அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். " "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க, "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?" "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?" "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என நேம் போர்டை காட்டிய...
அத்தியாயம்: 79 ஐ போன்களுக்கே உரித்தான ப்ரத்தேக ரிங்டோன் அது. வெகு நேரமாகலாம் அடிக்கவில்லை. இப்போது தான் இசைக்க தொடங்கியது. யார் அழைப்பது என்று தெரிந்தாலும் உடனே எடுக்காமல், சில நிமிடங்கள் கடத்தியவன், இதோ இசைத்து முடிக்கப் போகிறேன் என்று சொல்லிய செல்ஃபோனின் கடைசி நொடி ரிங் டோனில் அட்டன் செய்து காதில் வைத்தான், ருத்ரதேவ். வந்த வேலையை இனிதே முடித்து விட்டு இனி தன் இல்லம் நோக்கி செல்ல தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் அவன். விடியும் போது சிவாஸ் பேலஸ்ஸில் இருக்க வேண்டும். இது அமிர்தாவின் கட்டளை. " …. " செல்ஃபோனைக் காதில் வைத்தாலும் அழைத்தவரிடம் பேசப் பிடிக்காது அமைதியாய் இருக்க, " ருத்ரா... வாசு… அங்க வந்தாளா?. " எனப் படபடப்புடனும் பயத்துடனும் தவிப்புடனும் வந்தது அந்த குரல். கார்த்திகேயனின் குரல். அது புரியாது. "இல்ல. " என்றான் பட்டு கத்தரித்தது போல். " வேற எங்க இப்பான்னு தெரியுமா?. " " எனக்கு என்னோட வருங்கால மனைவிய வேவு பாக்குற பழக்கமெல்லாம் இல்ல. சோ எனக்கு தெரியாது. " என்றான் நக்கலாக. "ருத்ரா, அவளோட ஃபோன் வீட்டுல இர...