முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 50


 

அத்தியாயம்: 50



வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பது ஒரு கலை. அதை விட பெரிய கலை பிறர் சிரிப்பில் தன் சந்தோஷத்தை உணருவது.  


இது பாண்டிக்குப் பொருத்தமாக இருக்கும். தன் தங்கையை இதுவரை இப்படிச் சந்தோஷமாக அவன் கண்டது இல்லை. முகமெல்லாம் புன்னகை பூக்க, தன் தங்கையின் குரல் ஓங்கி கேட்டுக் கொண்டிருந்தது.


"சாருக்கா… எனக்கு பாஸ் பண்ணுங்க. அக்கா…" எனக் கத்திக் கொண்டு இருந்தாள். 


" லோட்டஸ் இங்க…" பைரவியின் குரல். 


"பையூ கோல் போட்டுட்டு. " எனச் சாரு கத்த, பந்தை அழகாய் கூடைக்குள் போட்டு வெற்றி வாகை சூடியிருந்தனர் அந்த பெண்கள் அணியினர். ஹே என கூச்சலிட்டு கத்த, தாமரையும் குத்தித்துக் கொண்டிருந்தாள். 


அது trampoline என்று சொல்லப்படும் விழ்தடுப்புறை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குதித்து விளையாட விரும்பும் அதில் குதித்துக் கொண்டே பந்தை வலையில் போட 60 நொடிகளில் தரப்படும். 


கொடுக்கப்படும் கால அவகாசத்திற்குள் அதிக கோல்களை போட்டால் பரிசெல்லாம் தர மாட்டார்கள். வெற்றி பெற்ற சந்தோஷத்தில் நடையைக் கட்டிவிட வேண்டும். அவ்வளவே.


வடிவேல் சொல்வது போல் ஆண் சிங்கம் பாதுகாப்பில் பெண் சிங்கங்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்படித் தான் இருந்தது அந்தக் காட்சி.பாண்டி இமை சிமிட்ட கூட மறந்து மூவரையும் கண்காணித்தான். அதிலும் தங்கையின் சிரிப்பு காண கிடைக்காத ஓவியமாய் இருந்தது.


நால்வரும் மாலிற்கு வந்துள்ளனர், ராக்கி பாயை பார்க்க. மதுவின் அகாடமிக்கு கோலமாவை சப்ளை செய்த நால்வரில் மூவரின் புகைப்படங்களைத் தூக்கிக் கொண்டு நம் ராக்கி பாய் வருகிறான். கூடவே பிரவீனிடம் கமிஷ்னர் மகளின் வழக்கில் விசாரித்து வரும் அனைத்து குற்றவாளிகளின் புகைப்படங்களையும் வாங்கி கொண்டு தன் ஒத்த தாமரையைப் பார்க்க குதுகலமாக வருகிறான். அதுவும் மாலை ஐந்து மணிக்கு. 


நம் மதுவுடன் ரொம்ப நாள் நெருங்கிய நண்பனாக இருக்கும் ராக்கி பாய்க்கும் punctuality ஜாஸ்தி. அதுனால நாலு அம்பத்து ஒன்பதுக்கே சொன்ன இடத்திற்கு காஃபியையும் வாங்கி கொண்டு அமர்ந்து விட்டான். ஆனால் வரச் சொன்ன பைரவி விளையாட்டு மும்மரத்தில் 'பாயாவது கீயாவது..' என ராக்கி பாயை மறந்து விட்டு விளையாட, அவளின் ஃபோன் இருபதாவது முறையாக அலறியது. 


"பைரவிம்மா... உன்னோட ஃபோன் அடிக்கிது. பைரவி..." எனப் பாண்டி கத்த, அவள் கண்டு கொள்ளவில்லை.


"செல்வி ஃபோன் அடிக்கிது. பைரவிய கூப்பிடு. " எனத் தன் தங்கையை அழைக்க, திரும்பி பார்த்தது சாரு. 


பெண்களுக்கு மட்டுமல்ல அவர்களின் ஃபோன் ஹேண்ட் பேக் உள்ளிட்ட உடமைகளுக்கும் காவலனாக நின்றவனின் அருகில் வந்தவள் கரம் நீட்டி ஃபோனை கேட்க.. அதை தீண்டாது ஃபோனை கையில் வைத்த அவனுக்கு ஃபோனை அட்டன் செய்து சாரு ராக்கியிடம் சிரித்து பேசுவதைப் பார்க்கையில் கோபம் சுள் என ஏறுவதை தடுக்க முடியவில்லை. 


" பாய்… ராக்கி பாய்… எப்படி இருக்கிங்க?" என்றாள் உற்சாகமாக.


"ஏன் இருக்கேன்னு கேளு. சரியா இருக்கும். " என்றான் கோபமாக.


"எங்க பாய்க்குக் கோபமா! அதுவும் எம் மேல… வராதே… நான் உங்க செல்லம்ல." என ராகமாக கேட்டு ராக்கியைச் சமாதானம் செய்வதாக எண்ணி அவளின் அருகில் நின்ற பாண்டியை உசுப்பேற்றிக் கொண்டிருந்தாள் அவள். அதை ஓரக்கண்ணால் கண்டு வேறு ரசிக்கிறாள்.


'ஆம்பள பையன கடுப்பேத்தி பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம் இந்த பொம்பளப் பிள்ளைங்களுக்கு.'


"ஆமா செல்லம் தான் .நீ மனசுக்கு இதமான சாறு தான். எங்கோபம் எல்லாம் பைரவி மேல. நான் வந்து அரமணி நேரம் ஆச்சி சாறு. என்னைப் பாக்க வரச் சொன்ன அவள காணும். உன் ஃப்ரெண்டுக்கு மணி பாக்க தெரியுமா இல்ல வாட்ச பாக்குற அளவுக்கு கண்ணு தெரியாதா? " எனக் காட்டமாகக் கேட்க.


"பாய் இவ்ளோ கோபமா பேசுனா நான் அழுதிடுவேன். அவா பண்றதுக்கு எங்கிட்ட கத்தலாமா. மீ பாவம் இல்லையா. " எனப் பரிதாபமாக சொல்ல, அது நம் ராக்கி பாயின் கோபத்தை ஐஸ்க்ரீமாக உருகச் செய்திருக்க வேண்டும். 


" ஆமா தான் அவளுக்கு உயிர் தோழியா இருக்குற நீ பாவம் தான். சரி விடு. எங்க உன்னோட ஆருயிர் தோழி பைரவி. அவளக் கூட்டீட்டு கிரவுண்ட் ஃப்லோர்க்கு அஞ்சி நிமிசத்துல வர்ற. இல்ல…"


"இல்லன்னா."


"அடுத்து அஞ்சி நிமிசத்த எடுத்திட்டு வந்து சேரு." எனக் கட்டளையிட, சாரு சத்தமாக சிரித்துவிட்டாள்.


" சிரிக்கிற அளவுக்கு இப்ப நான் என்ன சொல்லிட்டேன்? "


" இல்ல ராக்கி பாய் அஞ்சி நிமிடத்துல வரலன்னா உன்ன உண்டு இல்லன்னு ஆக்கிடுவேன்னு வீர வசனத்த எதிர் பார்த்தேன்‌‌. ஆனா வந்தது ராக்கி பாயோட வழக்கமாக பதுங்கல் டயலாக்தா. " என்றாள் சிரிப்புடன்.


"வசனம் தான. யார்னாலும் பேசலாம் அத‌. ஆனா உண்மன்னு ஒன்னு இருக்குல்ல. அது என்னன்னா என்னால பைரவிய ஒன்னும் பண்ண முடியாதும்மா. நண்பனோட வைஃப். நாலர வருஷமா கூடப் பிறக்காத தங்கச்சி. அதவிட பெண் காவல் அதிகாரி. துப்பாக்கி சுடலாம் பயிற்சி எடுக்குறாளாம். இத்தன பதவி இருக்குற அவள என்னால என்ன பண்ண முடியும். சொல்லு." என்க, சாரு அழைத்து வருவதாக சொல்லி புன்னகையுடன் காலை கட் செய்தாள். பாண்டி அனல் மூச்சுடன் நின்றான். அதைக் கள்ளச் சிரிப்புடன் நோக்கியவள் பைரவியை அழைத்துக் கொண்டு தரைத் தளத்திற்கு சென்றாள். 


கடைசி தளத்தில் இருந்த விளையாடும் இடத்திற்கு கார் பார்க்கில் இருந்து லிஃப்ட்டில் சென்றதால் நகரும் படிக்கட்டின் உதவி தேவையில்லாததாக இருந்தது. ஆனால் இப்போது கீழே செல்ல அதன் சேவையை உபயோகிக்க எண்ணினர். அண்ணன், தங்கை இருவருக்கும் சிறு பயம் வந்துவிட்டது.


பாண்டி, "இதுலயா போகணுங்கிற. வேண்டாம்மா. கால வச்சாலே வழுக்குற மாதிரி இருக்கு. இதுல எப்படி நின்னுட்டு போறது."  


" அட எங்க மதுர வீரனுக்கு பயம்லாம் வருதுப்பா. " எனப் பைரவி கேலி செய்ய,


"அதெல்லாம் எங்கண்ணனுக்கு கிடையாது." எனத் தாமரை ரோசமாக சொன்னாள்.


"அவுக ஊருலயும் இது இருக்கத்தான் செய்து. ஏறி இறங்கத்தான செஞ்சிருப்பாக. சும்மா ஷீன் போடமா வரச் சொல்லு. ராக்கி பாய் வெய்ட் பண்ணிட்டு இருப்பாரு. " என்றாள் சாரு. 


'அவெ காத்திருக்காங்கிறதுக்காக எல்லாம் நான் சீக்கிரம் வர முடியாது. ' என்பது போல் விறைப்பில் நின்றான் பாண்டி.


"பைரவி நேரமாச்சி. " எனச் சாரு கத்த, பாண்டியை ஒரு பார்வை பார்த்தவள் வரமாட்டேன் என்ற தாமரையின் கரத்தைப் பற்றிக் கொண்டு கீழே இறங்க தொடங்கினாள் பைரவி.


'நீ வந்தா வா… வராட்டி போ…' என்பது போல் பாண்டியை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாரு கீழே இறங்க, பாதி தூரம் சென்ற பின் திரும்பி அவனை பார்த்தாள். பாண்டி இறங்கவில்லை. எப்படி இறங்குவது என்று தெரியாது முழிக்க, வேகமாக மேலே ஏறி வந்தவள் அவனின் கரம் பற்றி இறங்க தொடங்கினாள். 


"அதுல மஞ்சக்கலர் கோடு வருது பாருங்க. அதுல கால வைக்க கூடாது. ம்ச்... கால வைக்கிறதுக்கு முன்னாடி கைப்பிடிய இறுக்கமா பிடிக்காதிங்க. இடரி விட்டுடும். பாத்து… அவ்ளோ தான். " என வகுப்பெடுத்தவள் பத்திரமாக ஒரு தளத்தில் இறக்கிவிட, அடுத்தடுத்து வந்த எஸ்கலேட்டரில் அவனே இறங்கினான். 


"நன்றிங்க. " 


"நீங்களே வச்சிக்கங்க. இதுக்கு முன்னாடி ஏறுனது இல்லயா?"


"அதெல்லாம் போயிருக்கேன். ஆனா ஒருக்க அதுல சொந்தக்கார பிள்ளையோட டிரெஸ் மாட்டி, அது பயந்து அழுதுன்னு ரொம்ப பெரிய ஷீன பாத்தேனா. அதுல இருந்து ஒரு சின்ன பயம். எங்க வேட்டி மாட்டிக்குமோன்னு. " என்க சாரு பாண்டியின் வேட்டி சிக்கிக் கொள்வது போல் கற்பனை செய்து உள்ளுக்குள் சிரித்தாள்.


"பேண்டு போட வேண்டியது தான. "


"எனக்கு செட்டாகாதுங்க. " என்றான். இருவரும் முட்டிக் கொள்ளாமல் பேசியபடி நடந்து வந்தனர். இதமாய் இருந்தது அந்த நொடிகள். அது ராக்கியைப் பார்க்கும் வரை தான். பின் சீரியஸ்ஸாக மாறி விட்டான் பாண்டி. 


 ஹே பெண்ணே 


என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய் 


நீ அருகில் 


புரியாத மாயம் செய்கிறாய் 


என யுவன் சங்கர் ராஜாவின் வாஸ்ஸும் பீஜிஎம்மும் ராக்கியின் காதுகளுக்கு மட்டும் கேட்டு தாமரையின் வருகையை சொல்லியது. எழுந்து நின்றவன் நின்ற வேகத்தில் சட்டென அமர்ந்து விட்டான். பாண்டியை பார்த்து விட்டான் போலும். 


'அடியாத்தி... கோயில்ல நிக்கிற ஐய்யனார் சிலை கணக்கால்ல இருக்கான். பைரவியே பயந்திட்டேன்னு சொல்லும் போதே சுதாரிச்சிருக்கணும்.  இவன் மச்சினனா வருவான்னா இவன் தங்கச்சி நமக்கு தேவையா? ' என்ற யோசனையில் இறங்க, தாமரையின் முகம் மலர்ந்திருந்தது ராக்கியை பார்த்த பின். அதைக் கண்டவன்,


'ஐயோ இவா வேற இப்படி லுக்கு விடுறாளே. பதிலுக்கு நாமலும் பாத்தா ஐயனாரு அருவாள எடுப்பாரா! இல்ல கையால அடிச்சி கொல்லுவாரா! ' என்ற ராக்கியின் மைண்ட் வாய்ஸ் பைரவிக்கு கேட்டிருக்க வேண்டும். வேகமாக அவனின் அருகில் சென்று அமர்ந்தவள்,


"பாய் அண்ணெங்கார பக்கத்துல இருக்கும் போதே தங்கச்சி இப்படி சைட் அடிக்கிறிங்க. தைரியம் வந்திடுச்சா என்ன? " எனக் காதில் கேட்க,


" சைட் அடிச்சேனா. ஏய் நான் சைட் அடிக்கலாமா வேண்டாமான்னு யோசிட்டு தான் இருந்தேன். நீ என்னடானா! ஆமா தாமரய மட்டும் தனியா கூட்டீட்டு வர்றதா தான சொன்னா. ஏன் இந்த ஐய்யனார கூட கூட்டீட்டு வந்த?" எனப் பரிதாபமாகக் கேட்டான்.


"நான் எப்ப தனியா கூட்டிட்டு வர்றதா சொன்னேன். அவளத் தனியா எங்கயும் அந்த மதுர வீரன் விட மாட்டாரு. அவளக் கடத்திட்டு போனதுல இருந்து கழுகு கணக்கா தங்கச்சியையே வட்டம் போட்டுட்டு இருக்காரு. தங்கச்சி மேல அவ்ளோ பாசம். நீங்களும் தான் இருக்கீங்களே!."


"பாசம் பாயசமெல்லாம் இருக்கட்டும். நீ ஏன் லேட்டா வந்த. நாலு வர்ஷமா அவெங்கூட குடும்பம் நடத்துன உனக்கு இன்னுமா அவெ பச்சுவாலிட்டிய பத்தி கத்து தர்மா இருக்கான்!" 


"அதெல்லாம் பாடம் நடத்திட்டாரு. பட் நான் தான் பெயில் ஆகிட்டேன். என்ன பண்ண?" எனச் சாதாரணமாக சொல்ல, அவளை முறைத்தான் ராக்கி.


"ஹாய் ராக்கி பாய். எப்படி இருக்கிங்க?" என்றபடி சாரு வந்து ராக்கியின் மறு பக்கம் அமர பாண்டி‌ ராக்கியின் எதிரில் அமர்ந்தான். லேசான முறைப்புடன், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத ராக்கி,


"ரொம்ப நல்லா இருந்தேம்மா. உங்க ரெண்டு பேர சந்திக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும். எப்பப் பாத்தேனோ அப்பவே தெரிஞ்சிடுச்சி எவ்வாழ்க்க எந்தத் திசைல போகுதுன்னு. " என்க, சாரு மட்டுமல்லாது பைரவியும் அவனை முறைத்தாள். தங்கைகளைச் சாமாதனம் செய்தவனுக்கு பாண்டியை பரஸ்பர அறிமுகம் செய்து வைத்தனர். 


" பாய், நம்ம அகாடமில கோலமாவு கொண்டு வச்சவணுங்கள பிடிச்சாச்சா? அவரு எவ்ளோ தூரத்துக்கு போயிருக்காரு?" பைரவி ஆவலுடன் கேட்டாள்


"ரொம்ப தூரம்லாம் போக முடியல. ஏன்னா எல்லா பக்கமும் ரயில்வே கேட் மாறி கேட் போட்டு மூடிருக்கு. எதாவது ஒரு ட்ரெயின் க்ராஸ் ஆனாத்தா கேட் ஓப்பன் ஆகும். அதெல்லாத்தையும் உம்புருஷெ பாத்துப்பான். நீ அந்தக் கும்பல மறந்திட்டு வேற வேலய பாரு.”


தாமர, இதுல சிலரோட ஃபோட்டோ இருக்கு. உன்னக் கடத்துனவிங்க யாருன்னு அடையாளம் பாத்து சொல்லு." எனப் புகைப்படங்களைக்  கடை விரித்தான். 


"பாய், மூணு பேரோட ஃபோட்டோ ஓகே. தப்பிச்சி போன நாலாவது ஆளோட ஃபோட்டோ கிடைக்கலயா பாய்!" என மூவரின் புகைப்படத்தையும் உற்று பார்த்தபடி கேட்டாள் பைரவி.


"கிடைக்கல பைரவி. ஆனா தாமரய‌ கடத்துன கார்ல இருந்தவிங்களோட க்ளியர் ஃபோட்டோ வாங்கிட்டு வந்திட்டேன். ஒரு காப்பிய பிரவீன்ட்ட குடுத்திட்டும் வந்திருக்கேன். அத்தோட தாமரைய கடத்துனாங்விங்களுக்கும் சுடர் டெத்துக்கும் தொடர்பு இருக்கலாம்னு அவெங்காதுல போட்டு வச்சிருக்கேன். எதாவது கண்டுபிடிச்சா சொல்றேன் சொல்லிருக்கான்." 


"அப்ப என்ன ஸ்டேஷன் கூட்டீட்டு போய் விசாரிப்பாங்களா." என வேகமாக தாமரை கேட்க, 


"போலிஸ் ஸ்டேஷன் போறது தப்பான செயலா! அப்படிப் பாத்தா பைரவி நீ ஆறு மாசமா தப்பு பண்ணிட்டு இருக்க." என்றான் ராக்கி. 


பாண்டி, "இப்ப அடையாளம் காட்டுனா இவனுங்கள உடனே பிடிச்சிட முடியுமா? ஜெயில்ல போட்டு தண்டன வாங்கி குடுக்க முடியுமா? ஏன்னா எத்தன நாளைக்கி தான் பயந்து பயந்து சுத்துறது. சுதந்திரமா அவா இஷ்டத்துக்கு இருக்கணும்னு தான் இந்த ஊருல கொஞ்ச நாள் வேல பாக்கட்டும்னு நினைச்சேன். ஆனா அவனுங்களால வீட்டுக்குள்ளயே அடஞ்சி கிடக்குற மாறி இருக்கு."


"அடையாளம் காட்டுனா அவெ எந்த ஏரியா எந்த குப்பல சேந்தவெங்கிறதா மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். யாராவது சொல்லி கடத்திருந்தாங்கன்னா காரணத்த கருவறுக்காம நிம்மதி கிடைக்காது." என ராக்கி சொல்ல பாண்டியும் அவனும் தாமரை வழக்கைப் பற்றியும் சுடரைப் பற்றியும் தீவிரமாக பேசத் தொடங்கினர். 


பைரவி, "ஹே சாரு… இவன நாம எங்கயோ பாத்திருக்கோம்ல.. எங்கன்னு சொல்லு பாப்போம்."


"எது நாம பாத்திருக்கோமா! எங்க காமி?" என வாங்கி பார்த்தவளுக்குச் சத்தியமாக அவள் காட்டிய புகைப்படத்தில் இருந்தவனை அடையாளம் தெரியவில்லை. 


"நீ இன்னுமா அதே பொய்ய சொல்லிட்டு இருக்க. இங்க தான் உ புருஷெ இல்லல்ல. அப்றமும் ஏன் அதையே சொல்ற?"


"ஐய்யோ பாய்! நான் பொய் சொல்ல. நான் இவன பாத்திருக்கேன். ஆனா எங்க எப்பன்னு தான் நியாபகம் வர மாட்டேங்கிது." என மூளையைத் தட்டி தட்டி யோசிக்க, 


"வேண்டாம்மா விட்டுடு. இன்னும் நாலு தட்டு தட்டுற மூள மூக்கு வழியாக வடிஞ்சி விழுந்திடும். போதும்." என அவளின் கரம் பற்றி சொல்ல‍, பைரவி ராக்கியுடன் சண்டைக்கு நின்றாள். 


"உங்க கிட்ட பேனா இருக்கா." எனத் தாமரை கேட்க, ராக்கி தன் சட்டையில் இருந்ததை அவளிடம் நீட்டினான். 


தாமரை வேக வேகமாக தன் நினைவில் இருந்த பெயர்களை அதன் சொந்தமானவர்களின் புகைப்படத்தில் எழுதி வைத்தாள். அவர்கள் தாமரையைக் கடத்திய கும்பல். கூடவே மதுவின் கையில் மாட்டிவிடக் கூடாது என்பதற்காக ஓடிச் சென்று உயிர் நீத்தானே அவனின் புகைப்படத்தை காட்டி, 


"இவனும் கார்ல தான் இருந்தான். பங்குல கார் நிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு ஃபோன் வந்தது.. அதுனால இறங்கி போய்ட்டான்." என அடையாளம் காட்ட, அந்த போதை கும்பலும் மதுவின் அகாடமில் கைவரிசை காட்டியவர்களும் ஒரே கும்பல் தான் என அறிந்து கொண்டான். 


இறந்து போனவனைப் பற்றி பிரவீன் கூறியதை அனைவரிடமும் சொல்லி எச்சரிக்கை செய்தான். 


அவன் கூலிக்கு கொலைகளை செய்யும் ஸ்லீப்பர் செல். அப்படி எனில் ஏதோ பஸ் ஸ்டாண்டுல பார்த்த பொண்ண மிரட்டி உருட்டி கடத்திக் கொண்டு செல்லும் போதை கும்பல் கிடையாது. அவர்கள் தாமரையை கடத்தியது யாரோ ஒருவன் தந்த பணத்திற்காக தான் என்பது உறுதியாக தெரியவந்தது.   


இறந்தவன் போதை வஸ்துக்களை விற்பவன் மட்டுமல்ல கூலிப்படை ஆளும் கூட. அவனுக்கு கீழும் மேலும் பல தலைகள் உள்ளன. அந்தத் தலைகள் அனைத்தும் ஆபத்தானது எனப் பிரவீன் எச்சரித்திருந்தான். அதனால் இனி தாமரையை பாதுக்காப்பது என்பது சவாலாக இருக்கும் என்றான் ராக்கி. 


💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...