அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை. 'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார். அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...
அத்தியாயம்: 3 ஊட்டி... மலைகளின் இளவரசி. இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து. உடலை உறைய வைக்கும் இமயமலையின் பனி போல் இல்லாமல், இதமாய் வருடிச் சொல்லும் மெல்லிய குளிர், நம் அடிமனதை மெதுவாகத் தொட்டுச் செல்லும். சுகமாக அதே சமயம் இதமாகவும் ரசித்து அனுபவிக்கும் படி இருக்கும் உதகமண்டலத்தின் சீதோஷ சூழ்நிலை. நீலகிரி நம் தமிழ்நாட்டின் வைரக்கல் அல்லவா. சுமார் ஏழாயிரம் அடி உயரத்தில் உள்ளது. எண்ணிலடங்காத உயிர்களின் உறைவிடம். கண்டு பிடிக்கப் படாத மூலிகைச் செடிகளின் பாதுகாவலன். யாரின் உதவியுமின்றி இயற்கை எழுப்பிய மதில் அது. அங்குத் தான் இருக்கிறோம் நாம். தொட்டபெட்டா... இயற்கை அழகை முழுமையாக ரசிக்கச் சரியான இடம். தமிழகத்தின் உயர்ந்த சிகரம் அது. நீலகிரியின் மூடுபனி நிறைந்த அந்தப் பச்சை மலை காடுகளின் நிகரற்ற அழகை ஒரு பறவைபோல் மேலிருந்து ரசிக்கத் தொட்டபொட்டா சிறந்த இடம். அதில் ஓரிடத்தில் கர்நாடக எல்லை ஆரம்பம் என எழுதி இருந்தது. "ஹேய் பவதா உன்ன ஒரே நொடில நம்ம பக்கத்து ஸ்டேட்டுக்கு கூட்டிட்டு போகவா. ம்... வா." எனத் தன் மனைவியின் கரம்பற்றி இழுக்க, பொம்மைபோல் அவன் உடன் சென்றாள் ...