அத்தியாயம்: 28
Crime-Branch Crime Investigation Department (குற்றப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு துறை) பெரிய எழுத்துக்கள் அந்த பலகையை நிறைத்து இருந்தன. அதன் வளாகத்தில் தன் சாப்பரை லேன்ட்டிங் செய்தாள் பைரவி.
" சாதா போலிஸ்ஸா இருக்குறத விட, ஸ்பெஷல் சாதாவான இந்த சிபிஐ போலிஸ் மாதிரி இருக்கணும். பணி சுமை எங்களக் காட்டிலும் கம்மி இங்க வேலை பாக்குறவங்களுக்கு.
இந்தத் தன்னம்பிக்கைக்கு ஒரு கத சொல்லுவாங்கல்ல, அதான் பத்தடில பொதஞ்சி கிடக்குற தங்கத்த, ஒருத்தெ மண்வெட்டிய எடுத்திட்டு வந்து, ஏழடி தோண்டிட்டு கிடக்கலங்கிற விரக்தில போய்டுவான். பின்னாடி வந்தவெ நவீன சாதனங்கள் யூஸ் பண்ணி மூணடி தோண்டுனதும் புதையல் கிடைச்சிடுச்சின்னு. அந்த கதைத் தான் சிஐடிக்கும் லோக்கல் போலிஸ்க்கும் இடைல இருக்குற வித்தியாசம்.
சும்மாவே பெஞ்ச தேச்சிட்டு, கேஸ்ல முக்கால்வாசிய சால் பண்ண லோக்கல் போலிஸ்ட்ட இருந்து எல்லா விசயத்தையும் வாங்கிட்டு, கால் வாசிய மட்டும் கண்டுபிடிச்சிட்டு, நாங்க தான்
கண்டுபிடிச்சோங்கிற மாதிரி பேரத் தட்டீட்டு போய்ட வேண்டியது. நமக்கும் அந்த மாதிரி பேரு வேணும்.. அடுத்த இலக்கு இங்க ஆஃபிஸ்ஸரா மாறுறது தான். " எனச் சபதம் ஏற்ற படி உள்ளே சென்றாள் அவள்.
மிகவும் முக்கியமான சில வழக்கு விசாரனைகள் மட்டும் தான் சிஐடியிடம் ஒப்படைக்க படும். சிஐடிகளுக்கு எனத் தனி மதிப்பு உண்டு. அதை தான் குறிப்பிட்டு புலம்பினாள் பைரவி. இப்போது அவள் இங்கே வர காரணம் சுடர்விழியின் வழக்கை தற்போது சிஐடி போலிஸ் தான் விசாரித்துக் கொண்டிருக்கிறது.
உள்ளே பலர் தங்களின் பணிகளை பிஸியாக செய்து கொண்டிருக்க, பைரவி, பிரவீனின் முன் வந்து அமர்ந்தாள். அவன் தான் மோகனாவின் கணவன். அவளின் குரு. பயிற்சி ஆசான். தன் அனுபவங்களைக் கூறி நேர்முக தேர்வுக்கு அவளைத் தயாரா செய்தவன்.
சொல்லப்போனால் மோகனாவிற்காக அவள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த ஆடவன் தான் பிரவீன். எந்த வகையிலும் மதுசூதனனைப் போல் இல்லாது இருக்க வேண்டும் என்று பிரவீனிடம் நன்கு தோழமையுடன் பழகி அவனின் குணங்களை அறிந்த பின் சிதம்பரத்திடம் சென்று பேசினாள் பைரவி.
மதுவும் பிரவீனை விசாரிக்க, அவனின் குடும்பம் முதல் அவன் வரை அனைவரையும் பிடித்து போனதால் சிதம்பரம் தன் மகளைப் பிரவீனுக்கு தாரைவார்ந்து கொடுத்தார். இதில் மகிழ்ச்சி கொள்ளாத இரு ஜீவன்கள் என்றால் அது யார் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
மகளுக்கு நல்ல முறையில் திருமணம் நடந்தது சந்தோஷம் தான். ஆனால் பைரவியின் பேச்சை கேட்டு சிதம்பரமும் மதுசூதனன்னும் முடிவு எடுத்தது அவர்களுக்கு ஆத்திரத்தை வரவைத்தது. அதற்குப் பழி தீர்க்க பட்டாள் பைரவி. எப்படி என்று பின்னர் பார்க்கலாம்.
"குட் மார்னிங் அண்ணா... எனி இம்ப்ரூமென்ட்." எனப் புன்னகையுடன் கேட்டவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான் அவன்.
" காலைல எந்திரிச்சதும் நீ பண்ற முதல் வேலை 'எனி இம்ப்ரூமெண்ட்..' கிறத எனக்கு மெஸ்ஏஜ்ஜா அனுப்புறது தான். நைட் தூங்கும் போதும் அதே மெஸ்ஏஜ். அப்றம் ஸ்கூல் டூடெண்ட் பாக்குற இடத்துலெல்லாம் டீச்சர்க்குக் காலை வணக்கம் வைக்கிற மாதிரி நீ என்னைப் பாக்குற நேரமெல்லாம் எனி இம்ப்ரூவ்மெண்ட் இருக்கான்னு கேட்டு கேட்டு என்னை டென்சன் பண்ற."
"இதெல்லாம் டென்ஷனா!. இது உங்க கடமை. கடமைய செய்றதுக்கு நல்ல நாள் நேரம் பாக்க கூடாது. சொல்லுங்க எதாவது தெரிஞ்சதா. "
" ம்ச்... ஏம்மா உனக்கு இந்த வேண்டாத வேல. இது மாதிரி நீ பண்றதால தான் உனக்கு மதுக்கும் சண்ட பெரிசாச்சி. அத்தோட விவாகரத்து வர கொண்டு வந்து விட்டுடுச்சி. இருந்தும் நீ மறுபடியும் மறுபடியும் வந்து கேட்டுட்டே இருக்கிறதுல நியாயமா!" என்றான் அந்த காவல் அதிகாரி.
" எனக்கானப் பதில் கிடைக்கிற வர நான் கேள்வி கேட்டுட்டே தான் இருப்பேன். இன்னைக்காது எதாவது கிடைச்சதா." என அதே கேள்வியைக் கேட்க, பிரவீன் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டான்.
"உங்க டிப்பார்ட்மெண்டால இத முடிக்க முடியலன்னா சிபிஐக்கு ரெக்கமெண்ட் பண்ணுங்க. ஆறு மாசமா நீங்களும் டிசைன் டிசைனா விசாரிக்கிறீங்க. ஆனா ஒரு இன்ச் கூட முன்னேற்றம் வர மாட்டேங்கிதே. ஏன்… "
"ஏன்னா அந்தப் பொண்ணுக்கு நிறைய பேர் கொல மிரட்டல் வந்திருக்கு. ஏன் எங்க டிப்பார்ட்மெண்ட் சிகாமணிக்கும் அந்தப் பொண்ணு கூட வாய்க்கா தகராறு இருந்திருக்கும் போல. போற இடத்துல பாக்குற மனுஷங்க எல்லாத்துக்கூடயும் பிரச்சன பண்ணிருக்கு அந்தப் பொண்ணு. அந்த கேஸ்ஸ போய் தினமும் கேட்டுட்டு." என அலட்சியமாக பிரவீன் பேச, பைரவிக்குக் கோபம் வந்து விட்டது.
" உங்களுக்குக் கூடப் பிறந்தவங்க யாரும் இருக்காங்களா ப்ரவீன் அண்ணா?" எனக் கேட்க,
"ஏன் பைரவி கேக்குற. உனக்குத் தான் தெரியுமே எனக்கு ஒரு தம்பி மட்டும் தான்னு."
"நல்லவேளை உங்களுக்கு தங்கச்சி அக்கான்னு யாரும் இல்ல. இருந்திருந்தா சுடரோட மரணம் உங்களப் பாதிச்சிருக்கும். ஒரு பொண்ணோட கொடூர இறப்பால அவ குடும்பம் படுற வலியும், வேதனையும் தெரிஞ்சிருக்கும். அது புரியாத உங்க கிட்ட இனி பேசி பிரயோசனம் இல்ல. அடுத்த மாசம் அந்த கேஸ்ஸ சிபிஐ கிட்ட ஒப்படைக்க சொல்லி போராட்டம் நடக்க போது. சென்டர் கவர்மென்ட் போலிஸ் கண்டு பிடிச்சா அது ஸ்டேட் கவர்மென்ட்டு போலிஸ்க்கு பெரிய அவமானம். இனி நான் இங்க வந்து உங்கள டிஸ்டப் பண்ண மாட்டேன். " என உறுதியாக சொல்லி விட்டு எழ,
"உடனே உடனே கோயிச்சிக்கிவ. இந்தா." என மஞ்சள் நிற கோப்புகளை எடுத்து பைரவியின் முன் வைத்தவன்.
"சுடரோட டெட் பாடி கிடைச்ச இடத்துல எந்த ஆதாரமும் கை ரேகையும் கிடையாது. செல் போன் சிக்னல வச்சி பாத்தப்போ கூட எதுவும் கிடைக்கல. எப்படி அங்க வந்தா? யாரு கொண்டு வந்து போட்டாங்கிறத கண்டுபிடிக்க முடியல. அந்த பொண்ணோட ஃபோன் இப்ப வரைக்கும் கிடைக்கல. சைபர் க்ரைம் போலிஸ் கடைசியா அது சுவிட்ச் ஆப் செய்த இடத்த கண்டுபிடிச்சிருக்கு. சுடரோட மெயில் ஐடிய ஹக் பண்ணி யார் யார்க்கிட்டலாம் பேசிருக்குங்கிற தகவலையும் எடுத்திருக்கு. பட் நோ யூஸ்.
காணாம போறதுக்கு முன்னாடி யாரெல்லாம் அந்தச் சுடர பாத்தாங்கன்னும் ஃபோன்ல பேசுனாங்கன்னும் லிஸ்ட் போட்டு வச்சி விசாரிச்சிட்டு இருக்கோம்.
சுடர் செய்ற சில சோசியல் சர்வீஸ்ஸால அவங்களுக்கு வந்த மிரட்டல் கால்ஸ்ஸ வச்சித்தான் இப்போதைக்கி என்கொரி பண்ணிட்டு இருக்கோம். போதுமா… வேற எதாவது கிடைச்சா கண்டிப்பா உங்கிட்ட அத சேர் பண்ணிப்பேன். ஓகே… சிரிம்மா… இப்படியே பாக்குறப்ப உம் புருஷெ மதுசூதனன பொம்பள கெட்டப்ல பாத்த மாதிரி இருக்கு." என முகத்தை உர் என வைத்திருந்த பைரவியை கேலி செய்தான்.
" அவ்ளோ அழகாவா இருக்கேன்."
"இல்ல அவ்வளவு கொடூரமா இருக்க." என்க, அவனை அங்கிருந்த கோப்புகளை கொண்டு அடித்தாள் பைரவி. அப்போது தான் அது வெளியே வந்து விழுந்தது.
போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட். சுடரின் மரணம் எதனால் நிகழ்ந்தது என்று மருத்துவர்கள் கூறிய காரணங்கள் அதில் அடுக்கப்பட்டிருந்தன.
எந்தப் பெண்ணிற்கும் இப்படி ஒரு நிலை வரவே கூடாது. ஒரு வாரம் சுடரை அடைத்து வைத்து டிரக்ஸ் கொடுத்து கணக்கில்லாம முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாள். ஒருவர் அல்ல. ஒன்றிற்கும் மேற்பட்டவர்கள் கூட்டாக சேர்ந்து அந்த கொடூரத்தை நிகழ்த்தி உள்ளனர். பல கத்தி குத்து. பல் தடங்கள். சிகரெட் சூடு. சில இடங்களில் அமிலங்கள் கூட ஊற்றப்பட்டுள்ளது. அந்த அரக்கர்கள் சுடரின் உடலைச் சின்னாபின்னமாக்கி உள்ளனர். தங்களை அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக உடலின் முக்கிய உறுப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன.
அதீத ரத்த போக்கும். அதீத வலி. மீண்டும் மீண்டும் போதை வஸ்துவை உட்கொள்ள செய்து வேட்டையாடியுள்ளனர். இனி தேற மாட்டாள் என்ற நிலையில் உடலைத் தூக்கிவந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
இதுவரை எந்த ஒரு துருப்பும் கிடைக்கவில்லை. இறந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையிலும் அந்த அரக்க கூட்டம் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருப்பது தான் வேதனையின் உச்சம். பல போராட்டங்களுக்குப் பிறகு தான் இந்த வழக்கு சிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆறு மாதங்கள் முடிந்து நிலையிலும் முன்னேற்றம் காணப்படாததால் சிபிஐயிடம் ஒப்படைக்க சொல்லி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
எத்தனை போராட்டம் நடத்தினாலும் மாண்டவள் மீண்டெல முடியாது. ஆனால் அதற்கு காரணமனவர்களைத் தண்டிக்க வேண்டும். அது தான் கண்ணாயிரம், பைரவி, சாரதா, பாண்டி போன்ற நல்லுள்ளங்களின் ஆசை.
பைரவி அந்தக் காகிதத்தை வெறித்து வெறித்து பார்ப்பதை உணர்ந்த பிரவீன் வேகமாக அதை எடுத்து கோப்புகளில் அடைத்து டிராவில் வைத்து பூட்டினான்.
" சுடரக்காவோட ஃபோன் கால் ஹிஸ்டரிய நான் பாக்கலாமா!"
"எதுக்கு?"
"கடைசியா யார் யார்கிட்ட பேசுனாங்கன்னு பாத்து விசாரிக்க போறேன். "
"நீயா!!!"
"நானும் போலிஸ் தான். என்னாலயும் இத விசாரிக்க முடியும்." என அவன் டிராவைத் திறக்க முயல.
"நோ… இத நாங்க பாத்துக்கிறோம். உன்னோட வேலை கிடையாது இது" என உறுதியாக மறுத்தவன்.
"எதையும் போட்டு குழப்பிக்காம கிளம்பு முதல்ல. சீக்கிரம் நாம கண்டுபிடிச்சிடலாம்." என்க, சோர்ந்த முகத்துடன் வெளியே வந்தாள் பைரவி.
தன் சாப்பரை எடுத்தவள் நேராக சென்ற இடம் பெட்ரோல் பங்க். தாமரையை யார் கடத்தியது என்ற கேள்விக்கான விடையை தேடி வந்துள்ளாள். தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதன் சிசீடிவி பதிவுகளை வாங்கி வந்தவள், அந்த பில்லில் இருந்து நேரத்தை வைத்து மூன்று கார்களின் உரிமையாளரை தன் விசாரனை வட்டத்திற்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளாள்.
தாமரைக் கடத்தப்பட்டதற்கும் சுடரின் மரணத்திற்கும் ஏதோ தொடர்பு உள்ளதாக தோன்றியது பைரவிக்கு. காரணம் அந்தப் போதை வஸ்து.
கிரிஸ்டல் மெத்... ராக்கி பாய் தந்தானே அதே கோலமாவு தான்.
தாமரையைக் கடத்தியவர்களிடம் கிடைத்த அதே வஸ்து தான் சுடரின் உடலில் அதிக அளவில் ஏற்றப்பட்டதாக ரிப்போர்ட்டில் உள்ளது. தாமரையைக் கடத்தியவர்கள் யார் எனக் கண்டு பிடித்தால் சுடரைக் கொன்றவனை நெருங்கலாம். அத்தோடு ஊருக்குள் நடமாடும் போதை கும்பலயும் கைது செய்து விடலாம் என்று தோன்றியது பைரவிக்கு.
கடந்த சில ஆண்டுகளாகத் தான் அந்த வஸ்துவின் பயன்பாடு அதிகரித்துள்ளது என்றால் இந்த மூன்றிற்கும் இடையே தொடர்பு இருக்க வேண்டும். மூன்றும் ஆயுதப்புள்ளியாய் ஒரே ஆளை குறிக்கிறது. யார் அது?
யார் போதை பொருள் கடத்துவது? ஏன் தாமரை கடத்தப்பட வேண்டும்? யார் சுடருக்கு அந்தக் கொடுபாதக செயலை செய்தது? அனைத்திற்குமான காரணங்களைக் கண்டுபிடிக்கும் வேகத்துடன் பைரவி களம் இறங்கினாள்.
_____________
"ஸார் நீங்க கேட்டது." என ஒரு ஃபைலை தீஷிதனின் முன் வைத்தான் அவனின் பீஏ சர்வேஷ்.
அதை ஆர்வமுடன் தீஷித் படிக்க போக,
சர்வேஷ், " ஸார்.." என இழுத்தான்.
அவனை நிமிர்ந்து தன் ஒற்றை புருவத்தை உயர்ந்தி பார்த்து “என்ன?” என வினவ,
"அது... ரெண்டு பேருக்குமே மேரேஜ் ஆகிடுச்சி. கல்யாணம் ஆன பொண்ணுங்களப் பத்திய பர்ஸ்னல் டீடெய்ல்ஸ்ஸ டிடெக்டிவ் வச்சி தெரிஞ்சிக்கிறது தப்பில்லையா ஸார்." என இழுத்தான்.
"அப்ப நீ இதப் படிச்சிப் பாத்திருக்க. என்னோட அனுமதி இல்லாம." எனக் காட்டமான குரலில் கேட்க, தலை குனிந்தான் அவன். முதலாளி அல்லவா.
"மிஸ்டர் சர்வேஷ், இந்த வேலய ரிசைன் பண்ணிட்டு ஏதாவது ஸ்கூல்ல டீச்சரா போய் பாடம் நடத்துறீங்களா! " என்க,
"ஸார்… "
"அதான் சரி எது தப்பெதுன்னு உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கே. அத அடுத்தவங்களுக்கு கத்துக் குடுக்க நினைக்கிற உங்க மனசுக்கு இந்த வேல லாயக்கு இல்ல. போய் ஜாயின் பண்ணி ஸ்டூடெண்டுக்கு கத்து குடுங்க." என்றான். அதில் 'உங்களோட வேலய மட்டும் பாரு.' என்ற பொருள் மறைந்திருப்பதை உணர்ந்து,
" ஸாரி ஸார்.. " என்றபடி வெளியே சென்றான் சர்வேஷ்.
முதலில் சாருவின் பெயரை தாங்கிய ஃபைல் இருந்தது. அதில் திருமணமானப் பத்தே நாளில் கணவன் விட்டு சென்றதைப் பற்றி இருக்க, சாருவிற்காக வருத்தப்பட்டான் தீஷித். அதைத் தவிர வேறு எதுவும் அவனுக்குத் தோன்றவில்லை.
பைரவியை மட்டும் தான் விசாரிக்க சொல்லியிருப்பான். ஆனால் அது நன்றாக இருக்காது என்பதால் இருவரையும் விசாரித்தான்.
அடுத்ததாக இருந்த பைரவியின் ஃபைலை பிரிக்கும் போது மனதில் ஓர் இதம். அவளின் பெயர் எழுதியிருந்த இடத்தை தன் விரல்களால் வருடும் போதும்.. 'I really miss you Tom girl. ' என இதழ்கள் தன்னால் முணுமுணுத்தன.
அவளின் புகைப்படத்தைச் சில வினாடிகள் ரசித்து பார்த்தவன் காகிதத்தில் உள்ளவற்றைப் படிக்க தொடங்கினான். அவளின் படிப்பு, இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலை என அனைத்தையும் ஆர்வமுடன் படித்தவன், கணவன் என்ற இடத்தில் இருந்த மதுசூதனனின் பெயரை கண்ட போது முகம் சிவக்க கோபம் தலைக்கேறுவதை உணர்ந்தான்.
வேகமாக ஒரு பேனாவை எடுத்தவன், பைரவி மதுசூதனன் என்ற பெயரின் பின் பகுதியான மதுவின் பெயரை தன்னால் முடிந்த மட்டும் அடித்து போனாவின் நீல நிறத்தால் இல்லாமல் ஆக்க முயன்றான். கூடவே மேரிடு என்று எழுதியிருந்த இடத்தை சிங்கிள் என மாற்றி எழுதிக் கொண்டான்..
'நீ எனக்கானவள். உன்னை யாருக்கும் விட்டு தர மாட்டேன்.' என்றது அவனின் மனம். அன்றிலிருந்து அவளைப் பின் தொடருகிறான். அவள் அறியாமல்.
இந்த வேலையை ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் செய்திருக்க வேண்டும். தவறு தான். அத்தவறை செய்யாது இருந்திருந்தால் இன்னேரம் பைரவி மதுசூதனனாக அவள் மாறி இருக்க மாட்டாள். இட் டூ லேட்..
இல்லை...
லேட் எல்லாம் இல்லை. தீஷித்க்கு ஒரு வாய்ப்பு உள்ளது. அதான் பைரவி இப்போது சிங்கிளே. கணவன் மனைவி முறைப்படி பிரிந்த பின் அவனுக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாகவே தோன்றுகிறது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..