முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

பனி 104


 

அத்தியாயம்: 104


"நீ ஏன் இவ்ளோ ஸ்லோவா கார ஓட்டுற. இது ஹைவே. ஸ்பீடா போகலாம். அதுக்கு தாங நாலு ரோடு கட்டி வச்சிருக்கு கவர்மெண்டு. " தீஷித். கண் முழித்து விட்டான் போலும். 


"ஓவர் ஸ்பீடா போக கூடாது. எங்கயும் எப்பவும் என்னோட கன்ட்ரோல மீறி எதுவும் நடக்க அலோ பண்ண மாட்டேன். " என ஸ்டிட்டாக சொல்லியவனை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக,


"ஓ இப்படி தான் பைரவியவும் கன்ட்ரோல்ல எடுக்க நினைச்சி கல்யாணம் வாழ்க்கைய தொலச்சிட்ட. சரியா? அப்ப இந்த நிதானம் தேவ‌ தான். " என நக்கலாக சொல்ல,


"உங்கிட்ட நான் பைரவிய பத்தி பேசாதன்னு சொல்லிருக்கேன். வாய் மூடீட்டு வா இல்லன்னா வாய உடச்சி கைல குடுத்திடுவேன். " சுல் என வார்த்தைகள் வந்தது மதுவிடம் இருந்து.


" ஒக்கே... நீ ரொம்ப அக்ரஷிவ்வா இருக்க. லைக் முரட்டுத்தனமா காட்டான் மாதிரி. ஸ்டிட்டான பாஸ் மாதிரி. இப்படி இருந்தா எப்படி உனக்கு பொண்ணு செட்டாகும். கலட்டி விட்டுட்டு தான் போகும். உண்மைய சொல்லு உனக்கு ஸ்கூல் டேஸ் காலேஜ் டேஸ்ல ஒரு பொண்ணு கூட ஃப்ரெண்டா இருந்திருக்காதே. ஐ நோ. இருக்க வாய்ப்பே இல்ல. " 


" நன்றி. " 


"நான் உன்ன பாராட்டல. உன்ன விமர்சனம் பண்றேன். " 


"நான் அத அக்சப்ட் பண்ணிக்கிறேன். உன்னோட கருத்துக்கு நன்றி. விமர்சனங்கள் வரவேற்க படுக்கிறது. " எனத் திரும்பிக் கொண்டான்‌ அவன். 


மறுத்து பதிலுக்குப் பதில் பேசினால் தானே வாதங்கள் தொடரும். தீஷித்தின் பேச்சைக் கேக்க நேரிடும். நன்றி… அப்படியா! ஓகே.. என்று விட்டால் அடுத்து என்ன பேச முடியும் என நினைத்த மதுவிற்கு பைரவி பற்றி ரசித்து ரசித்து பேசும் தீஷித்தின் பேச்சு அமிலத்து கரைத்து காதில் ஊற்றியது போல் இருந்தது. 


சில நிமிடங்கள் சென்றிருக்கும். இல்லை நொடிகள். அந்த நொடிகளும் தீஷித் மதுவை கண்ணெடுக்காது பார்க்க, 


" கொஞ்சம் கழுத்த வளச்சி அந்தப் பக்கமும் பாக்கலாம். " என மது கடுகடுத்தான். தீஷித் திரும்பவில்லையே. 


"உனக்கு கால்ல தான் ப்ராக்ஸரு கழுத்துல இல்ல. ஏன் அத அசைக்காம என்னையே உத்து உத்து பாத்திட்டு இருக்க. " 


" நான் உன்னோட வெளித் தோற்றத்த பாக்கல. உனக்குள்ள உன்னோட மனச பாக்க முயற்சி பண்றேன். அதுல என்னோட டாம். " எனும் போதே மது ஹாரனை விடாது அடிக்கத் தொடங்கினான். 


" நோ யூஸ். நான் பேச வந்தத பேசாம இருக்கப் போறது இல்ல. " 


"பேசித் தொல. ஆனா டாம் இல்ல பைரவி. " எனத் திருத்தம் செய்ய,


"ஓகே பைரவி. என்னால நம்பவே முடியல கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத உங்கூட பைரவியோட லைஃப் மெர்ஜானத. இது எப்படி இருக்குன்னா ஒரு நல்ல சாக்லேட் வென்னிலா ஐஸ்க்ரீம இட்லிக்கு சைட் டிஜ்ஜா வச்ச மாதிரி. ஃபோர்ஸ் அன்பிட் மேரேஜ் நடந்திருக்கு உங்களுக்குள்ள. நல்ல வேளையா இப்ப அதுல இருந்து அவ வெளில வந்திட்டா. பட், மீண்டும் ரீ யூனியன் ஆனா, நான் மேல சொன்ன மாதிரி இட்லி ஐஸ்கிரீம் காம்பினேஷன் தான். " மது பைரவிக்கு பொருத்தம் இல்லை என்பது போல் பேசி பேசி மதுவே விலகி செல்ல வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்ல, மது அனைத்தையும் பொறுமையாக கேட்டு முடித்து விட்டு, சிம்பிளாக. 


"நன்றி. " என்றான். 


"எதுக்கு நன்றி. " 


" இட்லி குக்கர்ல சாக்லேட் பேட்டர குக் பண்ணி மேல ஐஸ்கிரீம் வச்சி சாப்பிட்டா நல்லாத்தா இருக்கும். பைரவி யூட்யூப் பாத்து செய்வா. நீ ட்ரெய் பண்ணது இல்லயா. " என மது பதில் கேள்வி கேட்க,


"ஆனாலும் அது காம்பினேஷன் இல்லாத அன்கெல்தி டிஷ் தான. பைரவிக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும். சாக்லேட் ஐஸ்கிரீம். பட் இட்லி சப்பாத்திக்கு சாம்பார் மாதிரி யூஸ் பண்ணிக்க படிக்காது. "


"நீ என்ன ட்ரெய் பண்ற ன்னு எனக்கு நல்லாவே புரியுது. நான் பைரவிக்கு மிஸ் மேட்ச்ன்னு நிறுபிக்க நினைக்கிற உன்னோட எண்ணம் குட் தான். பட் நான் உன்னோட பேச்ச கேக்க விரும்பல. பேச்ச விட்டுடு. " 


"முடியாது. நீயும் சிங்கில். டா.." என ஆரம்பித்தவனின் ஊஞ்சலிட்டு கட்டி தொங்க விட்டிருந்த காலை நோக்கி மதுவின் கரம் நீளவும், 


"பைரவி... பைரவி... ஓகே பைரவியும் சிங்கின்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீ அவசரப்பட்டுட்ட. " என்றான் அவசரமாக. கால் முக்கியம் இல்லையா!. மதுவிடம் இருந்து காலை காப்பாற்ற நகர்த்த முயல அது முடியாது போயிருந்தது. 


"அத நான் கட்டி வைச்சிருக்கேன் உன்னால அசைக்க முடியாது. இந்த ஒன் வீக் நீ பத்திரமா இருக்கணும்னு டாக்டர் சொன்னாங்க. சோ அட்ஜஸ்ட் பண்ணிக்க. உனக்குத் தண்ணி, ஸ்னாக்ஸ், ஃபோன், லேப்டாப் எல்லாம் கைக்கு எட்டுற தூரத்துல இருக்கு. முதுகு வலிச்சா, தூக்கம் வந்தா, சீட்ட அட்ஜஸ்ட் பண்ணிக்க. இது குஷன் மாதிரி தான். சோ நீ பெட்ல இருக்குற ஃபீல் குடுக்கும். இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு மறக்காம இந்த மாத்திரைய போடு. " என்ற மது காரில் செய்திருந்த வசதிகளைக் கண்டு தீஷித்தின் மனம் மதுவைப் பாராட்டாமல் இருக்கவில்லை. 


சீட் பெட்ல் அதைப் போட்டு தீஷித்தை பாதுகாத்துவன் அவனின் இயற்கை அழைப்பிற்கு என மனித நேயத்தோடு செய்த சில செயல்கள் தீஷித்திற்கு மதுவின் குணங்களைப் புரிய வைத்தது. அது வெளியே இருக்கும் தோற்றத்தை வைத்து எடை போட முடியாத பலா பழம் போல் தித்திப்பானது. 


பைரவியின் கணவனாக இல்லாது இருந்திருந்தால் சக மனிதனாய் மது, தீஷித்திற்கு நல்ல நண்பனாக மாதிரி இருப்பான். அந்த அளவுக்கு மதுவின் மீது மரியாதை கூடியிருந்தது. 


ஆனாலும். 'இது அவனோட வேலை. அதுனால எல்லார்க்கிட்டையும் கனிவோட நடந்திக்கிறான். பட், என்னோட டாம் கிட்டயும் இதே அக்கறையோட நடந்திருந்தா ஏன் டைவர்ஸ் நடக்கப்போது. சோ, இது இவனோட இன்னொரு முகம். ஒரிஜினல் முகம் இது கிடையாது. ' எனத் தேற்றிக் கொண்டது. 


'எந்த ஊர்ல டா செக்யூரிட்டிக்கு வர்றவெ ஆயா வேலை பாக்குறான். ' என ‌மதுவிற்கு ஆதரவாக பேசிய மனதை கொன்று புதைத்து விட்டான் தீஷித். 


மணி ஒன்பதை நெருங்கும் நேரம் காரை ஓரமாக நிறுத்தி தீஷித்திற்கு உணவை ஏற்பாடு செய்தவன் பைரவிக்கு ஃபோன் செய்தான். பாவம் அது எடுக்கப்படவில்லை. முகத்தில் சில குழப்ப ரேகைகள் விழ, காரை ஓட்டாது அமர்ந்திருந்தான் மது. 


" என்னாச்சி. எனி ப்ராப்ளம். " என அவனின் முக மாற்றத்தைப் பார்த்த கேட்க,


" ஹீ இஸ் நாட் பிக்கப் மை கால்‌. " என்றவனுக்கு காரை ஓட்டவே மனம் வரவில்லை. அவளுக்கு எதாவது ஆபத்து வந்திருக்குமோ என யோசித்தவன் சாருவிற்கு அழைக்க, பைரவி வேலைக்கு சென்றிருப்பதாக கூறினாள். 


மது தெளிவாக சொல்லித்தான் சென்றான். ' ஜர்ஜ் மெண்ட் வர்ற வர நீ வேலைக்கு போகாத. ரிவெஞ்ச்ன்னு சொல்லி உன்ன யாராது எதாவது பண்ண வாய்ப்பிருக்கு. ' என்று. வழக்கம் போல் பைரவி தன் கைவரிசையைக் காட்ட, கோபமாக வந்தது அவனுக்கு. அத்தோடு அவன் அழைப்பை எடுக்காதவள் தீஷித்தின் கால்லை அட்டன் செய்ய, அதை தீஷித் லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசி மதுவைக் கடுப்பேற்றினான்.


"எங்க இருக்கிங்க தீஷ். மார்னிங் எப்ப கிளம்புனீங்க. " என அக்கறையுடன் பேச, தீஷித்தை முந்திக் கொண்டு,


"நீ இப்ப எங்க இருக்க? " என மது கேட்டான். 


" வீ..ட்டுல தான். " என இழுவையாக பொய் பேசினாள் அவள். பின்ன அவெ தர்ற லெக்சர யாரு கேக்குறது. அதான் பொய். 


'இவளுக்கு பொய் பேசுறது ரொம்ப சகஜமா போய்டுச்சி. ' எனப் பற்களைக் கடித்தவன் எதுவும் பேசாது கட் செய்து விட,


" ஹேய் நாந்தா கால் பண்ணது நீ எதுக்கு குறுக்க வந்து பேசி கட்டு பண்ணி விட்ட. நான் பேசவே இல்ல. " என்றவனைக் கண்டு கொள்ளாது காரின் ஸ்டேரிங்கில் விரலால் தாளம் தட்டி யோசிக்கக் தொடங்கினான். 


" டாம் ரொம்ப அழகா பொய் பேசினால. க்யூட்டா இருந்தது. உன்னால அத கண்டு பிடிக்க முடிஞ்சதா. என்னால முடிஞ்சது. " என்றவனைத் திரும்பி முறைத்த மது. 


"நான் என்ன பண்ணா நீ பைரவிய டாம்னு கூப்பிடாம இருப்ப? " என தீஷித்தின் முகம் பார்த்து கேட்டான் மது. 


"நீ என்ன பண்ணாலும் நான் அப்படி தான் கூப்பிடுவேன். அவளுக்கு நீ புருஷனாவே இருந்தாலும். உன்னோட பர்மிஷன் தேவையே இல்ல. மை டாம். " 


"நீ அந்த பேர‌ சொல்லும் போது எனக்கு பத்திட்டு எரியுது. உன்ன டெல்லி போய் சேக்கணுமா இல்ல எலக்ட்ரிக் சுடுகாட்டுல எரிச்சி சாம்பல மட்டும்‌ சேத்தா போதுமான்னு யோசிக்கத் தோணுது. " 


" நீ ரெண்டாவது சொன்னியே அத பண்ணா டாம் உன்ன உயிரோட கொளுத்திடுவா. ஏன்னா நீ அவளச் சமாதானம் பண்ணி உடைஞ்சி போன உன்னோட மேரேஜ் லைஃப்புக்கு என்னை கம்மா யூஸ் பண்ணி ஒட்ட வக்க நினைச்சி தான் என்னை கோர்ட்டுக்கு கூட்டீட்டு போற. சோ, நான் இல்லன்னா உனக்கு பைரவி இல்ல. லைஃப் முழுக்க. 


அண்டு முதல்ல சொன்னியே அது நடந்தாலும் பைரவி மனசுல சின்னதா உம்மேல கருண பிறக்கும். கருணை மட்டும் தான் பிறக்கும். மீண்டும் கணவனாக வாய்ப்பு கிடைக்காது. ஏன்னா நீ அந்த அளவுக்கு அவள காயப்படுத்திருக்க." என்க, மதுவின் புருவங்கள் முடிச்சிட்டது. பின். 


"இந்த ஐடியா ஏன் எனக்கு வரமா போச்சி. " என்ற கேள்வி கேட்க,


"எந்த ஐடியா?" 


"அதான் மீண்டும்‌ கணவன். தேங்க்ஸ். ஐடியா குடுத்தது. " என்றவன் காரை யூ டன் போட்டு மீண்டும் சென்னையை நோக்கி திருப்பினான். 


"இப்ப எதுக்கு நீ வண்டிய திருப்புன. " 


" சரியா டீல் பேசல. " 


"எந்த டீலிங்க. " 


" ம்ச்... நீ ஒரு பிஸ்னஸ் மேன் தான. நீயே சொல்லு நாம இறங்கி ஒருத்தர் கூட பிஸ்னஸ் பேசணும்னா அதுல ஒப்பந்தம் போட்டுக்கிற ரெண்டு பேருக்கும் லாபம் இருக்கணும். லாபம் கிடைக்கிதோ இல்லயோ நட்டம் வராது. " 


"எஸ்... ஆனா நீ எனக்கு செக்யூரிட்டி வேல பாக்க மித்ரன் கிட்ட தான டீல் பேசுன, பைரவிட்ட இல்ல. " 


"பட், மித்ரன் குடுத்த ஆஃப்ர நான் அக்சப்ட் பண்ணதே பைரவிக்காகத்தா. சோ, எனக்கு லாபம் தரவேண்டிய இடத்துல அவ தான் இருக்கா. அவளுக்கு அவளோட ஃப்ரெண்ட கோர்ட்டுல ஒப்படைக்கிறது மட்டுமில்ல சுடர் கேஸ் அரசனூர் கேஸ்ன்னு எக்கச்சக்க பெனிபிட் கிடைக்கும் போது. நான் ஏன் இத ஃப்ரீ சர்வீஸ்ஸா பண்ணும். எனக்கு ஆதாயம் இல்லாத வேலைய நான் ஏன் உயிரக் குடுத்து செய்யணும். என்ன பிஸ்னஸ் மேன் நான் சொல்றது சரி தான. ‍" என தீஷித்திடம் கேள்விகளை எழுப்ப,


' வாய மூடிட்டு சும்மாவே வந்திருக்கலாம். பேசி பேசி அவனக் குழப்பி விடுறேன்னு சொல்லி ஐடியா குடுத்து ஜோடி சேத்து விட்டுடுவோம் போலயே. ' என மனதிற்குள் புலம்பியவன். 


"பட், இப்ப நாம ஆந்திரால பாதி தூரம் கடந்திட்டோம். இப்ப திரும்பி போறது முட்டாள் தனமான திட்டம். நீ உன்னோட டீல, ஏன் என்னை டெல்லில விட்டதுக்கு அப்றம் பேசக் கூடாது. " 


"இப்ப நாம ஒரு கடக்காரெங்கிட்ட பால் பாக்கெட் வாங்கிட்டு போனோம்னு வை. வாங்கும் போதே எக்ஸ்பயர் டேட் பாக்கணும் லீக்காகுதான்னு பாக்கணும். இன்னும் நிறைய விசயம் இருக்கு. அது எல்லாத்தையும் கடக்காரெ கண்ணு முன்னாடி பாத்திட்டு சரி இல்லன்னா உடனே மாத்திடணும். வீட்டுக்கு எடுத்திட்டு போய் நமக்கு தேவையான நேரத்துல ஓப்பன் பண்றப்ப பால் நல்லா இல்லன்னா ரிட்டன் பண்ண முடியாது. நடந்தது சொன்னாலும் கடக்காரென் நம்ப மாட்டான். " என்க, 


" ஐய்யோ அறுக்காத டா. இது மூலமா நீ சொல்லவர்ற கருத்து. " 


"எதையும் உடனுக்கு உடனே செஞ்சிடணும். சூடு ஆறிட்டா பிரியாணியா இருந்தா கூட பழைய சோறு தான். " என்றவனை முறைத்து பார்த்தவன், பின் பார்வை வேகத்தை காட்டும் ஸ்பீடோ மீட்டரில் பட்டது. 


கார் உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்தது. 


"ஓவர் ஸ்பீடா போகக் கூடாது. கன்ட்ரோல மீற மாட்டேன்னு ஆரம்பத்துல சொன்ன. " 


"இப்பையும் கார் என்னோட கன்ட்ரோல்ல தான் இருக்கு. " என்றவன் சில மணி நேரங்கள் பணித்து வந்த பாதையை சில நிமிடங்களிலேயே கடந்து வந்து சேர்ந்தான் சென்னைக்கு. 


கஞ்சி போட்டு விறைப்புடன் இருந்த காக்கிச் சட்டை அது நிறம் மாறி இருந்தது. ஏனெனில் உடல் வியர்வையில் குளித்திருந்ததால். தலைக்கு மேல் யாரோ சூரியனை கட்டி தொங்க விட்டு சென்றதை போல் சூடு பரவ. கையில் இருந்த இளநீரைக் குடித்து வெக்கையைத் தணிக்க முயன்று கொண்டிருந்தாள் பைரவி.


மினிஸ்டர் வருகிறார் என பந்தோபஷ்திற்காக அவளைத் தூக்கி நடு ரோட்டில் நிற்க வைத்து விட்டது காவல் துறை. அவளும் 'பாட்டி செத்து நடு வீட்டுல வச்சிருக்கோம் ஸார். இப்ப போய் கூப்பிடுறீங்க. ' என அழுதபடி தன் நடிப்பு திறமை காட்ட,


'பாட்டி தான. சுடுகாட்டுல போய் பாத்துக்கலாம். சொல்லப் போனா நீ நிக்கப் போற இடமே சுடுகாட்டுக்குப் பக்கம் தான்.  ஊர்வலமா தூக்கிட்டு வரும் போது நீயும் கூடவே போலாம். இப்ப வா. ' எனக் கடுமையாக உத்தரவு வர. 


'மனசாட்சி இல்லாதவிங்க. ' எனத் திட்டிக் கொண்டு வேலைக்குப் புறப்பட்டு சென்றாள். 


மினிஸ்டர் க்ராஸ்ஸாகி சென்று விட்டார். ஆனால் அத்தனை நேரமும் வாகனத்தை அனுமதியாமல் தடுத்து நிறுத்தி, அவர் சென்ற பின் நெரிசல் ஏற்படாது விசில் ஊதி போக்குவரத்து காவலர் பணி செய்த பைரவிக்கு வெயில் மண்டையை பிளந்தது. இளைப்பாற இளநீரை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். 


அதைத் தூர நின்று பார்த்த இரு ஆண்களுக்கும், 'இவல்லாம் போலிஸ்ஸாகி. சேவ செஞ்சி. ச்ச.. ' என்ற எண்ணம் வராமல் இல்ல. ஏனெனில் பைரவி குடிக்கும் ஸ்டெயில் அப்படி. 


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...