முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 35


 

அத்தியாயம்: 35



மணி ஒன்பது.


இன்னும் மூன்று மணி நேரங்கள் மட்டுமே உள்ளன பைரவியின் பிறந்தாள் முடிய. 


மனம் அவளின் மணாளன் மதுசூதனனை நாடி அவன் முகம் பார்த்துவிட மாட்டோமா என ஏங்க, அவனுக்கு கால் செய்தாள். அவளுக்குத் தெரியும் அது எடுக்கப்படாது என்று. அவளின் நம்பரை அவன் ப்ளாக் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன. வேறு நம்பரில் இருந்து முயற்சி செய்தால் அவளின் ' ஹலோ..' என்ற குரல் கேட்டதும் கட்டாகி விடும். 


அவளின் குரல் தன்னைப் பலகீனப்படுத்தும் என்பதற்காகக் கேட்பதில்லை அவன். அது அவளுக்கும் தெரியும். அதனால் தான் அவ்வபோது முயற்சிப்பாள்.


இப்போது வீட்டில் யாரும் இல்லை. சாந்தியும் சேர்மதுரையும் உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு என வெளியூர் சென்றிருக்கின்றனர். காலையில் தான் வருவர். இரவைச் சாருவுடன் கழிக்கத்தான் நினைத்தாள் அவள். ஆனால் உள்ளுக்குள் ஏதோ தோன்ற யாருமற்ற வீட்டிற்குள் இருக்கிறாள். 


சும்மா இருப்பது அவளுக்குப் பிடிக்காத ஒன்று. தனிமையில் கலங்கிய நிலையில் அமைதியற்று இருக்கும் மனம் சூறாவளி சமயங்களில் கொப்பளிக்கும் கடலுக்கு நிகரானது. தேவையற்ற, முடிந்து போன பல நிகழ்வுகளை நினைத்து அது கொதித்துக்‌ கொண்டிருக்கும். அப்படித்தான் இருக்கிறது பைரவியின் உள்ளம். தன் கணவனுடன் கழித்த பொழுதுகள் நினைவு வந்து சித்தரவதைச் செய்தது.


யாருடனேனும் பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சாரு, இப்போது தான் பேசி முடித்தாள். தாமரை, அவள் உறங்கும் நேரம் அது. சாரதாம்மா… ராக்கி பாய்.. என மற்றவர்களை இரவில் தொந்தரவு செய்ய மனமில்லாது தன் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். அது அவளின் மதுவின் நினைவுகளை வாரி வாரி வழங்கியது. 


மதுவின் டிரெயினிங்காலோ என்னமோ இப்போது அவளின் அறை நீட்டாக இருந்தது. பெண் பார்க்க வந்து போது என்னென்ன இருந்ததே அது அத்தனையும் இருந்தது. ஆனால் ஒதுக்கப்பட்டு. அததற்கு என இடத்தை ஒதுக்கீடு செய்து நீட்டாக வைத்திருந்தாள் அவள்.


கட்டிலில் கிடந்த அவளின் ஆள் உயர டெடி பியரைப் பார்க்கும் போது கணவனின் முடி அடர்ந்த மார்பு நினைவு வர, அதை தன் மார்போடு சேர்த்தணைத்தாள் இறுக்கமாக. 


அவனுக்குப் பைரவி புடவை கட்டினால் மிகவும் பிடிக்கும். அவளிடம் உள்ள எல்லா புடவைகளும் அவனின் தேர்வு தான்‌. வேகமாக எழுந்து கபோர்டை ஓப்பன் செய்ய, அது புடவையால் நிரப்பப்பட்டிருந்தது. அதில் இருந்த ஒரு புடவையை எடுத்தாள் பைரவி. அது எப்படி வாங்கப்பட்டது என்ற கதையை நினைவு படுத்த, அந்த நாளுக்கு சென்றது மனம். 


அது‌ தீபாவளி சமயம். அனைவரும் புத்தாடைகள் எடுக்க குடும்பம் குடும்பமாக வெளியே செல்வர். சாலை எங்கும் மக்கள் வெள்ளம். அந்த வெள்ளத்தில் மிதக்காது பலர் தீபாவளிக்கு முந்தய மாதமே உடை எடுத்து வைத்துக் கொள்வர். அந்தப் பலரில் நம் மதுவும் ஒன்று. 


"இப்பயே எடுத்திடுவோம். அப்பத்தான் கூட்ட நெரிசல்ல சிக்காம நமக்கு பிடிச்சத நிதானமா எடுக்க முடியும்." என அவளை அழைத்துச் சென்றான் மது. 


நல்ல கடை தான். அதை குறை சொல்ல முடியாது. அதிக விலை தான். மனைவிக்குச் செய்வதில் அவன் கஞ்சன் என்று சொல்லி விட முடியாது தாராளப்பிரபு தான். அப்படியெனில் எது தான் குறை. விருப்பம்... மனைவிக்குப் பிடித்த மாதிரி எடுத்து தந்தானா என்றால் கேள்விக்குறி தான்? 


'எது கேள்வி குறியா! பதிலாவே செல்றேன். எனக்குப் பிடிச்சத அவெ வாங்கி தந்ததே இல்ல. இப்ப மட்டுமில்ல எப்பயுமே அவனோட விருப்பம் தான் ஃபஸ்ட். மத்ததெல்லாம் நெக்ஸ்டுன்னு சொல்லிட முடியாது. டஸ்டுன்னு சொல்லி குப்ப தொட்டில தான் போட முடியும்.' பைரவியின் மைண்ட் வாய்ஸ். 


"மாமா இது எல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு. நல்ல சாஃப்ட்டா இருக்கு. கட்டுனா கட்டிருக்குற ஃபீலே வராது. லைட் வெய்ட் சேரி. " எனப் பத்து புடவைகளைக் கையில் அள்ளிக் கொண்டு அவனின் முன் வந்து நிற்க, அவன் நிதானமாக அதை எடுத்து கடைக்கார பெண்ணிடம் தந்து, " எங்க வைக்கணுமோ அங்க வைச்சிடுங்க." என்க,


"ஸார், அப்ப இது வேண்டாமா?" எனப் பைரவி கேட்க வேண்டியதை சேல்ஸ் கேர்ள் கேட்க, 


"எஸ்… " என்றான். அவர் முணுமுணுத்தபடியே எடுத்து சென்று தொங்க விட்டார்.


" அதுல ஒன்னு கூடவா உங்களுக்குப் பிடிக்கல?" 


"ஆமா... எதுவுமே நல்லா இல்ல. " என்றவன் மாடலுக்காகத் தொங்க விட்டிருந்த சில புடவைகளை எடுக்கச் சொன்னான். அதுவும் லைட் வெயிட் தான். நல்ல கலர். அழகான டிசைன்.‌ ஆனால் அவள் எடுத்து வந்ததைக் குறை கூறி வைக்க சொன்னவனின் தேர்வை ஏற்க மனமில்லாது, 


"நல்லாவே இல்ல. கலரா இது. அழுக்குப் பிடிச்ச மாதிரி இருக்கு. " என்றாள். 


அவன் உடனே அதை பில் போடச் சொன்னது தான் அவளுக்கு அதிர்ச்சி. அது மட்டுமல்ல அவளுக்கான அனைத்தையும் அவன் தான் தேர்வு செய்வான். அவன் விருப்பப்படி தான் இருக்க வேண்டும் என்பான். 


"இது கொஞ்சம் கூட சரியில்லை. நான் கேக்குற எதையுமே காதுல வாங்காமா, எக்ஸ்ட்ராடினரியா பண்றேன்னு சொல்லி ‌இந்தச் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல வர்ற பிரகாஷ்ராஜ் மாதிரி நடந்துக்கிறீங்க." என்றாள் பையூ.


"நிஜமாவா... அது நல்லது தான. உனக்கு எப்பயுமே‌ பெஸ்ட்டான ஒன்னு தான் கிடைக்கணும். பிகாஸ் நீ என்னோட வைஃப். எல்லா விதத்துலயும் நீ பர்பெக்கட்டா இருக்கணும்." என்றவன் அவன் இஷ்டத்திற்கு அவளை வளைக்க முயன்று தோற்று போனான் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் வீம்பாக அவள் விருப்பமின்றி எடுத்த எதையும் அவள் அணிய மாட்டாள். மூளை சேர்த்து விடுவாள். 


இப்போது புன்னகையுடன் அந்தப் புடவையை அணிந்து கொண்டவள் கை நிறைய வளையல்களை அள்ளி போட்டுக் கொண்டு, கண்டு கொள்ளாத கணவனை எண்ணி அலங்காரங்கள் செய்ய தொடங்கினாள். அணிந்திருந்த காதணியைக் கலட்டியவள், கபோர்டை திறந்தாள். 


கபோர் நிறைய காதணிகள். ஒவ்வொரு சண்டை நிகழும் போது சமாதானம் செய்ய இதைத் தான் வாங்கி வருவான். வெறும் நான்கே ஆண்டுகளில் கபோர்டே நிறைந்து விட்டது என்றால் எத்தனை சண்டை போட்டிருக்கிறோம். என்று தோன்ற, ஒவ்வொன்றாக எடுத்து ஆசையுடன் வருடி பார்த்தாள் பைரவி. 


"இது போன வர்ஷம் எங்க வெண்டிங் அன்வசரிய மறந்திட்டான்னு அவெங்கூட சண்ட போட்டதுக்கு சமாதானமா வாங்கி தந்தான். இது என்னைத் தனியா வீட்டுலயே விட்டுட்டு மூணு நாள் எவனுக்கோ பாடிகார்ட்டா போனப்ப வந்த சண்டைக்கு கிடைச்சது. இது... " என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை பேசியது. 


கபோர்டின் ஓரத்தில் ஒரு உடைந்த ஹெட்செட் கிடந்தது. குளிர்காலத்தில் காதுகளில் மாட்டி கொள்வோமே இயர் மாஃப். அது போன்று காதுகளுக்கு இதமான பஞ்சு கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு காதுகளில் வைக்க வேண்டிய பஞ்சுகளையும் இணைக்க ஒரு பட்டையான ரீத் இருக்கும். அது இரண்டு துண்டுகளாக உடைந்து இருந்தது. உடைத்தது மதுசூதனன் தான். 


ஏனோ அதை உடைக்கும் போது இருந்த கோபமும் ஆத்திரமும் இப்போது இல்ல. அது மதுவின் காதலாகவும் உரிமையுணர்வாகவும் தெரிந்தது அவளுக்கு. 


மதுவின் காரில் எஃப்எம் ஆடியோ ப்ளேயர் வசதி உண்டு. ஆனால் அதை அவன் உபயோகித்தது இல்லை. கவனம் வாகனத்திலும் சாலையிலும் இருக்க வேண்டும். அதை ஒலித்தால் தன் மனநிலையை அது டிஸ்டப் செய்யும் என யாரையும் ஆன் செய்ய விட்டது இல்லை. 


அமைதியோ அமைதி... அமைதிக்கெல்லாம் அமைதி... என எப்பொழுதும் இரைச்சல் இல்லாத சத்தமில்லாத அமைதியானத் தனிமையை விரும்புபவன் அவன்‌‌. அவனை அப்படியே இருக்க விட வில்லை அவனின் மனைவி என்பது தான் உண்மை. 


காரில் ஏறி அமர்ந்தால் அவள் கைத் தான பாடலை ஒலிக்க விடும். அவனும் முறைத்து கொண்டே ஆஃப் செய்வான். அவளும் அவனை முறைத்து கொண்டே ஆன் செய்ய,


" பைரவி நோ... எனக்கு சாங் கேட்டுட்டே டிரைவ் பண்ண பிடிக்காது. சோ ஆன் பண்ணாத." என அழுத்தமாக சொன்னான்.


"ஆனா எனக்குப் பிடிக்குமே. சும்மா எப்படி ரோட்ட மட்டுமே வேடிக்கை ‌ பாத்திட்டு வர்றது. சவுன்டு வேணும்னா கம்மி பண்ணிக்கிறேன்." எனச் சிறிய குரலில் சொன்னவள் ஆன் செய்ய, அதை ஆஃப் செய்யவில்லை அவன். மாறாக…


' நீ பாட்டு கேக்குற வா நான் கார ஓட்ட மாட்டேன். கேட்டு முடிச்சிட்டு சொல்லு. அப்றம் போலாம்.' என்பது போல் காரை விட்டு இறங்கி வெளியே நின்று கொள்வான். 


பைரவியும் வேறு வழியில்லாது, " நான் ப்ளேயர ஆன் பண்ணல. வந்து கார எடுங்க." என்பாள் முகத்தை உம்மென வைத்துக் கொண்டு. 


டிரைவிங்கில் இருக்கும் போது அவனும் பேச மாட்டான். அவளையும் பேச விட மாட்டான். சரி உறங்கவாது செய்யலாம் என்றால் அவ்வ போது அவளின் கன்னம் தட்டி "தூங்காத டி. பக்கத்துல உக்காந்து நீ தூங்குனா எனக்கும்த் தூக்கம் வரும். அப்றம் கார யாரு ஓட்றது." என்பான். 


'என்னடா இது இப்படியும் விட மாட்டேங்கிறான் அப்படியும் விட மாட்டேங்கிறான்..' என நினைத்தவள் பொருத்து பொருத்துப் பார்த்து ஒரு ஹெட்செட்டை வாங்கி கொண்டு அமைதியாக அவனைத் தொந்தரவு செய்யாது பாடல் கேட்க தொடங்க, அதுவும் அவனைக் கடுப்பேற்றியது.


தான் அருகில் இருக்கும் போது தன் மனைவி தன்னைக் கவனியாது பாடல் கேட்பதா! என அதை உடைத்து எறிந்து விட்டான்.  


'அடப்பாவி.. அத ஏண்டா போட்டு உடச்ச..‌' எனப் பைரவி அவனுடன் மல்லுக்கு நிற்க, அவன் எதுவும் பேசாது செல்ல, சண்டையாகிப் ‌போனது. 


இவர்கள் இருவருக்கும் சண்டை போட்டுக் கொள்ள காரணங்களே தேவையில்லை. ஆகாத மருமகள் கைப் பட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம். அது போல் தான். இங்கு இருவருமே மருமகள் தான்‌. அதனால் சண்டைக்கு மட்டும் சன்டே கிடையாது.


அப்படி வரும் சண்டைகளில் அவள் மட்டும் தான் காட்டு கத்தலாக கத்துவாள். மது வாயைத் திறக்க மாட்டானே. காதையும் தான். காதால் கேட்டால் தானே பதில் சொல்ல முடியும். எனவே மனைவி கோபமாக இருந்தால் ஐம்புலன்களையும் அடக்கி கொண்டு அவன் அமைதி காக்க, அவள் தான் இந்த மலை மழுங்கியிடம் பேசி பேசி டயர்டாகி பேசாது இரு நாட்கள் இருப்பாள்.


வீடே நிசப்தமாக இருக்கும் அப்படி அவள் பேசாது இருக்கும் நாட்களில். கணவன் வந்தால் உணவை எடுத்து வைத்து விட்டு கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அவனைத் தவிர மற்ற அனைத்தையும் பார்ப்பதும்‌. தேவைக்கு மட்டும், அதாவது என்ன என்றால் என்ன என்று மற்றும் கேட்டு விட்டு, டிவி முன் அமர்ந்து கொள்வாள்.


அவளுக்கு சோஃபாவில் கால் மடக்கி அமர்ந்து தான் பழக்கம். ஆனால் மது கால்களைத் தொங்க விட்டு தான் அமர வேண்டும் சோஃபாவை சோஃபாவாக மட்டும் தான் பார்க்க வேண்டும் கட்டிலாக மாற்ற கூடாது எனப் பாடம் நடத்துவான். எதற்கு வம்பு எனத் தரையில் அமர்ந்து கொள்வாள்.  


இரவில் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்வாள். குறைந்த பட்சம் இரு நாள். கூடுதலாக ஒரு வாரம் வரை அவனுடன் பேசாது, அவனின் தேவைகளை மட்டுமே கவனிப்பாள். அது மதுவிற்கு ஒரு வித நிம்மதியை தந்தது. தொனதொன எனக் காதருகே வண்டாய் அவளின் குரல் ரீங்காரம் இடாமல் இருக்கும். 


ஆனால் அவள் அருகில் இருந்தும் கிடைக்கும் நிம்மதியை அவனால் ஏற்க தான் இயலாது. அவள் சத்தமிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இவன் அவளை முறைத்துக் கொண்டே இருக்க வேண்டும். விலகி மட்டும் சென்று விட கூடாது. 


எனவே யாரின் மீது தப்பு உள்ளது என்பதை ஆராயாது அவனே சமாதான முயற்சியில் முதல் படி எடுத்து வைப்பான். அவளைச் சரி செய்ய இயர் ரிங்ஸ் போதுமே. தங்கத்தில் புது மாடல் காதணியை வாங்கி வந்து அவளின் காதில் தானே அணிவித்து அந்த மடலை ஆசையுடன் வருடி முத்தமிட்டு கொஞ்சும் போது மதுவின் அன்பு தீயில் பைரவியின்‌ கோபம் பனியாகிப்போகும். 


சண்டை போடுவதில் ஈகோ இருக்கோ இல்லையோ சமாதானம் செய்வதில் மட்டும் பைரவியிடம் மது ஈகோ பார்க்க மாட்டான். அப்படிப் பார்த்ததால் வந்த பிரிவு தான் இது. சின்ன மனஸ்தாபம். அதை மதுவிடம் அவள் பேசி தெளிவு படுத்தி இருப்பாள். ஆனால் அவளின் குரல் கேட்பதற்குள் சில வேண்டாத பேச்சு மதுவின் காதைச் சென்றடைந்து அவனின் கோபம் ஈகோ ஆணவம் கர்வம் திமிர் என எல்லாவற்றையும் தூண்டி விட்டு சென்றது. 


பிரியும் முடிவு தன் கணவனுடையது அல்ல. எனவே அதை நான் ஏற்க மாட்டேன். என்னை வெறுத்து நீயும் உன்னை வெறுத்து நானும் செல்லும் வரை தொடர்வேன் நிழல் போல என நினைத்தவள், வேகமாக சென்று ஒரு புதிய சிம்மை வாங்கி வந்தாள். 


டிஸ்யூ பேப்பரில் சிவப்பு நிற nail polish மற்றும் சில மேக்கப் பொருட்களைக் கொண்டு, கையில் வெட்டு பட்டது போல் தத்துரூபமாக வரைந்து, அதைப் புகைப்படம் எடுத்து தன் கணவனுக்கு அனுப்பி வைத்தாள் அவள். 


கூடவே… 'பெர்த் டேவும் டெத் டேவும் ஒரே டேவா எனக்கு இருக்க போகுது. ' என டயிப் செய்து மதுவிற்கு மட்டுமல்லாது ராக்கிக்கும் சேர்ந்தே அனுப்பியிருந்தாள்.. 


"குரலா கேட்டா தான கட் பண்ற. இப்ப என்ன பண்றன்னு நானும் பாக்குறேன். உள்ளூர்லயே இருந்திட்டு வெளியூர் போனதா ராக்கி பாய விட்டு பொய் சொல்ல சொல்ற அளவுக்குத் தயிர் சாதத்துக்குப் புத்தி வளந்திடுச்சி. வெட்டுறேன். தேவையில்லாம வளந்த அந்த மூளைய நானே வெட்டுறேன். இன்னைக்கி உன்னை பாக்கணும்னு நான் முடிவு பண்ணிட்டேன். சோ, பாத்தே தீருவேன். எப்பயும் நீ எனக்கு தர்ற என்னோட பர்த் டே கிஃப்ட்ட வாங்கியே தீருவேன். " எனத் திட்டம் போட,அது பழித்ததா என்று பார்க்கலாம்…


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...