முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

பனி 85


 

அத்தியாயம்: 85



ராக்கி‍, திருவிழா எனப் பாவாடை தாவணியில் பவ்யமாக உலாவிய தன் காதல் கண்மணி தாமரையை விழிகளால் சிவக்க செய்ய, குறுக்கே நந்தி போல் மதுவிடம் இருந்து அழைப்பு வந்தது. 


"ஐய்யோ இவனா! இவென்ட்ட பேசுனா லவ் மூடு மாறிடுமே. அப்றமா நேரம் இருந்தா பேசிக்கிவோம். " என அட்டன் செய்யாது இருக்க, மது விடாது அழைத்தான்.‌


" எடுக்கலன்னா விட வேண்டியது தான. இவனும் இவெ பொண்டாட்டி மாறியே பண்றான்.  சவகாச தோஷம். ச்ச… " என அட்டன் செய்தவன் பேசாது சட்டை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொள்ள,


"மரியாதையாத ஃபோன எடுத்து காதுல வை‌ டா." என்ற மதுவின் குரல் நேரிலேயே கேட்டது. 


"போன்ல பேசுறது இவ்ளோ க்ளியரா கேக்கது. டெக்னாலஜி இம்ப்ரூமெண்ட் இஸ் வெரி மச் யா. " என நினைத்தவன் நிமிர்ந்து பார்க்க, அங்கு மது கையில் அரிவாளுடன் நிற்பது போல் விரைப்போடு நின்றான். 


"மச்சான். " எனக் குரல் எழுப்பாது இதழசைக்க, அவன் ஃபோனை காதில் வைக்கும் படி சைகை செய்தான். ராக்கி, மது சொன்னதை வேகமாக செய்ய,


" பிள்ளையார் கோயிலுக்கு பின்னாடி வா. " எனக் கட்டளையிட்டான். 


"ஐய்யோ எதுக்கு கூப்பிடுறான்னு தெரியலயே. இவெ ஏன் இங்க வந்தான். பெங்களூர் போகப்போறதா சொன்னத நம்பித்தான அவ்ளே பெரிய ஷீனப் போட்டேன். இவெ பொண்டாட்டிக்கி நாம மாப்ள பாக்குறது தெரிஞ்சிருக்குமோ. தெரிஞ்சிருக்காது. எல்லாம் நம்மாளுங்க தான. யாரும் போட்டு குடுத்திருக்க ‌மாட்டாங்க. நாமலா பயந்து நம்மல காட்டி குடுத்திடக் கூடாது. " எனப் புலம்பியபடி வந்து நண்பனைக் குசலம் விசாரித்து ஆவலுடன், கட்டி அணைத்து ராக்கி வரவேற்க, மது அணைக்கவில்லை. மாறாக அன்று அவன் பைரவியிடம் பேசியதை ஒலிபரப்பு செய்தான். ராக்கி மாட்டிக் கொண்டோமோ எனத் திருதிருவென முழித்தவன் சமாளிப்போம், எனச் சமாளிக்கத் தொடங்கினான்.


"என்னடா இதெல்லாம். " எனக் கோபமாக கேட்ட‌ மதுவிடம்,


"யாரு மச்சி இப்படில்லாம் பேசுனது. உன்னையும் பைரவியையும் பிரிக்க ‌சதி வேலை நடக்குது போல. கவனமா இருக்கணும் மச்சான். இல்லன்னா அந்த தீஷித் கொத்திட்டு போய்டுவான். " என இலவச ஆலோசனை வழங்கினான்.


" அப்ப இத‌ நீ பேசல?"


"எது நான் பேசுனேனா! சத்தியமா சொல்றேன் மச்சான் இது நான் இல்ல. யாரோ டப்பிங்க குடுத்திருக்காங்க.‌ என்ன மாதிரியே பேச ட்ரெய் பண்ணிருக்காங்க. பரவாயில்லை ஒரிஜினல் மாதினி இல்லன்னாலும் நல்லாத்தா இருக்கு. குட் ட்ரெய். "  என அவன் குரலை ரசிக்க, மது பாய்ந்து அடிக்கத் தொடங்கி விட்டான். பின் ராக்கியைப் பலியாடாக்கி கூட்டி வந்தததைத் தான் நாம் பார்த்தோமே. 


முதல் வேளையாக பாய் அந்தச் சம்பவம் நடந்த போது அங்கு கூடியிருந்த அனைவரின் மொபைல் ஃபோனையும் பரிசோதித்தான். 


" எனக்கு என்னமோ உம்‌மேல தான் சந்தேகமா இருக்கு. " எனப் பாண்டியின் ஃபோனை பிடுங்கினான்.


"என்ன மச்சான்! நான் போய் உங்கள காட்டி குடுப்போனா? " என்ற பாண்டியின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காது சாரு, அரசி என அனைவருடையதையும் சோதித்து விட்டான். ஏன் பைரவியின் ஃபோன் சாருவிடம் இருந்தது. 'அவளே கூட செஞ்சிருக்கலாம். ' என அதைக் கூட விட்டு வைக்க வில்லை. 


"யாருமே போட்டுக் குடுக்கலன்னா எப்படி தெரிஞ்சிருக்கும். " என யோசித்தவன்‌ முன் தாமரை பட்டாள். அவளுடையதை இன்னும் செக் செய்யவில்லை. 


"ச்சச்ச… அவா நம்ம ஆருயிர் காதலி. வருங்கால லவ்வபுல் மனைவி. அவளோட ஃபோன வாங்கி நோண்டி பாக்குறது தவறான செயல். "


"ஒருவேள அவ தான் அந்த கல்ப்ரேட்டா இருக்குமோ?" என மனம் முன்னுக்கு பின் முரணாக பேச, எதற்கு வம்பு போய் கேட்டுத்தான் பார்போமே! என்றவன் தாமரையிடம், 


" தாமரை உன்னோட… கொஞ்சம். " என ஆரம்பிக்கும் போது,


"என்ன தேடுறீங்கன்னு எனக்கு தெரியும். நீ தேடுறது வேஸ்ட். ஏன்னா…"


"நீ இல்லன்னு சொல்ல போற. சரியா. "


"இல்ல. நாந்தா அத ரெக்கார்ட் பண்ணி அண்ணாக்கு அனுப்பி விட்டது. " என்றாள் தாமரை.


'அடிப்பாவி. ஏன்…. ஏன் இந்தக் கொல வெறி.‌' என்பது போல் மற்றவர்கள் பார்க்க,


"எனக்கு பைரவி அக்காக்கு மது அண்ணன விட்டுட்டு வேற ஒருத்தர கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறது பிடிக்கல. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் ஜோடியா இருக்கணும். நீங்க பைரவி அக்காவ வேற கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி சொன்னது எனக்கு பிடிக்கல. அதா போட்டு குடுத்தேன்." என்று அசால்ட்டாகச் சொல்ல,


"அவள அக்காங்கிற. இவன அண்ணேங்கிற. என்னதாம்ம உனக்கு வேணும். " என்ற ராக்கியை முறைத்தவள்,


"என்னோட சப்போர்ட் முழுக்க முழுக்க மது அண்ணாக்கு மட்டும் தான். நீங்க நினைக்கிறத நான் நடக்க விட மாட்டேன். " என்று விட்டு சென்றாள்‌.


"ஐய்யோ நானும் அப்படி நினைக்கல செல்லம். ரெண்டு பேரும் சேரணும்னு தான் நினைக்கிறேன். நம்பு... இத நாரதர் கலகமா நினைச்சிக்க. கண்டிப்பா நன்மைல முடியும் செல்லம். " எனக் கெஞ்சியபடி பின்னே சென்றான் ராக்கி. 


இங்கு மது பைரவி கண்ணிற்கு தெரிந்ததும் வேகமா அவளின் அருகில் சென்று பேச முயல, 


"ஹாய் மிஸ்டர் மதுசூதனன். வாட் ஏ ப்ளஷன்ட சர்ப்ரைஸ். நீங்க எப்ப இங்க வந்திங்க. உங்க கண் பார்வையும் காலடியும் பட இந்த ஊரும் ஊர் ஜனமும் குடுத்து வச்சிருந்திருக்கணும். " என நக்கலாக சொல்லி வரவேற்றாள் பைரவி.


" I want to talk to you. " என்றான் அழுத்தமாக.‌


"பேசணுமா!! ம்… பேசுங்க. " என இரு கரத்தையும் கட்டிக் கொண்டு நிற்க,


"தனியா. " என்றவனின் பார்வை தீஷித்தின் மீது இருந்தது. 


"உங்கள நம்பிலாம் தனியா வர முடியாது. இவரு என்னோட தோஸ்த்து தான். இங்கயே பேச முடிஞ்சா பேசுங்க. இல்லன்னா. நான் ரொம்ப பிஸி. " என attitude காட்டினாள்.


இந்த தீஷித்தாவது மதுவின் வருகையை அறிந்து கணவன் மனைவிக்கு என இடைவெளி கொடுத்து விலகி சென்றிருக்கலாம். ஆனால் அவனோ. 'அதா டைவர்ஸ் ஆகிடுச்சே. இன்னும் எதுக்கு கணவன் மனைவின்னுட்டு.. பிரிஞ்சவங்க பிரிஞ்சதாவே இருக்கட்டும். எல்லாம் முடிஞ்சதுக்கு அப்படி என்னத்த பேசப்போறான்னு நானும் பாக்குறேன் சாரி கேக்குறேன்.‌' என்ற ரீதியில் நின்றான்.


கடுப்பான மது பைரவியின் கரம் பற்றி இழுத்துச் சென்றான். அதை தீஷித் தடுக்க முடியாது போனது. 'நான் பாத்துக்கிறேன். யூ டோண்ட் வரி. ' என தீஷித்திடம் ஜாடை காட்டிவிட்டு, மது இழுத்த வேகத்தில் நடந்தாள். 


யாரின் தொந்தரவும் இல்லாத ஒரு இடமாய் பார்த்து நின்றவன். "பைரவி நான் உங்கிட்ட பேசணும். " 


"எத பத்தி ரூபி கூட நடந்த எங்கேஜ்மெண்ட்ட பத்தியா. ஸாரி ஸார் நான் அதுக்கான உங்க தன்னிலை விளக்கத்த கேக்க தயாரா இல்ல. " என நடக்க, அவளின் கரம் பற்றி இழுத்தவன் அவளை மரத்தில் சாய்த்து நிறுத்தி, எங்கும் செல்ல விட மாட்டேன் என்பது போல் கரங்களால் அணை போட்டு அவளை முகம் நோக்கி குனிந்தான்.


" ஆனா நான் என்னோட சூழ்நிலையா சொல்லித்தா ஆகணும். நீ கேட்டுத்தா ஆகணும். " என உறும்பினான்.அவள் காதுகளை கரத்தால் மூடிக் கொண்டு,


"கேக்க மாட்டேன். கேக்க மாட்டேன். நீங்க சொல்ல வர்ற எதையும் நான் கேக்க மாட்டேன். " எனத் திரும்ப திரும்ப சொல்ல, கடுப்பான மது, அவளின் கரத்தை கீழே இறக்கி,


"பைரவி, லிசன் டூ மீ. " எனக் கத்தினான்


"நீ கேட்டியா!" என அவனுக்கு நிகராக கத்த, மது அமைதியானான். 


"என்னோட சைடு நியாயத்த நீ கேட்டியா. எவ்ளோ ட்ரெய் பண்ணேன். ஒரு பத்து நிமிஷம் தா, என்னோட சுச்சிவேஷன உங்கிட்ட புரிய வைக்கன்னு. எதையும் கேக்கல. தப்பு பண்ணது நாந்தான்னு தீர்ப்பு எழுதி, நீட்டுன உடனேயே கையெழுத்து போட்டு டைவர்ஸ்க்கு அப்ளே பண்ணிட்ட. அந்த கோர்ட்டும் நமக்கு டைவர்ஸ் குடுத்திடுச்சி. அவ்ளோ தான். உங்களுக்கு உரிம இல்லாத ஒருத்தி கிட்ட உங்கள புரிய வைக்கணும் அவசியம் ஏதும் இல்ல. " என்றவளின் கண்கள் சிவந்து இருந்தன. 


"கண்ணால பாக்குறது பொய். காதல கேக்குறதும் பொய். என்ன நடந்தது யார் மேல தப்பு இருக்குன்னு விசாரிச்சித்து தான் முடிவுக்கு வரணும்னு பழ மொழி கூட இருக்கு. ஆனா நீங்க.‌ கண்ணால பாத்த ஒன்ன நம்பி. உந்தங்கச்சி‌ சொன்னத கேட்டு நாலு வர்ஷமா உங்கூட குடும்பம் நடத்துன எங்கிட்ட எதப்பத்தியும் கேக்கலைல. நானா சொல்ல வந்தாலும் அதுக்கும் நீங்க விடல. 


இப்ப நான் மட்டும் எப்படி கேப்பேன். உங்களுக்கு எங்கேஜ்மெண்ட்டுன்னு அனோன்ஸ் பண்ணத பாத்தேன், கேட்டேன். கல்யாணம் முடிவாகிடுச்சின்னு உங்க தங்கச்சி தான் எனக்கு பத்திரிக்கை அனுப்பிருக்கா. இதுக்கு மேல என்ன விளக்கத்த உங்களால தர முடியும். போங்க.‌.. போய் அந்த...‌ அந்த ரூபி. கூட.. " என்ற போது நெஞ்சடைத்துக் கொண்டு வந்தது, 


மதுவின் வாழ்க்கையில் இன்னொரு பெண்ணா. அவன் பக்கத்தில் தன்னுடைய இடத்தில் வேறு ஒருத்தி என்ற நினைப்பு அவளின் இதயத்தில் இமய மலையைத் தூக்கி வைத்தது போல் அழுத்தம் தர, பாரம் தாங்காது நெஞ்ச பிடித்தபடி தரையில் அமர்ந்து அழுதாள். மதுசூதனன் அவளைத் தூக்கி தன்னோடு அணைத்துக் கொண்டான், இறுக்கமாக. விலக அனுமதியேன் என்று சொல்லும் அளவுக்கு காற்றைக் கூட ஊடுருவ விடாது நெஞ்சோடு சோர்த்தணைக்க, பைரவி அழுது தீர்த்தாள். 


"டெடி… அது நிஜம் கிடையாது டெடி. எம்மனசுல வைஃப்லன்னு மட்டுமில்ல  எல்லாமுமா இருக்குற ஒரே பொண்ணு நீ தான். நீ மட்டும் தான் டி. ஐ லவ் யூ டெடி. " என்றவன் தன் இதழை மங்கையின் வென்கழுத்தில் ஒற்றி எடுக்க, அவனைத் தள்ளி விட்டு விட்டு விலகி நின்றாள் பைரவி. 


லவ் யூ… இந்த வார்த்தையை எத்தனை முறை கேட்டிருப்பாள் அவனிடம். "என்ன லவ் பண்றேன்னு சொல்லு மாமா. " என. அப்போதெல்லாம் எனக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை. அதெல்லாம் வெறும் வார்த்தை என்றவனுக்கு இப்போது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை. 


"பட், ஐ ஹேட் யூ. எனக்கு நீங்க வேண்டாம். எனக்கு நீங்க வேண்டாம். ஐ ஹேட் யூ. " எனக் கத்திவள் நடக்கத் தொடங்க. அவளை இழுத்து தன் மார்மேல போட்டுக் கொண்டவன் இதற்கு முன் பைரவி கேட்ட பத்து‌ நிமிடங்களை யாசித்தான். ம்ஹிம்... பத்து நிமிடம் என்ன பத்து நொடிகள் கூட தர மாட்டேன் என்பது போல் அவள் திமிர, 


"ஏய் யார்ரா அது! பொட்டப்புள்ளைய தனியா தள்ளிட்டு வந்து வம்பு பண்றது. " எனக் குரல் கேட்டது. 


அந்த ஊர் இளைஞர்கள் பலர் ஒன்று கூடி வந்திருந்தனர்.‌‌ தீஷித் தான் அனுப்பி வைத்தான் அது வேறு விசயம். அவர்கள் பைரவியைப் பார்த்து, 


" நீ கண்ணாயிரம் வீட்டுக்கு வந்த விருந்தாளி தான. " என வினவ, அவள் ஆம் என தலையசைத்தாள். 


"ஏய் யாருடா நீ? எங்க ஊருக்கு விருந்தாளியா வந்த பிள்ளைட்ட வம்பு பண்ணிட்டு இருக்க. " என வேட்டியை மடித்து கட்டி மதுவை மிரட்ட, மது விரைப்பாய் நின்று,


" இது உங்களுக்கு தேவையில்லாத விசயம். " என்றான்.


"எது டா தேவையில்லாதது. நீங்க ஒரு பொண்ண தள்ளிட்டு வந்து கட்டிபிடிச்சிட்டு நிப்பிங்க. நாங்க அந்த கேட்டா தேவையில்லாததுன்னு சொல்வியோ. "


" இப்பயும் உங்களுக்கு தேவயில்லாதது தான்.‌ இது என் பொண்டாட்டி.   "


"பொண்டாட்டினா பக்கத்துல சாமிய வச்சிட்டு கசமூசா பண்ணுவியா." என்றவர்களை மது முறைக்க, 


"அந்த புள்ள கத்துனத கேட்டா நம்புற மாதிரி இல்ல. " என்றவர்கள் பைரவியிடம் திரும்பி, " இவெ உனக்கு புருஷனா?" என்க,


"இல்ல. ஏதோ தனியா பேசணும்னு சொல்லி இழுத்திட்டு வந்து தப்பு தப்பா நடந்துக்கிறான். நல்லவேளை வந்திங்க. நன்றி. " என்றுவிட்டு கண்டுகொள்ளாது ஓடிச் சென்றே விட்டாள். 


'அடிப்பாவி.‌‌ கட்டுன புருஷன கண்டவன்னு சொல்லி, காட்டானுங்க கிட்ட மாட்டி விட்டுட்டு இப்படி ஓடுறியே. ' நம்ம மைண்ட் வாய்ஸ். 


" ஏய் பொய்யா சொல்ற.. எந்த ஊர்ரா நீ. " எனக் கேட்டு சுத்து போட்டு விசாரிக்க, அங்கு தேவையற்று ஒரு சண்டை காட்சி வந்தது. பாண்டி தான் வந்து அவர்களை விலக்கி விட்டு, மதுவை அழைத்துக் கொண்டு வீடு வந்தான். 


"பொட்டபிள்ளைக்கி இவ்வளவு அதுப்பு ஆவாது. கட்டுன புருஷன்னு கொஞ்சமாச்சும் மருவாத வேணா. இப்படி அடிக்க விட்டு வேடிக்கை பாத்திட்டு நின்னிருக்க. " எனத் தமிழரசி திட்ட, 


" வேடிக்கலாம் பாக்கல. நடந்து வந்திட்டேன். " என்றவளைப் பக்கத்தில் இருந்த துணி மூட்டையால் சாரு அடிக்க, தாமரையும் சேர்ந்து கொண்டாள்.


"ம்ச்... இப்ப எதுக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிக்கிறீங்க. "


"அடிக்காம. எதுக்குடி அப்படி சொன்ன. உங்கிட்ட தப்பா நடந்துக்க பாத்ததா சொல்லி ஊர்கார பயளுக கிட்ட அடி வாங்கி குடுத்திருக்க. ஏன்டி பொய் சொல்றதுக்கு அளவில்லையா.‌"


"நான் எங்க பொய் சொன்னேன். உண்மையத்தா சொன்னேன். " என்றவளை இருவரும் முறைத்தனர்.


" பின்ன விரும்பமில்லாத பொண்ண கையப்பிடிச்சி இழுத்திட்டு போய் கட்டி பிடிச்சி முத்தம் குடுத்தா வேற எப்படி சொல்றது. அட்டம்டு ரேப்ன்னு தான் சொல்லணும். " 


"அடிச்சி பல்ல கலட்டீடுவேன். நீயும் தான் அண்ணா மேல விழுந்து விழுந்து பழகுன. விரும்பமில்லன்னாலும் அண்ணா உன்ன மாதிரி வெளியளுங்க முன்னாடி அசிங்கப்படுத்தல. " என்றாள் சாரு.


‘அதுக்காக அவனுக்கு அவார்டு குடுக்கச் சொல்றீயா.’ என்பது போல் அவள் அமர்ந்திருக்க,


"கரெக்ட்டா சொன்னிங்க மதினி. உங்கள காட்டிலும் அண்ணா ரொம்ப நல்லவரு. அதுனால தான் நீங்க பண்ற எல்லா சேட்டையையும் பொறுத்திட்டு உங்கள தேடி வந்திருக்காரு. அதுக்காவாது நீங்க அவருக்கு மதிப்பு குடுத்திருக்கணும். " என்றாள் தாமரை. 


இருவரும் மாற்றி மாற்றி பைரவியைத் திட்ட, அங்கு ராக்கியும் திட்டிக் கொண்டு தான் இருந்தான் பைரவியைத் தான். 


"பாவி மக...‌ எம்மச்சான ஆளு விட்டு அடிக்க வச்சிருக்கா. இவ போலிஸ்ஸா இல்ல கூலிப்பட தலைவியான்னு தெரியல. வலிக்கிதா மச்சி. " என அடிபட்ட மதுவின் காயத்திற்கு மருந்திட்டான். அன்று நெற்றியில் வடிந்த சிறு ரத்தத்திற்கே துடிப்போனவள். இன்று ஒரு லிட்டர் ரத்தம் போகும் அளவுக்கு அடிவாங்க விட்டுட்டு சென்று விட்டாள். அவளின் பேச்சும் குரலும் காதை விட்டு செல்லவே இல்லை. 


"நீ‌ கேட்டியா?" என இடத்திலேயே நிற்க, மது மனதிற்குள் மருகிக் கொண்டிருந்தான். 


"இவ இப்படி ஒரு கல் நெஞ்சக்காரியா மாறுவான்னு நான் நினைக்கவே இல்ல." ராக்கி தான் புலம்பிக் கொண்டிருந்தான்.‌ 


"அப்படி உங்களுக்குள்ள என்ன தாண்டா நடந்தது. தர்மடி வாங்கி குடுத்திருக்கா. " என்க, 


" மது அண்ணா மேல உனக்கு என்ன தாண்டி கோபம். இப்பயாச்சும் வாயத் திறந்து சொல்லித் தொலையே. " எனச் சாருவும் கேட்க, ஃப்ளாஷ் பேக் ஓப்பன் ஆனது.


முதல் அத்தியாயத்தில் பிரச்சனையை வைத்து பிரச்சாரம் செய்த மது, என்ன பிரச்சினை எனக் கூறத் தொடங்கினான்.  


ஆல்ரெடி நீங்க கெஸ் பண்ணி வச்சிருப்பிங்க. ஆனாலும் நான் சொல்ற மாதிரி இருக்காதுல.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...