முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 6

  அத்தியாயம்: 6 "இந்த ஹைவேஸ்ல டார்ச் அடிச்சி லாரிய மடக்கி தொழில் பண்ற கும்பல சேந்தவ தான நீ. இல்ல லிஃப்ட் கேட்டு ஏறுற மாதிரி ஏறி மயக்க மருந்து அடிச்சி கார ஆட்டைய போடுற கும்பலா? பாக்க அப்ரானி மாதிரி காட்டீட்டு ஆளுங்கள கொல பண்ற கூட்டமா! என்ன நீ மட்டும் தனியா இருக்க? எங்க உ கூட்டாளிங்க? " என ராக்கி சுற்று முற்றிலும் பார்த்து கேட்க,  "ஸார், நீங்க நினைக்கிற மாதிரில்லாம் கிடையாது. என்னைத் துரத்திட்டு வர்றாங்க ஸார். அவங்க கைல நான் மாட்டுனா என்னாகும்னே தெரியல ஸார். ப்ளிஸ் ஸார். அவெங்கல்லாம் ரவுடி பசங்க ஸார். என்னை ஆள் நடமாட்டம் இருக்கிற, இல்ல மதுர பஸ்ல ஏத்தி விட்டிங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் ஸார்.. " எனக் கெஞ்சவும் அவளைத் தேடி வந்த அடியாள்களில் ஒருவன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.  "டேய் இங்க இருக்காடா." என அவர்களில் ஒருவன் குரல் கொடுக்க, மற்ற அனைவரும் ஓடி வந்து காரைச் சுற்றிக் கொண்டு நின்றனர்.  "ம்... வா... " என அழைக்க, அவள் ராக்கியின் பின்னே ஒழிந்து நின்றாள்‌‌.‌ "ம்ச்... ஒழுங்கா வந்திடு. இல்லன்னா அடிச்சி இழுத்திட்டு போக வேண்டி இருக்கும்....

பனி 5

  அத்தியாயம்: 5 'அரக்கி உன்ன உன்ன உன்ன மறக்க சற சற சற சரக்க மொத மொத மொற ஊத்தி குடிச்சேன் கிறுக்கி உன்ன உன்ன உன்ன வெறுக்க முடி முடியல அடியே அடி மனசுல வெம்பி வெடிச்சேன்' இது காரில் ஒளிபரப்பாக, ராக்கி தான் தலையை அசைத்து அசைத்து பாடலை ரசித்து ராகம் படிக் கொண்டும் தாளம் தட்டிக் கொண்டும் வந்தான். மது அமைதியாக இன்று நடந்தவற்றை நினைத்த படியே காரை இயக்கினான். இருவருமே குடித்திருந்தனர். ஆனால் அளவாக. "மச்சி‌ அதிசயமா இருக்கு கார்ல ப்ளேயர நீ ஆன் பண்ண விடுறதும்.. அத நான் உம்பக்கத்துல உக்காந்து பாடிக்கிட்டே வர்றதும்… இன்னைக்கி நீ பண்ணதும் ரொம்ப பிடிச்சிருந்தது. உன்னைப் புதுசா பாத்த மாதிரி இருக்கு." என ராக்கி சொல்ல, மது சைடு மிரர் வழியே தன் முகம் பார்த்தான். கண்ணாடியில் தன்னைப் பார்க்கும் போது, ‘இது நானா?’ என்றிருந்தது மதுவிற்கு. இன்று கோர்ட்டில் அவ்வாறு ஆடியது நானா. "போன மாசம் மச்சி… லைசன்ஸ் எக்ஸ்பயர் ஆகிடுச்சி போல. அது தெரியாம நாம் பாட்டுக்கு வண்டிய ஓட்ட… போக்குவரத்து போலிஸ் பிடிச்சி நிப்பாட்டி, 'ஏன்டா லைசன்ஸ ரென்யூ பண்ணல. ஃபைன்ன எடு'ன்னு சொல்லி வண்டிய ஓரங்கட்டி சாவிய ...

பனி 4

அத்தியாயம்: 4 காலை வேளை..  நேரம் ஒன்பது மணி... பைரவி மிடுக்காய் தன் கஞ்சி போட்ட யூனிபார்மை அணியாது, ஃபார்மல் ஷர்ட் மற்றும் காக்கி பேண்ட் அணிந்திருந்தாள். காலில் இருந்த காக்கி ஷூ வின் லேஸ்ஸை, அங்கிருந்த ஸ்லிப்பர் ஸ்டான்டில் காலை தூக்கி வைத்து கட்டி முடித்துவிட்டு புறப்பட தயாராக இருந்தாள். சாரு, "குட் மார்னிங் பையூ… டிப்பன்?"   "வேண்டாம்பா. அம்மா எனக்காகச் சமச்சி வச்சிட்டு காத்திட்டு இருப்பாங்க. அவங்க கிட்ட திட்டு வாங்கிக்கிட்டே சாப்பிட்டாத்தான் வயிறு நிறைஞ்ச ஃபீல் வரும். அத்தோட இன்னைக்கி வியாழக்கிழம. சாய் பாபா கோயிலுக்குப் போவாங்க. நான் தான் அவங்கள இறக்கி விடணும்.‌" என்றவள் தன் சாப்பரை எடுத்துக் கொண்டு அன்னை வீட்டிற்குச் சென்றாள். அங்கு அவள் சொன்னது போல் சாந்தி அவளுக்குப் பிடித்த பூரியைச் சுட்டு வைத்துவிட்டு, அதை வாயில் வைக்க விடாமல் திட்டுக் கொண்டே இருந்தார்.  கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கொள்கை கொண்டவள் பைரவி. அதான் அன்னையிடம் திட்டு வாங்கினாலும்‌ மகளாய் அவருக்குச் செய்ய வேண்டியதைச் செய்ய தவறியது இல்லை. ஏனெனில் அவள் அந்த வீட்டின் பெண் வாரிசு மட்டுமல்ல, ஆண் வ...

like

Ad