அத்தியாயம்: 102
உனை முத்தமிட்ட…
என் ஆசையை...
கலவியின் பட்டியலில்…
சேர்த்து விடாதே…
காமம் இல்லா...
முத்தம் காதலில்…
சாத்தியமே…
இது இந்த ஜோடிகளுக்கு பொருந்தும். ஒருவரின் ஒருவர் விழி நோக்கி மன்னிப்பை யாசித்து கொடுக்கப்படும் முத்தம் காமமோ கலவியலின் முதல் நிலையோ அல்ல. இருவரும் தன்னைத் தொலைத்து செய்யும் தியானம் என்று சொல்லாம்.
அந்தத் தியானம் முழுமையடைந்த பின் இருவரும் அதைச் சிந்திப்பதில்லயே. இதைத் தான் பைரவி யாசித்தாள். என் விழி நோக்கி என்னுடைய பேச்சே கேள் என்று. மதுவின் பிடிவாதத்தால் அப்போது கிடைக்க வில்லை. ஆனால் இப்போது மது பைரவியிடம் யாசிக்காது தனக்கானதைத் தானே எடுத்துக் கொண்டான்.
நிமிடங்களைத் தாண்டி மணி நேரத்திற்கு சென்றிருக்கும், இருவரும் முத்தத்தில் முழ்கியிருக்கும் காதல் நிலை. ஆனால் மது செட் செய்து வைத்த அலாரம் தன் பணியைச் செவ்வனே செய்ய, பைரவிக்கு தியானம் கலைந்து விட்டது.
அவனிடம் இருந்து விடுபட நினைத்து திமிற, எளிதில் விட்டு விட கூடிய பொருளா நீ. என் உயிரல்லவா நீ. என்பது போல் அவளின் திமிறலுக்கு ஏற்ப அணைப்பு இறுகிக் கொண்டே சென்றது. இது போன்ற சமயங்களில் அவனிடம் இருந்து விடு பட பைரவிக்கு வழிகள் தெரியுமே. ஏனெனில் இந்த அணைப்பும் முதல் முறை அல்ல. இந்த முத்தமும் முதல் முறை அல்ல.
ஆடவனின் மார்பில் பதிந்திருந்த கரங்களை மெல்ல அவன் அறியாது டீசர்ட்டிற்குள் கொண்டு சென்றாள். ஆசையுடன் வருடிக் கொடுக்க அல்ல கூர் தீட்டப்படாத தன் விரல் நகங்களால் ரத்தம் வரும் அளவிற்கு பூனை போல் பிராண்ட.
" ஸ்... ஆ... லூசா நீ. " என்று அவளை விடுவித்த மதுவின் குரலில் கோபம் இல்லை. மாறாக ரசனை இருந்தது.
அவனின் மார்பில் இது போன்ற பல நக அடையாளங்கள் உண்டு. வீரத் தழும்புகள் அவை. கூடல் கொள்ளும் போது அவனைக் காயப்படுத்தவும் வேறு சில காரணங்களுக்கும் இவ்வாறு செய்வதுண்டு.
மதுவிற்கு விரல் தாண்டி நகம் வளர்வது பிடிக்காது. அவளுக்கு பிடிக்கும். அவள் வளர்க்க இவன் வெட்டச் சொல்ல. சண்டை தான் வரும். எனவே இவன் இரவோடு இரவாக மனைவியின் நகங்களை வெட்டி விட்டு விடுவான்.
"நீங்க வெட்டிட்டா என்னால உங்கள காயப்படுத்த முடியாதா. " எனப் பற்களால் கடித்து வைப்பதும் உண்டு. அதற்காக அவன் தரும் வலிகள் என அது சர்க்கரை தடவிய பொழுதுகளாகும். அதெல்லாம் அந்தக் காலம் என்று சொல்லும் அளவுக்கு மறைந்து விடுமோ என அஞ்சியவனுக்கு, மறக்க கூடியதா அது என நினைவுருத்திவிட்டாள்.
" டெடி நீ இத்தன சென்டிமீட்டருக்கு எதுக்கு நகம் வளத்து வைச்சிருக்க. பாரு ப்ளட் வருது. " எனப் பட்டனை அவிழ்த்து காட்டினான். மனைவி இதமாய் தன் மெல்லிதழ் திறந்து ஊதி விட்டு முத்தமிடுவாள் என்று நினைத்தானோ.
நிச்சயம் மாட்டான். அவள் வெட்டி விட்டிருந்த சிகை வளர்த்து வைத்திருக்கும் நகம். அணிந்து வந்த நீல நிற சுடிதாருக்கு மஞ்சள் வண்ண ஷால் பொருத்தமே இல்லாத பட்டியாலா பேண்ட் என அனைத்தும் அவனை வெறுப்பேற்ற பார்த்து பார்த்து செய்பவளிடம் கருணையை எதிர் பார்ப்பது தவறு என்று அவனுக்குத் தெரியாதா என்ன.
"அப்படியா... ரத்தமா… எங்க காட்டுங்க. தெளிவா பாக்குறேன். " என அவள் செல்போனில் டார்ச்சை ஆன் செய்து விட்டு நெருங்கி வந்த தோரனையே சொல்லியது, சிறிய காயம் பெருங்காயமாக மாற உள்ளதை. இரண்டடிகள் பின்னே நகர்ந்தவனை கோபமாக முறைத்து பார்த்தபடி நின்றாள் அவள்.
" இதுக்கு தான் நான் வரமாட்டேன்னு சொன்னேன். அத இத சொல்லி, வர வச்சி உங்க வேலைய காட்டீட்டிங்கள்ள. ச்ச… " என்றவள் வேகவேகமாக அங்கிருந்து செல்ல பார்க்க,
" டெடி நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன். நீ. " எனக் குரல் கொடுத்தான்.
"எனக்கு பிடிக்கல. "
"பிடிக்கலன்னா அடுத்த செக்கேண்டே கீறல் விழுந்திருக்கும். இதுல இருந்து என்ன தெரியுதுன்னா, பத்து நிமிஷத்து அப்றம் பிடிக்காம போயிடுச்சின்னு. " என்றவனின் குறும்பு குரலில் இலகாது முறைத்தவள் நடக்கத் தொடங்க,
"எதுக்கு வந்தியோ அத பத்தி நாம பேசவே இல்லயே. "
"நீங்க பேசுன வரைக்கும் போதும். நான் கேட்ட வரைக்கும் போதும். இது தான் நீங்க கேட்ட பத்து நிமிஷம்னு தெரிஞ்சிருந்தா நான் சரின்னு சொல்லிருக்கவே மாட்டேன்.. " எனக் கத்திய படி நடந்தவளைத் தடுக்கவில்லை மது. அவளின் கோபம் கண்டு புன்னகைத்தபடி நின்றவன்.
" நீ கூட எங்கிட்ட இதே பத்து நிமிஷத்த தான் கேட்ட. எதுக்கு இதுக்கு தான. "
" என்னை என்ன உங்கள மாதிரின்னு நினைச்சிட்டீங்களா. பத்து நிமிஷத்துல மேல பாய. "
"பட் எனக்கு பத்து நிமிஷம் பத்தலயே. அடிஸ்னலா இன்னொரு டென் மினிட்ஸ் வேணும். " என்றவனைத் திரும்பி பார்த்து முறைத்தாள்.
" குடுப்பாங்க குடுப்பாங்க. பத்து நிமிஷம் என்ன பப்ளிக் ப்ளேஸ்ல விரும்பம் இல்லாம ஒரு பொண்ண கட்டி பிடிச்சி முத்தம் குடுத்திங்கன்னு உங்கள தூக்கி ஜெயில்ல வச்சி நல்லாவே குடுப்பாங்க. "
"பொண்ணு இல்ல. எஅன பொண்டாட்டி. "
"விவாகரத்து ஆனதுக்கு அப்றம் உங்களுக்கு ஏது பொண்டாட்டி. நல்ல வேளை இது ஹோட்டலா இல்ல. இருந்திருந்தா. "
"பட்டப்பகலில் ஹோட்டல் அறையில் மாஜி கணவனுடன் மஜா செய்த சப்இன்ஸ்பெக்டர் பைரவின்னு தலைப்பு செய்தில வந்திருக்கும். ச்ச... இப்ப ஃபீல் பண்றேன். ரெஸ்டாரண்ட்டா இல்லாம நீ எங்கிட்ட கேட்ட மாதிரி ஒரு ஹோட்டல மீட்டிங் ஃபிக் பண்ணிருக்கலாம். இட்ஸ் மை ஃபால்ட். ஹோட்டல்ல புக் பண்ணியிருந்தா முத்தம் மட்டுமில்லாம மொத்தமாவே கிடைச்சிருக்கும்.
இப்பயும் ஒன்னும் கெட்டுடல. நான் கண்ண காட்டாம யாரும் இந்த ரெஸ்டாரன்ட்க்குள்ள நுழைய மாட்டாங்க. நாம ஏன் கிஸ்ஸ டெவலப் பண்ணி அடுத்த கட்டத்துக்கு கொண்டுட்டு போக கூடாது. " என்றவனின் கேலி குரல் காதில் விழ, வேகமாக வந்தவள் மேஜையில் இருந்த தண்ணீரை எடுத்து அவனுக்கு அபிஷேகம் செய்து விட்டு டிஸ்யூ பேப்பரை கிழித்து அவனின் மீது போட்டு அர்ச்சனையையும் முடித்து விட்டு நடத்தாள். மதுவின் புன்னகையும் குறும்பு குரலும் அவளை நிழல் போல் தொடர்ந்து வந்தது.
உதடுகள் கணவன் தந்தது முத்ததில் திளைத்து தித்திப்பாய் இனிக்க, அதை நாவால் வருடியவளின் தேகத்தில் எத்தனை வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது என்று கணக்கெடுக்க வேண்டி இருந்தது. மின்சார அதிர்வுலைகள் பலமாய் தாங்கி இருந்ததே. உடலில் ஒவ்வொரு செல்லும் ஒரே நேரத்தில் புத்துணர்வில் சிலிர்த்தெழ, சாப்பரில் வீடு திரும்பி விட்டாள்.
"ச்ச… அவெ என்னோட ஹஸ்பெண்ட். கிஸ் மட்டுமில்ல எல்லாமே எங்களுக்கு முடிஞ்சி நாலு வர்ஷம் ஆச்சி. எதுவுமே புதுசு கிடையாது. ஆனாலும் இப்ப அவெ என்னை கிஸ் பண்ணும் போது ஃபஸ்ட் டயம் மாதிரி ஃபீல் பண்றேன். என்ன மாறியான உணர்விது.
அடியே பையூ நீ ஒன்னும் டினேஜ் கேர்ள் கிடையாது. இருபத்தி ஆறு வயசான ஒரு பொறுப்பான போலிஸ் அதிகாரி. மறந்திடாம கண்ட்ரோல்ல இரு. " எனச் சொல்லிக் கொண்டாலும் அடங்காமல் துடித்த இதயத்தில் கணவனுடன் இருந்த இனிய நினைவுகள் சுமந்த படி சென்றாள்.
ஆனால் இங்கு.
மதுவால் பைக்கை ஓட்ட முடியவில்லை. எண்ணங்களில் பைரவி அமர்ந்து கொண்டதால் அவன் அமர்ந்திருந்த பைக்கைச் செலுத்தும் அளவுக்கு கவனம் இல்லை. ஓரமாக நிறுத்தி விட்டான். தன்னவளின் எண்ண வலையில் சிக்கிய தன்னை மீட்டெடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தவனின் பார்வை வட்டத்திற்குள் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு கார் பட்டது. அதி வேகம் என்பார்களே அந்த வேகத்தில் தான் வந்து கொண்டிருந்தது.
மதுவின் பைக்கை நோக்கி வரும் போது அவன் சில மீட்டர் விலகி விட்டான். இல்லையேல் பைக்கைப் போல் அவனும் பறந்து புளியம் மரத்தில் மோதி சரிந்திருப்பான்.
பைக்கை உடைத்தவர்கள் பைக் ஓட்டி வந்தவனை உடைத்தெறியும் நோக்குடன் கீழே இறங்கி வந்தனர். சுமார் ஏழெட்டு பேர் இருப்பர். அனைவரும் மதுவிற்கு அறிமுகம் ஆனவர்கள் போலும் புருவங்களை நெறிக்காது அலட்சிய பார்வை ஒன்றை விரித்து அச்சம் என்பது துளியும் இல்லாது நின்ற இடத்திலேயே வேர் விட்டு மது நின்றான்.
"மதுசூதனா அவன எங்க கிட்ட ஒப்படச்சிடு. அது தான் உனக்கு நல்லது. " என மிரட்டல் தோணியில் பேசத் தொடங்கினர்.
" நாந்தா முடியாதுன்னு சொல்ட்டேனே. திரும்ப திரும்ப வந்து மிரட்டுனா மட்டும் என்னோட முடிவ மாத்திப்பேனா என்ன. அப்றம் என்னை பயமுறத்துறேன்னு சொல்லி பைக்க பறக்க விடுறது நல்லா இல்ல. உங்க ஆளுங்க பறந்து போய் விழ வேண்டி இருக்கும். ஹாஸ்பிட்டலுக்கு. " என அவன் கூலாக பேச,
" வேண்டாம் மதுசூதனா. அவெ ஒருத்தனுக்காக நீ நம்ம ஒட்டு மொத்த செக்யூரிட்டி ஏஜென்சி ஆட்களயும் எதிர்த்து நிக்கிற. முன்ன மாதிரி இருந்தா கூட உம்பின்ன உன் சித்தப்பெ இருக்கான்னு பேசமா போயிருப்பேன். எப்ப நீ அந்த ஏஜென்சில இருந்து ஒட்டு மொத்தமா விலகுனன்னு தெரிஞ்சதோ அப்பவே நீ தனி ஆளு.
ஒத்தையாளா இருந்திட்டு அவனக் காப்பாத்துறேன்னு உன் உயிர அனாவசியமா விட்டுடுடாத. இத்தன வர்ஷமா ஒரே தொழில்ல இருக்கோங்கிற நல்ல எண்ணத்துல சொல்றேன் கேட்டுக்க." எனத் தீஷித்தை அவர்களிடம் ஒப்படைக்கச் சொல்லி கேட்டனர்.
"இருக்கோம் இல்ல இருந்தோம். நேத்துல இருந்தே நான் பாடிகார்ட் கிடையாது. அதுலயும் கோர்டு சூட் போட்ட கூலி படைக்கி தளபதியா என்னால பணியாற்ற முடியாதுன்னு விலகிட்டேன்.
இப்ப நான் தனியாள் தான். ஆனா உங்க எண்ணம் நிறைவேறாம தடுத்து நிப்பாட்டுற அளவுக்கு திறம இருக்கு. புதன் கிழமை அந்த தீஷித்த கோர்ட்டுல ஒப்படைச்சி உங்களுக்கு வேலை குடுத்தவனுக்கு மேல வேலைக்கி அப்பாய்மெண்ட் வாங்கி குடுத்திட்டு வந்து உங்கள பாக்குறேன்." என்றவன் அங்கிருந்து செல்ல, அவனை வந்தவர்கள் யாரும் தடுக்கவில்லை. மாறாக பின் தொடர்ந்தனர். தீஷித்தைக் கண்டு பிடிக்க வேண்டும் என்பதற்காக.
தீஷித்தின் தலைக்கு சிராஜ் கொடுக்க இருக்கும் பணம் புற்றீசல் போல் பல ரவுடிகளையும் மதுவை போன்ற பல ப்ளாக் ஃகார்ட்ஸ், பவுண்சர் என்ற பேரில் பாதுகாப்பிற்கு உலாவரும் செக்யூரிட்டிகளையும் கிளப்பி விட்டது. அந்த ஈசலில் கூட்டத்தில் மதுவின் Blue whale bodyguard security agent ம் ஒன்று.
சைந்தவியின் கணவன் கௌசிக்கும், மது அடித்து காலை உடைத்து துரத்தி விட்ட அவனின் தம்பியும் மதுவைப் பழி வாங்க சமயம் பார்க்க, சைந்தவி அவர்களை ஏஜென்சியில் சேர்த்து விட்டாள். உடன் ஜெயாவும் ஒத்து ஊத இருவரின் அட்டகாசமும் அங்கு ஆரம்பமானது.
மது எப்போது தன் அண்ணன் மகள் ரூபியுடனான திருமணத்தில் பிடித்தம் இல்லாமல் பைரவியை மறக்க முடியாமல் இருந்தானோ, அப்பதோ ஜெயா முடிவு செய்து விட்டார் இந்தச் சொத்தை பங்கு போடாது தனித்து அனுபவிக்க மதுவைத் துரத்தி விட வேண்டும் என்று.
ஒன்று அவன் ரூபியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் . இல்லையேல் ஏஜென்சியில் அவன் இடம் சைந்தவியின் கணவனால் நிரப்பப்பட வேண்டும் என ஜெயா சிதம்பரத்திடம் பிடிவாதமாக சொல்ல.
வேறு வழியின்றி 'அவனுங்க கைக்கு போச்சின்னா இத்தன நாளா நாம சேத்து வச்ச நல்ல பேரும் மதிப்பும் கெட்டு போய்டும் மது. அதுனால நம்ம ஏஜென்சிய காப்பாத்த இத பண்ணலாமே. ' எனக் கேட்டு சிதம்பரம் மது ரூபி திருமணம் குறித்து பேச, அவனும் சம்மதித்தான்.
பின் பைரவியைத் தவிர வேறு யாராலும் தன் மனைவிக்கான இடத்தை பூர்த்தி செய்ய இயலாது என்றுணர்ந்தவன் திருமணத்தை நிறுத்த, ஏஜென்சியின் அதிகாரம் கை மாறியது.
இப்போது அந்த ஏஜென்சியின் தலைமை கௌசிக்கிடம் உள்ளது. சும்மா இருக்கும் மதுவை எதையாவது சொல்லி குற்றவாளி கூண்டி ஏற்றிக் கொண்டே இருக்க பாதுகாப்பு தரும் ஏஜென்சி, அடியாள்களைப் பேணி காக்கும் இடமாக மாறியது. பணத்திற்காக செக்யூரிட்டி ஆட்கள் அனைவரும் கூலி படைகளாக மாற்றியவனும் தீஷித்தின் தலைக்குக் கொடுக்கும் பணத்திற்காக படையெடுக்கும் ஈசல் கூட்டில் சேர்ந்தான்.
இப்போது தீஷித்திற்கு பாதுகாப்பு தருவது மதுசூதனன் என்ற தனி ஆள் மட்டுமே. அவனை ஏன் பாதுகாக்கிறான் என்றால் அது அவனுக்கு தான் தெரியும். தன் மனைவிக்காகவா அல்லது கண்ணாயிரத்தின் வெற்றிக்காகவா அல்லது தாமரையைப் பயமில்லாது உலாவ விடவா அல்லது சிராஜ்ஜால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மக்களுக்காகவா எதற்கு என்று தெரியாத போதும் தீஷித்தைக் காத்தான்.
"நாம தான் எவிடென்னு தீஷித் கலெக்ட் பண்ண எல்லாத்தையும் பிரிச்சி, சரியான நேரத்துல ஒப்படைக்கச் சொல்லி சொல்லியாச்சு. இப்ப தீஷித் கைல எதுவும் இல்ல. அப்படி இருந்தும் இந்தக் கூட்டம் அவனப் போடுறதுல குறியா இருக்குன்னா என்ன அர்த்தம். ம்… தீஷித் முழுசா எதையும் சொல்லி முடிக்கல. இன்னும் இருக்குன்னு அர்த்தம். " என நினைத்தவன் பின்னே தன்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு ஒரு பேருந்தில் ஏறினான்.
பல பேருந்துகள் மாறி மாறி மது கடைசியாக வந்திறங்கிய இடம் சென்னையைத் தாண்டி உள்ள ஒரு கடற்கரை கிராமத்திற்கு. அங்கு கரையில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு படகில் தான் தீஷித் இப்போது இருக்கிறான்.
கௌசிக்கால் ஏஜென்சியைக் காலி செய்து வந்தவன் தீஷித்தின் குடும்பத்தைப் பத்திரமாக அவர்களின் சொந்த ஊரில் உள்ள வீட்டிற்குள் அடைத்தவன் தீஷித்தைப் படகில் வைத்துள்ளான்.
டாக்டர் சந்திரகால தீஷித்தைப் பரிசோதித்து கொண்டிருந்தார். " எப்படி இருக்கான். நாளைக்கி கார்ல ட்ராவல் பண்ணிடலாம்ல. " என மது கேட்க,
"கால அசைக்க கூடாது. அப்படி அசைச்சா கால் நிரந்தரமா ஊனமாக வாய்ப்பிருக்கு. ஸ்டிக் இல்லாம அவனால நடக்கவே முடியாதுங்கிற சூழ்நில வந்திடும். கவனமா பாத்துக்கிட்டா அப்படி நடக்காது. அத தவிர்த்து மத்த வேற எந்த பிரச்சினையும் இல்ல. ஹீ இஸ் ஆல் ரைட். கால மட்டும் பத்திரமா பாத்துக்க. " என்று விட்டு சில மருந்துகளை எழுதி தந்திவிட்டு சென்றார் அவர்.
'ஆளையே பாத்துக்கப் போறோம். கால பாத்துக்க மாட்டோமா. ' மதுவின் மைண்ட் வாய்ஸ்…
தொடரும் ...

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..