அத்தியாயம்: 75
நீ நீங்கினாலும்…
உன் நினைவுகள்…
எனும் பெருங்கடலில்…
மூழ்கி கரையேர...
இயலாமல் தவிக்கிறேன்…
என் நிகழ்கால நிலையை…
எண்ணி வருந்தி…
தனிமையோடு தடுமாறுகிறேன்...
இது மதுவிற்கு ஏற்ற வரிகள். தனிமை அவனுக்குப் பிடித்த ஒன்று. பிறந்த முதலே தனித்து இருந்தே பழக்கப்பட்ட அவளுக்குத் தன்னைச் சுற்றி இருக்கும் அமைதியில் ஆனந்தம் இருக்கும். நிம்மதி இருக்கும்.
ஆனால் அந்த அமைதி இன்று அவனைக் கூர் தீட்டிய பனியாய் மாறி குத்தி கிழித்தது. சில்லென உடலை உறைய வைக்கும் பனிக்கட்டி, கூர் தீட்டிய கத்தியைக் காட்டிலும் கூர்மையானது. பைரவி என்ற பனி ஆடவனை அணைக்காது தகிக்க வைத்தது.
உடன் பிறந்தோர் என்று யாரும் கிடையாது. பெற்றவளும் பெற்றவனும் நெருங்கியது கிடையாது. தூர நின்றே பழகுவர். இருக்கும் ஒரே உறவான சிறிய தகப்பனின் குடும்பமும் தாமரை இலை போல் ஒட்டியும் ஒட்டாமலும் உறவு கொண்டாட, மதுவின் உலகில் அவனிடம் உரிமையுடன் பழக ராக்கியைத் தவிர வேறு யாரும் கிடையாது. அவனுக்குமே சில எல்லைகள் உண்டு.
இப்படித் தான் இருக்க வேண்டும் என்று சொல்லும் மிலிட்டரி பள்ளியில் படித்த அவனுக்கு, ஒழுக்கம் மிகவும் முக்கியம். அட்டவணை போட்டு அனைத்தையும் செய்து முடிக்கும் அவனுக்குத் தன்னை யாரும் தொந்தரவு செய்வதும், தன் பொருட்களை இடம் மாற்றி வைப்பதும் பிடிக்கவே பிடிக்காத செயல்.
கோடு போட்டு வாழ்கிறேன் என்பார்களே அது போன்ற கொள்கையோடு தானுண்டு தன் தனிமை உண்டு என்று வாழ்ந்தவனின் தனிமை திருமணம் என்ற பெயரில் சில ஆண்டுகளாக பறிக்கப்பட்டிருந்தது. திரும்ப கிடைத்தும் அந்த தனிமையை அவன் வெறுக்கும் நிலைக்கு வந்து விட்டான்.
அவனின் டெடியின் அதிர்ந்த முகம், நேர் கொண்ட பார்வையையும் இதற்கு முன் கண்டிருக்கிறான். அப்போதும் ‘தன் மேல் எந்தத் தவறும் இல்லை. உன் புரிதலில் உள்ளது தவறு.’ என்ற நிமிர்வு அவளிடம் இருந்தது. இன்று இருந்ததை போல்.
ஏன் சிதம்பரத்தின் வேண்டுதலுக்குத் தலை அசைத்தோம் என்று உள்ளம் கொதிக்க, மனைவியின் கலங்கா விழிகளில் மனம் சுக்கு சுக்காக உடைந்து நொருங்கியது. தன் வீட்டிற்கு வந்தான். கதவுகளைத் திறந்ததும் வழக்கம் போல் தன் காலணியைக் கலட்டி அங்கிருந்த ஸ்டாண்டில் வைக்க, நினைவுகள் பின்னோக்கி சென்றன.
"ஏய் பாண்டா. உன்னோட ஷன்டல்ல ஒழுங்கா அடுக்கி வைக்க மாட்டியா. இப்படித்தா கண்ட படி போடுவியா. " எனக் கலைந்து கிடக்கும் காலணிகளைக் கண்டு வீட்டிற்குள் வந்ததுமே குரல் கொடுப்பான் மது.
"அதா ஒழுங்கா இல்லன்னு தெரியுதுல மாமா. எடுத்து வைச்சிடுங்க." என உள்ளிருந்தே பதில் குரல் வரும் அவளிடமிருந்து.
'எது நான் எடுத்து வைக்கணுமா.' என அதிர்ந்தாலும் எடுத்து வைத்துவிட்டே வீட்டிற்குள் செல்வான்.
ஹாலில் இருந்தது சோபா. அதில் ஒழுங்காக உட்காராது, வௌவ்வாலைப் போல் எப்பொழுதும் தலைகீழாக தொங்கி கொண்டு இருப்பளை நேராக அமரச் சொல்லி அருகில் அமர்ந்தால், மடியில் சாய்ந்து கொண்டு அவனின் கரத்தை எடுத்து தன் கழுத்திற்குள் சுற்றிக் கொள்வாள்.
"ஏய் நான் வேல பாத்திட்டு இருக்கேன்."
"பாருங்க… நான் என்ன வேண்டாம்னா சொன்னேன்!" என மடியை விட்டு எழாமல் தன்னிடம் வாயாடும் மனைவியை அது நினைவு படுத்தியது. பெருமூச்சை இழுத்து விட்டவன், வேகமாக குளியலறைக்குள் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள,
பாத்ரூம் கதவைத் திறந்து கொண்டு வந்து தலை நீட்டி, "நீ இன்னும் சோப்பு போடலயா மாமா! நான் வேணும்னா முதுகு தேய்க்க வரவா. " என வம்பு பண்ணும் மனையாளை மனம் தேடியது.
சோர்வுடன் மீன்களுக்கு உணவிட்டவன், கிச்சனுக்கு சென்று தனக்காக டீ போட சுடு நீரை வைத்தான்.
"எப்படி தான் மாமா பாலும் இல்லாம சீனியும் இல்லாம க்ரீன் டிங்கிற பேர்ல சுடுதண்ணிய குடிக்கிறிங்களோ! ஒரே ஒருக்க… நான் போட்டுத்தர்ற டீய குடிங்க. நீங்க ப்ளாட் ஆகிடுவிங்க. ஒரு டூ மினிட்ஸ். மேகி மாறி டீ ரெடியாகிடும்." என்றவள் காலிட்டர் பால் நூறு மில்லிலிட்டராக வற்றும் வரை சுண்ட விட்டு திக்கான பாலில் டீ போட்டு நான்கு ஸ்பூன் சர்க்கரையை அள்ளிப் போட்டு குடிப்பாள். அதுவும் அவனின் டீ கப்பில்.
"பாண்டா அது என்னோட கப். உனக்குன்னு ஒன்னு தான் இருக்கில்ல. அதுல குடிக்க வேண்டியது தான. ஏன் என்னோடத எடுக்குற. " என அவள் குடித்து முடித்த கப்பை கழுவி அவளுக்கு எட்டா இடத்தில் உயரே தூக்கி வைப்பான்.
"அங்க வச்சா மட்டும் என்னால எடுக்க முடியாத. வீட்டுல ஸ்டுல் இருக்கு. இல்லன்னாலும் நான் குரங்கு மாறி ஏறி எடுத்திடுவேன். " எனச் சொல்லி எடுக்கிறேன் என்று பெயரில் கப்பைக் கீழே போட்டு உடைத்து விட்டு அசடு வழிய சிரிப்பாள். அவளைத் திட்டாது வேறு ஒன்றை வாங்கி வைப்பான். சில நாட்களிலேயே அதற்கும் இதே நிலை தான். அவனின் கப் அவனின் துண்டு அவனின் தட்டு என அனைத்தையும் எடுத்து உபயோகிப்பாள்.
இது ஜெயாவின் பழக்கம். வீட்டில் அனைவருக்கும் தனி தனி கப். தனி தனி ப்ளேட். தனி தனி பவுல். ஸ்பூன். ஏன் அமரும் சோஃபா, டயனிங் டேபிலில் நாற்காலி கூட கணவனுக்கானது, மகளுக்கானது, தனக்கானது எனத் தனி தனியே இருக்கும். ஒருவர் உபயோகித்ததை அடுத்தவர் உபயோகிக்க மாட்டார்கள். வாயில் படாது அன்னாக்க குடித்து வைக்கும் தண்ணீரைக் கூட எச்சில் என்பார் அவர். சிறு வயதில் இருந்தே அதைப் பார்த்து பழகியதால் மதுவிற்கு அந்தப் பழக்கம் உண்டு. ஆனால் அது நம் பைரவிக்கு பிடிக்காது.
"நான் என்ன கொரோனா ஃபேஷன்ட்டா இல்ல குஷ்ட வியாதி வந்த ஃபேஷன்ட்டா. நான் தொட்டத தொட்டா கிருமி வந்து ஒட்டிக்க." என மதுவுடையதை எடுத்து உபயோகிப்பாள். அவனும் சொல்லி சொல்லி பார்த்து அலுத்து விட்டான்.
இன்று அவளை நினைத்தபடியே அவளின் கப்பில் டீயை ஊற்றி எடுத்துக் கொண்டு படுக்கை அறைக்குள் சென்றான்.
"ம்ச்… என்ன மாமா நீ. கல்யாணம்னு ஒன்னு ஆகிட்டா நீ வேற நான் வேறன்னு இல்ல. மாத்தி மாத்தி யூஸ் பண்ணிக்கலாம். கப்ப மட்டுமில்ல. எல்லாத்தையும். " என்பவளின் இரவு உடையே அவனின் டீசர்ட் தான்.
தரையைத் தொடும் நீள ஸ்கெட்டும் தொளதொளவென இருக்கும் அவனின் டீசர்ட்டும் அணிந்து கொண்டு, "நல்லா இருக்கா மாம்ஸ். உன் பொண்டாட்டி எப்படி இருக்கான்னு கமெண்ட் சொல்லேன் மாமா. " என உயிரை எடுப்பாள். உதடுகள் அவளின் பேச்சில் கடுப்புடன் இருப்பது போல் காட்டினாலும், மனம் ரசிக்கும்.
"மாம்ஸ். எல்லாமே சமாதானபுறா கணக்கா வெள்ள வெள்ளையா இருக்கு. அது நமக்கு செட்டாகாது. அதுனால எனக்கு மல்டி கலர்ல டீ சர்ட் வாங்கி தான் மாமா. " என்றாள்.
"மல்டி கலர்… உனக்கு... பெயின் வேல பாக்குறவங்க போட்டிருக்குற மாதிரி."
"எஸ் எஸ். வண்ணமயமா. " என்றவள் பஞ்சவர்ண நிறத்தில் டீசர்ட் வாங்கி வைத்துள்ளாள். அவள் அணிவதோடு அதைப் போடச் சொல்லி தினமும் மதுவிடம் கெஞ்சுவாள்.
"ஒரே ஒருக்க மாமா… ப்ளீஸ்… பொண்டாட்டி ஆசையா வாங்கிட்டு வந்திருக்கேன். அதுக்காகவாது… ஒருக்க… பொண்டாட்டிக்காக.. " என்றவளின் கொஞ்சலுக்குச் செவி சாய்க்காதவன் இன்று அதை எடுத்து அணிந்து கொண்டான்.
ஏதோ அவளே அவனை அணைத்து கொண்டு நின்றது போன்றதொரு உணர்வு. கபோர்டை மூடியவன் அதன் கதவில் இருந்த கருப்பு நிற பசை தெரிய, மீண்டும் மனைவியின் எண்ண வலைக்குள் சிக்கினான்.
"டெடி என்னாதிது? ஸ்டிக்கரா!" எனக் கதவில் இருந்த பொம்மை படத்தைச் சுரண்டி பார்க்க, அது அவனின் விரல் நக இடுக்கில் ஒட்டிக் கொண்டது. ஒரு ரூபாய் சாக்லேட்டுகளில் கிடைக்கும் ஸ்டிக்கர் அது.
"ஐய்யோ! என்ன மாமா பண்ற? அது எல்லாமே போக்கி மான் ஸ்டிக்கர். நான் எவ்ளோ கஷ்டப்பட்டு கலெட்க் பண்ணேன்னு தெரியுமா? கைல ஒட்டுனா திட்டுறீங்கன்னு சொல்லித் தான், பீரோல ஒட்டி வச்சேன். அதுக்கும் திட்டுறீங்க. " எனச் சண்டைக்கி நிற்பாள் அவள். அவளை முறைத்துக் கொண்டே அனைத்தையும் சுரண்டி எடுப்பான்.
"வீட்ட க்ளீனா வச்சிக்க. இந்த மாதிரி நாஸ்தி பண்ணாத. " என இலவச அட்வைஸ் கொடுத்து விட்டு செல்வான்.
"க்கும்… இந்த வீட்ட சுத்தமா வச்சிக்கத்தான் என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டீட்டு வந்திங்களா! நாங்கூட எம்மேல ஆசப்பட்டு கட்டிக்கிட்டிங்களோன்னு நினைச்சிட்டேன்.
அத பண்ணாத. இத பண்ணாதன்னு ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி நீங்க ரூல்ஸ் போட்டுட்டே இருங்க. நான் அத ஃபாலோ பண்ணிட்டே வர்றேன். ச்ச... இது என்னோட வீடா! இல்ல இந்த வீட்டுல நான் வேல பாக்குறேனான்னு தெரியல. அப்படி வேலை பாத்தா கூட மாசம் ஆயிரக்கணக்குல சம்பளமும் பல வீட்டு சோறும் கிடைக்கும். இப்படிக் காஞ்சி போன சப்பாத்திய சாப்பிட்டு கஷ்டப்பட மாட்டேன். " எனப் புலம்ப,
"எது நான் உன்ன கஷ்டப்படுத்துறேனா. " என அதிர்ந்து போய் நின்றவனிடம், 'ஆமாம். ' என வாதிட்டு சண்டை போடுவாள்.
ஒரு மணி நேரம் கூட அவனால் அவளின் குரல் கேட்காமல் இருக்க இயலாது. வெட்கம் மானம் என எதுவும் பார்க்காது. "ஸாரி… நாந்தா தப்பு பண்ணிட்டேன். உன்னைக் கஷ்டப்படுத்திட்டேன். போதுமா. மன்னிச்சிடு. " என இறங்கி வருவான்.
எத்தனை முறைதான் நானே மன்னிப்பு கேட்பது. இம்முறை அவளைக் கேட்க வைக்க வேண்டும் என்ற வறட்டு பிடிவாததால் வந்த வினை, பிரிவு.
சண்டை போடும் போது அவளின் பேச்சுக்கள் அதிகப்படியாகத் தெரிந்தது. ஆனால் இன்று அது மொத்தமும் வேடிக்கையாகப் பட்டு புன்னகை வரவைத்தது. அவள் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் இப்போது விளையாட்டாகிப் போக, மனம் அவளுக்காகவும் அவளின் புலம்பலுக்காகவும் ஏங்கியது.
தன் வீட்டை சுற்று முற்றும் பார்த்தான். வீடு வெறுமையாய் காட்சி தந்தது. அவள் இருக்கும் போது சுவர் மொத்தமும் புகைப்படங்களால் நிறைந்து இருக்கும். அவன், அவள் என சிறு வயதில் இருந்து இப்போது வரை உள்ள அனைத்து புகைப்படத்தையும் லேமினேஷன் செய்து தொங்க விட்டு வைத்திருப்பாள். கண்ணாடி சோக்கேஸ் முழுவதும் கண்டதை வாங்கி அடுக்கி வைத்திருப்பாள். இப்போது எதுவும் அங்கு இல்லை
வேகமாக ஏஜென்சியின் வேஸ்ட் ரூமிற்கு ஓடிச் சென்றவன் அத்தனையையும் கொண்டு வந்து மாட்டி வைத்தான். அவளின் மீதிருந்த கோபத்தில் அனைத்தையும் தூக்கி வேஸ்ட் ரூமில் போட்டிருந்தான். இப்போது அது அந்தச் சுவரில் நிறைத்ததோடு வீட்டிலும் பெண்ணவளின் வாசத்தை நிறைத்தது.
அது ஒரு ஃபேமிலி ட்ரீ. திருமணத்திற்கு என வந்த யாரோ பரிசாக தந்தது. இருவரின் புகைப்படத்தையும் இதய வடிவ ப்ரேமில் தொங்க விட்டிருந்தாள் பைரவி. டீவி ஸ்டாண்டில் இருக்கும் அதில் தான் பைக் சாவியைத் தொங்க விடுவான் மது.
அன்று புதிதாக ஒரு இதயம் புகைப்படம் ஏதும் தொங்க விடப்பட்டிருந்தது. ஏன் இதை மாட்டியிருக்கிறாள்? என்று புருவம் சுருக்கி யோசித்தவனின் இடையில் கரங்களை கோர்த்து முதுகில் ஒன்றிக் கொண்டு நின்றவள், எக்கி கணவனின் காது மடலில் தன் இதழ் உரசி, "ரொம்ப சீக்கிரமே இதுல ஒரு ஃபோட்டோவ நாம மாட்டப்போறோம். அது உங்கள அப்பான்னு கூப்பிடப்போது மாமா. " என்றவளின் குரல் செவியைச் சென்றடையும் முன் அவனின் முன் ப்ரக்னஸ்ஷி கார்டை நீட்டினாள் பைரவி.
வெட்கத்துடனும் தாய்மையின் பூரிப்பில் நின்றவளின் வதனம் இப்போதும் கண்ணுக்குள்ளேயே நின்றது. ஆனால் அந்தச் சந்தோஷம் சில நாட்கள் கூட நீடிக்க வில்லை. ஒன்றல்ல இரண்டல்ல ஐந்தாறு முறை நிகழ்ந்தது அந்தச் சம்பவம். கரு ஐம்பது நாட்கள் கூட தங்காது கலைந்து சென்ற போது அவள் வடித்த கண்ணீர் சொல்லும் அவளா குழந்தை ஏக்கம் இல்லாமல் இருக்கிறாள் என்று.
இல்லை... நிச்சயம் இல்லை. எத்தனை முறை கேட்டிருப்பாள், ஒரு மருத்துவரை பாக்கலாம் என்று. முடியாது என்றவனின் முன் கண்ணீருடன் நிற்பாள். அது அவனுக்கு எரிச்சலை தர அவள் கூறி எதற்கும் காது கொடுக்காதவன், கொடுக்கக் கூடாத சிலரின் பேச்சிற்கு மதிப்பு குடுத்ததால் பிரிந்து நிற்கின்றனர்.
"மாமா உங்க கோபத்துல நியாயம் இருக்கு. எனக்கு புரியுது. ஆனா நான் பண்ணது தப்பு இல்ல மாமா. நம்புங்க. " என்றவளைத்தான் மதுவிடம் பேச விடாது காயப்படுத்தி வெளியே துரத்தி விட்டனர் சைந்தவியும் ஜெயாவும்.
அவளின் கெஞ்சல் மொழியும் கேட்டது. தன் சிற்றன்னையின் வன்மம் கலந்த ஏளன சொல்லும் கேட்டது. ஆனால் ஜெயாவையோ சைந்தவியையோ தடுக்காது அமைதியாக நின்றான். கோபம் கண்களை மட்டுமல்ல காதுகளையும் மறைத்து விட்டது.
விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் போது கூட, "மாமா, நீ இல்லாம நான் இருந்திடுவேன். ஆனா நான் இல்லாம நீ கிடையாது மாமா. உன்னால இருக்க முடியாது." என்றவளின் குரலில், ‘தன் கணவனை அடக்கி ஆளும் திறமை என்னிடம் உள்ளது.’ என்ற கர்வத்தில் திமிருடன் பேசுவதாக பட்டது அவனுக்கு.
தலையணை மந்திரம் மூலம் தன்னைச் சரிக்கட்ட பார்க்கிறாள். தன்னை செஸ் அடிமை என நினைத்து விட்டாள். அதை மையமாக வைத்து தன்னிடம் காரியம் சாதிக்க முயல்கிறாள். என்றெல்லாம் மனம் சொல்ல, இல்லை ஜெயா போதிக்க, அது உண்மை தானோ என்ற சந்தேகம் கூட வந்தது.
நீ இல்லாது எந்தப் பெண்ணாக இருந்தாலும் என்னால் வாழ முடியும் என நிறுபிக்க நினைத்து அவளிடம் இருந்து விலகி இருந்தவனுக்கு, தன்னிடம் வழிந்து கொண்டு நின்ற ரூபிணியைப் பார்க்க அருவெறுப்பாக இருந்தது. அவளின் கரம் தீண்டியதையே உடலும் மனமும் ஏற்காது ஒவ்வாமை பூண்டது.
அப்போது தான் உணர்ந்தான் அவள் கூற்றில் இருந்த உண்மையை. தன் மனத்தையும் உடலையும் ஒரு சேர திறக்கும் மந்திரம் அறிந்தவள் பைரவி ஒருத்தியே. இதைக் காதல் என்று சொல்லலாமா. ம்… காதல் தான். உடல் கடந்து உள்ளம் கொள்ளும் உணர்வது. நீயின்றி நானில்லை நாம் இன்றி எதுவுமே இல்ல… அது புரிந்தவனுக்குள் உடல் சிலிர்த்து தன் மனைவியைக் காணும் ஏக்கம் வந்தது.
எந்தக் காதல் என்ற வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்றானோ அந்தக் காதல் அவனுள் நுழைந்து இருதய சிம்மாசனத்தின் நிரந்தர ராணியாய் பைரவிக்கு பட்டம் சூட்டிச் சென்றது.
"ஒரே ஒருக்க ஐ லவ் யூன்னு சொல்லு மாமா." என அவனின் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு தராது வம்பு பண்ணும் மனைவியிடம்,
"எனக்கு அதுல நம்பிக்கை இல்ல. நான் அத சொல்ல மாட்டேன். " என்றவனுக்குள் அந்த நம்பிக்கை பிறந்தது.
இப்ப பிறந்து என்ன பிரயோஜனம். உன் ஆள தீஷித் தள்ளிட்டு போய்ட்டான். டூ லேட் நீ.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..