முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 33


 

அத்தியாயம்: 33


"ராக்கி பாய்... ராக்கி பாய்... உங்கள விட இந்த உலகத்துல யாருமே நல்லவங்க கிடையாது. நீங்க ஒரே ஆள். சிங்கில் ஃபீஸ். நீங்க மட்டும் தான் நல்லரு. வல்லவரு. என்னோட மது எங்க இருக்காருன்னு அறிஞ்சவரு. ப்ளிஸ்... அவரு எங்க? நான் அவர பாத்து ரொம்ப நாள் ஆகப்போது. சொல்லுங்க ராக்கி பாய்." என ஃபோனில் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் பைரவி.


"ஐயோ நம்பும்மா எனக்குத் தெரியாது. நான் அவன நேத்துல இருந்தே பாக்கல. அவன டியூட்டிக்காக பெங்களூர் அனுப்புனதா அங்கில் சொன்னாரு." என்றான் ராக்கி.


"பொய் சொல்றிங்க ராக்கி பாய். " 


" நம்பலன்னா உம்புருஷனுக்கே ஃபோன் போட்டு கேட்டுக்க. ஆனா நீ பண்ணா அவெ எடுக்க மாட்டான். ஏன்னா உன்னை எல்லா இடத்துலயும் ப்ளாக் பண்ணி வச்சிருக்கான்." எனச் சொல்லி சிரிக்க,


"அதுனால தான் உங்க கிட்ட கேக்குறேன். இன்னைக்கி நான் அவர பாத்தே ஆகணும். எங்க அவரு? உங்க ஆஃபிஸ்ல இருக்கார! இல்ல அகாடமில இருக்காரா?" 


"சாரி எனக்குத் தெரியாது.. " எனச் சினிமா பாணியில் சொல்ல, கடுப்பானாள் பைரவி.


" நீங்க பொய் சொல்றீங்க. உங்களுக்குத் தெரியும் அவரு எங்கன்னு. நீங்க எனக்கு அதச் சொன்னிங்கன்னா. நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்ஸ காட்டுவேன். அது உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. உங்களோட எதிர் காலமே அதுதான்னு சொன்னிங்க. சோ, அவரு எங்கன்னு சொல்லிட்டு, உங்க சர்ப்ரைஸ்ஸ வந்து பாருங்கள். மிஸ் பண்ணிடாதிங்க. அப்றம் வருத்தப்டுவிங்க." எனத் தாமரை சென்னை வந்ததை மறைத்து, இன்ப அதிர்ச்சியாக அவனுக்குக் காட்ட நினைத்து பேரம் பேசினாள் பைரவி. ஆனால் அதை உணராது,


"எதுவும் வேண்டாம். உனக்கு நான் ஸ்பை வேலை பாக்குறேன்னு கூப்பிட்டு வச்சி உம்புருஷெ என்னை கொலையோ கொலன்னு பேசியே கொன்னுட்டான். மிச்சம் இருக்குறது கால் உசுரு தான். அவெ எங்க இருக்கான்னு உனக்கு சொன்னேன்னு வச்சிக்க. அதையும் அவெங்கிட்ட குடுத்திட்டு, நடமாடுற டெத் பாடியாத்தான் திரியணும் நான். என்னை ஆள விட்டுட்டு. இனி உனக்கும் அவனுக்கும் இடைல என்னைக் கூப்பிடாத." என ஃபோனை தரையில் வைத்து விட்டு கை எடுத்து கும்பிட, வீடியோ கால் செய்யாததால் அதை பார்க்காது போன பைரவி மீண்டும் அவனைக் குடையத் தொடங்கினாள். 


"இப்படிப் பண்ணா எப்படி ராக்கி பாய். எங்க பாய் எவ்ளோ பெரிய ஆளு. ஆறடி நாலங்குலம் இருப்பாரு. அவர் மேல யாராது கை வைக்க முடியுமா?" என்க,


"நான் பாக்க சத்தியராஜ் மாதிரியாத் தெரியுறேன் ஆறடி நாலங்குலம் இருக்க. அப்றம் எம்மேல உம்புருஷெ கை வைக்க முடியாதுன்னு சொன்ன பாத்தியா. அது நிஜம். ஏன்னா அவெ என்னைத் தூக்கி போட்டு காலால மிதிக்கத் தான் செய்வான். அதுனால கைக்கு வேலை இல்ல." 


" ம்ச்… எங்க பாய்... ஒரு ராக்கீஈஈஈஈ... பாய்... நான் ராக்கி பாய் கூட journey பண்ணீட்டு இருக்கேன். அந்த journey ல up இருக்கும் down இருக்கும் dead end இருக்கும். ஆனா spead மட்டும் எங்கயும் கம்மியாகாது. fasten your seat belt… " என ஃபோனில் கத்த,


"முதல்ல இந்த கேஜிஃப் வசனம் பேசுறத நிப்பாட்டீட்டு. அடுத்தவெ எழுதுன டயலாக்குக்கு வாயசச்சி என்னை வில்லனாக்க பாக்குற. நாந்தா உனக்கு ஆல்ரெடி ஒரு தத்துவம் சொல்லிக் குடுத்தேன்ல. தன் கையை தனக்கு உதவின்னு. அத ஃபாலோ பண்ணு. என்னை விட்டுடு. " 


"அப்ப அவரு எங்க இருக்காருன்னு உங்களுக்குத் தெரிஞ்சும் நீங்கள் சொல்ல மாட்டிங்க. " 


" ஆமா சொல்ல முடியாது. அவெ ஒரு ஆளுன்னு அவெ பின்னாடி சுத்துற. அதா நீ வேண்டாம்னு உங்க கல்யாணத்த எலக்ட்ரிக் சுடுகாட்டுக்கு அவனே டான்ஸ் ஆடி அனுப்பி விட்டுட்டானே. அப்றமும் ஏன் அவன தேடுற. போய் ஆகுற வேலைய பாரு." என்றான் கடுப்புடன். 


பின்னே அன்று அவளை ஜிம்மிற்குள் விட்டதற்காக இப்போது வரை முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இருந்தால் என்ன செய்வது. நண்பனைச் சமாதானம் செய்ய நண்பனுக்குப் பிடிக்காத அவனின் மனைவி பைரவியைத் தானும் விளக்கி வைக்க முடிவு செய்தான். 


"என்ன பேச்சையே காணும். பைரவி… இருக்கியா இல்லையா... ஹலோ... ஹலோ…" எனக் கத்த,


"இருக்கேன்." என்றாள் சிறிய குரலில். 


" நல்லது. எப்பையும் இப்படி கால் பண்ணி டார்ச்சர் பண்ண மாட்டியே இன்னைக்கி என்ன வந்ததுன்னு காலைல இருந்து ஃபோன் மேல ஃபோனா போட்டு அவன தேடுற." என வினவ,


" உங்களுக்குத் தெரியாது. ஆனா அவருக்கு நினைவிருக்கும்னு எதிர் பாத்தேன்." என்ற போது கண்ணில் நீர் கோர்த்து நின்றது. 


" அப்படி என்ன அவனுக்கு மட்டும் தெரிஞ்ச ஸ்பெஷல் டே இன்னைக்கி." என காலண்டரை பார்க்க, அப்போது தான் நினைவு வந்தது இன்று பைரவியின் பிறந்த நாள் என்று.‌


"ஹே பெட்த் டே பேபியா நீ... Happy Birthday பையூ... " எனச் சந்தோஷமாக சொல்ல,


"உங்க வாழ்த்து ஒன்னும் எனக்கு தேவையில்ல." எனக் கூறி ஃபோனை வைத்து விட்டாள்‌ பைரவி.


"ச்ச... லூசா பைரவி நீ... எந்த நினப்புல நீ அந்தத் தயிர்‌சாதத்த தேடுற. அவனுக்குத் தான் எந்த ஃபீலிங்குமே கிடையாதே. உன்னையும் உன்னோட உணர்ச்சியையும் புரிஞ்சிக்காத ஜடம். ப்ரோக்கிராமர்… curd rice...  அவனப் பத்தி உனக்கு தான் நல்லா தெரியுமே. அப்றம் எப்படி உனக்கு வாழ்த்து சொல்ல வருவான்னு எதிர் பாத்த. இதுக்கு முன்னாடி நாலு பிறந்த நாளல எப்படி அவெங்கூட கொண்டாடுனோம்னு மறந்துட்டியா!" என அவளை அவளே திட்டுக் கொள்ள, திருமணத்திற்குப் பின் வந்த முதல் பிறந்த நாள் நினைவு வந்தது.


ஒவ்வொரு பிறந்தநாளையும்  ஸ்பெஷலாக கொண்டாட விரும்புவாள் பைரவி. அதுவும் கணவனுடன் கொண்டாடப் போகும் முதல் பிறந்தநாள். அதை ஆவலுடன் தான் எதிர்பார்த்தாள்.


'நைட் பன்னெண்டு மணிக்கு என்னை எழுப்பி. ஒரு மெழுகுவர்த்திய ஏத்தி, கேக் மேல நட்டு வச்சி, அந்த கேக்க தூக்கிட்டு வந்து ஹால்ல டேபில் மேல வச்சி, லைட் எல்லாத்தையும் அணச்சிட்டு இருட்டாக்கி, ரூம்ல இருக்குற என்னை கிஸ் பண்ணி எழுப்பி, கண்ண கட்டி, கைல தூக்கிட்டு வந்து, ஹால்ல கேக் வெட்டி, அவருக்கு நான் ஊட்ட... எனக்கு அவரு ஊட்ட… செம்ம ரொமாண்டிக்கா இருக்க போது.' என்ற எதிர்பார்ப்புடன் மதுவிற்காகக் காத்திருக்க… வந்தான். இரவு பதினொரு நாற்பத்தி ஐந்து மணிக்கு. 


"செம்ம டயர்டா இருக்கு டெடி. சாப்பாடு வேண்டாம். நான் குளிச்சிட்டு வர்றேன்." என்றவன் குளியலறைக்குள் சென்று கதவடைக்க, அவனுக்காக அவள் செய்து வைத்த பதார்த்தங்கள் பல்லை காட்டியது. அது வருத்ததைத் தந்தாலும் அனைத்தையும் பிரிட்ஜில் தூக்கி வைத்துவிட்டு படுக்கை அறைக்குள் நுழைந்தாள். 


'இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு. எனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்டா என்ன தரப் போறான்!' என யோசித்த படி உள்ளே‌ செல்ல, அறை இருளில் மூழ்கி இருந்தது‌. அது மது உறங்கி விட்டான் என்று சொன்னது. 


அவனுக்கு விடி பல்பின் வெளிச்சம் வந்தால் கூட உறக்கம் வராது. இவளுக்கோ இருளில் கண் மூடி உறங்க முடியாது. என்ன செய்ய இருவருக்கும் பொருத்தம் அப்படி. இவள் கிழக்கு என்றால் அவன் மேற்கிற்குத் தான் செல்வேன் என்று அடம்பிடிக்கும் ரகம். 


லைட்டை ஆன் செய்யாது மொபைல் ஃபோனில் வெளிச்சத்தில் கட்டிலை அடைந்தவள் சீராக மூச்சை விட்டு நன்கு உறங்கும் கணவன் தெரிய, அவனைத் தொந்தரவு செய்யாது ஏக்கத்துடன் பார்த்துவிட்டு, 'விடியட்டும். நம்ம பிறந்த நாள கொண்டாட நிறைய நேரம் இருக்கு.' என மன்னவனின் மார்பில் தலை சாய்க்க, உறங்கியவனின் கரம் இல்லாளின் இடை அணைத்து தன்னோடு இறுக்கி கொண்டது.


விடியலும் வந்தது. ஆனால் மதுவிற்கு பைரவின் பிறந்த நாள் என்பது மட்டும் நினைவு தான் வரவில்லை.


" மாமா... இன்னைக்கி எங்கயாது வெளில போலாமா?" 


"அகாடமி பர்மிட் விசயமா நிறைய வேல இருக்கு டெடி." என முடியாது என்பதை ஒற்றை வார்த்தையில் சொல்லாது இழுக்க, 


"இல்ல... இன்னைக்கி பெர்த் டே ட்ரீட். அதான்... " என்க, யாருக்கு எனக் கேட்காது, வேகமாக பர்ஸில் இருந்து சில ரூபாய் தாள்களை எடுத்தவன் அவளின் கரத்தில் தினித்து,


"ட்ரீட் க்கு இது போதுமா? இல்ல… என்னோட கார்டு யூஸ் பண்ணிக்க. பின் தெரியும்ல. டேக் இட்.” எனப் பணத்தைப் பற்றி கூற, 


'யோவ்.. பணத்துக்காகவாய்யா உன்ட்ட பேச வந்தேன். யாருக்குன்னு கூட கேட்காம கார்டு நீட்டுறான் பாரு. அரகென்ட்…' என வந்த கோபத்தை அடக்கி, இரு கரங்களை கட்டிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திரும்பி நின்றாள் பெண். 


கணவன் வெளியே செல்கிறான் என்றால் மனைவியானவள் கணவனை அணைத்து இதழொற்றல் கொடுத்து வழி அனுப்ப வேண்டும். மது, கடந்த ஆறு மாதமாக அதற்குப் பழகிப் போனவன். இன்று அவள் வராது நிற்கவும். அவளின் கோபத்தை உணராது தானே அவளை அணைத்து முத்தமிட்டு சென்றான். 


'தயிர் சாதம்… பொண்டாட்டிங்கிறவ வரலயே ஏன்னு ஒரு வார்த்த கேக்காம, அவனே வந்து கிஸ் பண்ணிட்டு போறான். இவனுக்கு நான் முக்கியமா. இல்ல நான் தர்ற கிஸ் முக்கியமா. ' எனச் சிறு வெறுப்பு தான் வந்து. இருந்தும் தன் மனநிலையைக் கெடுக்க விரும்பாது சாரதா ஹோமிற்குச் சென்றாள். 


இரவு வீடு திரும்பியதும் கணவனின் மீது கோபமாக இருக்கிறோம் என்பது நினைவு வர, எதையும் சமைக்காது அவனுக்காகக் காத்திருந்தாள். சீக்கிரம் வருமாறு ஃபோன் செய்ய, 


"வந்திடுறேன் வை.. " என அவளை பேச விடாது ஒரே நொடியில் கட் செய்து விட்டான். அது மேலும் கோபத்தை கூட்டியது. 


இதற்கு மேல் பொறுமையாக இருக்க அவளுக்குத் தெரியவில்லை. அதே நேரம் தன் கோபத்தின் அளவை அவனுக்குத் தெரியபடுத்த வேண்டும் அல்லவா. எனவே விடாது குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தாள். அதன் விளைவு விரைந்து வீடு வந்தான் மது. பதினோரு மணிக்கு. 


"நாந்தா வர்றேன்னு சொன்னேனே. எதுக்கு மெசேஜ் மேல மெஸ்ஏஜ் அனுப்புற. இதுல கால் வேற பண்ணி ஏன் என்ன டென்ஷன் படுத்துற?" எனக் காட்டமாக கேட்டவன் தன்னைச் சுத்தப்படுத்த என அறைக்குள் செல்வதும், தண்ணீர் குடிக்க என கிச்சனுக்கு செல்வதுமாக நடமாட, 


சோஃபாவில் அமர்ந்திருந்தவள் தலை நிமிர்த்தாது தன் விழிகளை மட்டும் உருட்டி கோபமாக அவன் செல்லும் இடமெல்லாம் பார்த்து வைத்தாள். அந்தக் சுடும் பார்வையின் அழகில் மதுவின் கோபம் பனியாய் மறைந்து போனது. 


"பார்த்டே பார்ட்டீன்னு சொன்ன. சீக்கிரம் முடிஞ்சிடுச்சா!" எனக் கேட்ட படி மனைவியை உரசிய படி அருகில் வந்து அமர்ந்தான். பதில் சொல்லாது இருந்தவளின் கன்னத்தில் கரம் வைத்து திரும்பி தன் முகம் பார்க்க செய்தவன், நெற்றியோடு நெற்றி முட்டி, "சாப்டியா... " எனத் தாபத்துடன் கேட்டு தன் இதழால் கன்னத்தில்  கவி பாட, அவனை தள்ளிவிட்டு விட்டு முறைத்தவள். 


"இல்ல... " என்றபடி எழுந்து படுக்கை அறைக்குள்‌ சென்றாள் பெண்.


"இல்லையா...‌ பார்டின்னு தான சொன்ன. யாருக்கு பெர்த் டே. உன்ன சாப்பிட வைக்காம யாரு ட்ரீட் குடுத்தா. எங்க வச்சி ட்ரீட்.‌" எனக் காலையில் கேட்க வேண்டியதை இப்போது கேட்டுக் கொண்டே மனைவியைப் பின் தொடர்ந்தான்.


"இந்த‌க் கேள்விய காலைல காச கைல குடுக்கும் போது கேட்டிருக்கலாம்." எனச் சொல்லி கட்டிலில் அமர்ந்தாள். 


"ஏன் இப்ப‌ கேட்டா என்ன! பதில் சொல்ல மாட்டியா? " 


" மாட்டேன். பதில் சொல்ல மாட்டேன்... ச்ச... பொண்டாட்டி எங்க போறா‌ என்ன பண்றான்னு அக்கற கூட இல்லாத ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டா... லைஃப் இப்படித் தான் போரிங்கா இருக்கும். " என அவனுக்கு கேட்கும் படி முணுமுணுத்தவள்,


"யூ ஆர் டாமினேட்டிங் மீ." எனக் குற்றம் சுமத்தினாள்.


"உன்ன டாமினேட் பண்ற மாதிரி யாரும்‌ நடந்துக்கல. ஓவரா திங்க் பண்ணாம எழுந்து வா. நைட் சாப்பிடாம படுக்க கூடாது. நான் உனக்கு ப்ரூட் சேலட் செஞ்சி வைக்கிறேன். " என எல்லாம் பழங்களையும் ஒரே கின்னத்தில் நறுக்கி போட்டு எடுத்து வந்து ஊட்ட, பைரவி அதை வாங்காது முறைத்தபடி இருந்தாள்.‌


"உனக்கு என்ன தான் பிரச்சன பாண்டா?" எனச் சடைப்பாக வந்தது மதுவின் குரல். 


" இன்னைக்கி எனக்கு பிறந்த நாள்." 


"ஓ... " என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்தாள்.


"அவ்ளோ தானா! எனக்கு பெர்த் டேன்னு சொல்றேன். ஒரு வாழ்த்து கூட சொல்லாம, இப்படி ரோபோ மாதிரி நிக்கிறீங்க. நாங்கூட எம்மேல ஆசப் பட்டு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களோன்னு நினைச்சேன். ஆனா அப்படி இல்ல. " எனப் புலம்ப,


அவளின் பேச்சில் கடுப்பானவன் கட்டிலில் படுத்துக் கொண்டான். 'பிறந்த நாளுக்கு விஷ் பண்ணலங்கிறதெல்லாம் ஒரு குத்தமா! அதுக்கு போய் இவ்ளோ பேச்சி பேசுறா!' என நினைத்தவன் எந்த நாளையும் கொண்டாடியதே இல்லை. அவனுக்கு அவனின் பிறந்த நாள் கூட நினைவில் நிற்காத போது மனைவியின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவான்? பாவம் பைரவி. அவனுக்கு எல்லா நாளுமே ஒன்று தான் என்பதை அறியாது‌ போனாள்.


அன்று மட்டுமல்ல, அடுத்தடுத்து வந்த பிறந்த நாளும் அப்படித்தான். வாழ்த்து கூட சொல்லாது கத்தையாகப் பணத்தைத் தந்து விட்டு சென்று விடுவான். 


நான்கு வருடங்களாக இல்லாது இன்று அவளின் மனம் மதுவைத் தேடியது. அதிகமாகவே…


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

பனி 32


பனி 34


கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...