முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 72


 

அத்தியாயம்: 72



உன் விழியாலே… உன் விழியாலே…

என் வழி மாறும் கண் தடுமாறும்…

அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்…

இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்…



இந்தப் பாடலை பாடிய யுவனின் குரல் தீஷித்தின் காதில் கேட்டுக்கொண்டே இருக்க, அருகில் தன்னை உரசாது நடந்து வரும் நங்கையால் அவன் தனக்கு மட்டுமான தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். 


ஊமைப் படம் பார்ப்பது போல் அவளின் குரலைக் கேட்காது, விழிகளும் கரங்களும் முகம் காட்டும் பாவனைகளும் பேச, அதை மொழி பெயர்த்துக் கொண்டே வந்தான்.  


இனிய கணங்கள் திரும்ப கிடைக்குமா என்று தெரியாது மதிப்பில்லா பொக்கிஷங்கள் அவளுடன் இருக்கும் நிமிடங்களை ரசித்து படி வந்தான் தீஷித். 


சில மணி நேரத்திற்கு முன்…


"நிஜமாவா சொல்றிங்க? எனக்கு நீங்க உதவி செய்யப் போறிங்களா!" 


"Yes…"


"Are you sure? எங்கிட்ட இருந்து விசயத்த வாங்கிட்டு அப்றம் இது பெரிய விசயமா இருக்குன்னு பயந்து போய் ஜகா வாங்க கூடாது. "


"பயம்!!" என்றவனின் உதடுகள் தானாக விரிய, 


"கண்டிப்பா ஜகா வாங்க மாட்டேன். ஹேய் நான் ஆல்ரெடி உனக்கு ஹெல்ப் செஞ்சிருக்கேனே. ஃபோன் நம்பர் குடுத்த, அதுக்கு நான் ப்ரிண்ட் அவுட்லாம் எடுத்து குடுத்தேனே."


"க்கும்… அந்த ப்ரிண்ட் அவுட்ட வச்சி நான் என்ன பண்ண? பழைய பேப்பர் கடைக்கி தான் போடணும்." 


"பழைய பேப்பர் கடையா! எனக்கு புரியல. நீ கேட்ட டிடெய்ல்ஸ்ஸ நான் தந்தேன். அப்றம் ஏன் பழைய பேப்பருக்கு போடப் போற."


"அதுல எனக்கு ஒன்னுமே புரியல. அது தான் உண்ம. நிறைய இருக்கு. அதுல எனக்கு தேவையானது எதுன்னு நான் தேடி எடுக்குறதுக்குள்ள… ஐய்யோன்னு ஆகிடும். ச்ச… டிடெக்டிவ் வேல பாத்து கேஸ்ஸ சால்வ் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. எப்படி தான் இந்த போலிஸ் காரங்க எல்லாம் மூளய கசக்கி யோசிச்சு குற்றவாளிங்கள கண்டு பிடிக்கிறாங்களோ! நானும் அவங்கள மாதிரி ஆகணும்னா நிறைய யோசிக்கணுமா! எனக்கு அது பிடிக்காதே. " எனச் சோகமாக சொல்ல, 


"எந்த வேலையும் ஈசி கிடையாது டாம். பட் ஹெல்ப் பண்ணி நம்ம ஸ்ரெஸ்ஸ குறைக்க‌, எங்க்ரேஜ் பண்ணன்னு நம்ம கூட நம்ம குடும்பமும் ஃப்ரெண்ட்ஸ்ஸும் இருக்கும் போது கவலப்பட வேண்டியதிருக்காது."


"ஃபேமிலி. அந்த சப்போட் கிடையாது. சாந்திக்கிட்ட போய் 'ம்மா நான் சொல்ற கொஞ்சம் கேளே.' ன்னு சொன்னா, என்னைப் பேச விட்டுட்டு அது டீவி சீரியல்ல மூழ்கிடும். அப்படியே இத கேட்டாலும், எனக்கு ஆதரவா ஆறுதலா எதையும் சொல்லாது.‌ 


சோ ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான். பட் அவளும் ஊருக்கு போய்ட்டா. ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறா. நான் அவள ரொம்ப மிஸ் பண்றேன். " என்றவள் டேபிளில் கரத்தை விரித்து முகம் சாய்க்க, 


"அப்ப புதுசா ஒரு ஃப்ரெண்ட்ட பிடிச்சிக்க. நான் அதுக்கு ஃபிட்டா இருப்பேன்னு நம்புறேன். " என நட்பு கரம் நீட்ட, வேகமாக உற்சாகத்துடன் எழுந்தவள்‌. 


" வாவ்… ஒரு ஃபேமஸ்ஸான, பெரிய டெலி கம்யூனிகேஷன்னுக்கு ஓனரு எனக்கு ஃப்ரெண்டா இருக்க ஆசப்பட்டு கை நீட்டுறாரு. நம்பவே முடியலப்பா. "  


"அந்த ஃபோன கண்டுபிடிக்க என்னால முடியும்." என்றான் அவன். 


"குட் நியூஸ். உதவி கரம் நீட்டும் போதே கப்புன்னு பிடிச்சிக்கணும். அதத் தட்டி விட்டு வேடிக்க பாக்க கூடாது. இனி நீங்களும் நானும் ஃப்ரெண்ட்ஸ். என்னோட ஃப்ரெண்டா நான் உங்கள வரவேற்கிறேன் அவகேடோ. " எனக் கரம் குளுக்கியவளிடம்,


"பேரு சூப்பரா இருக்கே." எனச் சிலகித்தவன். 


"இது நம்ம ஃப்ரெண்ட் ஷிப்க்காக. சின்ன கிஃப்ட். " என ஒரு கீச் செயினை அவளிடம் தந்தான் தீஷித். 


"நினைவு சின்னம். " என்றவள் அதை வாங்கி பார்க்க, அது அத்தனை அழகாய் இருந்தது. 


மரத்தில் அவளின் சாப்பரை செதுக்கி அதன் மேல் பைரவி ஒயிலாய் அமர்ந்திருப்பது போல் இருந்த அது பைரவியைக் கவர்ந்தது. 


"Marvelous. It was amazing." என விழிகள் விரிய. எதிரில் நின்றவனுக்கு மனம் நிறைந்து விட்டது. 


"சொல்லு யாருக்காக டிடெக்டிவ் வேல பாக்குற? என்ன கண்டுபிடிக்க போற? என்ன கேஸ்?" என்க, பைரவிக்கு சொல்லவா வேண்டும். சுடரை பற்றி அனைத்தையும் பேசி முடித்தாள்.


"எனக்கு யாரு இந்த அநியாயத்த பண்ணான்னு தெரியணும். அவன கொண்டு போய் சட்டத்துக்கு முன்னாடி நிப்பாட்டணும். அதுக்கு முன்னாடி எங்கைல.. " என வழக்கம் போல் ராக்கியிடம் கூறிய அதே வசனங்களை அச்சு பிசகாமல் அள்ளி வீசி அதன் பிரதிபலிப்பை அவனின் முகத்தில் பார்க்க விழி உயர்த்தினாள். ஏனெனில் ராக்கியின் மென்மையான மனம் இந்தக் கதையை கேட்டு கலங்கியதை அவன் முகம் காட்டியது. 


ஆனால் தீஷித்தின் முகம் எதையும் பிரதிபலிக்கவில்லை. நார்மலாக வெகு சாதாரணமாக இருந்தது. அவனின் மன உணர்வையும் முகம் பாவணையையும் படிக்க தனி மொழியை உருவாக்க வேண்டும் என்பது போல் புதிராக இருந்தது.


' தயிர் சாதம் மாறியே முகத்த வச்சிருக்கானே! ஏன்?' என்பது போல் அவள் பார்க்க, 


"நத்திங்…" என ஒற்றை வரியில் முடித்தவன் எழுந்து நடந்தான்.


"ஒன்னும் சொல்லாம போறிங்க?" எனக் கத்தியவளைத் திரும்பி பார்த்தவன், 


" அரசனூர் போகலாம். அங்க தான் நமக்கு தேவையானது இருக்கு. எடுத்திட்டு வருவோம். " 


"நமக்கு இல்ல. எனக்கு. "


"நான் உன் ஃப்ரெண்டுன்னு சொன்ன. அப்ப உன்னோட ப்ராப்ளத்துல எனக்கும் பங்கு உண்டுல. " 


"ஓ… அப்படி சொல்றிங்க. ஓகே. நாளக்கழிச்சி நான் பஸ்ல போறேன். "


"கேண்டல் பண்ணிடு. தா உன்ன கார்ல கூட்டீட்டு போறேன். " 


"நிஜம்மாவா! அந்த ரோஸ் ராய்ஸ் கார்ல?"


" எஸ்…"


"எனக்கு ஒரு ரவுண்ட் ஓட்ட கார தந்தா ஓகே சொல்றேன். " 


"உனக்கு ஃபோர் வீலர் ஓட்டி பழக்கமா?" 


"இல்ல… எனக்கு கார் ஓட்ட தெரியாது. லைசன்ஸ்ஸும் கிடையாது." 


'அப்றம் எந்தத் தைரியத்துல நீயெல்லாம் காரு கேக்குற. அதுவும் ரோஸ் ராய்ஸ் கார. ' என்பது போல் பார்த்தவன்,


"ப்ளீஸ்... ஒரே ஒரு ரவுண்ட். சும்மா ஒரு நெட்டு ரோடு மட்டும். " என விழிகளால் கெஞ்ச, மாட்டேன் என்று சொல்ல எப்படி மனது வரும். 


"இப்பவே ஓட்டட்டுமா?" என வேகமாக எழுந்தாள். 


'கார காய்லாங்கடைக்கு அனுப்புறதுக்கு‌ எவ்ளோ அவசரம்.'‌


"வந்த வேல முடிஞ்சிடுச்சா. " என்றபடி அவனின் அருகில் ஓடி வந்தாள், அவனின் மௌனத்தைச சம்மதமாக எடுத்துக் கொண்டு.  


"யா... இங்க ஒருத்தர பாக்க வந்தேன். பாத்திட்டேன். " எனக் குறுநகை பூத்தவனின் பேச்சில் தன்னைத்தான் காண வந்துள்ளான் என்ற பொருள் மறைந்திருப்பது புரியாது அவள் இருக்க,


"உங்க கார் எங்க? எப்பயும் உங்க நிழல் மாதிரி கூடவே இருக்குற பீஏ வ காணும். வெட்டி விட்டுடு வந்துட்டிங்களா?" அவளின் பேச்சில் புன்னகை அரும்ப, 


"வெட்டலாம் இல்ல. அங்க பாரு. " என்றவன் காரை காட்ட, அதன் உள்ள  சபரீஷ் அமர்ந்திருந்தான். வேகமாக ஓடிச் சென்று காரை ஆசையுடன் வருடினாள்‌ பைரவி. 


"செம்ம காரு. ஏறி உக்காந்தப்ப ஜெட்டுல உக்காந்த ஃபீல் குடுத்தது. " என்றாள்.


"இதுக்கு என்ன பேர் வப்ப. "


"ம்…" என வெகுநேரம் யோசித்தவள்,


"தேஜஸ்.." என்றவள் ஓட்டுநர் இருக்கையின் பக்க கதவை திறக்க, சபரீஷ் வேகமாக கீழே இறங்கி கொண்டான். 


"ஹே… என்னோட டிரைவிங் மேல சந்தேகமா!" என அவனை பார்த்து கேட்க,


"சச்ச… சந்தேகம்லாம் இல்ல. உறுதியாகவே சொல்றேன். காரு, கொட சாஞ்சிட்டு நிக்கப் போது. அதோட சேந்து நானும் கொட சாய விரும்பல. " என்றான் அவன். 


"இது ஃபாரின் கார். உள்ள எட்டு ஏர் பேக்ஸ் இருக்கும். உயிருக்கு கேரண்டி. "


"பட் கை, காலுக்கு கேரண்டி கிடையாதே. " என்றவன் தீஷித்திடம் சொல்லி விட்டு கால் நடையாக சென்று தன் உடலைக் காத்துக் கொள்ள, 'உன்னை நான் நம்புகிறேன். ' என்பது போல் ஏறி அமர்ந்தான் தீஷித். 


"எனக்கு ABCD of driving நல்லாவே தெரியும் தீஷ். நீங்களே பாத்திட்டு என்னைப் பாராட்ட வார்த்தைகளத் தேடுவிங்க. " என வசனம் பேசியபடி அனைத்தையும் சரி பார்த்து விட்டு ஆக்சிலேட்டரை அழுத்த, வேகமாக அழுத்தி விட்டாள் போலும். சபரீஷ் சொன்னது போல் முட்டி மோது நின்றது. 


"எனக்கு புரியல தீஷ். நான் கரெட்டா கியர் போட்டு தான் ஆக்ஷிலேட்டர மிதிச்சேன். பட் அது முன்னாடி போகாம எப்படிப் பின்னாடி போச்சி?" எனப் பின்னே இருந்த மரத்தில் மோதி நின்ற பிறகு கேள்வி கேட்டாள் அவள். 


"ரிவர்ஸ் கியர் போட்டா பின்னாடி தான் போகும் டாம். " என்றவன் குரலில் துளியும் கோபம் இல்லை. 


"நான் போடும் போதே பாத்தீங்கன்னா ஏன் சொல்லல? உங்களால தான் கார் இடிச்சிடுச்சி. டேமேஜ்க்கு நான் பொறுப்பில்லப்பா. பைசா தர மாட்டேன். " என அவனின் மீது குற்றம் சுமத்த, அவன் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி காரைப் பார்வையிட்டான். 


சைடு வியூவ் மிரர் உடைந்திருந்து. காரில் பல கோடுகள் போடப்பட்டிடுருந்தாலும் நல்ல வேளையாகச் சின்ன சின்ன டேமேஜ்ஜுடன் கார் தப்பித்தது. அவர்களும் டேமேஜ்ஜே இல்லாமல் மெக்கானிக் செட்டில் விட்டு விட்டு வந்தனர்.


"நீங்க எப்படி போவிங்க?"


"கேப் புக் பண்ணிருக்கேன்."


"தேவையில்ல. கேன்சல் பண்ணிடுங்க." என்றவளை ஏன் என்பது போல் பார்த்தான்.


"ஃப்ரெண்டுன்னா ஒருத்தருக்கு ஒருத்தர் ஹெல்ப் பண்ணிக்கிவாங்க.‌ இப்ப நான் செய்ற மாதிரி. " என்று தன் சாப்பரின் சாவியை ஆட்டி காட்டியவளின் அழைப்பை ஏற்றவன் பைரவியுடன் சென்றான். 


அன்றைய நாள் முழுவதும் இருவருக்கானதாக மாறியது. இருவரும் சேர்ந்தே சுற்றினர். அவள் முதலில் அவனை அழைத்துச் சென்ற இடம் சாரதா ஹோமிற்கு தான். அங்கு இருந்த வயோதிகரைக் கேலி செய்த படி, அவர் செய்து கொண்டிருந்த வேலைக்கு உதவுகிறேன் என்று உபத்திரம் செய்ய, குச்சியால் அடித்து விரட்டப்பட்டாள் அவள். அவளுடன் வந்த பாவத்திற்கு அவனையும் விரட்டி விட்டனர்.‌ பின்  பைரவி அவனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தாள். சாந்தியின் கைவண்ணத்தில் விருந்துண்டு விட்டு சென்றான் தீஷிதன்.‌


"யோவ் பொரம்போக்கு. பாத்து ஓட்டிட்டு போ மாட்ட. " என்ற மூன்றாம் மனிதனின் குரல் மதுவின் காதைச் சென்றடையவில்லை. அவனின் கவனம் மொத்தமும் சாலையில் ஓட்டிச் செல்லும் காரில் இல்லாது வேறு இடத்திற்கு இடம் மாறி இருக்க, காரை ஓரமாக நிறுத்தியவன் அதை ராக்கியிடம் ஒப்படைத்தான். 


குழம்பிய நிலையில் காரை இயக்க கூடாது என்று. அவனின் குழப்பத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம்  சிதம்பரம். எதற்கும் கட்டாயப்படுத்தாது, தன்னைத் தன் போக்கில் விடும் சிறிய தகப்பன் இன்று ‘எனக்காக செய்வாயா?’ என யாசிக்கும் போது மனம் அதை ஏற்கவும் முடியாது, நிராகரித்து தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் அவரைக் காயப்படுத்தவும் முடியாது தவித்தது. 


'உன்னோட சாய்ஸ்ஸா ஒன்ன தேர்ந்தெடுத்த. அது நிலைக்கல. இப்ப நாங்க தேர்ந்தெடுத்திருக்கோம். நீ மறுக்க கூடாது. ' எனத் திட்டவட்டமாக கூற, தலையசைத்தது தவறோ! என்ற யோசனை தான் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.


"என்னாச்சி மச்சி? அங்கில் என்ன சொன்னாரு? ஏன் ஒரு மாறி இருக்க.?" 


"ஒன்னுமில்ல…" என்றவன் விழிகளை மூடிக் கொண்டு காரின் ஏசியை அதிகப்படுத்தினான். 


"அப்ப நிறையா இருக்கு. அதா ஏசிய கூட்டி வைக்கிறா. சொல்லு மச்சி. வீட்டுல என்ன நடந்தது. ஏன் மோகனா உன்ன அவசர அவசரமா வரச் சொன்னா. " 


"ம்ச்… நாளைக்கி மண்டபத்துல நடக்கப்போற ஃபங்ஷனுக்கு வேண்டிய ஏற்பாடுகளச் செய்ய வரச் சொன்னாரு. அவளோட புகுந்த வீட்டு ஆளுங்களுக்கு ரூம் அலாட் பண்ண சொல்லி கூப்பிட்டா." என்க, நண்பனை நம்பாத பார்வை பார்த்தான் ராக்கி. அதை உணர்ந்த மது,


"ரோட்டப் பாத்து வண்டிய ஓட்டு. " என அதட்ட,


'க்கும் இடியே வந்து தல மேல விழுந்தாலும் நம்ம கவனம் ரோட்டு மேல மட்டும் தான் இருக்கணும் போலயே. இங்கிட்டும் அங்கிட்டும் திருப்ப விட மாட்டேங்கிறான். ' என நினைத்துக் கொண்டவனின் ஃபோன் சிணுங்க, அதை எடுத்து காதில் வைத்தான். 


"ஹலோ…" என்ற வார்த்தையை முழுமையாக கூட கூறியிருக்க மாட்டான். ஆனால் அதற்குள் ஃபோன் பறிக்கப்பட்டது. 


"டிரைவ் பண்ணும் போது ஃபோன் பேசக் கூடாது. " என்றவனைக் கடுப்புடன் முறைத்தவன் காரை ஓரம் நிறுத்தி விட்டு பேசுவதற்குள் கால் கட்டானது. 


"பிரவீன் தான் கூப்பிட்டிருக்காரு. ஏன்னு கேக்க கூட விடாம பண்ணிட்டான். " எனச் சிடுசிடுத்தவன், பிரவீனுக்கு கால் செய்ய, அவன் செந்தில் இறந்ததை பற்றி கூறினான். 


"மச்சான், நாம பிடிச்சி குடுத்த செந்தல யாரு போட்டாங்களாம். " என அதிர்ந்து போய் ராக்கி சொல்ல, மதுவிற்கு அது அதிர்ச்சியாக இல்லை போலும். 


"எதிர் பார்த்த ஒன்னு. " என்றான்.‌


"எப்படி?"


"அவன் அப்ரூவர் ஆனா மாட்டிக்கிவோம்னு பயந்து  இவன் ஆட்களே போட்டுத் தள்ளிடு வாங்கன்னா தோணுச்சு. நடந்திடுச்சி. " எனச் சாதாரணமாக சொன்னவன்,


"கொன்னது யாரா வேண்ணாலும் இருக்கலாம். அதுனால அவக்கிட்ட இந்தக் கும்பல் பின்னாடி போக வேண்டாம்னு சொல்லி வை. " என்றவனின் முகத்தைப் பார்த்த ராக்கி. 


"ஸாரி மச்சி. நீயே சொல்லிடு. ஏன்னா நான் பெங்களூர் போகப் போறேன். சுடர் கேஸ்காக. " 


"ம்ச்... நீயும் ஏன்டா அவ கூட சேந்திட்டு சுடர்‌ சுடர்னு உயிர வாங்குற. " எனப் பற்களைக் கடித்தான்.


"சுடருக்காக இல்ல பைரவிக்காக போறேன். "


"நாளைக்கி ஃபங்ஷனுக்கு நீ வரலயா?"


"மதியாதார் தலை வாசல் மிதியாதேன்னு எங்க பாட்டி சொல்லிருக்காங்க. பாட்டி சொல்ல தட்டக் கூடாதுன்னு ஆச்சியும் சொல்லிருக்காங்க. அதுனால நான் வரல. இத மோகனா கிட்ட குடுத்திடு. நான் கால் பண்ணி பேசிக்கிறேன். " எனப் பரிசை மதுவின் கையில் திணித்து விட்டு காரை ஏஜென்சியில் நிறுத்தி விட்டு விட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான். 


மதுவிற்கு நடக்கும் எதுவுமே பிடிக்க வில்லை. ஆனால் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்க, வீடு சூனியமாய் தெரிந்தது. 


அந்தச் சூனியத்திற்கு காரணம் தன் முன்னாள் மனைவி தான் என்ற கோபம் எழ, அன்றிரவுக்கான உறக்கம் பறிபோனது. கூடவே வேறு சிலவும் பறிபோக உள்ளது அவனுக்கு தெரியாது அல்லவா. 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad