அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
அத்தியாயம்: 15 இறை வழிபாடு என்பது நம்பிக்கையைச் சார்ந்தது. அனைவரிடத்திலும் உண்டு. அந்த நம்பிக்கை என்னிடம் தான் அதிகம் உள்ளது, என்று விளம்பர படுத்தாது, உன்னிடம் குறைவாக உள்ளது என்று விமர்சனம் செய்யாது, உன்னிடம் இல்லை என்று ஒப்பிட்டுப் பார்க்காது இருக்க வேண்டும். உயிர்களை உயிர்களாய் மதித்து நடத்துவதே உண்மையான இறை வழிபாடாகும். திருவிழா, பண்டிகை என்பது ஆண்டுக்கு ஒரு முறை அல்லது குறிப்பிட்ட சில தினங்களில் மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடுவது. தூர இருக்கும் சொந்தங்களை அது ஒன்று சேர்க்கும். ஜாதி, மதம், இனமென எதையும் பாராது சந்தோஷம் ஒன்றை மட்டுமே குறியாய் கொண்டிருப்பதே திருவிழாவின் நோக்கம். அதுபோல் தான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது. ஏழு கிராமத்து மக்கள். எந்த ஒரு விழா பண்டிகை என்றாலும் ஒற்றுமையாக, வேறுபாடு பார்க்காது கொண்டாடுவது வழக்கம். அந்தந்த ஊர் தலைவர்கள் எப்பொழுதுமே சிறிய விழாக்களைக் கூடத் திருவிழாபோல் சிறப்பாக ஏற்று நடத்துவர். இந்த விநாயகர் கோயில் கும்பாபிஷேகமும் அப்படித்தான். கோயில் சிறியதாக இருந்தாலும் அதற்கு வந்து செல்லும் மக்களின் அளவு எண்ணிட முடியாததாக இருந்தது. ரங்குரா...