் கலட்டாது கேட்க, மது வேகமாக அது பிடுங்கி எறிந்தான்..
'இவனுக்கு பைரவி மட்டுமில்ல யார் பக்கத்துல உக்காந்து பாட்டு கேட்டாலும் பிடிக்காது போல. ச்ச… ' என நினைத்த ராக்கி பாய்,
"ஏன் மச்சா இப்படி பண்ற? நானே ஃபீலிங்ஸ்ல இருக்கேன். என்னைப் போய் ஏன் டிஸ்டர்ப் பண்ற? " எனச் சோகமாக சொல்ல,
"அப்படி என்ன ஃபீலிங்கு?"
"காதல்… அது தான் மச்சான் இந்த உலகத்துல இருக்குற எல்லா ஃபீலிங்லயே வித்தியாசமான ஃபீலிங். புதுசான ஃபீலிங்." என்க,
"ஒருக்க வந்தாத்தா அது புதுசு.. ஓயாம வந்தா அதுக்கு என்ன பேரு வைப்ப?" என நக்கலாக மது கேட்டான். அது காதல் பைத்தியம் பிடித்த ராக்கியின் காதைச் சென்றடையவில்லை.
" இந்தக் காதல் இருக்குதே காதல். அதுக்கு எந்த வித சூடும் கிடையாது. சொரணையும் கிடையாது. "
"இது சித்தபிரம்ம பிடிச்சவெ மாதிரி நீ உலறும்போதே தெரியுது. வேற எதாவது இருந்தா சொல்லு."
"அந்தக் காதல் கிடைக்குமா கிடைக்காதான்னு காத்திருக்கும் போது வர்ற வலி இருக்கே மச்சான். சப்பா… அது கூட சுகமாத்தா இருக்கு. வர்ற வலி கூட இமயமலைல இருக்குற பரவச நிலைய தருது. சுத்தி எல்லா பொருளும் காதலியோட நினைவ தாங்கி, காதலியாவே கண்ணுக்கு தெரியும்."
"ஒரு செடி ஒரு ஃப்ளவர். அப்படின்னு ஒரு டயலாக் இருக்கு கேள்வி பட்டிருக்கிய"
"ம்ச்… கேட்டது இல்ல. கேட்டிருந்தாலும் அத இப்ப யூஸ் பண்றதா இல்ல. நான் அப்டேட் ஆகிட்டேன் மச்சான். பழைய படமெல்லாம் பாக்க மாட்டேன்." என ரோசமாக சொன்னவன், சீட்டில் சாய்ந்து கொண்டு இரு கரத்தையும் உயர தூக்கி,
"இந்தக் காதல் எத்தன மொற வந்தாலும், ஒவ்வொரு முறையும் ஃப்ரிட்ஜில இருந்த எடுத்து வச்ச ஆப்பிள் மாதிரி சில்லுன்னு ப்ரஷ்ஷாவே இருக்கு. ஏக மச்சி? லவ் அது தனி ரகம் டா. அதெல்லாம் காதலிக்கிறவனுக்கு தான் புரியும். உன்னை மாறி கடமைக்கி நேந்து விட்டவனுக்கு எப்படி புரியும்? அதாவது பைரவி பாஷைல சொல்லணும்னா தயிர் சாதத்துக்கு பிரியாணியோட அரும எப்படி தெரியும்?" என்றவனைத் திரும்பி பார்த்து ஒரு அடி கொடுத்தான் மது.
"மச்சி… மச்சி… நீ பைரவிய காதலிச்சிருக்கியா?" என்க, காரை நிறுத்தி விட்டான் மது. மணிக்கட்டைச் சுழற்றிய படி ராக்கி நோக்கி நகர,
"பரவாயில்லை அந்தத் தேவையில்லாத கொஸ்டின சாய்ஸ்ல விட்டுடுட்டு இப்ப கார எடுக்கலாமே. ப்ளிஸ்…" எனப் பதுங்க, அவனை முறைத்தபடி காரை இயக்கினான் மது.
'தப்பிச்சோம்டா சாமி. இவெங்கிட காதலப் பத்தி கேட்டிருக்க கூடாது. பைரவி மாதிரி அழகான பொண்டாட்டிய வச்சே குடும்பம் நடத்த தெரியாதவனுக்கு காதலோட அரும எப்படி தெரியும்? ' என முணுமுணுத்தது நல்ல வேளை மதுவிற்குக் கேட்க வில்லை. கேட்டிருந்தால் கார் மல்யுத்த மைதானமாக மாறி இருக்கும்.
"இப்ப எதுக்கு நீ காதல பத்தி பாடம் நடத்தீட்டு இருக்க?" எரிச்சலாக வந்தது மதுவின் குரல்.
"அது நேத்து நான் தாமரக்கிட்ட என்னோட பாஸ்ட்ட பத்தி சொல்லிட்டேன். "
"பாஸ்ட்ட பத்தி தான சொன்ன. ஏதோ காதலயே சொல்லிட்ட மாதிரி ஷீன் போடுற! "
"அதையும் சேத்து தான் மச்சான் சொன்னேன்."
"எது… நீ!! ஸ்டெயிட்டா லவ் பண்றேன்னு தாமரய பாத்து சொன்ன. " எனச் சந்தேகமாக கேட்க,
"ஸ்ரெயிட்டா நேருக்கு நேரா நின்னு இல்ல. இலை மறை காய் மறைவா." என்க, மது சிரித்தான்.
"எந்த மரத்துல எந்த இலைல." எனக் கேலியாக கேட்டு சிரித்தான்.
"நீ தான் உம்பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணிட்டல்ல. அப்றமும் ஏன் நீ அவள மாதிரியே குறுக்க குறுக்க பேசுற. சொல்றத மட்டும் கேக்குற மதுவா எப்ப மாறப்போற. " என்க.,
"சரி… என்ன சொன்னா தாமர?" என்றான் கேலி இல்லாத குரலில்.
"நான் இப்படியே நடந்து போகட்டா. இல்ல கூட வருவிங்களான்னு கேட்டா."
"வாட்... கம் அகேன்." மது, அதிர்ந்து போய்விட்டான் போலும்.
"அது நான் கதை சொல்லி முடிச்சதும். அவ பேசாட்டிக்கி நடந்து போய்ட்டா. போனவ பாதி தூரத்தில திரும்பி என்னைப் பாத்து ஸ்கூல் வரைக்கும் கொண்டு விட வருவேனா மாட்டேனான்னு கேட்டா!"
"என்ன மாதிரியான பதில் டா இது.?"
"எனக்கும் தெரியல மச்சான்."
"அதான கேள்வின்னு ஒன்னு கேட்டாத்தான பதில் வரும். "
"என்ன கேள்வி மச்சான்." என்றவனை முறைக்க…
" என்னை லவ் பண்றியான்னு கேட்டியா டா?" மது..
"உன்னையா!!" என ராக்கி அதிர,
" *** " பீப் சவுன் போடும் அளவுக்குத் திட்டி தீர்த்தான் மது.
"ஸாரி மச்சி. ஏதோ விளையாட்டுக்கு கேட்டுடேன். இத இப்பவே மறந்திடு. பைரவிட்ட மட்டும் சொல்லிடாத. சரியா… சொன்னேன்னு வை. அடுத்து உன் நண்பன நீ அவளோட வீட்டுக்கு பின்னாடி நட்டு வச்ச மரத்துல, அட்டைல எழுதி வச்ச நேம் போர்டாத்தான் பாப்ப. வீட்டுக்குப் பின்னாடியே புதச்சி மரம் நட்டு வச்சிடுவா. " என்க,
" தாமரையோட ஃபேஸ் எக்ஸ்பிரஷன் எப்படி இருந்தது? "
"அவ முகத்த பாக்காம நான் திரும்பி நின்னு கதை சொன்னதுனால எனக்கு தெரியல மச்சி. " என்க, மது சில நொடி யோசித்து விட்டு,
" சரி விடு. லவ் இருந்தா அவளா வருவா. " எனக் கூலாக சொல்ல,
"எது அவளா வருவாளா! அவ வர்ற வர நான் காத்திருக்கணுமா?"
"நீ தான இப்ப சொன்ன காத்திருப்பது கூட ஒரு சுகம்னு. பெறவு என்ன. வெய்ட் பண்ணு."
"அதெல்லாம் என்னால முடியாது.. நேத்தே உம்பொண்டாட்டி வீட்டுல இருக்குறவங்கள கிளப்பி விட்டுட்டு போய்ட்டா.. பொண்ண பாக்க வாய்யா ன்னு எங்கம்மா வேற உயிர வாங்குது."
"நீ இன்னும் அவளோட கூட்டணில தான் இருக்கியா?" எனக் கோபமாக கேட்க, அசடுவழிய சிரித்தான் ராக்கி.
"ஒரு உதவி தேவப்படுத்தாம். அதா பாக்க வந்தா."
"அவளுக்கு உதவியா.. அவளே பிறருக்கு சேவ செய்ய பிறந்தவ தான. அவளுக்கு என்ன உதவி? " என்க, ராக்கி லேப்டாப்பைத் தூக்கிக் காட்டி,
"இதுல சுடர்ன்னு போட்டிருக்குற யூசர் ஐடிக்கு பாஸ்வேர்டு வேணுமாம். உன்னால பாஸ்வேர்டு இல்லாம ஓப்பன் பண்ண முடியும் சொன்னா. " என்க, சுடரில் பெயரை கேட்டவன் கோபமாகி லேப்டாப்பை தூக்கி பின் சீட்டிற்கு வீசினான்.
"டேய்… டேய்… அது லேப்டாப் டா."
"சுடர்… சுடர்… அவளால தான் பைரவி என்னை விட்டுட்டு போய்ட்டா. சொல்ல சொல்ல கேக்காம அவளோட இறுதி சடங்குக்கு போய் தான்.. ச்ச.. " எனக் கோபமாக ஸ்டேரிங்கைக் குத்த,
"மச்சி கோபத்துல கார ஓட்டக்கூடாது. அதுனால இப்ப கார ரோட்ட பாத்து ஓட்டு. அப்றமா தனியா போய்க் கோபப்பட்டுக்கோ. " என்க, மதுவின் கோபம் கண்களில் தெரிந்தது.
"எல்லாம் இறைவன் செயல். தாமர எனக்கு கிடைப்பாளா மாட்டாளான்னு கடவுளே முடிவு பண்ணட்டும்னு தான் எந்தங்கச்சி சொன்ன மாதிரி கோயில வச்சி ப்ளாஸ் பேக்க ஓப்பன் பண்ணேன். மாதவன் கூட ஒரு பாட்டுல சொல்லிருப்பாரு. ஹாங்.. கோயிலுக்குள்ள காதல சொல்லு செருப்பிருக்காது..ன்னு அந்த மொமெண்ட்டா இருக்கும்னு தான் ப்ரபோஸ் பண்ணேன். பட்.. அங்கேயே என்டு கார்டு போட்டு போய்ட்டா.
காதல் வந்தால் சொல்லி அனுப்பு..
உயிரோடிருந்தால் வருகிறேன்.. " எனக் கத்த..
"உன் வாழ்க்கை வரலாற்ற தாமரைட்ட சொல்ற ஐடியா அவளோடதா? "
"ஆமா மச்சான். "
" உருப்புட்டாப்ல தான். "
"பின்ன உங்கிட்டயா ஐடியா கேக்க சொல்ற! எந்தங்கச்சி தான் காதல்ல எக்ஸ்பர்ட். எப்படி உன்ன உருகி உருகி காதலிக்கிதுன்னு நான் பாத்திட்டு தான இருக்கேன். அவளுக்கு நான் காதல் மன்னின்னு பேர் வைக்கிறேன். நல்லா இருக்கா "
" இம்சன்னு வை பொருத்தமா இருக்கும். அரக்கி, ராச்சஸி. அவளா மன்னி? சரியான வில்லிடா அவா. உருகி உருகி காதலிச்சாலாம். கண்டத சொல்லி என்னை டார்ச்சர் பண்ணுறக்கு பேரு காதலன்னா அப்படிப்பட்ட காதலே வேண்டாம். பாஸ்… லேடி பாஸ்… சில் வண்டு மாதிரி தொனதொனப்பு. நச்சரிப்பு. மொட்ட பிளேடு. " எனப் பலவாறு பைரவியை பாராட்ட ராக்கிக்கு சுவாரசிமாக இருந்தது.
"எனென்ன டார்ச்சர்ன்னு வரிசையாச் சொன்னா உன்னப் பாத்து கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ண எனக்கு அது உதவியா இருக்கும். ப்ளிஸ்..." என்க, மது ஒன்று இரண்டு என வரிசைப்படுத்த தொடங்கினான்.
அதை புலம்பல் என்று சொல்லிவிட முடியாது. பைரவி செய்த கொடுமைகள் என்று சொல்லாம். கொடுமையா? ஆம் கொடுமை தான். அப்படி தான் மது சொல்வான். அப்படி என்னென்ன கொடுமை என்றால்…
"மச்சான் நீ எத்தன மணிக்கி எந்திருப்ப? ஆறு மணி? ஆறர! ஏழு! "
"அது நம்ம வேலைய பொருத்து. தூங்காம கூட இருந்திருக்கோமே. அதுக்கென்ன இப்ப?"
"ஐஞ்சே முக்கால்க்கு அலாரம் வச்சிருப்பா."
"அவ்ளோ சீக்கிரமா எழுந்து என்னடா செய்வா?"
"அலாரத்த ஆஃப் பண்ணிட்டு திரும்பி தூங்கிட்டுவா." என்க, ராக்கி சிரித்தான்.
"அத கூட ஒரு வகைல ஏத்துக்கலாம். ஆனா அத snooze மோடுல போட்டு வச்சிடுவா. அஞ்சி நிமிசத்துக்கு ஒருக்க அது அடிச்சிட்டே இருக்கும். ஃபஸ்ட் டயம் அடிக்கும் போது, எந்தலை தட்டி எழுப்பி விட்டுடு, அலாரத்த ஒழிச்சி வச்சிட்டு அவ நிம்மதியா தூங்கிடுவா மச்சான். நாந்தா அந்த அலாரத்தத் தேடி கண்டு பிடிச்சி ஆஃப் பண்ணி..ன்னு தூக்கத்தத் தொலச்சிடுவேன்.."
வேலை செஞ்சி களைச்சி போய் வந்து தூங்கலாம்னு நினைக்கும் போது நம்ம பைரவி இப்படி செஞ்சா கோபம் மட்டும் தனியாக வராது. அதோடு சேர்ந்து நிறைய வரும்.
அத்தோடு மதுவிற்கு தூங்கும் போது மேலே கை போட்டால் தூக்கம் வராது. தலையில் இருந்து கால் வரைக்கும் இழுத்து மூடிட்டு படுத்தால் தான் நித்ராதேவி வருவாள் என்று யாரோ அவனிடள் சொல்லியிருத்க வேண்டும். அதனால் முகத்தைக் கூட விட்டு வைக்காது போர்த்தி தான் தூக்குவான்.
‘பார்க்க புளி மூட்டை மாதிரி இருக்கும்.’ என்பாள் பைரவி கேலியாக.
"என்ன மச்சி நீ? பொண்டாட்டி மேல கைப் போட்டு கட்டிப்பிடிச்சி தூங்குறத போய் தப்பா சொல்லி புலம்பிட்டு இருக்க… அறிவில்லையா டா உனக்கு."
'பைரவி சரியாத்தா சொல்லிருக்கா தயிர் சாதம்னு..' என முணுமுணுக்க,
"உனக்கு தான் புரியல மச்சி.. பொண்டாட்டிய கட்டி பிடிச்சி தூங்குறது சுகம் தான். பத்து நிமிசம். ஓகே... ஒரு மணி நேரம் கூட ஓகே… ஆனா விடிய விடிய அப்படியே அசையாம இருந்தா எப்படி? நெஞ்சுல கல்ல தூக்கி போட்டுட்டு தூங்குன ஃபீலா இருக்கும். காலைல எந்திரிக்கவே முடியாது. இம்ச... தள்ளி விட்டாலும் மறுபடியும் கம்மு மாதிரி ஒட்டிப்பா."
‘ஹி… ஹி… நம்ம பைரவி, ஆள் உயர டெட்டி பியர டைட்டா கட்டிப்பிடிச்சி தூங்கியே பழக்கம். அதுவும் டயிட்டா… அவக்கிட்ட இருந்து அந்த பொம்மைய பிரிச்சி எடுக்கவே முடியாதுங்கிற அளவுக்கு உடும்பு பிடி அந்தத் தூக்கத்துலயும் பிடிப்பா. கல்யாணத்துக்கு அப்றம் மதுவ பொம்மையா நினைச்சி. பிடிச்சி… அதை பொறுத்துக்க முடியாம பொறுமி… என்ன மதுசூதனா இது?’
"நீ நைட்ல தூக்கம் வரலன்னா என்ன பண்ணுவ?"
"டீவி பாப்பேன்."
"எவ்ளோ வால்யும் வைப்ப?"
"பகலா இருந்தா சத்தமா கேப்பேன். நைட்டுன்னா அத்தையும் அம்மாவும் திட்டுவாங்க. சத்தம் கம்மியா, முடிஞ்ச வரை ஃபோன்ல தான். அதுவும் ஹெட்செட் போட்டு யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம இருப்பேன்."
"நைட் டீவில கிரிக்கெட் மேட்ச் பாப்பா. அதுவும் முடிஞ்சி போன பழைய IPL மேட்ச். வீடே அலறுர அளவுக்கு ஸ்பீக்கரு, ஊப்பருன்னு எல்லாத்தையும் ஆன் பண்ணி, அவ்ளோ சத்தமா வச்சி, சியர் கேர்ள்ஸ் மாதிரி கத்திக்கிட்டே, டான்ஸ் ஆடிட்டே பாப்பா. யாரு வின் பண்ணான்னு முதல்லயே தெரியுங்கிறதுனால வின் பண்ண டீமோட டீசர்ட்ட போட்டுட்டு ஒவ்வொரு ஃபோருக்கும் சிக்ஸுக்கும் விசில் வேற அடிப்பா மச்சி.
பத்து டீம்க்கு பத்து டீசர்ட். எனக்கு கூட வாய்ல விரல் வச்சி விசில் அடிக்க வராது. ஆனா அவ காது கிழியுற அளவுக்கு அடிப்பா. அடிச்சிட்டே இருப்பா நான் ஸ்டாப்பா."
"ஹாஹ்ஹஹா... இப்ப பிரச்சன உனக்கு தெரியாத ஒன்னு அவளுக்கு தெரியுங்கிறதா? இல்ல உன்னைத் தூங்க விடாம பண்றாங்கிறதா? இல்ல ரெண்டையும் தான்டி வேற ஒன்னா." எனக் கண் சிமிட்டி கேட்க,
"எல்லாமே தா. all the above.. நைட் தூக்கத்தத் தொலச்சி பல வர்ஷம் ஆச்சி. எல்லா ஜன்னலயும் திறந்து வச்சிட்டு என்னை கொசு கடில தூங்க விடுவா. பிறவு அந்தக் கொசுவ அடிக்கிறேன்னு வீட்டுக்குள்ளயே கொசு பேட்ட வச்சி டென்னிஸ் விளையாடி எல்லா ஜாமானையும் போட்டு உடைப்பா.
மச்சி, டிசம்பர் மாசம் கூட ஏசி இல்லாம தூங்க மாட்டா. அதுலயும் டெம்பரேச்சர கம்மியா வச்சிட்டு. ஃபேன அஞ்சில வச்சிட்டு தான் தூங்குவா. கை, கால் எல்லாம் குளிர்ல்ல வெரச்சிடும். ஆனா, அவ கம்பளிக்குள்ள இதமா தூங்குவா.
இன்கேஸ் ஃபேன ஆஃப் பண்ணாலோ! ஏசிய ஆஃப் பண்ணாலோ! அவ பேசுற பேச்ச காது குடுத்து கேக்க முடியாது. அவளோட ஃபேவரைட் டயலாக் ஒன்னு இருக்கு. அதச் சொல்லி சொல்லியே காரியத்த சாதிச்சிக்குவா. "
பாவம் நம்ம மதுவ பைரவி ரொம்ப படுத்தி எடுத்திட்டா போல. அத இன்னொரு எபிசோட்டுக்கு கண்டின்யூ பண்ணலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க.
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..