அத்தியாயம்: 32
அன்று தீஷித்தின் அலுவலகமே பரபரப்பாக இருந்தது. காரணம் அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் சைட்டில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு இளம் வயது கட்டுமான தொழிலாளி இறந்து விட்டான். அவனுக்கு உரிய உதவி செய்யாது அலட்சியமாக இருந்ததாகவும், இழப்பீட்டு பணமாக இருபது லட்சம் வேண்டும் என்றும், அதுவரை வேலை செய்ய மாட்டோம் என்றும் ஸ்டெய்க் நடந்து கொண்டிருந்தது.
தீஷித்தின் பீஏ எவ்வளவோ முயன்று பேசி பார்த்தான். ஆனால் அவர்கள் அலுவலக வாசல் முன் நின்று கொண்டு போராட்டம் செய்தனர்.
அவர்களின் நோக்கம் இழப்பீடு பெறுவது இல்லை. அவனின் கம்பெனியின் நற்பெயரை கெடுத்து, யாரையும் வேலை செய்ய விடாமல், அவன் தொழிலை முடக்குவதாக இருந்தது.
"எங்களுக்கு உரிய பாதுக்காப்பு வசதிகள் இல்ல. சம்பளம் சரியா தர்றது இல்ல. என்னோட ஆட்கள மாடு மாதிரி வேலை வாங்கிட்டு, கொத்தடிம மாதிரி நடத்துறான். இது முறை கிடையாதுன்னு தட்டி கேட்டா என்னை ஆள் விட்டு அடிக்கிறான்.
இதுக்கு முன்னாடி இதே சைட்ல வேலை பாத்த சிலருக்கு அவனோட அலட்சியத்தால காயம் மட்டும் தான் பட்டுட்டு இருந்தது. இப்ப ஒரு உயிரே போயிருக்கு. அவெ ஹாஸ்பிட்டல்ல உயிருக்கு போராடீட்டு இருக்கும் போதும் சரி இப்பவும் சரி முதலாளியா வந்து பாக்கல. என்ன ஏதுன்னு விசாரிக்க வரல. அந்தத் தொழிலாளியோட குடும்பம் ஹாஸ்பிட்டல்ல அழுதிட்டு இருக்கு. அவனோடு இழப்புக்கு ஆறுதல் சொல்ல, இழப்பீடுங்கிற பேர்ல பிச்ச போடுற மாதிரி கொஞ்சோண்டு பணத்த குடுத்து சரிக்கட்ட பாக்குறான். நிர்வாகம் சரி இல்ல..
கைது செய்… கைது செய்… தீஷிதனை கைது செய்... முதலாளித்துவம் ஒழிக… " எனத் தீஷிதனின் அலுவலகம் முன் ஒரு பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தான் சுந்தரம். கூலிக்கு ஆள்களை வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜென்ட்டின் உரிமையாளர்.
அவர் உணர்ச்சிகரமாக மைக்கில் பேசிக் கொண்டு இருக்க, அதை நின்று பார்த்துக் கொண்டிருந்த கும்பலைக் கிழித்துக் கொண்டு அதீத ஹாரன் சத்தத்துடன் வந்தது தீஷித்தின் கார்.
அதிலிருந்து இறங்கியவனைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க, காக்கி உடை அணிந்த காவலர்கள் சில வந்து தடுத்து, அவன் உள்ளே செல்ல பாதை ஏற்படுத்தி தந்தனர்.
தீஷித் சுந்தரத்தை விழி இடுங்க பார்த்த படி உள்ளே சென்றான். சுந்தரம் விலைபோகியுள்ளான் என்பதை அறிந்த தீஷித்திற்கு யாரிடம் விற்கப்பட்டான் என்பதும் தெரிந்தது.
வழக்கமானத் தன் புன்னகையுடன் தன் ஊழியர்களைப் பார்த்து சிரித்தும், காலை வணக்கத்தை வைத்து விட்டும் செல்ல,
மற்றவர்களுக்குத் தான் 'வெளியே அத்தனை பெரிய பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. இவன் என்ன சிரிப்புடன் கூலாக நடந்து வருகிறான். ' என்று ஆச்சர்யமாக இருந்தது.
" குட் மார்னிங் சர்வேஷ். வெளில இருக்குற என்னோட ஃபேன்ஸ் தொல்லைங்களத் தவிர இன்னைக்கி வேறதாவது ஹாட் நியூஸ் இருக்கா?" எனக் கேட்க,
"இருக்கு ஸார். மித்ரன் ஸார் கால் பண்ணிருந்தாரு. நீங்க வந்தா உடனே கூப்பிட சொன்னாரு. எமர்ஜென்சின்னு சொன்னாரு." என்றான் சர்வேஷ்.
மித்ரன், தீஷித்தின் நண்பனாகிப் போனான். SRJ construction னின் பார்ட்னர்களில் ஒருவன். கம்பெனியில் பிரச்சனை என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவியதால் அழைத்துள்ளான்.
"என்ன தீஷ் நடக்குது அங்க? நம்ம கம்பெனி வாசல்ல ஆர்ப்பாட்டம் நடக்குதா? அங்க நடக்குறத ஃபேஸ் புக் லைவ்ல போட்டுக்கிட்டு இருக்கானுங்க. நம்ம கம்பெனி சேர்ஸ் வேல்யூ எல்லாம் குறைய ஆரம்பிச்சிடுச்சி. நம்மோட ரெப்பிட்டேஷன் கெட்டு போறதுக்குள்ள எதாவது பண்ணு தீஷ். இல்லன்னா மீள முடியாத பள்ளத்துக்குள்ள விழுந்திடுவோம்." என்க…
" லைவ்வா! நல்ல விசயம் ஆச்சே! " எனப் புன்னகையுடன் கூறி வைக்க, மித்ரனுக்குப் புரிந்து போனது, எதோ திட்டம் வைத்திருக்கிறான் என்று. அப்போது கருணாகரன் அழைத்தான்.
"மச்சான் நம்ம கால் சென்டர்ல ஃபயர் ஆக்ஸிடென்ட். சர்வர் மொத்தமும் எரிஞ்சிட்டு இருக்கு. மார்னிங் டயம்கிறதுனால இப்ப தான் ஸ்டாப் வர ஆரம்பிச்சிருக்காங்க. சோ, உயிர் சேதம் இல்ல. ஆனா முக்கியமா சில டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எரிஞ்சிருக்கலாம்." என்க,
"டோன்ட் வரி கருணா. எல்லாத்துக்கும் பேக்கப் இருக்கு. சோ, நீ கவலப்படாத. கம்பளைண்ட் பைல் பண்ண வேண்டாம். நைட் டியூட்டில இருந்த வாட்ச்மென்ன நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு கூட்டீட்டு வா. எல்லாத்தையும் விசாரிக்க வேண்டிய விதத்துல நாமலே விசாரிப்போம்.
அப்றம் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ஃபயர் ஆக்ஸிடென்ட் நடந்த தடமே இல்லாம மாத்திட்டு.
வேகமும் திறமையும் இருந்தா எத்தன முறை அழிச்சாலும் ஆரம்பத்துல இருந்து ஓடி வின் பண்ண முடியும். " என்றவன் அடுத்து செய்ய வேண்டியதை சொல்ல,
" எல்லாம் ஓகே. அந்தப் பையன் டெத்துக்கு ஆர்பாட்ட பண்ணிட்டு இருக்குறவங்கள என்ன பண்ண போற?"
"படம் காட்ட போறேன். லோ பட்ஜெட் மூவி தான். ஆனா காமெடி படமா இல்லாம இந்த சமூகத்துக்கு ஒரு மெஜ்ஏஜ் சொல்ற மாதிரியானப் படமா இருக்க போது. ஆல்ரெடி இங்க நடக்குறது ஃபேஸ் புக்ல லைவ்ல போய்கிட்டு இருக்குறதா மித்ரன் சொன்னான். நான் காட்டுற படத்த உனக்கும் பாக்க ஆச இருந்தா. நீயும் அந்த புக்க ஓப்பன் பண்ணு. மறக்காம கமெண்ட் பண்ணு மச்சி." என்றவன் கருணாகரனிடம் சொல்லியது போல் படம் காட்டினான்.
அதில் அந்த இளைஞன் போதையில் தள்ளாடிய படியே பணியே செய்வதும், நிலை தடுமாறி மாடியில் இருந்து விழுந்ததும் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
'ஓடி வந்து ரன்னிங்ல பஸ் ஏறுரதும். போதைல தள்ளாடிட்டே படிக்கட்டு ஏறுரதும் சமம்னு தீஷித் படம் போட்டு காட்டிட்டாப்ல. '
கூடியிருந்த அத்தனை பேர் முன்னிலையிலும் அதைப் போட்டு காட்டியவன், " நீங்க குடிச்சி சீரழிங்க. குடிக்காம ஞானியா போங்க. எனக்கு அதப் பத்தி கவல கிடையாது. என்னோட கம்பெனில இருக்குற வெர்க்கஸ் நிதானமா இருக்கணும்னு. போதைல இருக்கவே கூடாது. இத இங்க வேலைல ஜாயின் பண்ணும் போதே நான் சொல்லிருக்கேன்." என்று அனைத்து ஊழியர்களையும் பார்த்தான் தீஷிதன்.
"மிஸ்டர் சுந்தரம், அந்தப் பையனோட நடவடிக்கைகலப் பத்தி என்னோட பீஏ ஆல்ரெடி உங்களுக்கிட்ட பேசிருக்கான். நியாயமா பாத்தா இருபத்தி நாலு மணி நேரம் குடிச்சிட்டு வர்ற குடிமகன நீங்க வேலைக்கு சிபாரிசு பண்ணதே தப்பு. இதுல அந்தப் பையன் போதைல தான் இறந்தான்னு தெரிஞ்சும்! ஏன் வீணா மத்தவங்களையும் தூண்டி விட்டு அவங்களோட வேலைய கெடுக்குறீங்க? " என்றவன் திரும்பி கூடியிருந்தவர்களிடம்,
"இந்த வீடியோ போதும் யாரு மேல் தப்பு இருக்குன்னு காட்ட. இன்னும் இருபது நிமிஷத்துல எல்லாரும் கலஞ்சி போய் அவங்கவங்களோட வேலைய கவனிக்கணும். முடியாதுங்கிறவங்க வந்து என்ட்ட தாராளமா பேசலாம்.
இத நான் போலிஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணப்போறது இல்ல. அந்தக் குடும்பத்துக்குச் செய்ய வேண்டியத இந்த கம்பெனி சரியா செய்யும்." என்று விட்டு செல்ல, பலர் கலைந்து சென்றனர். சுந்தரம் மட்டும் கத்திக் கொண்டே இருக்க, அவனை செக்யூரிட்டியின் உதவியுடன் குண்டுகட்டாகத் தூக்கி வெளியே வீசினர்.
இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. சிராஜ்ஜிடம் சவால் விட்டு வந்ததில் இருந்தே இது போன்ற பல பிரச்சனைகளை எதிர் கொண்டு தான் வருகிறான் தீஷித். வேகமாக தன் மொபைலை எடுத்து அழைப்பு விடுத்தான்.
சிராஜ்ஜிற்கு..
"சிராஜ் ஜீ… நமஸ்கார்… நான் தீஷித், உங்களோடு சமீபத்திய விரோதி." என்க,
சிராஜ், " தீஷிதன்… என்ன ஆர்பாட்டத்த சமாளிச்சிட்டோம்ங்கிற திமிருல கூப்பிட்டுருக்கியா! இது வெறும் சாம்பிள் தான். இனிமே தான் நிறைய இருக்கு. என்னோட இடத்துக்கு வந்து எங்கிட்டயே சவால் விட்டுடுட்டு போன உன்னைச் சும்மா எப்படி விட முடியும்?"
"அதே தான் ஜீ நானும் சொல்றேன். சிங்கத்தோட குகைக்குள்ள வந்து சிங்கத்துக்கிட்டேயே சவால் விடுற சிறு நரிக்கி தைரியம் மட்டுமில்ல, தந்திரமும் இருக்கும்கிறத மறந்திட்டிங்க பாத்திங்களா! பரவாயில்ல.
இத்தோடு சாம்பிள் காட்டுற வேலைய நிப்பாட்டிங்கங்கன்னு சொல்லத்தான் கால் பண்ணேன். ஏன்னா உங்க குடுமி… தட் மீன்ஸ் உங்க சீக்ரெட்ஸ் ஒன்னு எங்கிட்ட ரொம்ப பத்திரமா லாக்கர்ல இருக்கு. நீங்க இப்படித் தொடர்ந்து பிரச்ச மேல பிரச்சன பண்ணச் சொல்லி தூண்டி விட்டே இருந்தா. நான் அதத் தேவையில்லாம வெளில விட வேண்டி இருக்கும். அப்றம் தாத்தா, அப்பா, மகென்னு மூணு தலைமுறையா பிஸ்னஸ் பாத்த உங்க குடும்பம் நிம்மதி இல்லாம சுத்தும். சொகுசா பென்ஸ் கார்ல பயணம் பண்ண நீங்களும் ஜெயில்ல கம்பி எண்ணுற மாதிரி ஆகிடும்.
உங்களோட தாக்குதலுக்கு என்னோட ரிவென்ஜ் எப்படி இருக்கும்னு நான் உங்களுக்கு சாம்பிள்ளாம் காட்ட மாட்டேன். ஒரே அடி. திரும்பி எதையும் பாக்க முடியாத மாதிரி பண்ணிடுவேன். ஏன்னா என்னோட டீச்சர் பேர நான் காப்பாத்தணும்ல.
சொல்ல போனா என்னோட குரு, ஆசான், வழிகாட்டி எல்லாமே நீங்க தான் சிராஜ் ஜீ. புரியலேல. எப்படி ஆறே மாசத்துல இவ்ளோ பெரிய வளர்ச்சி கேட்டிங்கள்ல. குருவோட பாதைய பின் தொடர்ந்து வந்ததுனால.
மகாபலிபுரம்… க்ளாசியர் பங்களா... எங்கிட்ட இருக்குற சீக்ரெட்ஸ் என்னென்னு நியாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். ஹாஹ்ஹா..." எனச் சொல்லி சத்தமாகச் சிரிக்க,
சிராஜ்ஜின் கண்கள் கணலாய் எரிந்தது. இவன் தான்... இவன் தான் திருடியது. தன் வியாபார உத்திகளை வைத்து தன்னையே தோற்கடிக்க பாத்திருக்கிறான்.
அன்று சிராஜ்ஜின் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற இருப்பதாக தகவல் வந்தது. சிராஜ், சில முக்கியமான கோப்புகளைச் சென்னையில் இருக்கும் தன் பிணாமி பங்களாவில் மறைத்து வைக்க எடுத்து வந்தான். அத்தோடு செக்யூரிட்டிக்கு நம்ம மதுசூதனன் தான் சென்றான்.
மது, எப்பொழுதும் தன் பணியில் கவனமாகத்தான் இருப்பான். சிறு தவறு கூட நடக்க விடாது அனைத்தையும் கண்ணும் கருத்துமாக செய்பவனும் கூட. ஆனால் அன்று அவனால் அவ்வாறு இருக்க முடியவில்லை.
அது பைரவி போலிஸ்ஸாக பணியில் சேர்ந்த சமயம். இரு மாதங்களாக அவள் வேலைக்குச் செல்கிறாள். அதைக் கணவனாக நீ எப்படி அனுமதித்தாய்? எனச் சைந்தவியும் ஜெயாவும், மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று மதுவிடம் பாடம் நடத்திக் கொண்டிருந்த நேரம். இருவருக்குள்ளும் இருக்கும் சிறு தீ சூவாளையாக மாறிய நேரமும் அது தான்.
முக்கிய கோப்புகள் அடிங்கிய பை லேப்டாப்புடன் காணாது போயிக்க, போலிஸ்ஸிடம் ஹோட்டல் நிர்வாகம் கம்ப்ளைண்ட் செய்திருந்தது. துரதிஷ்டவசமாக அந்த ஹோட்டல், பைரவி பணி செய்யும் ஸ்டேஷனுக்கு கீழ் இருந்தது.
குற்றவாளியைக் கண்டு பிடித்து இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கஞ்சி போட்ட யூனிபார்மிற்கு இணையாக பைரவியும் விரைப்பாக வந்தாள்.
பொறுப்பை ஏற்ற பத்து ஆண்டுகளில் எந்த ஒரு குறையும் சொல்லும் படி நம் மது நடந்து கொண்டது இல்லை. இது முதல் முறை. தன் மேல் பழி வந்து விட்டதே என மது அமைதியாக அடக்கப்பட்ட கோபத்துடன் இருக்க,
காக்கி உடையில் மனைவி வந்தாள். விசாரிக்கிறேன் என்று கேள்வி கேட்டுக்கொண்டு.
‘எவெ எவனோ வந்து கேள்வி கேட்டு என்னைக் கடுப்பேத்த. அதுல நீயும் வந்து சேந்துட்டியா.' என அவளை அதாவது காக்கி உடையில் இருந்த மனைவியை ஏக வசனத்தில் திட்ட,
'போலிஸ்ஸையேவா டி போட்டு பேசுற.' என்று தூக்கி ஸ்டேஷனுக்கு கூட்டீட்டு வந்துவிட்டாள்.
அது போதுமே. குளுக்கப்பட்ட பாட்டிலில் இருந்து கூல்டிரிங்ஸ் பொங்குவது போல் பொங்கிவிட்டான். அப்படியே விட்டிருந்தாலும் கூட பொங்கியது போக மீதி கூல்டிரிங்ஸ் பாட்டிலில் இருந்திருக்கும்.
அப்படி விடக்கூடாது எனச் சைந்தவியும் ஜெயாவும் தலைகீழாக கவிழ்த்தி விட்டு விட்டனர். அதான் விவாகரத்து.
ஒரு வேளை விவாகரத்து என்றதும் பயந்து வேலையே விட்டு விட்டு, மன்னவனின் மார்பே தன் மணிமகுடம். கை விட்டுவிடாதே கண்ணாளா எனக் கண்ணீருடன் ஓடி வருவாள் என்று எதிர் பார்த்தானோ என்னவோ. ஆனால் பைரவி அப்படி கண்ணீர் வடிக்க வில்லை.
'நீ போனா எனக்கு வாழத் தெரியாதா..' என்பது போல் திமிருடன் நிற்க, அது ஆணான மதுவிற்குக் கோபத்தை ஆத்திரத்தை என எல்லாத்தையும் தந்து விவகாரத்தையும் தந்து விட்டு சென்றது.
சிறு கவனக்குறைவு. அதை தீஷித் நன்கு பயன்படுத்துக் கொண்டான். சிராஜின் சில தொழில் ரகசியங்களை வைத்து தான் தன் தொழிலில் நன்கு முன்னேற்றம் கண்டுள்ளான். இப்போது அவனையே எதிர்க்கும் நிலைக்கு வந்து விட்டான்.
முழுவதும் கணக்கில் காட்டப்படதா இல்லீகல் டாக்குமெண்ட். வெளிப்படையாக அதை விசாரிக்க முடியாது. அன் அபீஸ்யலாக அதைப் பற்றி ஐஜீ இடம் புகாரளித்தான். அப்போதைக்கு அது பூதமாக வெளிப்பட வில்லை. இப்போது தீஷிதன் என்ற பெயரில் வளர்ந்து நிற்பதை சிராஜ்ஜால் ஏற்க முடியவில்லை. அத்தனை கோபமும் மதுசூதனனின் மீது திரும்பியது.
"அந்த *** தான் எல்லாம். அவெ மட்டும் கரெட்டா இருந்திருந்தான்னா இந்த bed bugs(மூட்ட பூச்சி) லாம் நம்மல சீண்டுமா. ஒருவேள அவனுங்க ரெண்டு பேரும் கூட்டா? இருக்கலாம். அன்னைக்கி அந்த பாடிகார்ட் திமிரா என்னைப் பாத்தபடி ஏன் நின்னான்னு இப்ப தான் தெரியுது." என்றவன் தன் எதிரியின் லீஸ்டில் மதுவின் பெயரையும் பதிவு செய்தான்..
பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்பது போல் தீஷித் செய்த திருட்டிற்கு, அமைதியின் சொரூபமாய் ஒன்னுமே செய்யாத நம் பைரவியின் தயிர் சாதத்தை எதிரி என்று பெயர் சேர்ந்துள்ளான்..
ஒருவேளை ' நான் வந்து கல்யாணம் பண்ணிக்க வேண்டிய பைரவிய நீ ஏன்டா பண்ண..' என்று பழி வாங்க தீஷித் சிராஜ்ஜிடம் கோர்த்து விட்டிருப்பானோ.!
ச்சச்ச இருக்காது தீஷித் நல்ல பையன். சாக்லேட் பாய். அவன் அப்படி பண்ண மாட்டான். இப்பொழுது தான் அவனுக்கு பைரவியோட பயோடேட்டா கிடைத்திருக்கு. அவனுக்கு எப்படி மது தான் பைரவியுடயை ஹஸ்பெண்ட் என்று தெரியும். அதெல்லாம் தெரிந்திருக்காது.
ஒருவேளை இருக்குமோ!
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

Kuluki vitta juice bottle nalla iruku 🤣🤣🤣
பதிலளிநீக்கு🤣🤣🤣🤣🥴🥴🥴🥴
நீக்கு