முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 81


அத்தியாயம்: 81


"தூங்கலயா டாம். "  


"வரலா தீஷ். " என்றாள் பைரவி வெற்று புன்னகையுடன். 


" எதுவும் ப்ராப்ளமா?"


"இல்ல. "


"அப்றம் ஏன் அர்ஜென்ட்டா பாக்கணும் பேசணும்னு மெஸ்ஏஜ் அனுப்புன. "


"அம்மா கால் பண்ணிருந்தாங்க." 


"ஓகே.‌"


"என்னோட செக்கேண்ட் மேரேஜ் பத்தியும் அதுக்கு பாத்திருக்குற பையனப் பத்தியும் சொன்னாங்க. " என்றவள் ஓரக்கண்ணால் தீஷித்தை பார்த்தாள். அவளின் பேச்சில் உள்ள பொருள் புரிய,


"இத இங்கயே பேசணுமா இல்ல ஒரு லாங் டிரைவ் போய்ட்டே பேசலாமா." என காரை கண்களால் காட்ட, பைரவி எழுந்து காருக்கு அருகே சென்று தன் சம்மதத்தைக் கூறினாள். 


தீஷித் காரில் ப்ளேயரை ஆன் செய்து ஓட்ட, கார் ஹைவேயில் இலக்கு இல்லாமல் பறந்தது. 


" ஏன் இத எங்கிட்ட சொல்லல நீங்க?" என்றவள் குரலில் கோபம் இல்ல.


"சொல்லணும்னு தோனல. " 


" எப்ப இருந்து உங்க அம்மாக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. "


" நீ எங்க வீட்டுக்கு வந்திட்டு போனப்பவே என்னோட அம்மா உன்னோட அம்மாட்டா பேசிருக்காங்க. நீ ஆல்ரெடி மேரிட்ன்னு ரீசென்ட்டா தான் டைவர்ஸ் கிடைச்சதுன்னு எல்லாத்தையும் உங்கம்மா எங்கம்மாட்ட சொல்லிருக்காங்க. அம்மாக்கு இந்தக் காலத்துல டைவர்ஸ், லிவ்விங் டுகெதர் இதெல்லாம் சகஜம்னு தெரியாது. அதுனால அந்தப் பேச்சுக்கு கொஞ்ச நாள் ப்ரேக் போட்டிருந்தாங்க. 


என்ன நினைச்சாங்களே தெரியல! ரெண்டு நாளுக்கு முன்னாடி ஃபோன்ல பேசி நம்ம ரெண்டு பேரோட பேரன்ஸ்ஸும் இந்த முடிவுக்கு வந்திருக்காங்க. "


"அப்போ உங்க விருப்பம் இல்லாம இதெல்லாம் நடந்திடுச்சின்னு சொல்ல வர்றிங்களா." 


"நோ... என்னோட விரும்பம் தெரிஞ்சதுக்கு அப்றம் தான் என்னோட அம்மா உங்க வீட்டுக்கு கால் பண்ணதே. " என வெளிப்படையாக பேச, பைரவி மௌனியானாள்.


"நம்ம ஃபஸ்ட் மீட்டிங் உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல. மைசூர் ட்ரெயின்ல. எங்க கம்பார்ட்மெண்ட்ல தனியா, தைரியமா ஒரு குட்டி பையன் கணக்கா வந்து ஒரு மணி நேரத்துல எல்லாரையும் ஒரு வழி ஆக்கிட்டு போய்ட்டா. அந்தச் சுட்டி பொண்ண நான் ரொம்பவே மிஸ் பண்ணேன். அந்தப் பொண்ணு எனக்குள்ள ஒரு தாக்கத்த ஏற்படுத்திருக்காங்கித தெரிஞ்சுக்கவே எனக்குப் பல வர்ஷம் ஆகிடுச்சி. அதுக்குள்ள அந்தக் குட்டி பொண்ணு பெரிய பொண்ணா மாறி கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா... மறக்கணும்னு நினைச்சேன். பட் முடியல. " என்றவன் பைரவியுடனான தன் உணர்வை சொல்ல, 


"இப்ப சந்தர்ப்பத்த யூஸ் பண்ணிக்க நினைக்கிறீங்க. "


"அப்படியும் வச்சிக்கலாம்.‌ பிகாஸ் உனக்கு டைவர்ஸ் ஆகி த்ரீ மன்த்துக்கு மேல ஆகிடுச்சி. நான் மிஸ்டர் மதுசூதனன் வைஃப்ப டிஸ்டர்ப் பண்ணல.‌ நீ இப்ப சிங்கள். " என்க, 


"இப்ப தான் புரியுது. என்ன பாக்கும் போதெல்லாம் மிஸ் பைரவி மிஸ் பைரவின்னு அழுத்தமா சொல்றதுக்கான காரணம் என்னனென்னு. ஹே… எங்க வீட்டுக்கு வர்ற ஃப்ளார்ஸ் நீங்க அனுப்புனதா?. உங்க கார்டன்ல வளத்து.‌" 


"எஸ்…" என்றவன் அவளுக்காக அவன் செய்ததைச் செய்து கொண்டிருப்பதைப் பற்றி சொல்ல, அவனின் அன்கண்டிஷ்னல் லவ் பைரவியை மெய்சிலிர்க்க வைத்தது.‌


"டைவர்ஸ்ன்னு ஒன்னு நடந்ததுன்னா  காரணம்னு ஒன்னு இருக்கும். தப்பு யார் வேண்ணாலும் செஞ்சிருக்கலாமே. "


"பட் என் டாம் செய்ய மாட்டா. சேட்ட செஞ்சாலும் என்னோட டாம்க்கு அவளோட லிமிட் தெரியும். யாரையும் காயப்படுத்தாம தன்னையும் காயப்படுத்திக்காம ஹப்பியா வாழத் தெரிஞ்ச மாஸ்டர் ஃபீல் என்னோட டாம். " என்க, சிறு புன்னகை வந்தது அவள்‌ முகத்தில். 


"அப்ப தப்பு…"


"மதுசூதனன் மேல தான். வேற யாரா இருக்கும். அன்லக்கி மேன். " என்க, அவள் சோகமாகிப் போனாள்.


" உனக்கு லவ் ஸ்டோரி இருக்கா?. ஃபஸ்ட் லவ்.‌" தீஷித் 


"நோ... சாந்தி குடுத்த சுதந்திரத்த நான் காதலுங்கிற பேர்ல கெடுத்துக்க விரும்பல. அதுனால எனக்கு லவ்ன்னு ஒன்னு மேரேஜ் பிக்ஸ் ஆகுற வர யாரும் கிடையாது."


"அப்ப உன்னோட ஃபஸ்ட் லவ் மதுசூதனன் தான். " 


"எஸ்… லாஸ்ட் லவ்வும் அவரு தான்."


" ஓ… வேற யாருக்கும் வாய்ப்பு கிடையாதா?" என்க, அவள் இடம் வலமாக தலையசைத்து கிடையாது என்றாள். அவன் சோகமாக முகத்தை வைத்து கொண்டு ப்ளேயரில் சோக பாட்டு போட, அவள் சிரித்து விட்டாள்.


"உங்களுக்கு லவ் ஸ்டோரி இருக்கா?" 


"ம்... நிறையவே இருக்கு.  நோட் பேடுல போட்டு எழுதுனா கண்டிப்பா 3000 வேர்ஸ்க்கு மேல போகும். என்னோட லவ் ஸ்டோரி."


" உங்க காதலிங்க லிஸ்ட்ல சட்டுன்னு நியாபகம் வர்ற மூணு பேரோட பேர் சொல்லுங்க. "


" மமதி… யாழ்முகி... பிருந்தா... " என்றான் பட்டென. 


"வாவ். ரொம்ப வேகமா சொல்லிட்டிங்க. " 


"மறக்க முடியாத லவ்.‌"


"இவெங்க மேல எப்ப லவ் வந்தது. "


"பிருந்தா மேல ஸ்கூல் போன அன்னைக்கே லவ் வந்திடுச்சி. " 


"டீச்சரா?"


"எஸ்… டீச்சரே தான். ப்ரீகேஜி டீச்சர். என்னை ஆசையாத் தூக்கி வச்சி கொஞ்சும் போது, நான் அவளுக்கு நிறைய கிஸ் குடுப்பேன். பதிலுக்கு அவளும் தருவா. என்னை விட்டுட்டு சாப்பிட கூட மாட்டா.‌ க்ளாஸ்ல எல்லாரும் இருக்கும் போதே என்னோட டிப்பன் பாக்ஸ்ஸ ஓப்பன் பண்ணி சாப்பாடு ஊட்டி விடுவா. எனக்கு அவா ஊட்ட. நான் அவளுக்கு ஊட்டன்னு தரமா இருந்தது.  கல்யாணமாகி போற வர. " என்க, பைரவி தன் வாயை இரு கரத்தால் மூடிக் கொண்டு சிரிக்க, அவனுக்கும் புன்னகை அரும்பியது. 


".உங்கிட்ட யாராது லவ் லெட்டர் நீட்டுனா என்ன பண்ணுவ. " தீஷித்.


"வாசிச்சி பாப்பேன். அட்ராக்டிவ்வா இருந்தா லெட்டர வச்சிப்பேன். இல்லன்னா அவெ ப்ரப்போஷலோட சேத்து லெட்டரையும் அவெங்கிட்டையே குடுத்திடுவேன். "


"பட்‌… இந்த யாழ் அப்படி பண்ணல. அவா கிட்ட லெட்டர் குடுத்தேன். அவா பதில் லெட்டர் எழுதி என்னோட அப்பாட்ட குடுத்திட்டா. " 


"வாட்."


"எஸ்... அங்கில் உங்க பையன் என்னை லவ் பண்றானாம். நான் என்ன சொல்லன்னு கேட்டு அவருக்கே லெட்டர் குடுத்திருக்கா. அத வாங்கி படிச்சிப்பாத்தவரு மீச கூட முளைக்கல, அதுக்குள்ள காதலான்னு கேட்டு கேட்டு ஸ்கூல்ல வச்சே துரத்தி துரத்தி அடிச்சாரு. " 


"அப்றம். " என்றவளுக்கு சுவாரசியம் வந்தது, 


"அப்றம் என்ன! குடு அந்த லெட்டரன்னு பிடுங்கி அவளோட தங்கிச்சி மமதிட்ட குடுத்திட்டேன். அவா அவங்கக்கா மாதிரி இல்ல. "


"ஓகே சொல்லிட்டாங்களா. "


"ச்சச்ச… லெட்டர கிழிச்சி டஸ்பின்ல போடச் சொல்லி எங்கைலயே குடுத்திட்டு போய்ட்டா. " என்க, பைரவி விழுந்து விழுந்து சிரித்தாள். 


"இதெல்லாம் எந்த வயசுல நடந்தது. "


"ம். எனக்கு பதிமூணு இருக்கும். அப்ப எய்ட்த் படிச்சிட்டு இருந்தேன். பட் யாழ்க்கு பதினேழு வயசு. அடுத்த வர்ஷம் ஓட்டு போடுற அளவுக்கு தகுதி இருந்தும் எங்கப்பாட்டா என்ன பதில் சொல்லன்னு கேட்டது தான் கவலையா இருந்தது. "


"அப்ப மமதிக்கு வயசு. " 


" டென்த் படிச்சிட்டு இருந்தா. ஸ்கூல் ரவுடி. பட் ரவுடிக்கு‌ லெட்டர் குடுத்தது யாரு. அடியேன் தா…" 


"ரொம்ப பெரும தான். " 


"இருக்காதா பின்ன. அவள பாத்தா எங்க ஸ்கூலே நடுங்கும். ஆனா நான். தைரியமா போய் சொன்னேன். அது பாராட்டுக்குரிய செயல் இல்லையா." எனக் கதைகள் பல பேசி நடு நிசியில் சிரிப்புடன் பயணம் செய்ய, அது இதமாய் இருந்தது. 


" நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல.‌ காரணம் நான்னு மட்டும் சொல்லிடாதிங்க ப்ளீஸ். "


"இல்ல... நீ இல்ல. ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா டயம் போனதுனால எனக்கு லவ் பத்தி மேரேஜ்ஜ பத்தி நினைக்க நேரம் இல்ல. சொல்லப்போனா நான் லாட்ஸ் த்ரீ இயர்ஸ்ஸா இந்தியாலயே இல்ல. பிஸ்னஸ், கூட பிறந்தவங்க கவ்யாணம்னு ஓடிட்டே இருந்ததுனால கல்யாணத்துக்கு இடம் இல்லாம பேச்சி. 


அப்ப‌ சில ப்ரப்போஷல் வந்தது தான். பட் எனக்கு அவங்கள பிடிக்கல. பிடிச்சது ஒரு பொண்ண. இப்ப அவா கூட வாழ ஆச தான். ஆனா எனக்குன்னு சில கடமை இருக்கு. அத முழுசா முடிச்சிட்டு தான் எல்லாமே.  அதுவர நோ மேர் ஹார்ட் ஃபீலிங். " என்றான் தீவிரமான குரலில்.


" நீங்க இவ்ளோ ஓப்பன பேசும் போது. நானும் சிலத ஓப்பனா சொல்லணும். இல்ல முதல்ல கேக்குறேன். கல்யாணம் ஏன் பண்ணிக்கிறாங்கன்னு நினைக்கிறீங்க. "


"நம்ம பண்பாடு அது தான். கலாச்சாரமும் கூட. "


"என்னைப் பொருத்த வரைக்கும் கல்யாணங்கிறது ஒரு குடும்பமாக கடைசி வரைக்கும் வாழ கிடைச்ச வழி. ரெண்டு பேரா இருக்கும் போது மட்டும் அது குடும்பமா ஆகாது. பேபின்னு ஒன்னு வந்தாத்தா ஒரு ஃபேமிலிங்கிற தகுதி கிடைக்கும். இந்த உலகத்துல எல்லா உயிரும் தனக்கு அடுத்துன்னு யோசிச்சு ஒரு யங் ஜென்ரேஷன குடுத்திட்டு தான் போது. அதாவது குடும்பங்கிறது அவங்களோட குழந்தைகள வச்சி தான் ஸ்டாட் ஆகுது.  குழந்தைங்க இல்லன்னா ஃபேமிலி கிடையாது.‌ " 


" தப்பான கருத்து. பேபிங்கிறது ரெண்டு பேருக்கும் இடைல இருக்குற அன்போட வெளிப்பாடு. வெளிகாட்டலன்னாலும் அன்பும் காதலும் இருக்கத்தான் செய்யும். அது மாறவே கூடாது. குழந்த பெத்துக்கிறது அவங்கவங்களோட தனிப்பட்ட விருப்பம். அதுல தலையிட்டு முடிவெடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.‌ இன்பேக்ட் அதுல ஹஸ்பெண்ட்டுக்கு கூட ரெண்டாவது உரிம தான். "


"ஆனா இந்தச் சமூகம் அந்த குழந்தைக்குத் தான் முக்கியத்துவம் குடுக்குது. கல்யாணம் ஆச்சா அடுத்து எப்ப குழந்த வரும்ன்னு கேட்டு கேட்டு வெறுப்போட உச்சிக்கி கொண்டு போய் நிறுத்திடுதே. "


"அது இந்த சமூகத்தோட டிசைன். ஒரு நாள் மாறும். இதுமாதிரியான அநாகரிகமா, காயப்படுத்துற கேள்விகள் மறஞ்சி போகும். அப்படிப்பட்ட பேச்ச பெருசா எடுத்துக்காத. 


உனக்கு மேரேஜ் ஆகி நாலு வர்ஷம் தான ஆகுது டாம்... அத்தோட 26 இருக்குமா உன்னோட வயது.‌. உனக்கு இன்னும் வயசு இருக்கு. "


"ம்… இருக்கு தான். ஆனா தகுதி தான் இல்ல. "


"வாட். கம் அகென்.‌"


" எனக்கு சில இஸ்யூஸ் இருக்கு. " 


"பட் இந்தக் காலத்துல இது ஒரு ப்ராப்ளமே கிடையாதே. சரி பண்ண முடியாத அளவுக்கு எதுவும் இல்ல‌. அதுக்கு அல்டர் நேட்டிவ்வா நிறைய ஆப்ஷன் இருக்கும். " 


" இருக்கு தான். ஆனா இல்ல. " என்றவள் கண்ணில் நீர் கோர்க்க, தீஷித்  கைக்குட்டையை நீட்டினான். 


"சொல்ல கஷ்டமா இருந்தா வேண்டாம் விட்டுடு டாம். " என்றவன் சில நொடிகளுக்கு பின்,


" சோ. இது தான் காரணமா மிஸ்டர் மதுசூதனனின் உன்ன விவாகரத்து பண்ண. " என்றவன் முகத்தில் மதுசூதனனின் மீது அதீத கோபம் வந்தது. 


'இதெல்லாம் ஒரு ரீசன்னு என்னோட டாம்மா அவெ நிராகரிச்சிருக்கான். ' என்ற ஆத்திரம் மேலோங்கியது. ஏனெனில் குழந்தை என்பதில் தம்பதியர் இருவரின் பொறுப்பும் உள்ளதே.


" எனக்கு சரியா தெரியல. ஏன்னா இன்னும் அவருக்கு நிறைய காரணங்கள் இருக்கு. "


"இப்ப உனக்கு.‌ " 


"ஒரே ஒரு காரணம் மட்டும் தான் " என முணுமுணுத்தவள். அதை தீஷித்துடன் பகிர்ந்து கொள்ள விரும்பாது. 


"போதும் திரும்பி போகலாம்.‌" எனப் பயணத்திற்கு மட்டுமல்ல பேச்சிற்கும் முற்றுப்புள்ளி வைக்க, வீடு வந்து சேரும் வரை இருவரும் பேசவே இல்லை. காரை விட்டு கீழே இறங்க முயன்றவளிடம், 


"என்னைக்கும் இல்லாம இப்ப நீ திடீர்னு எங்கிட்ட இதெல்லாம் பேச என்ன காரணம்?" என்க, அவள் பதில் பேசாது இறங்கி கதவை மூடினாள். 


"செக்கேண்ட் மேரேஜ்க்கு நீ தயாராகிட்டன்னு நான் இத எடுத்துக்கலாமா. " எனக் கத்த. அவள் அவனைத் திருப்பி பார்த்து புன்னகையுடன்,


"உங்க நினப்புக்கு நான் பொறுப்பாக முடியாது. எனக்கு நீங்க ராக்கி பாய் சாரு எல்லாரும் ஒன்னு தான். ஃப்ரெண்ட்ஸ். " என்று விட்டு சென்றாள். 


"வாட்... நானும் ராக்கியும் ஒன்னா. அப்படி இருக்க கூடாதே. ஸ்பெஷல்லா மாறும் நம்ம ரிலேஷன்ஷிப். எவர் கிரீன் மெமரிஸ்ஸா. " என்றவன் தன் டாம் கேர்ளுடன் இருந்த நேரத்தை நினைத்த படி‌ காரை ஓட்டிச் சென்றான். 


ஊருக்கு வெளியே இருக்கும் நட்சத்திர விடுதியில் அறை எடுத்து தங்கியிருக்கிறான். ஆனால் இப்போது கார் அங்கு செல்ல வில்லை. அவன் சென்ற இடம் அந்த செல்ஃபோன் டவர். 


இருள். எங்கும் வெளிச்சம் இல்லாத காரிருள். நிலவின் ஒளி கூட பூமியை வந்து சேரவில்லை. ஆந்தைகள் மட்டும் வேட்டையாடிக் கொண்டிருக்க, தீஷித் அதற்கு போட்டியாக களத்தில் இறங்கினான். 


காரை மறைவாக நிறுத்தியவன், காரில் டிக்கியை திறந்து அதிலிருந்து ஒரு பையை எடுத்தான். அதை தோளில் மாட்டிக் கொண்டு கையில் க்ரிப் க்ளவுஸ் என்ற பிடிமானம் இருக்கும் கை உறையை மாட்டிக் கொண்டு டார்ச்சை எடுத்துக் கொண்டு முகத்தை மங்கி குல்லா கொண்டு மூடி விட்டு, நடக்கத் தொடங்கினான். 


நடு சாமம் என்பதால் அந்த டவரை காவல் காக்க வேண்டிய காவலாளி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரின் மூக்கிற்கு பக்கத்தில் சென்று மயக்க மருந்தை ஸ்ரே செய்தான். சில நிமிடங்களில் மயங்கி சரிந்தவரை, அருகில் இருந்த கம்பளி கொண்டு போர்த்தி விட்டவன், டவரின் கேட்டில் ஏறி குதித்தான். அந்த கேட்டின் சாவி வாட்ச் மேனிடம் கிடையாது. மெய்ன்ட்டனென்ஸ் என்று வரும் ஆட்களை தவிர வேறு யாருக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை. 


இப்போது தீஷித் நுழைந்தான். பேக்கை ஓப்பன் செய்தவன் அதிலிருந்து க்ரெடிட் கார்டை ஸ்வைப் பண்ணும் மிஷின் போன்ற ஒன்றை எடுத்து அங்கிருந்த ஜங்ஷன் பாக்ஸில் வயர் கொண்டு இணைத்தான். என்னென்னமோ செய்தான். 


பின் கம்பி ஏணியின் உதவியுடன் டவரின் உச்சிக்கு சொல்ல ஏற தொடங்கினான். அங்கும் தன் பையில் இருந்த மெஷினை இணைத்து நோண்டிக் கொண்டிருந்தான். 


'எய் என்னப்பா பண்ற. நீ இந்த ஊருக்கு வந்தது உன்னோட டாம் கேர்ளுக்கு உதவி பண்ணி சுடர் கேஸ்ஸ சால்வ் பண்ணவா. இல்ல சிராஜ் கிட்ட போட்ட சவால் ஜெயிக்கவா. அப்படியே ஜெயிச்சாலும். உனக்கும் அந்த சிராஜ்க்கும் என்னப்பா பிரச்சன. ஏன் அவன பழி வாங்க நினைக்கிற.


ஐய்யோ பதில் சொல்ல மாட்டேங்கிறானே. இவெ ஏன் இந்த கதைக்குள்ள சுத்திட்டு இருக்கான். இவன பத்தி நமக்கு ஒன்னுமே தெரியலயே. ' இது தா உங்க மைண்ட் வாய்ஸ்னு நினைக்கிறேன்…


தொடரும் ...


💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...