முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 34

அத்தியாயம்: 34


"அந்த ராக்கி பாய்க்கு ரொம்பத்தா திமிரு கூடிடுச்சி. நான் நாலு மொற கால் பண்ணி கேட்டும் என்னோட தயிர் சாதம் எங்க இருக்குன்னு பதிலே சொல்லாம விட்டுட்டாரு. இதுக்கு நான் கண்டிப்பா பழி வாங்கியே தீருவேன். இந்த பைரவிக்கிட்ட வச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு காட்டுறேன். யாருன்னு நினச்சிட்டாரு என்ன! அந்தத் தயிர் சாதமே எங்கிட்ட நேருக்கு‌ நேரா நின்னு சண்ட போட பயப்படும். இவரு ஒரு பொடியன். சின்னப்பையன். அவரோட சித்து வேலைய எங்கிட்டயேவா காட்ட பாக்குறாரு. காட்டுறேன். நான் யாருன்னு காட்டுறேன்." என ராக்கியின் மீதிருக்கும்‌ கோபத்தில் சாப்பரின் ஆக்ஸிலேட்டரை திருக,


"பையூ அப்றமா நீ யாருன்னு ராக்கி பாய்க்கு காட்டு. இப்ப மெதுவா போம்மா. இல்லன்னா எம்முகத்த யாருக்குமே காட்ட முடியாத படி டெமேஜ் ஆகிடும்.” என்று அலறியது சாரு தான்.


“பாத்து போடி. பள்ளம் வருது. " எனக் கத்திக் கொண்டே வந்தாள்‌ சாரு. அவள் தான்‌‌ பைரவியின் பேசென்ஜசர். எப்பொழுது வேண்டுமானாலும் உன்னைப் பாடையில் ஏற்றிவிடுவேன் என்ற ரீதியில் ஸ்கூட்டியை பைரவி ஓட்ட, பயத்துடன் இருக்கிறாள் சாரு.


" இன்னும் தாமர சென்னைக்கி வந்தது  அவருக்குத் தெரியாதில்ல. இனியும் தெரியாது. தெரியவும் விட மாட்டேன். ஏன் ஆளு எங்கன்னு சொல்லாம என்னைச் சுத்த விட்ட மாதிரி தாமரைய கண்ணுலயே காட்டாம சுத்த விடல...‌ எம்பேரு பைரவி இல்ல. " என்க,


" நானும் ஒத்துக்கிறேன் நீ‌ பைரவி இல்லன்னு. இப்பக் கொஞ்சம் மெதுவா ஓட்டு டி. பிறந்த நாள் அதுவுமா விழுந்து வாரி ரத்த காயம் ஆகிடப் போது. " என்றவளுக்குப் பயம், பைரவியின் டிரைவிங்கை பார்த்து.


ஓட்டுனர் உரிமம் வாங்க வாகனத்தை விட்டு இறங்காமலேயே எட்டு போட சொல்வர். இங்கு உரிமம் வாங்கி கொண்டு குண்டும்‌‌ குழியுமாக இருக்கும் சாலையில் எட்டு போட்டு ஓட்டிக் கொண்டு இருக்கிறாள் பைரவி. 


பிறந்தநாள் அதுவுமாக மதுவைக் காணாது கடுப்பு, எங்கே இருக்கிறான் என்று சொல்லாத ராக்கி பாயின் மீதுள்ள கோபம் என அனைத்தையும் தன் சாப்பரின் மீது காட்டிக் கொண்டு ஓட்டினாள். சாலையைக் கவனித்தாள் தான். ஆனால் சாலையின் எதிரில் வரும் வாகனங்களைக் கவனிப்பதில்லை. ஒரு திருப்பு முனையில் எதிரில் ஒரு கார் வந்தது. 


இவளும் ஹாரன் அடிக்காது திரும்ப, கார்காரனும் ஹாரன் அடிக்காது வளைக்க, சாப்பர் காரில் க்ராஸ் ஆகி தேங்கி இருந்த நீர் குட்டையில் லேன்ட் ஆகி, இரு பெண்களையும் சேற்றில் குளித்து எழ வைத்தது.  


"சாரு... சாரு... ஆர் யூ ஓகே... ஐய்யோ என்னோட சாப்பர்... ஆ... கண்ணு பொட்டையா போச்சி என் சாப்பருக்கு. ஐய்யோ பாவமே... மை டார்லிங் சாப்பர்." எனத் தன் ஸ்கூட்டியைத் தூக்கி நிறுத்தி முத்தமிட்டு கொஞ்ச, அதைக் கடுப்புடன் பார்த்தாள் சாரு.


' ஆருயிர் தோழின்னு அறிமுகம் பண்ண நான் தண்ணில விழுந்து கிடக்கேன். என்னை ஒரு பார்வை பாத்திட்டு, உயிரே இல்லாத அந்த ரெண்டு கால் வாணரத்த கொஞ்சிட்டு இருக்கா.' என மனதிற்குள் கருவ,


"சாரு பாரு என்னோட சாப்பர. அதோட கண்ண உடச்சிட்டான். கைக் கூட லேசா உடைஞ்ச மாறி இருக்கு. ஆ... பின்னாடி சொட்ட விழுந்துடுச்சி. எவ்வளோ தைரியம் இருந்தா ஒரு போலிஸ்காரி வண்டியவே சாச்சி டிஞ்சர் போட வச்சிருப்பான். அவன..." என்றவள் எழுந்து காரை ஓட்டி வந்தவனிடம் சண்டைக்குச் சென்றாள். 


"யோவ்… கீழ இறங்குய்யா... கார்ல ஏறி உக்காந்து ஓட்டச் சொன்னா! ஃப்ளைட் ஓட்டுறவெ மாதிரி கற்பன பண்ணி கண்ட மேனிக்கி ஓட்டவியா. மரியாதையா இறங்கிடு. இல்ல என் சாப்பருக்கு ஆன நிலைமைய உங்காருக்கு ஆக்கி விட்டுடுவேன். இறங்குயா." எனக் கத்திக் கொண்டே முழுவதும் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அந்த காரின் கண்ணாடியில் தட்டினாள். சாருவிற்கு அது யாரின் கார் என்று தெரிந்து போது. ஆனாலும் உள்ளிருப்பது யார் என்று உறுதியாக தெரியாது.


"பையூ, போது... நடு ரோட்டுல சண்ட போடாத. " எனத் தோழியை அடக்கினாள் அவள். ஏனெனில் நின்று இவர்களின் சண்டையை ஃபோனில் வீடியோ எடுத்தபடி சில சுற்றி சுற்றி வந்தனர். 


'ஆக்ஜிடென்ட் ஆகி ஒரு ஜீவன் தரைல விழுந்து கிடக்கு. அத என்னன்னு பாக்க நாதி இல்ல. ஆனா கத்தி கூச்சலிட்டு ஒரு பொண்ணு சண்ட போட்டா அத வீடியோ கவரேஜ் பண்ண பத்து பேர் வந்து நிக்கிறானுங்க. அதுலயும் 360டிகிரி வீயூவ் வேணும்னு கால கால சுத்தி வாரானுங்க பாரேன். ' சாருவின் புலம்பல்கள்.


"இவ்ளோ கத்துறேன் காதுல வாங்காம உள்ளயேவா உக்காந்திருக்க. உன்ன... " எனப் பெரிய சைஸில் ஒரு கல்லை எடுக்க, ஒரு வழியாக கதவு திறக்கப்பட்டது.


உள்ளிருந்து இறங்கியது சர்வேஷ். சிறு ஏமாற்றம் நெஞ்சில் பரவியதைத் தவிர்க்க முடியவில்லை சாருவிற்கு. 


"ஸாரி மேம். நான் கவனிக்கல. அடி பட்டிருச்சா.‌" என அக்கறையுடன் கேட்க,


"என்ன நடிக்கிறியா? " என்றவள் கல்லைக்கீழே போடாது இருக்கு.


" மேம்… " என அவன் முழித்தான்.


"அக்கற படுற மாதிரி நடிக்காதன்னு சொன்னேன்‌. ஆக்ஸிடென்ட் ஆகி பத்து நிமிஷம் காருக்குள்ளையே உக்காந்து யோசிச்சியோ இறங்கு போய் பாப்போமா வேண்டாமான்னு. " 


"இல்ல மேம் லைட்டா பயந்திட்டேன்." என்றவனை நம்பாது பார்த்தாள்.


" உன்னைப் பாத்தா பயந்தவெ மாதிரித் தெரியல. கார் உன்னிதா? லைசன்ஸ் எங்க? ஆர்சி புக்க காட்டு பாப்போம்! " 


" மேம்… கார் என்னிது இல்ல. அதுனால டிரைவிங் லைசென்ஸ் மட்டும் தான் இருக்கு." என எடுத்து காட்டியவன், 


"இதெல்லாம் நீங்க ஏன் கேக்குறிங்க. நீங்களும் தான் வந்து எங்க வண்டி மேல இடிச்சிங்க. எங்க காருக்கும் டேமேஜ் ஆகிருக்கு.‌ நியாயமா பாத்தா நான் தான் மேம் உங்க மேல் கோபப்பட்டு. ஸ்கூட்டி ஓட்ட தெரியுமா தெரியாதான்னு லைசென்ஸ் கேக்கணும். " என்க, 


"ஏய்! என்ன நிறைய பேசுற? நான் யாருன்னு தெரியுமா?" என்றபடி எகிற, சர்வேஷ் அமைதியாக நின்றான். 


'பையன் பயந்திட்டான் போல. ' என நினைத்து, " சீட் பெல்ட் போட்டியா மேன் நீ. வளைவுல திரும்பும் போது ஹாரன் அடிக்கணும். அடிச்சியா நீ! சின்ன சின்ன சந்து தான. எதுக்கு இத்தன ஸ்பீடுல ஓட்டுற? ரோடு ரூல்ஸ்ல எதையாது ஒன்ன ஃபாலோ பண்ணியா மேன் நீ?" எனச் சரமாரியாகக் கேள்விகளை அடுக்க,


"இதே கேள்விய நாங்க உங்கள பாத்து கேட்டா என்ன பதில் கிடைக்கும் மிஸ் பைரவி." என்றபடி காரின் பின் கதவுகளைத் திறந்து கொண்டு இறங்கினான் தீஷித். 


ஆகாய வண்ண டீ சர்ட். ஆங்காங்கே சில கருப்பு கோடுகள். அதற்கு மேச்சாக ஜீன்ஸ். உடை அவனின் அழகை காட்டுகிறாதா இல்லை அவன் அந்த உடைக்கு அழகு சேர்க்கிறானா எனப் பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு ஃபிட்டாக இருந்தது. 


ஆளைச் சுண்டி ஈர்க்கும் வல்லமை கொண்ட அவன் கண்களில் குறுஞ்சிரிப்பு மின்ன, இதழ்கள் வளைந்து புருவங்கள் உயர்த்தி சேவ் செய்யப்பட்ட தாடையை தடவியபடி, ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் வைத்து காரில் சாய்ந்து கொண்டு நின்ற அவனின் தோற்றம்.


' ப்பா... யாருப்பா இந்தப் பையன்… இவ்ளே மேன்லியா இருக்கான். ' எனத் திரும்பி பார்த்து அவனிடம் வழிய சென்று பேசி தூண்டும்.


தீஷித்தைக் கண்ட பைரவி சர்வேஷ்ஷை விட்டு விட்டு அவனை முறைத்தாள்.


"ஹெல்மெட் போடல. ஹாரன் பண்ணல. ரைட் சைடு ஏறி டர்ன் பண்ணிருக்கிங்க. ஒரு போலிஸ்ஸே ரோடு ரூல்ஸ் ஃபாலோ பண்ணலன்னா மத்தவங்க எப்படி? " என நக்கலாக கேட்டு, அருகில் வந்து அவளின் சாப்பரை பார்வையிட்டான்.


'இந்தாம்மா... ஏய்! இத்துண்டா கோடு விழுந்திருக்கு இதுக்கு போய் இந்த சவுண்டு விடுறியா நீ?' என்பது போல் இருந்தது.


நாம் பல தவறுகள் பிழைகள் செய்யலாம். அதை நாமே திருத்தியும் கொள்ளலாம். ஆனால் பிறர் அதைச் சுட்டிக்காட்டி நம்மைத் திருந்த சொல்வது கடுப்பாக இருக்கும் அல்லவா! அந்தக் கடுப்பு தான் பைரவிக்கும்.


அவனைத் தன் பார்வையாலேயே பழைய அம்மன் படங்களில் வரும் காட்சி போல் எரிக்க‌ முடியுமா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு அவள் முறைக்க, சாரு வேகமாக வந்து தீஷித்திடம் பேசினாள். 


" ஸாரி ஸார். ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு. வெரி ஸாரி என்னோட ஃப்ரெண்டு பேசுனதுக்கு. வா பையூ போகலாம். இத இப்படியே விட்டுடு. வா… " எனக் கரம் பற்றி அழைக்க‌, அவளை முறைத்தாள் பையூ. அவளின் காதில் தீஷித்தைப் பற்றிச் சுருங்க சொல்லி மீண்டும் அங்கிருந்து அவளை அப்புறப்படுத்த பார்க்க,


"வா... வான்னா... எப்படிப் போறது? அதான் வண்டிய உடைச்சிட்டானே உன்னோட பிரிய முதலாளி. " எனக் கடுங்கோபத்துடன் கத்தினாள்.


தினமும் அதைத் துடைத்து, பெட்ரோல் உள்ளதா, ப்ரேக் பிடிக்கிறதா, எல்லா நட்டும் சரியாக இருக்கிறதா என பார்த்து பார்த்து‌ தன் சாப்பரைக் கவனிக்கும் பைரவியால், அது இன்று கீறல் விழுந்து கிடப்பதைத் தாங்கி கொள்ள முடியவில்லை. 


"நாங்க பணம் தர்றோம் மேம். " என முன்வந்த சர்வேஷை பைரவி மட்டுமல்ல தீஷித்தும் சேர்ந்து முறைக்க, பைரவி காளி அவதாரம் எடுத்தாள். 


" காசு… எவ்ளோ தருவ? நீ சாஞ்சி நிக்கிற இந்த கார விலைக்கி வாங்குற அளவுக்கு எங்கிட்ட காசு இருக்கு. அதுனால அத நான் உடைச்சிடுறேன்.. நீ எனக்குக் காசு‌ தான். நான் உனக்கு‌ காசு‌ தர்றேன். ரெண்டு பேரும் மாறி மாறி டேமேஜ் பண்ணிப்போம்." எனச் சொல்லி கோபமாக காரை நெருங்க, தீஷித் அவளைக் கரம் நீட்டி தடுத்தான்.


கூடவே சில பைக்குகள் வந்து நிற்கும் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள் அவள். 


மெக்கானிக் நான்கு பேர் வந்து அவளின் சாப்பரை சரி செய்து தந்தனர். பெயிண்ட் போன இடத்தில் பெயிண்ட் அடித்து, நெளிந்த இடத்தை சரி செய்யது,  உடைந்த லைட்டை ஒட்டி வைத்து பட்டி டிங்கரின் வேலை செய்து கொடுக்கும் போது, குற்றால அருவியில் குளித்து எழுந்த புத்துணர்ச்சியுடன் நின்றது அவளின் சாப்பர். 


அதைத் தீஷித்திடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் செல்ல, அதன் சாவியை பைரவியின் முன் நீட்டினான் அவன். நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளை அவனின் இதழில் தவழ்ந்த புன்னகைக் காண்டாக்க, சாவியைப் பிடுங்கிக் கொண்டு,


"ச்ச... இன்னைக்கி யாரு முகத்துல முழிச்சேனோ! எல்லாமே தப்பு தப்பா நடக்குது." எனப் புலம்பியபடியே சாப்பரை ஸ்டாட் செய்தாள்.


"மிஸ் பைரவி…" எனத் தீஷித் அழைக்க, அவனை என்ன வேண்டும் என்பது போல் பார்த்து வைத்தாள் பையூ. 


"ஸாரி... உங்க ரெண்டு பேரோட ட்ரெஸ்ஸும் சேறாகிடுச்சி. சோ… இத மறுக்காம வாங்கிக்கணும்." என்றான்.


'என்னத்த வாங்க சொல்றான்!' என்பது போல் இருவரும் முழிக்க, மற்றொரு பைக் வந்து நின்றது‌. அதிலிருந்து இறங்கிய ஒருவன் சில கவர்களை அவனிடம் தந்து விட்டுச் செல்ல, அதை இரு பெண்களை நோக்கி நீட்டினான். பைரவி வாங்காது அவனைப் பார்த்தாள். ஆனால் சாரு வேகமாக கவரை வாங்கி கொண்டாள். 


"இது டூ மச்…" 


" பரவாயில்லை." 


"நான் எதுக்கு இத வாங்கணும்."


"ஒரு பெர்த் டே கேர்ளோட பெர்த் டே டிரெஸ்ஸ ஸ்பாயில் பண்ணதுக்கு பனிஷ்மெண்ட்டா இருக்கட்டுமே. நீ வாங்கி கிட்டா ஹப்பி… இல்லன்னா உன்னோட டே வ ஸ்பாயில் பண்ணதுக்காக ஃபீல் பண்ணுவேன்." எனப் பணிவுடன் சொல்ல, அவனின் சொல்லும் செயலும் அவளுக்குப் பிடிக்கவில்லை.


நீ வாங்காது இங்கிருந்து நகர முடியாது என்பது போல் அவளை வழி மறித்து நிற்க பைரவி கவரை வாங்கிக் கொண்டு திரும்பியும் பார்க்காது சென்றாள். 


செல்லும் அவளைத் தன் கண்கள் தொடும் தூரம் வரை பார்த்துக் கொண்டு நின்றான் அந்த ஆறடி ஆண்மகன்.. தீஷிதன்.. 


"இடியட்.. எல்லார் கூடயும் நல்லா பேசுவான்னு சொன்ன! பாத்தா அப்படி தெரியல. சரியான மண்டகனம் பிடிச்ச ஆளு. இவ்ளோ அடிட்டியுட் ஆகாது அவனுக்கு." எனத் தீஷித்தைத் திட்டிக் கொண்டே ஓட்டினாள் பையூ. அதைக் கேட்ட சாருவின் மனம் வாடி போனது.


"அதெல்லாம் ஒன்னும் கிடையாது. அவருக்கு நல்ல மனசு இருக்க கண்டு தான் உன்னோட சாப்பர் சாப்பரா இருக்கு. ஒரு நன்றி சொல்லிட்டு வந்தாத் தான் என்ன! கொறஞ்சா போய்டுவ. எவ்ளோ பெரிய ஆளு தெரியுமா அவரு! அவர போய் மொறச்சிட்டே நிக்கிற. உனக்கு பொறும ரொம்ப கம்மி பையூ. " எனப் பைரவியை விட காண்டாக திட்டினாள் சாரு.


"என்னடி எவனோ ஒருத்தனுக்காக கூட பழகுற நண்பிய திட்டுற. என்ன விசயம்?" என சைடு மிரர் வழியே தெரிந்து சாருவைப் பார்த்து படி கேட்க, சாரு பேசாது புன்னகை சிந்தினாள். 


"என்ன சாரு கன்னம் ரெண்டு பூக்கோலம் போட்டுட்டு நிக்கிற மாதிரி இருக்கு. லவ்வா…" 


"தெரியல. பட் அவர எனக்குப் பிடிச்சிருக்கு. ஒரு க்ரெஷ் அவரு மேல இருக்கு. மெக்கானிக் அப்றம் இந்த டிரெஸ் எல்லாமே பிடிச்சிருக்கு." என கவரை மார்போடு அணைத்துக் கொண்டாள் சாரு.


" ம்… சரிதா.. ஆனா பாரேன் எல்லாத்தையும் வரிசையா முக்கு ரோட்டுல நிக்க வச்சிட்டு, கால் பண்ணி கூப்பிட்ட மாதிரி தெரியல. " என்ற‌ போது இருவரும் அப்பார்ட்மெண்டின் வாசலில் இறங்கியிருந்தனர். 


"என்ன சொல்ல வர்ற?"


"உங்க புடனிக்கி பின்னாடி தான் நிக்கிறே ஓவர் ஓவர்ங்கிற மாதிரி ஒவ்வொருத்தனா வந்தது செட்டப் மாதிரி இருக்கும்னு தோனுது. ப்ளான் பண்ணி நம்மல ஆக்ஸிடென்ட் பண்ண மாதிரி இருக்கு. " 


"உனக்கு எல்லாமே சந்தேகம் தான். போடி... " என்று விட்டு சென்றாள் சாரு. 


பைரவி, அவளுக்குத் தீஷித் தந்த கவரைப் பிரித்து பார்க்க, அதில் பிறந்த நாள் வாழ்த்துடன் கூடிய அட்டையும், அழகான மெஜன்டா நிற லாங்க கவுனும் இருந்தது. மிகவும் மிருதுவாக இருந்த அந்த உடையைத் தடவி பார்த்தவள்,


"என்னோட பேரு, எனக்கு பெர்த் டேன்னு அவனுக்கு எப்டி தெரியும்?" என யோசித்தபடி சென்றாள். 


உடையை அவளின் கைச் சேர்க்க அவன் போட்ட நாடகமாக இருக்குமோ! இருக்கும்... இருக்கும்... இந்தத் தீஷித்தைப் பற்றி நமக்குச் சரியாக தெரியவில்லை. 


 தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி

பனி 33

பனி 35

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...