முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 57

அத்தியாயம்: 57 பைரவி, "அண்ணா… அண்ணா… நான் வக்கீல பாக்கும். "  "சொல்லுங்க என்ன கேஸ்ஸு?" "இல்லண்ணா நான் பாக்க வந்தது வக்கீல‌‌…" "எங்களலாம் பாத்தா வக்கீல் மாதிரி தெரியலயாம்மா. " "இல்லண்ணா." என ஏற இறங்க எதிரில் நின்றவனைப் பார்க்க, ‘நானும் வக்கீல் தான். பாரு கருப்பு கோர்ட் போட்டிருக்கேன்.’ என்பது போல் நின்றவனைப் பார்த்து சிரித்தாள் பைரவி. "எதுக்கு சிரிக்கிற?" என அவன் மிரட்டலாக கேட்க,  "இல்ல கோர்ட்டு போடல. சுவத்துல தொங்க தான் விட்டிருங்கீங்கன்னு கவுண்ட் டயலாக் சொல்ல வந்தேன்." என்றவள் சிரிக்கவும் எதிரில் இருந்தவன் கடுப்பாகவும். "ஸாரி.. நான் உங்கள கேலி பண்ணதுக்காக எம்மேல கேஸ் போட்டுடுவிங்களா?"  "ச்சச்ச அதெல்லாம் போட மாட்டேன்.. அப்படி போடக்கூடாதுன்னா மன்னிப்பு கேக்கணும்... கூடவே நான் ஒரு வக்கீலுங்கிறத ஒத்துக்கிட்டு கேஸ் குடுக்கணும். ஓகேவா?"  "இப்படில்லாமா கேஸ் பிடிப்பாங்க! முதல்ல நீங்க வக்கீல் தானா! நான் எப்படி உங்கள நம்புறது.?" "நம்பும்மா. பாரு அபினாஷ் B.A.B.L." என‌ நேம் போர்டை காட்டிய...

பனி 30

 

அத்தியாயம்: 30


" ஹாய் தீஷ்… என்ன பண்ற?" என்றபடி தீஷிதனின் எதிரில் வந்தமர்ந்தாள் நந்திதா. 


"ஸ்கெட்சும் பென்சிலுமா என்ன பண்ணணுமோ அதத்தா பண்றான். பாத்தா தெரியல. " என்க, நந்திதா முறைத்தாள் தீஷித்தை அல்ல. பதிலளித்த கருணாகரனை.


"தீஷ் நான் உங்கிட்ட பேசுனா நீ பதில் பேசு. இவென்லாம் எதுக்கு பேசுறான். இடியட்.. " எனத் திட்டியவளுடன் சண்டைக்கு நின்றான் கருணா. இருவரும் முட்டி மோதிக் கொள்ள,


"டேய் நிப்பாட்டுங்க டா. இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணிட்டு நம்மல விட்டு பிடிச்சி போகப்போற நம்ம நந்திதா கிட்ட சண்ட போடக்கூடாது. ட்ரீட் தான் கேக்கணும். எப்ப எங்களுக்கு பேச்சுலர் பார்ட்டி தரப்போற. " என்றான் ரத்தன். 


"இன்னைக்கி நைட் பப்புக்கு போகலாம். என்ஜாய் பண்ணலாம். நந்தி செலவுல." என்றாள் அப்சரா ராகம் பாடிய படி…


" ம்ச்... நானே இந்தக் கல்யாணம் நடக்க கூடாதுன்னு இருக்குற கடவுள் அத்தனையையும் வேண்டிட்டு இருக்கேன். இதுல உங்களுக்கு ட்ரீட்டு தருவாங்க ட்ரீட்டு. போங்கடா அங்கிட்டு." எனச் சொல்லி சோகமாக அமர்ந்தாள் நந்திதா.


அவளுக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. ஆனால் வீட்டில் இதைச் சொல்ல முடியாது. தோளை உரித்து விடுவார்.


"ஏன் உனக்கு மித்ரன பிடிக்கல. பாக்கவே ஆளு செம்ம ஸ்மார்ட். சொந்தமா பிஸ்னஸ் பண்றார். கேரக்டர் வைஸ் எங்க எல்லாருக்கும் ஓகே." கருணா. 


"ஓகே வா... உங்களுக்கு ஓசில சரக்கு வாங்கி குடுத்தாங்கையும் ஓகே சொல்றிங்களா." என்க, ஆம் என அனைவரும் அமோதித்தனர்.


" நீ ஏன் கல்யாண வேண்டாங்கிற?" அப்சரா.


"இந்தக் காலத்துல யாராது அரேஜ்டு மேரேஜ் பண்ணிப்பாங்களா. லவ் பண்ணும். மீட்டிங், சேட்டிங், டேட்டிங்னு தனியா ஒரு நாலு வர்ஷம் லிவிங்க் ரிலேஷன்ஷிப்புல இருந்து அவனப் பத்தி நல்லா தெரிஞ்சிக்காம எப்படி மேரேஜ் பண்ணிக்கிறது. " என்க, 


"கஷ்டம் தான்... உன்னோட நிலை எங்களுக்குப் புரியுது. பேசாம நீ வீட்ட விட்டு ஓடிப் போய்டு. அதுக்கு முன்னாடி எங்களுக்கு ட்ரீட் வச்சிட்டு போ. " சொன்னது தீஷித் தான். 


"கரெக்ட் மச்சி.. " என அனைவரும் ஆர்ப்பரிக்க. 


" எந்த பப் போகலாம்? " என கருணா ஃபோனில் தேட, அதை வாங்கி கீழே வைத்தவன்…/,


"பப் வேண்டாம்… டிரிப் போலாம். கூர்க். டூ டேஸ் டிரிப். சாட்டர்டே சன்டே. டிரிப் முடியவும் நந்திய பத்திரமா அவளோட ஹஸ்பெண்ட் கிட்ட சேத்திட்டு. கல்யாணத்த முடிச்சிட்டு வரலாம். அதுவர எல்லாரும் லீவ் சொல்லிடலாம்." எனத் தீஷித் திட்டம் போட்டு கொடுத்தான்.


"கார் வேண்டாம். பஸ் இல்லன்னா டிரெயின்ல போகலாம். ஜாலியா பேசிட்டே, நைட் டிரெயின்ல TTR க்கு தெரியாம பியர் குடிச்சிட்டே." என ரத்தன் சொல்ல,


" இங்க ஒருத்தி கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன்.‌ உயிர் தோழியான எனக்கு அத நிறுத்த வழி சொல்லாம… டிரிப்புக்கு ப்ளான் போட்டுட்டு இருக்கிங்க. ஏய்... உங்க கிட்ட தான்டா பேசுறேன்.. நில்லுங்கடா." எனக் கத்திய நந்திதாவிடம் இருந்த ஃபோனையும், டெபிட் கார்டையும் வாங்கி கொண்டு அனைவரும் சென்றே விட்டனர்.


நைட் ட்ரெயின். பெங்களூரில் இருந்து கூர்க் செல்ல நான்கு மணி நேரம் ஆகும். முன் பதிவு செய்த இடத்தை தேடிப்பிடித்து அனைவரும் செட்டில் ஆகி, கொண்டு வந்த பிரியாணி பொட்டங்களையும் கிரில்டு சிக்கனையும் பிரித்து உள்ளே இறக்கும் முன்னரே கருணாவும் தீஷித்தும் பியர் பாட்டில்களை ஓப்பன் செய்து தொண்டைக்குள் சரிக்க ஆரம்பித்தனர். பாவம் நந்திதா தான் கத்திக் கொண்டே வந்தாள். கல்யாணத்த நிப்பாட்ட வேண்டும் என்று.


ஐந்து பேரும் நண்பர்கள். பீஜி காலேஜ் என்று சொல்லப்படும் +1, +2 இருந்து ஒன்றாகவே சுற்றித் திரிகின்றனர். கருணாகரன் தவிர மற்ற அனைவரின் சொந்த மாநிலமும் கர்நாடகா தான். அவன் மட்டும் தமிழ் வாசி. அவனைக் காதலித்து அவனையே கல்யாணம் செய்து கொண்டு சென்னையில் செட்டில் ஆகி விட்டாள் அப்சரா.


எந்தக் கல்யாணம் வேண்டாம் என்றாளோ… மித்ரனுடன் அந்தக் கல்யாணத்தைச் செய்து கொண்டு இப்பொழுது இரு குழந்தையின் தாய் என்ற உயரிய பதவியில் இருக்கிறாள் நந்திதா. ரத்தனுக்கும் திருமணம் முடிந்தது‌. இப்போது தீஷித் தவிர அனைவரும் குடும்ப இஸ்திரிகள். 


அது காலேஜ் முடித்து விட்டு வேலை தேடலாமா இல்லை மேற்கொண்டு படிக்கலாமா எனத் தீஷித் யோசித்துக் கொண்டிருந்த காலம். அப்போது வெட்டி ஆபீஸர்கள் தான் அனைவரும். கிடைக்கும் வேலையில் சேந்து வாழ்க்கையை சந்தோஷயாக அனுபவித்துக் கொண்டிருந்தனர்.


"இப்பவே ஓப்பன் பண்ணாதிங்கடா. டிக்கெட் செக் பண்ண டீடிஆர் வருவாரு. பாத்தா என்ன நடக்கும்னு தெரியும்ல. " அப்சரா.


"கவலையே படாதே அவருக்கும் குடுக்க ஒரு பாட்டில் எக்சஸட்ராவா வாங்கி வச்சிருக்கேன்‌. உன்னோடதுல இருந்து பங்கு குடுக்க மாட்டோம். டேக் இட்." என ஒரு டின்னை நீட்ட, அதை வாங்கியவள், குடிக்கத் தொடங்கினாள்.


"என்னடா இது டேஸ்டு ரொம்ப பழக்கப்பட்டது மாதிரி இருக்கு. பியர் இப்படி தான் இருக்குமா‌! ஆனா எனக்கு ஸ்ப்ரெயிட் குடிச்ச ஃபீல் தான் இருக்கு." என்க, 


"ஸாரி சரா. நீ குடும்ப குத்து விளக்குன்னு நினச்சி ஷாப்ட் டிரிங்க்ஸ் குடுத்திட்டோம்." என ரத்தன் சொல்ல அவள் முறைத்தாள்.


"உனக்கு எங்க கிட்ட இருக்குற நிஜ பியர் தான வேணுமா. " எனக் கேட்டு தீஷித் அவளின் வாயில் பியரை ஊற்று வந்து ஏமாற்றி ரகளை செய்ய, வெகு சந்தோஷமா அந்த பயணம் ஆரம்பித்தது. சிறிது நேரம் சென்றிருக்கும் அப்போது நந்திதாவின் ஃபோனை சிணுங்க,


"ஸ்ஸூஸ்ஸூ… அமைதியா இருங்க... மித்ரன் பேசுறாரு‌. " என்ற நந்திதாவிற்கு படபடத்து விட்டது.


" ஹலோ... "


"..." 


"நான் அப்சரா வீட்டுல இருக்கேன். சின்ன கெட் டுகெதர். நைட் அவ கூட தான் ஸ்டே பண்ண போறேன். அப்பறமா நாளைக்கு இல்ல மன்டே பேசவா… ம்..." என ஏதேதோ சொல்லி வைத்துவிட, நண்பர்கள் அனைவரும் அவளைக் கேலி செய்து சிரித்தனர்.


‍"ஏன் பொய் சொன்னிங்க அக்கா. உங்களுக்குக் கல்யாணம் வேண்டாம்னா நீங்க அவர்கிட்ட ஃப்ரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு உண்மைய சொல்லிருக்கலாம். அதுனால அவரு கோபப்பட்டு கல்யாணத்த ஸ்டாப் பண்ண நூத்துல ரெண்டு பர்சென்ட்டேஜ் வாய்ப்பிருந்திருக்கும். தவற விட்டுட்டீங்க. தப்பு பண்ணிட்டிங்க." என்ற குரல் மட்டும் கேட்டது.


" யாருப்பா அது. கருத்த வாய்ஸ் டெக்கார்டு பண்ணி பதிவு பண்றது. " என்றான் ரத்தன்.


"பிஞ்சி குரல் மாதிரி கேக்குது. ஒரு வேளை நீ தான் டப்பிங் பண்ணியா. எங்க வாய காட்டு." என அப்சராவின் இதழை கருணாகரன் பிரிக்க,


" டேய்… வாய்ஸ் அப்பர் பெர்த்துல இருந்து வருது.." என்றான் தீஷித். ஒரு சேர அனைத்து தலைகளும் உயர்ந்தது. 


மொத்தம் ஆறு பேர் பயணிக்கும் வகையில் இருந்த சீட்டில் ஐவர் மட்டுமே இருக்க, ஆறாவதாக உயரத்தில் இருந்த படுக்கையில் இருந்து குரல் குடுத்தது சாட்சாத் பைரவியே‌ தான்.


"கரெட்டா கண்டு பிடிச்சிட்டிங்க… வாழ்த்துக்கள்… " என்றபடி தலையை வெளியே நீட்டியவள் கீழே குதித்திறங்கினாள்.


"உங்களோட இந்தக் கண்டுபிடிப்புக்கு பரிசா நான் இந்த பியர் கேஸ்ஸ எடுத்துக்கிறேன். ம்… இத எப்படி ஓப்பன் பண்றது. ஆல்ரெடி ஓப்பன் பண்ணீட்டிங்களா. எச்சி பண்ணலைல. " என அங்கிருந்த பாட்டிலை எடுத்து முன்னும் பின்னும் ஆவலுடன் எடுத்து குளுக்கி பார்த்தாள். 


இது தான் அவள் முதல் முறை அந்த மதுபான பாட்டில்களை பார்ப்பது‌‌. அதனால் சிறு ஆர்வம் தலை தூக்க, 


" இதுவர நான் இத டீவில கூட பார்த்தது இல்ல." எனச் சொல்லியபடி திறக்க பார்க்க, அது முடியாது போனதால், அதை ஓப்பன் செய்து தரும்படி தீஷித்திடன் நீட்டினாள்.


அதை வாங்காது தீஷித் மட்டுமல்ல நண்பர்கள் ஐவரும் அதிர்ந்து தான் போயினர். ஏனெனில் அவள் கீழே இறங்கும் போது ஜீன்ஸ் டீசர்ட், டீசர்ட்டில் இருந்த தொப்பியால் தலையை மூடியிருந்ததால் முகம் மட்டுமே தெரிந்தது. பொட்டு கம்மல் என அலங்காரங்கள் ஏதும் இன்றி இருந்த அவளின் முகத்தை உற்று பார்த்தால் மட்டுமே பெண் என்று அடையாளம் காண முடியும். சிகையை வேறு குட்டையாக வெட்டி பையன் போல் தான் இருந்தாள். உடலை இறுக்கி பிடிக்காது தொளதொளவென இருந்த டீசர்ட்டும் அவளின் அங்கங்களைக் காட்டிக் கொடுக்கவில்லை. சாந்தியின் உடை தேர்வு அப்படி. 


அனைவருமே அவளின் தோற்றம் கண்டு அவளை சற்று பருமனான பள்ளி மாணவன் என்று தான் நினைத்தர்.


 "ஹே க்யூட் பாய்... யாருடா நீ." எனத் தீஷித் கேட்க,


"அன்டர் 18 சரக்கு பாட்டில பாக்குறதே தப்பு கண்ணா. குடுத்திடு.‌" எனக் கருணா வாங்கி வைத்துக் கொண்டான்.


" ஹே..‌. நான் பாய் கிடையாது. கேர்ள்…" எனத் தலையில் இருந்த துணியை விலக, பொண்ணா! என அதிர்ந்து போயினர். 


" தனியாவா வந்த?" அப்சரா. 


"ம்…" என்க, அடுத்த அதிர்ச்சி.


இரவு நேரம் ஒரு சிறுமி தனியாக பயணம் செய்கிறாள். அதுவும் மூன்று ஆண்களுக்கு முன் வந்து தைரியமாக நின்று பேசுகிறாள். அது தான் அதிர்ச்சிக்கு காரணம். 


"தனியான்னா தனியா இல்ல. இதுக்கு முன்னாடி இருக்குற கம்பார்ட்மெண்ட்ல என்னோட க்ளாஸ் மெட்ஸ் எல்லாரும் இருக்காங்க. மைசூர் போறோம். ஒரு பெர்த் மட்டும் தனியா போட்டுட்டாங்க. அதுனால யாரும் இங்க வர பயந்து என்னைத் தொரத்தி விட்டுடாங்க. விளக்கம் போதுமா. ஓப்பன் பண்ணித்தாங்களே ப்ளிஸ்..." என தீஷித்திடன் நீட்ட, அவளின் பேச்சைக் கேட்டு அவன் முகத்தில் வசீகர புன்னகை ஒன்று வந்தது. 


"ஹேய்... நீங்க சிரிச்சா க்யூட்டா இருக்கிங்க." என்றாள் பையூ.


"ஐஸ் வைக்கிறாடா." நந்திதா. 


" கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டிங்க. உங்களுக்கு தான் மேரேஜ்ஜா." எனக் கேட்க, நந்திதா மீண்டும் சோகமாகி அமர்ந்து கொண்டாள். 


"நீங்க இவ்ளோ நேரம் இங்கிலீஸ்ல பேசுனத மட்டும் தான் நான் ஒட்டு கேட்டுட்டேன். ஆனா ஆரம்பத்துல பேசுன எதுவும் புரியல. எனக்குக் கன்னடம் தெரியாது. ப்ளிஸ்… கன்னடத்த டிராஸ்லேட் பண்ணி இங்கிலீஷ்ல சொன்னா நல்லா இருக்கும்." என்றவளும் ஆங்கிலத்தில் தான் உரையாடினாள். 


"ஏன் வேண்டாம்னு சொல்றிங்க." என்றபடி நந்திதாவின் அருகில் அமர,


"ஏய் உனக்கு இது தேவையில்லாத பேச்சி. போய் உன் ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாயின் பண்ணிக்க." என அப்சரா துரத்தப் பார்த்தாள்.


" ம்ச்... இது என்னோட சீட். ரிசர்வ் பண்ணிருக்கோம். அப்படில்லாம் போய்ட முடியாது." என சீட்டில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு, 


"என்னையல்லாம் இப்ப கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா கூட நான் பண்ணிப்பேன். கல்யாணம் பண்ணிக்கிட்டா ஜாலியா இருக்கும். நம்மல கேர் பண்ணி ஸ்பெஷல்லா பாத்துக்க ஒரு ஆள் கிடைக்கும் போது எதுக்கு வேண்டாம்னு சொல்லணும்.‌ 


புது புது டிரெஸ், ஜுவெல்ஸ், சர்ப்ரைஸ் கிஃப்ட், நிறைய வெரைட்டில சாப்பாடு… அதெல்லாய் ஒரு தனி என்ஜாய் மெண்ட்..


அதுவர வீட்டுல நம்மல ஒரு பொருட்டா கூட ஏத்துக்க மாட்டாங்க. ஆனா அன்னைக்கி நமக்கு கிடைக்கிற மரியாதையே வேற லெவல்ல இருக்கும். " என இரு கைகளையும் தலைக்கு மேல் கட்டிக் கொண்டு சீட்டில் சாய்ந்து கொண்டு உலறிய அந்தச் சிறுமியை பார்க்க பார்க்க தெகிட்டவில்லை தீஷித்திற்கு. 


" திருவிழால பலி குடுக்குற ஆட்ட அலங்காரம் பண்ற கதை தெரியுமா உனக்கு. " என நந்திதா சொல்ல, மற்றவர்கள் அவளை முறைத்தனர்‌.


'அந்தப் பிள்ள ஏதோ ஒரு டிரிம்ல இருக்கு. இருந்திட்டு போட்டுமே. அத ஏம்மா கலைக்கிற. ' என்பது போல் பார்த்தனர். 


" கரெக்ட் தான். பட் கல்யாணம் பண்ணிக்கிப் போற பையன் சரியா இருந்தா. எல்லா நாலுமே திருவிழா மாதிரி ஜெகஜோதியா இருக்கும்."


"ஓ… அப்ப உன்னோட லைஃப் பார்ட்னர் பத்தி பல கனவு வச்சிருப்ப போலயே. " 


"ம்... கண்டிப்பா அது இல்லாம எப்படி. நல்லா படிச்சிருக்கணும். குறைஞ்சது ரெண்டு டிகிரி. கூட எவ்ளோ வேண்ணாலும் படிச்சிட்டு போட்டும். நல்ல கலரா இருக்கணும், அரவிந்த் சாமி மாறி. சொந்தமா பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்கணும். அதுவும் லாபகரமா. மார்னிங் 10 - 6 ஜாப் அதாவது ஸ்டெஸ் அதிகமா இருக்குற வேல பாக்கவே கூடாது. "


"ஏன்?" 


" ஸ்டெஸ் அதிகமானா எங்கூட இருக்குற நேரம் குறைஞ்சி போய்டும். கல்யாணம் பண்ணிக்கிறது எதுக்கு? கூடவே இருக்க தான. என்னைக் கட்டிக்கிட்டு வேலை வேலன்னு அதபத்தி மட்டுமே சிந்திச்சா எப்டி? நான் பக்கத்துல இருக்கும் போது அவனோட கவனம் என்னைத் தவிர யார் மேலயும் போக கூடாது.


ஃப்ரெண்டு மாதிரி பழகணும். இந்தக் காலத்துக்கு ஏத்த மாதிரி சிந்திக்கணும். லவ்வர் பாய்யா நிறைய கிஃப்ட் வாங்கி குடுக்கணும். கேர் பண்ணிக்கணும். நான் அதிகமா பேசுற பேச்ச காது குடுத்து கேக்கணும். என்னை மாதிரி அவனும் எங்கிட்ட நிறைய பேசணும். சண்ட போடணும். சமாதானம் பண்ணணும். என்னை எந்த இடத்துலயும் விட்டு குடுக்காத ஒருத்தனா இருக்கணும். 


கல்யாணம் ஆகிட்டாலும் லவ் லெட்டர் குடுக்கணும். பூ வாங்கி தரணும். அதுலயும் ரெட் துலிப் எனக்கு ரொம்ப பிடிக்கும். " என ஆசையுடன் தன் கனவுகளை சொல்ல, தீஷித்திற்குள் உண்டாகும் மாற்றங்களை அறிந்து கொள்ள முடியவில்லை. அவள் கூறிய அனைத்தும் தன்னிடம் உள்ளதா என ஆராய்ந்து, இல்லாதவைகளை மாற்றிக் கொள்ள நினைத்தான்.


'லீஸ்ட் முடியல... அது தொடர் வண்டி போல நீண்டுட்டே தான் இருக்கு. இவளோட இந்த அதிகப்படியான இமாஜினேஷன் தெரிஞ்சி தான் சாந்தி உங்கல்யாணம் நான் சொல்ற பையங்கூட தான் நடக்கணும்னு சொல்லிட்டாங்க போல. பாவம்... ஆனா இவளோட டீரிம் பாய் மாதிரி, நம்ம மது கிடையாதே. அப்றம் எப்படிங் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனா.' 


ஒரு மணி நேரம்… முழுதாக அவளுடன் பயணம்‌ செய்த நிமிடங்கள் 60 தான். ஆனால் அவன் மனதில் இத்தனை ஆழமாக அவள் பதிவாள் என்று தீஷித் உணர்ந்தது, அவனின் திருமண பேச்சை எடுக்கும் போது தான்.


ஒவ்வொரு பெண்ணின் புகைப்படங்களை காட்டும் போதும், அவனுக்குப் பெயர் தெரியாத, ஊர் தெரியாத பைரவியின் முகம் தான் வந்து நின்றது. அந்த முகத்திற்கு உருவம் கொடுத்து காதல் தேவதையாக தன்னுள் பொத்தி வைத்து பாதுகாக்கிறான்.


பைரவி வேண்டும். இல்லையேல் அவளை மறக்க வைக்கும் அளவுக்கு தன்னைக் காதல் செய்யும் ஒரு பெண் கிடைத்தால் திருமணம் என்றிருக்கிறான். இதுவரை பார்க்கவில்லை. இப்போது பார்த்துவிட்டான். பைரவியை…


இனி மதுவுடனான பைரவியின் வாழ்க்கை.. 


தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி

பனி 29

பனி 31

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...