முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 77


 

அத்தியாயம்: 77



"இதுக்கு பருத்தி மூட்ட குடேன்லயே இருந்திருக்கலாம். " ராக்கி புலம்பிய படியே ஆட்டோவில் ஏறினான் பிரவீனுடன். 


இருவரையும் வீட்டிற்கு வரச் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பியதால், ஆட்டோ பிடித்து மதுவைக் காண செல்கின்றனர். 


"இந்த இடத்துக்கு இந்த டயலாக் செட் ஆகுமா?" 


" ஆகும் ஆகும். எதுக்கு பைரவிய பாக்கணும்னு அங்க போய்... வீர வசனம்லாம் பேசி... அந்தம்மாவ கடுப்பாக்கி, தானும் கடுகடுத்து  வரணும். "  


"நம்மலயும் கடுப்போடவே கூப்பிட்டாருக்காரு. எதுக்கு வீட்டுக்கு வரச் சொன்னாரு?"


"போனாத்தா போலிஸ் தெரியும். வாங்க. " இருவரும் வீட்டை அடைய, மது லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான். 


அன்று பைரவி தந்தாளே, அதைக் கூட தூக்கி எறிந்து விட்டு சென்றானே! அதைத் தான் தேடி எடுத்து ஓப்பன் செய்ய முயன்று கொண்டிருக்கிறான். 


"அன்னைக்கி என்னமோ சொன்ன! சுடர் தான் எங்களுக்குள்ள பிரச்சினைக்கும் காரணம்னு. இன்னைக்கி அதையே தூக்கிட்டு வந்து உக்காந்திருக்க. " என ராக்கி கேலியாக கேட்க,


"ம்ச்… வாய் மூடு. பிரவீன் அந்தச் சுடர் கேஸ் டீடெய்ல்ஸ் சொல்லுங்க. இதுவர எவ்ளோ தூரம் விசாரிச்சிருக்கிங்க. " என சுடர் வழக்கின் நிலவரத்தைக் கேட், அனைத்தையும் கூறி முடித்தான் பிரவீன். 


பிரவீன், "இது ரிவெண்ஜ் மாதிரி தான் இருக்கு. ஆனா இல்ல. ஏன்னா சுடர் மேல நிறைய பேருக்கு காண்டு இருக்கு. நிறைய ஃபேக்டரிய வரவிடாம போராட்டுரேங்கிற பேர்ல தடுத்து நிப்பாட்டிருக்கா. அதோட பல கம்பெனிய இழுத்து மூடவும் காரணமாகிருக்கா. அதுனால அவளுக்கு எதிரிங்க கொஞ்சம் அதிகம் தான்.‌ அதே நேரம் இது பலாத்கார கேஸ்‌. கற்பழிக்கிறவனுக்கு முன் விரோதம் தேவையே இல்ல. பொண்ணுங்கிற ஒரே காரணம் போதும்.‌ போதைல எவெ வேண்ணாலும் பண்ணிருக்காலாம். "


மது, "இல்ல ரெண்டாவதா சொன்னதுக்கு வாய்ப்பில்ல. ஏன்னா அவளோட டெட் பாடி அரசனூர்ல கிடைச்சிருக்குன்னா இது அவ மேல இருக்குற காழ்ப்புணர்ச்சில தான் பண்ணிருக்கணும். "


"இருக்கலாம். அதையும் விசாரிச்சேன். அரசனூர்ல யார் யார் கூட அவளுக்கு பகைன்னு.‌" 


"அதுல யாரையாது ஷாட் லிஸ்ட் பண்ணிருக்கிங்களா? " 


"மொத்தம் பத்து பேர பொறுக்கி எடுத்திருக்கோம். அந்த ஏரியா கவுன்சிலர்ல ஆரம்பிச்சி, அவளுக்குப் பகிரங்கமாவே கொலை மிரட்டல் விட்ட நிறைய பேர் அங்கயும் இருக்காங்க. சென்னைலயும் இருக்காங்க. ஏன் தமிழ்நாட்டுல பல ஊர்ல இருக்காங்க.  


சின்னது பெருசுன்னு பாக்காம நிறைய பெரிய மனுஷங்க கூட மோதிருக்கா. ஒரு சாய பேக்டரி. அரசனூருக்கு பக்கத்து ஊரு தான். அவனுங்க வெளியிடுற கழிவு நீர் நிலத்தடி நீர பாதிக்குதுன்னு மாநாடு நடத்தி கேஸ் போட்டுன்னு மூட வச்சிட்டா. பல கோடி லாஸ் அந்த கம்பெனிக்காரனுக்கு. அடுத்து…" என வரிசையாக சொல்ல,


ராக்கி, "என்ன மச்சி இது! இந்தப் பொண்ணு போற இடத்துலலாம் பிரச்ச பண்ணிட்டு இருந்திருக்கு. ஐய்யையைய. " 


மது, "இந்த லிஸ்ட்ல ஏன் சிராஜ் பேர் இல்ல. "


" ஏன்னா! அவனுக்கும் சுடருக்கும் வெளிப்படையா பகை இருக்குற மாதிரி தெரியல. அரசனூர் கேஸ் தான் இவங்க ரெண்டு பேரைக்கும் இருக்கு புகைச்சலுக்கு காரணம்னு ஏதாவது பண்ணணும்னு துக்க நினைச்சா அதுக்கு கேஸ் போட்ட கண்ணாயிரத்த தான் பண்ணிருக்கணும். அதுமட்டுமில்லாம அவனுக்கு இந்த மாதிரி கேஸ்லாம் சர்வ சாதரணம். அசால்ட்டா தட்டி விட்டு போய்க்கிட்டே இருப்பான். அதுனால ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்காது. " 


"பட், லாயர் பவதாரிணி அப்படி நினைக்கலயே. " 


"டைவர்ஸ் வாங்கிட்டியே! அப்றம் எதுக்கு நீ வக்கீல பாத்தா." என்ற ராக்கியை மது முறைக்க,


பிரவீன், "என்ன சொன்னாங்க. "


"சிராஜ்க்கு எதிரா எவிடென்ஸ் கிடைச்சதாவும் அத கொண்டு வந்து காட்டுறேன்னு சொன்ன மறு நாளே சுடர் காணமா போனதாவும் சொல்றாங்களே. " 


ராக்கி," எப்ப இத உங்கிட்ட சொன்னாங்க.‌".


"ஊர்வலத்துல வைச்சி பாத்தேன். பைரவி இந்த கேஸ்ஸ பத்தி விசாரிச்சதா சொல்லி, எவிடென்ஸ்ஸ தேடுறேன்னு ரொம்ப இதுல இன்வால் ஆக வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க. " மது யோசனையுடனேயே,


பிரவீன், "சரி அப்படியே பண்ணிருந்தாலும் நாம எப்படி அதை நிருபிக்கிறது. நமக்கு சாலிட்டான எவிடென்ஸ் வேணுமே. அது இல்லாம நாம அவெந்தான்னு உறுதி பண்ணாலும் அவன நெருங்க கூட முடியாது. "


மது, "விசாகன் மேட்டர் என்னாச்சி. "


" அவன தூக்குறதுக்கு டிப்பார்ட்மெண்ட் ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கு. கண்டிப்பா அவனுக்கு என்கவுண்டர் தான். அதுக்கு முன்னாடி நமக்கு அவெ மூலமா ஏதாவது க்ளூ கிடைக்கணும். " 


ராக்கி, " அவனோட வீட்ட சோதன போட பைரவி ஆள ஏற்பாடு பண்ணிருக்கிறதா சொன்னாளே. " பைரவி செய்திருக்கும் ஏற்பாடுகளை சொல்ல, 'பாருடா. இந்த டெடிக்கி இந்த அளவுக்கு மூளை வேலை செஞ்சிருக்கு! ' என மது மனதிற்குள் மெச்சிக் கொண்டாலும், வெளியே காட்டவில்லை. 


பிரவீன், "அப்ப சுடர் கேஸ்ல நம்ம சஸ்பெக்ட் சிராஜ், விசாகன் அப்றம் அந்த சாய பேக்டரி காரென். மொத்தம் மூணு பேர்.‌"


ராக்கி, "இதுல நாலாவதா ஒருத்தன சேத்துக்க நான் அப்ளிகேஷன் போடலாமா?"


"நீயா! நீயா சுடர கடத்துனது?" என மது அதிர்ச்சியாக கேட்க,


" கடத்துற அளவுக்கு நான் தைரியமான ஆளுலாம் கிடையாது. சின்ன பையன் பாவமான பையன். நல்ல பையன். அதுவும் பைரவி ஃப்ரெண்ட நிமிந்து கூட பாக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணி குடுத்த பையன். "


பிரவீன், "யாருக்கு. "


"எங்கம்மாக்கு டா. "


பிரவீன், "ம்ச்... அப்ளிகேஷன் ஃபார்ம் யாருக்குன்னு கேட்டேன். "


"அது சுடரோட லவ்வருக்கு. "


" லவ்வரா?" என இருவரும் அதிர்ந்து போய் கேட்க,


"என்னடா இவ்ளோ சாக் குடுக்குறீங்க. லவ்வுன்னு தானடா சொன்னேன். "


பிரவீன், "நான் விசாரிச்ச வர, சுடர்க்கு லவ்வர்னு ஒருத்தே இருந்தத பத்தி யாரும் தகவல் சொல்லலயே. ". 


' காவல் துறை அந்த லட்சனத்துல விசாரிச்சிருக்கு. ' என முணுமுணுத்தவன்,


ராக்கி, "காதல் என்ன சூப்பர் ஸ்டார் படமா! ஊரறிய போஸ்டர் ஒட்டி கொண்டாட. இதெல்லாம் ரகசியமா வச்சிருக்குற பலான magazine னோட நடு பக்கம் மாதிரி. கட் பண்ணி புக்குள்ள மறைச்சி தான் வைக்கணும். போஸ்ட் அடிக்க மாட்டாங்க. "


பிரவீன், "ஆனாலும் லவ்வு. அந்த பொண்ணுக்கு எப்படி. ரொம்ப கறாரான சிடுமூஞ்சின்ல நான் கேள்வி பட்டேன். "


"ஏன்…. ஏன்… பண்ணக்கூடாது. சோசியல் சர்வீஸ் பண்ற பொண்ணுங்களுக்கு லவ்வெல்லாம் இருக்க கூடாதா. ஏதோ கொலக்குத்தம் பண்ணது மாதிரி மூஞ்சிய சுளிக்கிறீங்க. " என எகிற,


மது, "சரி... யாரது. ".


"தெரியாது. " என்ற ராக்கியை இருவரும் மடக்கி பிடித்து, 


"தெரியாதுன்னு சொல்றதுக்காடா இவ்ளோ பக்கம் பக்கமா டயலாக் பேசுன. " எனச் சொல்லி அடிக்க, 


"சத்தியமா தெரியாது டா. ஆனா அவன கண்டுபிடிக்க இன்னொன்ன கண்டு பிடிக்கணும்னு சொல்லி புதையல் வேட்டைக்கி போற மாதிரி கைல கூகுள் மேப் போட போயிருக்கா பைரவி. " 


"என்னடா உலறுற. " என்றவன் சுடரின் மற்றொரு அலைபேசி எண்ணைச் சொல்லி, சுடர் அறையில் கிடைத்த puzzle பாக்ஸ், அலைபேசி அரசனூரில் இருக்கும் செல்ஃபோன் எனப் பைரவி இதுவரை தேடி கண்டிபிடித்ததைப் பற்றி கூறினான்.‌


"எனக்கு தெரிஞ்சி அந்த சீக்ரெட் அன்நோன் பாய் ஃப்ரெண்டோட டீட்டெய்ல்ஸ் அந்த ஃபோன்ல இருக்கலாம். இல்ல… வேற மேட்டரா கூட இருக்கலாம்.. அதுனால அத கண்டுபிடிக்கிறேன்னு சொல்லி பைரவி அரசனூர் போயிருக்கா. வருங்கால கணவன் கூட. ‌" என்க, மது பாய்ந்து விட்டான். 


" அவா அரசனூர் போயிருக்குறது உனக்கு தான் தெரிஞ்சிருக்கே. அப்றம் ஏன்டா அத எங்கிட்ட சொல்லாம என்னை அலக்கழிச்ச. அவ ஏதாவது பண்ணிக்கிட்டாளோன்னு நான் பயந்திட்டேன்." எனன்று சொல்லி அடிக்க, 


"நீ பயப்படலாம் செய்வியா! ஆமா உனக்கு எதுக்கு பைரவி?"


"நேத்து நடந்த கலவரத்துல அவ முகமே சுருங்கிடுச்சி… அதா… "


"ஓ... சமாதானம் பண்ணப்போற. சரி சமாதானம் பண்ணி என்ன செய்யப்போற." 


"ஹா…ங். திரும்பவும் கல்யாணம் பண்ணிக்க போறேன். இப்ப என்ன அதுக்கு." என்க, பிரவீனுக்கு ஆனந்தம். 


"வாய்ப்பில்ல மதுசூதனா. எனக்குத் தெரிஞ்சி இன்னேரம் அவ உன்ன வெறுத்திருப்பா. கற்பனைலயே உன்ன குத்தி கொல கூட பண்ணிருப்பா. அதுனால செக்கேண்ட் இன்னிங்ஸ்க்கு வாய்ப்பு இல்ல.‌" 


"அவளால என்ன வெறுக்கவே முடியாது. " என்றான் திண்ணமாக.


"எப்படி... ஓ… ஃபஸ்ட் எபிசோட்ல பைரவி கேட்ட பத்து நிமிஷத்த தரப் போற. தனியா பேசி பேசி உங்க ரெண்டு பேருக்குள்ள புரிதல ஏற்படுத்த போறிங்க. " எனக் குறும்பாய் சொல்லி கண்சிமிட்ட,


"பத்து நிமிஷம் இல்ல. ரெண்டு நிமிஷம் போதும். " 


"போதுமா... டயம் பத்தாதே மச்சி…" 


"என்ன கொல பண்ண அவளுக்கு ரெண்டு நிமிஷமே அதிகம்னு சொல்றேன். "


"கொலையா!!” 


"கொல தான். இந்த மாதிரி நேரத்துல பத்து நிமிடம்ன்னு சொல்லி பக்கத்துல போனா அணுகுண்டா வெடிப்பா. அதுனால வேற விழி தான். "


"புரிஞ்சி போச்சி. புரிஞ்சி போச்சி. சுடர் கேஸ்ஸ சால்வ் பண்ணி நீ தான் இந்த கதைக்கு ஹீரோன்னு நிறுபிக்க போற. அந்த செல்ஃபோன் டவருக்காரெ தீஷித்த பின்னாடி தள்ளி உன்னோட வைஃப் மனசு‌ துண்டு போட்டு இடம் பிடிக்க போற. சரியா. " என்க, மது புன்னகைத்தான்.‌


ராக்கி, "அடுத்து என்ன. அரசனூரா. "


" இல்ல. பெங்களூர். " என்க, இருவரும் புருவங்களைச் சுருக்கினர். 


"நீ சொன்னது உண்மன்னா அந்த அன்நோன் பாய் ஃப்ரெண்ட் யாருன்னு நாம முதல்ல கண்டு பிடிக்கணும். அதுக்கு நான் பெங்களூர் போறேன். பிரவீன் நீங்க அந்த ரெண்டாவது ஃபோன் நம்ரோட கால்ஸ ட்ரேஸ் பண்ணி ரெண்டு நாளைக்குள்ள சொல்லுங்க. அப்றம் சிராஜ்ஜ பத்தியும் அவெ மேல இருக்குற கிரிமினல் கேஸ்ஸ பத்தியும் டீடெய்ல்ஸ் எடுங்க.  விசாகனுக்கும் சிராஜ்க்கும் உள்ள தொடர்பு பத்தியும் விசாரிங்க. ராக்கி நீ. "


"இம்மீடியட்டா அரசனூர் போறேன்.‌" 


"குட்… அங்க போய்.. "


"அந்த தீஷித்த பைரவிய விட்டு தள்ளி வைக்கணும் சரியா? " 


"நோ... அவளே நினைச்சாலும் அவ மனசுல எனக்கான இடத்த யாருக்கும் குடுக்க முடியாது. சோ… தீஷித், ஒரு தேவையில்லாத ஆணி. அத புடுங்குறேன்னு நேரத்த வேஸ்ட் பண்ணாம. அந்த ஃபோன கண்டு பிடி. கூடவே சுடர் சொன்ன எவிடென்ஸ் என்னன்னு பாரு. அந்த ஊரோட நிலம. கண்ணாயிரம் அங்கில் போட்ட கேஸ்னு எல்லாத்தையும் விசாரி. " எனக் கட்டளைகளை பிறப்பித்தவன், சுடர் வீட்டில் இருந்து எடுத்த puzzle பாக்ஸ்ஸை வாங்கி கொண்டு, லேப்டாப்பை நீட்டினான். 


"சுடரோட யூஸர் ஐடி ஓப்பன் ஆகிடுச்சி.‌ அவக்கிட்ட குடுத்திடு." என்றவன் சங்கத்தைக் கலைத்துவிட்டு சென்றான் பெங்களூருக்கு சுடரின் காதலனை தேடி. 


பைரவி‌, "தீஷ் வர்ற லெஃப்ட் எடுங்க. இந்த முறையும் மிஸ் பண்ணிடாதிங்க. "


கையில் கூகுல் மேப்பை வைத்துக் கொண்டு மதுரைக்கு வழி சொல்கிறேன் என்ற பெயரில் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போகச் சொல்லி அணத்த,


"ஸ்ரெயிட்டா தான் போணும் டாம். இது நேஸ்னல் ஹைவே. எந்தப் பக்கமும் திரும்ப வேண்டிய அவசியம் இல்ல." 


"எனக்கு தெரியாதா இது நேஸ்னல் ஹைவேன்னு. நான் டோல் கேட்டுக்கு காசு குடுக்க விரும்பல. சோ, லெஃப்ட் எடுங்க. " 


"கூகுள் மேப்பெல்லாம் வச்சிட்டு போனா ஊர் ஊரா தான் சுத்தணும். ஹைவேன்னா… ஸ்மூத்தான ரோடு. எந்த வித குளுங்களும் இருக்காது. ஆனா ஊருக்குள்ள போனா குண்டும் குழியுமா ரோலர் கோஸ்டர்ல போன மாதிரி இருக்கும்.‌ வாந்தி வந்தாலும் ஆச்சர்யமில்ல. "


"பரவாயில்ல நான் கேரி பேக்ஸ் வச்சிருக்கேன். நீங்க ஊருக்குள்ள கூடியே போங்க. அங்க தான் சின்ன சின்ன கடைங்க இருக்கும். நொங்கு, இளநீ, பதநீ, கம்மங்கூலுன்னு நிறைய தள்ளு வண்டி கட இருக்கும். எல்லாத்தையும் வாங்கிட்டு.‌ சர்பத்து, கரும்பு சாறுன்னு குடிச்சிட்டே போலாம். " என்க, அருகில் இருந்தவன் அவனின் டாம் கேர்ளை ரசித்தபடியே, 


" ஓகே… மிஸ் பைரவி ஆசைப் பட்டுட்டாங்க. நிறைவேத்திடுவோம். " என்றவன் சின்ன சின்ன ஊர்களையும் விட்டு வைக்காது குறுக்கே புகுந்து புகுந்து சென்றான். அவள் கை நீட்டிய அனைத்தையும் வாங்கி சுவைத்த படியே மதுரையை வந்ததடைந்தனர். 


முதலில் தீஷித் காரை நிறுத்திய இடம் சிராஜ் கட்டிய செல் டவருக்கு அருகே தான். கழுத்து ஒடிந்து விடு அளவுக்கு அன்னாந்து பார்த்தால் தான் அதன் உச்சியைக் காண இயலும். உயரமாக இருந்தது. மற்ற செல் டவர்களை காட்டிலும் வித்தியாசமாகவும் பெரிதாகவும் இருந்தது.  கீழே எரிந்து போன பில்டிங். சுற்றி கம்பி வேலி போடப்பட்டிருந்தது. அதற்கு பாதுகாப்பாய் ஒரு வாட்ச்மேனும் அவனின் குடும்பமும் குடில் கட்டி இருக்க, டவரின் கைப்பிடி இல்லா படிக்கட்டில் ஏறி கொண்டிருந்தான் ஒரு இளைஞன். 


பைரவி, "அந்தாளு எங்க போறாரு? தற்கொல பண்ணிக்கவா!".


"டாம்... சர்வீஸ் மெயிண்டனெஸ்காக." என்றான் சிரிப்பினுடே,


"இவ்ளோ உயரத்துல இருந்து தரைய எட்டி பாக்குறேன்னு பாத்து தல சுத்தி கீழ விழுந்திட மாட்டானா. " எனச் சந்தேகம் கேட்க,


"மாட்டான். அனுபவம் இருக்கும். " 


"எதுக்கு மனுஷன அனுப்புறாங்க. வேற மாற்று ஏற்பாடு இல்லையா. "


"அப்றம் சர்வீஸ் எப்படி பண்றது. மிக்ஷின் யூஸ் பண்ற அளவுக்கு முன்னேறலயே நாம. அப்ப மேன்வல்லாத்தா பண்ணணும். " 


"நீங்க வச்சிருக்குற டவருக்கும் இப்படி தான் சர்வீஸ் பண்ணுவிங்களா. " என்க, அவன் புன்னகைத்தபடி அங்கிருந்த வாட்ச் மேனிடம் பேசத் தொடங்கினான். 


பைரவி அந்த வேலியைச் சுற்றி சுற்றி வந்தாள். சின்ன சின்ன பூக்களும் பற்களும் முள் செடிகளும் காடு போல் வளர்ந்திருந்தது. கிராமமாக இருக்கும் அந்தப் பகுதியில் மேய்ச்சலுக்கு என யாரும் ஆட்டையோ மாட்டையோ அழைத்து வருவது இல்லை போலும். அந்த வேலி புதருக்குள் இருப்பது போல் காட்சி தந்தது. 


நன்கு சுற்றி முற்றி பார்வையிடவளின் முகத்ததில் ஒரு வித அமானுஷ்ய பயம் வர, தீஷிதன் காரணம் கேட்டான். 


"தீஷ், நான் நிறைய படங்கள்ள பாத்திருக்கேன். இந்த மாதிரி இடத்துல தான் தூக்கு போட்டோ! இல்ல சாவடிச்சி தூக்கிட்டு வந்தோ! தொங்க விட்டுடுவாங்க. அசிங்கமா! அகோரமா! இருக்கும் டெட் பாடிலாம். " எனச் சினிமாவையும் அவள் பார்த்த சில கேஸ்களையும் பற்றி விளக்கி சொல்ல, தீஷித் சத்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டான். 


"நீ போலிஸ் டாம். உன்னோட வேலையே கொலகாரனையும் கொள்ளக்காரனையும் கண்டு பிடிக்கிறது. நீ என்னடான்னா டெட் பாடிய பாத்து பயப்படுறேன்னு சொல்ற. "


"ஆக்சலி எனக்கு ரத்தத்த பாத்தாலே பயம். அதுலயும் ரத்தம் வந்து செத்துப் போனவங்கள பாத்தா அத விட பயம். " எனச் சிறிய குரலில் சொல்ல, அவன் கேலி ஏதும் செய்யாது,


‍"நாளைக்கி காலைல வந்த வேலய பாக்கலாம். துணைக்கி ஆளுங்களக் கூடிட்டு வந்து வச்சிக்குவோம். ம்… " என்க, சிறு தைரியம் வரப்பெற்றாள். நம்ம மதுர வீரன் இருக்க பயம் ஏன்?. என்ற படி பாண்டியின் இல்லத்தை விசாரித்து அழைத்துச் சென்றாள்.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...