முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 86


 

அத்தியாயம்: 86


திருமணம்.. 


வெவ்வேறு இடத்தில் பிறந்து, வளர்ந்த இருவரின் படிப்பு, கலாச்சாரங்கள் முதலானவை மாறினாலும் கணவன் மனைவி என்ற ஒரு பந்தத்தில் இணையும் போது எப்படிப்பட்ட மன மாறுபாடு இருந்தாலும் ஒருமித்த மனதோடு, நீரும் நெருப்பு தன்னிடத்தே சரண் புகும் அனைத்தையும் ஸ்ரிகரிப்பது போல் ஒருவருள் ஒருவராக வாழ வேண்டும்.   


வாழ்நாள் முழுவதற்குமான பிரிய முடியாத ஒருமித்த ஒப்பந்தம் அது. 

இன்று இவளை(னை)க் கரம் பிடிக்கும் நான் இறுதிவரை கைவிடமாட்டேன் என்ற உறுதி மொழி ஏற்கும் நன்நாள். 


சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் இரு மணங்கள் இணையும் நிகழ்வு. ஆனால் ஒரு திருமணம் வெற்றிகரமாக மாற இரு மனம் மட்டும் போதும் என்று சொன்னால் நம்புவது கடினமாகத் தான் இருக்கிறது. ஏனெனில் நம் நாட்டைப் பொருத்தவரை திருமணம் என்பதை இரு குடும்பங்கள் இணைந்து புதிய சொந்தங்களை உருவாக்குவது. 


இங்கு கணவன், மனைவியின் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவி, கணவனின் குடும்பத்தை தன்னதாக ஏற்க வேண்டும்.


இப்போது உறவுகளுக்குள் தீ மூண்டால். அது கணவன் மனைவியைப் பற்றி எரித்து விடும். 


chain reaction கேள்வியுற்றதுண்டா. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சீட்டிக் கட்டில் ஒன்றைதீ தட்டி விடும் போது அது மற்றொன்றைதீ தட்டும். அது மற்றொன்றை என முடிவில் அனைத்தும் விழுந்து விடும். அது போன்று தான் உறவுகள் எனும் சீட்டுக்கட்டை அஸ்திவாரமாகக் கொண்டு திருமண பந்தம் அமைகிறது. என்ன தான் கணவனுக்கும் மனைவிக்கும் தனிப்பட முறையில் கருத்து ஒன்று பட்டாலும் மனம் ஒன்று சேர்ந்தாலும் சண்டைகள் பொரும்பாலும் மூள்வது சொந்தங்களால் தான். 


இது தான் நம் பைரவியும் மதுசூதனனும் பிரிய காரணம். மூட்டி  வைத்தது ஜெயஸ்ரீ மற்றும் சைந்தவி. திருமணம் ஆன முதல் நாள் இருந்தே துவங்கி விட்டது அந்த பணி. 


நான்கரை ஆண்டுகளுக்கு முன். 


அது மதுசூதனன் என்ற ஆறடி பயில்வானை ஜெயஸ்ரீயும் சைந்தவியும் முழுதாக கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம்.


ஜெயாவிற்கு தன்னை பிடிக்காது என்பதை மது அறிந்திருந்தாலும் அவர் காட்டிய அன்பும் தேன் சொட்டும் பேச்சும் பாசமாக தான் காண்பிக்கப்பட்டது.  


"உம்மேல உன்னோட சித்திக்கு பாசம் இருக்கு மது. எல்லாரும் கண்ணே மணியேனு கொஞ்சி தான் அத வெளிக்காட்டணும் இல்ல. நீ கீழ விழும் போது ஓடி வந்து தூக்கி விட்டு உன்னோட நலத்த அறியுறது ஒரு வகைன்னா. கவனமா போன்னு உன்ன கண்டிக்கிறதும் அன்பு தான். 


நீ எடுக்கிறத பொருத்து தான் இருக்கு. அவளத் தப்பா நினைக்காது மது. ஜெயா உனக்கு இன்னொரு தாய் மாதிரி தான். அப்படி இல்லன்னாலும் நீ எனக்கு பையந்தா. உன் தங்கச்சிகளுக்கு நீ தான் அண்ணே. இந்த வீட்டோட வாரிசு." 


இது சிதம்பரம் மதுவை ஹாஸ்டலில் விடும் போது ஜெயா பற்றி கூறிய வார்த்தைகள். அவனுக்கு இருக்கும் ஒரே உறவு அவனின் சிறிய தகப்பனின் குடும்பம் மட்டுமே. ஹாஸ்டலில் விடுமுறை நாளில் அனைவரும் வீட்டிற்கு சென்று விடும் போது தனிமை என்று அவனை உணரவிடாது காத்தவர் சிதம்பரம். 


அவரும் பாசத்தை மழையால் பொழியவில்லை என்றாலும். பாசம் இருந்தது. அவருக்காகவேனும் ஜெயாவைச் சகித்துக் கொண்டான். சற்று வளர்ந்த பின், ஒட்டி நின்றால் தான் அவருக்கு பிடிக்கவில்லை, எட்ட நின்று இருப்போம் ஆனால் விலகாது இருப்போம் என்றிருந்தான் மது. 


இதுவரை சிதம்பரமும் ஜெயாவும் கூறிய எதையும் மறுத்தது இல்லை. அவனாக வாய் திறந்து முதல் முதலில் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக பேசியது என்றால் அது பைரவியை மணந்து கொண்டது தான்‌. 


ஜெயாவின் விருப்பத்தை மீறி நடக்கும் அந்தத் திருமணம் நிலைக்க கூடாது என அவர் வகுத்த வியூகத்தில் தானாக மாட்டிக் கொண்டு அவருக்கு வெற்றி வாகை சூட்டி விட்டாள் பைரவி. 


திருமணத்திற்கு முன் காட்டிய முகத்தால் மதுசூதனனை ஆண் ஆதிக்கம் படைத்த ஒருவனாக உருவகப்படுத்திக் கொண்டு மணமேடையில் அமர்ந்தவளுக்கு அப்படி இல்லை எனத் தன் ஒவ்வொரு செயலிலும் காட்டினான் அவன். 


சின்ன சின்ன செயல்கள் தொடங்கி, அவனின் விருப்பம் அவளின் விருப்பம் என இரண்டும் நிறைவேறும். அவளின் மணம் கோணாதவாறு அவளின் கோப தாபங்களுக்கு ஏற்றார் போல் அவளைப் பார்த்துக் கொண்டான் என்பது தான்‌ நிஜம். அவளின் குறும்பும் விளையாட்டுத்தமும் பிடிவாதமும் பேச்சும் தனியாவே வளர்ந்த அவனுக்கு எரிச்சலை மூட்டினாலும் பைரவியை அவன் என்றும் எதற்கும் கடிந்து கொண்டது இல்லை. 


ஏனெனில் அவன் அருகில் இருந்து அனுபவிக்க ஒரு அன்பு வேண்டும்.‌ அந்த அன்பை தன் மனைவி தான் தர இயலும் என்றவனுக்கு பைரவியைத் தவிர வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது என்ற எண்ணம் அவளைப் பார்த்த முதல் நாளிலே உள்ளத்தில் தோன்றியது. 


பெண் பார்க்க வந்த அன்று சொன்னது போல் அவள் மீது அவன் கொண்ட மோகத்திற்கும் தாபத்திற்கும் அவளிடமே முடிவை தேடிக்‌ கிடந்தான் அவன். செல்ல சண்டைகள் போடும் மனையாளை சமாதானம் செய்யும் வழி அது. 


பைரவி எப்படி இருந்தாலும் அவன் அவளுடன் முழுதாக ஒன்றி போனான். ஆனால் பைரவியால் தான் முடியாது போனது. ஆறே மாதங்களில் மதுவின் மீதும் அவன் குடும்பத்தின் மீதும் கடும் அதிருப்தியை உண்டாக்கி இருந்தது. 


மது என்றால் மதுவை மட்டும் நேரடியாக குற்றசாற்றி விட முடியாது. ஆனால், அவனை தவிர வேறு யாரையும் இதில் குற்றம் சுமத்துவும் இயலாது. 


புரியவில்லையா.


இது திருமணம் ஆன பல ஆண்கள் சந்திக்கும் ஒன்று. அதாங்க மாமியார் மருமக நாத்தனாரு சண்ட. அதில் மூவருக்கும் இடையே கிடந்து அவஸ்தை படுவது ஆணாக இருந்தாலும், அதை கவனமாக கையாள தெரியவில்லை எனில் மண(ன)முறிவு தான் பதில். அந்த கவனம் கணவன் மனைவி இருவருக்குமே வேண்டும். விட்டுக்‌ கொடுப்பது தொடங்கி அனுசரித்து சகித்து செல்வது வரை இருவருக்கும் இருக்க வேண்டிய குணம் அது. 


தன்னை நம்பி வந்த இணையின் சுயமரியாதையை காக்கும் அளவுக்கு கணவனுக்கு ( மனைவிக்கு‍)  வீரம் இருக்க வேண்டும். அம்மா சொன்னார் அப்பா சொன்னார் தங்கை சொன்னாள் அண்ணன் சொன்னான் என்று எவர் கூறினாலும் தன் சரிபாதியை மட்டம் தட்டுவதும், மட்டம் தட்ட விட்டு வேடிக்கைப் பார்ப்பதும். மரியாதை குறைவாக நடத்துவதும், அப்படி நடத்தப்படும் போது அமைதி காப்பதும் தான் பல ஜோடிகள் செய்யும் தவறு. 


அதே தவறு தான் மதுவின் மீதும். அது தான் பைரவிக்கு ஏற்பட்ட அதிருப்தி. அவனை மட்டுமே நம்பி வந்த தனக்கு ஆதரவாக, ஏன் ஆறுதலாக கூட கணவன் நிற்க வில்லையே என்ற மனக்குறை ஒன்று அவளிடத்தில் உள்ளது. மற்றபடி அவனிடம் குறை என்று சொல்ல அவளுக்கு தேடி பார்த்தால் கூட எதுவும் கிடைக்காது. 


‌மூவரையும் அவன் திறமையாகத்தான் கையாண்டான். ஒரே இடத்தில் இருந்தால் தானே பிரச்சனை என விலக்கி வைப்பது, நேரடியான வாக்குவாதங்களைத் தவிர்ப்பது எனப் பல செய்தான்.‌


சொல்லப் போனால் மது அவரிடம் இருந்து பைரவியை விலக்கி வைக்கத் தான் முயன்றான்.


அவளை தன் கைக்குள்ளேயே வைத்து குஞ்சை பாதுக்காக்கும் பறவை போல். ஆனால் அதை குஞ்சானது உணராது. அதை சிறை என தான் நினைக்கும். பைரவிக்கும் அப்படித்தான்.  


அவன் செய்த தவறு என்னவென்றால் அவன் பைரவியை மட்டுமே சமாளித்தானே தவிர. ஜெயாவின் செயலுக்கும் பேச்சிற்கும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது ஜெயாவிற்கு ஆதரவாகிப் போனது. 


திருமணம் உடலும் மனமும் கலக்கும் மகிழ்வான தருணம். பைரவி விசயத்தில் முதலாவது வெகு விரைவிலேயே தங்கு தடையின்றி நிகழ்ந்தேறியது. இரண்டாவது தான். நடக்கவில்லை. மதுவிடம் ‌மனத்தைத் திறக்க விடாது எதையாவது சொல்லி நம் பைரவியின் மனத்தை காற்றாறு வெள்ளம் போல் தெளிவில்லாமலேயே வைத்திருந்தனர் ஜெயாவும் சைந்தவியும். விளைவு பைரவியின் புலம்பல்கள் அதிகமாகின. 


எப்பொழுதெல்லாம் கேப் கிடைக்குமோ அப்பொழுதெல்லாம் இருவரும் பைரவியையும் அவளின் குடும்பத்தையும் மட்டம் தட்டி கொண்டே இருந்தனர். 


"அந்த குருவி கூட்டுக்குள்ளலாம் எங்க பையன் வந்து தங்க மாட்டான். விருந்து தான… அத எதாவது ஹோட்டல்ல ஏற்பாடு பண்ணி பில்ல பே பண்ணிட்டு போங்க. வீடா அது. ஹிம்... வெஜ் ஹோட்டலா பாருங்க. எப்படி தான் கொல பண்ணி திங்கிறீங்களோ. " எனத் திருமணம் முடிந்த முதல் நாள் ஆரம்பம் ஆனது ஜெயாவின் குத்தல் பேச்சு. 


"ஏன் எங்க வீட்டுல வந்து தங்குறதுக்கு என்னவாம். நான் அந்த வீட்டு பொண்ணு தான. அங்க தான் நான் வளர்ந்தேன். ஒரு நாள் தான கூப்பிட்டோம். அதுவும் விருந்துக்கு. அதுக்கு அவங்க பர்மிஷன் வேணுமா. " எனக் கணவனிடம் தான் புலம்புவாள் அவள். 


எனினும் அதைக் கண்டு கொள்ளாது  அவளைத் தாய் வீட்டிற்கு அழைத்துச் செல்வான். உடன் சைந்தவியும் மோகனாவும் அழையா விருந்தாளியாக சேர்ந்து கொள்வர். மோகனாவைப் பற்றி கவலையே இல்லை. ஆனால் சைந்தவி. மற்றொரு ஜெயா என்பதை மணிக்கொரு முறை நிறுபித்துக் கொண்டே இருப்பாள். 


" அண்ணா சினிமாக்கு போறியா.  நானும் வர்றேனே. " எனப் சைந்தவியும் தொத்திக் கொள்வாள். இருவரையும் தனியாக எங்கும் அனுப்பியது இல்லை. 


திருமணம் முடிந்த முதல் சில மாதங்கள் மிகவும் சிறப்பான தருணம். அதில் மனம், ஆசை, விருப்பம், எண்ணங்கள் எனச் சங்கமிக்க நிறைய இருக்கிறது. அதிலும் அரேஞ்சிடு மேரேஜ் எனும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள கால அவகாசம் என்பது அவசியம் தேவை. ஆனால் ஹனிமூன். மூவி, அவுட்டிங், நைட் லாங் டிரைவ், விருந்து என இருவரும் மட்டும் அனுபவிக்க வேண்டிய தருணங்களை அனுபவிக்க விட வில்லை. ஹனிமூன் இந்த நான்கரை வருடங்களில் எங்கும் சென்றதே இல்லை. செல்ல விட்டதில்லை. 


" சிம்லால அப்படி என்ன இருக்குன்னு சுத்தி பாக்க போறிங்களோ. முதல்ல உன்னோட கேரியர் பாரு மது. உன்னோட அகாடமிக்கு ஏத்த இடம் ஒன்னு இருக்குன்னு‌ சைந்தவி வீட்டுக்காரரு சொன்னாரு.  அத என்ன ஏதுன்னு பாத்து விலை பேசி முடி. நிலையா ஒரு வேலய அமச்சுக்க. காசு சம்பாதிக்கலன்னா உம்பொண்டாட்டி எப்படி உங்கூட வாழ்வா. இவ்ளோ பெரிய வீட்ட பாத்து தான உன்ன கட்டிக்கிட்டா. 


நீ தான் இங்க இருக்காம அந்த ஆஃபிஸ்ல இருக்குற சின்ன வீட்டுக்கு கூட்டீட்டு போய்ட்ட.  அதுல அவளுக்கு விருப்பமில்லங்கிறது மூஞ்சிலயே எழுதி ஒட்டிருக்கு. இப்ப வேலையும் சரியா இல்லன்னா எப்படி ‌உன்ன மதிப்பா. விட்டுட்டு போய்ட மாட்டா." என ஜெயா ஹனிமூனிற்கு டிக்கெட் போடும் போது தேன் சொட்டும் குரலில் சொல்ல, மதுவிற்கு அவரின் சூட்சுமம் புரியவில்லை. ஆனால் பைரவிக்கு புரிந்தது. 


"நான் உங்க வீட்டையோ இல்ல பாக்குற வேலையையோ பாத்து ஆரம்பரமா வாழணும்னு ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கல. " என அழுகுரலில் சொல்ல, மதுவிற்கு எரிச்சல் தான் வந்தது. 


எப்பொழுதும் அவனின் குடும்பத்தைக் குறை கூறிக் கொண்டே இருக்கிறாள் என்று. மது அகாடமி வேலையில் இறங்கி விட்டான். அதனால் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து போனது. ஆன போதும் கிடைக்கும் நேரத்தை மனைவியுடன் மகிழ்வாகவே செலவு செய்வான்.‌ 


எங்காவது ஹோட்டலுக்கு செல்ல திட்டமிட்டால் கூட, " நம்ம வீட்டுல உனக்காக விருந்து செய்யச் சொல்லிருக்கேன்ப்பா. வெளிலலாம் சாப்பிட்டா உடம்பு கெட்டுடும். ஏற்கனவே உம்பொண்டாட்டி அங்க சாப்பிட்டு சாப்பிட்டு தான் இப்படி பலூன் மாதிரி இருக்கா. எதுக்கு வீணா காசு குடுத்து வியாதிய வாங்கணும். " என ஜெயா அழைப்பை மறுக்க முடியாது சிதம்பரம் வீட்டில் விருந்து நடக்கும். 


" என்ன பாத்தா பலூன் மாறியா இருக்கு. " என கண்ணீர் விடும் மனையாளை அணைத்து. 


"இல்ல... டெடிபியர் மாதிரி இருக்கு. ஷாஃப்டா. பஞ்சு மாறி. " எனச் சமாதானம் செய்து அழைத்து செல்வான். ஆனால் அங்கும் விதி விட்டதில்லை. 


" ரெண்டுக்கு மேல எடுத்துக்காதம்மா. இப்படி வரமுறையில்லாம சாப்பிடுறதுனால தான் கொழுப்பு வச்சி இருக்கு. அளவா சாப்பிடு. அப்ப தான் எங்க பையெ பக்கத்துல உன்ன பாக்கும் ‌போது அழகா தெரிவ." என அவளின் உருவத்தை வைத்து கேலி செய்யும் போது ஜெயாவின் மீது வந்த கோபத்தை காட்டிலும் மதுவின் மீது தான் அதிகம் வரும். 


ஏனெனில் அவளின் புலம்பலுக்கு, "சித்தி சொல்றதும் சரி தான். நீ ஆயில் அதிகமா எடுத்துக்கிற. அத்தோட நீ அவங்கள தப்பாவே நினைக்கிற. அதா உனக்கு அவங்க செய்ற எல்லாமே தப்பா தெரியுது. ப்ளீஸ் எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துக்க. அது நான் உன்னோட ஹெல்த்துக்கு நல்லது. " என இலவச அட்வைஸ் தந்தால் யாருக்கு தான் கோபம் வராது. 


அன்றிலிருந்து பைரவி மாமியாரையும் நாத்தனாரையும் பற்றி கணவனின் குறை கூறுவதை விட்டு விட்டாள். அவர்கள் பேசுவதை காதில் வாங்காது இருக்க முயன்றால். அதன் விளைவு அவளின் உலகம் சுருங்கிப் போனது. நத்தையாய் வீடு எனும் சிறையில் அடைக்கப்பட்டாள். இல்ல அவளே அடைந்து கொண்டாள்.‌  


பைரவின் கண்ணீரை பார்க்க இயலாது மது சிதம்பரம் வீட்டிற்கு செல்வதில்லை என்றாலும், "நான் என்னோட அண்ணே வீட்டுக்கு வருவேன். " எனச் சொல்லி வந்து கால் மேல் போட்டுக் கொண்டு,


"எப்படி வீட்ட வச்சிருக்க பாரு. அண்ணாக்கு டஸ்ட் அலர்ஜி. ப்ளீஸ் எல்லாத்தையும் துடச்சி சுத்தமா வை. அங்க தூசி இருக்கு பாரு. ம்... இங்க. " என வேலை ஏவுவாள் சைந்தவி. 


"எனக்கு ஜூல்ஸ் வேணும். பாத்திரத்த எல்லாம் உடனே கழுவி வைக்க மாட்டியா. சிங்க்லயே இருந்தா கிருமி ஜாஸ்தி ஆகும்‌. படிச்சவ தான‌ நீ. இல்ல காலேஜ் போறேன்னு பொய் சொல்லிட்டு கைல விளக்கமாத்த எடுத்திட்டு ஊர்ர சுத்தம் பண்றேங்கிற பேர்வழின்னு போய்டுவியா. " எனப் பேசும் நாத்தனாரின் பேச்சை பல்லை கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்வாள். 


"கேரட் சாப்பிடுங்க அண்ணி. கீர போட்டுங்க அண்ணி. அப்பதா கண்ணு நல்லா தெரியும். கல்யாணத்தப்ப நீங்க கண்ணாடி போட்டு நிக்குறீங்கன்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கேலி பண்றாங்க. சோ, எங்கண்ணனுக்கு ஏத்த மாதிரி நீங்க மாறிக்கங்க. ஜிம் போ. மத்தியானம் தூங்காத. டயட் புட் சாப்பிடு.‌" எனத் தட்டில் வைக்கும் உணவு மெலிந்து போனது. 


அதைச் செய்ய இதைச் செய்யாதே எனங் சைந்தவி ஆட்டி வைக்கும் பொம்மையாக மாறிப் போனாள் பைரவி. 

தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


பனி 85


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...