அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். " "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க, "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?" "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?" "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டிய...
அத்தியாயம்: 58 மெரினா கடற்கரை. "கார்த்திக் அந்தப் பையன அவனுங்க நின்ன இடத்துலயே சைக்கிள் ஓட்டச் சொன்னாங்க. அப்றம் ஒருத்தன ரஜினி டயலாக்க விஜயகாந்த் ஸார் பேசுனா எப்படி இருக்கும்னு பேசிக் காட்ட சொன்னாங்க. பாக்கவே சிரிப்பா இருந்தது. என்னைக் கூட ஒரு அக்காளுங்க கூப்பிட்டு பத்துத் திருக்குறள் சொல்ல சொல்லிச் சொன்னாங்க. எனக்கு ரெண்டுக்கு மேல தெரியல. வச்சி ஓட்டி எடுத்துட்டாங்க. ‘நீயெல்லாம் எப்படிப் பன்னண்டாப்பு பாஸ்ஸானியோ. உனக்குத் தமிழ் பாடம் உண்டா இல்லையா’ன்னும் கேட்டு என்னைச் செம்மையாக் கேலி பண்ணாங்க தெரியுமா." எனத் தன் முதல் நாள் அனுபவத்தை ஜோஹிதா சொல்ல, அதைக் கேட்கும் மனநிலையில் தான் கார்த்திக் இல்லை. "நானும் சிந்துவும் அங்க சிலர ஃப்ரெண்டா பிடிச்சிருக்கோம். சில ஃப்ரபசர் கூட நல்லா பேசுனாங்க. நல்லா இருந்தது காலேஜ். உன்னோட ஃபஸ்ட் டே எப்படிப் போச்சி கார்த்திக்?. கார்த்திக்? " என அவனை உளுக்க, "மோசமா போச்சி. ரொம்ப மோசமா. " "என்னாச்சி? " " இன்னைக்கி நான் என்னோட சீனியர் ஒருத்தன அடிச்சிட்டேன். " " என்ன!! ஏன்?. என்னாச்சி? உன்னைக் கூப்பிட்டு ராக் பண...