முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

நேசிப்பாயா 99

  அத்தியாயம்: 99 இரு கைகளையும் பிசைந்து கொண்டு அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு, பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தாள் வாணி‌.‌. "கார்த்தி... " எனக் கெஞ்சலாக வந்தத அந்தக் குரல் காதில் விழுந்தாலும் திரும்பி பார்க்கவில்லை அவன். "கார்த்தி மாமா... " எனக் கொஞ்ச அழைக்க, திரும்பி பார்த்து தன் விழியென்னும் கதிரவனால் அக்கினி சுவாலைகளை அவளை நோக்கி வீசினான். " ம்ச்... ஸாரி கார்த்தி மாமா. நான் இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல. ஸாரி மாமா. " என்றாள் கொஞ்சலாக. "அடிங்க... வாய மூடு டி. பண்றதெல்லாம் பண்ணிட்டு மாமா வோமாண்டு. செம்ம கடுப்புல இருக்கேன். பேசமா இரு. இல்ல... " "இல்லன்னா என்ன பண்ணுவ மாமா?. அடிப்பியா! கன்னத்துலயா! கைலயா?. " எனக் கேட்டவளை ஒன்றுமே செய்ய முடியாது. பைக்கை உருட்டிக் கொண்டு நடந்தவனை ‘மாமா… மாமா…’ என வம்பு செய்த படி உடன் நடந்தாள் வாணி. அவனும் கடுப்புடன் திட்டிக் கொண்டே வந்தான். "இப்பல்லாம் என்னை ரொம்ப திட்டுற மாமா நீ. " என்றாற் சிணுங்களாக. "நீ செஞ்ச காரியம் அப்படி. உரசாம தள்ளி நடடி. " என எரிந்து விழுந்தான். அதை அணைக்...

நேசிப்பாயா 98

  அத்தியாயம்: 98 மெல்லிய இளங்காற்று வீசய அது அந்தி சாயும் நேரம். சூரியன் என்னும் ஒளிப்பந்து மெல்ல மெல்ல மலைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டிருந்தது. செல்லும் அது தனியாகச் செல்லாது, தந்து கொண்டிருந்த வெளிச்சத்தையும் சேர்த்தே கூட்டி செல்ல, மாலை பொழுது மலர்ந்து இரவை வரவேற்றுக் கொண்டிருந்தது. காற்றில் இரு கரத்தையும் நீட்டி,  பறப்பது போல் அல்லாது, காற்றில் நீந்துவது போல் அசைத்துக் கொண்டே வந்ததாள் வாணி. "கார்த்தி இன்னும் ஸ்பீடா போக முடியுமா? " எனக் கத்தினாள் அவள். "கண்டிப்பா ஜோ. " என்றவன் ஆஸ்லெட்டரை திருக, பைக்கின் இரு சக்கரங்களும் அதி வேகத்தில் சுழன்றன.  வெகு தூர பயணமாய்ச் சென்று கொண்டிருந்தனர் இருவரும். என்ன பயணம்? எப்பொழுது சென்றனர்?.‌ எப்படி?. என்பதை அறிய கார்த்தி வாணியை பைக்கில் ஏற்றிக் கொண்டு கல்லூரியை விட்டு புறப்பட்ட காலை நேரத்திற்குச் செல்ல வேண்டும். " எங்க போறோம் கார்த்தி?" "ஊர விட்டு. " " ஹாங்… என்ன சொன்ன?" "உன்னைக் கடத்தீட்டுப் போறேனேன்னு சொல்றேன்." "விளையாடாத கார்த்தி. " " விளையாடத்தாக் கூட்டீட்டு போறேன். ...

நேசிப்பாயா 97

  அத்தியாயம்: 97 "ஹலோ… அப்சத்?. " எனத் தயக்கத்துடன் வந்தது குரல். "அப்சத் இருக்கான். நீ யாரு‌ம்மா?" அவனின் தாய். "எம்பேரு ஜோஹிதா.  நான் அவனோட க்ளாஸ் மெட். அவெங்கிட்ட கொஞ்சம் பேசணும். இருக்கானா?" என்க, "இருக்கான்ம்மா. கூப்பிடுறேன். " என்றவர், அவனை அழைக்க, அவன் வரும் சத்தம் கேட்டது. " ஹலோ… ஜோஹிதா!" "நான் உடனே உன்ன பாக்கணும்." "நாம எப்பயும் பாக்குற க்ரவுண்டுக்கு வந்திடு." என்று அவன் ஃபோனை வைத்தான். "யாருடா அது?." என்ற கேள்வியுடன் அவனின் அக்காக்கள் நிற்க, நண்பனின் காதலி எனச் சொல்லிவிட்டு முருகுவை அழைத்துக் கொண்டு க்ரவுண்டிற்குச் சென்றான்‌.‌‌. "அப்சத், கார்த்திக் எங்க? சென்னைக்கி வரலயா? இப்பவும் டெல்லில தான் இருக்கானா? ஏன் உங்க கூட வரல? " எனப் படபடப்புடன் கேள்விகளை அடுக்க, "அது எதுக்கு உனக்கு? " என முருகு காட்டமாகக் கேட்டான். "டேய் சும்மா இருடா. " என நண்பனை அடக்கியவன், "ஜோஹிதா, அவெ இன்னும் அங்க தான் இருக்கான். கான்ட்ராக்ட் முடிய ரெண்டு மூணு நாள் இருக்குங்கிறதுனால விட்டுட்டு வந்...

like

Ad