அத்தியாயம்: 98
" அண்ணா மமதிய காணும். எங்க தேடியும் கிடைக்கல. அங்க வந்தாளாண்ணா. " எனபீ பயந்து போய் அழுகுரலில் பேசினாள் அக்ஷரா.
"வாட்... என்ன சொல்ற. மமதிய நீ தான கூட்டீட்டு போன. ம்ச்… அக்ஷரா நீ எங்க இருக்க முதல்ல. என்ன நடந்தது. அழாம பேசு. " என்றான் தீஷித் அதட்டலாக.
" இப்ப கீழ லாபின்ல இருக்கேண்ணா. ஸ்னாக்ஸ் வாங்க வந்தோம். பக்கத்துல தான் நின்னுட்டு இருந்தா. பில் பே பண்ணிட்டு திரும்பி பாத்தா காணும்ண்ணா. பயம்மா இருக்கு. " என்க, ராக்கி ஃபோனை வாங்கி பேசினான்.
"ஹாஸ்பிடல் குள்ளன்னா பயம் கிடையாது அக்ஷரா. எல்லாமே நமக்கு தெரிஞ்சவங்க தான்." என்க.
" ஹாஸ்பிடல் குள்ள இல்ல. வெளில. பாப்பா சாக்லேட் கேட்டா. அத வாங்கிட்டு திரும்பும் போது…"
"வாட். ஹாஸ்பிடல விட்டு எதுக்கு சொல்லாம வெளில போனிங்க. " எனக் கடிந்து கொண்டவன், ஃபோனை தீஷித்திடம் கொடுத்து விட்டு, ஜன்னல் கதவுகளைல் திறந்து உரத்த குரலில் யார் யாரையோ அழைத்தான். சில பல கட்டளைகளையும் விடுத்தவன்,
" பைரவி நீ வீட்டுக்கு போ. அங்க தாமரையையும் சாருவையும் கூட்டீட்டு என்னோட வீட்டுல இருங்க. கேஸ் முடிஞ்சி கண்ணாயிரம் மாமா திரும்பி வர்ற வர அங்கயே தங்கிக்கங்க. " என்றான் படபடப்படாக,
"என்னாச்சி பாய்? ஏன் இவ்வளோ டென்ஷன்? பாப்பா கிடைச்சிடுவா. "
"கிடைச்சே ஆகணும். " என வெளியே செல்ல இருந்தவன் திரும்பி தீஷித்திடம் வந்து,
"உனக்கு சிராஜ்க்கும் இடைல என்ன பக. " என்க,
"வாட்… இதுக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம். "
"இருக்கு. ஏன்னா பாப்பா கடத்திருக்கலாம்னு தோனுது."
"கடத்தலா... இங்கதா எங்கயாது இருப்பா. வீணா பீதிய கிளப்பாத. "
"ம்ச்… நான் பீதிய கிளப்பல. நீ மொத உனக்கும் சிராஜ்கும் நடுவுல என்ன நடந்ததுன்னு சொல்லு. "
"பிஸ்னஸ் போட்டி தான். வேறென்ன இருக்கப் போது. " என கூலாகவே சொன்னவன் ராக்கியின் படபடப்பு தேவையற்றது என்றான்.
" இல்ல வேற எதுவோ இருக்கு. ரொம்ப சீரியஸ்ஸான ஒன்னு. " என்ற போது ராக்கியின் ஃபோன் அலற, அதை எடுத்து பேசிக் கொண்டிருக்கும் போது அக்ஷராவும் மமதியும் உள்ளே வந்தனர்.
"மாவா… சாக்கி. " என ஆசையுடன் மாமனை அணைக்க, 'பாத்தியா வந்திட்டா. ஏன்டா கண்டத சொல்லி பயங்காட்டுறீங்க. ' என்பது போல் ராக்கியைப் பார்த்தவன் வெளிறிய முகத்துடன் நின்ற தங்கையைப் பார்க்கவில்லை. ஆனால் நந்திதா என்னவென்று கேட்க, அவளைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கி விட்டாள் அக்ஷரா.
" அப்சரா பாப்பாவ வச்சிட்டு வெளில இரு. ஹாஸ்பிடல்ல விட்டு வேறெங்கயும் போகக்கூடாது. " என்ற கருணாகரன் நடந்தை கேட்டான்.
ராக்கி கடிந்து கொண்ட பின் அக்ஷரா மீண்டும் அந்தக் கடைக்கு சென்று கேட்க, அவன், 'எனக்கு தெரியவே தெரியாது. நீங்கள் குழந்தையுடன் வரவே இல்லை.' எனச் சாதித்தான். அப்போது அங்கு ராக்கி அனுப்பிய மதுவின் செக்யூரிட்டி ஆட்கள், அந்தக் கடைக்காரனை நைய்யபுடைந்து எடுக்க, கை நிறைய சாக்லேட்டுடன் உள்ளறையில் ஒழித்து வைத்திருந்த சிறுமி மீட்டக்கப்பட்டாள்.
அக்ஷராவின் பயத்திற்கு கூடுதல் காரணம் கடைக்காரன் கையில் துப்பாக்கி வைந்திருந்ததும், சிறுமியின் அருகில் ஒரு பெண் கத்தியுடன் இருந்ததும் தான். அத்தனை களேபரம் நடந்த போதும் சிறுமிக்கு அது தெரியாத படி மீட்டு வந்தனர்.
" அந்தப் பொண்ணு பாப்பா முதுகுக்கு பின்னாடி கத்தியோட நின்னத பாத்து எனக்கு உடம்போ நடுங்கிடுச்சிக்கா. நல்லவேள அண்ணா நீங்க அனுப்புன ஆளுங்க யாருக்கும் எதுவும் ஆகாம காப்பாத்திட்டாங்க. " என்க தீஷித்தின் முகத்தில் யோசனையில் விழுந்திருந்தது.
"இனி ஹாஸ்பிடல்ல விட்டு வெளில போகணும்னா சொல்லிட்டு போங்க. அப்பத்தா உங்க பின்னாடி செக்யூரிட்டிக்கு ஆள் அனுப்பி வைக்க முடியும்." ராக்கி சொல்ல,
"அப்ப நீங்க தீஷித் குடும்பத்த ஹாஸ்பிடல்ல அரஸ்ட் பண்ணி வச்சிருக்கிங்களா. ஏன். " பைரவி.
"பாதுகாக்க. "
"யார் கிட்ட இருந்து. "
"சிராஜ் கிட்ட இருந்து. " என்றபடி வந்தது மித்ரன்.
"மித்ரா என்ன சொல்ற. பிஸ்னஸ் போட்டியா இருந்தாலும் ஃபேமிலி மேல கை வைக்கிற அளவுக்கா போவாங்க. " நந்திதா கணவனிடம் கேட்க,
"அவனால அதுக்கும் மேல போக முடியும். தீஷித் ஆக்ஸிடென்ட். அப்றம் ஹாஸ்பிட்டல்ல கொல பண்ண பாத்ததுன்னு நிறைய இருக்கு. அதுனால தான் மதுசூதனன் இந்த ஹாஸ்பிடல்ல ரெக்கமெண்ட் பண்ணி கார்ட்ஸ்ஸையும் நிக்க வச்சான். ஆன்டிக்கி கூட தனி ரூம் ஏற்பாடு பண்ணி இங்க தங்கவச்சதே அவங்களோட பாதுகாப்புக்கு தான்." மித்ரன்.
"ஆனா ஏன். " ரத்தன்.
"அத இவெந்தா சொல்லணும். சொல்லு டா ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சி விளையாடுறீங்களே! எதுக்கு?" மித்ரன்.
"மித்ரா, நீ அவன பெரிய வில்லன்னா பாக்குற. பட் அவெ அந்த அளவுக்கு வொர்த் இல்ல."
"நீ சிராஜ்ஜா குறைச்சி எட போடுற தீஷித். " மித்ரன்.
"பட் ஐ கேன் மேனேஜ் கிம். நான் பாத்துக்கிறேன். "
"அப்படி எத்தன பேர சமாளிப்ப. அவெ ஒருத்தன்னா வா வான்னு நேருக்கு நேரா நின்று சண்ட போட்டு பாத்துக்கலாம். ஆனா உன்ன போடா அவெ நேரடியா இறங்கல. ஊர் இருக்குற முக்காவாசி ரவுடிங்களுக்கு உன்ன போடா சொல்லி உத்தரவு போட்டிருக்கான். தகுந்த சன்மானம் கூட தர்றானாம். " ராக்கி.
"எவ்வளவு. " கருணாகரன் கேட்க, அவனை மற்றவர்கள் முறைத்தனர்.
"உங்க நண்பனோட தலைக்கு பத்து கோடி விலை. அவ்ளோ பணம் கிடைக்குதுன்னா இவன போட்டுட்டு சன்மானத்த வாங்கிட்டு போய்டலாமான்னு பல தடவ நானே யோசிச்சிருக்கேன். பட் எங்க பைரவி ஃப்ரெண்ட். இப்ப எனக்கும் தோஸ்துங்கிறதுனால கேடயம் வச்சிட்டு பாதுகாப்புக்கு நிக்கிறேன். " என்றான் ராக்கி.
"பத்து கோடியா! பாய் என்ன பாய் இது? என்னென்னமோ சொல்றிங்க. தீஷ் உயிருக்கு ஆபத்தா. " என்றபடி தீஷித்தின் கரத்தைப் பற்றிய பைரவியின் துடிப்பு தீஷித்தின் மனத்தை தென்றலாய் வருடிச் சென்றது.
சுடரின் காதலன் என்று சந்தேகம் கொண்டு சட்டையைப் பிடித்த போது அவனின் டாம் மீது கோபம் வரவில்லை. 'என்னை சந்தேகம் கொண்டாயே.' என ஆற்றாமையில் உள்ளம் துடித்தது.
இப்போது கரம் பற்றியிருக்கும் நங்கையின் அன்பில் முத்தெடுத்த உணர்வுடன் முகம் மலர.
" தீஷித் என்ன நடந்தது. " என்ற மித்ரனிடமும் நண்பர்களிடமும் அனைத்தையும் மேம்போக்கா கூறினான்.
"அவனுக்கு நான் காம்படீட்டரா தெரியுறேன் போல. அதுனால என்னை கூப்பிட்டு வச்சி கம்பேனிய விலை பேசுனான். மடியலங்கையும் மிரட்டி பாக்குறான். அவ்ளோ தான்." என்க, அவனின் நண்பர்கள் அவனைத் திட்டி தீர்த்தனர்.
இல்ல இன்னும் இருக்கு என்ற ராக்கிக்கு பதிலாக அவனின் லாப்டாப் பேக்கில் இருந்து ஒரு பென்டிரைவின் மூலம் சிராஜ்ஜிற்கு ஓட்டி படத்தை மற்றவர்களுக்கும் டெலிகாஸ்ட் செய்ய,
" அடப்பாவி. நீயா செந்தில கொன்னது! ஏன்?" ராக்கி.
" பின்ன சிராஜ் சொன்னாங்கிறதுக்கா ன்னையே நோண்டிட்டு இருத்தா எப்படி நிம்மதியா இருக்க முடியும். அதா க்ளியர் பண்ணி விட்டுட்டேன். "
"நீ கொல பண்ணிட்டியா. " எனப் பைரவி பிடித்திருந்த கைய விட,
" அவெ என்ன பெரிய தியாகியா. கொல பண்ணேன்னு சொல்லி ஃபீல் பண்ற. அவெந்தா கண்ணாயிரம் அங்கிலயும் உன்னோட சாரதாம்மாவையும் கொல பண்ண வந்தது. மறந்திடாத. " என மீண்டும் கரம் பற்றிக் கொள்ள, அதை வெடுக்கென உறுகிக் கொண்டு ராக்கியின் அருகில் சென்று நின்று கொண்டாள். பின்,
" சிராஜ்க்கு செந்தில் அவ்வளவு முக்கியமான ஆளா என்ன? அவனோட டெத்துக்கு பல கோடி குடுக்குற அளவுக்கு. இன்னும் நீ முழுசா எதையும் சொல்லி முடிக்கல. " பைரவி.
"டாம். நீயும் போலிஸ் தான்னு நிறுபிச்சாட்ட. குட் குட்டா கொஸ்டீன் கேக்குற. "
"நேரத்த வேஸ்ட் பண்ணாம பதில சொல்லு. நான் வீட்டுக்கு போகணும்."
"இப்ப ஒருத்தர் சாகுறப்போ மரண வாக்கு மூலம் குடுப்பாங்க. தெரியுமா உனக்கு. அந்த மாதிரி குடுக்கணும்னு இவனுக்கும் ஆச போல. குடுத்தான். ஆனா அது சிராஜ்ஜ காலி பண்ற அளவுக்கு ரொம்பவே ஸ்டாங்கா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. கிணறு வெட்ட உள்ள இருந்து பூதம் கிளம்பி வந்திடுச்சி."
"செந்தில் குடுத்த வாக்கு மூலத்த பத்தி சிராஜ்க்கு எப்படி தெரியும். " ராக்கி.
"நாந்தா அப்பாய்மெண்ட் வாங்காம அவன போய் பாத்து போட்டு காட்டீட்டு வந்தேன். " என்றவனை அனைவரும் சேர்ந்து திட்டி தீர்த்தனர்.
" டாம் ஒரு ஃப்ரெண்ட்டா நான் உனக்கு குடுத்த வாக்க நிறைவேத்திட்டேன். " என்றவன் ஒரு செல்ஃபோனை அவளிடம் நீட்டினான்.
"யாரோடது. " பைரவி.
"செந்திலோடது. "
"இதுல என்ன இருக்கு. " என்றவள் ஃபோனை ஆன் செய்ய அது வழக்கம் போல் லாக்காகி இருந்தது.
"லாக் ஆகிருக்கு. " என்றவளிடம்.
"பின் நம்பர் தெரியும். பட் நீ பாக்க வேண்டாம். சிபீஐ கிட்ட குடு. இத்தோட சுடர் கேஸ் முடிஞ்சிடும். " என்க பைரவியின் கண்கள் பளிச்சிட்டது.
"நிஜமாவா. இதுல யார் கடத்தீட்டு போனாங்கிறதுக்கான எவிடென்ஸ் இருக்கா. "
"எஸ்... கடத்துனது மட்டுமில்ல யார் சுடர கொன்னான்னு கேட்டியே அதுக்கான பதில் அதுல வீடியோ வடிவத்துல இருக்கு. " என்ற போது தீஷித்தான் குரலில் ரௌத்திரம் இருந்தது.
'உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.' எனச் சுடரை வீட்டை விட்டு வெளியே வரவைத்த காதலன் என்ற கயவனிடம் மாட்டி அவள் அனுபவித்த துயரங்கள் பல. உணவு கொடுக்காது தினமும் போதை வஸ்துக்களை மட்டுமே கொடுத்து, பெண்ணவளின் உடலை பல கயவர்கள் சேந்து சூரையாடி உள்ளனர். அந்தப் பலரில் முதல் முதலில் அந்தப் பாதக செயலுக்கு ஆரம்ப புள்ளி சிராஜ்.
"ஹி இஸ் வர்ஜின். சோ நான் ருசி பாத்ததுக்கு அப்றம் தான் உங்களுக்கு. " என்றவன் ஆசை தீர அவள் அலுத்து போகும் வரை சித்தரவதை செய்தான். பின் சுடர் அவனின் பிஸ்னஸ் பார்ட்னர்களுக்கு கை மாற்றப்பட்டாள். பெண்ணவளின் உடலை கூறு போட்ட எவனும் சுடரின் மீது இரக்கம் காட்டவில்லை. பின் விசாகனிடம் ஒப்படைக்கப்பட, அவளின் தேகம் புசித்த செந்தில் அதை வீடியோ எடுத்து வைத்திருந்தான்.
மங்கைகள் யாரும் இரவில் மஞ்சம் வராத போது அந்த வீடியோவை ரசித்து பார்ப்பதுண்டு. அதீத போதையால் சுடரின் உடல் நிலை பாதிக்கப்பட்ட பின். சிராஜ் வரவழைக்கப்பட்டான்.
"பாடி தாங்காது. எப்பே வேண்ணாலும் செத்திடும். என்ன பண்ண. கடல்ல தூக்கி வீசிடுவோம்மா. " விசாகன்
"இல்ல. இவளோட டெத்து அந்த கிழவன நடுங்க வைக்கணும். எவ்ளோ சொல்லியும் கேக்காம கேஸ்ஸ மேல் கோர்ட்டுக்கு கொண்டு போன கிழத்துக்கு பயத்த வரவைக்கணும். அதுக்கு இவ உடம்ப கிழவெ ஊர்ல போட்டு. அதுவும் ஒட்டு துணி இல்லாம. அப்பதா அந்த கிழம் அடங்கும். " என்றவன், கால்வாசி உயிருடன் கிடந்தவளின் அருகில் சென்று,
" என்ன நேருக்கு நேர் நின்று பேசக் கூட தகுதி இல்லாத பொட்ட நாய் நீ. என்னைத் தோக்கடிக்கிறேன்னு என் ஆஃபீஸ் ஏறி வந்து சவாலா விடுற. ***. இனி ஒரு பயெ என்னை எதித்து நிக்க முடியாது. நின்னா அவெ வீட்டு பொம்பளைங்களுக்கு இதே கதி தான்னு பயம் வரணும். " என்ற சிராஜின் குரலும் முகமும் தெளிவாக பதிவாகி இருந்தது.
அந்த கொடூர காட்சிகளைத் தாங்கிக் கொள்ளும் மனம் பைரவிக்கு கிடையாது என்பதால் பார்க்காதே என்றான் தீஷித். பைரவியின் கையில் இருந்த ஃபோனை ராக்கி வாங்கி கொண்டு,
"இத நான் ஒப்படைக்க வேண்டிய ஆள் கிட்ட ஒப்படைச்சிருக்கிறேன். நீ இப்ப பத்திரமா வீட்டுக்கு போய் நான் சொன்னத செய்."
"ஏன்?. நானே பிரவீன் அண்ணாக்கிட்ட சொல்லிட்டு டிப்பார்மெண்டல ஒப்படைக்கிறேன். "
" வேண்டாம் பைரவி இப்ப சூழ்நில கொஞ்சம் சரி இல்ல. கோர்ட்டுல கேஸ் முடிஞ்சி மாமாவும் அத்தையும் ஊர் திரும்புற வர எல்லாரையுமே பாதுகாக்க வேண்டிய இடத்துல நாங்க இருக்கோம். நீ கவனமா வீடு போய் சேரு. " என்றவன் பைரவியை துரத்தி விட்டு தீஷித்திடம் மீண்டும் வந்து நின்றான்.
'என்ன பாய் மறுபடியும் அவகேடோ பத்துக்குல போறாரு. அவ்ளோ தான்னு நினைச்சேன். இன்னும் இருக்கு போலயே. என்னைய துரத்தி விட்டுட்டு ராக்கி பாய் இனி என்ன விசாரிக்கப போறாரு. நானும் ஒரு போலிஸ் தான்னு மறந்திட்டாரோ.. ' என நினைத்தவள் தீஷித்திடம் கேள்வி கேட்டு அவன் பதில் கூறி முடிக்கும் வரை நான் உடன் இருப்பேன் என பிடிவாதமாக நிற்க, தலையில் அடித்துக் கொண்டான் ராக்கி.
" என்ன கேக்கணும் ராக்கி."
" நீ இன்னும் நடந்தத முழுசா சொல்லி முடிக்கல. "
"சொல்ட்டேனே. "
" எங்களுக்கு ட்ரெயினிங் குடுக்கும் போதே ஒருத்தனோட பார்வை அப்றம் அவன சுத்தி இருக்குற சூழ்நிலைய வச்சி அவெ எவ்ளோ தூரம் உண்மைய சொல்லிருக்காங்கிறத தெரிஞ்சுக்க முடியும்னு சொல்லி தந்தாங்க. ஒரு வாரத்துக்குள்ள உன்னோட தலைய கொண்டு வரச் சொல்லி கெடு விதிச்சிருக்கான்னா. அதாவது அரசனூர் கேஸ் தீர்ப்பு வர்ற வரைக்கும் நீ வெளில நடமாடக்கூடாது.
அப்போ சுடர் கேஸ் மட்டுமில்ல அரசனூருகக்கும் சிராஜ்ஜுக்கும் இடைல நடந்த எதுவோ உனக்கு தெரிஞ்சிருக்கு. கமான். செந்தில் மூலமா நீ வேற என்னென்ன தெரிஞ்சுக்கிட்ட. " என ராக்கி கேட்க,
அவனின் நண்பர்களும் ராக்கிக்கு ஆதரவாகி, " சொல்லித் தொலடா. இல்லன்னா தலை தப்பாது. "
"ஏன்டா பிட்டு படம் ஓட்டுறவெங் கணக்கா பிட்டு பிட்டா சொல்ற. முழுசா சொல்லி முடி டா. " என ஆளாளுக்கு பேச, வேகமாக உள்ளே வந்த பைரவி அவனின் லாப்டாப் பேக்கில் இருந்தவற்றை சோதனை போட்டாள். அதில் இருந்தவைகளை பார்த்து அதிர்ச்சியில் அவளின் விழிகளை வெளியே வந்து விடும் என்பது போல் விரித்தாள்.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..