அத்தியாயம்: 38
DOT sports academy…
இது தான் நம் மதுசூதனன் தொடங்கிய அகாடமி. இங்கு காலை ஆறு மணி தொடங்கி இரவு எட்டு மணி வரை இடைப்பட்ட (மத்திய வேளையைத் தவிர) பயிற்சி தரப்படும். அப்படி என்னென்ன விளையாட்டிற்கெல்லாம் பயிற்சி உள்ளது என்றால், கராத்தே, பேட்மிட்டன், கிரிக்கெட், செஸ், வில் அம்பு, துப்பாக்கி சுடுவது, மல்யுத்தம் போன்ற பல விளையாட்டுகள் உள்ளன.
அனைத்திலும் இளம் வயதினருக்கு அனுமதி தரும்போது யோசித்து தான் கொடுப்பான். பள்ளி மாணவிகளுக்கு உண்டு. விடுமுறை காலங்களில் சிறப்புப் பயிற்சி உண்டு. அடிக்கடி தங்களுக்குள்ளேயும் அவ்வபோது பிற அகாடமியுடனும் போட்டி நடைபெறும். பல வெற்றி கோப்பைகளும் சீல்டுகளும் வரிசையாக மதுவின் அறையில் இருக்கும்.
மாணவர்களைத் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுகளுக்கும் அழைத்து செல்வது வழக்கம். ஏன் மதுவே மல்யுத்ததில் தேசிய அளவிலான பதக்கங்களை வென்று குவித்தவன் தான். அதனால் தான் தன்னைப் போன்ற பலரை உருவாக்க இதைத் தொடங்கி உள்ளான்.
இந்த நான்கு ஆண்டுகளில் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்று கூகுளில் சர்ச் செய்ததும் வரும் முதல் பத்து அகாடமிக்களில் ஒன்றாக வளர்ந்திருந்தது.
நல்ல நண்பர்கள் மதுவிற்கு உண்டு. விரலும் நகமும் போல் அல்லாது, முஸ்தப்பா முஸ்தப்பா என தோளில் கைப் போட்டு குரூப் டான்ஸ் ஆடும் அளவுக்கு யாருடனும் பழகவில்லை என்றாலும், தன்னுடன் நட்பாகப் பழகுவர்களுக்கு உதவி செய்ய எந்த விதத்திலும் தயங்கியது இல்லை அவன். நிறைய மனிதர்களை அவனுக்காக எனச் சம்பாதித்து வைத்திருந்தான். அதிகம் பேசாது இருந்தாலும் மது கூறும் சில வார்த்தைகளுக்கு அவனின் நட்பு வட்டத்தில் மதிப்பு என்பது அதிகம்.
அவர்கள் தான் அகாடமியில் பயிற்சி தரும் கோட்ச்சாக உள்ளனர். அவர்களின் உதவியால் தான் அகாடமி வளர்ந்துள்ளது. கூடவே அவன் பாதுகாப்பிற்குச் செல்லும் பல பிரபலங்கள் வீஐபி வீட்டு பிள்ளைகள், மகளிர்கள் இங்கு தான் வருவர். வந்து ரன்னிங்க, பேட்மிட்டன், கிரிக்கெட் என விளையாடி புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு இலவச விளம்பரங்களை செய்ய, அகாடமி வளர்ந்து விட்டது.
காலை ஒன்பது மணி. அது தான் மது அகாடமிக்கு வரும் நேரம். இலகுவான நீல வண்ண டீசர்ட். அதற்கு மேட்சாக பார்மல் பேண்ட். தன் காரை விட்டு இறங்கி அணிந்திருந்த ப்ரேசர் என்ற மேலங்கியைக் கலட்டி கையில் வைத்துக் கொண்டு வேக நடையுடன் தன் அலுவலக அறை நோக்கி நடைபயின்றான்.
செல்லும் வழியில் பலர் அவனைப் பார்த்து காலை வணக்கங்களை வைத்தனர். அவர்களை ஏமாற்றாது புன்னகை பூத்த தன் இதழ்களைத் திறக்காது, தலையை மட்டும் அசைத்து அதை ஏற்றுக் கொண்டே நடந்தான் அவன்.
அவனை வரவேற்க என முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அவனின் அலுவலக வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். மதுவின் தோழியும் கூட. மதுவை பார்த்தும் வேகமாக அவனின் அருகில் வர,
" என்னாச்சி மிஸ்ஸ கீர்த்தனா. ஏன் பதட்டமா இருக்கிங்க? எனி ப்ராப்ளம். " எனக் கேட்க,
"எஸ் ப்ராப்ளம் தான். நான் நேத்து ஈவ்னிங்ல இருந்தே உனக்கு கால் பண்ணிட்டு இருக்கேன். பட் ரீச் ஆகல. மெயில் செக் பண்ணியா மது. " என்க, அவன் வேகமாகத் தன் மொபைலைப் பார்த்தான். அதில் அவர் அழைத்தற்கான குறுந்தகவல்கள் இருக்க, மெயில் பாக்ஸை ஓப்பன் செய்தான். புருவங்கள் நெறிய அதை மீண்டும் மீண்டும் படித்தான்.
" இதுக்கு தான் உன்ன காட்டாக்ட் பண்ண ட்ரெய் பண்ணேன். இன்னும் ஒரு வாரம் தான் டயம் இருக்கு அதுக்குள்ள நாம எதாவது பண்ணணும். இல்லன்னா அகாடாமியோட லைசன்ஸ்ஸ கேண்சல் பண்ணிடுவோம்னு மெயில் அனுப்பிருக்காங்க."
" வெய்?"
" லாஸ்ட் வீக் நம்ம அகாடமிக்கி இன்ஸ்பெக்ஷனுக்கு வந்திருந்தவங்களுக்கு நம்ம அகாடமில இருக்குற வசதி திரும்பிகரமானதா இல்லையாம். சோ, ஒன் வீக்ல அத சரி செய்ய சொல்லி வந்திருக்கு. இல்லன்னா உரிமத்த ரத்து பண்ற வேலைல இறங்கிடுவாங்க." என்றார் அவர். கீர்த்தனா அகாடமியின் சட்ட ஆலோசகர். மது, அகாடமியின் தரத்தை உயர்த்த விண்ணப்பித்திருந்த நிலையில், அதை நிராகரித்து, உரிமத்தைத் திரும்ப பெறப்போவதாக மிரட்டி வந்துள்ளது அந்த மின்னஞ்சல்.
"ஆனா… ஏன்... எல்லா பெஸிலிட்டியும் நாம தரமாத் தான செஞ்சி வச்சிருக்கோம். எப்படி லைசன்ஸ் கேன்சல் பண்ற அளவுக்கு போச்சி."
" எனக்குச் சரியா தெரியல மது. இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தவங்க கிட்ட யாரோ தப்பு தப்பா நம்ம அகாடமிய பத்தி சொல்லிருக்கணும். அதான் அவங்க இப்படி ஒரு மெயில் அனுப்பிருக்காங்க. கூடவே ஒரு புகார் ஒன்னு நம்ம அகாடமி மேல ரிஜிஸ்டர் ஆகிருக்கு. கேர்ள்ஸ்க்கு பாதுகாப்பான இடம் இது கிடையாதுன்னு.." என்க, அவரை மது உற்று பார்த்த படி சிரித்தான்.
" ரப்பிஸ்… யாரோ கண்ட படி உலறி வச்சிருக்காங்க." எனச் சொல்லிச் சிரித்தான்.
" எதுவா வேண்ணாலும் இருக்கட்டும். பதில் சொல்ல வேண்டிய இடத்துல நாம இருக்கோம். நம்ம அகாடமிக்குள்ள யாரோ நமக்கு எதிரா இருக்காங்க. கவனம். " எனச் சொல்லி விட்டு செல்ல, மதுவிற்கு அவளின் பேச்சு நியாயமாக பட்டது.
சென்ற வாரம் இஸ்பெக்ஷனுக்கு வந்தவர்களை கவனித்துக் கொண்டது யார். அவர்களிடம் யார் யார் என்னென்ன சொன்னார்கள் என அறிய சீசிடீவி கேமராவை ஆராய முடிவெடுத்தவன் தன் முன் இருந்த கணினியை இயக்க, அப்போது ஒரு பெண் திருதிருவென முழித்தபடி பேட்மிட்டன் கோர்ட்டில் பயத்துடன் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
பள்ளி மாணவி தான். பதினைந்து வயது தான் இருக்கும் அவளுக்கு. பேட்மிட்டன் விளையாட வந்திருக்க வேண்டும். அவளின் ராக்கெட் பேக் முதுகில் தொங்கி கொண்டிருந்தது. நேரத்தைப் பார்த்தான் மது. அது பத்தை நெருங்க உள்ளது என்று சொல்லியது.
காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை மூன்று பேர்ஜ்ஜுகளாக விளையாடுவர். பின் யாரையும் அந்த கோர்ட்டில் பார்க்க முடியாது. இத்தனை மணி வரை ஏன் இருக்கிறாள். அத்தோடு இது விடுமுறை நாளும் கிடையாது. பள்ளிக்குச் செல்லாது யாருக்காகவோ காத்திருப்பது போல் இருக்கிறதே. என்ன நடக்கிறது அங்கு? என்று அறிய வேகமாக அங்கு சென்றான்.
பேட்மிட்டன் கோர்ட்…
பள்ளிச் சிறுமி தாருண்யா முகத்தில் படபடப்பு, பயம், கவலை என எதிர்மறையான, நம்பிக்கை அற்ற உணர்வுகள் பல வந்து வந்து சென்றன. இது சரியா எனக் குழம்பி போய் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க, பூட்ஸ் காலடி சத்தம் கேட்டது. உடல் தூக்கி வாரி போட, உள்ளங்கைகள் இரண்டும் வியர்வையை ஊற்றெடுத்து ஆறாய் ஓட விட, அச்சத்தில் அவளின் முகம் வெளிறி போய் இருந்தது.
" என்ன தாரு… போலாமா.. " எனக் கேட்டபடி காரின் சாவியைச் சுற்றியபடி வந்தான் ராகுல். பேட்மிட்டன் கோர்ச். ஆசானுக்குச் சமமானவனின் பார்வை துச்சாதனனை நிரந்தமாக குத்தகைக்கு எடுத்து போல் இருந்தது.
" ஸார்… ஸார்… ப்ளீஸ் ஸார்... என்னை விட்டுடுங்க. நான் எங்கயும் வரல ஸார். வீட்டுக்குத் தெரிஞ்சா என்னைக் கொன்னிடுவாங்க ஸார். " எனக் கெஞ்ச,
" அது எப்படி தெரியும் தாரு? தெரியக்கூடாதுன்னா நீ எனக்கு கோவாப்ரேட் பண்ணு போதும். வா… வந்து கார்ல ஏறிக்க. நம்ம பேசிக்க வேண்டியது ரொம்ப கம்மி தான். ஆனா செய்ய வேண்டியது நிறைய இருக்கு. " என முட்டிக்கு கீழ் இறங்கிய வெள்ளை நிற ஸ்கெட்டும் முழு நீள கை வைத்த டீசர்ட்டும் அணிந்திருந்தவளின் துயிலை உறிக்கும் பார்வை பார்க்க, சிறுமி அழுது கொண்டே மண்டியிட்டு அழத்தொடங்கினாள்.
பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணை இங்கு விளையாட வரும் ஒரு ஆண் காதலிப்பதாகக் கூறி கடிதம் நீட்ட, அதை வாங்காது அவனைத் திட்டி அனுப்பி விட்டாள் சிறுமி. ஆனால் அவன் விடுவதாக இல்லை. தொடர்ந்து இங்கு தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். பெற்றவர்களுக்கு இது தெரிந்தால் விளையாட அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் எதுவும் சொல்லாது பயத்தில் மறைத்தாள் சிறுமி.
ஒரு முறை தாருண்யா தனியா சிக்க, அவளிடம் முறை தவறி அவன் நடக்க முயல, அதைத் தடுத்தவன் தான் ராகுல். ஆனால் பூனையிடம் தப்பி புலியிடம் சிக்கி கொண்ட கதையாய் அவனிடம் இருந்து தப்பி ராகுலெனும் அரக்கனிடம் மாட்டிக் கொண்டாள் பெண்.
அவனின் பாலியல் சீண்டலில் பயந்து போய் இருந்தவளைத் தன் இச்சைக்குப் பணிச் சொல்லி மிரட்டிக் கொண்டிருக்கிறான் பயிற்சியாளர் என்ற பெயரில் இருக்கும் காமுகன்.
"ஸார் ப்ளிஸ் ஸார்... ப்ளிஸ்… " என அழுது கொஞ்ச,
"ம்ச்… அழுது சீன் போடாத. உங்க வீட்டுல அந்தப் பையனும் நீயும் லவ்வர்ஸ்னு சொன்னா என்ன ஆகும். ம்... இன்னைக்கி ஒரு நாள் தான். ஈவ்னிங் எப்பயும் போல ஸ்கூல் விட்டு போற மாறி ஆறு மணிக்கு உன்னோட வீட்டுல விட்டுடுவேன். அதுக்கப்புறம் நோ டீலிங். கம்… வேஸ்ட் பண்ணாத டயத்த." என அவளின் கரம் பற்றி இழுத்தான்.
" எங்க வரணும். ஏன் டயம் வேஸ்ட் பண்ணக் கூடாது." என்றபடி வந்தான் மது.
அவனைக் கண்டதும் ராகுல் பம்மத்தொடங்கி விட்டான். ஏதும் அறியாதது போல், " என்னனென்னனு தெரியல மது திடீர்னு வயிறு வலின்னு சொல்லி அழுறா. நான் அவள டாக்டர் கிட்ட கூட்டீட்டு போக கூப்பிட்டுட்டு இருக்கேன்." என்க, மது தாருண்யாவைப் பார்த்தான். அவளைப் பார்த்து ஆம் என சொல் என மிரட்டுவது போல் ராகுல் முழிக்க, சிறுமி மருண்டு அழுதாள். அவளின் பார்வையில் நடப்பதைப் புரிந்து கொண்டான் அவன்.
"வயிறு வலி நான் மது. வேற எதுவும் இல்ல. நான் கூட்டீட்டு…. " எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே, மது கரம் உயர்த்தி,
"இனி நீங்க இங்க இருக்க கூடாது. நான் கேட்சிங்கு வேற மாஸ்டர் பாத்துக்கிறேன். " என வெளியே போக சொல்ல, மதுவின் பின்னாலேயே டாக்டர் சந்திரகலா வந்து சிறுமியை அழைத்து சென்றார், அங்கிருந்த மெடிக்கல் ரூமிற்கு.
"என்ன சொல்றன்னு அர்த்தம் தெரிஞ்சி தான் பேசுறியா மதுசூதனா. " என்க, மது கரங்களைத் தட்டி க்ளப்பில் இருந்த அனைவரையும் அழைத்தான்.
" உங்களுக்கு என்ன பிரச்சன வந்தாலும், என்னை நீங்க நேரம் காலம் பாக்காம காண்டாக் பண்ணலாம். அந்தப் பொண்ணு மாதிரி பயந்திட்டு யாரோட மிரட்டலுக்கும் பணிஞ்சி போகதீங்க. இங்க இருக்குற ஒவ்வொரு பொண்ணோட பாதுகாப்பும் எனக்கானது. அவங்களோட சேப்டிக்கு நான் பொறுப்பு. சோ, தைரியமா என்னை வந்து பாக்கலாம். பேசலாம். " என்று விட்டு அலுவலக அறையை நோக்கி நடக்க,
"மதுசூதனா... நான் யாருன்னு தெரிஞ்சுமா என்னௌ வேலைய விட்டு அனுப்புற."
"தெரிஞ்சதுனால தான் முழுசா இந்த அகாடமிய விட்டு வெளில போற. இல்லன்னா உன்னைத் தூக்கிட்டு போக ஆம்புலென்ஸ் தான் வேண்டி இருக்கும். so Get Out now. "
" வேண்டாம் இதுக்கு நீ அனுபவிப்ப. இரு நான் இப்பவே சிதம்பரம் மாமாட்டா பேசுறேன். பொய்யா எம்மேல பலியா போடுறன்னு." என மிரட்டிக் கொண்டே செல்ஃபோனை எடுக்க, மது சொன்னதை செய்து விட்டான்.
அதான் அவனை அள்ளிக் கொண்டு போக ஆம்புலென்ஸை அழைத்து வர சொல்லி ராக்கிக்கு தகவல் கொடுக்க, அடுத்து பத்து நிமிடங்களில் ஆம்புலன்ஸ்ஸுடன் வந்து நின்றான் ராக்கி.
"என்ன மச்சா இது. அவெ மேல எதுக்குக் கை வச்ச? அங்கிலுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்? அதவிடு உங்க சித்திக்கும் உந்தங்கச்சிக்கும் தெரிஞ்சா அவ்வளவு தான். வீட்டைக் கத்தி கத்தியே ரெண்டா பிளந்திடுவாங்க. எதுக்கு டா தங்கச்சி புருஷனோட தம்பியவே அடிச்ச." எனக் கேட்க, மது நடந்தவற்றை ராக்கியிடம் கூறினான்.
ராகுல் சைந்தவியின் கணவன் கௌசிக்குடைய தம்பி. வேலை வெட்டி என்று எதுவும் அவன் படித்த படிப்பிற்குக் கிடைக்காததால் மதுவிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டான்.
" ஆனாலும் நீ அவனைப் பதமா எடுத்து சொல்லி வெளில துரத்திருக்கலாம். இப்படி அடிச்சி ஆளே அடையாளம் தெரியாத மாதிரி பண்ணிட்ட.. நிச்சயம் உன்னோட வீட்டுல பிரச்சன வரும்."
"அவன விட பெரிய பிரச்சன ஒன்ன நாம பேஸ் பண்ண போறோம். " என்றவன் ராகுலின் லாக்கரை உடைத்து அதிலிருந்து எடுத்த சில பொட்டலங்களைக் காட்டினான். அதில் இருந்தது,
" கோலமாவா! அதுவும் நம்ம அகாடமிலயா!! எப்படி நண்பா… " என வாயைப் பிளந்தான் ராக்கி.
" என்ன நடக்குது நண்பா இங்க?" என யோசிக்க,
"நம்மல ஒட்டு மொத்தமா சிக்க வைக்க யாரோ ப்ளான் போடுறானுங்க. " என்றான் மது.
" ஏன் நண்பா உலறுர? நீ சொல்ற அளவுக்கு நமக்கு எதிரிங்கன்னு யாரும் கிடையாது. "
" இல்ல. நமக்கு எதிரி இருக்கு. ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்த இன்ஸ்பெக்ஷன். மூணு நாளுக்கு முன்னாடி நடந்த கராத்தே டோர்னமெண்ட்ல நம்ம அகாடமி பசங்களுக்கு மட்டும் எடுத்த ஊக்க மருந்து பரிசோதன. நேத்து வந்த மெயில். இதெல்லாம் வச்சி பாக்கும் போது, நம்மல கார்னர் பண்ணி செக் வக்கிற மாதிரி இருக்கு.
யாருன்னு இவனுக்குத் தெரிஞ்சிருக்கலாம். தெரியாமலும் இருக்கலாம்." என்றான் மது.
"இவன் ஒரு டிரெக் அடிட் மச்சி. நம்மல சிக்க வைக்க நினைக்கிறது யாருன்னு இவனுக்குக் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். எங்க யார்ட்ட வாங்கினான்னு விசாரிக்காமல அடிச்சி பேச முடியாம வாய உடச்சி படுக்க வைச்சிட்ட." எனக் குறைபட்டான்.
"விசாரிக்கலாம். இவன இல்ல. இவன ஏவி விட்டவன. " என்றவன் பாதுகாப்பைப் பலப்படுத்தி, தன்னைச் சுற்றி பின்னப்படும் சூழ்ச்சி வலையில் இருந்து தப்பிக்கும் வழிகளை முன்னெடுத்தான். கண்முன் தெரியாத அந்த எதிரியை கண்டுபிடிக்கும் தேடிலைத் தொடங்கினான்..
யாருடா அது? பைரவிட்ட சண்ட போடுறத தவிர ஒன்னுமே பண்ணாத நம்ம மதுசூதனனுக்கு ஸ்கெட்சு போடுறது. ம்... யாரா இருக்கும்.. ஒரு வேள அவனா... ச்சச்ச… இருக்காது ரொம்ப ரொம்ப நல்லாவே அவெ. ஒரு வேள இவனா... இருக்கலாம்.
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..