அத்தியாயம்: 70
பைரவி, "ரெண்டு மட்டும் தான் இருக்கு. இத மட்டும் தான் அவெ அனுப்புனானா என்ன! அக்கா மாசம் ஒன்னு அனுப்புவாங்கன்னு மங்கை மேம் சொன்னாங்களே." திரும்பி திரும்பி அந்த இரண்டு கவர்களையும் பார்க்க,
"இது Amazon மாறியான ஒரு ஆன்லயன் வெப்சைட்ல இருந்து வந்திருக்கு. டேட்டையும் டயத்தையும் நோட் பண்ணி இப்பவே பிரவீனுக்கு அனுப்புறேன். என்கொரி பண்ணுவான். இது சீபிஐக்கும் யூஸ் ஆகலாம். " என ராக்கி எடுத்த புகைப்படத்தைப் பெரிது படுத்தி பார்க்க,
"நிஜமாவே அவ்வளவு தானா. இல்ல இது மாதிரி வேற கவர் எதுவும் இருக்காகா?" என மீண்டும் அலமாரியில் தலையை விட்டு தேட எதுவும் கிடைக்கவில்லை.
" கஞ்சப்பயெ. லவ்வருக்கு ரெண்டே ரெண்டு தான் குடுத்திருக்கான்." எனப் பைரவி திட்ட,
"டேட் நோட் பண்ணியா பையூ. நாலு வர்ஷத்துக்கு முன்னாடி வந்திருக்கு. அப்படின்னா." ராக்கி.
"அப்படின்னா…" என அனைவரும் தாடையை தட்டி தட்டி ஒரு சேர யோசிக்க, யோசனை வரவில்லை. தாமரை தான் வந்தாள்.
" லேட்டாகுது. ரவைக்குள்ள கெளம்பணும்னு அம்ம சத்தம் போட ஆரம்பிச்சிடுச்சி. என்னண்ணா பண்றிங்க? " என்றபடி.
சாரு, "போச்சி... இவ வந்திட்டா. அடுத்து மங்கை மேம் வந்திடுவாங்க. "
"தீய சக்தி…" என்ற பைரவியை ராக்கி முறைக்க,
ராக்கி, "ரூம் இப்படி இருக்குறத பாத்தா நம்மல…."
" பேசியே கொன்னுடுவாங்க. வெரசா எடுத்து வைங்க. வந்திடப் போறாக. " எனப் பாண்டி எடுத்து வைக்க,
"ஆமா… ஆமா… வேகமாக எடுத்தத எடுத்த மாதிரி வச்சிடுங்க. நான் படிக்கட்டு பக்கத்துல நின்னுக்கிறேன். மங்கை மேம் வந்தா அப்படியே பிடிச்சி வைச்சி கடல போடுறேன். பத்து நிமிஷத்துக்குள்ள ஒதுக்கி வைச்சிட்டு வந்திடுங்க. சரியா. " என்றபடி பைரவி ஓடி விட,
"அதுவும் சரிதா. போலிஸ்க்கு திடீர்னு புத்தி வேலைலாம் செய்து." என ராக்கி அவசரப்பட்டு பைரவியைப் பாராட்ட, பாண்டி அடுக்கத் தொடங்கினான்.
"பாய்! அவ எல்லா வேலையையும் நம்ம தலைல கட்டீட்டு போய்ட்டா." சாரு கத்தி சொன்ன பின் தான் இரு ஆண்களுக்கு உரைத்தது அது.
"கேடி... ஒரு வேலை செய்யமாட்டான்னு அன்னைக்கே அவெ சொன்னான். அப்ப நம்பல. இப்ப நம்புறேன். " என்றவனும் சிரித்த படியே அடுக்கி வைத்துவிட்டு வந்தான்.
பைரவி மேலே இருக்கும் ஜீவன்களை மறந்து விட்டு தன் விசாரணையைச் சாரதாவிடம் ஆரம்பித்தாள். அவளுக்குக் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன். இதற்கு முன் பதில் வந்தது இல்லை. பதில் வரவில்லை என்றெல்லாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியுமா என்ன? செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரின் கையில் இருந்த ஓஸை வாங்கிக் கொண்டவள்,
"ம்மா… அக்கா ஒருத்தர காதலிச்சாங்களே அது பத்தி." என இழுக்க,
"நல்லாவே தெரியும். அதுனால அப்பாக்கும் மகளுக்கும் சண்ட வந்தது. " என்றார் சோகமாக.
" அது யாரு என்னனென்னு உங்க கிட்ட எதுவும் சொல்லிருக்காங்களா! அவங்களுக்கு கிஃப்ட்லாம் அனுப்பிருக்காங்கன்னா… எவ்ளோ தூரம் அவர்களுக்குள்ள பழக்கம் இருந்தது. நேர்ல பாத்திருக்காங்களா? எப்படி இருந்தான்? என்னென்ன பேசிக்கிட்டாங்க? எப்ப எப்ப பாத்தாங்க? " எனப் புரியாதவாறு வேகமாக பரபரப்பாக பேசியவளை உற்றுப்பார்த்தவர்,
" நீ சுடருக்காக கஷ்டப்படுறது எனக்கு புரியுது பையூ. வேண்டாம்னு சொன்னாலும் நீ கேக்க மாட்டேங்கிற. சரி. உனக்கு என்ன தெரியணுமோ அத நேரடியா ஒன்னு ஒன்னா நிதானமா கேளு. எனக்கு தெரிஞ்சத சொல்றேன். " எனப் புன்னக்கைக்க, அவரை இழுத்து வந்த ஒரு கல்மேடையில் அமரவைத்தவள் அருகில் அமர்ந்து கொண்டு தன் விசாரனையைத் தொடங்கினாள்.
"ஓகே… இவ்ளோ ஓப்பனா கேட்கும் போது எதுக்கு மறைமுக கேள்வி. ஸ்ரெட்டாவே கேக்குறேன். நீங்க ஓகே தான. இல்ல அக்கா ஞாபகம் வந்து, டென்ஷன்னாகி மயங்கி விழுந்திட மாட்டிங்களே. " என அவரின் நலன் பற்றி கேட்க, அவர் நலமாக இருப்பதாக தலையசைத்தார்..
" இந்த கவர்ல பார்ஷல் அனுப்புனது யாருன்னு தெரியுமா?" என கவரை காட்டி கேட்க,
"இது எங்கருந்தது?"
"அக்காவோட ரூம்ல. மொத்தம் ரெண்டு இருந்தது. நான் அக்காவோட பாய் ஃப்ரெண்ட் தான் அனுப்புனானா இல்லையான்னு கண்பார்ம் பண்ண கேக்குறேன். ஒரு வேளை அனுப்பிருந்தா அது நம்ம கேஸ்க்கு யூஸ்ஸாகும்.
அக்காவும் பார்ஷல் அனுப்புனதா மங்கை மேம் சொன்னாங்க. அப்படி அனுப்பிருந்தா எந்த அட்ரஸ்ன்னு தெரியுமா?"
நீள பெருமூச்சு விட்டவர், " அவளுக்கு நிறைய பார்ஷல் வரும். அவளும் நிறைய பேருக்கு பரிசு அனுப்புவா. " என்றவர் பைரவியின் கையில் இருந்த கவரை வாங்கி பார்த்தார். ஒன்றை எடுத்து காட்டி,
"இது அந்த பையங்கிட்ட இருந்து தான் வந்தது. இந்த பார்ஷல் வரும் போது நார்மலாத்தா இருந்தா எப்பயும் போல அவளோட ஃப்ரெண்டு அனுப்பும் போது வர்ற உற்சாகம் கூட அவளுக்கு கிடையாது."
"இது கைக்கு வரும் போது லவ் பண்ணிருக்க மாட்டாங்களா இருக்கும். நார்மல் ஃப்ரெண்ட். ஆமா அதுல அப்படி என்ன வந்தது? "
"ஒரு க்யூப். அதுல ஒரு சிம்பல் இருந்தது. அத கலச்சி மறுபடியும் ஒன்னு சேக்கணும். அவளுக்கு சேக்க வரல. தூக்கு மூளைல வச்சிட்டா. " எனச் சொல்லி சிரித்தவர், அடுத்த கவரை எடுத்து,
"இது ரொம்ப ஸ்பெஷல். இது வரும் போது தான் உணர்ந்தேன் எம்பொண்ணுக்கு வெட்கப்படத் தெரியும்னு. நான் கண்ணால பாத்தேன். என்னைப் பாக்க முடியாம ஓடிப் போய் கதவ மூடிக்கிட்டா..
யாரு என்னென்னு கேட்டப்ப, அந்தப் பையன பத்தி சொன்னா. பொதுவான நிறைய விசயம் அவங்களுக்குள்ள ஒத்துப் போனதா சொன்னா. நண்பர்கள் மாதிரி தான் பழக ஆரம்பிச்சாங்க. ஒரு நாள் நேர்ல சந்திச்சி பாக்கும் போது அந்த பையன அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கும் போல. அவெங்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டிருக்கா?
அந்த பையன் முடியாதுன்னு சொன்னானா! இல்ல ஃப்ரெண்டாவே இருப்போம்னு சொன்னானா! இல்ல டயம் கேட்டானான்னு தெரியல. ஆனா அவளோட ப்ரப்போஷல ஏத்துக்கல அது மட்டும் நல்லா தெரியும். ஆனா சுடர் விடல. தொடர்ந்து நட்பாவே அப்ரோச் பண்ணினா. நேர்லயும் மீட் பண்ணி பேசிருக்காங்க.
அவனோட மனச அட்ராக்ட் பண்ண முயற்சி செஞ்சிட்டே தான் இருந்தா. ஆனா!! கடைசியா அவன பாத்திட்டு வந்து ரொம்ப அழுதா!! ஒரு வாரம் ஆளே சரியில்ல. அப்றம் கொஞ்ச மாசம் கழிச்சி அந்த பையங்கிட்ட இருந்து மெஸ்ஏஜ் வந்ததா சொன்னா. பேச ஆரம்பிச்சாங்க. அது கிஃப்ட் பார்ஷல்னு வளந்தாலும் நேர்ல சந்திக்கல. "
"அதெப்படி இவ்ளோ உறுதியா சொல்றிங்க. "
"பிள்ளைங்க கிட்ட பெத்தவங்க ஃப்ரெண்டு மாதிரி பழகும் போது. ரகசியம்னு எதுவும் இருக்காது. சுடருக்கும் கிடையாது. "
"அப்படி இருந்தா அந்த பையன உங்க கிட்ட காட்டிருப்பாங்களே. "
"ரெண்டு பக்கமும் காதல் இருந்ததுன்னா கண்டிப்பா கூட்டீட்டு வந்து அறிமுகம் செஞ்சிருப்பா. அப்படி இல்லங்கிறப்போ என்ன சொல்லி அறிமுகப்படுத்துவா. "
"ஒரு ஃபோட்டோல கூடவா காட்டல?"
"இல்லையே. ஆனா அவ கிட்ட ஃபோட்டோ இருந்தது. அவளோட ஃபோன்ல. அத அடிக்கடி எடுத்துப்பாத்து சிரிச்சிப்பா. "
"உங்க கிட்ட காட்டலயா!! நீங்க ஃபோன நோண்டி பாத்திருக்கலாமே. " என்க. சாரதா முறைத்தார் பைரவியை.
"எம்பொண்ண நான் சந்தேகப்பட மாட்டேன். அதே நேரம் அவளோட தேர்வு தப்பா இருக்காது. அதுனால நீ அந்த பையன குற்றவாளியா பாக்காதா. கண்டிப்பா அவெ நல்லவனாத்தா இருப்பான். "
"நான் போலிஸ் எல்லாரையும் சந்தேகப்படத்தான் செய்வேன். " என ரோசமாக சொல்ல, அவளின் தலையில் கை வைத்து தடவிக் கொடுத்தார் வாஞ்சையுடன்.
'நல்லவனா இருந்தா அவங்க டெத்துக்கு வந்திருக்கணும். அப்படி யாரையும் நான் பாக்கலயே. ஏன்?' என யோசித்தவள்,
"அவங்க எங்க மீட் பண்ணாங்க."
"பெங்களூர்ல. " என்க பார்சல் இரண்டிலும் பெங்களூர் அட்ரஸ் இருந்தது. பைரவி மீண்டும் யோசனையில் இறங்கினாள்.
" பார்சல்னு சொன்னிங்களே. ரெண்டாவதா வந்த கவர்ல என்ன இருந்தது. வெட்கப்பட்டு ஓடுற அளவுக்கு. ம்… இங்க தான் இருக்கா அது. நான் அத பாக்கலாமா?"
"இது இங்க இல்ல. அரசனூர்ல அவங்கப்பா வீட்டுக்கு எடுத்திட்டு வந்தா. எங்கூட நீயும் வந்தா எடுத்து காட்டுறேன். " என பைரவியை திருவிழாவிற்கு அழைக்க,
"கண்டிப்பா வர்றேன். இப்ப இல்ல. ரெண்டு நாள் கழிச்சி. நன்றிம்மா. " என அவரை அணைத்து விட்டு வீட்டிற்குள் நுழைய, ராக்கியும் சாருவும் அவளை தீயாய் முறைத்தனர்.
"என்னாச்சி பாய்? இவ்ளோ பாசமா பாக்குறீங்க! என்னைப் பாராட்டணுமா?" என்க, இருவரும் சேர்ந்து திட்ட தொடங்கி விட்டனர்.
சாரு, "என்ன சொல்லிட்டு எல்லா வேலயையும் எங்க தலைல கட்டீட்டு போன. "
"மங்கை மேம் ரூம்க்கு வராம தடுக்க. "
ராக்கி, "தடுத்தியா?"
"அதுக்குள்ள தான் உங்க மாமியார் என்னைப் பெட்டி அடுக்கச் சொன்னாங்களே! "
சாரு, "அடுக்குனியா?"
"அதுக்குள்ள தான் கண்ணாயிரம் அங்கிளுக்கு… மாத்திர எடுக்க போய்ட்டேனே."
ராக்கி, "எடுத்து குடுத்தியா? "
"அதுக்குள்ள தான் சாரதாம்மா தனியா செடிக்கு தண்ணி ஊத்தி இருந்தாங்கன்னு உதவி பண்ணப் போனேன். பட் திஸ் டயம் கரெக்ட்டா உதவி பண்ணிட்டேன். " என்றவளை என்ன செய்தால் தகும் என்ற ரீதியில் முறைக்க,
"பாய் நான் பண்ண உதவிக்கி கைமாறா அவங்களும் யூஸ் ஃபுல்லான ரெண்டு விசயம் தந்தாங்க. அதுவும் இந்த கொரியர பத்தி." என முகத்திற்கு முன் ஆட்டி ஆட்டி காட்ட, சாரு கடுப்புடன் அதைப் பறித்துக் கொண்டு முறைத்தாள்.
"என்னதது?" என ராக்கி ஆர்வமாக கேட்க, அரசியின் குரலில் கூட்டம் கலைந்து சென்றது.
"அம்புட்டு நேரத்தையும் பேசி பேசி வெரயம் பண்ண போறிகளா! சட்டுபுட்டு கிளம்ப வேண்டாமா. " என கத்தவும் ராக்கி காரில் லக்கேஜ்களை அடுக்கத் தொடங்க. இரு கார்களில் புறப்பட்டு சென்றனர்… பஸ் ஸ்டாண்டிற்கு.
சாருவைத் தவிர அனைவரும் மதுரை பஸ்ஸில் ஏறி அமர, சாரு தேனி செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். முதலில் புறப்பட்டது சாருவுடையது பஸ் தான். அவள் ஏறி இருக்கையில் அமர்ந்ததுமே,
" என்னோட நம்பர் உங்கிட்ட இருக்கிள்ல. எந்த நேரமும் என்னவா இருந்தாலும் வெசனப்படாம கூப்பிடு. அரமணி நேரத்துல உ கண்ணு முன்னாடி வந்து நிப்பேன். " என்றவன் பெட்டியைத் தூக்கி மேலே வைக்க,
"ஆமா இவரு பெரிய சண்டியரு. அருவாளோட வந்து வம்புக்கு வார அம்புட்டு பேரையும் வெட்டி வீசப் போறாரு. " எனச் சாரு முணுமுணுக்க,
"வெட்டி வீசணும்னு அவசியம் வந்தா அருவாளோட கண்டிப்பா வருவேன். " என்று விட்டு சென்றான் பாண்டி.
திரும்பி செல்கையில். "ஏதோ கிடைச்சிருக்குன்னு சொன்னியே என்னதது?" ராக்கி.
" பாய்! நீங்க ஆட்டைய போட்டுட்டு வந்திருக்கிங்களே அது அன்நோன் சீக்ரெட் பாய் ஃப்ரெண்ட்ஸ் தந்தது தான்."
"ம்… அப்றம். "
" ரெண்டாவது கிஃப்ட் அரசனூர்ல இருக்காம். " என ஆரம்பித்து சுவாரசியமாக கதை சொல்ல தொடங்கினாள். சாரதாவிடம் கரந்தவற்றை ராக்கியிடம் ஒப்பிக்க,
" இத முன்னாடியே சொல்லிருந்தேன்னா உன்னையும் பஸ் ஏத்தி விட்டிருப்பேன்ல. அந்த கிஃப்ட்டையும் காணம போன ஃபோனையும் எடுத்திட்டு ஊர் திரும்பிருப்ப. அண்ணெ பெங்களூருக்கு போய் unknown person ன, known person னா மாத்திட்டு வந்திருப்பேன். பஸ்ஸ மிஸ் பண்ணிட்டியே. "
"இப்பவே போலாம் தான். ஆனா எனக்கு வேல இருக்கே. "
"எது உன் புருஷன சைட் அடிக்கிறதா?"
"அதெல்லாம் வேல ஆகாது. டெய்லி நாம சாப்பிடுறத குளிக்கிறத பல்லு விளக்குறதெல்லாம் வேலைன்னு சொல்ல மாட்டோம். அது மாதிரி தான் நான் அவர சைட் அடிக்கிறது வேலையே கிடையாது. கடம... என்னோட நாள் தொடங்குறதே அவரோட கடுகடுத்த முகத்த பாத்து தான். " என்றவள் சீட்டில் சாய்ந்து இரு கால்களையும் மடக்கி அணைத்துக் கொண்டு கண் மூட, அவளைத் திரும்பி பார்த்தவன்.
"என்ன வேலன்னு சொல்லிட்டு அவெங்கூட டூயட் ஆட எங்க வேண்ணாலும் போம்மா. " எனக் கேலியாக செய்தான்,
" விசாகன் யார் யார் கூட டீலிங் வச்சிருக்கான். யார் யாருக்கு சப்ளை பண்ணாங்கிற டீட்டெய்ல்ஸ் வேணும். "
"அத போலிஸ் விசாரிக்கும். "
"அதுவரைக்கும் எனக்கு பொறுமை இல்ல. "
"நீ என்ன பண்ண போற. "
"நான் எதுவும் பண்ணல. ஆனா பண்றதுக்கு ஆள் ஏற்பாடு பண்ணணும். "
"யார. "
"விஜியோட அம்மாவ. " என்றவள் விஜி ஃபோன் செய்ய, அந்த பக்கம் ராக்கியின் ஃபோனும் அதிர்ந்தது.
"இப்ப அம்மா அவெ வீட்டுல இல்ல பையூ. சிந்து கூட ஒரு அர்ஃபனேஜ்ல இருக்காங்க. " என அட்ரஸ்ஸை சொல்லி வைத்தாள் விஜி.
"பாய். நம்ம சிண்டு அதா உங்க அத்த மகெ படிக்கிற ஸ்பெஷல் ஸ்கூல்ல தான் இப்ப விசாகனோட அம்மாவும் பொண்ணு இருக்காங்க. அவங்கள பாத்து பேசினா நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். " என உற்சாகமாக சொல்ல,
" செந்தில் இஸ் மிஸ்ஸிங். " என்றான் ராக்கி.
"வாட். கம் அகென். "
"இப்பதா பிரவீன் ஃபோன் பண்ணான். செந்தில் தப்பிச்சி போய்ட்டான்னு. "
"அப்ப இனி அந்த கும்பல பிடிக்கவே முடியாதா.! ச்ச... அவனுக்கும் விசாகனுக்கும் இருக்குற உறவ வெளியுலகத்துக்கு கொண்டு வந்து சுடரக்காவ கொல்லச் சொன்னது யாருன் தெரிஞ்சிக்கலாம்னு இருந்தேன். இனி முடியாதுல்ல. " எனச் சோர்ந்து போக,
"முதல்ல நீ தொலஞ்சி போன அந்த ஃபோன கண்டுபிடி. அதுல என்னென்ன இருக்குன்னு நமக்கு தெரியணும். நீ அரசனூர் கிளம்பு. " என்க, அவள் இரு தினங்களுக்கு பின் செல்வதாக கூறினாள்.
"ஏன் இப்பவே கிளம்புனா என்ன? நீ லீவ்ல தான இருக்க."
" ம்ச்… என்ன பாய் நீங்க நாளக்கழிச்சி மோகனாக்கு வளையல் போடுற ஃபங்ஷன் நடக்க போது. நாந்தா அவளுக்கு இருக்குற ஒரே நாத்தனாரு. அந்த நேரத்துல என்னை தொரத்த பாக்குறிங்க?" எனச் சிணுங்க,
" மேரேஜ் முடிஞ்சி நாலஞ்சி மாசம் தான இருக்கும் அதுக்குள்ள வளைகாப்பா! " என அதிர்ந்தான் ராக்கி.
"பாய்… அவங்க வீட்டுக்கு வரப்போற முதல் வாரிசுன்னு சொல்லி மூனாது மாசத்துலேயே சின்னதா வீட்டாளுங்கள வச்சி நடத்துற ஃப்ங்ஷன்னு அண்ணா சொன்னாரு. " என்க, அவன் அதற்கும் எதுவோ சொல்லி கேலி செய்ய எனச் சிரிப்புடன் காரை விட்டு இறங்கி சென்றாள்.
அந்த சிரிப்பு அந்த விழாவில் பறிக்கப்பட உள்ளதை உணராத ஓடிச் சென்றாள் பைரவி.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..