முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 97


 

அத்தியாயம்: 97



மருத்துவமனை. 


சாப்பரை நிறுத்தி விட்டு இறங்கிய பைரவியின் முகம் அத்தனை பொலிவுடன் இல்லை. அதீத கலக்கம். நடையில் எப்பொழுதும் இருக்கும் துள்ளல் இல்லை. யாரோ காலில் இரும்பு குண்டை கட்டி விட்டது போல் இருந்தது அவளின் நடை. எடுத்து வைக்காது தரையை காலால் தேய்த்து தேய்த்து நடந்தாள். 


"ஹலோ... இங்க ஒரு ஜீவன் நிக்கிது. கண்ணுக்கு தெரியுதா இல்லயா. " என அவளின் முன் வந்து நின்று கையை ஆட்டினான் ராக்கி. அப்போதும் அவள் நின்றாளே தவிர ராக்கியின் முகத்தை உற்று நோக்கவில்லை. 


"பைரவி‌. பையூம்மா. " என அவளின் தோளை உலுக்கிய பின் தான் அவனைக் கண்டாள் பைரவி. பாவம் அவனும் எவ்வளவு நேரம் தான் கூப்பிட்டு கொண்டே இருப்பான். 


"ஹாய் ராக்கிண்ணா. நீங்க எப்ப சென்னை வந்திங்க. " என்றவளின் கண்ணாடியை உறுகியவன், 


"நீயெல்லாம் எதுக்கு கண்ணாடி போட்டிருக்க. ஸ்டெயில்லுக்கா இல்ல தூரத்து பார்வைக்கா. பக்கத்துல வந்தா கூட தெரிய மாட்டேங்கிதுன்னா கண்ணாடில ப்ராப்ளம் இல்ல கண்ணுல தான் ப்ராப்ளம். " என அவளின் கண்ணாடியை அணிந்து கொண்டு கலாட்ட செய்ய, 


"ம்ச்... குடுங்க அதை. நீங்க எதுக்கு இங்க வந்திங்க. "‌


"நண்பன பாக்க. " 


"யாரு உங்க நண்பன். " 


"தீஷிதன். கொஞ்ச நாளாவே நாங்க க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். " 


"பெங்களூர்க்கு போனிங்களே. " என அவள் ஆரம்பிக்கும்‌ போதே. 


"அத அப்பறமா பேசலாம். முதல்ல வா தீஷித்த பாத்திட்டு வரலாம். " என அழைத்துச் சொல்ல,  அபிராமி வரவேற்றார் சந்தோஷமாக. 


"அம்மாடி. நீ சொன்ன மாதிரியே அவெ குணமாக்கிடுவானாம். காலு செட்டாகிடுச்சாம். இன்னைக்கி காலைல கட்ட பிடிச்சி ஒன்னு ரெண்டு அடி நடக்கச் சொன்னாங்க. நடந்தாம்மா. எம்புள்ள என்னை மாதிரி சக்கர நாக்காலில உக்காந்திடுவானோன்னு நான் பயந்திட்டு கிடந்தேன். அப்படி இல்ல. இனி யார் உதவியும் இல்லாம எப்புள்ள நடக்கப் போறான்." என்றவர் முகத்தில் அத்தனை சந்தோஷம். 


ராக்கி, "அப்ப கட்ட பிரிச்சிட்டாங்களா.. "  


" ஒரு வாரம் மட்டும் இருக்கட்டும்னு புதுசா கட்டு போட்டு விட்டிருக்காங்க. நாளைக்கி வீட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க. கொஞ்ச நாளுக்கு கால பத்திரமா பாத்துக்க சொல்லிருக்காங்க. " என்றபடி தீஷித்தின் நண்பர் அனைவரும் அங்கு வந்தனர். 


"தேங்க்ஸ் பைரவி. சரியான நேரத்துக்கு நீ கால் பண்ணலன்னா அவன காப்பாத்திருக்க முடியாது. உனக்கும்  மதுசூதனனுக்கு‌ம் நன்றி. இந்த ஹாஸ்பிடல் வசதி செஞ்சி தந்ததுல இருந்து எல்லாத்துக்கும் நன்றி. " என ரத்தன் சொல்ல, 


"அந்த தம்பி தான் உன்னோட. " என்ற அபிராமியின் முகம் சோர்ந்து விட்டது. தன் மகன் விரும்பும்‌ மங்கையை அவனுடன் சேர்ந்து வைக்க முடியாதோ என்ற கலக்கம் பிறக்க, அதை பைரவியிடமே கேட்டார் அவர். 


"எம்பையன உனக்கு பிடிக்கலயாம்மா. " என்றவரிடம் பைரவி எதுவும் சொல்லாது. 


"நான் போய் அவர பாத்திட்டு வர்றேன்ம்மா. " என நலுவிச் சென்றாள் அவள். 


உள்ளே அக்ஷ்ரா தன் அண்ணனைத் திட்டிக் கொண்டிருந்தாள். 


"காலாகாலத்துல கல்யாணம் பண்ணிருந்தா இப்படிப் பழம் பிழிச்சி குடுக்க தங்கச்சி வர வேண்டி இருக்காது. உன்னோட பொண்டாட்டியே உன்ன கண்ணும் கருத்துமா பாத்திருப்பா. " எனக் கன்னடத்தில் திட்ட‍,


"ஏன்? தங்கச்சி ஆரஞ்சி பிழிச்சி குடுத்தா ஆகாதா. " 


"ஆகாது தான். உனக்கு உம் பொண்டாட்டி தான் செய்யணும். நான் இல்ல. " 


"ஒரு சாத்துக்குடி சாறுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்றியே! இது நியாயமா?. " என அவனும் தங்கையிடம் வம்பு நிற்க, 


" வயசு என்ன ஆது. முப்பத்தி ஒன்னாச்சி. அடுத்த வர்ஷம் முப்பத்தி ரெண்டு.‌.. " 


"அடுத்த வர்ஷம் முப்பத்தி மூணு. அடுத்து முப்பத்தி நாலு. முப்பத்தி அஞ்சி. இப்படி உம்பொண்ணுக்கு கணக்கு பாடம் நடத்துற மாதிரி நடத்தத்தா வந்தியா. வயசுங்கிறது ஏறுமே தவிர இறங்கவே இறங்காதும்மா. இது தத்துவம் தெரிஞ்சுக்க. " என அவனும் விளையாட, இருவரின் சம்பாஷனைகள் புரியாது நின்றவள் திருதிருவென முழித்தாள். அது ரசிக்கும் படி இருந்தது. 


"நீங்களாது கல்யாண தேதிய சீக்கிரமா சொல்லுங்க. " என்க, பைரவி சங்கட்டமாக உணர்ந்தாள். 


"ஹாய்‌ டாம். அவள விடு. நேத்து நான் கால் பண்ணேன். ஏன் எடுக்கல. " என உரிமையுடன் கேட்க, அவள் பதில் சொல்லாது அவனைப் பார்த்தபடி நின்றாள்.


" பிஸியா… ஸ்டேஷன்ல நிறைய வேலயா. டாம் உன்னைத்தான். " என்க, 


"நான் உங்க கிட்ட பேசணும். " 


"அக்ஷரா இருக்கான்னு நினைக்காது. அவள சுவத்துல மாட்டி வச்ச பெயிண்டிங்கா நினைச்சி நீ பேச வந்தது பேசு. " என்றவனுக்கு முழு ஆரஞ்சு பழங்கள் கிடைத்தது. தங்கை‌ தூக்கி எறிந்திருந்தாள் அவன் மீது. 


"சொல்லு டாம். என்ன பேசணும்?" என்க, அவளின் மௌனம் கண்டு அக்ஷரா வெளியே சென்றாள். 


" தீஷ்… எதுக்காக எங்கிட்ட பொய் சொன்னிங்க. " 


" வாட்... பொய்யா! நான் எதுக்கு டாம் பொய் சொல்லணும். அதுவும் உங்கிட்ட…" என விளையாட்டாக பேச,


"கரெக்ட்... பொய் சொல்லல. உண்மைய முழுசா மறைச்சிட்டீங்க. சரியா." என்றாள் எள்ளல் தெறிக்கும் குரலில். 


"நீ என்ன சொல்ற டாம். எனக்கு புரியல. " அவளின் குரலில் இருந்த நக்கல் அவனை சீரியஸ்ஸாக பார்க்க வைத்தது.


"ஓகே புரியுற மாறியே சொல்றேன். நீங்க தான சுடரக்காவோட அன்நோன் சீக்ரெட் பாய் ஃப்ரெண்ட். " என்றாள் உறுதியாக. 


நேற்று காலை சாருவுடன் நடந்த சம்பாஷனைகள் அவளுக்கு சந்தேகத்தை தந்தது. தீஷிதன் தான் அந்த அன்நோன் சீக்ரெட் பாய் ஃப்ரெண்ட் என்ற முடிவுக்கு பைரவி வர நிறைய காரணங்கள் உள்ளன. அதில் முதலாவது சுடர் அறையில் இருந்து ராக்கி எடுத்துச் சென்ற க்யூப் போன்ற புதிரை மது சால்வ் செய்திருக்க, அது பைரவியின் கையில் கிடைத்திருந்தது. அதில் இருந்த சிம்பளை தீஷித்தின் அலுவலக அறையில் பார்த்த நினைவு வந்தது. 


அடுத்த காரணம் காணாது போயிருந்த அலைபேசி பற்றி பொய் உரைத்தது. அதை அவளின் டிப்பார்மெண்ட்டிற்கு சென்று தீஷித்தின் பொய்யை உறுதி செய்து கொண்டாள். அவனுக்கு அரசனூர் வர காரணங்கள் தேவை. இதைப் பயன்படுத்திக் கொண்டான். எதற்காக அங்கு வந்தான் என்று யோசித்தவளுக்கு கிடைத்தது அடுத்த காரணம். சுடருக்கு பரிசளித்த இரண்டாவது பரிசு. 


'அது ஒரு மரத்தால செஞ்ச புக் மாதிரி இருந்தது. புக்குன்னு சொல்றத விட சின்ன சைஸ் என்சைக்ளோ பீடியான்னு சொல்லலாம். ' எனச் சாரதா ஒரு முறை கூறியது நினைவு வந்தது. அது போன்ற ஒன்றை அரசனூரில் இருந்து புறப்படும் போது தீஷித்தின் காரில் இருந்தது. 


தன்னைப் பற்றிய அடையாளங்களை மறைக்க வந்துள்ளான் என நினைத்தவள் பிரவீனைப் பார்த்து சுடரின் அலைபேசியில் உள்ள புகைப்படங்களை ஆராய்ந்தாள். அவள் நினைத்தது போலவே அது தீஷித் தான். இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் அதில் இருந்தன. 


" உனக்கு சுடர முன்னாடியே தெரிஞ்சிருக்கு. நீங்க லவ் பண்ணிருக்கிங்க. " 


"நோ… எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்ததே இல்ல. " என்றான் அழுத்தமாக. அவனின் அருகில் வேகமாக சென்றவள்,


"ஹாங் ரெண்டு பேரும் லவ் பண்ணாத்தான லவ்வர். அவங்க லவ்வ சொல்லிருக்காங்க. முதல்ல மறுத்த நீ, அவங்களோட கட்டாயத்துனால காதலிக்கிற மாதிரி நடிச்சி, அவங்கள கடத்தீட்டு போய்… கெடுத்து… ச்சீ…


இத நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல தீஷித். அதுவும் உங்கிட்ட இருந்து. ஏன் தீஷித் இப்படி பண்ண? ஒரு பொண்ணு உன்ன விரும்புன பாவத்துக்காக அவள கொடூரமான பலாத்காரம் பண்ணி ஏன் கொன்ன… ஏன் கொன்ன. உனக்கு அவங்க என்ன செஞ்சாங்க. " என ஆவேசமாக தீஷித்தின் சட்டையை பிடித்து உலுக்கி அழுதுகொண்டே பேச, ராக்கி உட்பட தீஷித்தின் நண்பர்கள் அனைவரும் உள்ளே ஓடி வந்தனர். 


"பையூ... என்ன பண்ற? காம்‌ டவுன் பையூ." என ராக்கி பிடித்து இழுத்து செல்ல பார்க்க பைரவி தீஷித்தின் சட்டையை விடுவதாக இல்லை.  


அவளால் நம்பவே முடியவில்லை தீஷித் தான் சுடரின் காதலன் என்பதை. அவனா அவளைக் கடத்தி கொண்டு சென்று போதை மருந்து கொடுத்து பலரால் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்தது. 


இதை யோசிக்கும் போதே பைரவி மனத்தில் முள் குத்தியது போன்று உணர்ந்தாள். ஏனெனில் தீஷித் அவளுக்கு ஸ்பெஷலாகியிருந்தான். அவள் மனச் சிகரத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவன் அதற்கு தகுதியற்றவன் என்ற எண்ணமே அவளுக்கு வேதனையை தந்தது. அதுவும் சுடர் விடயம் என்பதால் வேதனை அதிகமாக இருந்தது.


"பைரவி என்ன பண்ணிட்டு இருக்க. கொஞ்சம் அமைதியா இரு பைரவி. " என ராக்கி அதட்டிய பின் சட்டையை விட்டவள், 


"பாய்… இவெந்தா அது. இவெந்தா சுடரோட ரகசிய காதலன். ஆம் ஐ ரைட். சொல்லு டா சுடருக்கு ஏன் அப்படி ஒரு தண்டன குடுத்த." 


ராக்கி திரும்பி தீஷித்தைப் பார்த்தான். அவனின் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. அமைதியான ஆழ்கடலை போல் கணிக்க முடியாத படி இருந்தது அது. 


"உண்ம எதுன்னு உறுதி செய்யாம பலி போடாத பைரவி. "


" நான் பலி போடல. நான் சொல்றது நிஜம்மா பொய்யான்னு அவெங்கிட்டையே கேளுங்க. " என்க, தீஷித் பதில் சொல்லவில்லை அதற்கு மாறாக அவனின் நண்பர்கள் பதில் பேசினார். 


"நீ யார பத்தி பேசுற பைரவி. " நந்திதா.


"உங்களுக்கு தெரியாது. அவனுக்கு தெரியும். " 


"ஃப்ரெண்ட் எங்களுக்கு எந்த சீக்ரெட்ஸ்ஸும் கிடையாது. " ரத்தன்.


"எங்க ஃப்ரெண்ட்டு லைஃப்ல ஒரு பொண்ணு இருக்கா. அது நீ மட்டும் தான். உன்ன தவிர அவெ இதுவர‌ யாரையும் மனசுல நினைச்சது இல்ல. " கருணாகரன். 


"உன் ஒருத்திக்காக இத்தன வர்ஷமா தன்ன விரும்பி வந்த அத்தன பேரையும் அவாய்ட் பண்ணான். " அப்சரா.


"அப்ப சுடருக்கு அனுப்புன மெஸ்சேஜஸ்… கிஃப்ட்... பாருங்க. இவங்க ரெண்டு பேரும் சாட் பண்ணி பேசிக்கிட்டத. உருகி உருகி பேசி ஒரு பொண்ண நம்ப வச்சி. ச்சி... " என அருவெறுப்புடன் பேசியவளின் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தானே தவிர பைரவியைத் தடுக்கவில்லை. சொல்லப் போனால் அதையும் ரசித்தான் அவன். அவனின் டாம் கேர்ளின் கொள்ளும் கோபம் கூட மென்மையாக இருந்தது.


" என்னடா இவ கண்டத பேசுறா. சும்மா உக்காந்திருக்க. யாருடா சுடர். " ரத்தன். 


" ம்ச்… சாரதா ஹோம்ல இருந்து வந்ததே அது. " என்றவனின் முகத்தில் சிறு அலட்சியமே இருந்தது. 


"என்ன அது இதுன்னு சொல்ற. " பைரவி ஆவேசமாக கேட்க,


"பின்ன வேற எப்படி சொல்ல சொல்ற. நீ சொல்ற சுடர்விழி நாங்க எல்லாரும் சேந்து ஆரம்பிச்ச மினிஏச்சர் பிஸ்னஸ்க்கு வந்த கஸ்டமர் அவ்வளவு தான். " நந்திதா. 


" அவ்ளோ தானா. " என்றவள் தீஷித்தின் முன் வந்து நின்று கொண்டு. 


"அவ்ளோ தானா தீஷித். " என்க, 


" அவளோட ஹோம்க்கு இன்வைட் பண்ற சில கெஸ்டுங்களுக்கு ப்ரசன்ட் பண்ண எங்கள அப்ரோட்ச் பண்ணா. டூ த்ரி மன்த் பிஸ்னஸ் டாக் மட்டும் தான் இருந்தது. நான்னு இல்ல இதோ இவெ அவான்னு எல்லார் கூடவும் பேசுவா.  கடக்காரனுக்கும் கஸ்டமருக்கும் இடைல இருக்குற உறவு தான். 


ஒரு நாள் நேர்ல மீட் பண்ற சூழ்நில வந்தது. மீட் பண்ணோம். அப்பவே அந்த நொடியே ஹி ப்ரப்போஷ் மீ. " தீஷித். 


"ஆனா அங்க வச்சே தெளிவா சொல்லிட்டு தான் வந்தான். எம்மனசுல வேற ஒருத்தி இருக்கான்னு நமக்குள்ள அந்த மாதிரி எந்த உறவும் வேண்டாம். நட்பா தொடருவோம்னு எங்க முன்னாடி தான் அவளுக்கு புரியுற மாதிரி எடுத்து சொன்னான். " அப்சரா. 


"ஆனா அவ கேக்குறதா இல்ல. திரும்ப திரும்ப டார்ச்சர் பண்ணா. " கருணா. 


"பேசி பேசி கன்வின்ஸ் பண்ண ட்ரெய் பண்ணா. " ரத்தா. 


"நான் ப்ளாக் பண்ணிட்டேன். அதுக்கப்பறம் நான் அவளோட கான்டாக்கலயே இல்ல. " தீஷித். 


" பட் நீங்க ரெண்டு பேரும் சாட்ல பேசிக்கிட்டது. " பைரவி. 


" இதோ பாரு‌. அது பிஸ்னஸ்காக ஓப்பன் பண்ண சோசியல் பேஜ்ஜஸ். அதுல ப்ரைவசி கிடையாது. ஒருத்தருக்கு மட்டும் தான்னு எதையும் பர்ஷ்னலா அனுப்ப முடியாது. எங்க நாலு பேருக்குமே அது சென்ட் ஆகும். யார் வேண்ணாலும் பதில் சாட் பண்ணுவோம். அவ பேசி பழகுனது கூட தீஷித் கிட்ட கிடையாது. எங்கிட்ட. அவ அனுப்புற எல்லா மெஸ்ஏஜ்க்கும் நாந்தா ரிப்ளே பண்ணவேன். " நந்திதா சொல்ல நம்ப முடியாது தவித்தாள் பைரவி. 


"இல்ல. ST ங்கிற பேர்ல இன்னொரு ஐடி. அதுல நிறைய பேசிருக்காங்களே. லாப்டாப்ல இருக்கு. பொய் சொல்லாதிங்க. " 


" பைரவி தீஷித் அவள ஃப்ளாக் பண்ணதுக்கு அப்றம் இந்தியாலயே கிடையாது. பிஸ்னஸ்ஸ சட்டவுன் பண்ணிட்டோம்." அப்சரா. 


"தெரியும். ஆனாலும் இங்க பாருங்க. " என லாப்டாப்பை எடுத்துக் காட்ட, அனைவருக்குமே அதிர்ச்சி. தீஷித் பெயரை சொல்லி வேறு யாருடனோ சாட் செய்துள்ளாள் சுடர்.. முகம் தெரியாத இந்த சமூக வலைதளத்தில் என்னென்ன செய்ய முடிகிறது. 


நடந்த உண்மைகளை ஐவரும் சேர்ந்து கூறும் போது நம்ப முடியாது தவித்தவளுக்கு உதவி செய்தது ராக்கி. 


"நம்பித்தான் ஆகணும் பைரவி. அந்த ஐடி ஒரு ஃபேக் ஐடி. அந்த ஃபேக்-குக்கு சொந்தக்காரெ சிராஜ்ஜோட ஆளு. அத்தோட சுடருக்கு மாசாமாசம் கிஃப்ட் அனுப்புனதும் அவெந்தா. 


அரசனூர் கேஸ்ல இருந்து தப்பிக்க அவெ சுடர தன்னோட வலைல சிக்க வைச்சி‌ கொடூறமா கொல பண்ணிருக்கான். " 


"நிஜமாவா. " 


"நிஜம் தான் பைரவி. வேணும்னா உம்புருஷன்ட்ட கேளு. அந்த ஐடி யார் பேர்ல இருந்தது எங்க இருந்ததுன்னு எல்லாத்தையும் எடுத்தது அவெந்தான். அத கண்பார்ம் பண்ணத்தா நான் பெங்களூர் போயிருந்தேன். " 


"அது உண்மன்னா நீ ஏன் அரசனூர்க்கு எங்கூட வந்த? எதைத் தேடுன? ஃபோன் விசயத்துல ஏன் பொய் சொன்ன?" பைரவி தீஷித்தின் மீது இருந்த சந்தேக மெல்ல மெல்ல வெள்ளமாய் வடியத் தொடங்கி இருந்தது. 


" உங்கூட பழக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது வேற என்ன பண்ண சொல்ற டாம். " தீஷித் கூலாகவே சொல்ல, அவனின் நண்பர்கள் அனைவரும் அவனை முறைத்தனர். 


" கான்ஃப்ரெஸ் அட்டன் பண்ணாததுக்கு இது தான் காரணமா?" எனச் சொல்லி அவனைச் சுற்று போட்டனர். பைரவி முழுதாக தெளிய வில்லை போலும். அவளின் குழம்பிய முகத்தை ரசித்தபடி இருந்தவனின் கவனத்தை ஈர்த்தது அவனின் அலைபேசியின் இசை.  


"அக்ஷரா. " எனக் காதில் வைத்தவனின் முகம் பதட்டத்தைத் தந்தெடுத்தது. 


தொடரும் ...

💛அனிதா குமார்💛

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...