முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 27

 

அத்தியாயம்: 27



"ண்ணா, என்ன சொல்ற!" என அதிர்ந்து பார்த்தாள் தாமரை.


அங்கு ஆபத்து என்று சொல்லும் போதும் செல் என்கிறானே! ஏன்? என்ற கேள்விகளுடன் தமயனை நோக்க,


" நீ சொல்றத வைச்சி பாக்கும் போது உன்னக் கடத்தச் சொல்லி யாரோ சொல்லிருக்கனும் தோணுது. அன்னைக்கே வேலாயுதம் உன்னப் பாத்து, கை நீட்டி சொல்லும் போதே எனக்கு ஒரு டவுட்டு இருந்தது. இனிமே தான் எதாவது செய்யப் போறானுங்கன்னு நினைச்சேன். ஆனா செஞ்சதுனால தான் அந்தத் தெனாவட்டா பேசிருக்கானோன்னு இப்ப தோணுது." என்றவன் வந்த அத்தனை கோபத்தையும் அடக்கி வைத்து சாதாரணமாகப் பேச முயன்றான். 


அவனுக்கும் பயம் வராமல் இல்லை. சுடரின் நிலையில் தாமரையை வைத்து பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லை. ஆனால் தங்களை போன்றேரின் பயம் தான் தவறு செய்யும் பலரின் மூலதனமாக மாறி, அந்தப் பயத்தை காட்டியே எதிர்க்க முடியாத அடி மட்ட நிலையிலேயே வைத்திருக்கின்றனர் என்று தோன்ற, பயத்தை‌க் காட்டாது தைரியமாக எதிர் கொள்ள முடிவு செய்து தங்கையைச் செல் என்கிறான்.


"அப்ப பெரிப்பாக்கு என்னைக் கடத்த சொன்னது யாருன்னு தெரியும்னா சொல்ற?" என்ற தாமரையின் கண்களில் அத்தனை பயம். 


"இருக்கலாம். இல்லன்னா உன்னக் காப்பாத்துனவங்க சொன்ன மாதிரி போதைல நீ‌ யாரு என்னன்னு தெரியாம கூட தூக்கிருக்கலாம். அப்படிப் பண்ணிருந்தாங்கன்னா அவனுங்களுக்கு உன்னோட முகம் கூட ஞாபகம் இருக்காது. போதைல தனியா வர்ற அடுத்தப் பொண்ணுங்களப் தேடி போயிருப்பானுங்க. 


அதுமட்டுமில்லாம இனி உன்ன நான் தனியா எங்கயும் அனுப்ப போறதும்‌ கிடையாது. உங்கூடவே தான் தங்க போறேன். அண்ணே துணைக்கு நிக்கிறப்ப, யாரு வருவா எங்க வீட்டு லெட்சுமிய தூக்க." எனச் சமாதானம் செய்தான் பாண்டி. 


சரியான காரணம் தெரியாது, 'இப்படி இருக்குமோ! அப்படி இருக்குமோ!' எனப் பயந்து தினம் தினம் சாவதை விட, எதுவாக இருந்தாலும் துணிந்து பார்த்து ஒரே நாளில் செத்து விடலாம்.' என்கிறான் பாண்டி. இன்னும் தங்கையின் முகம் தெளியாமல் இருக்க,


" சுடர் அடிக்கடி ஒன்னு சொல்லுவா. இந்த உலகத்துல காரணம் இல்லாம எதுவுமே நடக்காது. எது அந்தக் காரணம்னு சரியா கண்டுபிடிக்கிற வர தைரியமா இருக்கணும். எதையும் யோசிக்காம முன்னெச்சரிக்கை இல்லாம குருட்டு நம்பிக்கையோட எதையும் செய்ய கூடாது ன்னு சொல்லுவா. 


உன்னக் கடத்துனது யாருன்னு எதுக்கு கடத்துனானுங்கன்னு கண்டு பிடிச்சி அந்த காரணத்த நாம கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். அண்ணன நம்புனா கிளம்பு." என்க, தாமரை புன்னகையுடன் சரி எனத் தலையசைத்தாள்.


"என்னலே அண்ணனும் தங்கச்சியுமா நின்னு படம் ஓட்டீட்டு இருக்கீங்க. எங்கயோ போவனும்னு சாப்பாட்ட பொட்டலம் கட்ட சொன்ன. இப்ப நின்னு சாவகாசம் பேசிட்டு இருங்க. அப்ப எங்கயும் போவலயா. நல்லது தான். ரெண்டு பேரும் போய்ட்டா வீடே வெறிச்சோடி போய்டும்ன்னு நினச்சேன். போவலன்னா கிடங்க இங்கயே. " என்றபடி வந்தார் அரசி. 


" கிடக்குறதா… ம்மோய் ராப்பொழுதுக்கு பஸ்ஸு. டிக்கெட் வாங்கிருக்கேன் பாரு. சொகுசு பஸ்ஸு. படுத்து தூக்கிக்கிட்டே பட்டணம் போய் சேரப் போறோம். விடியும் போது எங்க விடியல் அங்க தான். " 


"என்னமோ போ பாண்டி. செல்விய விட்டுட்டு உடனேலாம் திரும்பி வந்திடாத. கூட ஒரு மாசம் அங்கேயே தங்கி ஹோம்ல வேல எதாவது கிடைக்குதான்னு பாரு. இங்கன நான் பாத்துக்கிறேன். செல்விய பத்திரமா பாத்துக்க ராசா. " என்றார் அரசி.


தாமரை, தாயின் சம்மதம் கிடைக்கவும் வேகமாக துணிகளை அள்ளி பைக்குள் தினிக்க, கண்ணாயிரம் அழைத்தார் தாமரையை.


" அம்மாடி செல்வி, பைரவி ஃபோன் பண்ணுச்சி. உங்கிட்ட எதுவோ பேசணுமாம். இதுல கடைசியாக 18 ன்னு முடியுற நம்பரு அந்த பிள்ளையோடது. பேசுத்தா. " என்றார் கண்ணாயிரம். 


'பைரவி அக்காவா!. அவங்க எதுக்கு  அப்பாக்கு ஃபோன் பண்ணாங்க. எப்படித் தெரிஞ்சது என்ன.' என யோசித்த படி ஃபோனை வாங்காது இருக்க, பாண்டி அவளின்  தலையில் கொட்டினான்.  வாங்கி கொண்டு டயல் செய்ய அது பிஸியாக இருந்தது.


"என்ன பகல் கனவா! ஆமா யாரு பைரவி?" 


"அது… மது அண்ணா சொன்னேன்ல. என்னைக் காப்பாத்துன ரெண்டு பேருல ஒருத்தர். அவரோட வைஃப்." என்றபோது அவர்கள் இருவரும் போட்டுக் கொண்டு சண்டை நினைவு வந்து அவளின் முகத்தை மலரச் செய்தது. 


"மறுபடியும் கனவா.." 


" இல்லன்னா. அவங்க ரெண்டு பேரும் சண்ட கோழிங்க கணக்கா சண்ட போட்டாங்க தெரியுமா. மது அண்ணா பாக்க ரொம்ப அமைதி. எங்கிட்ட பேசும் போது கூட மெதுவாகத்தான் பேசுனாங்க. ஆனா பொண்டாட்டிய பாத்ததும் எங்கிருந்து வந்ததுன்னே தெரியல, அப்படியே வேற ஆளா மாறிடுறாரு. நம்மூர்ல சாமியாடுவாங்கள்ல அந்த மாதிரி. வேப்பல இல்லாம ஆடித் தீத்திட்டாரு." எனச் சொல்லி சிரித்தாள்.


" நான் பைரவியக்காவ ஜன்னல் வழியா தான் பாத்தேன். ஆனா அவங்க என்னைப் பாக்கவே இல்ல. அப்றம் எப்படி என்னைத் தெரிஞ்சது. மது அண்ணா சொல்லிருப்பாறே." என யோசிக்கும் போதே ராக்கி தான் சொல்லியிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இதழாய்க் குளிர் பரப்பி விட்டுச் சென்றது அவளின் மனத்தில். கூடவே பயம் ஒன்றும் வந்தது.


பைரவி ஃபோன் காலை எடுக்காது போக, "ப்பா பைரவி யாரு? உங்க நம்பர் எப்படி அவங்களுக்கு கிடைச்சது? " எனக் கேள்வியைத் தந்தையிடம் கேட்டான் பாண்டி. 


" நம்ம சாரதா ஹோம்க்கு வரும்ப்பா. நிறைய தடவ பேசிருக்கேன். சாரதாம்மாக்கும் சுடருக்கும் அந்தப் பிள்ளைய ரொம்ப பிடிக்கும். நீங்களும் பாத்திருப்பீங்களே, சுடரோட கடைசி காரியத்தப்ப கூடவே இருந்து எல்லாத்தையும் பாத்துக்கிச்சே. ரெண்டு வர்ஷம் ஆச்சில்ல மறந்திருப்பிங்களா இருக்கும். " என்றார் அவர். 


" எதுக்கு கால் பண்ணாங்கன்னு கேட்டிகளாப்பா?" பாண்டி.


"கேக்கலயேப்பா. நம்ம செல்வியோட பரிச்ச விசயமா பேசிருந்தேன். அதுக்குத் தான் கூப்பிட்டிருக்கும்னு நினைக்கிறேன்." என்ற போது தாமரைக்கு ஒரு நிம்மதி. எங்கே அவளின் வீட்டில் அவள் இல்லாத சமயம் அவளின் கணவனுடன் இருந்ததை தவறாக சித்தரித்து சண்டை போட அழைத்தாளோ எனப் பயந்து விட்டாள் தாமரை. 


அவளுக்கு பைரவியை பிடித்திருந்தது. வாட்ச் மேன்னிடம் நின்று மதுவுடன் அழகாய் உரிமையாய், ஆடவனுடன் சண்டை போடும் போது  அவளின் செயலை ரசித்து பார்த்தாள் தாமரை. ஏனெனில் அவள் இதுவரை யாருடனும் சண்டை போட்டது இல்ல. எந்த ஆணுடனும் உரிமையாய்ப் பேசியது இல்லை.


உடன் பிறந்த அண்ணன் இருந்தாலும், ஒரு நாள், ஒரு பொழுது கூட சண்டையிட்டது இல்ல. அப்படிப் பாண்டியை உரிமையுடன் பெயர் சொல்லி நட்பாய் பழக ஆசை தான். ஆனால் அரசி, 'அதென்னடி ஆம்பளப்பையன பேர் சொல்லி கூப்பிடுறது. மரியாதயாக் கூப்பிடு. அவெங்கேட்டா அதை உடனே செஞ்சி குடுத்து பழகு. விட்டு குடுத்து போ. அது தான் பொம்பளக்கி நல்லது. எகித்து எகித்து பேச கூடாது.' என அதட்டினார் அவர். 


ஒரு முறை பாண்டி வீட்டிற்கு வந்தது தண்ணீர் கேட்க, " நீயே போய் மோந்து குடிண்ணா." என டீவியின் முன் அமர்ந்து கொண்டு சொல்ல,


" எப்ப பாரு டீவி டீவி. தண்ணி மோந்து குடுத்திட்டு உக்காந்து பாத்தா என்ன. அதே அழுகாச்சி சீரியல் தான. போய் மோந்திட்டு வா. " என ரிமோட்டைப் பிடுங்க,


"ஏன் மாத்துன எரும. ரொம்ப முக்கியமான ஷீனு. நீயும் வெட்டியா ஊர் சுத்திட்டு தான வர்ற. ஏதோ கலெக்டர் வேல பார்க்குறவெ கணக்கா ஆர்டர் போடுற. தண்ணியெல்லாம் குடுக்க முடியாது. நீ ரிமோட்ட தா. தா டா." என மல்லுக்கு நிற்க, அவனும் வம்பிழுக்க, அவள் திட்ட என இருவரின் குரலும் நான்கு தெரு தள்ளி கேட்டது. இது நடந்த போது தாமரைக்கு எட்டு வயது இருக்கும். 


அரசி ஆடி தீர்த்து விட்டாள். வீட்டில் ஆம்பளையாள் கேட்டால் உடனே அதை நிறைவேற்றி விட வேண்டுமாம். அது தான் நாம் உழைத்து கொண்டு வந்து தரும் ஆண்களுக்குக் கொடுக்கும் மரியாதையாம். 


அப்பா, அண்ணன் தவிர பிற ஆடவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள் தாமரை. ஏனெனில் அவள் எது செய்தாலும் குற்றம் சுமத்த ஒரு கூட்டத்தையே வேலாயுதம் உண்டாக்கி வைத்திருந்தார். 


அவரின் மருமகன் சரவணன், தாமரையின் பள்ளி தோழியின் அண்ணன். எதேச்சையாக சந்தையில் பார்க்க, நலம் விசாரித்தாள். உடனே அவரின் மருமகனை வளைத்து போட பார்ப்பதாகச் சொல்லி அப்பாவும் மகளும் வரிந்த கட்டிக் கொண்டு சண்டைக்கி வர, அரசி விளக்கமாற்றால் விலாசி தள்ளி விட்டார் தாமரையை. 


"அப்படி என்னடி கண்டவெங்கிட்ட பேச்சு வேண்டி கெடக்கு. எதுக்கு போனியோ அத மட்டும் பாத்துட்டு வரத் தெரியாது.. " என அடிக்க, தாமரை தன்னுள் நந்தையாய்ச் சுருங்கி கொண்டாள்.


தன் ஆசை பேச்சு கனவு என எதையும் யாரிடமும் வெளிக்காட்டாது முற்றும் துறந்த ஞானியாகத் தன்னை நினைத்து வாழ்ந்தாள். சுடர்விழியைப் பார்த்து தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை வந்தது. அதுவும் தனியாக. யாரின் கட்டுப்பாடு, தலையிடு எதுவும் இன்றி சுயேச்சையாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதைக் கூட அவள் யாரிடமும் பகிர்ந்தில்லை. 


ஒருமுறை சுடரிடம் ஏதோ சொல்லும் போது, ' எனக்கு டீச்சர் ஆகணும்க்கா..‌' என ஆசையுடன் சொன்ன தங்கையைப் பார்க்கும் போது வருத்தமாகிப் போனது பாண்டிக்கு. மற்ற பெண் பிள்ளைகளை போல் அலங்காரத்திற்கு ஏங்காது, இது தான் வேண்டும் ‌என்று அடம்பிடிக்காது,‌ சரி என்பதை தவிர எதுவும் பேசாத தங்கைக்காகச் சாராதாவிடம் பேசி இந்த வேலையை ஏற்பாடு செய்தான். என்ன தடை வந்தாலும் சரி, அவளை‌ச் சில காலம் சுதந்திரமாக பறக்க வைத்திட வேண்டும் என்பதில் பாண்டி உறுதியுடன் இருக்கிறான்.


" அண்ணா எனக்கு பயம்மா இருக்கு. ஒருவேளை என்னையும் மது அண்ணாவையும் சேந்து வச்சி பாத்ததுனால தப்பா‌ நினைச்சி சண்ட போட கூப்பிட்டிருப்பாங்களோன்னு.. " 


" உனக்கு பைத்தியம் தாங பிடிக்க போது. சும்மா கொட கண்டதையும் நினைக்காம." என்றவன் மீண்டும் பைரவிக்கு அழைக்கும் முன் பைரவியே அழைத்தாள். 


"சாரி அங்கிள் சின்ன வேலை வந்திடுச்சி அதாங எடுக்க முடியல. சாரி… நீங்க வீட்டுக்கு வந்துட்டிங்களா? தாமர இருக்காளா?" என்க,


"இருக்கா மேடம். நான் பாண்டிராஜன். தாமரையோட அண்ணே." என்றான் பாண்டி. சில பல நலம் விசாரிப்புகளுக்கு பின் தாமரையின் கைக்கு சென்றது ஃபோன். சிறு நடுக்கத்துடன் வாங்கினாள் அதை.


'தைரியமா பேசு. அழக்கூடாது.' என அறிவுரை சொல்லி கையில் தினித்தான். ஏனெனில் அவளிடம் யாராவது சத்தமாக குரல் உயர்த்தி விழி விரிய மிரட்டுவது விரல் நீட்டி பேசினால் அழ தொடங்கி விடுவாள் என்பதால்.


" ஹலோ.. " 


" ஹாய் லோட்டஸ். நல்லா இருக்கியா? நான் பைரவி. உன்னோட மது அண்ணனோட வைஃப்." என்க, தாமரை‌ மிரண்டு முழித்தாள்.


" ஹலோ… ஹலோ… தாமர இருக்கியா இல்லயா." 


"ம்... சொல்லுங்க லயன்ல தான் இருக்கேன்." 


" குட்… தாமர எனக்கு ஒரு உதவி வேணும்.. உன்ன கடத்துன கார அடையாளம் காட்டணும். ஞாபகம் இருக்கா?" எனக் கேட்க, அவளுக்கு எப்படித் தெரிந்தது எனக் கேட்டகாது. 


"இருக்கு. கார் மட்டுமில்ல அதுல இருந்த பத்து பேரோட முகமும் ஞாபகம் இருக்கு. ஒருத்தே பேரு சௌந்தர். அடுத்து ராகவன்னு கூப்பிட்டானுங்க." என வரிசையாக அவர்களின் பேரைச் சொல்லி என்ன பேசினார்கள் என்று கூறினாள். திடீரென நினைவு வந்தவளாக,


" இதெல்லாத்தையும் நீங்க எதுக்குக் கேக்குறிங்க? உங்களுக்கு எப்படி என்னைக் கடத்துனது தெரியும்?" என்க,


"ஏன்னா நான் ஒரு போலிஸ். கேஸ் பைஃல் ஆகிருக்கு. அதான் டீட்டெய்ல்ஸ் விசாரிக்கிறேன்." 


"என்ன கேஸ்ஸா! எம்பேரும் அதுல இருக்கா? கிட்னாப் கேஸ்ஸா?" எனத் தாமரை படபடக்க,


" கிட்னாப் கேஸ் இல்ல லோட்டஸ். வழிப்பறி கேஸ். குடுத்தது உன்னோட மது அண்ணெ. எங்கிட்ட அந்த கேஸ் வரல. ஆனாலும் நான் சிலருக்காக மும்மரமா இதக் கண்டு பிடிக்க பாக்குறேன்." என ராக்கிக்காகப் பேசியதை மறைமுகமாக சொல்ல, அதைப் புரிந்து கொள்ளதா தாமரை,


" அப்ப என்னை ஸ்டேஷன் கூப்பிட்டு போய் விசாரிப்பிங்களா! அக்யூஸ்ட் மாதிரி ஜீப்ல என்னை ஏத்திட்டு போவிங்களா! " எனச் சொல்லி அழ, 


"லோட்டஸ் கூல் டவுன். உன்னோட பேரு இதுல இன்வால் ஆகாமத்தா கம்பளைண்ட் பண்ணிருக்காரு. யாரு எதுக்குன்னு விசாரிக்கணும்ல. அதுக்குத் தான் கூப்பிட்டேன். ஒரு லீடு கிடைச்சது. பெட்ரோல் போட்ட பில். பங்குல பதிவான சீசிடீவி புட்டேஜ்ஜ வாங்கி வைச்சிருக்கோம். பட் எந்த காருன்னு கரெட்டா அடையாளம் காட்ட நீ வேணும். உன்ன முடிஞ்சா ஒரே ஒருக்குச் சென்னை வந்திட்டு போக முடியுமான்னு கேக்கத் தான் கால் பண்ணேன்." 


"அது… அது… " என இழுக்க, பாண்டி ஃபோனை வாங்கி பைரவியிடம் பேசினான்.


"உங்களால இதச் செஞ்சவிங்கள கண்டுபிடிக்க முடியுமா?" 


" கண்டுபிடிக்கிறது ஈசி பாண்டி. தண்டன வாங்கி தர்றது தான் கஷ்டம். உங்க தங்கச்சிய ப்ளான் பண்ணி கடத்திருந்தா, ஏன் எதுக்குன்னு கண்டுபிடிச்சி அவனுங்க கிட்ட இருந்து தாமரையா காப்பாத்தணும்.


போதைல கடத்திருந்தா, மத்தப் பொண்ணுங்க அவனுங்க கைல சிக்காம இருக்க அவனுங்கள கண்டுபிடிக்கணும். காரணம் எதுவாக வேணும்னாலும் இருந்திட்டு போட்டும். செஞ்சவன கண்டு பிடிக்கணும். பலரோட நல்லதுக்காக. ஏன்னா அது போத பொருள் கடத்துற கும்பல். " என்றாள் பைரவி.


அவள்‌ கூறுவது சரி எனப் பட, பாண்டி தாமரையின் வேலையைப் பற்றி கூறி சாராதா ஹோமில் சந்திப்பதாகக் கூறி வைத்தான்.


யார் செய்தது என்று நமக்கு தெரியும். ஏன் என்ற காரணம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.‌


ஆமாம் இதை எதற்கு பைரவி தீவிரமா விசாரிக்கிறாள்!!


\தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


பனி 26


பனி 28

கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...