முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 51

 

அத்தியாயம்: 51



திரையில் தெரிந்த நம்பருக்கு அழைப்பு விடுக்கவா வேண்டாமா என வெகு நேரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் தாமரை. 


கால் செய்து பேசும் அளவுக்கு தைரியம் இல்லை. அதே நேரம் பேசாமல் இருக்கவும் மனம் சம்மதிக்கவில்லை. மதில் மேல் பூனை போல் மனம் தத்தளிக்க, மாலை பொழுதில் கண்ட ராக்கியின் கோப முகம் நினைவு வந்து பச்சை நிற பட்டனை அழுத்தச் செய்தது. 


அழைப்பு சென்று கொண்டிருப்பதன் அடையாளமாக சத்தமிட, அது எடுக்கபட வில்லை. கடைசி ரிங் இது தான் எனும் போது ஏற்கப்பட்டது அந்த அழைப்பு. 


"ஹலோ…" என்ற குரலில் போதை இருந்தது. அதை கேட்டவளுக்குள் அடி வாங்கியது போல் ஒரு உணர்வு. 'இவரு குடிப்பாரா?' என நினைத்தவள்  சத்தமில்லாமல் அழ தொடங்கி விட்டாள்.. 


ஏனெனில் பாண்டியாகட்டும் கண்ணாயிரமாகட்டும் அவள் வீட்டில் ஆண்கள் யாரும் குடித்து பார்த்து இல்லை. ஊரில் மற்றவர்கள் குடித்துவிட்டு மனைவியை இழுத்து போட்டு தெருவில் அடிக்கும் காட்சிகளைக் கண்டவளுக்கு குடிப்பவர்களைக் கண்டால் பிடிக்காது. 


பாவம், முதலில் அவளை ஹைவேஸ் டார்ச் லைட் கும்பலுடன் ஒப்பிட்டு பேசி குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தவன் இப்போது குடிப்பழக்கத்தின் காரணமாக சிவப்பு கோடு போடும் அளவுக்கு பெயில் ஆகி தாமரையின் மனதை விட்டு நீக்கப்பட்டு விடுவான் போலிருக்கிறதே! ராக்கி பாய்.. உனக்கு பைய் பைய் தான்..


"யாருப்பா அது. ஃபோன் பண்ணிட்டு எதுவும் பேசாம இருக்குறது. Who are you?" என உலறி பேச,


".... " பேசும் துணிவை இழந்து விட்டாள் பெண். உடனே சிவப்பு பட்டனை அழுத்தி இணைப்பை துண்டித்து விட, 


"மச்சான் யாருன்னு தெரியல. எனக்கு கால் பண்ணி விளையாடுறாங்க. நான் என்ன ப்ளே க்ரவுண்டா? எல்லாரும் வந்து வந்து வெளாண்டுட்டு போக. நான் மனுஷன் டா. ரத்தமும் சதையும் இருக்குற ஆறடி மனுஷன். ஆனா யாருமே என்னை அப்படி நினைக்கல. யாருமே என்னைப் புரிஞ்சிக்க முயற்சி பண்ணல. எல்லாம் உம் பொண்டாட்டியால வந்தது. 


நீ அவள டைவர்ஸ் பண்ணாலும் பண்ண ஏன்டா லேட்டா பண்ண. கல்யாணத்துக்கு முன்னாடியே பண்ணிருந்தேன்னா இன்னைக்கி நான் நிம்மதியா இருந்திருப்பேன்ல. எல்லாத்துக்கும் காரணம் நீ தான்." அவனின் குரலில் வலி நிறைந்திருந்தது. கூடவே கண்ணீரும் விழிகளை நிறைத்திருந்தன. 


" ஆமா மச்சா. நாந்தா காரணம்.‌ ச்ச… ஏ வாழ்க்கைல நான் எடுத்து ஒரே தப்பான முடிவு அவள கல்யாணம் பண்ணிக்கணும்னு உறுதியா நின்னது தான். அன்னைக்கே சித்தி சொன்னாங்க. இவா வேண்டாம் அடக்க ஒடுக்கமா ஒருத்திய பாப்போம்னு. நாந்தா என்னை அடக்கம் பண்ற மாதிரி ஒருத்திய தேர்ந்தெடுத்திட்டேன். பத்தாததுக்கு உனக்கும் சேத்து சவப்பொட்டி ஆர்டர் பண்ணிட்டேன்‌. நான் ஒரு முட்டாள் டா. அவா விசயத்துல நான் ஒரு லூசு. " எனக் கத்தினான் மது மதுக்கின்னத்துடன். 


"நீ என்ன மச்சி பண்ண? நாந்தா வாலெண்டரியா வந்து விழுந்திட்டேன். நீ சொல்லிக்கிட்டே தான் இருந்த. நாந்தா கேக்கல. நீ ஆர்டர் பண்ண சவப்பெட்டில கண்ணத்திறந்திட்டே போய் படுத்திடேன். நல்ல வேலை பொதச்சி மண்ணப்போட்டு மூடுறதுக்கு முன்னாடி கடவுள் என்னை காப்பாத்திட்டான். Hey God... You are all ways great. great ன்னா great மட்டுமில்ல அதுக்கு மேலய்யா நீ. நீ தங்கமான மனுஷெ. மனுஷென்…" எனச் சரக்கை உள்ள இறங்கி வார்த்தைகளை வெளிய கொட்ட, மதுவை விட ராக்கி தான் அதிகம் குடித்தான். காயம் பட்டிருக்கிறான் போலும்.


காயம் பட்ட நெஞ்சை ஆல்ஹாலால் ஒத்தடம் கொடுக்கும் படி என்ன நேர்ந்தது. மாலையில் தான் அவன் மனம் கவர்ந்த தாமரையைப் பார்த்து பேசி விட்டானே! பிறகு ஏன் வாழ்க்கையையே வெறுத்தது போல் பேச வேண்டும். 


வெறுப்பு தான். அது வாழ்க்கை மீது அல்ல. அந்த வாழ்க்கையில் விளையாடிய தன் முன்னாள் காதலியால் வந்தது. 


அதான் திருமணம் வரை சென்று, பத்திரிக்கை எல்லாம் கொடுத்து மறுநாள் குடும்பஸ்தனாக மாறி இருக்க வேண்டிய புதுமாப்பிள்ளை ராதா கிருஷ்ணனை, பேச்சுலராகவே இரு எனத் திருப்பி அனுப்பியவளைப் பார்த்து விட்டான். அதற்கு ஏன் பைரவியைத் திட்ட வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அதற்கு மாலுக்குள் மீண்டும் செல்வோம்.


வந்த வேலை இனிதே முடிந்து அனைவரும் புறப்பட, பைரவி சாருவையும் தாமரையும் இழுத்து கொண்டு ஒரு கிஃப்ட் ஷாப்பிற்குள் சென்றாள். த்ஷித் அன்னையின் பிறந்த நாளுக்குப் பரிசை தேர்ந்தெடுக்க. 


"இதோ பாரு இருபது நிமிஷத்துல நீங்க திரும்பி வரலன்னா ஐயனார ஏத்தி விட்டுடுவேன் பாத்துக்க. அப்றம் அவரு கைல அருவாள சுத்திட்டு குதிரைல வருவாரு." என மிரட்டி தான் அனுப்பினான் ராக்கி. அவன் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே முடித்து விட்டு சந்தோஷமாக மால்லை விட்டு வெளியேறினர். 


அப்போது படிக்கட்டின் கை பிடியைத் தடவியபடி நடந்து வந்த தாமரையின் விரலில் எதுவோ ஒன்று கீற, ரத்தம் வரத் தொடங்கியது. சிறிய காயம் தான். ஆனாலும் மருந்து போடுவது நல்லது என்று அருகில் உள்ள மருந்து கடைக்குள் சென்றனர் பைரவியும் ராக்கி பாயும்.


"அண்ணா... ஒரு டெட்டால் பாட்டில்… அப்றம் பேண்டேஜ்… காட்டன்… " என பில் போடும் இடத்தில் நின்றிருந்த ஆளிடம் பைரவி வேண்டியதை அடுக்க, கடையில் சற்று கூட்டமாக இருந்ததால் சிறு தாமதமானது. வெளியே நின்றிருந்த ராக்கி கண்ணாடி வழியே எதையோ பார்த்து விட்டு வேகமாக உள்ளே வந்தான். வந்தவன் அங்கிருந்த கடை ஊழியரிடம்,


" Excuse me… ரெண்டு காண்டம்… ஸ்டாபெரி அண்டு சாக்லேட் ப்ளேவர்ல." எனச் சத்தமாக சொல்ல, அனைவரும் அவனைத் திரும்பி பார்த்தனர். பைரவி குழம்பி விட்டாள். இதை எதற்கு வாங்குகிறான் என்று‌. 


அவன் கேட்டதை எடுத்து குடுக்காது ஊழியர் வேறு வேலை பார்க்க, " ஹலோ!! காது கேக்கலயா?" எனக் கத்தியவன் தன் தேவையைக் கத்தி அழுத்தமாகச் சொல்ல, 


கடை முதலாளி வந்து எடுத்துக் கொடுத்தார், "ஏ அவங்க குடுக்க மாட்டாங்களா!" என வீம்பாக பேச,


" என்ன தம்பி வேணும் உங்களுக்கு? நீங்க கேட்டத தான் குடுத்திட்டோமே. அப்றம் என்ன! கிளம்புங்க.. " என்க, ராக்கி அவரிடம் சண்டைக்கு நின்றான்.


"அண்ணா என்ன பண்றீங்க. பப்ளிக் ப்ளேஸ்ல இப்படியா இன்டீசன்ட்டா பிகேவ் பண்ணுவிங்க. வாங்க. " எனப் பைரவி அவனை இழுத்து சொல்ல முயலும் போது தான் கண்டாள், நிவி என்கிற நிவேதாவை. பைரவியின் தோழி.


"நிவி!! நீ சென்னைலயா இருக்க? எப்ப வந்த? இங்க வேல பாக்குறியா? ஏன்?" எனக் கேள்விகளை அடுக்கியவளின் முகத்தில் சந்தோஷம் தான் இருந்தது. 


கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின் தோழியைப் பார்க்கிறாள். திருமணம் முடிந்து வெளிநாட்டில் செட்டிலாகி இருப்பாள் என நினைத்தவளை மருந்துக்கடையில் வேலை பார்க்கும் ஊழியராக பார்க்கிறாள். அதுவும் கழுத்தில் தாலியில்லாது இடையில் ஒரு வயது குழந்தையுடன். சோர்ந்து அனைத்தையும் இழந்தவள் போல் நிவி இருக்க, தோழிக்கு என்னானது என மனம் துடித்தது. 


"உனக்கு கர்மா மேல நம்பிக்க இருக்கா பைரவி. எனக்கு இதுவர இல்ல. ஆனா இப்ப வருது. சிலர பாக்கும் போது நம்பிக்க தன்னால வந்திடுது. நாம எத யாருக்கு செய்றோமோ அது நமக்கே வந்து சேரும். கர்மா இஸ் பூமராங். ஹாஹா… இப்ப தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்படி ஒரு கோலத்துல பாக்க வேண்டியவங்கள பாக்கும் போது. நல்லவேள நான் தப்பிச்சிட்டேன்னு நினைக்க தோணுது." என நிவியை ஏற இறங்க பார்த்த படி சொல்ல, அவள் ராக்கியை எதிர் கொள்ள முடியாது தலை குனிந்து கொண்டாள். 


இருந்தும் விடாது அவனும் குனிந்து, அவளிடம் வாங்கிய பாக்கெட்டை நீட்டு, "இதுக்கு பதிலா ஸ்டாபெரி ஃப்ளேவரே தந்திடுங்க. வேற ஃப்லேவர் இருந்தாலும் எனக்கு ஓகே தான். உங்களுக்கு எது பிடிக்குமோ அத குடுங்க." என்க, அனைவரின் கவனமும் இவர்கள் இருவரின் மீதே இருக்க, நிவிக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. இந்தச் சூழ்நிலை அவளை சுற்றி குழியை உண்டாக்கி உயிருடன் புதைப்பதைப்‌ போல் இருக்க தன் குழந்தையுடன் கடையை விட்டு வெளியே சென்றாள்.  


ராக்கியின் இந்தச் செயல் பைரவிக்கு அநாகரிகமாக பட்டது. எவ்வளவு தான் கோபம் இருந்தாலும் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் இப்படி நடந்து கொள்ள கூடாது. அவனின் மீது கோபம் வந்த போதிலும், முதலில் நிவியைக் கவனிப்பது தான் சரி எனப் பட, கண்ணீருடன் சென்ற தோழியைப் பின் தொடர முயன்றாள் பைரவி. ராக்கி பைரவியின் கரத்தைப் பற்றி இழுத்து வந்தான்.


"விடுங்க அண்ணா.. விடுங்க." என அவள் எத்தனை கத்தியும் ராக்கி விடாது இரும்பு பிடியாக பிடித்து அவளை இழுத்து வந்தான். பாண்டியின் காரின் அருகில் வந்தவர்களை மற்ற மூவரும் அதிர்ந்து போய் பார்க்க,


"என்னாச்சி பைரவி? ஏ அவள இழுத்திட்டு வர்றிங்கண்ணா. அண்ணா விடுங்க அவள. அண்ணா… ராக்கி அண்ணா… " எனச் சாரு உளுக்கியும் அழுந்த பிடித்த கரத்தை விடவில்லை. 


"ராக்கி அண்ணா விடுங்க.. ஏன் இப்படி நடந்துக்கிறிங்க? நாந்தா உங்க மேல கோபப்படணும். ஒரு பொண்ணுக்கிட்ட இப்படியா பிகேவ் பண்ணுவிங்க. அதுவும் பப்லிக் ப்லேஸ்ல. பொறுக்கி மாதிரி இருந்தது உங்க பிகேவியர். ரொம்ப அரகெண்டா பிகேவ் நடந்துக்கிறீங்க." 


"எஸ் arrogant தான். பொறுக்கி தான். யாரால அப்படி மாறுனேன். அவளால… ****... அவள பாத்தும் அடிச்சி கொல்லாம உயிரோட விட்டுட்டு வந்திருக்கேன்னு சந்தோஷப்படு." என்றவன் கோபமாக காரின் டயரை எத்தி,


"துரோகம்… நம்பிக்க துரோகம்... ச்ச… விடிஞ்சா பையனுக்குக் கல்யாணம்னு ஆசையா இருந்த எங்கப்பா அம்மாக்கு அவ பண்ணது துரோகம். எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்றம் பேசிக்கலாம்னு நான் அவ்ளோ தூரம்  சொல்லியும் சரின்னு சொல்லிட்டு நைட்டோட நைட்டா மண்டபத்த விட்டு ஓடிப் போயி என்னோட நம்பிக்கைய சிதைச்சி, என்னையும் எங்குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி, எல்லார் முன்னாடியும் அவமானத்துல தலை குனிய வச்சவள, ஒன்னும் பண்ணாமா வந்திருக்கேன். ச்ச… 


என்னை விட எவனோ பெஸ்டுன்னு போனவள உண்டு இல்லன்னு ஆக்கிருப்பேன். கைல குழந்தைய வச்சிருந்ததுனால தப்பிச்சிட்டா. இல்ல… " என நிவியை வாய்க்கு வந்து படி பேசினான் ராக்கி. 


அவனின் வலி அது. திருமணம் வரை சென்று அது நடக்காது நின்றதோடு வேறு ஒருவரை அடுத்த சில மாதங்களுக்குள் கணவன் என்று அறிமுகம் செய்து வைத்தால், காதல் கொண்டிருந்த ஆணின் மனம் எத்தனை பாடு பட்டிருக்கும்‌. அது அத்தனையும் அவளை நேரில் கண்ட போது வெளி வராமல் இருந்தால் ஆச்சர்யம் தான்.


"நிவிய பாத்தியா?" எனச் சாரு கேட்க, அவள் பதில் சொல்லும் முன், 


"ம்… பாத்தோட மட்டுமில்ல நல்லா இருக்கியான்னு நலம் விசாரிச்சி விருந்துக்கு கூப்பிட்டுருக்கா. உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா? அவளால தான் உனக்கும் உம்புருஷனுக்கும் முதல் முதல்ல சண்ட வந்தது. பெரிய சண்ட… மறந்துட்டியா? "


"எங்களுக்குள்ள நடந்த பிரச்சனைக்கு காரணம் நிவி கிடையாது. உங்க ஃப்ரெண்டு தான்." என்றாள் பைரவி இருகரங்களையும் கட்டிக் கொண்டு. அதைக் காதில் வாங்காது.


"இவ பண்ணதுக்கு நீ மதுவ கொற சொல்ற. ச்சி.. இப்படி ஒரு ஃப்ரெண்டு கிடைச்சா எல்லார் குடும்பமும் விளங்குன மாதிரி தான். நீ எதுக்கு அவக்கிட்ட போய் நலம் விசாரிக்கிற." என நிவியிடம் சென்று பைரவி பேசியது தவறு என்று கூறி வாதிட,


"இவ்ளோ நேரம் அவள நீங்க கண்டபடி திட்டுனிங்க. நா எதுவும் சொல்லல. ஏன்னா அவ உங்கள ஏமாத்தி காயப்படுத்திட்டா. அதுக்கு நீங்க பழி வாங்க பண்றிங்க. கோபத்துல எதேதோ சொல்றிங்க. ஓகே… ஆனா நாங்க ஏன் என் ஃப்ரெண்டு கூட பேசக் கூடாது. என்னைப் பேச கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு என்ன உரிம இருக்கு?" எனக் கடைசி வார்த்தையை உச்ச ஸ்வரத்தில் கத்த, ராக்கி அமைதியாகி விட்டான்.. 


"நீங்களும் உங்க ஃப்ரெண்டு மாதிரி தான். தன்னச் சுத்தி இருக்குறவங்கள எப்பயும் தன்னோட கண்டோல்லயே வச்சிருக்கணும்னு நினைக்கிறீங்க. நீங்க சொன்னா நாங்க அதச் செய்யணும். பேசுனா பேசணும்.. பேசக்கூடாதுன்னு பேசக்கூடாது. மொத்ததுத்துல நீங்க போடுற கட்டளைய நிறைவேத்துறதுக்காக தான் நாங்க இந்த பூமில பிறந்திருக்கோம். 


ச்ச… நீங்க கண்ட்ரோல் பண்ணி வச்சிருக்க நான் ஒன்னும் உயிரில்லாத பொருள் இல்ல. எனக்கும் ஃபீலிங்ஸ் உண்டு. சுதந்திரமா எல்லா முடிவையும் சுயமா யோசிக்கிற அளவுக்கு வயசும் இருக்கும், அறிவும் இருக்கு.


ஸ்கூல்ல இருந்தே நானும் அவளும் ஃப்ரெண்டு. மத்தவங்களுக்கு அவ நல்லவளா கெட்டவளா எனக்கு அது தேவையில்ல. அவ என்னோட ஃப்ரெண்ட். அவளுக்கு ஒரு நல்லதுன்னா அதச் செய்ய அவ கூடவே இருப்பேன். அதத் தடுக்க அவருக்கோ உங்களுக்கோ உரிம கிடையாது. எனக்கு என்ன தோணுதோ அதச் செய்ய யாரோட அனுமதியும் தேவையில்ல. 


உங்களுக்கு அவக் கிட்ட பிரச்சனன்னா போங்க சண்ட போடுங்க. எப்படிக் காதலிச்சி கல்யாண மேட வர என்னைக் கூட்டீட்டு வந்து, ஓடிப் போனன்னு பிரச்சன பண்ணுங்க. இப்ப பண்ணிங்களே அது மாதிரி என்ன வேண்ணாலும் பண்ணுங்க. ஐ நோன்ட் கேர்… பட், ஒரு பொண்ணா, என்னோட ஃப்ரெண்டுக்கு நான் குடுக்கு வேண்டிய சப்போட்ட குடுத்திட்டே தான் இருப்பேன்." என்றவள் காரில் ஏறி அமர்ந்து கொள்ள,


ராக்கிக்கும் கோபம் கோபமாக வந்தது. நிவி தான் பைரவிக்கும் மதுசூதனனுக்கும் இடையே வெடித்த பிரச்சனைகளைப் பற்ற வைத்த தீக் குச்சி. அது தெரிந்தும் அவளுக்கு ஆறுதலாக பேசுகிறாள் என்பது வருத்தத்தையும் கோபத்தையும் தந்தது. அதே கோபத்துடன் பைக்கில் புறப்பட்டு சென்றான் அவன். 


ஒன்றைப் புரிந்து கொள்ளவில்லை அணுகுண்டோ இல்லை வெடிகுண்டோ. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அங்கு வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் உள்ளது. அதைத் தீக்குச்சி கொண்டு பற்ற வைக்கவில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அது வெடித்து தான் தீரும். அதற்கு தீக்குச்சியைக் குறை சொல்லி பலன் இல்ல.. 

💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...