முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 78


 

அத்தியாயம்: 78


"சா..ரு. " எனக் கத்திய பைரவியின் குரலில் அதிர்ச்சி, ஆனந்தம், ஆச்சர்யம் என அனைத்தும் இருந்தன. 


'இவா வீட்டு வாசல்ல நிக்கிறான்னா! இது தேனியா! இல்ல மதுரையா! தேனில இருக்க வேண்டியவ மதுரைக்கு வந்திருங்காளா! இல்ல அவகேடோ சொன்ன மாதிரி கூகுள் மேப்ப பாத்து மதுரைக்குப் பதில் தேனில மாத்தி இறங்கிட்டோமா!' எனச் சுற்றி முற்றி கடைகளில் தொங்க விட்டிருக்கும் பெயர் பலகைகளை பார்க்க, அதில் கொட்டை எழுத்தில் இல்லாமல் சற்று சிறிய பெரிய எழுத்தில் அரசனூர், மதுரை என பின் கோர்டுடன் எழுதப்பட்டிருந்தது. கூடவே ஃபோனிலும் தான் நிற்கும் இடம் மதுரை தான் என்பதை சரி பார்த்துக் கொள்ள, அதுவும் மதுரை தான் என அடித்து சொன்னது. 


'அப்ப இது மதுரைல இருக்குற தேனி போல. அதா சாரு எட்டி பாக்குறா. ஆமா தேனி மாவட்டத்த எப்ப மதுரையோட இணைச்சாங்க. அதுவும் ஏங்கிட்ட கூட சொல்லாம. ' என இல்லாத தன் மூளையை கசக்கி பிழிந்தாள்.


"நீ எப்படி டி இங்க?" எனக் குழம்பிப் போய் பைரவி கேட்க,


"அத நாந்தா கேக்கணும். நீ எப்ப இங்க வந்த? ஏன்டி ஃபோன சுவிட்ச் ஆப் பண்ணி வைச்சிருக்க. நாங்க எப்படி உன்ன கான்டாக் பண்றது. அறிவில்ல உனக்கு. " எனக் காட்டமாக கேட்டவள் காரை நிறுத்தி விட்டு பின்னால் வந்து கொண்டிருந்த தீஷித்தை பார்த்து விட்டு,


"எதுக்கு இவர கூட்டு வந்த?" என மெதுவாக கேட்டாள். 


"சும்மா ஊர் சுத்தி பாக்க.‌" என அவளின் குரலிலேயே பதில் அளித்தவள்,


"தீஷ் வாங்க. நம்ம வீடு தான். சோ கூச்சப்படாதிங்க. கம்… " எனக் கண்ணாயிரத்தின் வீட்டிற்குள் அழைத்துச்‌ சென்றாள். 


"நம்ம வீடா! தமிழரசி கேட்டது கீரக்கட்ட ஆயிற மாறி மண்ட முடிய ஆஞ்சி எடுத்திடும். " சாருவின் மைண்ட் வாய்ஸ். 


சாரதாவும் தாமரையும் பைரவியின் குரலில் வாசலுக்கு வர, "பைரவிம்மா. " என்ற சாரதாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம். அவர்களிடம் தீஷித்தை ஒப்படைத்து விட்டு, சமையலறையில் தண்ணீர் குடிக்க வந்தளைச் சாரு தள்ளிக் கொண்டு சென்றாள், கிணத்தடிக்கு. 


"எதுக்குடி என்னைத் தள்ளிட்டு வர்ற? " 


"என்னடி கோலம் இது? எதுக்கு முடிய வெட்டுன?" 


"நல்லா இல்லையா?" 


"நல்லாத்தான் இருக்கு. ஆனா நீ இத அண்ணனுக்காக வளக்குறதா சொன்ன. இப்ப வெட்டிருக்கன்னா. அண்ணா கூட சண்ட போட்டு வாங்கி கட்டிக்கிட்டியா. " என்க, 


"ஆமாண்டி. உங்கண்ணெ குடுக்க குடுக்க வாங்கி கட்டிக்க நான் அவரு பொண்டாட்டி பாரு… அதா கோர்ட்டு வாசல்லயே எல்லாம் முடிஞ்சி போச்சே. "  என்ற போது கண்ணில் நீர் அரும்பி நிற்க,


"பையூ… என்னாச்சி? " 


"ஒன்னுமில்ல. நீ எப்படி இங்க வந்த? வீட்டுக்கு போகவே இல்லையா?" 


"போகலாம் செஞ்சேன். ஆனா அங்க நடந்ததே வேற. ம்ச்… இந்த மனுஷனோட மனசு இருக்கே. அது உடும்பு மாதிரி. தன்னோட பிடிவாதத்த விட்டே குடுக்காது. அது என்னைக்கும் மாறவே மாறாது. மாறுன மாதிரி காட்டிக்கிட்டாலும். அதெல்லாம் நம்மல ஏமாத்த போடுற வேஷமே தவிர. உண்மை அது கிடையாது. " 


" நீ எந்த உண்மைய பத்தி பேசுற சாரு. " என்க, சாரு தன் மூச்சை ஆழ இழுத்தாள்.


"எந்தங்கச்சி என்னைக் கூப்பிட்டான்னு அவளோட புகுந்த வீட்டுக்கு போனேன். போனதுக்கு அப்றம் தான் தெரிஞ்சது. எங்கம்மாவும் அவளும் எனக்குப் பாத்து வச்சிருந்த மாப்ளயோட பவுசு. " 


"யாரு அது?"


"அந்த வீணா போன இனியன் தான்." 


"இனியன்??" எனக் கேள்வியாக பார்க்க, 


"என் மொத புருஷன். பத்து நாள்ல வாழ்க்கையவே வெறுக்க வச்சவெ. அவெந்தான் இனியவேல். ரொம்ப வர்ஷம் ஆச்சில்ல அதா மறந்திட்ட போல. "


"மறுபடியும் அவனயா உனக்கு மாப்ளையா முடிவு பண்ணாங்க. " 


" அந்த  மூதேவியத்தான். அவெ இழுத்திட்டு போய் கல்யாணம் பண்ணானே அவனோட காதலி. ரெண்டு புள்ளய பெத்து போட்டுட்டு போன மாசம் செத்து போய்ட்டாலாம். அந்த ரெண்டும் தாயில்லாம அனாதையா நிக்கிதுங்களாம். அதுக்காக வேற கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கும் போது, ஏற்கனவே பண்ணி வச்சிருக்கானே… அப்றம் எதுக்கு வெளில பாக்கணும்னு சொல்லி… என்னைப் புள்ளைங்களுக்கு அம்மாவாவும் அவனுக்கு பொண்டாட்டியாவும் இருந்து வடிச்சுக் கொட்டுவான்னு பேசி முடிச்சிருக்காங்க. 


பொண்டாட்டி செத்து ஒரு மாசம் கூட முடியாத அவனுக்கு, பொம்பள சுகம் வேணும்னு என்னென்னமோ கதை சொல்லி என்னை அவெந்தலைல கட்ட ஏற்பாட்ட பண்ணிட்டு, என்னை கூப்பிட்டிருக்காளுக. நானும் மடச்சி கணக்க கூட பிறந்தவ பெத்தவன்னு நம்பி போனேன். வந்து இறங்கன உடனேயே பொடவய மாத்தி மணவறைக்கு வான்னு இழுத்திட்டு போய் உக்கார வச்சிட்டாளுங்க. "


"பிறவு. எனக்கு கால் பண்ணிருக்கலாமே. நான் உடனே போலிஸ்ஸ அனுப்பிருப்பேன்ல. " என்றவளுக்குத் தெரியாது போலிஸ்ஸை விட பவர்புல்லான பாண்டி சாருவை அழைத்து வந்தது. 


“ஏன் உங்கம்மா இப்படி இருக்காங்க? பெத்த பிள்ளையோட வாழ்க்கைய விட கண்ணுக்கு தெரியாத கௌரவத்த பெருசா நினைச்சிட்டு.‌ ச்ச…" என்றவள் சாருவின் அன்னைக்கு ஃபோன் செய்து திட்டுவதாக சொல்ல,


" விடு டி. தப்பிச்சாச்சி. இனி அவங்கள நம்பி ஊர் பக்கமே போக கூடாதுன்னு வச்சிருக்கேன். நான் தரங்கெட்டு போய்டுவேன்னு ஊர் முழுக் பேசுன அத்தன வாய்ங்களும் மூடுற மாதிரி கல்யாணம் குழந்தை குட்டி ன்னு நான் வாழ்ந்து காட்டுறேன் பாரு. " 


"ஆமா.‌‌.. ஆமா… இவங்க கிட்டலாம் பேசுறத விட செஞ்சி காட்டுனாத்தா சரியா இருக்கும். இப்ப நீ ஓகே தான. " என்க, சாரு தலை அசைத்ததும், 


"நீ விட்ட சபதத்துல ஜெயிக்கணும்னா நீ கல்யாணம் பண்ணிக்கணும். தீஷித் வந்திருக்காரு.  கவலயே படாத. கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வைக்கிறேன். " என்க, சாரு தலையில் அடித்துக் கொண்டாள் என்றால் பைரவிக்குப் பின்னால் இருந்து கேட்ட சத்தம் கிணற்று மேட்டில் இருந்தவளைக் கிணற்றிற்கு குதித்து விழச் செய்யும் அளவுக்கு அதிர்வுடன் வந்தது. 


"எவாடி அவா! எம்மருமகளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேங்கிறது.. " தமிழரசி தான். 


"தொலச்சி புடுவெ தொலச்சி. வந்தியா பாத்தியா என்னத்தையாது தின்னியா போனியான்னு இருக்கணும். அத விட்டுட்டு கண்டத பேசி எம்மருமக மனச கலச்ச.‌.. ஒழுங்கா ஊர் போய் சேர முடியாது பாத்துக்க. பாதி வளந்த அந்த மண்டமயித்த கோழி ரக்கைய புடுங்குற மாதிரி புடுங்கி எடுத்திடுவேன். " என மிரட்டி விட்டு செல்ல,


" சாரு… அவங்க மருமகள பத்தி பேசிட்டு போனாங்களே. அது யாருன்னு உனக்கு தெரியுமா?" என்றபடி சாருவைப் பார்க்க, அப்பொழுது தான்‌ கவனித்தாள் அவளின் கழுத்தில் மின்னிய மாங்கல்யத்தை. 


"சாரு... வாட் இஸ் திஸ். உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா. எப்ப? மதுர வீரன் கூடயா?" என அதிர்ச்சியுடன் கேட்க, சாரு நடந்ததை முழுதாக சொல்லி முடித்தாள்.


பஸ்ஸில் இருந்து இறங்கிய சாருவைத் தாயும் தங்கையும் அவசரமாக கோயிலுக்கு இழுத்துச் சென்றனர். ஏன் என்று புரியாத சாருவிற்கு கோயில் வாசலில் வாயெல்லாம் பல்லாக, வெள்ளை வேட்டி சட்டையில் நின்று கொண்டிருந்த இனியன் தெரிய,


"என்னம்மா நடக்குது இங்க?" எனக் கத்தியே விட்டாள்.‌


"அந்தப் புள்ளைங்களுக்கு ஆத்தா இல்ல. அதான் நீ அவனுக்குப் பொண்டாட்டியா இருக்கியே. அப்றம் எதுக்கு அடுத்த கல்யாணம்னு சொல்லி இத ஏற்பாடு பண்ணிருக்கேன். மொரண்டு பிடிக்காம வந்து உக்காரு. இப்பல்லாம் படிச்சி வேலைக்கி போற பொண்ணுங்களுக்கே கல்யாணம் முப்பது வயசுல தான் நடக்குது. நீ வேற பண்ண கல்யாணத்த அத்து விட்டுட்டு நின்னா… மறுமணம் பண்ணிக்க எவனும் வர மாட்டான். ஆம்பள தொண இல்லாம பட்டனத்துல உக்காந்திருக்குற உன்ன எவெங்கூட சுத்துறாளோன்னு ஊருக்குள்ள முக்காவாசி ஜனம் பேசும் போது. உனக்கு வாழ்க்க கூடுக்க இனியா வந்ததே பெருசு. அவெ கட்டுன தாலி உங்கழுத்துல இல்லங்கயும் மறுபடியும் கட்டுறேன்னு சொல்லி இத மொத்தமா ஏற்பாடு பண்ணதே அவெந்தான். " என ஏதேதோ சொல்லி அவளைத் திருமணத்திற்கு தயார் படுத்த, சாரு பாண்டிக்கி‌ அழைத்து விட்டாள். 


"ஹலோ… " என்ற சாருவின் குரலில் கோபமே இருந்தது. 


பாண்டி, " வீட்டுக்கு பத்திரமா போய் சேந்துட்டீங்களா. "


"ரொம்பத்தா அக்கர எம்மேல. " எனப் பொரிந்து தள்ள,


"எதுக்கு இப்ப அத்தன கோவம்?" 


"எனக்கு இன்னைக்கி கல்யாணமாம்." 


"உனக்கு அதுல விருப்பம் இல்லையா?" 


"விரும்ப இருந்தா நா ஏன் உன்ன கூப்பிடப் போறேன்? அன்னைக்கி கட்டிக்கிறியான்னு கேட்டேல்ல. இன்னைக்கி சொல்றேன். உன்ன நான் கட்டிக்கிறேன். பத்தர‌ டூ பன்னண்டர முகூர்த்தம். அதுக்குள்ள வந்தா நீ எங்கழுத்துல தாலி கட்டாலாம். இல்லன்னாலும் வரலாம். மாலைய வாங்கிட்டு வந்து எம்பொணத்துக்கு போட்டுட்டு போக. உன்னால தான் எனக்கு இந்த நிலம. அன்னைக்கி செத்திடலாம்னு ரயில் முன்னாடி பாய இருந்தப்ப பாஞ்சி வந்து காப்பாத்துனேல.‌ இப்பயும் வந்து காப்பாத்து. இல்லன்னா சாவட்டும்னு தண்ணி தெளிச்சி விட்டுடு. " என்று விட்டு வைத்து விட்டாள்.


அடுத்த நடந்து அத்தனையும் மாயாஜாமாக இருந்தது சாருவிற்கு. பைரவி சொல்வது போல் மதுரை வீரனாக வந்திறங்கினான். அந்தக் காலத்து வீரன் குதிரையில் வந்திறங்குவான். இந்த நவீன வீரன், குட்டி யானை அதான் டாடா ஏஸ். அதில் வந்திறங்கினான். வேட்டியை மடித்து கட்டி தன் கணத்த தொண்டையைத் திறந்து அங்கிருந்த அத்தனை பேரையும் ஒண்டியாக சமாளித்து சாருவை அழைத்து வந்தான். அவனின் மனைவியாக. 


"அம்புட்டு பேருக்கும் இந்தத் தமிழரசி மேல பயம் விட்டுப் போச்சி. இருந்திருந்தா இப்படிக் கழுத்துல தாலிய கட்டி ஒருத்திய கூட்டீட்டு வந்திருப்பியா?" என அரசி வீட்டிற்குள் விடாது கத்த, 


"ஒருத்திக்கு தான தாலிய கட்டுனேன். என்னமோ ஐஞ்சாறு பேர பொண்டாட்டின்னு கூட்டியாந்த மாதிரி சவுண்டு விடுற. " என்று புத்திசாலித்தனமாக பேசிய பாண்டிக்கு உள்ளிருந்து சமையல் பொருட்களும் ஒரு பெட்டியும் பரிசாக வந்து விழுந்தது. அதில் அவன் துணிகள் இருக்க,


"புரிஞ்சி போச்சிம்மா. இதெல்லாம பொருக்கி கிட்டு போய் தனியா குடும்ப நடத்த சொல்ற. சரியா? என்ன பாக்குறிங்க. எடுத்திட்டு வாங்க. எங்க தோட்டத்துல மோட்டார் வீடு இருக்கு. அங்கயே தங்கிக்கிவோம். திருவிழா முடியவும் மெட்ராஸ்க்கு புறப்பட்டுடலாம்." என்றவன் மீது பறந்து வந்து விழுந்தது துடப்பம். அத்தோடு அரசியின் கத்தல் வேறு அதிகமாக இருக்க, சாருவிற்கு கவலையாகிப் போனது.


"உன்னைய என்னாத்துக்கு நான் பட்டணம்‌ அனுப்புனேன். போன வேலைய பாக்காம பேப்பயெ, அவனுக்கு பொண்ணு பாத்திட்டு திரிஞ்சிருக்கான். " என வாய் ஓயும் வரை திட்டியவரை வாசலில் நின்று புதுமக்கள் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சாரதாவும் கண்ணாயிரமும் சமாதானம் செய்து அமைதி படுத்தினர். 


"ம்மோய் என்னைய திட்டுறேனு சொல்லி மொத்த எனர்ஜியையும் செலவழிச்சிடாத.‌ ஏன்னா உம்மகளுக்கும் நான் மெட்ராஸ்ல மாப்ள பாத்து வச்சிருக்கேன். அந்த ஊர்ல வச்சே ஜாதகமெல்லாம் பாத்தேன். அருமையான பொருத்தம்னு அடிச்சி சொன்னான் ஜோசியக்காரெ. " என்க,‌ மீண்டும் மலையேற தொடங்கி விட்டார் அவர். 


" நாலு காச பாத்ததும் இந்த வீட்டுல எல்லாமே நீ தான்னு மெதப்புல இருக்கியோ. நான் இன்னும் உசுரோட தான் இருக்கேன். எம்மகளுக்கு யார கட்டி வைக்கணும்னு எனக்கு தெரியும். யோவ்… நீரு போய் அங்க என்னத்த புடுங்குனீரு, மகன அங்க தறுதலயா ஊர் மேய விட்டுட்டு. உன்னால தாய்யா எல்லாமே. " எனக் கணவனையும் விடாது திட்ட, சாரு தமிழரசியின் முன் வந்து நின்றாள்.‌  


" நான் உங்க பையன விரும்பி காதலிச்சிலாம் கல்யாணம் பண்ணல. சூழ்நில அப்படி ஆகிடுச்சி. " எனத் தன்‌ முதல் திருமண வாழ்க்கையையும் இப்போது நடக்கவிருந்ததைப் பற்றியும் கூறியவள்,


"நீங்க ஒத்துக்க மாட்டிங்கன்னு எனக்கு தெரியும். நான் போறேன். " என்று நடக்க,


"எங்க போப் போற?" என்ற கேள்வி அரசியிடம் இருந்து வந்தது. 


" சென்னைக்கி. " 


" அங்கெல்லாம் போகக் கூடாது. பெட்டிய தூக்கிட்டு உள்ள போ. " என்க, சாருவிற்கு சந்தோஷத்தில் அகம் மலர்ந்தது. 


"ம்மோய்...‌ நீ இம்புட்டு வெரசா ஏத்துப்பன்னு நான் நினைக்கவே இல்ல. " என்றவன் அவனின் பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய, அதை வாங்கி மீண்டும் தூக்கி வீதியில் எறிந்தார் அவர். 


"ம்மா. " என அதிர்ந்து போய் நிற்க,


"தப்பு பண்ணது நீ. அந்தப் புள்ள இல்ல. அதுனால நம்ம குலதெய்வம் கோயிலுக்கு பொங்க வைச்சி, ஊருக்கு பந்தி வைக்காம உன்ன வீட்டு பக்கம்‌ விட மாட்டேன். போய் மோட்டர் ரூம்ல தங்கிக்க. கொட்டிக்க வேளா வேளக்கி சாப்பாடு வந்து சேரும்.‌ போடா. " என்று இரக்கம் சிறிதும் இன்றி கூறிச்‌ சென்றார் தமிழரசி.


"என்ன பாக்குற! பிரச்சன எனக்கும் எம்மகனுக்கும் தான். தாலி கட்டிட்டாங்கிறதுக்கா எங்களுக்குள்ள நீ வர கூடாது. அதே நேரம் நானும் உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன ஆனாலும் யாருக்கும் வக்காலத்து வாங்கிட்டு வர மாட்டேன். என்னைய கேட்டா கல்யாணம் பண்ணிங்க. " என நெட்டி முறிக்க, சாருவிற்கு புன்னகை வந்தது தன்‌ மாமியாரின் பேச்சில்.


" சாருக்கா. ச்ச… அண்ணி. இந்தாங்க காபிய குடிங்க.‌ காலைல இருந்து சாப்பிடலயா. கெறக்கமா இருக்கிங்க. " எனத் தாமரை அக்கறையாக கேட்க, 


"நேத்து சாயங்காலம் பஸ் ஏறும் போது சாப்டோமே. அது மட்டும் தான்" என்றாள் கவலையாக. ஒரு டம்ளர் தண்ணீர் கூட கொடுக்காது மணமேடைக்கு அலங்காரம் செய்து அழைத்துச் சென்ற தாயை நினைத்து கண்ணீர் வடித்தது மனம்.


"அடியே எதுக்கு டி காபிய குடுத்த. வெறும் வயித்துல இருக்குற பிள்ளைக்கி இதையா குடுப்பாங்க. உலைய வை. நான் போய் தயிரு வாங்கியாறேன்.  ஹா அப்பறம் சொல்ல மறந்திட்டேன். வேலைக்கெல்லாம் வெளியூருக்கு போக வேண்டாம். அத விட்டுட்டு வந்திடு. உனக்குக் கஞ்சி ஊத்துற அளவுக்கு எம்மகெ சம்பாதிக்கிறான். சம்பளம் பத்தலன்னாலும் அவெ பாத்துப்பான். தயிரு சேப்ப தான. " எனச் சாருவிடம் கேட்க, அவள் அரசியை அணைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள். 


தமிழரசியின் அடாவடியான அன்பு சாருவிற்கு நம்பிக்கையை தந்தது.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...