முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 39


 

அத்தியாயம்: 39



செம்பட்டை பாய்ந்த சிகை. அதுவும் அடர்ந்து காடு போல் வளர்ந்து பரட்டையாகக் காட்சி அளித்தது. கிட்டத்தட்ட அது தலைக்கு மேல் கலர் கலர் ஹெல்மெட் மாட்டியது போல் இருந்தது. உடல் பருத்து சினிமா வில்லன்களை நினைவு படுத்துவது போல் ஒரு சிலர் இருந்தார்கள் என்றால், மீதி பேர் டிசன்டாக, டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு கலெக்டர் வேலைக்குச் செல்வது போல் தெரிந்தனர். 


பார்வைக்கு வேறு விதமாக தெரிந்தாலும் இருவரும் செய்யும் வேலை என்னவோ ஒன்று தான். ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருள் சப்ளே, எனக் கொலை செய்யும் கூலிப்படை.


அந்த வீடே இந்த கும்பல்களால் நிறைந்து வழிந்தது. அவர்களைக் கடந்து உள்ளே செல்வது என்பது நீருக்குப் பதிலாக புழுக்களை நிறைத்து அதில் நீராடுவதற்குச் சமமாக இருந்தது. அந்தக் குளத்தில் தான் ஓரமாக வாழ்கிறார் கோமதி.


தன் மகன் தன் கண்முன்னேயே இத்தனை கொடுமைகளைச் செய்து கொண்டிருக்க, அதைப் பார்த்துக் கொண்டு ஏன் உயிரோட இருக்க வேண்டும் என்ற கேள்வி நித்தமும் எழாமல் இல்லை. அப்பொழுதெல்லாம் ஆறுதலாக ஒரு கரம் வந்து விழும். அது அவரின் பேத்தியுடையது.


"பாட்டி பசிக்குது… " என வந்தாள் சிந்துஜா. 


"இதோ ம்மா… பாட்டி தட்டுல போட்டு எடுத்திட்டு வர்றேன். நான் வர்ற வர வேற எங்கயும் போக கூடாது. சரியா!. யாரு வந்து கதவ தட்டுனாலும் ஜன்னல் பக்கம் வரச் சொல்லி ஆள பாத்திட்டு தான் கதவ திறக்கணும். அப்பயும் ஜன்னல விட்டு தூரமாத்தா நிக்கணும். புரியுதா… என்னைத் தவிர வேற யாரையும் ரூம்க்குள்ள விடக்கூடாது." எனத் தன் பேத்திக்கு ஆயிரம் பத்திரங்கள் சொல்லி சென்றார் கோமதி. 


சிந்து, பத்து வயது பெதும்பை அவள். உலகம் அறியாச் சிறுமிக்கு இந்த வீடு மட்டும் தான் உலகம். ஷீலா தன் இளமையைக் குறைத்துக் காட்ட பிறந்தவள் என மகளை நெருங்குவதும் இல்லை. நெருங்க விடுவதும் இல்லை. விசாகன் அவ்வபோது காசு கொடுக்க என எட்டி பார்ப்பான். அவ்வளவே...‌ 


ஒரு முறை அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த போதை வஸ்துவை அறியாது உட்கொள்ள சிறுமியின் நரம்புகள் பாதிக்கப்பட்டு மூளை அதன் வளர்ச்சியை ஐந்து வயதுடன் நிறுத்திக் கொண்டது. ஆனால் உடல் நிறுத்தவில்லை. இப்போது உடல் பத்து வயதிற்கும் மீறிய வளர்ச்சியைக் காட்டினாலும் மனம் ஐந்து வயது குழந்தைதான். அவளைக் கோயிலுக்கு அழைத்து செல்வதைத் தவிர வெளியே எங்கும் அனுப்பாது தன் கைக்குள்ளேயே வைத்து வளர்க்கிறார் கோமதி.


விசாகனின் வேலையாட்கள், கூலியாட்களைக் காட்டிலும் அதிகம் கோமதியை பயம் கொள்ளச் செய்வது ஷீலாவின் தம்பி செந்திலுக்குத் தான். 


அக்கா மகள் என உரிமையுடன் பேசுகிறேன் என்ற பெயரில் அறியாப் பெண்ணின் கன்னம் கிள்ளுவதும், அத்துமீறுவதையும் கண்டு பயந்து விட்டார் கோமதி. மகனிடம் சொல்லியும் பலனில்லை. 


ஷீலா, "உங்க கண்ணுக்கு காமாலயா இருக்கும்." எனக் கண்டு கொள்வது இல்லை. அதனால் தன்னால் முடிந்த வரை பேத்திக்குத் துணையாக இருக்கிறார். 


அதை எதையும் உணராத சிந்துவோ தன் முத்து பற்கள் சிரிப்பைக் காட்டியபடி பாட்டி சொன்ன அனைத்தையும் மறந்து, கிடைத்தது விடுதலை என எண்ணி சந்தோசமாகச செந்திலை காணச் சென்றது. 


"மாமா, பாட்டி இல்ல. பசிக்கிதுன்னு சொன்னேனா சாப்பாடு எடுக்க போயிருக்காங்க. " எனச் சொல்லி அவனின் அருகில் அமர, அவளைத் தூக்கி தன் மடியில் வைத்து கொண்டவன் முழு போதையில் இருந்தான். 


"குட்டிம்மாக்கு என்ன வேணும். நானும் பசில தான் இருக்கேன்.. ரெண்டு பேரும் சேந்து சாப்பிடலாமா! " என வாய் குளறியபடி பிரியாணியை பொட்டலங்களைப் பிரித்து ஊட்ட, சிறுமிக்கு தான் என்ன நடக்கிறது என்பது புரியவே இல்லை. 


செந்திலின் அறையில் இருக்கும் வீடியோ கேமிற்கும், டிவிக்கும், ஃபோனிற்கும் ஆசைப்பட்டு அவனின் செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருந்தாள் சிறுமி.


விசாகன் வந்தான். வந்தவன் கோபமாக இருந்திருப்பான் போலும் தன் மனைவியின் தம்பியை ஓங்கி முதுகில் உதைத்தான். அவன் சிந்துவுடன் சேர்ந்து கீழே கவிழ்ந்தான். விசாகன் தொடர்ந்து செந்திலை அடிக்க, கோமதி சிந்துவை இழுத்துக் கொண்டு அவர்களின் அறைக்கு ஓடி பேத்தியைக் கண்டித்தார்.


நடப்பவற்றைப் பார்த்து அவரின் மனம் கொதித்தது. உடனே தன் மகளுக்கு அழைத்து நடந்ததைச் சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார்.


விசாகன் செந்திலை அடித்தற்குக் காரணம் மகளின் அவன் நடந்து கொண்ட முறைக்காக அல்ல என்பது மட்டும் நிச்சயம். வீட்டில் இருந்த அடியாட்கள் பலர் வந்து விசாகனைத் தடுத்து நிறுத்தி, செந்திலைக் காப்பாற்ற முயன்றனர். 


"எச்சக்கல நாயே.. உன்ன என்ன வேலை பாக்க சொன்னேன். அத விட்டுட்டு என்ன வேல பாத்து வச்சிருக்க.. *** உன்னக் கொஞ்ச நாள் அந்தச் சாமான விக்காதன்னு சொன்னேனா இல்லயா. உன்னால நான் மட்டுமில்ல சிராஜ் ஸாரும் மாட்டிருப்பாரு. ****... " எனச் சொல்லி அடிக்க, தன் தம்பி அடிவாங்குவதைப் பார்க்க முடியாத ஷீலா ஓடி வந்து தன் தம்பியைக் காத்தாள். 


"எதுக்குங்க என் தம்பிய அடிக்கிறீங்க. விடுங்க அவன. வலி தாங்க மாட்டான்.  செந்திலு… தம்பி செந்திலு. மாமா ஏதோ புத்தி கெட்டு போய் அடிச்சிட்டாரு. நான் சொல்லி வைக்கிறேன். நீ எதுவும் நினைச்சிக்காத. " எனச் சொல்லி தம்பியைத் தூக்கி சோஃபாவில் கிடத்தி, அடிபட்ட இடத்திற்கு மருந்திட்டாள். முழு போதையில் இருந்தவனுக்கோ அது தெளிய தொடங்கி இருந்தது. 


"மாமா, நீ சொன்ன எல்லாத்தையும் நாந்தா சரியாச் செஞ்சிட்டு தான இருக்கேன். அப்றம் ஏன் அடிக்கிற? " எனக் கேட்டான். விசாகன் இன்னும் ஆத்திரம் தீராது அவனை முறைத்தபடியே இருக்க, 


"அந்தக் கண்ணாயிரம் மகள கண்காணிக்க சொன்ன செஞ்சேன். அதக் கடத்த பக்காவா ப்ளான் போட்டு வச்சிருக்கேன் தெரியுமா? போன தடவ மாதிரி மிஸ் ஆக மாட்டா. இந்த முறை பக்காவா தூக்கிடலாம். ஆளு சும்மா தளதளன்னு இருக்கா. இருந்தாலும் அவ நம்ம சாமிக்குப் படைக்க வேண்டிய பிரசாதம். படைச்சதுக்கு அப்றம் நாம எடுத்துக்கலாம்னு இருந்தேன். 


இப்ப கூட அந்த ஜீம் பாய் பாடிகாட்ட மாட்டி விட ஒருத்தன செட் பண்ணி விட்டிருக்கேன். சிராஜ் ஸார் சொன்ன மாதிரி நான் செஞ்சேன்.‌ அவரு சொன்ன எல்லா வேலையும் முடிக்க போறோம். அப்றம் ஏன் கோபப்படுறா? இந்தா பிரியாணி சாப்பிடு." என பொட்டலத்தை நீட்ட, அதை வீசி எரிந்தவன், 


"டிரக் டீலிங் இப்போதைக்கி வேண்டாம்னு சொன்னேனா இல்லையா டா உன்ட்ட. அந்த போலிஸ்காரன் பொண்ணால கெடுபடி அதிகமாகிடுச்சி ஒரு ஆறு மாசத்துக்கு எந்தச் சரக்கும் இறக்காதன்னு சொன்னேன்ல. அப்றம் ஏன் சரக்க இறங்குன?" 


"பின்ன எப்படி அந்த ஜிம் பாடிய சிக்க வைக்கிறதாம்.‌ அதான் இறக்கினேன். சரி இறக்குறதுதா இறக்குரோம் கொஞ்சமா இல்லாம நிறைய இறக்கலாம்னு நினைச்சேன். தப்பா? " எனக் கேள்வி கேட்டவனை அடிக்க போக, தமக்கை வந்து உள்ளே நுழைந்து காத்தாள். 


"இன்னும் கொஞ்ச நாள்ள ஸார் சென்னைக்கு வர்றாரு. அவரு வர்றப்ப அந்தப் பொண்ணு நம்ம கைல இருக்கணும். புரியிதா... மத்த வேலையெல்லாம் விட்டுட்டு அத முதல்ல கவனி. அந்த பாடிகார்ட அப்பறம் பாத்துக்கலாம். கொஞ்ச நாளைக்கு இந்த கருமத்த விட்டு தள்ளி இரு." என்றுவிட்டு பொட்டலங்களை அள்ளிக் கொண்டு செல்ல, அடி வாங்கியதில் இறங்கிய போதையைச் சரி செய்ய பையில் இருந்து பொட்டலத்தை எடுத்தான். அதிலிருந்த வெள்ளை நிற பொடியை மூக்கில் வைத்து முகர்ந்தான். அது உச்சி மூளைக்குச் சென்றடைந்திருக்க வேண்டும். போதை, நாடி நரம்பெங்கும் பரவ, கண்கள் சொருகி அதை அனுபவித்த படி சோஃபாவில் சரிந்தான். 


இவர்கள் கையில் தாமரை சிக்கினால் அவளின் கதி. 


____________


"ஓகே… கூல் டவுன். கத்தாத செல்லம். உனக்கு தான் பீபி ஏறும். எனக்கு இல்ல. வந்திடுறேன்டா குட்டிம்மா. என் செல்லம்ல. தங்கம்ல… ம்... கொஞ்சம் டிராஃபிக்கா இருக்கு. சரியா ஒன் ஹவர்வ உம்முன்னாடி இருப்பேன். அதுவரைக்கும் சமத்தா ப்ரிஜ்ல இருக்குற ஜுஸ்ஸ எடுத்து குடுச்சிட்டு தெம்பா இருப்பிங்களாம். அப்றம் நாம ரெண்டு பேரும் மட்டும் மொட்ட மாடில உக்காந்து ஐஸ் கிரீம் சாப்பிடுவோமா. எனக்கு நீ ஊட்டு விடு. உனக்கு நான் ஊட்டுறேன். ஓகேவா செல்லம். உம்மா... " என அலைபேசிக்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தான்  தீஷிதன். 


"சீக்கிரம் வா மாவா... " எனப் பிஞ்சுக் குரல் ஒன்று சினுங்கியது. 


"இதோ வந்திட்டே இருக்கேன்டாம்மா. குட்டிக்கி என்ன வேணும். அப்படியே உன்னோட க்ரானிக்கும் என்ன வேணும்னு கேட்டு சொல்லு. டின்னர் நான் வாங்கிட்டு வர்றேன். சமைக்க வேண்டாம்." என்க, தன் மாமன் எதோ கேட்கிறான் என்று சொல்லி ஃபோனை தாயிடம் கொடுத்து விட்டு சென்றது அந்த குட்டி வாண்டு மமதி.


"அண்ணா எப்ப வருவ?" 


"இப்ப தான் உம்பொண்ணுக்கு விளக்கம் சொன்னேன். உனக்குமா. சரி விடு டின்னருக்கு என்ன ஆர்டர் பண்ண? "  எனக் கேட்டான்.


"எதுவும் வேண்டாம். வீட்டுலயே செஞ்சி சாப்பிடலாம். மமதிக்குக் கடை சாப்பாடு ஆகாது. " என்க, இருவரும் சேர்ந்து மெனுவைத் தயார் செய்தனர்.


"ஓகே… இது சமைக்க திங்ஸ் வாங்கிட்டு வாண்ணா. உனக்கு என்னென்ன வேணும்னு மெசேஜ் போட்டிருக்கேன். " என லிஸ்டை வாட்ஸ் அப் மூலமாக அனுப்ப,அந்த லிஸ்டை படித்துப் பார்த்தவன் ஷாக் ஆனான். 


"அக்ஷரா என்னதிது? ஒரு சூப்பர் மார்க்கெட்டையே எழுதி வச்சிருக்க. இங்கருந்து ஆட்டைய போட்டு பெங்களூர்ல இன்னோரு சூப்பர் மார்க்கெட் ஓப்பன் பண்ண போறியா! " எனக் கேலியாக கேட்டான்.


"போண்ணா. உனக்கு எப்பவுமே என்னைக் கிண்டல் பண்றதே வேலையாப் போச்சி. நாலு சாமான் தான். சீக்கிரம் வாங்கிட்டு வா. " என்று சொல்லி வைத்தான் தீஷித்தின் தங்கை அக்ஷரா. 


சூப்பர் மார்க்கெட் ஒன்றில் காரை நிறுத்தியவன் தங்கை‌ சொன்ன பொருளை எடுத்து ஒரு ட்ராலியில் போட்டுக் கொண்டே வந்தான். 


"பன்னீர்... பன்னீர் எங்கருக்கும்… " எனத் தேட, அவனுக்கு உதவ கடை ஊழியர்கள் முன் வந்தனர். பன்னீரை எடுத்து விட்டு அதை ட்ராலியில் போட, ட்ராலியைக் காணவில்லை. சக்கரங்கள் உருண்டு எங்கோ சென்று விட்டதா எனத் தேட, அவனின் டாம் கேர்ளும் ஒரு டிராலியை தள்ளிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தாள். 


அப்போது தான் கவனித்தான் பைரவி தள்ளிக் கொண்டு வந்த ட்ராலி ப்ரிஜிற்கு பக்கத்தில் இருந்தது. டார்லியை மாற்றி உருட்டி செல்கிறாள். கைகளை ஆட்டி ஆட்டி விழி விரிய சென்னையின் அருமை பெருமைகளைத் தாமரையிடம் எடுத்து விளக்கிக் கொண்டே நடந்தாள் பைரவி.


ஆனால், தாமரையின் கவனமோ பைரவியின் பேச்சில் முழுதாக இல்லாமல் அவ்வ போது வந்து வந்து சென்றது. தாமரை முகத்தில் சிறு பயம் இருந்தது போல் இருந்தது. ஏனெனில் பாண்டி அவளை 'தான் உடன் இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது.' எனக் கடுமையாக கூறியிருந்தான். அவனுக்குத் தெரியாது பைரவி அழைத்தாள் என்று வெளியே வந்தது தவறோ என்று தோன்றுவதால் அவளால் பைரவியின் பேச்சைக் காதில் வாங்க முடியவில்லை. 


"லேட்டஸ் என்னாச்சி?" என்க, அவள் பாண்டி கூறியதைச் சொல்லி கவலைப்பட,


" தாமரை இப்படி எல்லாத்துக்கும் பயம் பயம்ன்னு இருந்தேன்னா உன்னால சந்தோஷமா இருக்க முடியாது. உன்னோட பயம் நியாயம் தான். பட் அதுக்கு முக்கியத்துவம் குடுத்தா உன்னால சின்ன சின்ன சந்தோஷங்கள அனுபவிக்க முடியாது. நாம எச்சரிக்கையா இருப்போம்.


அதுக்காக எங்கயும் போகாம கூண்டுக்குள்ள இருக்க முடியாது. உன்ன பத்திரமா வீடு கொண்டு போய் சேக்கிறது என்னோட பொறுப்பு. பாண்டி அண்ணா கேட்டா நான் பேசிக்கிறேன். " என்றவள் பேச்சு மும்மரத்தில் அடுத்தவன் ட்ராலியைத் தள்ளி சென்று பில் போட்டாள். பில் அமௌண்டை கண்டவள் மயங்கி விழவில்லை அவ்வளவு தான். அத்தனை அதிர்ச்சி. 


" நான் வாங்குன நாலு காய்க்கும் அஞ்சாறு பழத்துக்கு ஆயிரக்கணக்குல பில்லு சொல்றிங்க. ஓட்ட மிஷின வச்சி ஏமாத்துறீங்களா." என என்னென்ன பொருளுக்குப் பில் போடப்பட்டது என கவனிக்காது கடையாட்களுடன் சண்டைக்கு நின்றாள். அவளைக் கடந்து ஒரு வல்லிய கரம் ஒன்று நீண்டு க்ரெடிட் கார்டை நீட்டியது. 


அப்போதும் அவளுக்கு டிராலி மாறியது தெரியாது. தன் பொருளுக்கு அவன் பணம் தருகிறான் என நினைத்து. 


" மிஸ்டர் தீஷித்!! நீங்க எதுக்கு ஸார் பணம் தர்றாங்க. நான் பே பண்ணிப்பேன். " என அவளின் கார்டை நீட்ட… கடையாள் தீஷித்தின் கார்டில் பில்லை சுரண்டி விட்டான். 


‘சரி பணம் அவெங்குடுத்திட்டான் நமக்கு லாபம் தான்.’ என நினைத்து கவரை வாங்க கை நீட்ட, இப்போதும் அதை‌த் தீஷித்தின் நீண்ட கரங்கள் வாங்கிக் கொண்டு பேசாமல் செல்வதைக் கண்ட பைரவி,


" Hello… excuse me... அது என்னோட திங்ஸ். நீங்க பாட்டுக்கு நான் வாங்குன பொருளுக்குக் காச குடுத்திட்டு கவர வாங்கிட்டு போறிங்க. ஹலோ... மேன்… உங்களத் தான்.. " எனக் கத்திக் கொண்டே சென்றவளை ஊழியர் அழைத்து வேறு ஒரு கவரை நீட்டினர். அப்பொழுது தான் புரிந்தது அவளுக்கு ட்ராலி மாறியது. 


இருந்தும் அவளுக்குத் தான் லாபம். அவள் வாங்கிய பொருளுக்கும் பணத்தை அவன் தந்து விட்டு சென்றானே. 


"மிஸ்டர் தீஷித்… தேங்க்ஸ்.. அண்டு ஸாரி... " எனச் செல்லும் அவனை பார்த்து கத்த, அவன் திரும்பி புன்னகையுடன் திரும்பி,


" ஸாரி தேவையில்ல. நெக்ஸ்ட் டயம் நாம மீட் பண்ணும் போது திருப்பி தந்திடு. ஏன்னா கடன் அன்பை முறிக்குமாம். " எனச் சொல்லி அடுத்த சந்திப்பிற்கு அடித்தளம் போட்டு விட்ட சந்தோஷத்தில் காரை ஓட்டி சென்றான் அவன்.


அவளிடம் மட்டும் பேசவும் நெருங்கவும் முடியாது ஒரு வித தவிப்பு வருவதை உணர முடிந்தது அவனால். இதயம் அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்காகத் தான் நான் துடித்து உன் உயிரை காப்பாற்றுகிறேன் என்று சொல்வது போல் இருந்தது அவனுக்கு. 


தூர நின்று ரசிக்கும் இவன். நெருக்கி பழக தயங்கும் இவன், எப்படி அவளிடம் காதலைச் சொல்லி… கன்வின்ஸ் செய்து… மதுவை மறக்க வைத்து... கல்யாணம்... அது நடக்குமா என்ன? 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...