முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 76


 

அத்தியாயம்: 76


ரச்சகன் படத்தில் வரும் நாயகனை போல் கழுத்து நரம்புகள் புடைக்க. கை சட்டையை மடக்கி. மணிக்கட்டை சுழற்றியவாரே தன் வேக நடையுடன்  கோபமாக வந்தான்‌ ராக்கி. மதுசூதனனைத் தேடி அவனின் வீட்டிற்கு. 


அவனுக்கும் தெரியாது மதுசூதனனின் திடீர் நிச்சயதார்த்தம் பற்றி. அதுவும் ரூபியுடன் என்பது. இத்தனை ஆண்டுகள் ஒன்றாய் இருந்த தன்னிடம் மறைத்து விட்டான் என்பதற்காகவும் தன் தங்கை பைரவிக்காகவும் வந்திறங்கினான் அவன்.‌


பைரவியின் சோர்ந்த நடையும் வேதனை ததும்பிய முகத்தையும் கண்ட பிரவீன் அவளுக்கு அழைப்பு விடுக்க, யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லாத பைரவி ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டாள்.‌  


அவளின் வீட்டிற்கு கால் செய்தால், "இனி மது தம்பி சம்மந்தமா பேசுறதா இருந்தா எம் பொண்ணுக்கு கூப்பிடாதிங்க. " எனச் சொல்லி வைத்துவிட்டார் சாந்தி. 


பைரவியின் குரலைக் கேட்காத பிரவீனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. எனவே ராக்கிக்கு அழைத்து நடந்ததைச் சொல்ல, ராக்கியும் சாந்திக்கு அழைத்தான். அவனுக்கும் இதே பதில் தான். டேப்ரெக்காடரில் பதிவு செய்து ஒப்பித்தது போல் மதுவைப் பற்றி பேசுவதாக இருந்தால் பேசவே வேண்டாம் என்று விட்டார். 


இரவோடு இரவாக புறப்பட்டு விட்டான் ராக்கி பெங்களூரில் இருந்து  பைரவியைக் காண. அதிகாலை வந்திறங்கியவனுடன் பிரவீனும் சேர்ந்து கொள்ள, இருவரும் மதுவைக் காண முதலில் சென்றனர். 


ஆவேசமாகப் பூட்டி இருக்கிறது என்று நினைத்து கதவைக் காலால் எத்தி உதைக்க, அது சிரமம் இல்லாது திறந்து கொண்டது. உள்ளே சென்று பார்க்க வீடு வித்தியாசமாக இருந்தது. பைரவி இருக்கும் போது எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. இருவரும் உள்ளே சென்று பார்க்க அங்கு மது இல்லை.


"காலங்காத்தல எங்க போயிருப்பான்! சிதம்பரம் அங்கில் வீட்டுக்கா?" 


"மச்சா அங்க இல்ல. " பிரவீன் உறுதியாக சொல்ல, எங்கே என அகாடமிக்குள் தேடத் தொடங்கினர். ஏனெனில் மதுவின் செல்ஃபோன்னும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்ததால். 


ஒரு வழியாகத் தேடி பிடித்து விட்டனர் மதுவை. வேஸ்ட் ரூமில் வேஸ்ட் லக்கேஜ்களுடன் துயில் கொண்டிருந்தவனைத் தட்டி பிரவீன் எழுப்ப, கண்களில் சிவப்புடன் இருவரையும் பார்த்தபடி எழுந்தான் மது. 


"எதுவும் பிரச்சனையா? ஏன் இவ்ளோ சீக்கிரம் வந்துக்க. மோகனாக்கு ஒன்னுமில்லைல.?" என அக்கறையாக தங்கையை பற்றி பிரவீனிடம் கேட்க,


"உன் தங்கச்சி நல்லாத்தா இருக்கா. ஆனா எங்க தங்கச்சி தான் நல்லா இல்ல. " என்றான் ராக்கி. 


"என்னாச்சி பைரவிக்கு. " என அதிர்ந்து போய் மது கேட்க‍, ராக்கி அடிக்க தொடங்கி விட்டான். இதழ்களில் இருந்து லேசாக ரத்தம் கூட கசியத் தொடங்கி விட்டது ராக்கியின் அடியால். அவனைப் பிரவீனும் தடுக்கவில்லை. மதுவும் ஏன் என்று கேட்க வில்லை. 


"அவளுக்கு என்னடா ஆச்சி?" எனக் கேள்விக்கான பதிலை ராக்கியிடம் கேட்டுக் கொண்டே அவன்‌ தரும் அடிகளை வாங்கிக் கொண்டான். 


"எப்படி ‌டா உனக்கு மனசு வந்தது அந்த பொண்ணு துரோகம் பண்ண? அந்த ஃபங்ஷனுக்கு பைரவி வருவான்னு தெரிஞ்சே அந்த குள்ள நரிங்க போட்டுக் குடுத்த திட்டத்துக்கு, சரி சரின்னு பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டி, ஸ்டேஜ்ல ஏறி நின்னிருக்க. உன்ன மாதிரி ஒரு எடுப்பார் பேச்ச கேக்குற ஆள நான் பாத்தது இல்ல. 


எவ்ளோ வேதனைப்பட்டிருப்பா பைரவி. நாம விரும்புன ஒருத்தர் பக்கத்துல இன்னோரு ஆளு உரிமையா நிக்கும் போது எவ்ளோ வலிக்கும்ன்னு தெரியுமாடா உனக்கு. ச்ச… அதெல்லாம் உணர்ச்சி இருக்குறவனுக்கு தான் தெரியும். உனக்கு எங்கருந்து வரும் அது‌… " என்றவனுக்கு தெரியும் அந்த வலி. நிவியின் திருமண செய்தி கேள்வியுற்று அவன் துடித்தது அவனுக்கு மட்டுமல்ல மதுவிற்கும் தெரியுமே. இருந்தும் அதே வேலையைத் தன் நண்பன் செய்திருக்கிறான் என அடி வெளுத்து எடுக்க, மது தடுவில்லை. 


மது, "பைரவிக்கு என்னாச்சி மச்சி? சொல்லிட்டு அடி டா. " 


"எனக்கு தெரியாது. நான் கால் பண்ணேன் போகல. அவங்கம்மா உன்னப் பத்தி பேசுறதா இருந்தா பேசாதன்னு சொல்லி வைச்சிட்டாங்க‌‌. "  


"இப்ப எந்த வீட்டுல இருக்கா?" 


அப்பார்ட்மெண்ட்டா இல்லை அவளின் இல்லமா எனக் கேட்க,


"ஏன் அங்கயும் போய் நீ அவ முன்னாடி நிக்கணுமா. அவ கோபத்துல துப்பாக்கி எடுத்து உன் மூஞ்சி மேல நீட்டணும். உடனே இத நோட் பண்ணி வச்சிட்டு புருஷன கொடும படுத்துறான்னு சொல்லி சொல்லி மறுபடியும் விவாகரத்து வாங்கி டான்ஸ் ஆடுறதுக்கா. "  


"ம்ச்... நீ முதல்ல சாருக்குக் கூப்பிடு. "


"எங்கிட்ட நம்பர் இல்ல. இருந்தாலும் உனக்கு தர முடியாது. " என்க, மது சாருவிற்கு அழைப்பு விடுத்தான். அவள் தான் தேனிக்கு சென்றிருந்தாளே பின் எப்படி இங்கு நடந்தது தெரியும். 


"பையூ எனக்கு கால் பண்ணவே இல்ல அண்ணா. எதுவும் ப்ராப்ளமா?" என்றவளுக்கு,


"நத்திங். " என்பதைப் பதிலாக சொல்லி வைக்க‍,


"எனக்கு பயம்மா இருக்கு. நேத்து அவளோட முகமே சரியில்ல. இவெ குடுத்த அதிர்ச்சில ஏதாவது ஏடகூடமா பண்ணிக்கிட்டா. " எனப் பிரவீன் பீதியை கிளப்ப, ராக்கியும் பிரவீனும் புறப்பட்டனர். மது வேகமாக வந்து காரில் ஏறிக் கொண்டான். 


"உன்ன யாரு வரச் சொன்னா." என்றான் ராக்கி எரிச்சலாக.


"சிதம்பரம் மாமா வீட்டுல இறங்கி விடச் சொல்றாரு போல. ரூபிய பாக்கணும்ல. காலை பொழுத எம்முகத்த பாத்து தான் ஆரம்பிக்கணும்னு கட்டளை போட்டிருப்பாளா இருக்கும்." என்றான் பிரவீன், ராக்கிக்கு குறைவில்லாத எரிச்சலில்.‌


"ம்ச்… நான் பைரவிய இப்பவே பாக்கணும். ராக்கி கார எடு. "  எனக் கட்டளையிட,


"ஐயா பாடி பில்டரே. உங்க பேச்ச பேசுனதுக்கே ஃபோன்ல சாந்திம்மா அந்த கிழி கிழிச்சாங்க. இந்த லட்சணத்துல நேர்ல கொண்டு போய் நிப்பாட்டுனோம்னு வை. பொண்ணு துப்பாக்கி வச்சிருக்குன்னா அம்மா பீரங்கி வாங்கி வச்சிருக்காங்களாம். உன்ன நார் நாரா ஆக்கிடுவாங்க.‌ பார்வையாலயே எரிச்சிடுவாங்க. உன்னக் கூட கூட்டீட்டு வந்த பாவத்துக்கு என்னையும் சுவத்துல தொங்க விட்டிடுவாங்க. சோ… ப்ளீஸ், இறங்கிடு கீழ. நாங்களாது பாத்திட்டு வர்றோம். " என்ற ராக்கியை இழுத்து கீழே போட்டவன்‌ டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து ஓட்டத் தொடங்கினான். 


நிச்சயம் அவன் முகத்தில் கலவரம் இருந்தது. அது அவளை எப்படி எதிர் கொள்வது என்ற கலவரம். கூடவே விவரிக்க இயலாத ஓர் உணர்வும் இருந்தது. உள் மனம் சொல்லியது. 


'எப்படி நீ இன்னொரு கல்யாணம் பண்றன்னு பாக்கறேன்டா. நீ உயிரோட இருந்தாத்தான உன் உடம்புல கை இருக்கும். கை இருந்தாத்தான தாலி கட்டுவ. பிச்சி எடுக்குறேன். பாரு. ' என பைரவி ஆவேசமாக சவால் விடுவது போல் ஒரு குரல் கேட்டது. மெல்லிய சிரிப்பு படர, 


"டேய்… அவளுக்கு என்னாச்சோன்னு நாங்க பயந்து போய் உக்காந்திருக்கோம். நீ என்னடான்னா சிரிக்கிற. " என்றான் ராக்கி. 


பிரவீன், "பெண்டாட்டி மேல அக்கறையே கிடையாது. " என முணுமுணுக்க,


"மொத அவ இவனுக்கு பொண்டாட்டியே கிடையாது. அதுனால தான் இவெ இவ்ளோ திமிரா குத்துக்கல் கணக்கா இருக்கான். senseless man. பாடிய கல்லு மாதிரி பில்டப் பண்றேன்னு சொல்லி கல்லாவே மாறிட்டான். 


டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணும் போது கூட உம்பக்கம் நியாயம் இருக்குன்னு நம்புனேன் டா. ஆனா இப்ப. ஒரு சதவீதம் கூட இல்ல. No doubt. நீ தான் காரணம். 100% நீ மட்டும் தான்டா. ச்ச… உன்ன உருகி உருகி காதலிக்கிதுங்கிறதுக்கா அவளுக்கு நீ இப்படி ஒரு தண்டனைய குடுத்திருக்க கூடாது. சரியான செல்ஃபிஸ் டா நீ. உன்னப் பத்தி மட்டுமே யோசிக்கிற." என ராக்கி புலம்பியபடியே வர, 


"ம்ச்... நான் என்னடா பண்ணேன். நீ இவ்ளோ கோபமா திட்டுற அளவுக்கு."


"நிச்சயத்துக்கு சம்மதிச்சியே அது போதாது. "


"அதான் நடக்கலயே. அந்த ஸ்டேஜ்லயே என்னோட மறுப்ப அங்க இருக்குற எல்லார் முன்னாடியும் நான் தெளிவா இது வேண்டாம்னு சொல்லிட்டேனே.‌"


"ஆனா கூப்பிட்டதும் போய் நின்னியே. கோயில் மாடு மாதிரி ஈ ன்னு பல்ல காட்டீட்டு. " என்ற ராக்கியை திரும்பி பார்த்து முறைக்க.,


பிரவீன், "வேண்டாங்கிறத நீங்க பைரவி இருக்கும் போது சொல்லிருக்கணும். "


"எதுக்கு சலங்க இல்லாம ஆடவா. " என்றான் மது. 


"இல்லன்னா இந்தப் பேச்ச உங்க சித்தப்பா எடுக்கும் போதே, நான் பைரவிய மறக்கல. மறக்கவும் முடியாதுன்னு நீ அவர்கிட்டல்ல தெளிவா சொல்லிருக்கணும். அங்க விட்டுடுட்டு, இங்க வந்து வாய் பேசுனா எப்படி. எதையும் பேச வேண்டிய நேரத்துல பேசணும். எதுவுமே பண்ணாம என் தங்கச்சி வாழ்க்கைய பாழாக்கிட்டியே டா. பாவி.‌"


"டேய் நீயும் அவள மாதிரியே பேச ஆரம்பிச்சிட்ட."


"உனக்கு வாக்கப்பட்டா வேற எப்படி பேசுறதாம். " என ராக்கி சொல்ல, பிரவீன் திட்ட என மது காதில் எதுவும் விழாதது போல் காரை ஓட்டி பைரவியின் வீட்டிற்கு முன் நிறுத்தினான். 


முதலில் அவன் கண்டது பைரவி தூக்கி எறிந்த மதுவை நினைவுபடுத்தும் பொருட்களைத் தான். பிரிந்திருந்த இந்தச் சில மாதங்களில் அவள் மதுவிற்காக வாங்கிய க்ரீட்டிங் கார்ட்ஸ், கிஃப்ட் என நிறைய இருக்க, அதைப் பத்திரப்படுத்தி காரில் ஏற்றினான். 


"குப்பைய பொறுக்கி கார்ல ஏத்துறான் பாரு. " எனக் கேலியாக கூறிய ராக்கியின் கரத்திலும் சிலவற்றைத் தினித்து காரில் வைக்கும் பொறுப்பு கொடுத்தான். 


இவர்களின் சேவையை‌‌ப் பாராட்ட சாந்தியே கதவைத் திறந்து கொண்டு வந்தார். ராக்கி வர்ணித்தது போல் பீரங்கியுடன் அல்ல, புன்னகையுடன். 


"வாங்க தம்பி. ஐய்யோ… நீங்க என் இந்த வேலையெல்லாம் செய்றிங்க. விடுங்க தம்பி. உள்ள வாங்க. " என அனைவரையும் பாகுபாடு பார்க்காமல் அழைத்து காபி ஸ்நாக்ஸ் எனம் பதார்த்தாங்களை பரிமாறினார். 


'இந்தம்மாவ பாத்தா டா அப்படி சொன்ன? சாந்த சொரூபினி யா காட்சி தர்றாங்களே. ' என்பது போல் பிரவீன் பார்க்க, 


'பொறு. இப்பத்தான ஃபீல்டுல இறங்கிருக்காங்க. அவங்க போடுற ஸ்பின் பால்ல மச்சான் டக் அவுட் ஆகி வெளில வருவான் பாரு. அந்த கார்ல குப்பையோட குப்பையா அவனையும் அள்ளிட்டு போ வேண்டி வரும்.. ' என்ற பதில் பார்வைக் கொடுத்தான் ராக்கி. 


மது எதுவும் பேசாது வீட்டை நோட்டம் விட்டான், மனைவியின் முகம் காண வேண்டி. அவனின் தவிப்பை உணர்ந்த ராக்கி, 


"பைரவி இல்லயாப்பா?" என சேர்மத்திடம் கேட்க, 


"இல்ல ப்பா. ஃப்ரெண்டு கூட வெளில போயிருக்கா. " 


மது, "எங்க.?"


சாந்தி, "அது உங்களுக்கு எதுக்கு தம்பி?." பட்டென வந்தது பதில். 


மது, "நான் அவள பாக்கணும்." 


" எதுக்கு?"


'எப்படி இருக்கு ஸ்பின் பவுல்லு. ' எனப் புருவங்களை ஏற்றி இறங்கினான் ராக்கி பிரவீனைப் பார்த்து. 


" நான் அவ கிட்ட. " என மது ஆரம்பிப்பதற்குள், 


" பாக்குறது! இல்ல பேசுறது! எதுவுமே இனி முடியாது தம்பி. அந்த உரிம உங்கள விட்டு போய் ரொம்ப நாள் ஆச்சி. " என்க, மது கையில் இருந்த கப்பை பார்த்தபடி இறுக்கமாக அமர்ந்திருந்தான். 


"சரி விடுங்க. எப்ப தம்பி கல்யாணம்? சீக்கிரமேன்னு சொன்னாங்க. பத்திரிக்க அடிச்சாச்சா இல்ல இனிமே தானா." என மதுவிடம் கேட்க, எதுவும் பேசவில்லை அவன். 


"ரொம்ப சந்தோஷமா இருக்கு. நடந்தது எல்லாத்தையும் மறந்திட்டு நீங்க உங்களுக்குன்னு ஒரு வாழ்க்க துணைய அமைச்சிக்க போறீங்க. நல்ல முடிவு தம்பி இது. வாழ்க்கைல எந்த இடத்துலயும் தேங்கி நின்னுடவே கூடாது. அது எப்படி போகுதோ! அப்படியே நாமலும் கூடவே போய்டணும். கண்ணீர் வடிச்சேன் கவலப்பட்டேன்னு நேரத்த மட்டுமில்லாம உடம்பையும் கொடுத்துக்க கூடாது. " என வாழ்வியல் தத்துவங்களை அவிழ்த்து விட்டவர் மெல்ல வாழைப்பழத்தில் ஊசியை இறக்குவது போல் இறக்கத் தொடங்கினார். 


"நானும் எம்பொண்ணுக்கு வரன் பாத்திட்டு நான் இருந்தேன். இந்த கழுத தான் முரண்டு பிடிச்சா. ஒரு வாரத்துக்கு முன்னாடி கூட ஒரு பையனோட அம்மா பேசுனாங்க, அவங்க பையனுக்கு நம்ம பைரவிய கேட்டு. பேரு அபிராமி. பையெ பேரு நல்ல பேரே. " எனச் சாந்தி இழுக்க,


"தீஷிதன். " எனச் சேர்ம துறை எடுத்துக் கொடுத்தார். அவனின் பெயரை கேட்ட மதுவின் இறுக்கம் கூடிக் கொண்டே போனது. 


"ஹாங்... தீஷிதன்… நல்ல பையன். எங்க வீட்டுக்குலாம் வந்திருக்கான். பணக்காரெங்கிற பகட்டு இல்லாம நல்லா பழகிய வீட்டுல சாப்டுட்டு கூட போனாரு. அவருக்கு மனைவியா இருக்க எந்த கண்டிஷனும் இல்லன்னு சொன்னாரு.‌ " என்றவர் ஓரக்கண்ணால் மதுவை அளந்தபடியே பேசினார். 


"உங்களுக்கு கல்யாணம் ஆச்சின்னா நானும் பண்ணிக்கிறேன்னு பைவி சொல்லி இருந்தா. நான் சொல்றது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்." என்ற போது மது எழுந்து விட்டான். 


"நல்லாவே புரிஞ்சது. பட் எதுவும் நடக்காது." எனச் சொல்லி நடக்க,


"நீங்க எத சொல்றிங்க?" 


"எனக்கு மட்டுமில்ல உங்க பொண்ணுக்கும் வேற யார் கூடவும் கல்யாணம் நடக்காது. நடக்கவும் விட்டு வேடிக்க பாத்திட்டு இருக்க மாட்டேன். she is mine. " என அழுத்தமாக சொல்லி‌ வெளியேறிச்‌ சென்றான். பின்னாலேயே வந்த ராக்கி,


"என்ன மச்சி சவால் விட்ட மாதிரி இருக்கு?" 


"ம்ச்…" என்றபடி முகம் சுளிக்க,


"பட் நோ யூஸ். அந்த தீஷித் பத்தி கேள்வி பட்டிருக்கேன். ரொம்ப பிடிவாதக்காரனாம், நினைச்சத அடையுற வழி தெரிஞ்சவனாம். நல்ல குடும்பம். தங்கச்சி தம்பிங்க கூட வெளிநாட்டுல தான் இருக்காங்கலாம். நாத்தனார் கொழுந்தனார் தொள்ளை கிடையாது. மாமியார் மட்டும் தான். அவங்கள கவனிச்சுக்கவும் தனியா ஆள் வச்சிருக்கான். கர்நாடக்கால பிறந்திருந்தாலும் தமிழ் செம்மையா பேசுறான் ப்பா. " எனத் தீஷித்தை பற்றி பெருமையாக பேச, கடுப்பான மது அவனின் கழுத்தை வளைத்து காரில் சாய்த்து நிறுத்தி,


"நான் பைரவிய யாருக்கும் விட்டு குடுக்க மாட்டான்‌. She is mine. புரியுதா. she is mine.. " என உறுமியவன் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றான், 


சிறிது நேரம் கழித்து வந்த பிரவீன், "ராக்கி கார் எங்க?" 


"நம்மல கால்நடையா வரச் சொல்லிட்டு கார எடுத்திட்டு போய்ட்டான். "


"எங்க?"


"சூரிய நமஸ்காரம் பண்ண."


"ஹா…" எனப் பிரவீன் முழிக்க,


"கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்றது வேஸ்ட்டுன்னு நான் சொல்லியும் கேக்காம போயிருக்கான். " ராக்கி. 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

பனி 75

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...