அத்தியாயம்: 100
நள்ளிரவு ஒரு மணி.
நடுநிசி நேரம். குளிர்ந்த தென்றல் காற்று வீசி இரவு நேரம் மலர்ந்திருந்த பூக்களை ஆரத்தழுவி அணைத்துக் கொள்ள, பைரவியின் நேத்திரங்கள் உறக்கம் வராது விழிப்புடன் இருந்தன.
கையில் இருந்த ஃபோனில் மருத்துவமனையில் அனைவரும் கூடி போட்ட திட்டங்களை எடுத்து வைத்துக் கொண்டு திரும்ப திரும்ப அதை படித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அப்படி என்ன திட்டம்?
"ஆப்ரேஷன் Po. " முதலில் ஆரம்பித்து பைரவி தான்.
அப்சரா, "அப்படின்னா. "
"ம்ச்... பேரு க்கா. நாம பண்ண போற மிக்ஷனுக்கு நான் வச்ச பேரு. மிலிட்டரிலலாம் வப்பாங்களே ஆப்ரேஷன் ஏ... பீ ன்னு. அந்த மாதிரி இது Po. "
கருணா, "Po ஃபார் பொலினியம். கரெக்ட்டா?"
"செம்ம ண்ணா… கருத்துக்களை கண கச்சிதமாக கவர்ந்து கொள்கிறீர்கள். "
ரத்தன், " வெட்டி கத பேசாம என்ன பண்ணப் போறோம்னு சொல்றிங்களா. இல்ல சொல்ற அளவுக்கு ப்ளான் இல்லயா. "
"யார்ட்ட ப்ளான் இல்ல. எங்க பாய் ஆன்ஸ்பாட்ல அசாட்டா அத்தனைக்கும் ஸ்கெட்சு போடுவாரு. சட்டுன்னு சொல்லுங்க பாய். " என அமைதியாகவே இருக்கும் ராக்கியை உசுப்பி விட,
"பெருசா ஒன்னுமில்ல. தீஷித் சேத்து வச்சிருக்குற ஆதாரத்த ஒரே ஆளா இல்லாம ஸ்பிலிட் பண்ணி ஒவ்வொருத்தரா கொஞ்சம் கொஞ்சம கோர்ட்டுக்கு கொண்டு போறோம். "
தீஷித், " குட் ஐடியா. அரசனூர தவிர மத்த இடங்கள்ல நடந்த ஆராய்ச்சிய பத்தின விவரங்கள கலெக்ட் பண்ணி ஒவ்வொருத்தர் கைலயும் குடுத்து விட்டா நல்லது தான். எதாவது ஒன்னு மாட்டினாலும் மத்தத கோர்ட்டுல சேத்திடலாம். " என்றவன் நண்பர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
கருணா. " ராக்கி நீ என்ன பண்ணப் போற. "
பைரவி, "தீஷ்ஷ டெல்லி கூட்டீட்டு வர போறாரு. "
ராக்கி, "இல்ல. "
"அப்றம். "
" ரேடியேஷன பத்தியும் அந்த பொலோனியத்த பத்தியும் நல்லா தெரிஞ்ச அறிவியலாளர பிடிச்சி கோர்ட்டுக்கு கூட்டுட்டு வந்து தெளிவு படுத்த வச்சா அது இந்த கேஸ்க்கு யூஸாகும். "
பைரவி, "தீஷித் இருக்காரே. "
" இவன யாரு டெல்லிக்கு கூட்டீட்டு போகப் போறா?. சென்னைலயே இருக்கட்டும். நாங்க மட்டும் போய் இந்த கேஸ்ஸ வின் பண்ணிட்டு வர்றோம். "
"ஏன்?"
"அவெ தலைக்கி ஆபத்தும்மா. "
தீஷித், " excuse me. சிராஜ்ஜ பத்தி முழு விவரமும் கஷ்டப்பட்டு எடுத்தது நான். என்ன விட்டுடு போகப் ப்ளான் பண்ணா நான் எப்படி ஆதாரத்த தருவேன். தர மாட்டேன். சோ, நான் டெல்லி கண்டிப்பா போயே ஆகணும். எந்த ஆபத்தையும் பாத்து நான் பயப்பட போறது இல்ல."
"பட், உன்னோட நிலம என்னன்னு பாத்தியா. உன்னால முடியாது வேண்டாம். " என்ற நண்பர்களிடம் பிடிவாதமாக செல்வேன் என்க,
ராக்கி, "நீ ஏன் சிராஜ்ஜ பத்தி இவ்வளோ டிடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிருக்க?"
"இது போட்டி நிறைந்த உலகம். நமக்கு முன்னாடி ஒருத்தே ஓடிட்டு இருந்தான்னா எப்படி இவ்ளோ வேகமா போறான்னு நாம கண்டுபிடிச்சி தெரிஞ்ச வச்சிக்கிட்டா நமக்கு ரெண்டு நன்ம கிடைக்கும்.
நாமளும் வேகமா அவனுக்கு ஈடு குடுத்து ஓட முடியும். அப்படி இல்லன்னா அவனத் தடுக்கி விழ வச்சி, ஏறி மிதிச்சிட்டு ஓட முடியும். இது பிஸ்னஸ்ல சகஜம். என்னோட எதிரி அவெந்தான்னு ஆனதுக்கு அப்றம், அவன நான் கண்காணிக்கிறது தான் எனக்கு நல்லது. "
பைரவி, " வாவ்… செம்ம கொள்க. நான் இத நோட் பண்ணி வச்சிக்கிறேன். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. " எனப் பாராட்ட,
"தேங்க்ஸ் டாம். " என்றான் கண்களால்.
"ஓகே. சங்கத்த கலைப்போம். ப்ளான் போட்டாச்சி." என ராக்கி எழுந்து விட,
"பாய். " என அலறினாள் பைரவி.
"என்ன?" என்றவனிடம் சைகையால் பேச, அது புரியாது முழித்தவனின் காதில் ரகசியம் போல் பேசத் தொடங்கினாள்.
" பாய் தீஷ்ஷ டெல்லி கூட்டீட்டு வர ஆள் ஏற்பாடு பண்ணணும். அத நீங்க திட்டத்துல சொல்லவே இல்ல. "
"அவெ இங்க இருக்குறது தான் அவனுக்கு நல்லது. "
"ஆனா…" என அவனின் முகத்தைப் பரிதாபமாக பார்க்க,
"பைரவி நீ ஏன் இப்படி பாக்குறன்னு எனக்கு தெரியுது. நான் ஓனர் கிடையாது. உம்புருஷெ என்ன சொல்றானோ அத செய்ற எம்ப்ளாயி. சம்பளம் வாங்கிட்டு வேலை பாக்குறேன். உனக்காக லீவ் போட்டுட்டு தான் டெல்லிக்கி ஒரு அறிவியல் ஆர்வலர கூட்டீட்டு வர முடியும். இவன டெல்லிக்கி கூட்டிட்டு போறது ஹை ரிஸ்க்கும்மா. என்னால முடியாது. அடுத்த வாரம் கல்யாணத்த வச்சிக்கலாம்னு வீட்டுல பேச்சு அடிபட்டுட்டு இருக்கும் போது யாராது போர்களத்துக்கு போவாங்களா."
"அப்ப வேற யாரையாது ஏற்பாடு பண்ணலாம்ல. "
"பண்ணலாம் தான். பட் அவனுங்க யாருமே உம்புருஷெ பக்கத்துல கூட வர முடியாது. அவன தவிர வேற எவனுக்கு சிராஜ் அனுப்புற ஆளுங்கள பந்தாடி கூட்டீட்டு போற அளவுக்கு தில்லு கிடையாதுன்னு சொல்லுவேன். " என்க,
பைரவி 'என்ன செய்யலாம். வேற நல்ல ஏஜென்சிய பாக்கலாமா. ' என்ற யோசனையில் இறங்கினாள்.
"நான் போய் தீஷித்துக்கு காவலுக்கு போடான்னு சொன்னா கேக்க மாட்டான். ஆனா நீ சொன்னா கேப்பான்."
"வாட். " என அவள் அதிர்ந்து முழித்தாள். அந்தத் தயிர் சாதத்துக்கிட்ட போய் நான் ஹெல்ப் கேக்குறதா. '
" உனக்கு இத விட பெட்டரான ஆஃப்ஷன் இருக்கா. இருக்காது. தீஷித் தல தப்பணும்னா. உம்புருஷன்ட்ட பேசு. ஜஸ்ட் செக்யூரிட்டி பர்பஸ்காக தான் பேச சொல்றேன். மத்தபடி உங்க ரிலேஷன்சிப்ப வளக்குறதுக்கு இல்ல. " எனச் சொல்லி செல்ல, பைரவி தீஷித்தைப் பார்த்தாள்.
தன் அண்ணனின் உயிருக்கு ஆபத்து என அறிந்த அழுகையில் மூழ்கியிருந்த தன் தங்கையை அணைத்து அவன் சமாதானம் செய்து கொண்டிருந்தான். அந்த அன்பு, அந்த உறவு நிரந்தரமாக இருக்க வேண்டிக் கொண்டவளுக்கு மருத்துவமனை தவிர மற்ற அனைத்து இடமும் தீஷித்திற்கு அச்சுறுத்தலாக தெரிந்தது. அந்த மருத்துவமனையும் கணவனால் தான் பாதுகாக்கப்படுகிறது என்பது கர்வத்தைத் தந்தது.
சிராஜ் எவ்வளவு பெரிய பாதகன். தன்னை எதிர்த்தால் என்ற காரணத்திற்காக, ஒரு பெண்ணை பலருக்கு விருந்தாக்கி சித்தரவதை செய்ததோடு, ஆராய்ச்சி என்ற பெயரில் பலனின் உயிரைக் குடித்து உயிர் வாழும் அரக்கன். அவனைச் சமூகத்திற்கு குற்றவாளியாக அடையாளம் காட்ட வேண்டுமாயின் தீஷித்தை டெல்லி அழைத்து செல்ல வேண்டும்.
ஆனாலும் மதுவை எப்படி எதிர்கொள்வது என்ற தயக்கத்தில் சாப்பரில் பயணம் செய்து கொண்டிருந்தவளை ஒரு கார் பின் தொடர்ந்தது. முதலில் பயந்தவள் பின் அதனுள் இருப்பது யார் என அறிந்து தன் கணவனின் மீதிருந்த காதல் கூடியது.
அது அவளின் பாதுகாப்பிற்காக மது அனுப்பிய ஆள். நிழல் போல் எப்பொழுதும் அவளைப் பின் தொடர்வது தான் அவன் வேலை. அந்த அக்கறை மயிலிறிகாய் வருடி கணவனின் மீதிருக்கும் கோபத்தையும் தாண்டி உள்ளிருக்கும் காதல் எட்டி பார்க்க வைத்து, மெஸ்ஏஜ் செய்வோமா? இல்ல வேண்டாமா? என்ற யோசனையை உண்டாக்கி தூக்கத்தைத் துடைத்தெறிந்து விட்டு சென்றது.
டயிப் செய்வதும் பின் அதை அழிப்பதுமாக அவள் விளையாடிக் கொண்டிருக்க, ராக்கி மூலம் அங்க நடந்த ஆப்ரேஷன் Po பற்றி அறிந்த மதுவோ, மனைவியிடம் இருந்து வரும் அழைப்பை எதிர் நோக்கி மாலையில் இருந்து காத்திருந்தான்.
அவளின் பெயரின் கீழ் typing என்று வந்ததைப் பார்த்து மதுவிற்கு குதுகலமாக இருந்தது.
அவளுக்குத் தெரியாத ஒன்று என்னவென்றால் ராக்கியின் மூலம் இந்தத் திட்டத்தை வகுத்து கொடுத்தவன் அவன் தான் என்று. அவனுக்கு மனைவியிடம் நேசம் குறைவு தான் என்ற போதும் மனித நேயம் அதிகமாகவே இருந்தது. கண்ணாயிரத்துக்கு உதவி செய்ய நினைத்து போல்.
இப்போது அனுப்புவாள் பிறகு அனுப்புவாள் என அவனும் ஒரு மணி நேரம் காத்திருக்க, அவள் எதையும் அனுப்பிய பாடு இல்லை. அதனால் அவனே களத்தில் இறங்க முடிவு செய்து.
"ஏன் இவ்ளோ நேரமாகியும் தூங்காம இருக்க? இது உன்னோட ஹெல்த்துக்கு நல்லது இல்ல. " என டயிப் செய்து அனுப்ப, அதை வாசித்தவள்.
'தயிர் சாதம்… தயிர் சாதம்... எந்த நேரத்துல எப்படி ஒரு அட்வைஸ் அனுப்புது பாரு. ஸ்டோன் மேன். மிட் நைட் அட்வைசர்.' எனத் திட்டி தீர்த்தாள்.
மது, அவளிடம் இருந்து ரிப்ளே வரவில்லை என்று அறிந்து புள்ளி மட்டும் வைத்து எம்டி மெஸ்ஏஜ்ஜாக அனுப்பினான். அனுப்பினான். பின்னும் அனுப்பினான். கிட்டத்தட்ட நூறு புள்ளிகள் வந்து சேர்ந்து விட்டன. நூற்றி ஓராவதாக அனுப்பும் முன் பைரவியிடம் இருந்து பதில் வந்தது.
"ரிப்ளே அனுப்பலன்னா அனுப்ப விரும்பமில்லன்னு அர்த்தம். சும்மா சும்மா டாட் வச்சி அனுப்பிட்டே இருந்தா எப்படி? சும்மா இருக்க முடியாதா. " எனத் திட்டி அனுப்ப,
"நானும் அப்படி தான் வர்ற மெஸ்சேஜ்க்கு ரிப்ளே பண்ணாம இருந்தேன். ஒரு வர்ஷத்துக்கு முன்னாடி நிறைய வேல இருக்கும் ஃபோன அட்டன் பண்ண முடியாத அளவுக்கு. ஆனா என்னோட மனைவிக்கி பொறும ரொம்ப கம்மி. அவ கேட்டு நான் பதில் அனுப்பலன்னா இந்த மாதிரி தான் அனுப்புவா.. "
"என்ன பழி வாங்குறிங்களா. "
"அத அப்படியும் சொல்லலாம். இல்லன்னா வாங்குனத திரும்பி குடுக்குறதுன்னும் சொல்லலாம். உன்னோட வசதி தான் எப்படி வேண்ணாலும் எடுத்துக்க. "
" …" பதில் இல்லாது போக, மீண்டும் மது புள்ளிகளை அனுப்பினான்.
"ஸ்டாப் திஸ் நான்சென்ஸ். " எனக் கோபமான எமோஜிக்கள் பறந்தன.
"அப்ப நீ எதாவது டயிப் பண்ணி அனுப்பு. "
"ஓகே. எனக்கு ஒரு செக்யூரிட்டி ஆள் ஹயருக்கு தேவ. நான் சிதம்பரம் மா... அங்கிள பாத்து பேசணும். அப்பார்ட்மெண்ட் கிடைக்குமா. "
"மிட் நைட்ல யாரும் பிஸ்னஸ் பேச மாட்டாங்கா. "
"அப்ப குட் நைட். " என்றவள் ஃபோனை மேஜையில் வைத்துவிட்டு படுத்துக் கொள்ள, அதன் பின் மெஸ்சேஜ்கள் வரவே இல்லை. பாவம் பைரவி அவன் ஏதாவது அனுப்புவான் சண்டையாவது போடலாம் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றம் தான்.
"குட் நைட்டுன்னு அனுப்புனா உடனே தூங்க போய்டுவானா. இன்னும் கொஞ்ச நேரம் எதையாது அனுப்பிருக்கலாம்ல. அட்லீஸ்ட் அந்த புள்ளியவாது அனுப்பிருக்கலாம். ஒரு பொண்ணு நானே எல்லாத்துலயும் இன்ஷியேட்… எடுத்தா பாக்குற அத்தன பேரும் என்னை அழையுறான்னு சொல்ல மாட்டாங்க. " என நெந்து கொண்டவள்,
" Curd rice. உனக்கு சுத்தமா ஃபீலிங்கே கிடையாது. இடியட். " எனச் சத்தமாக திட்டித் தீர்த்தாள்.
"என்னடி போய் மாதிரி உக்காந்திட்டு ராத்திரி நேரத்துல கத்தீட்டு இருக்க. என்னாச்சி. " என்றாள் சாரு. பைரவிக்கு அருகில் தான் படுத்துறங்கிக் கொண்டிருந்தாள். தாமரையை ராக்கி அவன் இல்லத்திற்கு அழைத்து சென்று விட்டான்.
சாரு 'நான் என் உயிர் தோழி கூட தான் இருப்பேன். என்ன ஆனாலும் என் நண்பி என்னைப் பாத்துப்பா. ' என்றதால் பைரவி உடன் இருக்கிறாள். அக்ஷரா, அபிராமி உட்பட தீஷித்தின் குடும்பம் மதுவின் பாதுகாப்பிற்கு கீழ் மாற்றப்பட்டிருந்தது. தீஷித் மட்டுமே மருத்துவமனையில் உள்ளான். ராக்கியோட பாதுகாப்பில் தான்.
பைரவி ஃபோனை பார்த்து திட்டிக் கொண்டே இருக்க, "என்னடி ஆச்சி. " எனப் பைரவியை உலுக்கிய பின் தான் சுயநினைவானது வந்தது.
"யார திட்டுற."
"எல்லாம் தயிர் சாதத்ததா. சத்தியமாச் சொல்றேன் கடவுள் அவன படைக்கும் போது சில முக்கியமான உணர்ச்சிகள வைக்க மறந்திட்டாரு. நடமாடும் ரோபோவா ஊருக்குள்ள சுத்துறான். curd rice. "
"ஏய் அண்ணன அப்படிச் சொல்லதா. அப்றம் நான் தாமரைட்ட சொல்லுவேன். அவ தான் வரிஞ்சி கட்டீட்டு உங்கூட சண்டைக்கி வருவா. "
"வந்தாலும் பரவாயில்ல. " எனக் கணவனை வசைபாட,
" நீ ஏன் அண்ணாவ தயிர் சாதம்னு கூப்பிடுற. நான் காரணம் தெரிஞ்சுக்கலாமா. " என்ற சாருவிடம் தன் ஃபோனை நீட்டி,
"படி... ஸ்வைப் பண்ணி முதல்ல இருந்து படி. " என்க.
"ஏய் ச்சீ. உங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குற பர்ஷ்னல் சாட்ட எதுக்கு டி எங்கிட்ட காட்டுற. " எனச் சங்கோஜமாகச் சொல்ல,
"ஹேய்... நீ மூஞ்சிய இப்படிக் காட்டுற அளவுக்கு அதுல ரொமாண்டிக்கா எதுவும் கிடையாது. அப்படி அனுப்ப அவனுக்கு தெரியாது. சொல்லப்போனா அதுக்கு ரொமாண்ஸ்ஸே வராது. "
"வாட்… பையூ நீ எந்த அர்த்தத்துல பேசுறன்னு புரியுதா. "
"ம்... அதுக்கு லவ் பண்ண வராதுன்னு சொல்றேன். " என்ற தோழியை முறைத்தவளிடம்.
" ஏன் இப்படி ஒரு லூக்கு. "
"நீ எத ரொமான்ஸ்னு சொல்ற. "
"இதோ இத தான். நைட் நேரம். ஒரு பொண்ணு சாட் பண்றா. ஹாட்டினா பறந்திருக்கணும். கவித தரைல ஓடுற அளவுக்கு எழுதி ஊத்திருக்கணும். குட்டி குட்டி கிஸ்ஸு… ம்ஹிம். எதுவுமே கிடையாது.
கட்டுன பொண்டாட்டி தான நானு. நாந்தா கோபமா இருக்கேன்ல. என்னைக் கட்டிப்பிடிச்சி. 'டெடி ரியலி சாரின்னு. ' சொல்ல வேண்டாம். "
"சொன்னப்பத்தா தர்மடி வாங்கி குடுத்தியே. "
" குடுத்தா வாங்கிட்டு அமைதியா போய்டலாமா. திரும்பி ஒருக்க ட்ரெய் பண்ண மாட்டானா. சும்மாவா இருக்குறது. வம்பு பண்ணணும் சாரு. கைய பிடிச்சி இழுத்து கட்டாயமா கட்டிபிடிச்சின்னு முத்தம். இப்படி ஏதாவது ஒன்னு பண்ணிட்டே இருக்கணும். முழுசா ரக்டு பாய்ஸ் வேண்டாம். அட்லீஸ்ட் 20% இருக்கணும்ல. "
" அது தான் உம்பிரச்சனையா பையூ. "
"ப்ரச்சன எனக்கு இல்ல அவனுக்கு. கல்யாணம் முடிவான நாள்ள இருந்து ஆசையா ரொமாண்டிக்கா பேசியோ… சின்ன சின்ன கிஃப்ட்… வேண்டாம் கிஃப்ட் கூட குடுக்க வேண்டாம். சமயல் பண்ணும் போது அப்படி லேசா இடிக்கிறது. யாருக்கு தெரியாம தள்ளிட்டு போய் கொஞ்சுறது. மாமான்னு கூப்பிடு அப்பத்தா விடுவேன்னு முந்தானைய பிடிச்ச இழுக்குறது. நாம ஆசையா சாப்பாடு ஊட்டும் போது விரல் கடிக்கிறது. இந்த பக்கம் தோள தட்டி விட்டு வேற பக்கம் நிக்கிறது. "
பாவம் அவள் அடுக்கிக் கொண்டே போக, சாரு தான் பாவமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
"அண்ணா செய்யலன்னா என்ன! அதா நீ செய்றீயே போதாது. ஒரு வீட்டுக்கு ஒருத்தர் பைத்தியமா திரிஞ்சா போதும் எல்லாருமே திரியணும்னு அவசியமில்லை. " என முணுமுணுக்க, அது நம் பைரவிக்குக் கேக்கவில்லை
"ஃபோன் பண்ணா ரெண்டு செக்கேண்ட்டுக்கு மேல பேச மாட்டான். சாப்டியா? என்ன பண்ற? தலைப்பு செய்திகள் மாதிரி சரியான நேரத்துக்கு காலைல மாலைல நைட்டுலன்னு நேரம் தவறாம கால் பண்ணி கேட்டுடுவான். அதுக்கப்பறமாது பேசக் கூடாது. உடனே வச்சிடுவான். கடம முடிஞ்சிடுச்சு இல்லயா. "
"கல்யாணம் ஆகிட்டா அப்படி தான்டி. ரெண்டு மணி நேரம் பேசுற ஆம்பளங்க. நேரத்த கொறச்சிட்டே வந்து பேசவே மாட்டாங்க. அதெல்லாம் சகஜம் தான. "
"நீ சொல்றது கல்யாணத்துக்கு அப்றம். நான் புலம்புறது கல்யாணத்துக்கு முன்னாடி. விடிஞ்சா கல்யாணம். ராத்திரி கூட இருக்குறவங்க தூங்குனத்துக்கு அப்றம் கால் பண்ணி பேசலாம்னு பெட்சீட்ட மூடிட்டு அதுக்கு கால் பண்ணா. "
"நைட் நேரம் செல்ஃபோன் யூஸ் பண்ணக்கூடாதுன்னு அட்வைஸ் பண்ணாரா. "
"அது கூட பண்ணிருந்தா என்னோட கால அட்டன் பண்ணான்னு சந்தோஷப்பட்டிருப்பேன். பட், லயனே போகல. ஏன்னு கேட்டா சுவிட்ச் ஆப் பண்ணிட்டு பதினோரு மணிக்கே தூங்கிட்டானாம். காலைல நாங்க ஹஸ்பெண்ட் அண்டு வைஃப். பேச்சுலரா ஒரு லவ்வரா அந்த ராத்திரியா நான் எவ்ளோ மிஸ் பண்ணேன்னு தெரியுமா. "
'இவ இப்பதக்கி இன்டர்வெல் விடுற தான் இல்ல. நாம போவோம். '
"கடைசியா ஒன்னே ஒன்னு. மிஸ்டர் மதுசூதனன் ரெமோ கேட்டப்ல இருக்குற அம்பி. அது மட்டும் நிச்சயம். " பைரவியின் புலம்பல்களுக்கு முடிவென்பது கிடையாதே.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..