அத்தியாயம்: 59 சிறிய மூளை தான். ஆனால் அது செய்யும் வேலைகள் பல. ஒற்றை மூளை ஒட்டு மொத்த உடலையே இயக்கும் வல்லமை படைத்தது. பார்ப்பது கேட்பது தொடங்கி, சின்ன சின்ன அசைவுகளைக் கூட அதன் உத்தரவு இல்லாது செய்ய முடியாது. ஆனால் இங்கு மூளை எந்த வேலையையும் செய்யாது டம்மியாக இருந்தது. ஒரே ஒரு வேலையைத் தான் மும்மரமாக செய்ய முயன்றது அது. சிந்திப்பது, அதை தவிர்த்து வேறு எதற்கும் முக்கியத்துவம் தரவில்லை அது. யாரு அந்த வேலை செய்யாத மூளைக்கு சொந்தக்காரி என்றால், வேறு யார் நம் பைரவி தான். அவளின் சிந்தனை மொத்தமும் சுடர் பற்றியே இருந்தது. "நமக்கு அரசனூர் கேஸ் தேவையில்ல. சுடரக்கா கேஸ் மட்டுமே போதும். ஏன்னா அது ரொம்ப பயங்கரமான கேஸ்ஸா இருக்கு. புரியாத மாதிரியும் புரியிற மாதிரியும் நிறைய விசயங்கள வக்கீல் சொன்னாலும். அந்த கேஸ் கொஞ்சம் டேஜ்சரானது தான். கொலை எல்லாம் நடந்திருக்கு. சுடரக்கா கூட காணாம போன எவிடென்ஸ்ஸ தேடி நாம போறது புதை குழில குதிச்சி குதிச்சி விளையாடுறதுக்கு சமம். அதுனால நம்மோட கான்ஸ்டன்ட்டேட் மொத்தமும் சுடரக்காவ யாரு கடத்துனாங்கங்கிறதுல தான் இருக்கனுமே தவிர வேற எதுலயும் ...
அத்தியாயம்: 36 டம்... டமார்... பாத்திரங்கள் உருளும் சத்தம் அது. அந்த வீட்டின் மூத்த மருமகள் மலர்மங்கை கோபமாக உள்ளார் என்று அர்த்தம். 'பின்ன மகன் பொண்ண கூட்டீட்டு வர்றேன்னு சொல்லிட்டு பொண்டாட்டியா கூட்டிட்டு வந்தா! ' வாடா மகனேன்னு.' வரவேற்பாங்களா என்ன?. கோபத்துல சமக்கட்டையே தொம்சம் பண்ணிட்டு இருக்காங்க.' "டேய்!. உங்கிட்ட நேத்தே என்ன சொன்னேன். உம்பக்கம் பேச ஆளுகள சேருன்னு சொன்னேனா இல்லயா?." "நா ஃபோன் பண்ணேண்ணே." "அப்ப எங்கடா நம்ம நட்சத்திர பேச்சாளர்கள். ஒருத்தரையும் காணுமே!. நாம வர்ற தகவல சரியா சொன்னியா இல்லையா?." "அது நா ஃபோன் பண்ணேனா! ஆனா, யாருமே எடுக்கல. சரி வந்து பேசிக்கிவோம்னு விட்டுட்டேன். எங்காத்தா வாயிமேலையே நாலு போடு போட்டு, பேச விடாம ஓரமா ஒதுக்கி வச்சிடு வாங்கன்னு யாரு கண்டா!." என்றவனை முறைத்தான் கௌதம். "கௌதம், வீட்டுல இப்போதைக்கி சிக்குன ஆடு நாம நாலு பேர் மட்டும் தான். மத்த ஆம்பளைங்க யாரும் வீட்டுல இல்ல." சம்பத், உடன் வேல்ராஜிம் இருந்தான். பிரகாஷிற்கு நாளை மறுநாள் திருமணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்ய...