அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். " "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க, "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?" "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?" "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டிய...
அத்தியாயம்: 36 "வாசு... வாசு… என்னோட கைய யாரோ சுரண்டுற மாதிரி இருக்கு. " என்றாள் தன்யா வாசுவின் காதருகில். " நீ என்ன லக்கி ட்ரா கூப்பன்னா?. சுரண்டிச் சுரண்டி அதிஷ்டத்த பரிசோதிக்க. " என்றவளின் குரலில் விளையாடாதே தன்யா என்ற பொருள் இருந்தது. " ம்ச்... வாசு நான் பொய் சொல்லல. நான் பாக்காத நேரம் அந்தாளு என்னைப் பாக்குறான். நான் பாத்தா திரும்பிங்கிறான். " "உங்கூட அவனுக்கு விளையாடணும்னு தோணுது போல. நீங்க அந்தப் பக்கமா ஓரமா போய் விளையாடுங்க. எங்கள டிஸ்டப் பண்ணாதிங்க. நாங்களே தி கிரேட் கிரிகாலான் அளவுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு தான் இந்த மேஜிக் ஷோ இருக்கேன்னு சோகமா பாத்துட்டு இருக்கேன். இதுல நீ வேற. " தன்யா திரும்பி அந்த ஆடவனைப் பார்த்தாள். அத்தனை நேரம் அவள் பக்கம் திரும்பியிருந்த கழுத்து இப்போது வேறு பக்கம் திரும்பிக் கொண்டது. "வாசு... வாசு… இப்ப அவெ என்னைப் பாத்தான். ஆனா நான் பாக்கவும் திரும்பிட்டான். " என அவசர அவசரமாகச் சொல்ல, வாசு எட்டி பார்த்தாள். முகம் சரியாக அந்த இருளில் தெரியவில்லை. " யாருன்னு எனக்குச் சரியா தெரியலயே. " ...