முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 52


 

அத்தியாயம்: 52



பகலவன் உச்சிக்கு வந்து நண்பகலில் கொதித்துக் கொண்டிருக்க, ராக்கி போர்வை மூடிக் கொண்டு உறங்கி கொண்டிருந்தான். 'இந்த வெயில்லயும் இவனுக்கு போர்வ வேண்டி கெடக்கு. ' என அவனின் அன்னை அதையும் உருகிக் கொண்டு செல்ல, இப்போது சூரிய கதிர் அவனின் நிறத்தை கருக்கிக் கொண்டிருந்தது. 


ஆனால் அது எதையும் உணராது கவுந்தடித்துக் கொண்டு உறங்கியவனின் மீது சில் எனத் தண்ணீர் ஊற்றி எழுப்பி விட்டாள் பைரவி. 


குற்றால அருவியைச் சென்னைக்கு, அதிலும் ராக்கியின் மொட்டை மாடிக்கே கொண்டு வந்து சேர்ந்த பைரவிக்கு நன்றி சொல்ல அடித்து பிடித்து எழுந்தவன். தன் நண்பனை தேடினான். 


"யார தேடுறீங்க?"


"என் உயிர் நண்பன் மதுசூதனன. எங்க அவன? விடியுற வர எங்கூடவே தான் இருந்தான்."


"விடிஞ்சதும் காணப் போய்டாராக்கும்?" என்க, ஆம் எனத் தலை அசைத்தவன், இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தான். அது பார் இல்லை அவனின் வீடு என்று புத்திக்கு உரைத்தபின், எழுந்து தலையணையை எடுத்தவனுக்கு நேற்று நடந்தது நினைவிற்கு வந்தது.


"நீயா!! நீ எதுக்கு இங்க வந்த? முதல்ல உன்ன யாரு வீட்டுக்குள்ள விட்டா? நீ தான் உன் நண்பிக்கு ஆறுதலா இருக்கப் போறேன்னு எங்கேயோ போனவளாச்சே. அப்படியே போய்டு. திரும்பி வந்திடாத. போம்மா இங்கருந்து. " எனக் கத்த, 


"நீங்களும் அவரும் ஃப்ரெண்ட்ஸ் தான் அதுக்குன்னு ரெண்டு பேரும் ஒரே டயலாக்க ஒரே மாதிரி மாத்தி மாத்தி பேசணுமா என்ன! அவர மாதிரியே கத்துறீங்க.. " என்றபடி படி இறங்கி வீட்டிற்குச் செல்ல, 


"இது உனக்குன்னு எழுதி வச்ச டயலாக்கு. உனக்கே உனக்குன்னு சொந்தமான வசனம் அது. யாரு வேண்ணாலும் யூஸ் பண்ணிக்கலாம். காப்பி ரைட் பிராப்ளம் கிடையாது. முதல்ல நீ கிளம்பு வீட்ட விட்டு. ஏய் வாசல் இந்த பக்கம்." எனக் கத்திக் கொண்டே ராக்கியும் அவளின் பின்னால் செல்ல,


"இப்பத்தான்டா வீட்டுக்கு வந்திருக்கு. வந்த பிள்ளைய வந்ததும் போச் சொல்ற. இந்தாம்மா காஃபி. உனக்காக நான் பூரியும் கொத்துக்கறி குழம்பும் வச்சிருக்கேன். சாப்டுட்டு போ." என வாஞ்சையுடன் கன்னம் தடவி சொல்லிச் சென்றார் ராக்கியின் அன்னை பரமேஸ்வரி. 


"எது நீங்க பூரி சுடப் போறிங்களா? அதுவும் மத்தியானத்துக்கு. ம்மோய்... ரத்ததுல ஊருப்பட்ட கொலஸ்டிரால்ல வச்சிட்டு எண்ணைல சுட்டு சாப்பிடப் போற!" என்றவன் பைரவியை விட்டு விட்டு தாயிடம் சண்டைக்கு நின்றான்.


"பூரின்னா எண்ணெய்ல தான் சுடுவாங்க ராக்கி பாய். தண்ணீல சுடுற மாதிரி சில யூட்யூப் வீடியோ பாத்திருக்கேன். செஞ்சிருக்கேன். பட்… அது நல்லா இருக்காது. நாக்குன்னு ஒன்ன வாழ வைக்க."


"கண்டத திம்ப… சரியா? " என்க, பைரவி ஆம் என இதழ் விரித்து பொம்மை போல் தலையசைத்து புன்னகை சிந்தினாள். அது அவனின் கோபத்தை பனியாய் உருக்க,


"இவள பாத்திட்டே இருந்தா இருக்குற கோபம் கொறஞ்சி போய்டும். நீ போ வெளிய. " எனல் துரத்தியவனைக் கண்டு கொள்ளாது சாப்பிட அமர்ந்தாள். ராக்கியின் அத்தை மகன் ராக்கியை போலவே கத்தினான்.   


அதாகப்பட்ட மதுசூதனனையே அடக்கி ஆளத் தெரிஞ்சவ நம்ம பைரவி, வாயில் ஜொல்லு ஒழுக எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் பதின்ம வயது சிறுவனைச் சமாளிக்க தெரியாதா என்ன! அவனின் கையில் பெரிய சைஸ் சமோசாக்களைத் திணித்து அதில் ஒன்னு தூக்கி வாயில் வைத்து அழுத்த, பையன் கப்சிப் என்று அடங்கி விட்டான். 


"அவன வழிக்கு கொண்டு வர உன்ன விட்டா வேற யாரு இருக்கா? " என ராக்கியின் அத்தை சிலகித்துக் கொண்டார். 


"ரொம்ப பெறும. எப்படிம்மா இப்படி எல்லாரையும் உனக்கு ஃபேனா மாத்தி வச்சிருக்க. எங்கருந்து வித்தைய கத்துக்கிட்ட." என்றான் ராக்கி கேலியாக,


"என்ன கத்துக்கிட்டு என்ன பிரயோஜனம். உங்க ஃப்ரெண்ட கவுக்க முடியல. அவர மட்டும் கவுத்திட்டா நான் டாக்டர் பட்டம் வாங்குன மாதிரி சந்தோஷத்துல குதிக்க ஆரம்பிச்சிடுவேன்." என்றவள் ராக்கியின் தாய் தந்த பூரியை உள்ளே அனுப்பினாள். அவளை முறைத்தபடி அமர்ந்திருத்த ராக்கியின் தட்டையும் நிரப்பி வைத்தாள். மதுசூதனன் வந்து எண்ணெய்யை பற்றி பாடம் நடத்தும் முன் உண்டு முடித்திட வேண்டும் நினைத்து முழுங்கத் தொடங்கினான். 


"ம்மா… நம்ம ராக்கி பாய்க்கு எப்பப் பொண்ணு பாக்க போறிங்க. பாவம் அவரும் எத்தன நாள் தான் ஒண்டிக்கட்டையாவே இருப்பாரு." என்றாள் ராக்கியைப் பார்த்த படி.


"எங்கம்மா நாங்க சொல்ற எதையுமே கேக்க மாட்டேங்கிறான். கண்டதையும் பேசிட்டே திரியுறான். ஹிம் என்ன பண்ண!" எனப் பரமேஸ்வரி அலுத்துக் கொள்ளல,


"ம்ச்… கண்டதையும் சிந்திக்காம இருக்கணும்னா கல்யாணம் மட்டும் தான் சிறந்த வழி.. " என ராக்கியின் தாயிடம் அக்கறையுடன் கூற, அவரும் ராக்கியின் அத்தையும் புலம்பத் தொடங்கினர். 


அவர்களின் புலம்பல் மழையில் இருந்து தப்பித்து பைரவியை இழுத்து வந்தவன், "கல்யாணம் ரொம்ப முக்கியம். இத சொல்லத்தா உன் சாப்பர தூக்கிட்டு வேல வெட்டிக்கு போகாம வந்தியா?" எனக் காட்டமாகக் கேட்டான். 


" என்னோட பாய் நீங்க. உடன் பிறவா சகோதரனான உங்களுக்கு ஒரு பொண்ணு பாத்து கட்டி வைக்க வேண்டியது தங்கையின் கடமை அல்லவா‌. "


"ம்… நாந்தா பாத்தேனே நீ காட்டுன கடமய." என நொடித்துக் கொள்ள,


"ஹிம் நீங்க நேத்து பண்ண வேலைக்கி ஈப்டீசிங் கேஸ்ல உங்கள அரஸ்ட் பண்ணி உள்ள தள்ளாம இருந்தேன்னு சந்தோஷப்படுங்க." எனக் கோபமாக ஆரம்பித்தவள், பின்‌,


"எனக்கு நீங்க  முக்கியம் ராக்கி அண்ணா. அவரோட ஃப்ரெண்டா இல்ல. என்னோட அண்ணனா. என்னோட நான்-வெஜ் மெட்டா. நல்ல பாய் ஃப்ரெண்டா. I need you… 


என்னோட அண்ணனா இப்படி பப்ளிக் ப்லேஸ்ல இன்டீசன்ட்டா பிகேவ் பண்ணாருன்னு என்னால நம்பவே முடியல. உங்களுக்கு அவளப் பழி வாங்கணும்னா வாங்கிக்கங்க. அவளோட கண்ணீர் உங்களுக்கு சந்தோஷத்த தரும்னா ஹப்பியா இருங்க. நீங்க சொன்ன மாதிரி அவளுக்கு இந்த கஷ்டமெல்லாம் தேவ தான். பட் நம்ம கூட உயிருக்கு உயிரா பழகுன ஒருத்தரு, கண்ணு முன்னே கஷ்டப்பட்டா எப்படிப் பாத்திட்டு இருக்குறது? மனசு கேக்காது. 


தப்பே பண்ணிருந்தாலும் விட்டு குடுக்க கூடாது ராக்கி பாய். அது தான் அன்பு. எனக்கு அந்த அன்பு நிவி மேல இருக்கு.‌ அதுனால தான் அப்படி கத்திட்டேன் சாரி.. இனி அண்ணன எதிர்த்து ஒரு வார்த்த பேச மாட்டேன். ப்ராமிஸ்… " 


"ஒரு வார்த்த இல்ல, ஓராயிரம் வசனம் பேசப்‌ போற. சரியா? " என்க, இதழ் மூடியிருந்தாலும் பதிலைக் கண்கள் சிரித்து காட்டிக் கொடுத்து விட்டன. 


"உன் சத்தியத்த சந்திரனுக்கு மறு பக்கம் தான் எழுதி வைக்கணும். போம்மா இங்கருந்து." என விரட்டினாலும், அவள் கூறிய ஒன்று ராக்கியை கவர்ந்தது. விட்டு கொடுக்க கூடாது. அதனால் தான் மதுவைச் சுற்றி சுற்றி வருகிறாள் போலும். 


" இட்ஸ் ஓகே… அட்லீஸ்ட் அதக் காரணமாக வச்சி சந்திரனுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாம்..க்ஷ இந்தாங்க… இத குடுத்திட்டு போகத்தா வந்தேன். " என பேக் மற்றும் சிறு துண்டு காகித்ததையும் நீட்ட, அதை வாங்காது பார்த்தவன்,


"இந்தக் குப்பைய போட எவ்வீடு ஒன்னும் குப்பத் தொட்டி இல்ல."


"ம்ச்… அப்படிலாம் சொல்லக் கூடாது பாய். வாங்காம போனா பின்னாடி வருத்தப்படுவிங்க." என்றவள் இரண்டையும் திணித்தாள். 


"என்னதிது?"


"லேப்டாப்."  


" நான் லேப்டாப் சர்வீஸ் பண்றது இல்ல."


"ம்ச்… பாய் எனக்குச் சுடர் கேஸ்ல உதவி பண்றதா சொல்லிருக்கிங்க. வாக்கு குடுத்திருக்கிங்க. அதுனால இத ஓப்பன் பண்ண பாஸ்வேர்டு தேவப்படுத்து. உங்க ஃப்ரெண்டுக்கு ஹேக் பண்ண தெரியும். என்னோட ஃபோனு லேப்டாப்ன்னு எல்லாத்தையும் நான் பாஸ்வேர்டு சொல்லாமலேயே திறப்பாரு. 


அவருக்கிட்ட குடுத்து ஓப்பன் பண்ணித்தர சொல்லுங்க. நான் போய் கேட்டா இதத் தூக்கி போட்டு உடைச்சாலும் உடைச்சிடுவாரு. 


அத்தோட செஞ்சாத்தா திரும்பி செய்வேங்கிற கொள்கைய விட்டுடுட்டு, செய்யாமலும் செய்யலாங்கிற கொள்கைக்குத் தாவிடலாம்னு இருக்கேன்." 


"உன் கொள்கைய தூக்கி கொல்லைல வைக்க. புரியிற மாதிரி சொல்லு. " 


"ம்ச்… அவர இத ஓப்பன் பண்ணித்தர வச்சாலும் வைக்கலன்னாலும் நா‌ன் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு இருக்கேன். " 


"என்ன ஊர விட்டு போகப்போறியா!" எனச் சந்தோஷமாக கேட்டவனை முறைத்தபடி தன் சாப்பரை ஸ்டார்ட் செய்து ஓட்டிச் செல்ல, ராக்கி காகிதத்தை எடுத்து பார்த்தான். 


"புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதி போஸ் பண்ண காசில்லாம என்னை போஸ்ட் மேன் வேலை பாக்க வைக்கப் போறாளோ!" எனப் புலம்பியபடியே பிரிக்க, அதில் சில எண்கள் எழுதி இருந்தன்.


"என்னாதிது?" என ஒரு நொடி யோசித்தவனுக்கு முதல் எண்ணும் கடைசி எண்ணும் நினைவு வர, "இது.. இது.." என சந்தோஷத்தில் மிதந்தவன்,


"பையூம்மா… லேப்டாப் ஓப்பன் பண்ணியாச்சின்னு வச்சிக்க. ஒரு வாரத்துல அண்ணே இத ஒப்படைக்கிறேன். நீ அழைய வேண்டாம்மா." எனச் சொல்லும் பைரவியைப் பார்த்து கத்த,


"இந்த முறையாது சொதப்பாம நீங்க யாரு என்னென்னு உங்க வரலாறு எல்லாத்தையும் சொல்லி ஓகே பண்ணுங்க பாய்... ஆல் தி பெஸ்ட்.." என அவளும் கத்தி விட்டு சென்றாள்.


'அட  லூசே… நேத்து அவ பண்ண கால ஒழுங்க அட்டன் பண்ணி பேசிருந்தாலே தாமர நம்பரு இது தான்னு தெரிஞ்சிருக்கும்... ச்ச.. உனக்கும் பொண்ணுங்களுக்கும் ராசி இல்லங்கிறது சரியாத்தா இருக்கு.. ' 


தாமரைப் பூவுக்கும்…

தண்ணிக்கும் என்னைக்கும்…

சண்டையே வந்ததில்ல…

மாமன அள்ளி நீ…

தாவணி போட்டுக்க…

மச்சினி யாரும் இல்ல…


எனக் குதுகலமாய் பாடியபடி வந்தவன் தன் ஃபோனை எடுத்து தாமரையிடம் பேச நினைத்து டயல் செய்ய, அதில் அந்த எண்ணில் இருந்து ஏற்கனவே வந்த அழைப்பை காட்டியது. 


"அப்படின்னா... அப்படின்னா… தாமர… என் ஒத்த தாமர நேத்து எனக்கு கூப்பிட்டிருக்கா! ஆனா நா… நான். ஐய்யோ! ராக்கி ராசி சரியா வேல செய்து போலயே." என நொந்து கொண்டவன் தாமரைக்கு அழைப்பு விடுக்கும் நேரம் மதுவிடம் இருந்து கால் வந்தது. சந்தோஷமாக பைக்கில் புறப்பட்டான் அவன். 


நண்பனின் குரலைக் கேட்ட சந்தோஷத்தில் அல்ல. அவன் சொன்ன சேதியில் மகிழ்ந்து போனவன் தன் பைக்க எடுத்துக் கொண்டு தாமரை வேலை பார்க்கும் பள்ளிக்குச் சென்றான். 


சைந்தவியின் குழந்தையை அழைத்து வரச் சொல்லி மது கூறியதால் தாமரையை நேரில் பார்க்க ஆசையுடன் பறந்து விட்டான் ராக்கி. 


"இது cheetah… சிறுத்தன்னு சொல்வோம். இது tiger." எனப் பாடப்புத்தகத்தில் இருந்த படங்களைக் காட்டி தாமரை வகுப்பெடுக்க,


"புலி மிஸ்…" என வகுப்பே ஒன்று சேர்ந்து கத்த, தாமரை அழகாய் புன்னகைத்தாள். 


"குட்… இப்ப நான் கேக்கப் போறது. Which is the strongest animal tiger or cheetah?புலி சிறுத்த இந்த ரெண்டுல எது வலிமையான விலங்கு?" எனத் தன் முன் இருந்த மழலையரைப் பார்த்து கேட்க, அனைவரும் தங்களுக்குள்ளேயே முணுமுணுத்தனர். 


"என்ன பேசுறிங்கங்கிறத சத்தமா சொன்னா எல்லாரும் தெரிஞ்சுப்போம். ம்.. யார் சொல்லப்போறா? கைய தூக்குங்க." என அவர்களைப் போல் பேசி மழலையரைச் சிணுங்க வைத்தாள் தாமரை. 


"மிஸ்…" என ஒரு வாண்டு கரத்தை உயர்த்த, தாமரை சொல் என்பது போல் புருவங்களை உயர்த்தினாள். 


"புலி காட்டுல இருக்கும். சிறுத்து ஊட்டில இருக்கும்." என்க, வகுப்பே சிரித்தது.


"குட்…" எனப் பாராட்டி கன்னத்தில் ஸ்டார் வரைந்தாள். அதைப் பார்த்து பலர் கரங்களை உயர்த்த தொடங்கினர்.


"மிஸ்… புலி zoo ல கூட இருக்கும். நான் பாத்திருக்கேன்." மற்றொரு வாண்டு. 


"சர்கஸ்ல கூட சில நேரம் இத வச்சி வித்த காட்டுவாங்க மிஸ். பெரிய ரிங்ல தீய பத்த வச்சி அதத் தாண்டி குதிக்கச் சொல்லி சொல்லுவாங்க." 


"மிஸ் மெர்சல் படத்துல மேஜிக் ஷோ பண்ணும் போது இத எங்க தளபதி கூட்டீட்டு வருவாரு."


"சும்மா மாஸ்ஸா இருக்கும்."


"பெருசா இருக்கும்." 


"எங்க வீட்டுக்கு வர்ற மியாவ்வ விட பெருசு." எனப் பலர் வாய்க்கு வந்ததைக் கூறி தாமரையிடம் நட்சத்திரத்தைப் பரிசாய் பெற்றுச் சென்றனர்.


"ஓகே… குட்… all off you clap hands. இது ஆர்வமா வந்து பதில் சொன்னா எல்லாருக்காகவும்." என்றாள். கைத் தட்டல் ஒலியுடன் அவர்களின் ஹே என்ற உற்சாகக்குரலும் போட்டி போட,


"பட் இதுவர வந்தது சரியானப் பதில் இல்ல. உங்களுக்கு நான் கேள்விய திரும்ப ஒருக்க கேக்குறேன். புலி, சிறுத்தை இதுல எந்த விலங்கு ஸ்ராங்கானது. எங்க இருக்கும்னு கேக்கல, எது பவர்புல்லா இருக்கும்னு கேக்குறேன். புலியா சிறுத்தையா ரெண்டுல ஒன்னு." என்றவள் கரும்பலகையில் இரண்டின் பெயரையும் ஆங்கிலத்தில் எழுத, வேகமாக ஒரு கரம் உயர்ந்தது. 


"மிஸ் நான் சொல்றேன்.. " என்றது சைந்தவியின் தவப்புதல்வி ஹிரானா. 


" உனக்கு என்ன கேள்வின்னு புரிஞ்சதா? " எனச் சந்தேகமாகக் கேட்க, 


"ஓ… நல்லாவே புரிஞ்சது மிஸ். ஸ்ராங்க தான. இதோ சொல்றேன்." என்ற அது வேகமாக கரும்பலகைக்கு அருகில் சென்றது. 


'இவ்ளோ உறுதியா நடந்து போறத வச்சி பாத்தா பதில தெரிஞ்சி வச்சிருப்பா போலயே.' என்பது போல் அனைவரும் பார்க்க, ஹிரானா சாப்பீஸ்ஸை கையில் எடுத்து, இரு வார்த்தைகளையும் கோடால் இணைத்து, 


" சிறுத்த தான் மிஸ். இதுல c..h..e...e..t..a..h இதுல ஏழு லெட்டர்ஸ் இருக்கு. t..i..g..e..r இதுல அஞ்சி தான் இருக்கு. சோ அதிகமா எழுத்து வச்சிருக்குற சீட்டா தான் பவர்புல்லான அனிமல்." என நாட்டாமை போல் தீர்ப்பைச் சொன்ன சந்தோஷத்தில் இரு கரங்களையும் கட்டிக்கொண்டு பெருமையுடன் நிற்க, அனைவரும் சிரித்தனர். 


அதில் ஒரு சத்தம் மட்டும் மழலையர் மொழியில் இல்லாது தனித்து இருந்தது.


'யாருடா அது நான்-சிங்கா சிரிக்கிறது.' எனக் கழுத்தை திருப்பி பார்த்தால் அது நம் ராக்கி பாய்.


பாய்… பாய்… இந்த முறையாது வாய வச்சி நல்லதாப் பேசி கரெக்ட் பண்ணிடுங்க பாய். ப்ளீஸ்... 


💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...