அத்தியாயம்: 103
காரினுள் இருந்த குளிர் காற்று இமய மலையில் இருப்பது போன்ற உணர்வைத் தந்து தீஷித்தின் உடலை உரை பனி சிலையாய் மாற்ற முயன்றது. அந்த அளவுக்கு சில்லென தன் சுற்றம் இருப்பதை உணர்ந்தவன்.
"ஓ காட்… என்னோட விரல் எல்லாம் மரத்து போய்டுச்சி. ப்ளிஸ் யாரா இருந்தாலும் ஏசி டெம்பரேச்சர மாத்துங்க. இல்ல ஆஃப் பண்ணிடுங்க தட்ஸ் பெட்டர். " எனக் குரல் மட்டும் கொடுத்தவன் இதமாய் போர்வைக்குள் புதைந்து கொள்ள.
"இளவரசருக்கு குளிர் ஆகாது போலயே. " மது.
"எஸ்… ஆஃப் பண்ணுடா. " எனக் கட்டளை பிறப்பிக்க,
"முடியாது டா. " என்ற மதுசூதனனை சாய்ந்திருந்த சீட்டில் இருந்து எழும்பி முறைத்தான் தீஷித்.
"என்ன மொறைக்கிற? ஒரு கால் தான் போயிருக்கு. என்னை முறைச்சா ஒரு கண்ணும் சேர்ந்து போய்டும். மாறு கால் மாறு கண் கேள்வி பட்டிருக்கியா. " என நக்கலாக கூறிய மது, கை நீட்டி அடிக்கும் தூரத்தில் இல்லாததால் தீஷித்தே ஏசியை அணைக்க, மது மீண்டும் ஆன் செய்தான்.
" உன்னால தான் அசைய கூட முடியாதே அப்றம் ஏன் இந்த வீண் முயற்சி. விட்டுடு. முடியாதத முயற்சி பண்ணாத. " என்ற மதுவின் குரலில் இரு பொருள் இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது.
" அது தான் என் பாலிஸி. இதுவரைக்கும் நான் முழுசா இறங்குன, எதுலயும் தோத்தது இல்ல. அப்படி வெற்றி கிடைக்கலன்னா நான் இன்னும் அதுல முழுசா இன்வால் ஆகலன்னு அர்த்தம். " என அவனும் இரு பொருள் பட பதில் சொல்ல, இருவரின் பார்வையும் காரசாரமாக மோதிக் கொண்டது.
இருவரும் ஒரே காரில் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எங்கே என்று சொல்ல தேவையில்லை. டெல்லிக்கு. கார் ஆந்திரா உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
"இவனா என்னைப் பத்திரமா கொண்டு போய் டில்லி கோர்ட்ல ஒப்படைக்க போறான். " என்ற கேள்வி, தீ விபத்து நடக்கும் முன் மருத்துவமனைக்கு தீஷித்தை அழைத்து செல்ல வந்த மதுவை பார்த்திலிருந்தே இருக்கிறது. அதனால் தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரிடமும் கேட்டு விட்டான்.
"தீஷித் உனக்கு இப்ப இருக்குற ஆபத்துல இருந்து காப்பாத்தறேன்னு கரம் நீட்ட இவன விட்டா வேற யாரும் கிடையாது. " கருணா.
"வேற யாரையாது ஹயர் பண்ணலாமே. நாட்டுல செக்யூரிட்டி ஏஜென்சிக்கா பஞ்சம். "
"பஞ்சம் இல்ல தான். அதுனால தான் உன்ன கொல்ல இருபதாவது முறை அட்டெம்ட் நடந்திருக்கு. அத்தன முறையும் உன்ன காப்பாத்துனது இவெந்தா. " நந்திதா.
" ஆனாலும்… இவெ. " தீஷித் இழுக்க,
"போற வழியிலேயே உன்ன மர்டர் பண்ணிடுவான்னு பயம்மா இருக்கா தீஷ். " ரத்தன் குறும்பாய் கேட்டான்.
"பயம்லா இல்ல உறுதியாவே சொல்றேன். கொன்னு புதைக்கத்தா என்னை கூட்டீட்டு போறேன்னு சொல்றான். " என்றவனிடம்.
"அவனோட வைஃப்ப நீ காதலிக்கிறங்கிறதுக்காக உன்ன கொல பண்ணிவான்னு ஸ்டாங்கா நீ நம்புறது புரியுது. " என்ற அப்ராவின் பேச்சைத் தடுத்தவன்,
" அவனோட வைஃப் கிடையாது எக்ஸ் வைஃப். அப்றம் எனக்கும் பைரவிக்கும் இடைல மேரேஜ் டாக் போய்க்கிட்டு இருக்கு.. "
" டாக் தான. பட் அவெ அத நடக்காது நடக்க விடமாட்டேன்னு சாவல் விட்டிருக்கானாம். சாந்தி ஆன்டி அபி ம்மாட்ட சொல்லிட்டு இருந்தத கேட்டேன். " நந்திதா.
" ஓ… அப்படியா… நடக்காம இருக்க என்ன பண்ண போறானாம். " கருணா.
" அவனே மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கப் போறானாம். " அப்ரா சொல்ல,
"புது நியூஸா இருக்கே. செக்கேன்ட் ஆப்ஷன் கிடைச்சும் விட்டுட்டு போன ஃபஸ்ட் ஆப்ஷனயே ச்சூஸ் பண்றேங்கிறான். தைரியமான ஆளா இருப்பான் போலயே. " என ரத்தன் சிலகிக்க நண்பனின் முறைப்பைப் பரிசாய் பெற்றான் அவன்.
" தீஷித் இப்ப இது முக்கியம் இல்ல. நீ ஏன் கோர்ட்டுக்கு போகணும்னு ஆசப்படுறன்னு எங்களுக்கு புரியல. இருந்தாலும் உன்னோட பிடிவாதத்துனால ஓகே சொல்லிருக்கோம். சோ நீ டெல்லி வரணும்னா மதுசூதனன் கூட தான் வந்து சேரப்போற. தட் இட். " மித்ரன் முற்று புள்ளி வைக்க, தீஷித்திற்கு வேறு வழி இல்லாது போனது.
"இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு பயன் படுத்திக்க. " எனக் கருணா ரகசியமாக தீஷித்திடம் கூறினான்.
"அவெங்கூட இருக்குறது நல்ல வாய்ப்பா. ஏன்டா வைத்தியம் மாதிரி உலறுற.. "
" கண்டிப்பா நல்ல வாய்ப்பு தான் தீஷ். ஏன்னா உன் ஆளு அவளோட ஆளு கூட சேரக்கூடாதுன்னா! அவ ஆளப் போட்டு தள்றது தான் பெஸ்ட்டான ஐடியா. கொஞ்ச நாள் சோகமா இருந்திட்டு உன்னையே கல்யாணம் பண்ணிப்பா. சோ, கதைய முடிச்சிடு. " ரத்தன் ஐடியா கொடுக்க. அவனின் தலையில் அடித்தாள் அப்ரா.
"அவெ ஒரு பைல்வான். செக்யூரிட்டி ஏஜென்சி வச்சி இத்தன வர்ஷமா சக்சஸ் புல்லா ரன் பண்ணிட்டு இருக்குறவெ உன்ன மாதிரி முட்டாளாவா இருப்பான்.
இவனுக்கு ரெண்டு காலும் இருந்திருந்தா கூட வாடா சண்டைக்கி ஒண்டிக்கி ஒண்டி மோதி பாத்து யார் வெற்றி பெறுறோமோ அவங்க பைரவிய கல்யாணம் பண்ணிக்கலாம்னு டீல் பேசிருக்கலாம். ஆனா இப்ப நிலைம தல கீழ இருக்கு. " என்றாள் அப்சரா.
"அதுவும் சரிதா. அங்க பாரு அவன. என்னென்ன செய்றான்னு. " எனக் கருணா காட்டிய திசை பக்கம் தலையை திருப்பி பார்த்தனர்.
மது தன் காரியத்தில் என்றுமே கண்ணாக இருப்பவனாயிற்றே. இன்றும் அப்படித்தான். அவனின் உளவுத்துறை தந்த தகவலின் படி மருத்துவமனையில் சில ஆட்கள் தீஷித்தைக் கொலை செய்ய உள்ளதால் தீ விபத்து போல் காட்டி அவனைத் தப்பிக்க வைத்து இடம் மாற்றுவதாக ப்ளான் போட்டிருந்தான்.
அந்த தீ விபத்தில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என முன் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். மருத்துவமனை அல்லவா. அதான் கவனம் அதிகமாகவே இருந்தது.
" அவன ஏமாத்துறதுங்கிறது கஷ்டம் தான். ஒன்னு ரெண்டு செக்கேன்ட்னா கூட சமாளிச்சிடலாம். இதுக்கு முன்னாடி பண்ண மாதிரி. பட் கொல பண்ண முடியாது.. ஐ அக்ரி. ஆனா வேற ஒன்னு பண்ணலாம். " என்ற தீஷித்தின் முகத்தில் கள்ளத்தனம் இருந்தது.
"என்னடா பண்ணப்போற. " கருணா ஆவலாக.
" சொல்ல மாட்டேன். செஞ்சி காட்டுறேன். பார்த்து தெரிஞ்சுக்கங்க. 36 ஹார்ஸ் எங்கூட டராவல் பண்ணப் போறானா. ஏன்டா இவன தூக்கி தோள்ல போட்டோம்னு ஃபீல் பண்ண வைக்கிறேன். " என வில்லன் போல் பேச,
" தீஷித் இது சரி இல்ல. அவங்க ரெண்டு பேரும் ஹஸ்பெண்ட் அண்டு வைஃப். " நந்திதா சொல்ல,
"அப்படி இருந்தாங்க இப்ப இல்ல. " என அவளைத் தீயாய் முறைத்தான் அவன்.
" இருந்திட்டு போட்டும். முழுசா நாலு வர்ஷம் ஒன்னா வாழ்ந்திருக்காங்க. "
" சோ வாட். அவங்களுக்குள்ள லவ்ன்னு ஒன்னு இல்லவே இல்ல. "
" லவ்வுக்கும் கல்யாணத்துக்கும் சம்மந்தம் கிடையாது தீஷ். நான் பண்ணிக்கல. நம்ம கேங்கலயே காதலிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டது நான் மட்டும் தான். கல்யாணம் பண்ணிட்டா அது தன்னால வந்து சேந்திடும். "
" மித்ரன் ஒன்னும் உங்கூட கடமைக்காக குடும்பம் நடத்தல. "
"அதே மாதிரி மதுசூதனனும் கடமைக்காக பைரவி கூட வாழல. "
" நீ பாத்தியா அவங்க எப்படி வாழ்ந்தாங்கன்னு."
"அதே கேள்விய நானும் கேக்குறேன் உன்னால பதில் சொல்ல முடியுமா. " என நந்திதாவிற்கும் தீஷித்திற்கும் வாக்குவாதம் நடந்தது.
"தூர இருந்து பாக்குறவங்களுக்கு புரியாது தீஷ் ஒரு கணவன் மனைவிக்குள்ள இருக்குற புரிதல் என்னன்னு. அவங்களே சொல்லாத வர வேற யாருக்கும் அது தெரியாது. "
"புரிதல் அவங்களுக்குள்ள இருந்திருந்தா ஏன் டைவர்ஸ் பண்ணணும். ஒத்துக்கிறேன் பைரவி மதுசூதனன லவ் பண்ணிருக்கலாம். பட் நான் அடிச்சி சொல்வேன் அந்த லவ் அவனுக்கு அவ மேல கிடையவே கிடையாது. அவெ பைரவிக்கு சரியான ஜோடி கிடையாது. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு என்னோட டாம் மனசுல எனக்குன்னு ஒரு இடத்த என்னால உருவாக்க முடியும். அது மதுசூதனன விட பெஸ்ட்டான ஒரு ப்ளேஸ்ஸா இருக்கும். என்னோட பத்து வர்ஷ ஆச இது. இதை அடைய எனக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் போது ஏனீ அதவிடணும்னு சொல்றிங்க. "
"உன்னோட பத்து வர்ஷ காதல விட அவங்களோட ஐஞ்சு வர்ஷ குடும்ப வாழ்க்க பெருசுன்னு சொல்றோம். இன்கேஸ் நீ பைரவி மனசுல இடம் புடிச்சாலும் உன்னால மதுசூதனன பதவிய பிடிக்கவே முடியாது. என்னோட ஃப்ரெண்டு நல்லா இருக்கணும்னு தான் நாங்க ஆசப்படுறோம். சோ நீ பைரவிய மறந்திடுறது தான் நல்லது. " என அவனைச் சமாதானம் செய்து பைரவியை மறக்கச் சொல்ல, ஏறிக் கொண்டிருந்த டிரிப்ஸ் பாட்டிலைத் தட்டி விட்டவன்,
" கெட் அவுட். " எனக் கத்தினான். யாரும் அவனை நெருங்க முடியவில்லை. அவன் மனம் மாற வேண்டும் என வேண்டுதல் விடுத்தபடி செல்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
அவர்கள் கூறிய உண்மை தீஷித்தைச் சுட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வேளை மதுசூதனன் கொடுமைக்கார, குடிகார, பெண் பித்தனாக, மோசமான கணவனாக இருந்திருந்தால் தீஷித் இருவருக்கும் இடையே உண்டான விரிசலை பயன்படுத்து தன் காதலை நிலைநாட்டி இருப்பான்.
அப்படி இருந்திருந்தால் மது பைரவியின் மனதில் ஆழ புதைந்திருக்க மாட்டான் என்பது வேறு விசயம். தூக்கி வெளியே வீசி விட்டு சென்றிருப்பாள். அப்படி இல்லையே. மாறாக அவனுக்கு பைரவி மீது அன்பு, அக்கறை, நேசம், பாசம் என எல்லாம் இருக்கிறதே. அத்தோடு அவனிடம் எல்லாம் பர்ஃபொக்ட்டாக உள்ளது. அவன் கொடுமைக்காரன் பட்டியலில் இடம் பெற வில்லை. அதனால் தான் திணறுகிறான்.
"இல்ல. மதுசூதனன் பைரவிக்கு ஏத்த மேட்ச் இல்ல. அவளோட கேரக்டர் வேற. அவளுக்குன்னு நிறைய ட்ரீம்ஸ் இருக்கு. ஆச இருக்கு. அது எதுவும் மதுசூதனனுக்கு புரியாது. ஏன் மதுசூதனன் அதுக்கான முயற்சில கூட இறங்கஷ. அவள புரிஞ்சுக்கல. மதுவோட கேரக்டர் அப்படி. " என ஒரு மனம் சொல்ல,
"அவனோட பேரத் தவிர அவன் பத்தி உனக்கு வேற என்ன தெரியும். " எனக் கேள்வி கேட்டது மற்றொரு மனம்.
" அவனோட கேரக்டர், பழக்கம் நந்திதா சொன்ன மாதிரி, அவங்க ரெண்டு பேருக்குள்ள நெருக்கம், இப்படி எதுவும் தெரியாம மதுவ அக்யூஸ்ட் பண்ணி ஒதுக்க நினைக்கிறது முட்டாள் தனம். " என அந்த மனம் சொல்ல,
" அப்பப் பழகி பாக்கிறேன். அவங்க ரெண்டு பேருக்குள்ள இடைல இருக்குற உறவு எந்த அளவுக்கு ஸ்டார்ங்கா இருக்குன்னு தெரிஞ்சி. அத உடைக்கிற அளவுக்கு பலமா என்னோட அன்ப ஏவுவேன். " எனத் தனக்கு தான் சொல்லிக் கொண்டவன் மதுவை பைரவியின் வாழ்க்கையில் இருந்து விலக்கி வைக்க அவனின் குற்றங்களைக் குறைகளை பட்டியல் இட ஆரம்பித்தான்.
"ஒரு பாயின்ட்... ஒரே ஒரு பாய்ண்ட் கிடைச்சா கூட போதும் மது என்னோட டாம்க்கு ஏத்த ஆள் இல்லன்னு என்னால இவங்க எல்லாத்துக்கும் நிருபிக்க முடியும். சின்ன கேப் கிடைச்சா கூட என்னால என்ன அவளுக்கு நிறுபிக்க முடியும்." என்றவன் மதுவின் செயல்களை உற்று நோக்கினான்.
யாருடனும் அதிகம் பேசவில்லை. கட்டளைகள் பிறப்பிக்கவில்லை. தீஷித்தைப் போல் தட்டி கொடுத்து வேலை வாங்க வில்லை. ஆனால் தானா எல்லா வேலையும் நடந்தது. அவனின் கண் அசைவிற்கு ஏற்றார் போல் அனைத்தும் நடந்தேறியது. அது அவனின் திறமைக்கும் அவனுக்கும் கிடைக்கும் மதிப்பு எனப் புரிந்தது.
யாரின் பார்வைக்கும் படாது தீஷித்தைப் படகிற்கு அழைத்து வந்தது முதல் இப்போது காரில் ஏற்றிக் கொண்டு தலைநகருக்கு செல்வது வரை மதுவின் துள்ளியமான கணிப்பும் செயலும் என ஒவ்வொன்றும் தீஷித்தை கவர்ந்தது. சூப்பவ் எனப் பாராட்டவும் வைத்தது.
" எதிரிய புகழ்ந்தா ஆட்டத்த விட்டு விலகி பெஞ்சுல உக்காந்த மாதிரி ஆகிடும். கூடாது… டாம் நமக்கு வேணும்னா அவனக் குழப்பி விட்டு நீ அவளுக்கு மிஸ் மேச்ன்னு அவனை விலக்கி விடணும்.. " என இருவருக்கும் இடையே இருக்கும் கணவன் மனைவி உறவைப் பற்றி மதுவிடம் பேசத் தொடங்கினான் தீஷித்.
"நீ எதுக்காக என்னோட டாம கல்யாண பண்ண? "
"டாம்…" எனப் புருவம் சுருக்கி மது பார்க்க.
"நான் பைரவிய அப்படித் தான் கூப்பிடுவேன். டாம் பாய் மாதிரி டாம் கேர்ள். ஷாட்டா டாம். " என்றவனை முறைத்தபடி அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளையும் இரு நாட்களுக்கு தேவையான உணவு உடை குடி நீர் போன்ற முக்கிய பொருட்களையும் சரி பார்த்துக் கொண்டிருந்தான் மது.
'இவனோட கடமை உணர்ச்சிக்கு அளவே கிடையாது போலயே. '
"சொல்லு உனக்கு டாம் மேல. "
"பைரவி. நோன்ட் கால் டாம். கேக்க சகிக்கல. " என்றான் மது. அது தீஷித்தை குதுகலப்படுத்தி இருக்க வேண்டும்.
"பட் நான் அப்படி தான் கூப்பிடுவேன். அப்படி கூப்பிட கூடாதுன்னு அவளே சொன்னது கிடையாது. அவளுக்கு எந்த விதத்துலயும் சம்மந்தம் இல்லாத நீ சொன்னா கேட்டிடுவேனா. "
"சம்மந்தம் இல்லாத நான், நீ கேக்குற கேள்விக்கு பதில் சொல்வேனா என்ன. "
"பட் எனக்கு தெரியணும். நீ அவள லவ் பண்ணல. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்ட. இப்ப லவ் பண்றேங்கிற. ஆனா டைவர்ஸ் பண்ணிக்கிட்ட. என்ன ஒரு கோஇன்ஷிடன்ஸ். "
"உனக்கு உயிர் வாழணேம்னு ஆச இருக்கா. "
"கண்டிப்பா இருக்கு. "
"அப்ப எங்கிட்ட பேச ட்ரெய் பண்ணாத. அதுவும் பைரவிய பத்தி. இல்லன்னா இப்ப பேஷன்ட்டா இருக்குற நீ டெட் பாடியாத்தா டெல்லி போய் சேருவ. " என எச்சரித்தவன் தீஷித்தின் வாயில் சில மாத்திரைகளைத் தினித்து விட்டு சென்றான்.
"நான் ஒன்னும் சின்ன குழந்த கிடையாது எனக்கு டேப்லட் போட தெரியும். " எனக் கத்தியவனுக்கு சில நொடிகளிலேயே கண்கள் இருட்ட தொடங்கியது.
"என்ன எழவடா குடுத்த. கண்ணு பாஸிங்ல போகுது. ஜவ்வு மிட்டாய்லாம் கண்ணுக்குள்ள தெரியுதே. " என அலற.
"ஸ்லீப்பிங்க பீல். இத போட்டுக்கிட்டா மொத்தம் பத்து மணி நேரம் தூக்கம் வருமாம். நாலு வாங்கி வச்சிருக்கேன். டெல்லி போய் சேர்ற வர நான் உ குரல கேட்க விரும்பல. சோ, ஸ்வீட் டிம்ஸ். உன்னோட கனவுலயும் நானே வரணும்னு ஆச படுறேன். அப்ப தான் நாம க்ளோசா பேசி பழகலாம். " என்று விட்டு கதவை சாத்த,
" அதுல கூட நான் என்னோட டாம் கூட சந்தோஷமா இருக்குறது இவனுக்கு பொருக்கல. " எனப் புலம்பியவனுக்குப் பதிலாக கதவைத் திறந்து கொண்டு வந்த மது,
" உன்னோட டாம் கிடையாது. ஹீ இஸ் மை வைஃப். " என்க, அவனுக்கு பதில் சொல்லும் முன் தீஷித் உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
இப்பவே இப்படின்னா டெல்லிக்கி கார்ல எப்படி போகப் போறானுங்க. தெரியலயே.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..