முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 71


 

அத்தியாயம்: 71



அதை வீடு என்று சொன்னால் நம்புவது கடினம். அது காய்லாங் கடைக்கு சவால் விடும் அளவுக்கு நீட்டாக இருந்தது. இல்லை ஆக்கப்பட்டிருந்தது. 


"ஷீலூ பேபி. நான் சொல்றத கேளு பேபி. " என மனைவியைக் கொஞ்சியபடி விசாகன் நடக்க, அவள் அத்தனை பொருட்களையும் போட்டுடைத்தாள். கூடவே தன்னையும் காயப்படுத்திக் கொள்ள, அவளின் மீது உயிரையே வைத்திருக்கும் கணவன் துடித்துப் போனான். 


"எந்தம்பி எங்க?" 


"பேபி, போலிஸ்க்கிட்ட இல்ல அவன தப்பிக்க வச்சாச்சி." 


"அப்ப ஏன் எம்முன்னாடி கூட்டிட்டு வரல?" 


"அவன தீவிரமா தேடுறாங்க பேபி. இப்ப இங்க வந்தான்னா மறுபடியும் மாட்டிப்பான். நான் அவன வெளிநாட்டுக்கு அனுப்பிருக்கேன். கொஞ்ச நாள் அவெ அங்கேயே இருக்கட்டும். நிலம கொஞ்சம் சரியானதும் வந்து உன்னைப் பாப்பான். " என்றவனின் பேச்சில் சமாதானம் அடையாதவள்,


"கால் பண்ணுங்க. நான் இப்பவே செந்தில் கிட்ட பேசணும். வீடியோ கால் பண்ணுங்க." என அடம்பிடிக்க, அவன் ஆயிரம் காரணங்களைச் சொல்லி அவளைச் சமாதானம் செய்து தூங்க வைத்துவிட்டு வெளியே வர, சரவணன் நின்று கொண்டிருந்தான். 


"தூங்கிட்டாளா!" என ஆச்சர்யமாக கேட்டு.


"மூணு தூக்க மாத்திர குடுத்தும் இவ்ளோ நேரம் ஆக்டிவ்வா இருந்திருக்கான்னா பாரு. ரெண்டு மூணு நாள் இத வச்சி தான் சமாளிக்கணும். " என்றவன் தூக்க மாத்திரை பாட்டிலயே வாங்கி வைத்திருந்தான். 


"நல்லா சமாளிக்கிற. ஆனா இப்படியே எத்தன நாளைக்கி சமாளிக்கப் போற." 


"அந்த *** நம்ம கைல மாட்டுறவர. " என்றான் கண்களில் கோபம் தெறிக்க.‌ 


"அந்த *** எங்கெல்லாம் போகும்னு தெரியும் தான. நம்ம ஆளுங்க எல்லாரையும் அனுப்பி, ஒரு இடம் விடாம அவனத் தேடச் சொல்லுங்க. பாத்ததும் நாய கொல்ற மாதிரி கல்ல விட்டு எறிஞ்சாது சவடிச்சிடுங்க. ***. என்னை டென்ஷன் பண்றதுக்குன்னே பிறந்த ** பயெ அவன். " என்றான் ஆத்திரத்துடன். 


காக்கி சட்டையின் காவலில் இருந்த அவனை மிகவும் கஷ்டப்பட்டு, பல காக்கி உடையை விலைக்கு வாங்கி, பல வக்கீல்களுக்கும் அதிகாரிகளுக்கும்  லஞ்சமாய் பல லட்சங்களைத் தூக்கி கொடுத்து, வெளிநாட்டு பாஸ் ஃபோர்ட் எடுத்து செந்திலைத் தப்பிக்க வைக்க திட்டம் வகுத்து கொடுத்தால், தப்பித்தவன் விசாகனின் ஆட்களிடம் சிக்காது எங்கோ தலைமறைவாகி விட்டான். அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர்.


தன்னைப் பற்றியு‌ம் தன் தொழில் ரகசியங்களை பற்றியும் நன்கு அறிந்த செந்திலைச் சுதந்திரமாக வெளியே விட்டால் அது ஆபத்து. அவன் மாட்டக்கூடாத யாரிடமாவது மாட்டினால் போகப்போவது அவன் உயிர் மட்டுமல்ல அவனின் சாம்ராஜ்யமும் தான். அதனால் தான் தேடிக் கொண்டிருக்கிறான்.‌


அப்படியெனில் தப்பிக்க வைத்தது அவர்கள். தப்பி சென்றவன் இவர்களிடம் இல்லை. எங்கே சென்றிருப்பான்?


" ஸார், உங்களப் பாக்க ஒருத்தர் வந்திருக்காரு." தன் குயில் போன்ற குரலில் இனிமையாக கூவினாள் அவள். 


"ம்ச்… ஐ அம் பிஸி நௌவ். " என்றவன் தன் பீஏ வின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அவனுக்காக பண்ணிய அலங்காரங்கள் வீணாவது பிடிக்காது, நெருங்கி நின்று கொண்டவள்.‌


"நான் சொன்னேன் ஸார். நீங்க பிஸின்னு. ஆனா பாத்தே ஆகணும்னு அரமணி நேரமா வெய்ட் பண்றாரு. ஃபைவ் மினிட்ஸ் போதும்னு சொன்னாரு." என நெளிந்து கொண்டு அவனின் சிகையைத் தடவியபடி சொல்ல, அது அவனுக்கு எரிச்சலை தந்திருக்க வேண்டும். கரத்தைத் தட்டி விட்டவன்,


"I can't see anyone now. get out. " எனப் பற்களை கடித்துக் கொண்டு சொல்ல, அவள் முகம்‌ சிறுத்து விட்டது. ஆனபோதும் அதைக் காட்டாது. 


"ஓகே ஸார். உங்கள பாக்கணூம்னு சொன்ன மிஸ்டர் தீஷிதனுக்கு எப்ப அப்பாய்மெண்ட் தர." என்க. 


அவனின் பெயரை கேட்டதும் சிராஜ்ஜின் தலை நிமிர்ந்தது. இத்தனை நேரம் அதைத் தன் முன் இருந்த கணினியில் புதைத்தவன் இப்போது புருவங்கள் முடிச்சி, 'எதற்கு என்னைத் தேடி வந்திருக்கிறான்?' என்ற யோசனையில் இறங்கினான். பின் தன்‌ பீஏ விடம் அவனை உடனே அனுப்புமாறு கூறியவன், வரவிருக்கும்‌ தீஷித்தை வரவேற்க தன் மணிக்கட்டை சுழற்றிய படி காத்திருந்தான். ஏனெனில் தீஷிதனின் செயல்கள் அப்படி. 


அவன் இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்து முழுதாக ஒரு வருடம் கூட முடியாத நிலையில், ஆலமரமென வேரூன்றி கிடந்த தன்னை அசைத்துப் பார்க்கும் முயற்சியில் இறங்கியவனை வேறு எப்படி வரவேற்பது! 


அன்று சாவல் விட்டு சென்றவனைப் பழி வாங்குகிறேன் என்று செய்த செயலுக்கு எதிர்வினையாக இப்போது தீஷித் நேரடியாக அல்லவா களத்தில் இறங்கி ஆடுகிறான். அவர்களின் பிஸ்னஸ் கமிட்டியில் சிராஜ்ஜின் பதவி பறிக்கப்பட்டது. அது சிராஜ்ஜின் தந்தைக்கும் அவனுக்கும் இடையே பகையாய் புகைந்தது. 


" இத்தன வர்ஷமா அதோட தலைவரா இருந்த எனக்கும் நம்ம குடும்பத்துக்கும் இது ரொம்ப பெரிய அவமானம். " என வசை சொற்கள் பாட, அதற்கு காரணமான தீஷித் இப்போது அந்தப் பதவிக்குத் தலைமை வகிப்பது ஆத்திரத்தைத் தந்தது. அவனை அடித்து நொறுக்கி விடும் வெறியில் அவனுக்காக காத்திருந்தான் சிராஜ். கதவுகள் தட்டப்படாது திறந்து கொண்டு உள்ளே வந்தான் தீஷித். 


"வணக்கம் சிராஜ் ஜீ. வணக்கம். நமோ..ஸ்கார்…" என இரு கரத்தையும் உயர தூக்கி கும்பிடு போட்டபடி வந்த தீஷித் சிராஜ்ஜிற்கு முன் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து கொண்டான். கால் மேல் கால் போட்டுக் கொண்டு, 


"நல்லா இருக்கிங்களா!" எனக் கேள்வி கேட்டவன், பதில் சொல்லும் முன், அதற்கானப் பதிலை அவனே கூறத் தொடங்கினான்‌‌. 


"நல்லா இருக்கிங்கன்னு நம்புறேன். இருக்கணும். நல்லாத்தான் இருக்கணும். அப்ப தான் நான் போடுற கோல்ல தடுக்க கொஞ்ச நாளாச்சும் இருப்பிங்க. இல்லன்னா பொட்டுன்னு போய்டுவிங்க. "  


"உனக்கு என்ன வேணும். எதுக்கு வந்த?"


"அது உங்க சீட்டு... கொஞ்சம் ஹாட்டா இருக்கு. அதான் கூல் பண்ண என்ன பண்ணலாம்னு கேட்டுட்டு போக வந்தேன். ஜஸ்ட் உங்க வழி காட்டுதலும் அட்வைஸ்ஸூம் வேணும். நான் சவுத் இன்டியன் கமிட்டி சேர்மன் போஸ்ட்டப் பத்தி கேக்குறேன். நீங்க ஹாட்டுங்கையும் வேற மூடுக்கு போய்டப் போறிங்க. " எனச் சொல்லி சிரிக்க, டேபிளில் ஓங்கி கரம் ஊன்றி எழுந்தவன், 


"Enough... பேசாத… உன்னோட கொட்டத்த அடக்க ஒரு நொடி போதும் எனக்கு."  


"அந்த ஒரு நொடிய கூட உனக்கு நான் தர மாட்டேன். " என அவனுக்கு நேராக எழுந்து நின்று சொன்னவன்,


"வெல்… அன்னைக்கி காட்டுன சோசியல் மெஸ்ஏஜிங் மூவி நிறைய பேருக்கு பிடிக்கலயாம். அதுனால் ஒரு ஆக்ஷன் மூவியா! சண்ட படமா! ஒன்ன லைவ்வா காட்டலாம்னு இருக்கேன். எதுல போடலாம். ம்… உன்னோட லேப்டாப்லயா? இல்ல அந்த டீவிலயா? டீவியே ஓகே தான். ஏன்னா ஸ்க்ரீன் பெருசா இருக்கும். மூஞ்சி நல்லா தெரியும். ரத்தம் சிந்தும் போது நம்ம மேலயே தெறிக்குற மாதிரி டெரரா ஃபீல் குடுக்கும். கேஸ்டிங் பண்ணலாம்ல. " என்றவன் சிராஜ்ஜின் பீஏவை அழைத்து டீவியை ஆன் செய்யச் சொல்லி படத்தை ஓட்ட, அதில் ஓடிக் கொண்டிருந்தது செந்தில். 


அவனுக்குப் பின்னால் நான்கைந்து பேர் துரத்த, உயிரை வெறுத்து ஓடிக் கொண்டிருந்தான். அதுவும் சுற்றி நிழல் தரும் மரங்கள் ஏதும் இல்லாத பாலை நிலம் போல் இருந்த இடத்தில். ஒத்தை அடி தார் ரோட்டில்.  


யார் அவன் என்பது போல் சிராஜ்ஜின் நெற்றி சுருங்க, "ஒரு நாளைக்கி ஆயிரம் பேர் கூட டீலிங் வச்சிக்கற உங்களுக்கு இவனத் தெரிஞ்சிருக்க வாய்ப்பு இல்ல தான். ஆனாலும் உங்களுக்கு நியாபகப் படுத்த நான் இருக்கேன். கவலயே படாதிங்க. இவெந்தா சென்னைல இருக்குற உங்க வலது கையோட வலது கை. 


புரியலயா விசாகன் தெரியுமா! இல்ல ஷீலான்னு சொன்னா உடனே தெரிஞ்சிடும். ஏன்னா ஆம்பளைங்க பேர விட பொண்ணுங்க பேரு நியாபகம் வச்சிக்கிறது உங்களுக்கு ஈசியா இருக்கும். " என்றபோது சிராஜின் முகம் யோசனையில் விழுந்து கிடந்தது. 


"நியாபகம் வந்திடுச்சா! வரலன்னாலும் பரவாயில்லை. அவளோட தம்பி தான் செந்தில்.  ஊர்வலத்துல கத்தியோட வீரமா நடந்து வந்து ஒரு வயசான கிழவன கொல்ல பாத்தியான்னு காவல் துறை தூக்கிட்டு போச்சி. 


கூடவே டிரெக் டீலிங் வேற பண்றானாமே. அதுனால அவனத் தேடிட்டு இருந்த போலிஸ் கைல தொக்கா மாட்டிக்கிட்டான். விசாரிக்க கூட்டீட்டு போறப்ப ஆளு தப்பிச்சி காணாம போய்ட்டான். எங்க தேடியும் கிடைக்கவே இல்லயாம்.‌


எப்படி கிடைப்பான்? அதா எங்கிட்ட இருக்கானே. இப்ப நான் போலிஸ்ஸா மாறி விசாரிக்கலாம்னு விசாரிச்சா, பயபுள்ள வேஸ்ட்டா என்னென்னத்தையோ சொல்லுது. எதோ கடத்த சொன்னியாம். அடச்சி வச்சி போத மருந்து குடுத்து சித்தரவத செஞ்சி கொல பண்ணச் சொன்னியாம். அத்தனையும் கதை. 


அத்தனையையும் வேஸ்டாகாம ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன். அதான் மரண வாக்குமூலம் வாங்கியாச்சில்ல இனியும் உயிரோட விட்டா நான் சொல்லல-ன்னு பொய் சொல்லுவான். அது தேவையான்னு தான் இவன முடிக்கப் போறோம்.” என்றவன் சிராஜ்ஜிற்கு அருகில் சென்று, 


“ஷீ… இப்ப பெரிய சைஸ்ல லாரி ஒன்னு வரும். அது ரோட்டுக்கு நடுவுல ஓடுற எங்காளுகல விட்டுட்டுட ஓரமா ஓடிட்டு இருக்குற உன் ஆளு மேல மோதும் பாரேன். சுவாரசியமா இருக்கும்… ஆமா வேகமா வந்த லாரி மோதுனா பறந்து போறவெ எந்த திசைல விழுவான்? நாலு திசை இருக்கு. அதுல எது? ம்… " என்று யோசிக்க,


"உனக்கு எமகண்டம் எந்த திசையோ அதுல டா. " என்றான் சிராஜ் கோபமாக. 


"நோ... நோ… இங்க எமனே நாந்தான். நீ தான், நான் கூட்டுட்டு போக வந்த  passenger. கொடூறமான passenger. பாசக்கய சுத்த ஆரம்பிச்சிட்டேன். வீசினா குறி தப்பாது." என்றவன் கதவை நோக்கி நடக்க, சிராஜ் ஆத்திரத்தில் முகம் சிவக்க நின்றான். 


"ம்… வாக்கு மூலத்துல என்னென்ன சொன்னான்னு தெரியுமா. தெரியாதுல்ல. அத அரசனூர் கேஸ் பைனல் ஹியரிங் அப்ப கோர்க்கு வந்து தெரிஞ்சுக்க. போட்டு காட்டுறேன். " என்று விட்டு செல்ல, சிராஜ் ஆத்திரத்தில் வெந்து கொண்டிருந்தான். உடனடியாக  யார் யாருக்கோ ஃபோன்  செய்து உத்தரவுகளை பிறப்பித்தான். தீஷித்தின் தலையை உடலில் இருந்து கொண்டு வருவர்களுக்கு கோடியில் பரிசை அறிவித்தான்..


" வணக்கம் ம்மா. என்ன நியாபகம் இருக்கா? நான் பைரவி. விஜியோட ஃப்ரெண்டு. " என்ற பைரவி கோமதியின் முன் வந்து நின்றாள். 


அவளுக்குப் போதை பொருள் யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது வாங்கப்பட்டது என்ற விவரங்கள் வேண்டுமாயின் விசாகன் வீட்டிற்கு சென்று சோதனை போட வேண்டும். 


நிச்சயம் எதாவது ஒரு க்ளூ கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தான் விஜிக்கு அழைத்தாள். அவளின் அன்னையைப் பார்க்கும் சாக்கில் வீட்டிற்குள் செல்லலாம் என்று திட்டமிட்டவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது விஜி கூறிய தகவல். இருந்தும் அவர் மனம் வைத்தாள் தன்னை அழைத்து செல்ல முடியும் என்ற நம்பிக்கையில் பார்க்க வந்துள்ளாள். 


காலை வேளேயிலேயே வந்து விட்டாள். அது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி. விடுதி வசதி கொண்ட அதில் வேலை செய்து கொண்டே தன் பேத்தியைக் கவனித்து வருகிறார் கோமதி. கையில் துடப்பத்துடன் இருந்தவர், அதைக் கீழே போட்டு விட்டு பைரவியின் முகத்தைக் கண்களைச் சுருக்கி சில நொடிகள் பார்த்தார். 


"அட நீயாம்மா! வா… வா… நல்லா இருக்கியா?" என நலம் விசாரிக்க, அவளும் குசலம் விசாரிக்க என நிமிடங்கள் நகர்ந்தன. அங்கிருக்கும் கேன்டியனில் அமர்ந்து டீ வாங்கி கொடுத்து தன் விசாரனையைத் தொடங்கினாள் பைரவி. 


"அம்மா எனக்கு ஒரு உதவி வேணும். "


கோமதி, "உனக்கு உதவி செய்ற நிலமைல நான் இல்லயேம்மா."


"உதவி பண்ண முடியும்மா. நான் சொல்றத நீங்க முழுசா கேளுங்க. நான் உங்களக் கட்டாயப்படுத்தல. ஆனா எனக்கு உதவி பண்ணா ஒரு பொண்ணுக்கு நீதி கிடைக்க வாய்ப்பிருக்கு. " என்றவள் சுடரைப் பற்றியும், அவளின் சேவை செய்யும் நல்ல மனம் பற்றியும், அவள் எப்படி கொடூரமாக இறந்து போனாள் என்பது பற்றியும் விரிவாக கூறியவள். 


"ம்மா… எந்த ஒரு பொண்ணுக்கும் இந்த மாதிரியானக் கொடூர மரணம் நேரக்கூடாது. அவங்க உடம்புல ஏத்துன டிரக்ஸ்ஸ விசாகன் தான் சப்ளை பண்ணிருக்கலாம்னு சந்தேகப்படுறேன். அவன் கூட டீலிங் வச்சிக்கிட்டவங்க யார் யார்ன்னு தெரிஞ்சிக்கணும். 


உங்களால என்னை அந்த வீட்டுக்குள்ள கூட்டீட்டு போக முடியும். ஒரு மணி நேரம் டயம் கிடைச்சா கூட போதும். எனக்கு தேவையானத தான் தேடி எடுத்துப்பேன். ப்ளிஸ்... என்னை அங்க கூட்டீட்டு போறிங்களா?"  


"முடியாதும்மா. அந்தச் சாக்கடைக்குள்ள இருந்து வெளிய வர நானும் எம்பேத்தியும் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்ல. இப்ப தான் நிம்மதியா வாழ்ந்திட்டு இருக்கோம். மறுபடியும் அந்த நரகத்துக்குள்ள… நான் மாட்டேன்ம்மா. அதுவும் உன்னைக் கூட்டீட்டு போறது நடக்காத காரியம். வேண்டாம்மா. நீயும் அங்க போக முயற்சி பண்ணாத. " என்றவர் உறுதியுடன் மறுத்தார். 


பைரவி எவ்வளவோ பேசிப் பார்த்தாள். ஆனால் அவர் முடியாது என்று சாதித்து விட்டு சென்றார். ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு. 


இதுவரை ஒரு அடி கூட எடுத்து வைத்து முன்னேறாத தன் தன்னிலையை எண்ணி வருத்தம் கொண்டாள் பைரவி. 


"ஹே டாம் கேர்ள். டீ ய சூடா குடிக்க பிடிக்காதா? கோல் காஃபி மாறி ஆறிப்போன ஐஸ் டீ. " என்றபடி அவளின் முன் வந்து அமர்ந்தான் தீஷித். 


"ஹே அவக்கேடோ? நீங்க எப்படி இங்க?" என்றவளின் முன் சூடாக சில சமோசாக்கள் பரிமாறப்பட்டது. 


" பிடிக்கும் தான." என டொமேட்டோ சாஸ் பாட்டிலை அவளின் முன் வைத்தான். 


"வித் அவுட் சாஸ்." என்றவள் இருந்த டென்ஷனில் ஒன்றை முழுங்கி விட்டாள். 


"ம்… உங்களுக்கு.‍" என நீட்ட, அவளின் கையில் இருந்ததை வாங்கி உண்டான் புன்னகையுடன்.


"பசியா!"


"இல்ல.‌.. டென்ஷன்.‌"


"வெய்?"


"இந்த உலகத்துல உதவி கிடைக்கிறது பயங்கற ரேர்ரா இருக்கு. உதவுற மனசு இருக்குறவங்க கொறஞ்சிக்கிட்டே இருக்காங்க. endangered animal மாதிரி endangered Humanity யா மாறிட்டு வருது. " எனப் புலம்ப,


"உனக்கு யாரு உதவி பண்ண மாட்டேன்னு சொன்னாங்க? " என்றான் குறுநகையுடன். 


"இதோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வர எம்முன்னாடி உக்காந்து பேசிட்டு இருந்தவங்க சொன்னாங்க. டீ ய கூட குடிக்காம நான் கேட்ட உதவிக் கரத்தையும் கொடுக்காம போய்ட்டாங்க. " எனச் சோகமாக சொல்ல, 


"உனக்கு நான் இருக்கேன். "


" ஹாங்."


"உதவி பண்ணப்பா. என்ன விசயம்னு க்ளியரா நீ சொன்னா, உதவி பண்ண முடியும்." 


'அடப்பாவி யாருடா நீ! அங்க ஒருத்தன கொல பண்ணிட்டு. இங்க வந்து உதவி பண்றேங்கிற. உனக்கு தான் எல்லாமே தெரிஞ்சிருக்கே. அப்றம் ஏன் இந்த பிள்ளைக்கிட்ட நடிக்கிற?'  உங்க மைண்ட் வாய் இதுவா இருக்கும்னு நம்புறேன்.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...