முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 49

 

அத்தியாயம்: 49



"ரெண்டு அக்கௌண்ட் மட்டுமில்ல. சுடர் கிட்ட ரெண்டு டச்சு ஃபோனும் இருக்கும்." என்றான் பாண்டி.


"என்ன! ரெண்டு ஃபோன் நம்பரா?" என அதிர்ந்து போய்க் கேட்டாள் பைரவி. ஏனெனில் பிரவீன் விசாரித்தது ஒரு ஃபோன் நம்பரைத் தான். அதாவது பைரவியிடம் இருக்கும் சுடரின் நம்பரை மட்டும் தான் ட்ரேஸ் செய்ததாகக் கூறியிருந்தான்.


"ஆமா ரெண்டு தான்."


"அக்காவோட நம்பர் இது தான. " என ஒரு நம்பரை சொல்ல, அவன் இதுவும் அவளுடையது தான் என மற்றொரு நம்பரைக் கூறினான். 


" சுடர் கிட்ட எப்பயும் ரெண்டு ஃபோன் இருக்கும். ஒன்னும் ஹோம்க்கு வர்றவங்க, அறிஞ்சவங்க, தெரிஞ்சவங்கன்னு வேல செய்ய உதவும்னு ஒன்னு இருக்கும். அடுத்தது பர்ஸ்னல் லைஃப்க்கு.‌ யாருக்கும் இந்த நம்பர் சரியா தெரியாது. சாரதாம்மா, நான், அப்பான்னு அவ கூட ரொம்ப நெருங்கி பழகுறவங்களுக்கு மட்டும் தான் இது தெரியும்." 


"இந்த நம்பர சாரதாம்மா போலிஸ்கிட்ட சொல்லிருக்காங்களா?"


"இல்ல."


"ஏன்?"


"ஏன்னா அந்த ஃபோன் காணமா போய்டுச்சி.‌"


"எப்ப? எப்படி?"


"சுடர் இறந்து போறதுக்கு சரியா ஒரு மாசம் இருக்கும்னு நினைக்கிறேன். சரியா தெரியல. ஏன்னா எங்க ஊர் கொடைக்கு வந்திருந்தா… சார்ஜ் போட்டு வச்சிருந்த ஃபோன, எவனோ ஆட்டைய போட்டுட்டான். சுடர் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கம்ப்ளைண்ட்லாம் பண்ணா.


அப்பத்தான் நான் அது அவ்ளோ முக்கியமான்னு கேட்டேன். ஆமான்னு சொன்னதுனால தேடுனோம். ஆனா அது கிடைக்கல. " எனப் பாண்டி பல ‌தகவல்களைக் கூறினான். அவனின் வருகை யாருக்கு லாபமாக இருந்ததோ இல்லையோ பைரவிக்கு லாபகரமாக இருந்தது. 


'மறுபடியும் அரசனூர்லயே வந்து நிக்கிது. அப்படி என்ன இருக்கும் அங்க? முதல்ல அங்க போய் பாக்கணும்.' என முடிவு செய்தால் பைரவி.


கார் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி வேகமெடுக்க, இவர்களின் பேச்சு புரியாமலும், பிடிக்காமலும் சாருவிற்குத் தலை வலியே வந்து விட்டது. வெடித்து விடுமோ என்ற பயத்தில் நெற்றியை இரு கரத்தாலும் அழுத்தி பிடித்தபடி குனிந்து அவள்‌ அமர்ந்திருக்க, பைரவி பாண்டியிடம் விசாரனை செய்யும் மும்மரத்தில் தோழியைக் கவனிக்கவில்லை. ஆனால் கவனித்தவன்‌ பாண்டி. 


காரை ஒரு கடையின் முன் ஓரமாக நிறுத்தியவன், ஏதுவும் சொல்லாது கீழே இறங்க, பைரவி சாலையோரம் இருந்த துரித உணவு கடைகளை பார்த்தாள்.


"சாரு, அங்க பார் ஃப்ரைடு நூடுல்ஸ் கடை. வாயேன் நைட் டின்னர முடிச்சிட்டு போகலாம்." என அழைக்க. 


"எனக்கு வேண்டாம் பையூ. நீ வேணும்னா வாங்கி சாப்பிடு." என்றவள் தலையைச் சீட்டில் சாய்த்து விழி மூடிக் கொண்டாள். 


"என்னாச்சி சாரு?" என்றவள் அப்போது தான் சிவந்திருந்த தோழியின் விழிகளைக் கண்டாள்.


" ஒன்னுமில்ல பையூ. லைட்டா தலவலி. தூங்குனாச் சரியாகிடும்." என்றவளின் குரலில் சோர்வு தெரிய, 


"அங்க மெடிக்கல் ஷாப் இருக்கு. நான் போய் உனக்கு மாத்தர வாங்கிட்டு வரவா." 


"வேண்டாம். மாத்தர போடுற அளவுக்கு இல்ல. எதுக்கு இப்ப கார நிப்பாடுனாரு? இன்னேரம் நேரா வீட்டுக்கே போயிருக்கலாம். எங்க தான் போய் தொலஞ்சாரு. " எனப் பாண்டியைத் திட்டி கடுப்புடன் பேச,


"எனக்குத் தெரியல சாரு. நான் தைலமாது வாங்கிட்டு வர்றேன். " எனப் பைரவி கீழே இறங்கி செல்லவும் பாண்டி கையில் சிறிய மண் குவளையுடன் வரவும் சரியாக இருந்தது. 


வந்தவன் அந்தக் குவளையை சாருவின் முன் நீட்டி, "இதக் குடிங்க. தலைவலி சரியாகிடும். " எனச் சொல்லி, சுக்கு காப்பியை நீட்டினான்.


"இப்ப நான் உங்கிட்ட எதாவது பேசுனேனா? இல்லல்ல. அப்பறம் ஏன் வாலன்டரிய வந்து சேவ செஞ்சிட்டு இருக்கிங்க. இப்படி அடுத்தவனுக்கு செய்யப் போய்‌ தான் என்னை இந்த நிலமைக்கி கொண்டு வந்து நிப்பாடிருக்கிங்க. நீங்க செஞ்ச சேவையால பாழாப்போனது என்னோட வாழ்க்கை. என்னோட நிம்மதின்னு சொல்லிட்டோ போலாம். ஆனா அது எதுவும் உங்களுக்குப் புரியப் போறது இல்லை. தயவு செய்து எம்முன்னாடி இப்படி வந்து நிக்காதிங்க. " எனக் கடுப்புடன் கூறினாள் சாரு.


அவளின் கடுப்பிற்கு காரணம் உள்ளது. தாமரை சாரதா இல்லம் சென்ற பிறகும் சாருவை பிக்கப் செய்து டிராப்‌ செய்வது பாண்டி தான். அவளும் என்னென்னமோ சொல்லி விட்டாள். ஆனால் பாண்டி கேட்பதாக இல்லை. சரியான நேரத்திற்கு வந்து வாசலில் காத்திருப்பான். 


அவனைக் கண்டு கொள்ளாது தாண்டி சென்றால், அடுத்த நொடி பைரவிக்கு ஃபோன் செய்து விட்டுவான். அவள் உடனே ஏன்? எதற்கு? என்ற கேள்விகளைத் தூக்கி கொண்டு வருவாள்.  பாண்டியைப் பற்றி அவளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத சாரு வேறு வழியின்றி அவனுடைய காரில் ஏறிச் செல்வாள்.


வருபவன் சும்மாவும் இருக்க மாட்டான். தாமரை கொடுத்தாள் என ஒரு டப்பாவுடன் நின்று, அவளிடம் திட்டுகளை வாங்கிக் கொள்வான். பாண்டி அவளின் திட்டுகளைச் சுப்ரபாதமாக எண்ணி தினமும் கேட்டு பழகிக் கொண்டான். 


தன்னால் தான் சாருவின் வாழ்க்கை தடம் மாறியது. தன் செயலால் ஒரு பெண் அனுபவித்த வேதனைகள் பல என்ற குற்ற உணர்வு மருத்துவமனையில் இருந்த போதே வந்து விட்டது. அது பரிதாபமாக மாறி, இப்போது காதலாகி நிற்கிறது. 


ம்… காதல் தான். சாருவின் வாழ்க்கையைச் சரி செய்ய வேண்டும் என்றால் அதற்கு அவளை நானே திருமணம் செய்து சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, அதை அவளிடம் நேரடியாக கேட்டான் பாண்டி. அதற்கு அவள் சம்மதிக்காது அவனை வசை சொற்களால் அர்ச்சனை செய்தாள்.


ஆனால் அவன் விடுவதாக இல்ல, " நான் பண்ணது ரொம்ப பெரிய பிழ. அத சரி பண்ண முடியுமான்னு எனக்குத் தெரியல. எனக்கு நீங்க குடும்பமா சந்தோஷமா வாழரும். அத நான் பாக்கணும். ஒன்னு நீங்க என்னைங் கல்யாணம் பண்ணிக்கங்க. இல்ல வேற யாரையாவது பண்ணிக்கங்க." என்று அவளைத் திருமணம் செய்யச் சொல்ல,

அவனைத் தவிர்த்து, உதாசீனப்படுத்தி எறிந்து விழுகிறாள் சாரு. இது இந்த ஒரு வாரத்தில் தொடர்கதையாகி போனது. 


"நான் பேசுறது காதுல விழலயா. தயவு செய்து உங்க கருணய காட்டாம கொஞ்சம் தூரமா இருங்க. " எனக் கத்தினாள் சாரு. நீட்டிய குவளையை ‘நீ வாங்காது நான் விலகி செல்ல மாட்டேன்‘ என்பதை போல் நின்றான் அவன். 


" நான் உங்க கிட்ட கேட்டேனா. இத எடுத்திட்டு போங்க ஸார். நானே தலவலிய நொந்து போய் இருக்கேன். இதுல நீங்க வேற... ச்ச.. ப்ளிஸ் வேண்டாம் ஸார்…" எனக் கோபமாக ஆரம்பித்து கெஞ்சவே செய்து விட்டாள். 


" சில விசயங்கள வாய் வார்த்தையால சொன்னாத்தான் தெரியுங்கிறது இல்ல. முகமே காட்டி குடுத்திடும். " என்றவன், என்ன சொல்ல வருகிறான் என்பது போல் நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, 


"உங்க தலைவலியோட அளவ உங்க முகம் காட்டி குடுக்குது. இந்த காபி குடிங்க. எல்லாம் சரியாகிடும்." என நீட்ட, பைரவி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அவள் வந்தாள் என்றால் அவளுக்கு வேறு விளக்கங்கள் சொல்ல வேண்டி வரும் என்பதால் பாண்டியின் கையில் இருந்ததை வேகமாக வாயில் ஊற்றியவள், போதுமா என்பது போல் அவனைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள். 


அவள் பருகியதே சந்தோஷம் என நினைத்தனுக்குள்ளும் சந்தோஷம் பொங்க, காரை அப்பார்ட்மெண்ட் வாசலில் நிறுத்தி இருவரையும் இறக்கி விட்டான். பைரவி திரும்பி பார்க்காது வேகவேகமாக வீட்டிற்குள் விரைந்து ஓட, சாரு, பாண்டியின் கார் மறையும் வரை நின்று பார்த்து விட்டு வந்தாள். ஏனோ பாண்டி காட்டும் இந்தப் பரிவு பிடித்திருந்தது சாருவிற்கு. 


ஆனால் அதை ஏற்கத்தான் கூடாது என்ற பிடிவாதத்துடன் வீட்டிற்குள் சென்றாள். 


"சாரு, உங்கிட்ட அவகேடோ நம்பர் இருக்கா? அன்னைக்கி வாங்குன விசிட்டிங் கார்ட எங்க வச்சேன்னு தெரியல." என பைரவி, தீஷித் தந்த பர்ஸ்னல் நம்பரைத் தேடிக் கொண்டிருந்தாள். 


"எதுக்கு டி அது?" என்றவளும் சேர்ந்து தேடினாள். 


" அவெங்கிட்ட பேசணும்."


"இந்த நேரத்துலயா?" 


"அப்படி ஒன்னும் லேட் நைட் ஆகிடல. டயம் பத்து தான் ஆகுது." என்றவள் தேடிக் கொண்டே இருக்க,


"அப்படி என்ன பேசப் போற?" 


" ஏன் உனக்கு தெரியாதா? இதோ கிடைச்சிடுச்சி. நான் உனக்கு தோச ஊத்துறேன். பொடி இருக்கு. சாப்பிட்டுட்டு இந்த மாத்ரைய போடுட்டு தூங்கு, தலவலி போய்டும்..." எனத் தன் வேலையைச் செய்ய, சாருவிற்குப் பாண்டியின் நினைவு வந்தது. 


நாம் எதை சொன்னாலும் என்ன திட்டானாலும் காதில் வாங்கி கொள்ளாது பாண்டியின் நேசம், பைரவி தன் மேல் வைத்திருக்கும் நட்பை ஒத்தாக சாருவிற்கு தோன்றியது. உடன் அவனால் தான் தன் வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. அது சில ஆண்டுகளுக்கு முன் தான் கரை கடந்து சென்றுள்ளது. அதன் தாக்கத்தால் சிதிலமடைந்து கிடக்கும் தன் வாழ்வைச் சரி செய்வதாக மீண்டும் அவனே வருவது ஆபத்தாக தோன்றினாலும் உள்ளுக்குள் ஓர் இதம். ஏன் என்று தான் சரியாக தெரியவில்லை. 


"ஹலோ… மிஸ்டர் தீஷித்." 


" Ya... it's me here… who is that? " எனக் குரல் இழுவையாக ராகம் போட்டு கிணற்றுக்குள் இருப்பது போல் கேட்டது. தூக்கத்தில் இருந்திருப்பான் போலும். வேகமாக கடிகாரத்தை பார்க்க, அது பதினொன்றைக் காட்டியது. 


'பெரிய பிஸ்னஸ் மேனுங்கிறான். இவ்ளோ சீக்கிரமாவா தூக்குவான்! அப்றம் பிஸ்னஸ்ஸும் படுத்து தூங்கிடாது.' என்ற கேள்வியை மனதிற்குள் கேட்டவளுக்கு அவளின் மன சாட்சியே பதில் சொல்லியது. 


'நீ தான் கோட்டான் மாதிரி கொட்ட கொட்ட முழிச்சிட்டு இருந்தா அவனும் ஆந்தைக்கி போட்டியா நைட் டியூட்டி பாக்கணுமா என்ன! ' எனக் கேலியாக அது சொல்ல, 


'ரைட்டு விடு… வராத ஓடிடு… ' என அதை சமாதானம் செய்வதற்குள், 


"Hello... Hello… யாரு பேசுறது?" எனப் பல முறை கேட்டுவிட்டான் தீஷித்‌. பதில் வரதா போக, 


"பைரவி…" என வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்பது போல் இதமாய் மெதுவாக வந்தது ஆடவனின் குரல். அது இரவு நேர தென்றல் காற்றாய் குளிர் பரவச் செய்தது பைரவியின் உள்ளுக்குள். இத்தனை மென்மையாக பேச முடியுமா எனும் அளவுக்கு இருந்ததால். 


" பைரவி... " இம்முறை சத்தமாக வந்தாலும் மென்மையில் மாற்றம் இல்ல. 


அவளின் அலைபேசி எண் அவனிடம் இருந்த போதும் பெண்ணவளுடன் பேச ஆடவனுள் தயக்கம். அதை விட கால் செய்து என்ன பேச என்று தெரியாததால் அழைக்கவில்லை. இன்று அவனின் டாம் கேர்ளே அழைக்கவும் ஆச்சர்யமாகிப் போனது.


"எஸ்… பைரவி தான்." சிறிய குரலில்..


"What a pleasant surprise! நீயா எனக்கு கால் பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்லை." என மகிழ்ந்து போனவன்,


"ஒரு நிமிஷம் எதுவும் பிரச்சனையா? ஏன் இந்த நேரத்துல கூப்பிட்டிருக்க? are you okay?" என அக்கறையாகப் படபடத்து பேச, 


" okay தான்." என்றபோது அவன் இழுத்து பிடித்த மூச்சை நிம்மதியுடன் விடும் சத்தம் கேட்டது.


"எதுக்கு கால் பண்ண?"


" அது நான் அன்னைக்கி கேட்டேனே என்னோட ஃப்ரெண்டு கால் ஹிஸ்டரி வேணும்னு. "


"நான் ஒன் வீக் ஆகும்னு சொன்னே. " 


"எஸ்… சொன்னிங்க தான். பட்… நா... நான்… உங்கள மீட் பண்ணி சில விசயத்த பர்ஸ்னல்லா பேசணும். சோ…" என இழுக்க, தீஷித்திற்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. தூக்கத்தில் கனவு ஏதும் காண்கிறோமா எனத் தன் கையையைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான். 


" சோ…"


"உங்க ஃபீரி டயம் என்னன்னு தெரிஞ்சிக்கலாமா? ஏன்னா அப்பாய்மெண்ட் இல்லாம உங்கள பாக்க உங்க ரிசப்ஷனிஸ்ட் அலோ பண்ண மாட்டாங்க. மொறச்சிட்டே இருப்பாங்க. அதான் உங்க செட்யூல் என்னன்னு தெரிஞ்சிக்க கால் பண்ணேன்."


"நாளைக்கி ஈவ்னிங்." என அவன் ஆரம்பிக்கும் போது,


"நாளைக்கி சன்டே. அப்ப முடியாது." என வேகமாகத் தடுத்தாள் அவள்.


"வெய்?"


"அது நான் நாளைக்கி நிறைய ப்ளான் வச்சிருக்கேன். வீக் டேஸ்ல எதாவது நாள் சொல்லுங்க. அதுவும் வெளில எங்கயாது மீட் பண்ற மாதிரி ஈவ்னிங் டயம்மா இருந்தா பெட்டர். ஆஃபீஸ்ஸா இல்லாம."


" ஏன்?"


"ஏன்னா உங்க ரிசப்ஷனிஸ்ட் பார்வைல நான் பட விரும்பல. ஒன்னு ரெண்டு வார்த்த பேசுறததுக்குள்ள ஓராயிரம் மொற டிஸ்டப் பண்ணும் அந்தப் பொண்ணு. " என்றாள் 


"Tuesday?" 


"ஹாங்… "


"Coming Tuesday மீட் பண்ணலாம். என்னோட வீட்டுல. "


" வாட்!!" அதிர்ச்சியாக அவளின் குரல் வர. 


" ஏன் இவ்ளோ ஷாக். என்னோட வீட்டுல அம்மா சிஸ்டர்ன்னு எல்லாரும் இருக்காங்க. அத்தோட அன்னைக்கு ஒரு ஃபங்ஷன். அதுனால வீட்டுல நிறைய பேர் இருப்பாங்க."


"நிறைய பேர் இருந்தா நாம எப்படித் தனியா பேசுறது?"


"பேசலாம்."  


பைரவி சற்று யோசித்தாள். ‘கொஞ்சம் ஓவரா போறமாதிரி இருக்கோ!’ என்று..


"என்னோட அம்மாக்கு பிறந்த நாள். ஒரு ஃப்ரெண்ட்டா நான் உன்ன இன்வைட் பண்ணலாம்னு இருந்தேன். அப்ப பேச முடியலன்னாலும், அடுத்த நாள் நாம மீட் பண்ணலாம். நீ சொல்ற டயத்துக்கு." என இரு சந்திப்புகளுக்கு அடிப்போட, 


"ஓகே…" என்றாள் அவள். 


அவருக்குப் பிடித்தது பிடிக்காதது என அறிந்து அவருக்கு ஏற்றார் போல் நாளை ஒரு  கிஃப்ட் வாங்க வேண்டும் என நினைத்தவள் உடனே காலை கட் செய்யாது தீஷித்தின் அன்னையை பற்றி கேட்க, பேச்சுக்கள் இதமாய்ச் சில மணி நேரங்கள் நீடித்து முடிவடைந்தது‌‌.


‘தீஷித்துக்குப் பைரவிய கரெக்ட் பண்ண ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. யூஸ் பண்ணிப்பானான்னு பாக்கலாம்.’ 


தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி

பனி 48

பனி 50

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...