அத்தியாயம்: 101
விடிய விடிய தன் திருமண வாழ்க்கையைப் பற்றி புலம்பிய பைரவியின் விழிகள் வலுக்காட்டாயமாக மூடும் வரை இதழை மூடவில்லை. இப்போது மணி பன்னிரண்டு. இரவு அல்ல நண்பகல்.
மேஜையில் வைத்திருந்த அலைபேசி பலமுறை அடித்து ஓய்ந்து விட்டது. எடுக்கத்தான் ஆள் இல்ல.
"அந்தக் கழுத எத்தன வாட்டி தான் கத்துமோ. காதுல வாங்காம தூங்குறா பாரு. எந்திரி டி. " எனச் சாந்தி வந்து முதுகில் போடும் வரை எழவில்லை.
"ம்ச்… என்னம்மா நீ. " எனச் சடைத்துக் கொண்டு முகம் திரும்ப, அங்கு சாரு அவளை முறைத்தபடி இருந்தாள்.
"என்னடி நீ காளி மாதிரி முழிக்கிற. "
"என்னை விட்டா காளி மாதிரி உன்ன குத்தி கொன்னிடுவேன். " என்றாள் அவள்.
"விடணுமா. " என்றபோது தான் கவனித்தாள் பைரவி சாருவை இறுக அணைத்து படுத்திருப்பதை.
"ஹி... சாரிடி. ஹி. " என அசட்டு சிரிப்புடன் அவள் எழ,
"ம்மா… இப்படியாடி இறுக்குவ. உடும்பு பிடி. இவ்ளோ டைட்டா கட்டிபிடிச்சிட்டே தூங்குனா இன்னும் ரெண்டு நாள்ல நான் செத்தே போய்டுவேன். "
"ஏண்டி இப்படி பேசுற. " எனக் கரம் பற்ற,
"நான் கண் முழிச்சி ரெண்டு மணி நேரமாச்சி. பாத்ரூம் கூட போகல தெரியுமா." எனப் பாவமாக சொல்ல, பைரவி உடனே கரங்களுக்கு விடுதலை கொடுத்து,
"அதெல்லாம் கன்ட்ரோல் பண்ண கூடாது. போ... போ…" எனத் துரத்த, சாரு முறைத்தபடி சென்றாள்.
டைங் என்ற சத்ததுடன் வாட்ஸ் அப் மெஸ்ஏஜ் வந்தது.
'யாரு டா அது. மெஜ்சேஜ் பண்றது. ' என எடுத்து பார்க்க, மது விடம் இருந்து பல குறுந்தகவல்கள்.
" இன்னைக்கி லன்ச் டயத்துல மீட் பண்ணலாம். அப்பாய்மெண்ட் மட்டுமில்ல உனக்கு ஒரு செக்யூரிட்டி கார்டும் ரெடியா இருப்பான். " என்றிருக்க,
" நான் வரல. கேன்சல் ஆல். " என அனுப்பிய பதில் உடனே படிக்கப்பட்டிருந்தது.
" ஏன் கேன்சல் பண்ணணும். "
"உங்க க்ளைன்ட் எல்லாத்துக்கும் லன்ச் வாங்கி குடுத்து தான் பிஸ்னஸ் பேசுவீங்களா?"
"சம் டயம்ஸ் ரெஸ்டாரன்ட். தேவப்பட்டா ஹோட்டல்ல கூட மீட்டிங் இருக்கும்."
" ரூம் போட்டு டிஸ்கஷனா?. " என்க, மதுவின் உதடுகள் அழகாய் விரிந்தன.
" நான் உன்ன ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கேன்னு கூப்பிடல. டீசென்ட்டா ஒரு பப்ளிக் ப்ளேஸ்க்கு தான வரச் சொல்றேன். "
"என்னால வர முடியாது. "
"ஏன்?"
" உங்க கூட லன்ச் சேர் பண்ணிக்க எனக்கு விரும்பமில்ல. இன்னைக்கி சன்டே வேற. அவிச்சி வச்ச எதையும் நான் கண்ணால கூட பாக்க விரும்பல. அத்தோட உங்க கூட தனியா எங்கயும் வர விரும்பவில்ல. "
"தனியா இல்ல. அது பப்ளிக் ப்ளேஸ். "
"எதுவா இருந்தாலும் நான் வரல."
"பயமா?"
"ஆமா. "
"நால்ர வர்ஷம் ஒன்னா, ஒரே வீட்டுல, ஒரே பெட்ல இருந்த என்னோட மனைவிக்கு. "
"திருத்தம். முன்னாள் மனைவி. "
"இட்ஸ் ஓகே. எங்கூட நால்ற வர்ஷம் குடும்ப நடத்துன உனக்கு ஏன் பயம்?"
"உங்க எதிர்கால மனைவிக்கு தெரியுமா? நாம ஹோட்டல்ல மீட் பண்ண போறது. "
"எந்தக் காலத்துலயும் எனக்கு மனைவின்னா அது நீ மட்டும் தான்டி. நீ எங்கூட இருந்தாலும் இல்லன்னாலும் அந்த இடத்துக்கு வேற யாரும் வர நான் அனுமதிக்க மாட்டேன். அண்டு நான் உன்ன மீட் பண்ண கூப்பிட்டது ரெஸ்டாரன்ட். ஹோட்டல் இல்ல. "
" டயலாக் நல்லா இருக்கு. பட் உங்களுக்கு இது செட்டாகல."
"இட்ஸ் ஓகே. நான் டேபிள்ஸ் புக் பண்ணிருக்கேன். சரியா ரெண்டு மணிக்கு வந்திடு. "
"நான் வர முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா டேபிளு புக்கிங்குன்னு என்னென்னமோ பேசுறிங்க. "
"ராக்கி ஃபோன் பண்ணிருந்தானா. " என்க,
'என்ன சம்மந்தமில்லாம கேள்வி வருது. ' என முழித்தவள் ஃபோனை பார்க்க இத்தனை மணி நேரமும் அவளுக்கு வந்த அழைப்புகள் அத்தனையும் ராக்கியுடையதும் தீஷித்தின் நண்பர்களுடையதுமாக இருந்தன.
" மோர் தென் ஃபைவ் டயம்ஸ் உனக்கு கால் பண்ணதா சொன்னான். வந்திருக்கா. " மது.
"வந்திருக்கு ஆனா எதுக்கு கூப்பிட்டாரு?"
"ஹாஸ்பிடல்ல ஃபயர் ஆக்ஸிடென்ட்டாம். எந்த ஹாஸ்பிடல்ன்னு தெரியுமா?"
"தீஷித். அவனுக்கு…"
"எதுவும் ஆகிடல. ஆகக் கூடாதுன்னா நீ வரணும். ரெண்டு மணி. "
" வர்றேன். பட் நம்ம பேச்சு பிஸ்னஸ் பத்தினதா மட்டும் தான் இருக்கணும். " என நிபந்தனை விதிக்க, பதில் ஏதும் இல்லாமல் மெஸ்சேஜ் நின்று விட்டது. வேகமாக தீஷித்திற்கு ஃபோன் செய்ய அது எடுக்கப்படவில்லை. ஆனால் அவனின் நண்பர்கள் அவன் நலமுடன் இருப்பதாகவும் மதுவுடன் இருப்பதாகவும் சொல்லி வைத்தனர்.
"ஊஃப். தயிர்சாதத்துக்கிட்ட தான் தீஷித் இருக்கான். அதா என்னை மிரட்டி பாக்குறான் அந்த curd rice. பாத்துக்கிறேன். யார மிரட்டுற? என்னயவா! " என அணிந்திருந்த இரவு உடையின் கையை மடித்து விட்டபடி ஒற்றைக் காலை மடக்கி கட்டில் அமர்ந்தவளுக்கு ஆனந்தம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் அவர்களின் சம்பாசனை சில நிமிடங்கள் நீண்டிருந்ததே. அவன் அனுப்பிய செய்திகளை மீண்டும் மீண்டும் ரசித்து பார்த்த படி படித்துக் கொண்டிருந்தாள்.
" எல்லாம் ஓகே. பட் லாஸ்ட்டா நான் கேட்டதுக்கு பதில் வரலயே. இப்ப நாம போலாமா வேண்டாமா. போவோம் அப்படி என்னத்த பண்ணிடப் போறான். இனி பண்றதுக்கும் எதுவும் இல்ல." என அசால்டாக எழுந்தவளுக்குள் சிறு பரபரப்பு. மதுசூதனனை முதல் முதலாக பார்க்க சென்ற போது கூட இப்படி ஒரு தவிப்பை அவள் உணர்ந்ததில்லை. இன்று ஏனோ இதயம் எக்குத்தப்பாக குதிக்க, கடமைகள் அனைத்தையும் முடித்து விட்டு ஒரு நீல நிற சல்வாரில் தயாராகி நின்றாள்.
படபடப்பும் குறுகுறுப்பும் அவளுக்கு மட்டும் சொந்தமானது இல்லையே. இங்கு மதுவும் அப்படி தான் இருந்தான். பீரோவில் உள்ள உடைகள் அனைத்தும் கட்டிலில் கசக்கி வீசி எறியப்பட்டிருந்தது.
"ச்ச... எதுவுமே செட்டாகல. வெய்ட் வேண்டாம். ப்ளாக்… நல்ல விசயம் நடக்கும் போது ப்ளாக்கா. நோ... ரெட், டேஜ்ஜரஸ். க்ரீன், ரொம்ப மோசமா இருக்கு. " என ஒவ்வொரு டிசர்ட்டையும் அணிந்து கண்ணாடியில் பார்த்து விட்டு தூக்கி எறிய, அறை பைரவி இல்லாமலேயே குப்பைமேடாகியது.
ஒருவழியாக அவனும் ஒரு நீல நிற டீசர்ட்டை எடுத்துக் கொண்டு தயாராகி விட்டான். இரண்டாக சில நிமிடங்கள் இருக்கும் போதே வந்துவிட்டான். ஆனால் பைரவி அவனை வேண்டும் என்றே காக்க வைத்துவிட்டு மூன்று மணி போல் தான் வந்து அவனின் முன் அமர்ந்தாள்.
" ஹாய். " என்றபடி வந்தவளை முடிந்த மட்டிலும் முறைத்தவன்,
"லேட்டா வந்ததுக்கு ஸாரி சொல்ல மாட்டேன். ஏன்னா நீங்க கடுப்பாகணும்னு தான் நான் லேட்டாவே வந்தது. " என்க, மதுவின் விழிகள் மனைவியின் பாவனையில் மையலுடன் மேய்ந்தது.
ஒரே நிறத்தில் உடை. எப்பொழுதும் போல் அவனைப் பார்த்ததும் மின்னும் கண்கள் பொழிவுறும் முகம் ஆடவனை ரசிகனாக்கியது.
" ஐ நோ உனக்கு பன்சுவேஷன்னா என்னன்னு தெரியாதுன்னு. பட் இன்னைக்கி அத கரெக்ட்டா கடைபிடிச்சன்னு சொல்லுவேன். ஏன்னா சரியா ரெண்டு மணிக்கி உன்னோட சாப்பர் ரெஸ்டாரன்ட்குள்ள வந்திடுச்சி. வெளில இருநூறு மில்லி லிட்டர் லெமன் ஜூஸ்ஸ ஒரு மணி நேரமா குடிச்சி முடிச்சிட்டு, பில் கூட பே பண்ணாம எம்முன்னாடி வந்து உக்காந்திருக்க. " எனக் குறுநகையுடன் சொல்ல,
'எப்படி கரெக்ட்டா சொல்றான். ' என முழித்த பைரவி க்ளீன் போல்டாகி விட்டாள் அந்த நகையில். ஆனால் அதில் இருந்து வந்த வார்த்தைகளில் கடுப்புற்றவள்.
"இது தான் பப்ளிக் ப்ளேஷா. " எனச் சுற்றத்தை காட்ட,
"எஸ்... ரெஸ்டாரன்ட் பப்ளிக் ப்ளேஸ் தான? "
"இங்க பப்ளிக்கே இல்லயே. " என்றவளின் பேச்சு உண்மை. வார இறுதி நாளில் ஒரு உணவகம் காற்று வாங்கிக் கொண்டு எப்படி இருக்கும். இருந்தது. இவர்கள் இருவரைத் தவிர அங்கு யாருமே இல்லையே. கடையையே சில மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்து விட்டான்.
வெளியில் வெயில் கொளுத்திக் கொண்டு இருக்க, சில் என்ற ஏசிக் காற்றில் மெல்லிய இன்னிசை இசைக்க, மங்கிய ஒளியில் அழகான ஆடவன் வீட்டிருக்க, பெண்ணவளுக்குள் சிறு பயம்.
'அது வேற ஒன்னுமில்ல இடம் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கு. ஆளும் செம்ம ஹன்சமா ஒரு மார்க்கமாத்தான் இருக்கான். இவனப் பாத்தா தயிர் சாதம்னு சொல்ல மனசு வரல. ஒருவேளை நேத்து நைட் சாருட்ட பேசுனத, காத்தா வந்து கேட்டுட்டு, நான் அம்பி இல்ல ரெமோன்னு நிறுபிக்க வந்திருப்பானோ! இருக்காதே. ' எனக் குழம்பிப் போனாள் அவள்.
"உங்கண்ணுக்கு இங்க இருக்துற வெய்டர்ஸ் தெரியலயா? " நீயும் நானும் தனியாக இல்லை என்று சொல்ல,
" அவங்க யாருமே நம்ம பக்கத்துல இல்ல. " எனும் போதே உணவை ஆர்டர் செய்ய வெய்ட்டர் வந்தார். மதுவின் உதடுகளில் அழகான புன்னகை உதயமாக, பைரவி அவனைக் கடுப்பேற்ற எண்ணி தனக்கு அசைவ உணவை ஆர்டர் செய்தாள். ஆனால்,
"மேம் இது வெஜ் ஹோட்டல். " என வெய்ட்ர் சொன்ன போது மதுவின் புன்னகை சிரிப்பாய் உருப்பெற்றது.
" ஐஸ்கிரீம் இருக்கா. "
"எஸ் மேம். " என்றவனிடம் நான்கை ஆர்டர் செய்தவள், ஒவ்வொன்றாக உண்டு முடித்த பின் எடுத்துவர சொன்னாள். மதுவிற்கு ஏன் என்ற காரணம் புரிந்தது.
' அது ஒன்னுமில்ல. வெய்ட்டர் அப்பப்ப நடமாடுனாத்தா நம்ம பைரவி ஒரு கண்ட்ரோல்ல இருப்பா. அதான். இல்லன்னா மது ஊதுற மகுடிக்கி பெட்டி பாம்பா அவனுக்குள்ள அடங்கிடுவா. '
ரெஸ்டாரன்டில் யாருமில்லாது அவன் மட்டும் இருக்கவும் வெளியே நின்ற பைரவி மனத்திற்குள் 'நான் அவனைப் பார்க்க வந்தது தீஷ் காக. வேற எதையும் பேச அனுமதிக்க கூடாது. முக்கியமா நானூறு மீட்டர் டிஸ்டென்ஸ்ல மட்டும் தான் நிக்கணும். அவனோட கண்ண நேருக்கு நேர் பாக்கக் கூடாது. ' எனப் பல விதிமுறைகளைத் தனக்குத் தானே விதித்தபடியே தான் உள்ளே வந்தாள்.
" ஓகே நான் எதுக்கு வந்தேன்னா. தீஷித்த. " என அவள் ஆரம்பிக்கும் போதே,
"பத்து நிமிஷம். "
"வாட்? "
"நாம பர்ஷ்னலா ஒரு பத்து நிமிஷம் பேசுனதுக்கு அப்றம் பிஸ்னஸ் பேசலாம். " என்றான்.
"அடிங் கொய்யாலே. இதுக்கு தான் நீ எனக்கு மிட் நைட்ல மெஸ்ஏஜ் அனுப்புனியா. " எனக் காட்டமாக கேட்க, அவன் அலுட்டிக் கொள்ளாமல் ஆமாம் என்றான்.
"உங்கிட்ட நான் மோகனா பங்ஷன்ல நடந்த தவறுக்கான விளக்கத்த தரணும்னு விரும்புறேன். எம்பக்கம் தப்பு இருக்கு தான். பட் என்னால அதச் சரி பண்ண முடியும். எந்தமாதிரியான ஒரு சுச்சுவேஷன்ல நான் அதுக்கு சரின்னு சொன்னேன்னு உங்கிட்ட தெளிவா விளக்கணும். "
"தேவையில்ல. எந்த விளக்கமும் தேவையில்ல. "
"நான் உங்கிட்ட சாரி கேக்கணும் பையூ. "
" சரி கேளுங்க. " என இரு கரம் கட்டிக் கொண்டு சீட்டில் சாய்ந்து கொள்ள, அவளின் அந்த அட்டிடியூட் அவனைக் கவர்ந்தது.
"ஆனா நீங்க எத்தன தடவ மன்னிப்பு கேட்டாலும் நான் உங்கள மன்னிக்க தயாரா இல்ல. ஹாஸ்பிட்டல்ல என்ன நடந்தது? ஏன் உங்கள நான் கூட்டீட்டு வர்றேன்னு சொன்னேங்கிறதுக்கான விளக்கத்த நான் சொல்லும் போது நீங்க கேக்களயே. சோ, நான் பழி வாங்குறேன். உங்க பாஷைல சொல்லணும்னா நீங்க எனக்கு தந்தத, நான் உங்களுக்கு திரும்பி தர்றேன். " என எழுந்து கொண்டு நடக்க,
" ஒத்த கால்ல நிக்கிறத பத்தி நான் நிறைய கேள்வி பட்டிருக்கேன். பட் நேர்ல பாக்குற சந்தர்ப்பம் இப்ப தான் கிடைச்சது. நான் யார பத்தி பேசுறேன்னு உனக்கு தெரியும்ல. நான் அவசியம் டெல்லிக்கி போய்த்தா தீருவேன்னு நிக்கிற உன்னோட புது பாய் ஃப்ரெண்ட பத்தி தான் பேசுறேன். "
"பாய் ஃப்ரெண்ட இல்ல. வீட்டுல எங்க கல்யாணத்த பத்தி பேச்சுவார்த்த நடந்திட்டு இருக்கு. " என அவனை கடுப்பேற்றும் எண்ணத்தில் கூற, மதுவிற்குள் யாரோ பச்ச மிளகாயை அறைத்து பூசியதைப் போல் உணர்ந்தான்.
"பேச்சு வார்த்த வார்த்தையாவே நின்னுடும். நடக்காது. " என அழுத்தமாக கூறினான் மது. திரும்பி அவனைப் பார்த்தாள் பைரவி.
" டென்மினிட்ஸ் தந்தா, என்னால அவனோட உயிருக்கு உத்திரவாதம் குடுக்க முடியும். " என்ற படி நெருங்கி வர,
" அங்கேயே நில்லுங்க. " எனக் கரம் நீட்டி தடுத்தவள்,
"சரி. பத்து நிமிஷம் தான. ஓகே. பட் பக்கத்துல வர முயற்சி பண்ண கூடாது. ப்ராமிஸ் பண்ணுங்க. " என கரம் நீட்ட.
" என்னால ப்ராமிஸ் பண்ண முடியாது. " என்றவனை அவள் முறைக்க, அவனும் முறைக்க என நிமிடங்கள் கழிந்தன.
"நான் கிளம்புறேன். நான் குடுத்த நேரத்த நீங்க வேஸ்ட் பண்ணிட்டிங்க. " என்றபடி நடந்தவளைப் பிடித்திழுத்து ஃபோனில் டயமர் செட் செய்து விட்டு மது பேசத் தொடங்கினான். பேச வார்த்தை வரவில்லை. பாவம்.
எங்கே தொடங்கி எப்படி அவளுக்கு விளக்குவது என்று தெரியாது திணறினான். தான் சிதம்ரம் மீது வைத்திருக்கும் மரியாதையில் தொடங்கியவனின் திணறல் பைரவியை ரசிக்கச் செய்தது.
சொல்லப் போனால் மதுவிற்கு இப்படிப் பேசி பழக்கம் இல்லை. தன்னிலை விளக்கத்தை யாருக்கும் கொடுத்தது இல்லை. ராக்கி உட்பட யாருக்கும் அவன் மனத்தைத் திறந்து காட்டியது இல்லை.
" நிஜமாவே உன்ன அது இவ்ளோ காயப்படுத்தும்னு நான் நினைக்கவே இல்ல டெடி. அது என்னோட முழு விரும்பமும் இல்லமா அர மனசா. " எனக் கண்டபடி உலறியவன் தன் உலறலை நிறுத்தி விட்டான்.
பைரவியின் ரசனை பார்வையும் கடை உதடுகளில் பூத்திருந்த புன்னகையும் வார்த்தைகள் பலன் தராது என்பது உணர்ந்த, ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருந்த இதழ்களுடன் தன் பேச்சை தொடங்க முடிவு செய்துவிட்டான்.
அவன் தன்னை நெருங்கி வந்தான் என்பதையே பெண்ணவளின் மூளை உணரும் முன் கன்னங்களை கைகளில் ஏந்தி விழிகளை உற்று நோக்கிய பார்த்தவன் " ஐ ஆம் ஸாரி டெடி. ஐ ஆம் இன் லவ் வித் யூ. என்னோட என்டயர் லைஃப்பும் நீ இல்லாம முழுமை அடையாது. " எனச் சொல்லி இதழணைத்தான்.
உயிர் குடிக்கும் வேகத்தோடு அதரங்களைப் பருகியவனின் கரங்கள் இரண்டும் மங்கை தன் மார்பில் புதைக்கும் முயற்சியில் இறங்கி இறுக பற்ற, அந்த நொடி இருவரும் தேவையானதாக இருந்தது.
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..