அத்தியாயம்: 99
சாப்பரில் சாவியை போட்டு ஸ்டார்ட் செய்தவளுக்கு சென்னை முதல் முறை பயங்காட்டியது.
"நம்ம ஊரு தான். நம்பி ரோட்டுல ஓட்டீட்டு போலாமா! இல்ல நம்மல கடத்தீட்டு போய்டு வாய்ங்களா? ச்சச்ச… நான் பிறந்தது வளந்தது வாழ்றதுன்னு எல்லாமே சென்னை தான். சென்னை என்னோட அன்னை மாதிரி. என்னைப் பத்திரமா வீட்டுக்கு கூட்டீட்டு போய்டும்.
பட் சிராஜ் சென்னை கிடையாதே. மகாராஷ்டிரா காரெ என்னை மடக்கி தூக்கிட்டு போய்ட்டா. நடக்காது தான். ஒரு வேளை நடந்திட்டா." எனத் தனக்கு தானே புலம்பிய படி தலையை 360 டிகிரியிலும் திரும்பி திரும்பி பார்த்தவளுக்கு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே செல்லவே பயம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு நாளில் எத்தனை அதிர்ச்சி. முதலில் தீஷித்தான் சுடரைக் கடத்தி சென்ற ரகசிய காதலன் என்று அறிந்தது. பின் அப்படி இல்லை என்ற உண்மைப் புரிந்தது. அடுத்து மமதி பாப்பாவை யாரோ கடத்தியது. தீஷித்தின் விபத்து திட்டமிடப்பட்ட கொலை முயற்சி என அறிந்தது. அவனின் உயிருக்கு கோடிகளில் விலை நிர்ணயிக்கப்பட்டது. சிராஜ்ஜும் தீஷித்தும் பகையாளிகள் என அறிந்தது. செந்திலைக் கொலை செய்தது தீஷித் என்பது தெரிய வந்தது. பின் அந்தச் செந்திலும் சிராஜ்ஜும் தான் சுடரின் மரணத்திற்கு காரணம் என்பதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்தது.
அனைத்திற்கும் மேலாக சிகரம் வைத்தது போல் சிராஜ்ஜின் கதையை முடிக்கும் அளவுக்கு தீஷித்தின் கையில் கிடைத்த ஆதாரங்கள் என அனைத்தும் நம் பைரவியை பயங்கொள்ளச் செய்துள்ளது.
கதையை முடிக்கும் ஆதாரமா?. என்னதது?
தீஷித்தின் லேப்டாப் பேக்கில் இருந்த காகிதங்களைப் படித்தவள், உதடுகள் நடுங்கின.
" அது உண்மையா தீஷ். " என்க,
"உண்மங்கிறதுக்கான ஆதாரம் தான் அது எல்லாம். " என்றான் தீஷித்.
"பட். இது... சட்ட வீரோதமானாது. "
"அதா யாருக்கும் தெரியாம சட்டத்தோட பார்வைல படாம பண்றாங்க. சீக்ரெட்டா."
"இதுக்கு தான் நீ அரசனூர் வந்தியா.? "
"அதுக்குன்னு முழுச்சா சொல்லிட முடியாது. அதுக்காகவும் தான். "
"ஒரு நிமிஷம் நீங்க என்ன பேசுறிங்கன்னு எங்களுக்கு புரியல. " என்ற நந்திதா பைரவியின் கையில் இருந்த கோப்புகளை வாங்கி படித்தாள். அவளுக்கும் அதிர்ச்சி தான் போலும். அடுத்தாக கருணாகரன் கைக்கு கோப்புகள் மாற, அடுத்து ரத்தன் என பைஃலை வாங்கிய அனைவரும் டீவி சீரியலில் வருவது போல் உறைந்து போய் நிற்க, கடைசியாக காகித கட்டுகளை வாங்கி பார்த்தான் ராக்கி. அவனுக்கு அதில் எதுவும் புரியவில்லை. ஒன்றை தவிர,
" பொலோனியம். அப்படின்னா என்ன?. இந்த பேப்பர்ல அது தான் அதிகமான இடத்துல இருக்கு. படம் வேற வரைஞ்சி வச்சிருக்கு. " என்றான் அவன்.
ஏனென்றால் அந்த காகிதத்தில் பொலோனியத்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததற்கான ஆதாரங்கள் இருந்தன. கவர்மென்ட் சீல் ஏதும் இல்லாத காரணத்தால் அது சட்டவிரோதமாக கடத்தப்பட்டிருக்கிறது என்று மட்டும் புரிந்தது.
ராக்கியின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை. பைரவி இன்னும் என்னென்னு அந்த லேப்டாப் பேக்கில் இருக்கிறது என்று தீவிரமாக தேட, அவள் காட்டிய முகபாவனைகளை ரசித்தபடி தீஷித் இருத்தான். பதில் கூற வேண்டிய இருவரும் அமைதியாக இருக்க, மற்ற யாரும் பேசவில்லை.
"ஏய் யாராது வாயத் திறந்து எதையாது சொல்லுங்கப்பா. பொலோனியம்ன்னா என்ன. " என அவனும் அனைவரின் முகத்திற்கு முன் கேள்வியாய் கேட்க, பதில் வந்தது பைரவியிடம் இருந்தது.
"இது ஒரு ஹைலி ரேடியா ஆக்டிவ் மெட்டல். இது தான் அரசனூர்ல நடந்த ரேடியேஷன் அட்டாக்குக்கு காரணம். கரெக்ட்டா தீஷ். "
"கரெக்ட் டாம். நான் உன்ன விளையாட்டு பிள்ளன்னு நினைச்சேன். பட் கலக்கீட்ட. " எனத் தீஷித் பாராட்ட, பைரவிக்கு பெருமை தாங்கவில்லை. அவளின் முகத்தில் அந்தப் பாராட்டு பூரிப்பை உண்டாக்கியது.
'இன்னேரம் பார்த்து அந்த மது பயெ பக்கத்தில இல்லயே. இருந்திருந்தா ஒத்த கால மட்டும் எதுக்கு விட்டு வச்சிங்கன்னு சொல்லி, உடையாம இருக்குற அடுத்த காலயும் உடச்சி விட்டிருப்பான். வாழ்க்க முழுக்க வீல் சேர் தான். ' ராக்கியின் மைண்ட் வாய்ஸ்.
"இதுல அந்த மெட்டல எங்க யார்க்கிட்ட டீல் பேசி வாங்கிருக்கான்னு தெளிவா இருக்கு. விசாகன் மூலமா அத நம்ம நாட்டுக்கு கடத்தீட்டு வந்திருக்கான். அந்தக் கும்பல் கிட்ட இருந்து தான் க்ரிஸ்டல் மெத்துன்னு சொல்ற ஐஸ் போத பொருள் வாங்கி நம்ம ஊருக்குள்ள சப்ளை பண்ண விட்டிருக்கான். பட் இது எதுக்கு அவனுக்கு. பொலோனியத்தால என்ன யூஸ் அவனுக்கு. " பைரவி தான். அவளின் கையில் கிடைத்த மற்றொரு கோப்பிற்குள் தலையை விட்ட படி பேச,
"நிறைய இருக்கு டாம். " எனத் தீஷித் எடுத்து சொல்வதற்குள்,
"ஒன் மினிட். " எனக் கத்தினான் ராக்கி.
"புரியிற மாதிரி பேசணும். உங்களுக்கு தான் எல்லாம் தெரியுங்கிற மாதிரி சீன் போட்டா, அப்றம் நான் சீன விட்டு வெளில நடப்பு பண்ணிடுவேன். எங்கூடவே சேந்து உன்னையும் வெளில கூட்டீட்டு போய்டுவேன். உந்தலைக்கி குறிவச்சிருக்குறவிங்க கிட்ட உன்ன மாட்டியும் விட்டுடுவேன் ஜாக்கிரதை. " என்றான் ராக்கி மிரட்டலாக பேசினான்.
"சேம் மைண்ட செட். என்ன பேசுறாங்கன்னு எங்களுக்கு புரியல." என்றான் கருணா.
ராக்கி, "அப்ப புரிஞ்ச மாதிரியே ஒவ்வொருத்தனும் ஷாக் குடுத்திங்க. "
" அது சும்மா. அப்படி முகத்த வச்சிக்கிட்டா எப்படி இருக்கும்னு பாத்தோம். " என்றவனை ராக்கி முறைத்து விட்டு,
"பாத்துக்க உங்காளுங்களுக்கு கூட நீங்க பேசுறது புரியல. டீட்டெய்ல்லா சொல்லு. " என்க, பைரவி பைஃல்களை மூடி விட்டு,
" பொலோனியம். ரொம்பவே அரிதா பூமில கிடைக்கிற தங்கம் வெள்ளி மாதிரியான மெட்டல். ஆனா தங்கம் வெள்ளி மாதிரி ஃப்ரெண்ட்லி யூஸ் கிடையாது. இது கதிரியக்க தன்ம கொண்டது. தூரத்துல அது இருந்தாலே நமக்கு ஸ்லோ பாய்ஷன். பக்கத்துல சொல்லவே தேவையில்ல உடனடி மரணம்.
இத பயன்படுத்தணும்னாலோ இல்ல வேற இடத்துக்கு ட்ராஸ்போர்ட் பண்ணணும்னாலோ அதிகமான பாதுகாப்பு தேவை. இத வச்சி என்ன பண்ணலாம்னு ஆராய்ச்சி போய்க்கிட்டு தான் இருக்கு. ஏன்னா இது எதுக்கு யூஸ் ஆகும்னு யாருக்குமே தெரியாது. சில விண்வெளி ஆராய்ச்சிக்கு இத பயன்படுத்துறதா கேள்வி பட்டிருக்கேன். " என்க,
"உனக்கு யாரு இவ்ளோ மேட்டர சொன்னது. நீ இவ்ளோ அறிவாளி கிடையாதே. " ராக்கி சந்தேகமாக.
" யாரும் சொல்லல. நானே தெரிஞ்சுக்கிட்டேன். வக்கீல் பவதாரிணிய பாக்க போனேனா. அப்ப அவங்களும் அவங்க ஹஸ்பெண்டும் சேந்து என்னைக் கலாய்ச்சிட்டாங்க. அதா ரேடியேஷன பத்தியும் மேரி க்யூரி பத்தியும் விடிய விடிய உக்காந்து படிச்சி தெரிஞ்சிக்கிட்டேன்.
உங்களுக்கு ஒரு விசயம் சொல்லவா. இந்த பொலோனியங்கிற தனிமத்த கண்டுபிடிச்சதே மேரி க்யூரி தானாம். பட் இது அவங்க பெத்த பொண்ணோட மரணத்துக்கு காரணமாகிடுச்சாம். ரொம்ப ரொம்ப ஆபத்தானது சொல்லிட முடியாதுன்னாலும் ரொம்ப ஆபத்தானது தான் இது.
பன்னாட்டு சந்தைல இத நேரடியா வாங்கவோ விக்கவோ முடியாது. தடை செஞ்சிருக்காங்க. சிராஜ் இத இல்லீகலா கடத்தீட்டு வந்திருக்கான். பட் இது எதுக்கு அவனுக்கு. " என தீஷித்தை பார்த்து கேள்வி கேட்டாள் பைரவி.
" ரிசர்ச் பண்ண டாம். அவனோட நெட்வொர்க்கோட வேகத்த அதிகப்படுத்தி நம்பர் ஒன் கம்யூனிக்கேஷன் நெட்வெர்க்கா வளர இது யூஸ் ஆகலாம்னு கடத்தீட்டு வந்து ஆராய்ச்சி பண்றான். அதுலயும் ரீமோட் வில்ஏஜ் ஃபாரஸ்ட் மாதிரியான இடத்துல தங்களோட சேவைகள தொடர இத பண்ணிருக்கான். "
" அப்ப அரசனூர்ல டவருக்கு கீழ கட்டுன கட்டிடம் ஆராய்ச்சி கூடம் சரியா. இதோ! இதுல அதுக்கான டாக்குமெண்டும் அதுல பண்ண ரிசர்ச் பத்தின டிடெய்லும் இருக்கு. "
" அரசனூர் மட்டுமில்ல டாம் மொத்தமா தென்னிந்தியல ஆறு கிராமத்துல இந்த மாதிரி ஆராய்ச்சி கூடம் கட்டிருக்கான். அதுல இருந்து வெளியான கதிர் வீச்சால எல்லா ஊர் மக்களும் பாதிக்கப்பட்டிருக்கு. கேன்சர், வாந்தி வயித்து வலின்னு அடுத்தடுத்து நூத்துக்கும் அதிகமானவங்க இறந்து போயிருக்காங்க. அவங்க யாருக்கும் ஏன் செத்தோம்னு தெரியவே தெரியாது. ரேடியேஷனால பாதிக்கப்பட்டு தான் இறந்து போயிருக்காங்கன்னு கண்டு பிடிக்கிற டெக்னாலஜி நம்ம நாட்டுல கிடையாது.
நிறைய இடத்துல இத வச்சி ஆராய்ச்சி பண்ணாலும் முதல் எதிர்ப்பு வந்தது அரசனூர்ல இருந்து தான். அதுவும் விடாம கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணது கண்ணாயிம் அங்கிள் மட்டும் தான். " என அந்தத் தனிமத்தை சிராஜ் எப்படி பயன்படுத்தியுள்ளான் என விளக்க,
" வாவ். " என விழி விரிய கைத் தட்டினாள் பைரவி.
"அவெ நூறு பேர கொன்னுட்டானுங்கன்னு சொல்றான். நீ என்ன கை தட்டி ரசிக்கிற. " ராக்கி.
"பாய் பாய் இது சூப்பர் மேட்டரு. இது உங்க மாமனாரு போட்ட கேஸ்க்கு உபயோகமா இருக்கும் பாய். இத மட்டும் எப்படியாது டெல்லி கொண்டு போய் பவதாரிணி மேம் கிட்ட சேக்கணும். "
"சேத்தா. " அப்சரா.
"சேத்தா கேஸ்ல நமக்கு சாதகமாக தீர்ப்பு வரும்." எனச் சந்தோஷமாக சொல்ல,
"அவனுக்கு எதிரா நின்னாங்கிற காரணத்துனால தான் சுடர கொடூரமா கொன்னான். மறந்திட்டியா. " நந்திதா.
"ஆனா இறந்து போன அத்தன பேருக்கும் நீதி கிடைக்கணும். இனி சிராஜ் மாதிரூ ஒரு குற்றவாளி வளரக்கூடாதுன்னா, இத முதல்ல கோர்ட்டுல சமிட் பண்ணணும். "
"எப்படி அவங்க கிட்ட குடுப்ப. கொரியர் அனுப்பியா. " ராக்கி நக்கலாக கேட்க, அவள் அவனை முறைத்தாள்.
" ஃபோன்ல சொல்ல முடியாது. ஏன்னா அவங்க ஃபோன ட்ராக் பண்றதா சொல்லிருக்காங்க. பவர்ல இருக்குற போலிஸ்க்காரனோட வைஃபுக்கே இந்த நிலைமன்னா கண்டிப்பா பாண்டி, மாமான்னு எல்லார் ஃபோனும் ஒட்டு கேட்கப்படும். மெயில் கொரியர் எதுவுமே சாத்தியப்படாது. " ராக்கி.
"அத்தோட இது கொஞ்சம் சிக்கலான விசயம் பைரவி. தெளிவா எடுத்து சொல்லன்னா ஜர்ஜு காண்டாகி கோர்ட்டோட நேரத்த வேஜ்ட் பண்றோம்னு சொல்லி உள்ள தூக்கி போட வாய்ப்பிருக்கு. " நந்திதா.
"அத்தோட தீர்ப்பும் நமக்கு சாதகமாக இருக்காது. "
"தெளிவா எடுத்து சொல்லணும்னா. தீஷித்தா நேர்ல போகணும். " கருணா.
"கரெக்ட்டு. சூப்பர் ஐடியா. எல்லா பைஃலயும் எவிடென்ஸ்ஸையும் தூக்கிட்டு தீஷித்த நாம டெல்லிக்கு கூட்டீட்டு போலாம். " என்றாள் பைரவி வேகமாக. அவளை அனைவரும் சேர்த்து.
"லூசா நீ. " என கோரஸ்ஸாக கத்த, பாவமாய் முழித்தாள் அவள்.
" ஏன்? என்னாச்சி? எல்லாரும் சேந்து திட்டுறிங்க " எனப் பரிதாபமாக கேட்க,
"முதல்ல அவன் இந்த ஹாஸ்பிட்ட விட்டு உயிரோட வீடு போய் சேரச் சொல்லு. அப்றமா டெல்லிக்கி என்ன! பாகிஸ்தான் பார்டருக்கே கூட்டீட்டு போய் அந்த நாட்டு ஆர்மி கூட உக்காந்து டீ குடிக்க வப்போம். " ராக்கி.
"என்னைப் பாத்துக்க எனக்கு தெரியும் ராக்கி. யாரோட பாதுகாப்பும் எனக்கு தேவையில்ல. நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். முக்கியமா அந்த சிராஜ்க்கு பயந்து பதுங்கி இருக்குற டயிப் நான் கிடையாது. டாம் நான் ரெடி. மூன்னாள்ல தீர்ப்பு நாம கோர்ட்டுக்கு போகலாம். அவனுக்கு எதிரா நான் எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன். " என்க. பைரவிக்கு பேரானந்தமாக இருந்தது.
"ஒத்துவராத யோசனை எல்லாம் குடுக்காத தீஷித். உடைஞ்சி போன ஒரு கால தூக்கிட்டு, ஒத்த கால்லால குதிச்சி குதிச்சி, யாரும் உன்ன துரத்தாம, நடந்து போனாக்கூட மூன்னாள்ல தமிழ்நாட்டு பார்டர கூட தாண்ட முடியாது.
உனக்குச் சுத்து போட்டிருக்கான்னா, இப்ப இங்க நாம பேசீட்டு இருக்குறது என்னன்னு கூட அவனுக்கு தெரிஞ்சிருக்கும். சுடர் டெத்துக்கு காரணம் அவெந்தான்னு நாம பேசிட்டு இருக்குறதுல இருந்து நாம போட்டுட்டு இருக்குற ப்ளான் வரைக்கும். எவ்ரி திங் ஹீ நோஸ். அதுனால நம்மோட உயிருக்கு கூட ஆபத்து இருக்கு. " என்க, பைரவி பயந்து விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும். 'நம்மலயும் தூக்கிடுவாங்களோ. ' என்று.
"இப்ப என்ன பண்ணுறது பாய். "
"இவனையும் இவெங்குடும்பத்தையும் கொஞ்ச நாளுக்கு நம்ம பாதுகாப்புல வச்சிருக்கலாம். நம்மாளுங்க பாத்துப்பாங்க. குணமாகுற வர. இப்போதைக்கி இது தவிர வேற எந்த ப்ளானும் போட முடியாது. "
"என்ன பாய் நீங்களே இப்படி சொல்றிங்க. மூன்னாள்ல தீர்ப்பு பாய். "
"வேற என்ன பண்ணச் சொல்ற பைரவி. இவன வேவு பாக்க ஹாஸ்பிட்டல்குள்ளயே ஆளுங்க இருக்கானுங்க. வாய் வார்த்தையா இவ்வளோ தான் பேச முடியும். கண் ஜாடை கை ஜாட செஞ்சி தான் கம்யூணிக்கேஷன் பண்ணணும்னா கற்கால மனிதன் மாதிரி மாறணும். " எனச் சடைத்துக் கொண்டான் ராக்கி.
ஏனெனில் தீஷித்தை இங்கு கொண்டு வந்து சேர்த்த முதல் நாளில் இருந்து கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு தான் காவல் காக்கின்றனர் ராக்கியின் குழுவினர். அதிலும் டபுல் டியூட்டி வேறு. இரவு, பகல் என அவன் உயிரை காப்பாற்ற இவனின் உயிரைக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. சிறு இடைவேளை கிடைத்தாலும் உள்ளே புகுந்து கொலை செய்ய வெறியுடன் காத்திருக்கும் சிராஜ்ஜின் கூலிப்படையைச் சமாளித்து சமாளித்து டயர்டாகி விட்டான் ராக்கி.
" தீஷித்த டெல்லி கூட்டீட்டு போக ப்ளான் போட முடியாதா. தீர்ப்பு நமக்கு சாதகமா வராதா. இப்ப விட்டுட்டா திரும்பி ஒரு கேஸ் போடணும். அது கீழ் கோர்ட்டுல பத்து வர்ஷம். மேல் கோர்டுல பத்து வர்ஷம்னு இழுத்து நீதி கிடைக்கிறதுக்குள்ள அப்படி ஒரு சம்பவம் நடந்ததான்னு எல்லாரும் கேள்வி கேக்குற அளவுக்கு மறந்து போய்டுவாங்க. " எனப் பைரவி சேர்வுற, தீஷித் அவளின் அலைபேசிக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பினான்.
'மெஸ்சேஜ்ஜா!!. தீஷித்தா!. ஒரே ரூம்ல… நேருக்கு நேரா தான நிக்கிறோம். எதுக்கு இது? ' என்பது போல் தலை தூக்கி அவனைப் பார்க்க, அவன் படித்து பார்க்கச் சொன்னான்.
அதில் "உன்னோட ஃபோனயும் என்னோட ஃபோனையும் ஹக் பண்ண முடியாது டாம். நாம ப்ளான் போடலாம். " என எழுதி இருக்க, அறையில் இருந்தவர்கள் இரு குழுவாக பரிந்தனர். திட்டம் வாய் வார்த்தையாக அல்லாது எழுத்து வடிவில் போடப்பட்டது.
அந்தத் திட்டம் பைரவிக்கு மனநிம்மதியைத் தந்தாலும், நிறைவேறுமா என்ற கலக்கமும், எவ்வித திருப்பங்களும் இல்லாது, போட்ட திட்டம் நடந்திட வேண்டாம் என்ற வேண்டுதலயும் வைத்தது.
இது போன்ற ஒரு எவிடென்ஸ்காகத் தானே சுடரின் மரணம் நிகழ்ந்தது. அவளின் மரணத்திற்கு காரணமானவர்களைப் பலி வாங்க மட்டுமல்ல, அவளின் உயிர் தியாகத்திற்கு மதிப்பு கிடைக்க வேண்டும் என்றால் அரசனூர் வழக்கில் கண்ணாயிரம் வெற்றி பெற வேண்டும். மூன்று நாட்கள். 72 மணி நேரம். இல்ல அதற்கும் கூட தான் இருக்கிறது. ஆனால் இப்பொழுது நேரம் முக்கியமில்லை. ஆதாரம் தான் முக்கியம். அதற்கு தீஷித்தை டெல்லிக்குத் தூக்கிட்டு போகணும்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..