அத்தியாயம்: 105
" அர லிட்டர் தண்ணி இருக்கும்னு சொன்னிங்க. நூறு எம்மல் தண்ணி கூட இல்ல அதுல. வலுக்க இளநீ. சூப்பர் இளநீன்னு சொல்லி யாரையும் ஏமாத்தாதிங்க. அதுலயும் என்னை மாதிரி வெயில்ல நின்னு மக்களுக்கு சேவை செய்றவங்கள ஏமாத்துறது மகா பாவம். " எனக் கத்திக் கொண்டு நின்றாள் பைரவி.
"உள்ள இருக்குற தண்ணியோட அளவு எனக்கு எப்படிம்மா தெரியும்? " என்றவர் இளநீரை இரண்டாக வெட்டி உள்ளிருக்கும் தேங்காய் வலுக்கையை எடுத்துக் கொடுத்தார்.
" எத்தன வர்ஷமா கட நடத்துறீங்க? "
"ஆறு வர்ஷமா இந்த வியாபாரம் தான். " என்றார் அந்த வயோதிகர்.
" இத்தன வர்ஷமா அது கூட இருந்தும் எதுல எந்த அளவு இருக்கும் கணிக்கத் தெரியாதாக்கும். பொய் சொல்லாதிங்க. " என்றவளுக்கு வலுக்கை தேங்காயை எடுத்து உண்ண ஏதுவாய் காயில் இருந்து சீவிய சிறு மட்டையைப் புன்னகையுடன் தந்தார் அவர். பணத்தைத் தந்தவள் புலம்பிய படியே தன் சாப்பரில சாய்ந்து கொண்டு தேங்காயை உண்ணத் தொடங்கினாள்.
உள்ளிருந்த இளநீரின் சுவையை விட, தேங்காய் வலுக்கையின் இனிப்பு சுவையை விட இளநீர் மட்டையின் சுவை பைரவிக்குப் பிடித்திருக்க வேண்டும். தன் பற்களால் சிறுக சிறுக கடித்து அந்த மட்டையைக் குச்சி ஐஸ்சாக எண்ணி சப்பிக் கொண்டிருந்தாள். மிகவும் ரசனையாக.
அவளின் ரசனை மதுவிற்கு பிடிக்கவில்லை போலும், வேகமாக அவளைப் பயங்காட்டுவது போல் கடந்து சென்றது சடன் ப்ரேக் போட, பைரவியின் மட்டை வாயில் இருந்து கீழே விழுந்து விட்டது.
"யோவ். அறிவில்லையா உனக்கு. " என ஆரம்பித்தவள் கணவனின் காரைக் கண்டதும் அதிர்ச்சி, சந்தோஷம், ஆனந்தம் ஒருங்கே பெறப்பட்டு, வேகமாக அதன் அருகில் சென்றாள். மதுவுடன் பேச அல்ல. தீஷித்தைப் பார்க்க. தீ விபத்திற்கு பின் அவனை அவள் பார்க்கவே இல்லை. ஒரு நாள் முடிந்து விட்டது.
"தீஷ்…" எனக் கத்திக் கொண்டே கதவைத் திறக்க, அது திறக்கவில்லை. லாக் செய்துவிட்டான் மது. சரி ஜன்னல் இருக்கே அதன் வழியே பேசலாம் என்று பார்த்தால் ஜன்னலையும் மூடி தீஷித்தைக் காருக்குள் சிறை வைத்து விட்டு கீழே இறங்கி வந்துக் கொண்டிருந்தான் மது.
" ஹேய்… இப்ப எதுக்கு நீங்க இங்க வந்திங்க. இன்னேரம் ஆந்திரா தாண்டி இருப்பிங்கன்னு பாய் சொன்னாரே. "
"ஏன் பொய் சொன்ன?"
"ஹா… "
"வீட்டுல தான் இருக்கேன்னு ஏன்டி பொய் சொன்ன? " என அழுத்தமாக கேட்க,
"நான் சொன்னது பொய்ன்னு கண்டுபிடிக்கவா திரும்பி வந்திங்க. தீஷித் உயிருக்கு ஆபத்து. இப்ப கிளம்பினா கூட புதன் கிழம பத்து மணிக்குள்ள கோர்ட்டுக்கு வர முடியும். டயம் வேஸ்ட் பண்ணாம கிளம்புங்க. "
"கிளம்பலாம். ஆனா உன்னோட பிஸ்னஸ் ஃப்ரெண்டு ஒரு ஐடியா குடுத்தான். அது ஒர்க்வுட் ஆகுதா ஆகலயான்னு பாக்கணும். "
"எனக்கு புரியல. "
"உள்ள உக்காந்திருக்கே ஒன்ற கால் ஜந்து. அதுக்கு நான் பாடி கார்ட்டா இருந்தா! எனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்?" என இரு கரத்தையும் காரில் விரித்து வைத்து தாளம் தட்டிய படி மது கேட்க,
" அதா பத்து நிமிஷ ஆதாயம் கிடச்சதே. போதாது."
"போதாது. " என குதர்க்கமாக பேச,
"அதுக்கு மேல குடுக்க என்ன இருக்கு. "
"இருக்குங்கிறதுனால தான் திரும்ப வந்திருக்கேன்."
" ம்ச்… இப்ப என்ன எதிர் பாத்து வந்திருக்கிங்க. " என்றாள் சின்ன குரலில். அது மதுவைக் கவர, அவளை அருகில் வரும் படி சுட்டு விரலால் அழைத்தான். பைரவி சுற்று முற்றிலும் பார்த்து விட்டு காரைச் சுற்றி மதுவின் அருகில் சென்றாள்.
'நாளு பேர் தான். ஆனாலும் நல்ல வேளை ஆள் இருக்காங்க. தனியா இருந்தா பாஞ்சிடுறான். ' என இதழ் கோணி முணுமுணுத்தாலும் மனம் மன்னவனிடம் மயங்கத் தொடங்கியது.
" நான் எத எதிர்பார்க்குறேன்னு உனக்கு தெரியும். " எனத் தன் அருகில் வந்து நின்றவளின் காதில் குனிந்து மெல்லிய குரலில் பேச, அவள் கோபப்பார்வையுடன் அவனை முறைத்தாள். பின்,
"ஓ… காச எதிர்பாக்குறிங்களா? புரியுது… புரியுது. உங்க ஏஜென்சில மணி கணக்கு தான. ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவுன்னு பிக்ஸ் பண்ண அமவுண்ட். அப்படி பாத்தா…" என வாய்ப்பாடு சொல்லும் பள்ளி சிறுமி போல் விரல் விட்டு எண்ணி கணக்கு போட,
"முப்பது கோடி ரூபா. குடுக்க முடியுமா. " எனச் சூடாக வந்த மதுவின் குரலில் நிமிர்ந்தவள்.
"என்னது முப்பது கோடியா. " என விழி விரிக்க.
"எஸ்… இப்பவே எடுத்து வை. பைசா குறையாம. இல்லன்னா காருக்குள்ள இருக்குற அந்த ஜந்துவ கீழ இறக்கி விட்டுட்டு நான் போய்க்கிட்டே இருப்பேன். என்ன சொல்ற?"
"இது டூ மச். நான் அன்னைக்கி இத பத்தி பேச ரெஸ்டாரன்ட் வந்தப்ப இவ்வளோ செலவாகும்னு சொல்லியிருந்தா நான் வேற யாரையாச்சும் பாத்திப்பேன். "
" அப்ப நாம பிஸ்னஸ் பேசலயே. "
"ஆனா நான் பிஸ்னஸ் பேச தான் வந்தேன். நீங்க தான் கண்டதையும் பேசி துரத்தி விட்டுடிங்க. "
" நீ ஓடிட்டன்னு சொல்லு. "
"ம்ச்… இப்ப என்ன வேணும். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ஓப்பனா சொல்லிடுங்க. இந்தப் பிரபஞ்சத்த சுத்தி வர்ற கதையே வேண்டாம். " என இரு கரம் கட்டிக் கொண்டு காரில் சாய்ந்து நிற்க, அவனும் அவளை போலவே சாய்ந்து நின்று கொண்டு,
"பெருசா ஒன்னும் கேட்கல. "
"முப்பது கோடி ரூபா சின்னதா. "
"இப்ப நான் எனக்கு தேவையானத கேக்கணுமா வேண்டாமா. "
"கேளு…ங்க. " என்றவள்.
"ஆனா ஏன் எங்கிட்ட கேக்குறிங்க. மித்ரன் அண்ணா கருணா அண்ணான்னு தீஷ் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கேட்டாலே! முப்பது என்ன முன்னூறு கூட தருவாங்க. பணம் இருக்குறவங்கள விட்டுட்டு கஷ்டப்பட்டு நாட்டுக்காக, லஞ்சம் கூட வாங்காம வேல பாக்குற எங்கிட்ட கேட்டா! காசு எப்படி வரும்?" எனப் பாவமாக கேட்டாள்.
" அப்ப காசா வேண்டாம். வேற ஒன்னா தான். " என குறும்பாய் கண் சிமிட்டி. பைரவிக்குப் புரிந்து விட்டது மதுவின் கள்ளத்தனம். விழி உருட்டி சுற்றம் பார்க்க,
இளநீர் கடை இருந்ததா..? எனக் கேள்வி கேட்கும் அளவுக்கு ரோடே வெறிச்சோடிக் கிடந்தது. காரினுள் இருக்கும் தீஷித்தின் சத்தம் கூட வெளியே நின்று காதல் செய்கிறேன் என்ற பெயரில் கடலை போட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் கேட்கவில்லை. என்ன செய்ய...
" நான் குடுக்கணமா? கன்னத்துல ஓகே வா. " என மணிக்கட்டைச் சுழற்றி ஓங்க, அதை காருடன் அழுத்தி பிடித்தவன் பெண்ணவளின் முகத்தில் விரலால் கோலமிடத் தொங்கினான்.
" நிஜம்மா ரொம்ப மிஸ் பண்ணேன் டெடி. இந்த ஆறு மாசத்துல நாம பிரிச்சி இருக்குற நாட்கள்ல உன்னோட முத்தத. நீ எனக்கு தந்த முத்தம் தான் பெஸ்ட் எவர் இன் மை லைஃப். நேத்து நான் உனக்கு தந்தது எனக்கு ஒரு கம்ப்லீட்டான கிஸ்ஸா தெரியல. ஏன்னு ரொம்ப நேரமா யோசிச்சேன். அப்ப தான் குடுக்குறத விட வாங்குறதுல தான் உண்மையான சுகம் இருக்குன்னு புரிஞ்சது. " என்றவன் மங்கையின் விழி கலந்து, " கிஸ் மீ. " என்க, அந்தப் பேச்சு நிஜமாக பைரவியை உறைய வைத்தது.
வெகு அருகில் தெரியும் மதுவின் முகம். முத்தத்தை யாசித்து நிற்கும் கணவன். அதிலும் கிஸ் மீ என்று அவன் சொல்லும் போது பெண்ணவளின் உணர்வுகள் ஊசி முனையில் வந்து நின்றது. தேகம் சிலிர்க்க இதயம் படபடக்க தன் முன் யாசித்து நின்றவனின் முகம் பார்க்க முடியாது நாணம் குடியேறி தலை தாழ்த்தும் நேரம் மதுவின் விரல்கள் நாடியை உயர்த்தி விட்டு கன்னம் பற்றி,
"கிஸ் மீ டெடி. " என்க,
"ப்ளீஸ் மது. இது பப்ளிக் ப்ளேஸ். " என்றவளின் வெட்கக்குரல் மதுவை போதை கொள்ளச் செய்தது.
" என்ன சொன்ன எனக்கு கேக்கல. " என விழியோடு கலந்து கேட்க, அதைப் பார்க்கும் திறன் இல்லாது இமை தாழ்த்தியவள்.
" ப்ளீஸ். வேண்டாமே. " என முணுமுணுக்க,
"எங்கிட்ட நீ ப்ளீஸ் போடும் போது, கூட வேற ஒரு சொல்லும் வரும். அது என்னன்னு தெரியுமா? மறந்துட்டியா?" என ஹஸ்கி வாய்சில் கேட்க,
" மது ப்ளீஸ். "
" இது இல்ல. "
" ம்ச்… விடுங்க என்னை. " எனத் திமிறியவள் அவன் கட்டிய சிறையில் இருந்து விடுபட முடியாது தவிக்க,
"மாமா ன்னு கூப்பிடு விட்டுடுறேன். மாம்ஸ்ன்னு கூப்பிட்டாலும் ஓகே தான். "
"முடியாது. " என வீம்பாக பேச,
"அப்ப அந்த ஜந்துவ இறக்கி விட்டு வீட்டுக்கு நொண்டி அடிச்சே போய் சேருன்னு விட்டிட வேண்டியது தான். " என்றவன் சாவியில் உள்ள பட்டன் அழுத்த, காரில் இருந்து சத்தம் வந்தது.
" மது ப்ளீஸ். " என்றவளைப் பார்த்து தலையை இடவலமாக அசைத்தவனிடம்,
"மாமா ப்ளிஸ். " என்றாள் பைரவி. அதைக் கேட்ட மதுவின் முகத்தில் கோடி பிரகாசம். எத்தனை நாட்களாகி விட்டது அவளின் இம்மொழி கேட்டு.
" ஹா...ஹா.ஹாங். சரியா காதுல கேக்கல. ஒன்ஸ் மோர் சொல்லலாமே. " என்றான் குறும்புடன்.
"மாமா ப்ளிஸ்.. தீஷித்த பத்திரமா கோர்டுல ஒப்படைக்கணும். "
"இன்னும் ரெண்டு மாமா அதுல சேத்து போட்டிருக்கலாம். " என்றவனை முறைக்க,
"இது சரிப்படாது. " என்றவன் காரின் சாவியை அழுத்த, அது சத்தம் எழுப்பியது.
"மா.மா.. நான் சொன்னா நீங்க கேப்பிங்க தான மாமா. " என காண்டோடு சொல்ல,
"கண்டிப்பா கேப்பேன் டெடி. ஆனா காண்டோட சொன்னா. " என்றவனின் தாடையை வழித்து தன் இதழில் வைத்துக் கொண்டவள்,
"நல்ல மாமால்ல. என்னோட மாமால்ல. " என கொஞ்ச,
"ஓகே தான். பட் இன்னும் ஒன்னு குறையிது.. " என்க, என்னதது என்பது போல் முழித்தாள் பாவை. மூடியிருந்த இதழ்களைத் தன் கட்டை விரலால் வருடி,
"நான் கேட்டது கிடைக்கலயே. " என ஏக்கமாக சொல்ல, அந்த விரலை கடித்து வைத்தாள் பைரவி.
"அப்ப சரி. டேய் எவன்ட்டா அது எங்கார்ல ஓசில ஏசி காத்து வாங்கிட்டு இருக்குறது. இறங்கு டா. " எனக் கத்தியபடி கதவைத் தட்ட, அவனின் சட்டை காலரை பிடித்திழுத்தவள் அவனின் கன்னத்தில் தன் இதழ் பதித்தாள்.
" ஐய்யைய. நல்லாவே இல்லயே. நீ யாரு. உன்னோட ரேஜ் என்ன. நீ போய் இப்படி ச்ச. உன்னோட ஸ்டேன்டர்ட்டு இல்லயே முத்தம். " என்றவனின் கன்னம் ஈரமாகவில்லை என்பது குறித்து காட்டுவது போல் உள்ளங்கையால் தொட்டு காட்ட,
"ம்ச்... இம்ச. கழட்டி விட்ட பொண்டாட்டிட்ட மிரட்டி முத்தம் கேக்குது. " என முணுமுணுக்க,
"நீ என்ன சொன்ன கட்டுன பொண்டாட்டின்னா. " எனக் குதுகலமாக கேட்க, அவள் மீண்டும் அவனின் கன்னத்தில் இதழ் பதித்து எடுத்தாள். இம்முறை அவனின் கன்னம் மங்கையின் இதழ் தேனை உணர முடிந்தது.
"போதுமா. கார எடு மாமா. " என்க, அவன் அடுத்த கன்னத்தைக் காட்டினான். அவள் முழிக்க.
" அது மட்டும் என்ன பாவம் செஞ்சது. அதுலயும் ஒன்னு வைக்கலாம். " என்றவனை முறைக்க,
" அது வந்து. இங்க இருந்து டெல்லி ரொம்ப தூரமாம். மேப்ல போட்டு பாத்தேன். " என்ற போது அடுத்த பக்கமும் இதழ் பதிந்து மீண்டது.
" போதுமா. " என்றபோது குரல் எழும்பவே இல்லை அவனுக்கு.
" ஒரு நாள் முழுக்க கார் ஓட்டணும். அதுவும் அந்த ஒன்றகாலன பக்கத்துல வச்சிட்டு. அவெ பேசுற கர்ண கொடுரமான பேச்ச கேட்டுட்டு. எனர்ஜி வேண்டாமா. "
" இது ரோடு. உங்க பெட் ரூம் இல்ல. " என இதழ் மொழிந்தாலும் இடம் காலம் என்றெல்லாம் நான் கவலைப்படேன். என்றது பெண்ணவளின் விழி.
ஈர்க்கும் காந்தமாய் நெருங்கியவன் மொட்டென மலர்ந்திருந்த இமையில் தன் இதழ் பதிக்க, "கிஸ் மீ டெடி. " என இதழொற்றலை யாசிக்க, நாணம் பொங்க ஆடவனின் சிகையை பற்றியது பெண்ணின் கரம், சிகையில் கோர்த்த கரம் அதைப் பிடித்து உளுக்கியது. எனைக் காயப்படுத்திய உனக்கு நான் இதம் தரவேண்டுமா என்பது இருந்தது அந்த பிடி. வலி தந்தாலும் மதுவின் உதடுகள் அழகாய் விரிந்தன. அது பெண்ணவளின் நாணத்தைத் தூக்கி எறிந்து விட்டு வரச் சொல்லி அழைப்பு விடுக்க, கால்களை எக்கி முகம் உயர்த்தி நெருங்கி இருந்தாள் பாவை ஆடவனின் வலிய இதழை நோக்கி.
ஆனால் இதழ் நான்கும் சேர வில்லை. சேர தீஷித்தின் விட வில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்.
உள்ளே ஒரு ஜீவனை அடைத்து வைத்து விட்டு காதல் புரிந்து கொண்டிருந்தவர்களின் கவனத்தை ஈர்க்க அவனும் கத்தி பார்த்தான் கதவைத் தட்டி பார்த்தான். எந்த பயனும் இல்லை. அணிந்திருந்த சீட் பெல்ட், மது கட்டிப் போட்டிருந்த கட்டு அனைத்தையும் கலட்டி எறிந்து விட்டு. காரின் ஹாரனைப் பலமாக அழுத்த,
"ம்ச்… இவனுக்கு என்ன தான் வேணும். " என எரிச்சலோடு திரும்பி பார்த்த மது சிகையை விட்டு நீங்கியிருந்த பைரவியின் கரத்தை மீண்டும் அங்கேயே வைத்து, விட்டு இடத்தில் இருந்து தொட, பைரவி அவனைத் தள்ளி விட்டு முறைத்தாள்.
புன்னகையுடன் அவளின் முறைப்ப ரசித்தவன். பின்,
"பைரவி கார்ல ஏறு. " எனக் கட்டளையிட்டான். பின்னால் வந்து கொண்டிருந்த சில லாரிகளை பார்த்து விட்டு.
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..