முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 69


 

அத்தியாயம்: 69



அனைத்து உடைகளையும் ஒரே பெட்டிக்குள் அடைத்து வைத்துக் கொண்டு கண்ணாயிரம் குடும்பம் புறப்பட தயாராக இருந்தது. தாமரையை விட்டுச் செல்லும் மாறு கூறிய சாரதாவிடம், 


"இதுக ரெண்டு பேரும் இல்லாம இத்தன நாளா வீடு வெறிச்சோடி போயிருந்தது‌. இதுக சத்தம் கேக்காம மயானம் மாதிரி ஆகிடுச்சி அது. இனியும் அந்த அத்துவான காட்டுக்குள்ள என்னை மட்டும் ஒத்தையா இருக்க சொல்றீங்களா!" என மிரட்டும் பாணியில் தமிழரசி பேச,


"ஏன் இருந்தா என்ன? உன்னைய உரசிக்கிட்டேவா காலம் முழுக்க இருக்கச் சொல்ற. அவளுக்கு கல்யாணம் ஆனா வீட்ட விட்டு போய்த்தா தீரணும். நானும் இங்கனயே ஒரு பொண்ணு பாத்து வச்சிருக்கேன்." என ஓரக்கண்ணால் தாயைப் பார்த்தபடி பாண்டி தான் வம்பு பேசிக் கொண்டு இருந்தான். அது சாருவைக் கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். 


இப்போது மட்டுமல்ல. எப்பொழுதுமே அவனின் பேச்சும் சிரிப்பும் பிடிக்கும். பார்க்க கொஞ்சம் முரட்டுத்தனத்துடன் அடாவடியாகவும் தெரியும் அவனின் மனம், மிகவும் மென்மையானது. அது நெருங்கி நின்று பார்க்கும் போது தெரிந்தது‌. 


அவனின் அக்கறை, செயல் என எல்லாம் பிடித்திருந்தது. அவனை மட்டுமல்ல. தாமரையையும் பிடித்திருந்தது. கள்ளம் படமில்லாத தூய தங்கத்தை ஒத்த தாமரையின் குணம் கவராமல் போகுமா என்ன‌‌! அதைத் தானே ராக்கி பாய் வேண்டி விரும்பி கொண்டிருக்கிறான். 


"நாங்க தயார். " என ஒட்டு மொத்தமாக வீட்டையே காலி செய்து விட்டு புறப்பட்டும் நேரம் வந்தது, கண்ணாயிரம், தமிழரசி குடும்பத்துடன் சாரதா, மங்கையர்க்கரசி உடன் சாருவும் பெட்டியுடன் நின்றிருந்தாள். 


"நீங்களும் எத்தினி நாளா இங்கயே இருப்பிங்க. கொஞ்ச நாள் கணக்க அங்க வந்து தங்கிட்டு போறது. மனசுக்கு ஒரு இதமா இருக்கும். புது மக்க மனுஷன பாத்தாத்தா புதுசா பொறந்த மாதிரி இருக்கும். அத்தோட அண்ணனுக்கு சாமி குடும்பிட வேண்டாமா. மூணு வர்ஷம் முடிஞ்சி போச்சி." என அரசி தான் சாரதாவைப் புறப்படச் சொல்லி உத்தரவிட்டது. 


'அடியாத்தே! நம்ம மாமியார் சரியான ராங்கி காரியா இருப்பாங்க போலயே! இந்த மிரட்டு மிரட்டுறாங்க!' என்றவனின் மைண்ட் வாய் பைரவிக்குக் கேட்டிருக்க வேண்டும். 


" பாய், புருஷனொட ஃப்ரெண்டு ஃபேமிலியவே இந்த மிரட்டு மிரட்டுறாங்கன்னா! வீட்டுக்கு வரப்போர மாப்ளய!! என்ன மிரட்டு மிரட்டுவாங்க?” என அவனை ஏற இறங்க பார்த்து விட்டு, 


" உங்க பாடி வேற பிஞ்சி பாடி. தாங்காது. சோ நல்லா யோசிச்சுகங்க. உங்களுக்கு செட் ஆகுமா ஆகாதான்னு." எனக் காதில் முணுமுணுக்க,


"அவங்க எதுக்கு எனக்கு செட்டாகணும். அங்க பொண்ணு ஆனா போதும். " எனக் கண்களால் காதலியிடம் பேசியபடி ராக்கி இருக்கு,


"தாய போல பிள்ளை நூலப்போல சேலைன்னு ஒரு பழமொழி இருக்காமே! தெரியுமா?"


"தெரியாது. இப்ப என்ன அதுக்கு? மண்டைல கொட்டி சொல்லி குடுக்கப் போறியா?" எனக் கோபமாக கேட்க,


"பாய், நீங்க கோபப்படுறீங்க!!"


"பின்ன என்ன பண்ண சொல்ற?"


"இந்த பைரவிட்ட கோபமா பேசுறீங்க!!"


" நீ பெரிய இவ. உங்கிட்ட கோபமா பேசக்கூடாதாக்கும்‌‌. "


"கூடாது தான்."


"பேசுனா? "


"அதுக்கான பலன அனுபவிப்பிங்க. " என விரல் நீட்டி எச்சரித்துவிட்டு செல்ல,


"இவளோட தோரணையே சரியில்லயே. ஒரு வேள ஹை வே, டார்ச் லைட் மேட்டர வச்சி அன்னைக்கு மாதிரி ஏந்தாமரைய ஏத்தி விடப் போறாளோ! அன்னைக்கி அவ கொளுத்தி போட்டதையே அணைக்க இரண்டு நாள் ஆச்சி. இந்த மொற வெளிப்படையா சொல்லிட்டு போறா! என்ன வேணாலும் ஆகும். அதுனால சரண்டர் ஆகிடுறது தான் நமக்கு நல்லது.‌" என்றவன் அவளை பின் தொடர்ந்து சென்றான். 


வந்தவன் முன்னே நடந்து கொண்டிருந்தவளின் தோளைப் பிடித்து தள்ளிக்கொண்டே சுடரின் அறையை அடைந்தான். 


"பாய் எதுக்கு இங்க தள்ளிட்டு வர்றிங்க?"


"செக் பண்ண." என்றவன் சுடரின் அறையை கண்களால் ஸ்கேன் செய்ய தொடங்கினான். 


"இந்த ரூம்க்குள்ள வரலாம்னு பாத்தா ஏதோ ஒரு தீய சக்தி நம்மல போகவிடாம தடுக்குது. " 


"யார தீய சக்தின்னு சொல்றிங்க. லோட்டஸ்ஸ தான." என்க, அவன் பதறிப்போய். "நான் உன்னைய சொல்லல செல்லம்." எனக் கத்தியபடி அறை வாயிலை பார்க்க அங்கு யாரும் இல்லை. 


"அந்த பயம் எப்பயுமே இருக்கணும். குறையக் கூடாது." எனச் சொல்லி‌ அங்கிருந்த சோஃபாவில் அமர,


"குட்டி சாத்தான். எங்க மறுபடியும் போட்டுக் குடுத்திடுச்சோன்னு பயந்து போட்டேன். உப்…" எனப் பெருமூச்சு விட்டான்.


"நீங்க இன்னும் யார் அந்த தீய சக்தின்னு சொல்லல." என்றாள் குறுநகையுடன். 


"வேறயாரு மங்கையர்கரசி மேம் தான். 'தம்பி தம்பி. அத தொடாதீங்க. இத எடுக்காதீங்க. இந்த ரூம்க்குள்ள போகாதீங்க.'ன்னு இருபத்தி நாலு மணி நேரமும் இந்த ரூம்க்கு வாச்ட் மென் வேலை பாக்குற ஒரே ஆளு அவங்க தான்."


"சாரதாம்மா அடிக்கடி இருங்க தான் தூங்குவாங்க. இந்த ரூம் குள்ள தான் பொண்ணோட நியாபகம் நிறைஞ்சி இருக்குறதா நம்புறாங்க. நீங்க அதக் கலைச்சி போட்டா வருத்தப்படுவாங்கன்னு தான் மங்கை மேம் அப்படி சொல்லிருப்பாங்க. ஆமா அப்படி என்னத்த பாக்கணும் நீங்க?"


"எதாவது தடயம் கிடைக்குதான்னு பாக்கணும். "


"அதெல்லாம் நான் ஆல்ரெடி செக் பண்ணிட்டேன்‌‌. ஒன்னுமே கிடைக்கல. ஒரே ஒரு லேப் டாப் தான் கிடைச்சது. அத உங்க ஃப்ரெண்டு கிட்ட குடுத்து‌ தொலஞ்சிட்டீங்க. முதல்ல அதத் தேடி பிடிங்க. அதவச்சி தான் சுடரக்காவோட ரகசிய காதலன கண்டு பிடிக்க முடியும்‌‌. "  


" காதலனா?" 


"ம்… நாந்தா உங்க கிட்ட சொன்னேனே பாய். மறந்துட்டீங்களா?" எனக் கேலியாக கேட்க, 


"சரி விடு. நீ இப்ப அவளோட கேஸ்ல எதுவரைக்கும் போயிருக்க. எனி லீட். எனி யூஸ் ஃபுல் இம்பர்மேஷன். " என்க, அவள் தீஷித் சொன்னதை ஒப்பித்தாள். 


"அப்ப அந்த ஃபோன் அரசனூர்ல இருக்கு."


"எஸ்… அத்தோட சுடரக்கா காதலன பத்தியும் விசாரிச்சேன். "


"ம்… என்ன தெரிஞ்சது?"


"எல்லாமே." என இழுத்தவள், "தெரியல பாய்…" என முடிக்க, அவளைத் திரும்பி பார்த்து முறைத்து விட்டு திரும்பிக் கொண்டான். 


"சத்தியமா எதுவும் கிடைக்கல பாய்‌. பேசுனதையே பேசி கொல்றாங்களே தவிர. புதுசா எதுவும் வாய்ல இருந்து வர மாட்டேங்கிது. " என்றவள் ராக்கி என்ன பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அருகில் வந்து பார்த்தாள்.


"அப்படி என்ன பாய் தெரியுது இந்த விளையாட்டு ஜாமான்ல?" 


"உனக்கு எதுவும் ஃபீல் ஆகலயா?"


"இல்ல… ரூபீஸ் ஸ்கொயர் பாக்ஸ்ஸ மாடலா வச்சி வித்தியாசமா ஒரு பெட்டி செஞ்சிருக்காங்க. மூளைக்கி வேல தர்ற நல்ல புதிர் விளையாட்டு."  


"இத உனக்கு சால்வ் பண்ண தெரியுமா?" எனக் கேட்க, பைரவி அட்ச கோணத்தில் சிரித்தாள். 


"என்ன மாதிரியான சிரிப்பு இது?"


"அது... எனக்கு இந்த மாதிரி puzzle எல்லாம் பிடிக்கவே பிடிக்காது பாய். ரொம்ப நேரம் மண்டைய கொடஞ்சி யோசிக்கணும். அது நமக்கு வராது." என்க, அதை எடுத்து தன் பாக்கெட்டிற்குள் சொருகிக் கொண்டான் அவன். 


"பாய் ஏன் திருடுறீங்க அத?" 


"திருடல, கடன் வாங்கிட்டு போறேன். "


"ஹாங்!!"


"ஒரு பொருள எடுத்திட்டு எடுத்த இடத்துலயே, எடுத்த மாதிரியே திருப்பி வச்சா அது கடன். வைக்கலன்னா அது திருட்டு. " 


"இதக் கடன் வாங்கிட்டு போய் என்ன பண்ண போறிங்க?" 


"உன் புருஷன்ட்ட குடுக்கப் போறேன். அவனுக்கு இந்த மாதிரி கேம்னா பிடிக்கும். நிமிசத்துக்குள்ள முடிச்சி கைல குடுத்திடுவான்." என்றவன் மேலும் இது போன்ற பொருட்கள் உள்ளதா எனத் தேடி எடுத்து பார்த்தான். மற்றவை எல்லாம் சந்தையில் கிடைக்கும் சாதாரண பொருட்கள். இது மட்டும் தான் வித்தியாசமாக இருந்தது. 


"இத்தன நாள் விசாரிச்சியே உனக்கு யார் யார் மேல சந்தேகம் இருக்கு. உன்னோட சஸ்பெட் லிஸ்ட்ட சொல்லு கேப்போம். "


"முதல் சஸ்பெக்ட், சிராஜ். விளக்கம் சொல்லவே தேவயில்ல. ரெண்டாவது சஸ்பெக்ட் விசாகன். அவரோ தொழில்ல பொண்ணுங்கள கடத்துறதும் அடக்கம். ஏன் அவனே கடத்திருக்க கூடாது?"


"கடத்திருந்தா காசு தான் பாத்திருப்பான். டெட் பாடியாக்கிருக்க மாட்டான்."


"கரெக்ட்டு. ஆனாலும் அவெ மூலமாத்தா மேல ஏற முடியும்."


"அந்த ரெண்டு பேரு மட்டும் தான்னு முடிவு பண்ணிட்ட."


"இல்ல. மூனாவதா ஒருத்தேன் இருக்கான். அவங்களோட காதலன். அவெங்கூட காரணமா இருக்கலாம். " என அடித்து பேச,


"எத வச்சி இவ்ளோ கான்ஃபிடன்ஸ்ஸா சொல்ற?"


"தெரியல. ஆனா தோணுது.  " எனப் பேசிக் கொண்டு இருக்கும் போது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் தெரிய, எடுத்து படிக்கலாம் இல்லை. பார்த்தாள். 


இதே புத்தகம் சாரதாவின் அறையில் இருந்ததை கண்டவள் வேகமாக ஓடிச் சென்று அதை எடுத்துப் பார்த்தாள். ஏனெனில் கண்ணாடி போன்ற கவர் போட்டு பார்சல் செய்யப்பட்டு யாருக்கோ அனுப்ப தயாராக இருந்தது. ஆனால் கொரியர் தான் அனுப்பப்படவில்லை. 


"அக்கா யாருக்கு இத அனுப்ப வாங்குனாங்கம்மா. இதுல அட்ரஸ் கூட இல்லையே. " எனச் சாரதாவிடம் கேட்க,


" எனக்கு தெரியலயே ம்மா. இந்த மாதிரி மாசம் ஒரு வாங்கி அனுப்புவா. அந்தப் பக்கம் இருந்தும் பார்சல்ல வரும்."


"என்ன வரும்?" என்க அவர் மகளின் நினைவுக்கடலில் மூழ்கிப் போயிருந்தார். மங்கையர்கரசி தான் அவை எல்லாம் சுடரின் அறையிலேயே இருப்பதாக சொன்னார். 


வேகமாக ராக்கியைதீ தேடி ஓடியவள். "பாய்… பாய்… அக்காவோட ரகசிய காதலன் அவங்களுக்கு கிஃப்ட் அனுப்பவாங்களாம். "


"அதுக்கு என்ன இப்ப?" என அலட்சியமாக கேட்க.


" ஐய்யோ பாய். நமக்கு பிடிச்சவங்க எதையாது தந்தா அத பத்திரப்படுத்தி வப்போம். "


"இந்தா வச்சிருக்காளே செல்ஃப் முழுக்க."  


" இது எல்லாமே அக்காவோட லவ்வர் அனுப்புன கிஃப்ட்டாத்தா இருக்கணும்.. 


"தப்பு… இதுல பாதி அவளோட தோஸ்துங்க குடுத்தது." என்றான் பாண்டி. இருவரும் ஒரு சேர வாயிலை நோக்க, 


"உனக்கு எப்படித் தெரியும் அது?" என்பது போல் இருவரும் பார்க்க,


"இது நான் வாங்கி தந்தது. இது அவளோட படிச்சதே மித்ரான்னு ஒரு பொண்ணு தந்தது. இது லயன்ஸ் க்ளப்ல இருக்குற ஒரு ஆள் தந்தது. " எனப் பாண்டி சொல்லி அனைத்தையும் எடுத்துக் காட்ட,


"இப்ப இதுல இருக்குறத யாரு தந்தான்னு லிஸ்ட் எடுத்து விசாரிக்கணுமா. " எனப் பைரவி சோர்ந்து போக, 


"என்ன போலிஸ்ஸு நீ! சோம்பேறி போலிஸ்ஸு." எனக் கிண்டலாக ராக்கி கூறினான்.


"என்ன தேடுறீங்க? " என்ற பாண்டியிடம், ராக்கியிடம் சொன்ன கதையை சொல்லி,


"அவங்களோட காதலன் மேல தான் ரொம்ப ஸ்டாங்கா சந்தேகம் வருது. சாரதாம்மாட்ட கூட அவனப் பத்தி அவங்க சொல்லல போல. ரொம்ப சீக்ரெட்டா வச்சிருந்திருக்காங்க. 


அப்ப அவெந்தா அக்காவ கடத்திருக்கணும். அக்காக்கு கடைசியா வந்த ஃபோன் கால் அவனோடத தான் இருக்கணும். அதா சிரிச்சி சிரிச்சி பேசி நம்பிக்கையோட பைக்ல ஏறி போயிருக்கணேம்‌. அங்க இருந்தும் வரும்னா எந்த அட்ரஸ்னு கொரியர் கவர்ல இருக்கும்ல." எனத் தேட தொடங்க, அறையை குப்பையாக்கியது தான் மிச்சம்.


நேரம் சென்றது. "என்ன பண்றிங்க. எல்லாரும் கிளம்பிட்டாங்க. " என்றபடி சாரு வர,


ராக்கி, "கிளம்பட்டும்."


" நாங்க வேண்டாம்னா சொன்னோம்." என்று வார்த்தையை முடித்து வைத்த பாண்டியை முறைத்தவள், 


"பாய்… இப்ப நீங்க வெளில போகலன்னா உங்கள உள்ள வச்சி, வீட்ட பூட்டீட்டு போகப் போறங்க. பத்து நாள் கழிச்சி தான் ரிலீஸ்ஸு. "  


பைரவி, "கதவ உடச்சிட்டு வர எங்களுக்கு தெரியும். ".


" யாரு நீயா?" என மற்ற மூவரும் கேட்க, 'நம்மல கலாய்க்க ஊரே ஒன்னு கூடீடுது… ச்ச… ' என முணுமுணுத்தவள் துணிகளை அடுக்கும் இரும்பு பீரோவைத் திறந்து பார்வையிட்டாள். அது மொத்தம் நான்கு அடுக்குகளாக இருந்தது. தனியாக லாக்கர் வசதியும் இருந்தது. பாண்டி தான் அதைத் திறந்து பார்த்தான்.


ஆனால் அதில் ஒரு அடுக்கின் செல்ஃப், திறந்து மூடும் அளவுக்கு முக்கியமான காகிதங்களை சேர்த்து வைக்கும் வசதியுடன் இருந்ததைக் கவனிக்கவில்லை. ஏனெனில் அது பார்க்க ஒரே  செல்ஃப் போன்றே இருந்தது. ஆனால் அது இரண்டு.


அது இப்பொழுது தான் பைரவியின் கண்ணுக்குச் சிக்கியது. வேகமாக அதைத் திறந்து பார்த்தாள். அதில் பைரவி தேடிய கவர்கள் இருந்தன.


"பாய்… கிடைச்சிடுச்சி. ரெண்டு இருக்கு பாருங்க." என அதை ராக்கியிடம் காட்ட, 


"கொண்டா…" என்று வாங்கி அதைத் தன் ஃபோனில் புகைப்படம் எடுத்துக் கொண்டான். 


"இது கொரியர் கவர் தான். " என வேகமாக அதில் இருக்கும் அனுப்புனர் பெறுநர் முகவரியைத் தேட, பெறுநர் என்ற இடத்தில் சுடர் விழியின் பெயர் இருந்தாலும். அனுப்பியவரின் முகவரி கிழிக்கப்பட்டு இருந்தது. பார்ஸ்சலைப் பிரிக்கும் போது அதையும் கிழத்திருக்க வேண்டும். கூடவே அது கம்யூட்டரில் ப்ரிண்டு போடப்பட்டிருந்ததால் எழுத்துக்கள் மங்கி போய் இருந்தன்.


"வட போச்சா!!"

தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...