முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 84


 

அத்தியாயம்: 84


 

நாம் யாரை… 


அதிகமாக ‌நேசிக்கிறோமோ… 


அவர்கள் தான்... 


நம்மை அதிகமாக... 


அழ வைக்கிறார்கள்…


பைரவிக்கும் அப்படித்தான். மதுசூதனனின் அருகில் உரிமையுடன் நின்ற ரூபியை பார்க்கும் போது ஆத்திரமும் அழுகையும் தான் வந்தது. கூடவே கோபம், மதுவின் மீது. யார் கூறினால் என்ன. எப்படி அவன் சம்மதித்தான். நிச்சயம் அவன்  சிதம்பரத்தின் கட்டாயத்தின் பேரில் தான் அதற்கு சம்மதம் சொல்லியிருப்பான். அவரின் பேச்சிற்கு அவனிடம் இருக்கும் மதிப்பு அப்படி. அதனால் தலை அசைத்து விடுவானா. 


தலையசைக்கும் அளவுக்கு தன் மீது வெறுப்பு இருக்குமேயாயின் அவனை விட்டு விலகி இருப்பது தான் சரி’ என மதுவை மறக்க முயன்று தோற்று வருகிறாள். 


ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு செயலும் அவனை நினைவு படுத்துவதைத் தடுக்க முடியவில்லை.‌ மொத்தமாக நான்கரை ஆண்டுகள். இருவரும் பிரிந்து இருக்கும் இந்த மாதங்களைத் தவிர்த்து, 1461 நாட்கள். அத்தனை நாள் இரவு பகல் என 35064 மணி நேரம். அதை நிமிடங்களாகவும் நொடிகளாகவும் கன்வெர்ட் செய்து பார்க்கும் போது  இலக்குனங்கள் நீளும் தான். அதே அளவு நீளமானது கணவனுடனான இனிய பொழுதுகள். 


எத்தனை குறும்பு. எத்தனை சேட்டை. எத்தன கோபம் தாபம் மோகம் என அத்தனையும் நினைக்க நினைக்க தித்திக்கும் பொழுதுகள். இனி அவைகளை மறக்க வேண்டும். என்ன செய்தால் அவனையும் அவனின் நினைவையும் மறந்து கடந்து போக முடியும் என்ற தேடுதலைத் தொடங்க முடிவெடுத்து விட்டாள். 


கால் கடுக்கும் வரை நடைபயின்றவள் வந்து நின்ற இடம் புதிதாக வெள்ளை அடிக்கப்பட்டு புது பொலிவுடன் நின்ற சாரதா ரகுவரனின் இல்லம். நேற்றே வேலை முடிந்தது. கண்ணாயிரத்தின் இல்லத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக பெண்கள் மூவரும் இங்கு தான் தங்கி உள்ளனர்.‌ சாரதாவிற்கும் அது நிம்மதியைத் தந்தது. 


இதற்கு முன் அதாவது கணவன் இறந்த பின் இங்கு வந்து தங்குவது இல்லை. அவ்வ போது சுடர் மட்டும் வந்து செல்வாள். அவளும் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் கண்ணாயிரம் வீட்டில் தான் தங்குவாள். தந்தையின் நினைவுகளைத் தவிர்ப்பதற்கும் சில பல வேறு காரணங்களுக்காகவும். 


தடக் தடக் என்ற நடையுடன் வீட்டிற்குள் செல்லாது திண்ணையில் இருந்த சாய்வு நாற்காலியில் கை கட்டி அமர்ந்தவளுக்குக் கோபம் கோபம். உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் சிவந்து ஆத்திரத்தை ஏற்படுத்த, அந்த நாற்காலியை முன்னும் பின்னும் அசைத்து சூனியக்காரி போல் சத்தமாக புலம்பத் தொடங்கினாள். 


"என்ன நினைச்சிட்டு இருக்கான். ஹாங்... அங்க அவ பக்கத்துல உரசிட்டு நின்னு ஃபோட்டோக்கு போஸ் குடுத்திட்டு, எந்த தைரியத்துல என்னை... என்னைப் பாக்க வந்தான். அரகெண்ட்… கொஞ்சம் கூட எம்மன உணர்ச்சிய புரிஞ்சிக்காத ராக் மேன். மௌண்டன் ஹாட். திருமல நாயக்கர் பில்லர்.‌ " எனப் பல செல்ல பெயர்களை வைத்து திட்ட, 


" பேரெல்லாம் ரொம்ப வித்தியாசமா இருக்கே. யாருக்கு இந்த பெயர் சூட்டு விழா. " என்றபடி தீஷித், வீட்டிற்குள் இருந்து வந்தான்.


" அது உங்களுக்கு தேவையில்லாதது. ஆமா நீங்க எங்க இங்க? வீடு பூட்டிருந்ததே. திருவிழாக்கு வரலயா. கூடவே வந்த மாதிரி இருந்ததே. " எனக் கேள்வி கேட்டு விட்டு பதிலை அவன் வாயில் இருந்து வாங்காது அவளே யோசிக்க, 


"வந்தேன் தான். பட் அர்ஜென்ட் கால் வந்தது. பேசிட்டேன் நடந்தேன். ரொம்ப தூரம் வந்திட்டேன் போல. அந்த முள்ளு காட்டுக்குள்ள வழி சரியல்ல தெரியல.‌ அதா மண்ணு ரோட்ட பிடிச்சி இங்க வந்து உக்காந்திட்டேன்." எனப் பொய்யை இலகுவாக பேசிய தீஷித் மீதி சந்தேகம் இல்ல அவளுக்கு. 


"கால் பண்ணிருக்கலாம்ல. வந்து வழி காட்டிருப்போன். " 


'இவளே இந்த ஊருக்கு புதுசாம். இதுல ஊரையே அலசி ஆராஞ்ச மாதிரி பேசுறா பாரேன். ' தீஷித் மைண்ட் வாய்ஸ்.


"கொஞ்சம் வேலை இருந்தது. நான் என்னோட கடமைல கண்ணும் கருத்துமாக இருப்பேன். அதா காணாம  போன உன் ஃப்ரெண்டோட ஃபோன தேடனும் வந்தேன்.‌" என்க,


"நிஜமாவா! எனக்கு உதவி பண்ண செல் போன் தேடி வந்திருக்கிங்க. " என்றவள் அவனை அருகில் வருமாறு இரு விரல்களை அசைத்து அழைக்க, 


அவன் 'நிஜமாவே பக்கத்துல கூப்பிடுறாளா! என்னையா?' எனச் சந்தேகத்துடன் யாராது பார்க்கிறார்களா எனத் தலையை திரும்பி திரும்பிப் பார்த்து விட்டு, அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் கை பிடியில் இரு கரத்தையும் வைத்து குனிந்து நிற்க, அவனின் காதில். 


"நம்புற மாதிரி கதைய யோசிச்சி சொல்ல மாட்டிங்களா!" என ரகசியம் போல் பேச, தீஷித்தின் உதடுகள் தானாக விரிந்து சிரிப்பை வர வைத்தது. 


" சொல்லுங்க. உண்மையான காரணம் என்ன?" 


"நான் பொய் சொல்றேன்னு உனக்கு தெரியுதா?"


"ம்... தெரியுது.‌"


"எப்படி?"


"ஐ கேன் ஃபீல் இட். "


"ஓ… அப்ப என்னைப் பத்தி கூட உனக்கு ஃபீலிங் வருதுன்னு சொல்லு. " என்றான் குறும்பாக. 


"ஸார் ஏதோ ட்ரெய்‌‌ பண்றிங்க. பட் அதுக்கு வாய்ப்பில்ல. " என்றபடி அவனின் தோள் தொட்டு தள்ளி விட்டு விட்டு சிரித்துக் கொண்டே எழந்து நடக்க,


"மிஸ்டர் மதுசூதனன் வந்திருக்காராமே. மேரேஜ் இன்விடேஷன் குடுக்க.” எனத் தீஷித்  செல்ல, சட்டென நின்றாள்.


"ம்ச்... யாரு வந்து என்ன குடுத்தா எனக்கு என்ன!" என்ற போது பைரவியின் கண்கள் கலங்கி இருந்தன. இப்போது விழவா பிறகு விழவா எனக் கேட்ட படி விழியின் ஓரத்தில் நீர் நிற்க, 


"ஸாரி. நான் உன்ன காயப்படுத்தனும்னு சொல்லல. " என்றவன் நெருங்கி வந்து அவளின் கரம் பற்றி, அவளின் விரலாலேயே திரண்டு நின்ற கண்ணீரைத் துடைத்தெறிந்தான். 


"டேக் இட் ஈஸி டாம். நம்ம லைஃப்ல நடந்த எல்லாத்தையும் மறைக்கவும் மறக்கவும் காலம் நமக்கு கத்து குடுக்கும். சோ... அது கூடவே போ. மூவ் ஆன். முடிஞ்சி போனத விட்டு வெளில வர முயற்சி பண்ணு. "


"என்னால முடியும்னு தோனல தீஷ். " என்றவள் எழுந்து நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டு ஆயாசயாக சாய்ந்து கொள்ள, அவளின் முன் மண்டியிடவன். 


"நீ அவன அவ்ளோ லவ் பண்றியா டாம். இப்பவும்." என்றவனின் குரலில் இருந்த மாறுபாட்டைக் கவனிக்கத் தவறினாள். எளிதாக கேட்க முடிந்த கேள்விக்கான பதிலை எதிர்கொள்ளும் திடம் தான் அவனிடம் இல்லை.


" எஸ்…. எப்ப எந்த நொடின்னு தெரியாது. பாத்த உடனே வந்த க்ரெஸ். லவ்வா மாறி பிரிக்கவே முடியாத பிரிக்கவும் விரும்பாத ஒரு உறவா மாறிடுச்சி. " என்றாள் மதுவின் நினைவுகளோடு.


"பட், உனக்கு இருக்குற லவ். மிஸ்டர் மதுசூதனனுக்கும் இருக்கணும்ல?" என இழுக்க,


"இருக்கு. கண்டிப்பா இருக்கு. அத அவரு லவ்வு தான்னு உணரல. அவ்ளோ தான். "


"பட் இனி அவெ வேற ஒருத்தியோட…"


"கண்டிப்பா நடக்காது. அவனே நிப்பாட்டிடுவான். அப்படி இல்லன்னா நான் அவன கொன்னுடுவேன். சரியா தாலிய கைல எடுக்குற நேரம் குறி பாத்து கைல சுட்டுடுவேன். முடமா ஆனாலும் பரவா இல்ல. அவன வச்சி நான் சோறு போட்டு காப்பாத்திக்கிறேன். "


"கைல துப்பாக்கி குண்டடி வாங்கி யாரும் முடமா மாற மாட்டாங்க டாம். "


"அப்ப ஆள் விட்டு அடிக்கிறேன். டிப்பார்ட்மெண்ட்ல சொல்லி அவன தூக்கி லாக்கப்ல வச்சி கைய கால கட்டிப் போட்டு அடி அடின்னு அடிக்க வச்சி கால உடச்சி. என் வீட்டுக்கு ம்ச்… என்னோட அப்பார்ட்மெண்டுக்கு தூக்கிட்டு போய் வளக்குறேன். "


"நாய்‌‌ குட்டிய வளக்குற மாதிரி சொல்ற. " 


"கண்டிப்பா அவெ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க மேட ஏற மாட்டான். ஏறவும் விட மாட்டேன்.‌" என ஆவேசமாக பேச, தீஷித் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான். 


"உன்ன வேண்டாம் வேண்டாம் சொல்றவன ஏந்தா விரட்டி விரட்டி போய் விரும்புறியோ.‌ " என்றான். 


"முன்ன பின்னு லவ் பண்ணிருந்தா தெரிஞ்சிருக்கும். காதலோட அரும பெறும என்னென்னு. "


"ஏன் இல்ல நானும் பண்ணிருக்கேன்.‌ இப்பயும் பண்ணிட்டு தான் இருக்கேன். "


"யார மமதி பிருந்தா யாழ்முகியையா!"


"அவெங்கெல்லாம் பப்பி லவ். பட் இது ரியல். ட்ரூ... அவளுக்காக எதையும் இழக்க, எதுவும் செய்ய தயாரா இருக்குற அன்கண்டிஷ்னல்.‌ " என பைரவியின் விழிகளைப் பார்த்தபடி கூறியவனால், காதல் என்ற  வார்த்தையை மட்டும் சொல்ல முடியவில்லை. 


காதலிக்கிறான் தான். அவளை‌த் தவிர வேறு யாரையும் தன் மனத்தில் இத்தனை நெருக்கமாக இருந்தது இல்ல. உயிர் உனக்கானது என்று சொல்லி துடிக்கும் இதயம் பைரவியின் விழிகளிலும் அண்மையிலும் தடம் புரண்டு துடிப்பதை அவன் மட்டுமே அறிவான். ஆனால் காதல் லவ் என்ற வார்த்தையை நேருக்கு நேராக நின்று சொல்லும் துணிவு அவனிடம் பிறக்கவில்லை. ஏதோ ஒன்று தடுத்து.‌ என்னதது என்று தான் புரியவில்லை.


இருவரின் மோன நிலையைக் கலைக்க வந்தது அந்த அலைபேசியின் அழைப்பு. தீஷித்தின் ஃபோன் தான். பேசி முடித்தவன்,


"ராக்கி, கோயிலுக்கு வரச் சொன்னான். கம்‌.. " என்று நடக்க,


"நான் வரல.‌ நீங்க மட்டும் போங்க. " என என்றாள் சிறிய குரலில். 


"உன் ஆள பக்கத்துல பாக்க பயம்மா. " என்றான் கேலியாக,


"இந்த பைரவி யாருக்கும் பயப்பட மாட்டா. அவெந்தா என்னைப் பாத்து பயப்படணும். போய் கேட்டு பாருங்க. நான் யாருன்னு கத கதையா சொல்வான். "


"அப்ப வா. நீயே கேளு. அவன நேருக்கு நேரா ஃபேஸ் பண்ணு. " 


"என்னை உசுப்பி விட்டு வேடிக்க பாக்கப் போறிங்களா. "


"ச்சச்ச… உன்ன பிரியணும்னு முடிவெடுத்ததுக்கு அப்றமும் மிஸ்டர் மதுசூதனனால உன்ன தைரியமா எதிர்கொள்ள முடிஞ்சது. உன்ன பாத்து பயப்படல. நீ இல்லாம என்னால இருக்க முடியுங்கிற திமிர்னு கூட சொல்லலாம் அத. அதே திமிரு உனக்கும் இருக்கில்ல. ஏன்னா நல்ல லைஃப்ப மிஸ் பண்ண அவனுக்கு தான் இழப்பு. உனக்கு இல்ல. அப்ப பயம் யாருக்கும் வரணும்." என அவளை உசுப்பேற்றி அழைத்துச் சென்றான் தீஷித்.


'இதோ வர்றேன். அந்த தயிர் சாதத்த தெறிச்சி ஓட விட.' என்ற முடிவுடன் அணிந்திருந்த சுடிதாரின் முழக்கையை மடித்துக் கொண்டு வீர நடை போட்டாள் பைரவி. 


வீரப்பாய் நடந்து வந்தாலும் மதுவைப் பார்க்கும் போது மனம் அனைத்தையும் மறந்து மயங்கச் செய்தது அவனிடத்தே. தன் பிரிய நிறமான வெள்ளை சர்ட்டில் நேவி ப்ளூ கலர் ஜாக்கெட் மற்றும் பார்மல் ஃபேண்ட்டுடன், அவனுக்கு என்று போடப்பட்ட பிரத்தேக நாற்காலியில் அமர்ந்திருந்தான் மதுசூதனன். 


'இவெ பெரிய சீமைக்கி ராஜா. தரையில உக்கார மாட்டானோ. ஊர் சனமே அதுல தான உக்காந்திருக்கு. இவனுக்கு மட்டும் என்ன ராஜா உபச்சாரம். ' என நெடித்துக் கொண்டே வந்தாள் பைரவி. 


பைரவி சொன்னது போல் அவனுக்கு ராஜா மரியாதை இல்லை என்றாலும் சிறப்பான கவனிப்பு இருந்தது. ஏனெனில் மது ராக்கியின் நண்பன். ‘வீட்டுக்கு வரப்போற மருமகனோட தோஸ்த்த சரியா கவனிக்கலன்னு மாப்ள முறுக்கிக்கிட்டு போய்ட்டா!’ என்ற பயத்தில் அனைத்தையும் செய்ய உத்தரவிட்டார் அரசி. 


மாப்பிள்ளையை வேறு தமிழரசிக்குப பிடித்து விட்டது. ‘நம்ம‌ ராக்கி பாய பிடிக்காதவங்க யாராது இருப்பாங்களா!’ 


தன் வீட்டில் சிறு தூசி இருந்தால் கூட பிடிக்காது அவனுக்கு. உடனே துடைத்து எடுத்து விடச் சொல்பவன் எப்படி இந்தப் புழுதி மேட்டில் அமர்வான். அதனால் தான் நாற்காலி. பிரேசரைக் கலட்டி வைத்திருந்தவனின் வெள்ளை நிற சட்டை வியர்வை ஊற்றெடுத்ததால் உடலை ஒட்டி கட்டுமஸ்த்தான அவனின் தேகத்தை வெட்ட வெளிச்சமாக காட்டியது. ஏசி காற்றில் வளர்ந்தவனுக்கு மதுரை வெயில் சேர வில்லை போலும். 


அவனும் பைரவியைத் தான் பார்த்துக் கொண்டே வந்தான். அனார்கலி மாடல் சுடிதாரில் அழகோவியமாய் வந்து கொண்டிருந்தாள். இருவரின் பார்வையும் மற்றொருவரை விட்டு நகராது இருக்க. 


"பாத இந்த பக்கம் இருக்கு டாம். " என அவளைப் பத்திரமாக அழைத்து வந்து தீஷித் தான். தன் மனைவியின் பக்கத்தில் அவனைக் கண்டதும் முகம் கடுக்க,


"நீ அவனுக்கா ஃபோன் பண்ண." என மது பற்களைக் கடித்தபடி ராக்கியிடம் கேட்டான். 


"ஆமா மச்சான். இன்றைய நடப்புல பைரவி மேல் அக்கறை வச்ச ஒரே ஜீவன் அவெ மட்டும் தான். உன்ன பாத்ததும் தலதெறிக்க ஓடுனவ பின்னாடியே போய் பத்திரமா பாத்துக்கிற மனசு இருக்கே. அது அவனுக்கு மட்டும் தான் இருக்கு. வேற யாருக்கும் இல்ல. முக்கியமா உனக்கு இல்ல. " என்ற ராக்கியை மது முறைக்க,


" இருந்திருந்தா ஏன் டைவர்ஸ் நடக்கப் போது.‌ " என முணுமுணுத்தான் ராக்கி.


ஒரு பக்கம் நண்பன். மறுபக்கம் தீஷித். இன்னொரு பக்கம் மனைவி. அடுத்த பக்கம் சுட்டெரிக்கும் சூரிய வெயில். இப்படி எல்லா பக்கமும் சேர்ந்து சூட்டைக் கிளப்ப, மது தன்னை யாரோ தூக்கி மைக்ரோவேவ் ஓவனில் வைத்தது போல் உணர்ந்தான். 


அவனின் கடுகடுத்த முகத்தைப் பார்த்தவள், அதை அதிகப்படுத்த என நிறைய செய்தாள். அதில் ஒன்று பஞ்சு மிட்டாய் வாங்கியது.‌


"உனக்கு அதுல கலந்திருக்குற ingredients என்னென்னன்னு தெரியுமா? அது ஏன் பிங்க் கலர்ல இருக்குனு தெரியுமா."  


"என்ன மாமா நீங்க ஆசைக்கு ஒன்னு வாங்கிருக்கேன் அதுக்கு போய் இவ்ளோ பெருசா பேசுறிங்க. விடுங்க." என்றவள் வாங்கி தரமாட்டேன் என்ற மதுவிடம் அடம்பிடித்து பஞ்சு மிட்டாய் வாங்கி சுவைத்தபடி நடக்க, அவன் அவளுக்கு பாடம் நடத்த தொடங்கினான்.


" அது ஃபுல்லா சுகர் பைரவி. கலருக்காக இதுல சேக்கிற கெமிக்கல்னால உன்னோட உடம்புல கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கு. "


"ஒரு பஞ்சு மிட்டாய் சாப்பிட்டா கேன்சர் வருமா. சும்மா இரு மாமா. " என்றாலும் வாங்கித் தந்த பஞ்சு மிட்டாயை அவளே கீழே போடும் அளவுக்கு பக்கம் பக்கமாக புரியாத படி அறிவியல் வகுப்பெடுப்பான்.


"ஐயா சாமி. இனி நான் பஞ்சு மிட்டாயே என் வாழ்நாள்ள சாப்பிட மாட்டேன். போதும்மா. " எனக் கரம் குவித்து பிறகே அமைதியாவான். 


இன்றோ திருவிழா... பஞ்சு மிட்டாய் இல்லாத திருவிழாவா! வாங்கிக்கொண்டாள். ஒன்றல்ல இரண்டல்ல அங்கு பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்த அத்தனை பேரிடமும் மொத்தமாக அனைத்தையும் வாங்கி நாலைந்தை பிரித்து தின்றபடி அவனின் எதிரில் இருந்த கல்லில் அமர்ந்தாள் பைரவி. 


மது பைரவியை மட்டுமல்லாது அதை வாங்கித் தந்த தீஷித்துடன் சேர்த்து ராக்கியையும் முறைத்தான். 


சாரு, "பாய்... ஏன் அண்ணா அடிக்கடி உங்கள ஆசையா லுக்கு விடுறாரு. " 


"இது ஆசையா?"


"ஆமா பாய். எப்ப இருந்து இந்த லுக்கு. "


"இன்னைக்கி காலை பிறந்தததும்மா அது. " என்றான் சோகமாக. 


"என்னாச்சி பாய். தெளிவா சொல்லுங்க. "


"அன்னைக்கி நான் பைரவிட்ட பேசுன பேச்ச யாரோ ரெக்கார்டு பண்ணி இந்த பயில்வான இங்க வர வச்சிருக்காங்க. அது யாருன்னு மட்டும் எனக்கு தெரியட்டும். அப்றம் இருக்கு அவனுக்கு. ஸ்… ஆ.  " என ராக்கி மது கொடுத்த அடியில் வலி தாங்காது கத்த, 


சாரு ப்ளாஸ் பேக் கேட்டாள்.


யார் நம்ம பாய போட்டுக்குடுத்ததுன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க. 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...